நாட்பூசை காணுதல் 2

திவ்விய பூசையானது இப்படிப்பட்ட மகத்துவம் உள்ள - தாயும், நமக்குச் சகல நன்மைக்கும் வழியாயும், நம்முடைய இரட்சணியத்துக்கு அவசியமான தாயும் இருக்கிறபடியினாற்தான் திருச்சபையானது, சகல கிறீஸ்தவர்களும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடன் திருநாட்களிலும் பூசை காணவேணுமென்று கட்டளையிட் டிருக்கின்றது.

இக் கட்டளை எமக்கு எவ்வளவு இன்ப மாய் இருக்க வேண்டியது ! சருவேசு ரனை முகமுகமாய்க் காண்பதற்கும் நமது இரட்சணிய அலுவலை யேசுநாத சுவாமியோடுகூட நடத்துவதற்கும், அவர் நமக்காகச் செய்யும் வேண்டுதலோடு நாமும் நமது வேண்டுதலை ஒருமிப்பதற்கும் எவ்வளவு அவாவோடு நாம் ஓடி வர வேண்டியது! ஆனால், ஐயோ, விசுவாசக்குறைவே! ஐயோ, மெய்யான நன்மைகளைத் தேட அறியாமையே!

எத்தனை பேர் கடன் பூசை காண்பதற்கும் அதிசயமான வேண்டா வெறுப்புக்காட்டுகிறார்கள் ! கடன் கழிக்கிறதற்காகவே வந்து ஒற்றைக் காலிலே நின்று ஒரு அரை மணித்தியாலந் தானும் பொறுத்திருக்க மாட்டாமல் பூசை முடிந்தது முடியா முன்னே ஓடிப் போய்விடுகிறார்கள். ஆனால் இவர்களைப் பற்றிக் குறைசொல்லியென்ன, விசுவாசமுள்ள நீங்கள் கடன் பூசையை ஆசையோடு காண்பதுமல்லாமல், இயன்ற மட்டும் வேறு நாட்களிலும் பூசைகாணப் பிரயாசப் படவேண்டுமென்று ஏவி முடிப்பேன்.

பிரியமான கிறீஸ்தவர்களே ! திருச்சபையிலே உள்ள பத்திக்கிருத்தியங்களுள்ளே யெல்லாம், நாட்பூசை காண்பதைப்போல உத்தம மான பத்திக்கிருத்தியம் வேறில்லை. அநேகர் யாத்திரைகள் பண் ணுவதி லும் நேர்த்திக்கடன்கள் செய்து தீர்ப்பதிலும், பிரார்த்தனைகள் நவநாட்கள் செய்வதிலும் வெகுநேரமும் மிகுசெலவும் போக் குகிறார்கள். நாட்பூசை காணுவதைப்பற்றியோ நினையாமற்போகிறார்கள்.

பூசைகா ணுவதைப்போல உத்தமமான செபம் வேறென்ன? பூசையில் நம்மைச் சரு வேசுரனுக்கு ஒப்புக்கொடுப்பதைக் காட்டிலும் பெரி ய காணிக்கையுண்டா? நாட்பூசைக்குப் போவதைக் காட்டிலும் பெரிய யாத்திரை ஒன்றைக் காட்டுங்கள் பார்ப்போம்? நாட்பூசை காணும் பத்தி திருச்சபை யுடைய பத்தி, அர்ச்கியசிஷ்டர்களுடைய பத்தி சம் மன சுகளுடைய பத்தி, சருவேசுரன் அங்கீகரித்துக் கொள்ளுகிற மகா உத்தம், மகாபேறுள்ள பத்தி, நாட் பூசை காண்பதினால் நமது நாள் முழுதும் பரிசுத்த மாய்ப்போம். அதனால் நமக்கு நாள் முழுதும் தேவா சீர்வாதம் கிடைக்கும். அதனால் நமக்கு இம்மை யிலும் மறுமையிலும் வேண்டிய சகல நன்மைகளும் உண்டாவதாகுமே..

