ஆண்டவருடைய மனோ பீடைகள் 2

மனுக்குலம் முழுதினும் பாவப்பாரத்தைச் சுமந்தது என்பது ஆண்டவருடைய கொடிய படத்துக்கும் 'இரத்த வெயர்வைக்கும் பிரதானமான ஒரு காரணமாகும். ஆனால், இன்னுமொரு காரணம், அதிக -விசேஷமான காரணமிருககிறது - அதென்னவென்றால், தாம் சிந்துகிற திருவிரத்தம் அநேகருக்கு வீணாய்ப்போம் என்ற நினைவாம். தமது திருப்பாடுகளால் மனுக்குலம் முழுதும் ஈடேறிக் "கொள்ளுமா னால், அந்தப் பாடுகளைக் கண்டு சகலரும் மன அ உருகிச் சருவேசுரனை நேசிப்பதே தங்கள் கதியும் ஆசையுமாகக் கொளளுவார்களானால், --அப்போது எங்கள் ஆண்டவர், இவ்வேளை தாம் படத்தொடங் கும் ..ாடுகளிலும் அதிகம் கொடிய பாடுகளைப்படவும் ஆவலோடு ஒருமித்திருப்பார். சகல பாவச் சுமையையும் தாங்கி, குற்றவாளி போலவும், சருவேசு ரனாற் கைவிடப்பட்டவர்போலவும் எண்ணப்படவும் மனங்கொண்டிருப்பார். ஆனால், அள வில்லாத ஞான முள்ள சருவேசுரனாகிய அவர் உலகத்தாருடைய உண் மையான நிலைபரத்தை அறிந்திருந்தார். எத்த னையோ ஆயிரக்கணக்கான வர் களுக்கு, லட்சக்கணக் கானவர்களுக்குத் தமது திருக்குருதி வியர்த்தமாய்ப் போமென் றதை அவ்வேளை யிலே கண்டார். அக்கியா னிகள், பதிதர், சோனகர், யூதர் ஆதிய அவிசு வாசி கள் மாத்திரமல்ல, தம்முடைய இரத்தப்பலனைப் பெற்று, அந்தத் திரு உதிரந் தெளிக்கப்பட்டு, அதி னாற் கழுவப்பட்டவர்களிலும் அநேகர், தங்கள் நன் றி கெட்ட அக்கிரமங்களினால் நரக பாதாளத்திலே போய் விழுவார்களென்று உணர்ந்தார். தம்முடைய விலையேறப்பெற்ற அந்த இரத்தத்தைக் கள்ளப்பாவ சங்கீர் த தனத்தினாலே காலால் மிதிக்கிறவர்களையும், சாவான பாவத்தோடு மனம் பொருந்திச் சற்பிர்சா தம்பெற்றுத் தம்மை அவமதிக்கிற நிர்ப்பாக்கியர்களையும் கண்டார். தமது பரிசுத்த வீடுகளாகிய தேவால யங் களி லே, சன்னியாசமடங்களிலே, தமது ஊழியர் களு ம் விசேஷ சிநேகிதரும் என்றிருக்கிற கு குமார், சன்னியாசிகள், கன்னியாஸ்திரிகளுக்குள் ளே, இதோ சற்றுக்குள்ளே தம்மைச் சதிமான மாய்க் காட்டிக் கொடுக்கப் போகிற யூதாஸ் இஸ் காரியோத்துவின் பின் னோடிகள் போல் ஆகிற அபாத்திரமான ஆத்தும க் களால் தமக்கு வருகிற தாங்கொணாத நன் றியீனத்தை யும் தரிசித்தார். ஆண்டவரு டைய மிருதுவான திரு இருதயத்துக்குப் பொறுக்கக்கூடாத துயரத்தை வரு வித்த இந்தக்காட்சியால் அவர் கலங்கி: பிதாவே, நான் யாருக்காகப் பாடுபடுவேன்? ( என் இரத்தத்தால் வரும் லாபமென்ன ?'' (29-ம் சம்கீதம் 10.) அ தினால் எத்தனை பேர் தான் பிரயோசனம் அடை யப்போகிறார்கள்! பாடுபட நான் பயப்பட வில்லை உலகத்தின் சகல பாவ அக்கிரமங்க ளை யும் சுமந்து தீர்க்கிறதற் தம் ஒருமிக்கிறேன். ஓ! சிலுவையே வாராய்; என் தோள் மேற் பதிந்து நசுக்கக் சடவாய்! என் உதாரமே மானுட ஈடேற்றத்துக்காக நீ வாரி இறைக்கப்படுவாயாக! சகல பாவச்சுமையும் என் மேல் அமரக்கடவது! ஆனால் என் பிதாவே, நான் இத்தனை பாடுபட்டு இரத்தஞ்சிந்தி, மரித்து மீட்கிற ஆத்துமாக்களாவது உம்மை நேசிப்பார்களோ? இவர் களுங்கூட உம்மை வெறுத்துப் புறக்கணித்துப் பாவத தையே மேலும் மேலும் கட்டிக் கொள் ளப்போகிற தைக் காண்கிறேனே. என் இரத்தத்தில் தோய்ந்த இவர்கள் மேலும் பிசாசு வெற்றி கொள்ளு கிற தைத் தரி சிக்கிறேனே. ஆ! பிதாவே '6 உமக்குச் சித்தமானால் இந்தப்பாத்திரம் என்னை விட்டு அகலக்கடவது!''


