தவத்தின் அவசியம் 2

ஆனால், சகலருக்கும் தவம் அவசியந் தானா ? பிரிய மான கிறீஸ்தவர்களே, அற்பமா சும் அணுகாதவரும், அளவில்லாத பரிசுத்த சருவேசுர னுமாகிய யேசு நாத சுவாமி தாமும் தவஞ்செய்யத் திருவுள மா யிருந்திருக் கையில், பாவிகளாகிய நமக்கு அது அவசியமில்லை என்று சொல்ல யார் துணி வார்? நமது திவ்விய குருவானவர் தாம் செய்தபிரசங்க வாக்கியங்களால் மாத்திரமல்ல, நடந்துகாட்டிய திவ்விய மாதிரிகையாலும் நமக்குப் போதித்திருக்கிறாரென் று அர்ச்சியசிஷ்டர்கள் எல்லாரும் சொல்லுகிறார்கள். இதோ முன் மாதிரிகையைக் கண்டோம்; அவர் தாமே தவஞ்செய்தார். இனி, இதோ அவர் திருவுளம் பற் றிய வார்த்தைகளிலும் சிலவற்றை எடுத்துச் சொல் லுகிறேன், கேளுங்கள். கர்த்தர் செய்த முதற்பிரசங் கம் என்ன? முதன் முதல் அவர் தமது சீஷரோடு புறப்பட்டுப் பட்டணங்கள் தோறும், கிராமங்கள் தோறும் பிரசங்கம் செய்யப் போனபோது 'தவஞ் செய்யுங்கள் தவஞ்செய்யுங்கள் ; ஏனெனில், பர லோகராச்சியம் சமீபமாயிற்று,'' என்று கூறித்திரிந் தார் என்று அர்ச். மத்தேயு எழுதிவைத்திருக்கிறார். (மத்தேயு 4; 17) தவஞ் செய்யாததற்காகவே, கொறோசேயின், பெத் சாயிதா என்னும் பட்டணங்களை எங்களாண்டவர் பெருந் துயரத்தோடு கடிந்து சபித்தார் என்று அர்ச் மத்தேயு சொல்லுகிறார். (மத்தேயு 11; 21) கொறோசேயினே உனக்கு ஐயோகேடு, பெத்சாயிதாவே உனக்கு ஐயோ கேடு, ஏனெனில் உங்களிடத்தில் செய்யப்பட்ட அற்புதங் கள் முற்காலம் தீர் சீதோன் எனும் பட்டணங்களில் செய்யப்பட்டிருக்குமேயாகில், அவர்கள் இரட்டு உடுத்துச் சாம்பலும் தரித்துத் தவஞ் செய்திருப் பார்களே. பாருங்கள் இரட்டு உடுத்துச் சாம்பலுந் தரித்துத் தவஞ் செய்யாதது தான் அப்பட்டணத்தா ருக்குக் கிடைத்த தேவ தீர்வைக்கு நியாயம் என்கி றார் நம்முடைய அரிய கர்த்தர். வேறு பல தடவை களிலும் கர்த்தர் தம்முடைய சீஷரையும் பிறரையும் நோக்கி: நீங்களும் தவம் செய்யாதிருந்தால் கெட்டே போவீர்கள், கெட்டே போவீர்கள் என்று சொல்லி யருளினார் என்று சுவிசேஷங்களில் வாசிக்கிறோம். (லூக்கா 13; 3.)

ஒருவேளை: நம்முடைய இரட்சகர் பாடுபட முன் தான் இந்தப் பிரசங்கம் செய்யப்பட்டது. அவர் எங்களுக்காகப் பாடுபட்டதோடு இனி நாங்கள் எங்களை அதிகமாய் ஒறுக் கத் தேவையில்லை யென்று சொல்லலாமா? ஒருபோதும் சொல்லக் கூடாது. ஏனெனில், தாம் பாடுபட்டுப் பரலோகத் துக்கு ஆரோகணமான பின்பே தமது சீஷர்கள் ஒரு சந்தியாயிருப்பார்கள் என்று சொன்னார் : ''மணவா ளன் தங்களோடு இருக்குமட்டும் அவன் தோழர்கள் துக்கித் திருக்கக்கூடுமா? ஒருநாள் மணவாளன் எடுத் துக்கொள்ளப்படும் காலம் வரும்; அப்போதே அவர் கள் ஒருசந்தியா யிருப்பார்கள் '' (மத்தேயு 9; 15.) ஆம். யேசுநாதசுவாமி திருவாய் மலர்ந்தபடியே அவரது ஆரோகணத்தின் பின்னும் அப்போஸ்தலர்கள் தவத்தைப் போதித்துக்கொண்டுவந்ததைக் காண்கிறோம். ஆரோகணத்துக்குப்பின் பத்தாம் நாளில் திருச்சபைத் தலைவராகிய அர்ச். இராயப்பர் பண்ணிய முதற்பிரசங்கத் திலே தவஞ்செய்யும் கடமையைத் தான் வலியுறுத்திப் பேசுகிறார். ''தவஞ் செய்யுங்கள் உங்கள் பாவ மன்னிப்புக்காக ஞானஸ்நானம் பெறுங்கள்'' என்று தலைமை அப்போஸ்தலர் பிரசங்கித்தார். (அப். நடபடி 2; 38.) ஓர் வேளை ஆண்டவரைக் கொன்றவர்களாகிய யூதசாதியாருக்கு மாத்திரம் அப்போஸ்தலர் இப்படிப் பிரசங்கித்தார் என்று சொல்லலாமா? இல்லையில்லை. '' சருவேசுரன் இப்போது சகல மனிதருக்கும் எங்கெங்கும் தவஞ் செய்யவேண்டுமென்று அறிவிக்கிறார்' என்பதாக அப் "போஸ் தலர்கள் பிரசங்கித் துக்கொண்டுவந்ததை அப்போஸ்தலர் நடபடி என்னும் ஆகமம் தெளிவாய்ச் சொல்லுகின்றது. (அப். நட. 17; 30.)

