பாவத்தின் கொடுமை 2

பாவத்தின் கொடுமையை இன்னும் நன்றாய் உணர்ந்து கொள்ளத்தக்கதாக, அதினால் வந்த மாற்றொண்ணாக் கேடுகளையும் சிந்திக்கவேண்டும்.

கிறீஸ்தவர்களே, இதோ நரகபாதாளத்திலே மனதினால் இறங்கிப் பார்ப்போம். அங்கே ஆதிதொட்டுக் கிடந்து வேதனைப்படுகிற பிசாசுகளைக் கேட்போம். இவர்கள் இவ்வளவு பயங்கரமாகக் கூச்சலிடுகிறதற்குக் காரணம் என்ன? இந்தக் கூளிகள் ஏன் நெருப்போடு நெருப்பாய் எரிந்து அபய சத்தமாய்க் குளறுகிறார்கள்? இவர்கள் யார்? இவர்களை நீதியும் இரக்கமும் உள்ள சருவேசுரன் இப்படியே, இந்த நிலைபரத்திலே தானே படைத்து விட்டாரோ?

இல்லையில்லை. இவர்கள் முன்னே பாக்கியம் பொருந்திய, பிரகாசமுள்ள, அழகு சோபனம் நிறைந்த சம்மனசுக்கள். இவர்களுக்குத் தலையான லூசிப்பர் என்ற மனோரூபி ஆயிரம் சூரியரிலும் அதிக காந்தி அழகு நிறைந்த ஒருசிருட்டி. இந்த லூசிப்பர் சம்மனசு தன் னுடைய அழகைத் தானே பார்த்து அகங்காரங் கொண்டு, நான் சருவேசுரனைப் போல் இருப்பேன் என்று ஒரு பாவ எண்ணங்கொண்டது. இச் சம்மனசோடே இன்னும் அநேக சம்மனசுக்களும் சேர்ந்து கொண்டார்கள்.

இவர்கள் இந்தப் பாவ எண்ணங் கொள்ளவே, பரிசுத்த சருவேசுரன் இதைப் பொறுக்கமாட்டாமல், உடனே மின்னலிலும் அதிக வேகமாய், லூசிப்பரையும், அவனோடு சேர்ந்த சம்மனசுக்களையும் நரகபாதாளத்திலே தள்ளிவிட்டார். சருவேசுரனுடைய பாரிசமாய் நின்ற மிக்கேல் சம்மனசும் அவரோடு சேர்ந்த இலட்சாதி இலட்ச வானோர் கணங்களும் நடுநடுக்கத் தோடு பயந்து நின்றார்கள். கர்த்தர் கொண்ட உக்கிர கோப அக்கினியின் முன்னே தாங்கள் எப்படி எரிந்து தீய்ந்துபோகா திருந்தார்களோ என்று பிரமி த்து நின்றார்கள். லூசிப்பருக்கும் கூட்டாளிகளுக்கும் இனி மீட்பில்லை.