'' ஆயினும் '' ஒரு ஆத்து மம் மாத்திரமாவது என் அ ை-ய நாடுகளினால் ஈடேறுமானால், ஒரு நன்றியறி கிற ஆத்துமம் மாத்திரம் இரு "குமானாலும், '' உமது சித்தப்படியே ஆகக்கடவது '' (லூக். 22; 42) தான் மன தினால், வாக்கினால் உணா, சொல்லக்கூடாத சகல பாடு களை யும் படுகிறேன் கொலைக்கு ஏகுகிறேன். மனுஷரு டைய நன் றிய றியாமை என்கிற இந்தப் பாத்திரத் தைக் கடைசித் துளி பரியந் தம் குடிக்கிறேன்.

ஆ பாவிகளே, உங்கள் மனந்திரும்புதலை நாளைக் கு நாளைக்கு என்று பின் போட்டுவைத் துச் சாவான பாவத்தில் நிலைத்திருக்கிறவர்களே, சவக் குழியிலே இதோ ஒருகால் வைத்துக் கொண டு, பின் னும்; எ ங்கள் பாவப் பழக்கங்களைத் திருத்தக் காலம் உண்டு, தவஞ் செய்யக் காலமுண்டு என ற மாயமான நம்பிக்கையோடு நாட் போக்குகிறவர்க ளே, நீங்கள் தான் யேசு நாதருக்கு இந்தக் கசப்பான பாத்திரத்தைக் குடிக்கக் கொடுத்தீர்கள். உங்களுடைய கண்டுகேட்டறியாத, அதிசயமான் நன்றி கேடு தான், சர்வவல்லப சருவேசுரா னான. எங்கள் ஆண்டவரையும் பயந்து நடு டு ங்கச்செய் தது. இதுவரையில் நீங்கள் அவருடைய திரு இரத் தத் தினால் அடைந்த பலன் என்ன? அவருடைய சக் கிறமேந்துகளை என்ன செய்து போட்டீர்கள்? அவரு டைய திரு ஏவுதல்களை, அவர் அனுப்பிய மனச்சாட் சிக் கண்டனங்களை, அவர் பொழிந் தருளிய ஞான வெ ளிச்சங்களைக்கொண்டு நீங்கள் பெற்ற லாபம் என்ன? உங்களுடைய நிஷ்டூரத்தைக் கண்டல்லவோ ஆண்ட வர் இவ் வள வாக அஞ்சிப் பின் வாங்கினார்!

யேசுநாகர் பிதாவைப் பார்த்து மும்முறை பிரா • ர்த்தித்தும், ஆறு தலடையாமலிருக்கிற அவ்வேளை wயிலே, கிறீஸ் த வர்களே, நீங்கள் அ வரண் டையிலே போய் நிற்கிறீர்களென்று எண்ணிக் கொள்ளுங்கள். தம்மை முடுகிப் போய் நிறகிற உங்கள் பக்கமாய், ஆண் டவர், இரத்தத்தில் தோய்ந து துக்கத்தினாற் குறாவி இருக்கிற தமது திருமுகத்தைத் திருப்பியருளி, கரு ணேயும் இரக்கமும் துயரமும் நிறைந்திருக்கிற நமது தி நநேத்திரங்களால் உங்களைப் பார்த்து, தாம் வசக் கேடாய் விழுந்து கிடக்கிற இடத்தையும் அதிற் படிக் திருக்கிற இரத்த வெள்ளத்தையும் உங்களுக்குக் காண் பித்த : என் மகனே, என் மகளே, நீ இன்னும் என் னைத் துன்பப்படுத் து வரபோ? 61 ன் இருதயத்தை இன்னும் குரூரமாய்க் காயப்படுத்துவாயோ? நான் சிந் துகிற திரு இரத்தம் உனக்கும் பலனில்லாத தா யிருக்கப் போகிறதோ? நான் இந்தப் பாட்டெல்லாம் பட்ட பின்னும் உனக்கு மோட்ச இராச்சியத்தின் கதவு அடைபட்டதாய் இருக்கப்போகிறதோ? ஆ என் னால் அநாதி நித்தியகாலமாய் நேசிக்கப்பட்ட மக னே, மகளே, நான் அ ள வில்லாக் கருணை யினால் ஒன் ரமின்மையிலிருந்து இழுத்தெடுத்து உண்டாக்கிய என் அன்புள்ள அருமைச் சிருட்டியே, இனியாவது நீ உன் மேலும் உன்னைப் படைத்தவர் மேலும் இரக் கங்கொள்ள மாட்டாயோ என்று திருவுளம் பற்றுவார்.

