முகத்தாட்சிணியம் 2

முகத்துக்கு அஞ்சுவது மகாமதியீனம். ஏன் பயப்படுகிறீர்கள்?  இன்னார் இன்னார் ஏதாவது சொல்லுவார்கள், சிரிப்பார்கள்; அவர்கள் செய்யாததை நாங்கள் செய்தால், நூதன மாய்த் தோன்றும்; ஆத லால் எங்கள் கடமையை நிறைவேற்றப் பயப்படு கிறோம் ''-- ஆ! கிறீஸ்தவர் களே, நீங் கள் எவ்வளவாக ஏமாந்துபோகிறீர் கள்! மனுஷர் --அ துவும் நல்ல மனு ஷரல்ல, புண்ணியவாள ரல்ல--பாவிகளும்கூட, நீங்கள் உங்கள் கடமை களைச் சுமுத்திரையாய் நிறைவேற்றும் வதைப் பற்றி உங்களைப் பாராட்டுவார்களே அல்லாமல் பழிக்க மாட்டார்கள். தன் தன் கடமையைச் செய்வது எல் லாராலும் மெய்ச்சப்படுகிற ஒரு நிதார்த்த குணம். அதைப் பாவிகள் தாமும் மெய்ச்சா மல் இருக்கக்கூ டாது. தாங்கள் கெட்டவர்களாயிருக்கிறது அவர்க ளுக்குப் பிரியம். பிறர் தங்களைப்போல் இருக்கிறதோ எப்போதும் பழிப்பு. தங்கள் இடத்திலே கிடந்து போராடுகிற தீயநாட்டங்களை யும், அந்த நாட்டங்களுக்கு இடங்கொ டுத்ததினால் தங்களுக்குச் சம்ப வித்த நீச சிறைப்பாட்டையும் நன்றாய் அறிந்திருக்கிறபடியால், தங் சளைப்போல நடக்கிற பிறரையும் நீசமாகவே எண் ணிக்கொள்ளுவார்கள். இந்த எண்ணத்தை வெளி யிட்டால் தங்களை க்கூடக் கண்டிப்பதாக முடியும். ஆகையால், வெளியிடாமல் மறைத்துக்கொண்டு, உற் சாகமாய்ப் பேசித் தைரியஞ் சொல்லிக் கொள்ளுவார் கள். 'கெட்டவர்கள் கூடப் புண்ணியத்தை மதிக்கி றார்கள் என்பது ஒரு மறுக்க முடியாத உண்மை . புண்ணியவாளரை வெளிக்கு நையாண்டி பண்ணும்போதே உள்ளுக்குப் பயந்து நடுங்குவார்கள். பாவவாளரை வெளிக்குப் பாராட்டிக்கொள்ளும்போதே, உள்ளுக்குப் பழித்துச் சரசம் பண் ணுவார்கள். கிறீ ஸ் தவர்களே! உள் ள படியே மோசம் போகிறீர்கள். - இன் னும் உங்களைப் பழித்துப்போடுவார்களே என்று நீங்கள் பயப்படுகிறவர்கள் யார்? தேவபயம் இல்லாதவர்கள். உலகத்தன்மை பொருந்திய மனு - ஷர். ஏதாவது ஒரு முக்கிய காரியத்திலே அவர்கள் சொல்லைக் கேட்கவும், மாட்டீர்கள் ; அவர்கள் நடத்தையை அங்கீகரிக்கவும் மாட்டீர்கள். ஆனாலும், நீங்கள் நன் மை என் று, புண்ணியம் என்று அறிந்திருக்கிற வேத கடமைகளிலேமாத்திரம் உங் களுக்கு அவர்கள் முதலாளிமாராய்ப் போகிறார்கள். அவர்கள் முகத்துக்கே அஞ்சுகிறீர்கள். இப்படி உங் களுக்கு எல்லாவிதத்திலும் கீழ்ப்பட்டவர்களாய் இருக்கிறவர்களு டைய முகத்துக்கு அஞ்சுவது எவ்வ ள வு சக்கட்டைத்தனம் என்றதை நினைக்கிறீர்கள் இல்லை. நீங்கள் அவர்களுக்கு அஞ்சாமல் உங்கள் வேதக் கடமைகளை நிறைவேற்றிவந் தால், அவர்கள் - தேவ பத்தியற்ற அவர்கள் - உங்கள் தைரியத்தை மெய்ச்சி உங்களைப் பூச்சியமான வர்களாக மதித்திரு ப்பார்கள். ஆனால், நீங்கள் கோழைத்தனமாய் அவை களை விட்டுவிடுவதைக்கண்டால் அதனால் அவர்கள் உ ங்கள் மேல் ஏலவே வைத்திருக்கக்கூடிய மதிப்பு முற்றா கப் பறந்துபோய் விடும் என்பது நிச்சயம். (பார்! இவர்கள் தங்கள் மனச்சாட்சியின் படி, சரியான தைச் செய்யமாட்டாத கோழை நெஞ்சர்கள். இவர்களும் எங்களைப்போன்றவர்கள் தானே'' என்பார்கள். இதை நினை யாமற்போகிறோம். ஆகையால் வெட்கங்கெட்ட கோழைகளே, பாவிகள் கூடப் பாவஞ்செய்வோரை இகழுகிறதை அறிந்துகொண்டு