இன்று தொட்டு இன்னும் இலட்சாதி இலட்ச, பிரளயாதி பிரளய வருஷங்கள் உருண்டுபோன பின்னும், இந்தக் கெட்ட சம்மனசுக்கள் நரகக் குழிக்குள்ளே கிடந்து ஊளை யிட்டுக்கொண்டே வரவேண்டும். எத்தனை கோடி சம்மனசுக்கள் பாழாய்ப்போனார்கள்! ஒரு பாவத்தால், ஒரே ஒரு பாவத்தால். ஓ! ஆண்டவர் பாவத்தின் பேரிற் செலுத்தும் அகோர நடுத் தீர்வையே ! - பின்னும், இந்த உலகத்தை நோக்கிப் பாருங்கள். இங்கு எவ்வளவு துயரங்கள்! மனஸ்தாபங்கள்! ஆறா ட்டங்கள்! எவ்வளவு அகோரமான பயங்கர வியாதிகள்! எத்தனை பேர் இந்தவேளை யிலே தானே சாகிறார்கள்! எத்தனை பேர் மரணப்படுக்கையிற் கிடந்து அலந்தலைப் படுகிறார்கள்! எத்தனை பேர் பருக்கைக்கு வழி இல் லாமல் வயிறு ஒட்டிக் காய்ந்து சிரட்டைக் கையோடு தெருநீளந் திரிகிறார்கள்! எத்தனை கைம்பெண் சாதி கள் குந்தி இருக்கக் கோடியும் இல்லாமல் கூச்சலிடு கிறார்கள்! எத்தனை அ கா த பிள்ளைகள் பசியால், தாகத் திரல் மெலிந்து வாடி உயிர் விடுகிறார்கள்! ஐயையோ! இன்னும் எவ்வளவு நிர்ப்பந்தம் இந்த உலகத்திலே உண்டு! ஆனால், இந்த உலகத்திலும் நிர்ப்பந்தப்பட்டு மறு உலகத்திலும் நித்தியமாய் நெருப்பில் வேகத்தக். கதாக, ஆசா பாசங்களுக்கு அடிமைப்பட்டு, கோபம் கள் தாபங்கள், சண்டைகள் சச்சரவுக்களுக்கு இரை யாகி, பாவத்துக்கு விலைப்பட்டு, அக்கியான மார்க்கங் களிற் சிக்குண்டு கிடக்கிறவர்களைப்பற்றி என்ன சொல் லுவோம் ? இப்படிப்பட்ட அக்கப்பாடெல்லாம், மனுஷருக்கு வந்ததேது? பிணியும் சாக்காடு ம், அசா. பாசங்கள் கிரமந்தப்பி மீறி எ ழும்புவ தும் ஆகிய இந்தக் கேடுகள் மனுக்குலத்துக்கு உண்டானது எப் படி? இதை இப்போது இங்கு எடுத்துச் சொல்லவும் வேண்டுமோ? ஆதாம் என்று ஒருவரையும் ஏவாள்! என்று ஒருத்தியையும், அளவில்லாத சருவேசுரன் உண்டாக்கி, பரிசுத்தமும் பாக்கியமும் உள்ள ஒரு நிலைபரத்திலே வைத்தார். அவர்களுக்கு ஒரே கட்ட ளையைக்கொடுத்தார். ஆதாம், இந்த மரத்தின் கனியை மாத்திரம் தின்னாதே என்றார். ஆனால் எங்கள் ஆதிப் பிதாவாகிய இவர் பிசாசின் அ ணாப்புதலிலே எடுபட் டு, அதை ஏவாளிடம் வாங்கித் தின்கிறார். நடுங்கிக் கொண்டு, பதறிக்கொண்டு, பாவமென்று அறிந்து கொண்டு வாங்கி வா யிலே வைக்கிறார். இதோ சாபம் தலைமேல் விழுந்து விட்டது. ஐயோ பழியே! பாரப் பழியே! "உடனே, பூலோக நந்தாவனத்திலே நின்று துரத் கப்படுகிறார். மண்ணால் உருவாக்கப்பட்டாயே மனுஷா, நீ மண்ணாய்ப் போவாய், செத்துப்போவாய்.