இதைக்கேட்டுக்கொண்டிருக்கிறவர்களே, உங் கள் நெஞ்சுகள் இன்னும் உருகவில்லை பா? ஆண்டவர் சாஷ்டாங்கமாய் விழுந்து கிடந்த கல் ஒத்தானும் இளகிப் போயிற்றென்றால், உங்கள் இருதயம் மாத்தி -ரம் இளகாதிருக்குமோ? பிரியமுள்ளவர்களே, இன்று எங்கள் ஆண்டவர் இருக்கிற சோபசந் தாப கோலத்தைக் கண்டபின்னும் நீங்கள் கல்நெஞ்சராயிருக்கக் கடவ ர்கள ல்ல, ஆகையால், இதோ தரையிற் கு பு. றக்கிடக்கிற எங்கள் சருவேசுரனை நீங்களும் நானும் ஞா ன விதமாய் முடுகிச் சாஷ்டாங்க தண்டனிட்டு மெய்யான மனஸ்தாபக் கண்ணீர் விட்ட ழு து சொல்லக்கடவோம்: என் : அமிர் தமான யேசுவே, என் பாவமும் நன்றியறியாத தன முந் தானே தேவரீரை இந்தத் துயரம் நிறைந்த கோலமாக்கன து! என் இடைவிடா த துர் நடக்கையும் பாவத்தில் நிலை கொண்ட மூர்க்கத் தன முந்தானே தேவ ரீருடைய வேதனை யுள் ள இரத் தவெயர் வைக்கும் மரணத்துக்குரிய தான சிந்தா குலத் துக்கும் காரண மான து! நான் பாவச்சகதியில் விழு ந் து புரண்டு கரையேற அறியாமற் கிடந்ததினாற்தா னே, சகல லோகத்தையும் தாங்குகிறவரான தேவரீர் இந்த முரட்டுக்கற்களின் மேல் சாஷ்டாங்கமாய்விழுந் துகிடக்கலானீர். ஆகையால் என் ஆண்டவரே, சகல நேசத்துக்கும் உரிய என் மீட்பரே, தேவரீ ருடைய வரப்பிரசாதத்தின் உதவியோடு இன்றைக்கே என் பாவசீவியத்தை விட்டுவிடத் துணிகிறேன். இதோ, தேவரீருடைய வல்லமையுள் ள சகாயத்தோடு நான் - புண்ணிய சீவியத்துக்கு எழுந்திருக்கிறவனாகத் கொ டங்கிக்கொண்டேன். சந்திர சூரியர்களுக்கெல்லாம் ஒளிவு கொடுக்கிறதும் தேவதூதர்கள் பார்த்து மகிழ ஆசைப்படுகிறதுமான .என் ஆண்டவரின் திருமுக மண்டலமே, நீர் இனித் தரை மேற் படிந்திருக்கக்கட விரல்ல. ஆண்டவரே எழுந்திருந்தருளும். தேவரீர் எனக்காகப் படப்போகிற பாடுகள் வீணா கமாட் டாது. அடியேன் தேவரீர் எனக்காகச் சிந்தப்போகிற திருக்குருதியில் என் பாவங்களைக் கழுவி, இனிமேல் என் மரணபரிந் தம் தே வரீருடைய திருக் கற்பனை களை யெல்லாம் சுமுத்திரையாய்க் கைக்கொண்டு, தேவரீ ருடைய திருமுக தரிசனத்தை அடைய வரும்வரைக் கும் உம்முடைய நேசத்தை விடாதிருப்பேனாக!

ஆமென்.

தபசு காலப்பிரசங்கம் முற்றிற்று