இன்னும் நீங்கள் புத்தியீன மாய் அவர்களையே பிரியப்படுத்த வருந்து கிறீர்களே. எல்லா விதத்திலும் நிர்ப்பாக்கியரான அவர்கள் தாம் உங்களுக்கு உவந்த நடுவர்கள் என்ற படி நடக்கிறீர்களே. இவர்களுக்காகப் பாவஞ் செய்ய வும் பின்னிடுகிறீர்களில்லையே. சருவேசுரனுடைய நீதிக்கோ பம் உங்கள் தலைமேல் இறங்குமே, புண்ணிய வாளர் உங்களை வெறுப்பார்களே என்றதுமட்டுமல் ல, பாவிகள் கூட ட உங்களை மதியார்கள் என்று அறிந் துகொண்டும், அந்தப் பாவிகளுக்கே பிரியப்படத் தேடுவது பைத்தியம், அல்லாவிட்டால் பைத்தியம் என் று வேறொன்று உலகத்தில் உண்டா? 2 அல்லது பாவிகள், அசட்டையுள் ளோர்,--உங் களைப் பழித்துச் சிரித்துப்போட்டால், ஏதாவது நையாண்டி சொல்லிப்போட்டாற்தான் உங்களுக்கு வந்து விட்ட குறை என்ன ? - உலக கரு மங்களில் நம்மில் யாராவது பிறர் குறை சொல்லக்கூடுமே என்ற பயத்துக்காகத் தங்களுக்குவரும் ஒரு பெரிய லாபத்தைக் கைவிடுவார்களா? தாங்கள் கரு தியதை முடித்துக்கொள் ளும்போது -தேடிய லாப த்தைப் பெற்றுக்கொள் ளும்போது முன் சிரித்தவர் 'கள் எல்லாரும் தலைகவிழுவார்கள் என்று அறிந்து கொண்டு, யார் என்ன நினைத்தாலும் சொன்னாலும் எடுத்துக்கொண்ட லாபகரமான காரியத்தை முடிப் பார்கள் அல்லவா? ஞான காரியங்களிலே ஏன் இந் தக் கோழைத்தனம்? உங்கள் வேதக் கடமைகளை நிறைவேற்றுவதினால் இவ் உலகத்திலும் அவ் உலகத் திலும் மனச் சமாதானமும் பேரின்பபாக்கியமும் உண்டென்று நிச்சயமாய் அறிந்து கொண்டும் இந் தப் பெரிய லாபத்தைச் சில வீணர்களுடைய சன்னை சரசங்களுக்காகக் கைவிட்டு விடுவது எவ்வளவு மதி யீனம்?

அல்லது மனுஷரைப் பிரியப்படுத்த வேண்டும் என்று தேடுகிற நீங்கள் எத்தனை பேருக்குப் பிரியப்படுவீர்கள் ? , (: உலகம் பலவிதம் '' என்ற ஊர்ப்பேச்சை அ றியீர்களா? << ஏறச் சொன் னால் எருது கோபிக்கும். இறங்கச் சொன்னால் முடவன் கோபிப்பான்'' என்ற பழமொழியுந் தெரியுமே. நீங் கள் எவ்வளவாக முயன்றாலும், எவ்வளவு சாக்கிர தையாய் இச்சகமாய் இசைந்து நடக்கப் பார்த்தா லும் ஊரவர்களுடைய நாக்கு ஆடிக் கொண்டிருக்கு மட்டும் ஒருவரோ மற்றவரோ உங்களிலே குறை சொல்லாமல் விடார்கள். ஒருகிழவனும் மகனும் கழுதை யில் ஏறிய கதையை அறிவீர்கள். பாலியனை நடக்கவிட்டுக் கிழவன் கழுதை யிற் சாரிபோகக்கண் ட ஊரவர்கள் கிழவனைப் பார்த்து : ஐ யோ! இந்தப் பச்சைக் குழந்தை கால் கடுக்க நடந்து கொண்டுவர, நீ குசா லாய் ஏறிப்போகிறாயோ என்றார்கள். பொடி யனைக் கழுதையில் ஏற்றி, கிழவன் நடக்க, மறு படி யும் கண்டவர்கள் ஐயோ! விழு கிழவன் தன்னித் தன் னிப் பின்னே வர இந்தக் குத்தியன் பவனி போகி றானே என்றார்கள். இருவரும் கழுதையில் ஏற, ஐயோ பாதகரே! உங்கள் நெஞ்சில் ஈரமில்லையோ என்றார்கள். பிறகு இருவரும் கழுதையைக் கட்டிக் காவவேண்டி வந்ததாம். இது தான் உலகத்தாருக்குப் பிரியப்பட நடக்க விரும்புவோர் எல்லாருங் கட்டிக் கொள்ளுகிற மதியீனம். எல்லா மனுஷரையும் உவப் பிக்கிறது என்பது ஒருபோதும் கூடாது. இன்றைக்கு உங்களை மெய்ச்சியவர்கள் நாளைக்கு உங்களை” இகழுவார்கள். முன்னாலே சபா ஸ் சபாஸ் என்று கை கொட்டுகிறவர்கள், பின்னாலே இழித்து நெளித்துக் கோரணிகொள்ளுவார்கள். .