உன் நெற்றியினின்று வெயர்வை வடியக் கொத்தி உழுது பாடுபடுவாய். பூமியும் உன்னோடு எதிர்த்து நிற்கும். வானமும் உன்னைச் சுட்டு எரிக்கும். மிருகங் களும் உன்னைத் தீண்டவரும், பட்சிக்கவரும். உன் மனைவி அம்பாயமாய்ப் பிரசவ வேதனைப் படுவாள். உன் ஒரே பாவத்துக்காக உன் பிள்ளைகள் எல்லாருக் கும் இதோ மோட்சக் கதவு பூட்டப்பட்டது. அவர் களுஞ் சாவார்கள் என்று ஆயிரம் வானங்கள் ஒருமிக் கக் கோடையிடி இடித்த து போலவும், பதினாயிரம் சமுத்திரங்கள் அலையெடுத்துக் குமுறிக் கொந்தளித் ததுபோலவும் சருவேசுரன் சொன்னார். இந்த வார்த் தையைக்கேட்டுத் திரிபுவன முங் கிடுகிடுத்து, நட்சத் திரங்கள் நிலை தப்பி, பூமிபிளந்து, ஆதாமும் தீய்ந்து கரிந்து போகாதது எப்படியென்றால், நமக்காக வந்து நமது பழியைத் தமது திருத்தோளில் சுமந்துகொள் ளச் சித்தங் கொண்டவருடைய முகத்துக்காகத்தான் கிறீஸ் த வர்களே. ஐயோ! பாவத்தின் நிர்ப்பாக்கிய கேடே! - ஆனாலும், சம் மன சுக்களுக்குச் ச னுவுபண்ணாமல், மனுஷருக்குத் தயவு காட்டத் திருவுளமான தேவ இரக்கமே, மனுஷ னுடைய பழியைச் சுக்கமானிடச் சட்டை சாத்தி வந்த எங்கள் அமிர்த யேசுநாதரே! உமக்கு என்ன விதமாய்த் தோத்திரஞ் சொல்லு வோம்! எப்படி உம்மைப் புகழ்ந்து முடிப்போம் ! சருவேசுரன் தம்முடைய திருச்சுதனாகிய வர் ஓர் காலம் மனுஷனாய் வந்து மனுஷருடை ய பாவப்பழியைச் சுமக்கப் போவதற் காக, மனுஷர் சகலரையும் நரகத்திலே தள்ளா ம லும், பூலோக பரலோகம் எல் லாவற்றையும் நிர்மூலமாக்காமலும் விட்டார் என்றேனே. அந்தத் திருச்சுதன் மனுஷனாய்ப் பிறந்தபோது நீதிபரராகிய பிதா பாவத்துக்காக அவரிடம் வாங்கிவிட்ட பழியைப் பாருங்கள். இதோ பரிசுத்தத்தனமே உருவமாகக் கொண்ட தேவ திருச் சுதனானவர், இரண்டு ஈனக் கள்வர்களுக்கு நடுவே, தாமும் ஒரு கள்வன் போலக் கழுமரத்திலே தொங்குகிறதைப் பாருங்கள். உச்சி நின்று உள்ளங்கால்பரியத் தம் அவரிலே காயப்படாத பாகமில்லை. திருத்தலையைப் பார்த்தால், எழுபத்திர ண்டு கூரிய முட்கள் இழைத்த முடி பதித்து அழுத் தப்பட்டு, எழுபத்திரண்டு இரத்த ஊற்றுக்கள் திற பட்டிருக்கிறது. திருமுகமண்டலத்தைப் பார்த்தால், வீங்கி அதிர்ந்து இரத்தக்கறை பிடித்து, திருக்கன் னம் புண்ணாயிருக்கிறது. திருக்கரங்களைக் கால்களைப் பார்த்தால், நீண்ட பாரிய இருப்பாணிகளால் கிழி பட்டிருக்கிறது. திருத் தேகத்தைப் பார்த்தால், கற் மாணிற் கட்டுண்டு பட்ட ஐயாயிரத்துச் சில்வான கசை அடிகளால் பிளந்து, தசை சிதறுண்டு எலும்பு கள் தோற்றப்படுவதாய் இருக்கிறது. திருவிலாவைப் பார்த்தால், அதுவும் ஈட்டியால் ஊடுருவிப் பீறப்பட் டிருக்கிறது. திருமேனி முழுதையும் பார்த்தால் மூட வஸ்திரமின்றிச் சகல சனமும் பார்த்து நகைக்கத் தக்க அவமான கோலமாய்த் தொங்குகிறது. திவ்விய குருவைச் சகலரும் கைவிட்டுவிட்டார்கள், துஷ்ட யூதர்கள் நையாண்டி பண்ணிக் கோ றணிகொள்ளும் றார்கள். சேவுகர் சரசம் பண்ணுகிறார்கள். தேவ பிதாவும் கை நெகிழ்ந்து விடுகிறார். மனுஷர்பேரில் மனம் இளகும்படியாகத் தமது ஏக பிரிய குமாரனு க்கு இளகா நெஞ்சு காண்பிக்கிறார். ஐயோ பாவர் தின் அகோரமே! தேவபிதா இவ்விதமாய் உனக்கா கக் தம்முடைய திவ்விய சு தன் கையிலே பழிவாங்குகிறாரே. ஆ! யேசுவே, தேவரீர் உமது இரத்தமெல் லாம் துளி துளியாய்ச் சிந் தி, கள்ளர் நடுவே மகா நிந் தை அவமானத்துக்கு இலக்காகத் தொங்கின தைக் கண்டாவது தேவபிதா இரங்கினாரில்லையே. அவர் இன் னும் உம்மைக் கடைசிபரியந்தம் கைநெகிழ்ந்தி ருக்க, உம் து ஆத்துமம் வரவர அதிக சோபசந்தாப வியாகுல சாகரத்திலே அமிழ்ந் தின தினாலே, தேவரீர் ஆகாயமும் பூமியும் அ தர உரத்த சத்தமாய்க் கூடப் பிட்டு: என் பிதாவே! ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர் என் று வசனித்து, இந்தக் கண்ணராவியின் நடுவே உயிர்விட்டீரே.