ஆனால் சிலர் மனதில் இப்போது எழக்கூடிய ஒரு ஆட்சேபமிருக்கிறது. அதாவது : எங்களுக்கு நாட்பூசை காண மெத்த ஆவலுண்டு தான், நேரமில்லையே என்பார்கள். அப்படியல்ல, ஆவலுண்டானால் நேரமுமுண்டு. உள்ளபடி சொல் லவேண்டுமானால், நேரமில்லையென்பதும் மனமில்லை யென்பதும் ஒன்று தான். சிலர் : மெத்த அலுவல் அலு வல் என்கிறார்கள். அவ்வளவு அலுவலை அவர்கள் செய் கிறதையுங் காணோம். வேறு சிலர் உள்ளபடியே ஓயாத அலுவற்காரர். ஆயினும், இவர்களே நாட்பூசைகாண வும் நேரங்கண்டு கொள்ளுகிறார்கள். இதெப்படி? அ லுவலுள்ளவர்களுக்கு நேரமிருக்கிறது. அலுவலில்லா தவர்களுக்குத்தான் நேரமும் இல்லை. நேரமில்லாமற் போவதற்கு முதற்காரணம் பொதுவாக, வெள்ளென எழும்புவதற்குள்ள சோம்புத் தனந்தான். காரியத்தை உள்ள படி சொல்லிவிட எனக்கு இடங்கொடுங்கள்.

முற்காலத்திலே சனங்களுள்ளே இருந்த அநேக நல் வழக்கங்களை இக்காலம் விட்டுவிட்டோம். முற்கா லம் ஆகச்சிறு பிள்ளைகள் போக, மற்றவர்கள் எல்லாம் கோழிக்குரல் கரிக்குருவிக்குரலோடு எழுந்து, சிலர் வீட்டிலேயிருந்து செபமாலை முதலிய செபங்களைச் சொல்லுவார்கள். சிலர் கோவிலிலே பூசையில்லாவிடி னும் கோவிலைப் போய்த் தரிசித்துக்கொண்டு வருவார் கள். அதன் பின் வீட்டலுவல்களெல்லாம் சட்டவட் டமாய்ப் பார்த்துக்கொள்ளுவார்கள்.

ஆனால், தற்கா லம் வீண் கதைகளிலே, ஆவலாதிகளிலே, குற்றமான களியாட்டுக்களிலே, உண்டாட்டுக்களிலே நேரம் போக் கிவிட்டு இராப்பதினொரு மணிக்குப்படுத்துக் காலை எட் மணிக்கு எழும்புகிறோம். பூசை காண நேரமேது? - கிறீஸ்தவர்களே, இது தபசு காலமல்லவா? இக் காலத்திலே நீங்கள் இதைச் சோதித்துப் பாருங்கள். காலையிலே சற்றே நித்திரையை ஒறுத்துக்கொண்டு எ ழுந்து இயன்ற மட்டும் பூசைகாணுங்கள். ஏறக்குறை ய எல்லா ஊர்களிலும் தற்காலம் நாட்பூசைகாண வச தியிருக்கிறது. சிலவிடங்களில் உங்கள் வீட்டுப்படலை களுக்கு அருகிலேயே கோவில்கள் இருக்கின் றன. 

ஆம், தபசு காலத்திலே என்கிலும் இயன்ற மட்டும் அடிக்கடி பூசை காணக்கடவோம். நமது இரட்சணிய வேலையை நடத்தக்கடவோம். சருவேசுரன் தமக்கு ஆயத்தம் பண்ணியிருக்கும் மோட்ச முடியை அடைவதற்குப் போகக் காலஞ்செல்லாது. இந்தப் பாக்கியத்தை. அளவில்லாதவர் எம் அனைவருக்கும் தந்தருளுவாராக.

ஆமென்.