ஆ! இந்த நிலை யில்லாத, நேர்மையில்லாத உலக மனுஷரைப் பிரியப்படுத்தத் தேடி மோசம் போவதி லும், அளவில்லாத பிரமாணிக்கமுள்ளவரும், ஒருபோதும் மாறாத வருமான எங்கள் பரி சுத்த தேவனைப் பிரியப்படுத்த வருந்து வது எவ்வளவு நல்ல விமரிசை! வரம் பில்லாத ஞானசாகரமாகிய அவர் ''அம் ரிக்கையோடு நியாயந்தீர்த்து நம்மைச் சங்கையாய் நடத்துகிறார்.'' (ஞானாகமம் 12; 18) அவரு டைய திருச் சமுகத்தில் மதிப்புப் பெறுவது எவ்வ ளவு தேடுதற்கரிய பாக்கியம்! அவரோ மனிதரைப் போல முன்னொன்றும் பின் னொன்றும் நினைக்கிறவ ரல்ல; நேற்றொன்று இன்னொன்று ஆகிறவரல்ல. அவரிடத்தில் மகிமை அடைந்தவர்கள் என்றென் றைக்கும் மகிமை அடைந்தவர்களே.

பின்னும் ஒன்றைக் கவனியுங்கள். மனிதர் நம் முடைய அந்தரங்க எண்ணங்களை அறியார்கள். நாம் ஒன்றைச் செய்யும்போது கொண்டிருக்கிற கருத் தை அறியார்கள். ஆகையால், நாம் நன்மையானதைச் செய்தாலும், சிலவேளைகளிலே இகழுவார்கள். தின்மையானதைச் செய்தாலும், சிலவேளைகளிலே புகழு வார்கள். உள்ள படி நன்மையாயிருப்பதை அறிய அவர்களுக்குப் போதிய ஞான வெளிச்சம் இல்லாதிருக்கும். யாருக்கு உள்ள படி, புகழ்ச்சி சேரவேண்டியது என்று தீர்மானிக்கத் தக்க பூரண விவேகம் இல்லாதிருக்கும். சருவேசு! னோ நமது அந்தரங்க எண்ணங்களையும் அறிவார். அவர் நமது இருதயங்களின் கருத்தைப் பரிசோதிக் கிறார். ஆகையால் அவரவரிடத்தில் உள்ள நன்மை யை உள் ள உள் ள படி அறிந்து மதித்துக் கொள்ளுகி றார், பலன் அளிக் கிறார். உலகம் முழுதும் நம்மை இகழ்ந்தபோதிலும், நகைத்தபோதிலும், சருவேசுரன் ஒருவர் நமது சிந்தனை களை வாக்குகளை கிரிபைகளை அங்கீகரித்துக்கொண்டால் போ தா தா ? பதினாயிரம் மனிதர் - என்ன சொல்லுகிறேன் -- பதினாயிரம் உல கங்கள், ஒருமிக்கக்கூடி நம்மிற் பிரியவீனப்பட்டா லும், அதற்கு எதிராக, சருவேசுரன் ஒருவர் நம்மில் பிரியப்பட்டால் போதாதா? சருவேசுரன் ஒருவரை மாத்திரம் நாம் பிரியப்படுத்தக் கடமையுள்ளவர்கள் அல்லவா? அ வர் மாத்திரம் நமக்கு நித்திய சம்பாவனை யை அருளுகிறவராய் இருக்கக் கொள்ள, அ வர்மாத் திரம் நமது மேலே சகல உரித்துமுள்ள முதலாளி யல்லவா?