ஐயோ பாவிகளே, உங்கள் பாவக் குரோதத்தின் பாரதூ ரத்தை நீங்கள் இன் னுங் கண்டுபிடிக்கவில்லை யோ? இத்தனை கண்டிப்பான உத்தரிப்பைத் தமது பிரிய குமாரனிடம் கேட்கிற - பிதா அதை எவ்வளவாகப் பகைக்கிறார் என் பதை நீங்கள் அறிவதில்லையோ? இன் னும் பாவத்தைச் செய்வீர்களோ? இன்னும் பாவத்திலே நிலைகொள் வீர்களோ? முன்னே கோர், டாதன் என்பவர்களை யும் அவர்களே ாடு சேர்ந்த இரு நூறு கலகக்காரரை யும் பூமி வாய் திறந்து விழுங்கியது போல, பாவிகளே, உங்களையும் விழுங்காதிருக்கிறது தேவ இரக்கம்; யேசு நாதர்பட்ட பாடுகளைப்பார்த்துச் செய்கிற இரக் கம், சுவாபத்துக்கு விரோதமான மோகபாவத்திலே பழகின சோதோம் கொமோற தேசத்தவர்களை' நெ ருப்பு மழையினாற் சுட்டெரித்ததுபோல, பாவிகளே, உங்களையும் இதுவரைக்கும் சுட்டெரியாதிருக்கிற தும் தேவ இரக்கம், ஓசா என் றவன் வாக்குத்தத்தம் பேழையைத் தொட்ட உடனே விழுந்து சாகப்பண்ணினதுபோல, பாவிகளே, உங்களையும் நீங்கள் பாவங் கட்டிக்கொண்ட வேளையிலே தானே சாகப்பண் ணாம் லிருந்ததும் தேவ இரக்கந்தானே. ஆனால், எம்மட் டுக்கும் சருவேசுரன் பொறு தியாயிருப்பார்? அவருக் கு அளவில்லாத இரக்கம் இருக்கிறதுபோலவே அள வில்லாத நீதியும் உண்டல்லவோ! ஓ பாவிகளே! நீங் கள் ஒரு பொய்யான சமாதானத்தோடு இவ்வுலகத் தில் வாழுகிறீர்கள். ஆன படியால், கேடொன்றும் இல்லையென்று எண்ணாதேயுங்கள். உங்களைத் தேவன் தண்டியாமல் விட்டுக்கொண்டு வருகிறதே அவருடை ய மகா உக்கிர கோபத்தின் அடையாளம் என்றதை அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் நா லு ம னுஷரைப் போல ஓடியாடித் திரிவீர்கள், ஆனால் உங்கள் தலை மேல் ஓங்கின சர்வவல்லமையுள்ள கரத்துக்குத் தப் பிக்கொள்ள வே மாட்டீர்கள். சருவேசுரன் வசனித் திருக்கிற திகில் உறுத்தும் வார்த்தைகளைக் கேளுங் கள் : பாவிகள் மேல் நமது கண்களை ஊன்றி நிறுத்து வோம். அதுவும் அவர்களுக்கு நன்மை செய்ய அல்ல. நிறைந்த தின்மை செய்யவே நமது கண்களை நிறுத்து வோம். (அமோஸ் 9:8) பராக்கிரம தேவனுடைய இந்தப் பயங்கரமான கண்காணிப்புக்குத் தப்பிக்கொள்ளத் தக்கவனார்!

கிறீஸ்தவர்களே , இன்னும் ஓர் நிமிஷம் நமக்கி ருக்கிறது. அதாவது : இப்போது உள்ள இந்த நிமி ஷம். வரும் நிமிஷத்தைப்பற்றி அறியோம். ஆனபடி யால், செய்த பாவத்தை இப்போதே வெறுத்துவிட்டு ஆண்டவர் பக்கமாய்த் திரும்பிக் கொள்ளக்கடவோம். தம்மோடுகூடப் பாவத்தைப் பகைக்கிறவர்களைக் கர்த் தர் நேசிக்கிறார். ''அவர் பக்கமாய்த் திரும்புகிறவர்களை இரட்சிக்க ஆயத்தமாயிருக்கிறார். எசேக்கி யேல் தீர்க்கதரிசி வாக்கியமாய் ஆண்டவர் தாமே வச னித்ததைக் கேளுங்கள் : ''பாவியானவன் சாகவேண் டுமென்றல்ல. அவன் தன் துர்வழியில் நின்று திரும் பிச் சீவிக்கவேண்டுமென்றே விரும்புகிறோம். ஓ இசி ராயேல் சனமே, திரும்பு திரும்பு, உன் பாவவழியில் நின்று திரும்பு. நீ சாவானேன்? பாவி எந்த நாளில் தன் பாவ வழியைவிட்டுத் திரும்புவானோ அந்த நாளி லே அவன் பாவம் அவனுக்குத் தீங்கு செய்யாமல், விட்டுவிடுமென்று சொல்லு.'' (எசே 33: 11)

ஆம், கிறீஸ்தவர்களே ஆண்டவர் நமது மனஸ்தாபத்தினால் இளகிப்போகிறவர். அவர் ஒரு கருணையுள்ள பிதா. நாம் நல்ல மனதோடு திரும்பி, மெய்யான துயரத்தோடு பாவசங்கீர்த்தனம்பண்ணினால், நமது பாவங்கள் பொறுக்கப் பட்டுப்போம். நம்மேல் ஓங்கிய கரம் தாழ்ந்துபோம், அடிக்க உயர்த்திய கையால் அரவணைக்கக் கூப்பிடுவார். இப்படியே பாவம் பொறுக்கப்பட்டவர்களாய், இனி, தேவபத்தியோடு கற்பனைகளை அனுசரித்து நடந்து மோட்ச பாக்கியம் பெற்று வாழலாம். இந்தப் பாக்கியத்தை நம் ஒவ்வொருவருக்கும் தயாபர சருவேசுரன் தந்தருளுவாராக!

ஆமென்.