அப்போஸ்தலர்கள் தாங்கள் போதித்தபடி நடந் துகொண்டும் வந்தார்கள். அப்போஸ்தலரென்றால் முற்றாய் மனந்திரும்பிய மனிதர் அல் லவா? யேசுநாத சுவாமிக்காக எல்லா வற்றையும் துறந்து விட்டு யூதருடைய பகைப்புக்கும், அஞ்ஞானிகளுடைய நகைப்புக்கும் இலக்காகி, காடுண்டோ மலையுண்டோ ', கரையுண்டோ , கடலுண்டோ எங்கும்போய் உலைந்து சுவிசேஷத் தைப் போதிக்க ஏற்பட்டவர்கள் அவர்கள் அல்ல வா? தேவ வரப்பிரசாதத்திலே திடப்பட்ட சுத்த வாளர் அவர்களல்லவா? ஆனாலும் அவர்களும் கடின தவம் செய்துகொண்டுவந்தார்கள். அர்ச். சின்னப்பர் சொல்லுகிறதைக் கேளுங்கள்: ''எங்கள் சரீரங்களில் எப்போதும் யேசுக்கிறிஸ்துநாதருடைய பாடுகளைத் தரித்திருக்கிறோம். இதனால் யேசுக்கிறிஸ்துநாதரு டையசீவியம் எங்கள் சரீரங்களிலும் காணப்படுகிறது'' என்கிறார். (2 கொரிந். 4: 10) இன்னும் ஓரிடத்தில் '' கிறீஸ்து நாதரு டைய பாடுகளிலே குறைவாயுள் ள வைகளை (அதா வது நானும் அனுபவிக்கவேண்டும் என்றிருக்கிறவை களை) என் மாமிசத்திலே நிறைவேற்றிக்கொண்டு வரு கிறேன் ” என்கிறார் (கொலோ 1; 24)

இந்தப் போதகத்தைச் செய்த திருப்பிரசங்கிகள் மாத்திரமா, அ வர்கள் போதகத்தைச் சுமுத்திரையாய் அனுசரித்த ஆதிக் கிறீஸ்தவர்க ளும் தவத்தையே பிரதானமா ய்ப் போற்றினார்கள் என்று காண்கிறோம். அவர்கள் அடிக்கடி ஒருசந்தியா யிருந்தார்கள். நெடுநேரம் விழித்திருந்து செபஞ் செய் தார்கள். மயிர்ச் சட்டையை அணிந்தார் கள். முள் ஒட்டியாணத்தைத் தரித்தார்கள். இப் படிப்பட்ட தவஞ்செய்த இவர்கள் யார் ? சன்னியாசி களா? கன்னியாஸ்திரிகளா? இல்லை இல்லை ; அக் காலத்திலே சன்னியா சச்சபைகள், கன்னியாஸ்திரிக் கூட்டங்கள் ஒன்றும் உண்டாயிருக்கவில்லை. உங்களைப் போல உலகத்திலேசன், சரித்துக்கொண்டுவந்த கிறீஸ் த வர்களே இப்படிப்பட்ட தபசு களைச் செய்வோ ரானார்கள். இதுவும் ஆச்சரியமா? கிறீஸ்தவர்கள் என்றால் யார் ? கிறீஸ்துநாதருடையவர்கள். கிறீஸ் துநாதருடைய வர்கள் என்றால் யார் ? அர்ச் சின்னப் பர் சொல்லுகிறபடி தங்கள் சரீரத்தை அதன் சகல ஆசாபாசங்களோடும் சிலுவையிலே அறைந்துபோட் டவர்கள் தான் கிறீஸ்துநாதருடைய வர்கள். (கலாத். 5; 24) உள்ள படியே, சரீரத்தின் இச்சைகளை அடக்கி, இந்த உல கம் ஒரு கண்ணீர்க் கணவாயேயல்லாமல் தங்கள் சுய தேசமல்ல என்று கண்டு பிடித்துக்கொண்டு, உலகத் திலிருந்தாலும் உலகத்தாரல்லாமல் அதை வெறுத்து நடக்கிற தவத்திகளின் கூட்டந் தான். கிறீஸ் தவர்கள் சபை, சிலுவையைச் சுமந்து கொண்டு போய் அதில் அறையுண்டவருடை! சகோ தரர்தாம் கிறீஸ் தவர் கள். ஆகையினாலே கர்த்தரும் ': என்னைப் பின் செல் ல விரும்புகிறவன் தன்னைத் தானே வெறுத்துத் தன் - சிலுவையை எடுத்துக்கொண்டு வருவானாக.,'(மத். 16; 24) ''பர லோக ராச்சியம் பலவந்தப்படுகின்றது. பலவந் தக் காரர் அதைப் பறித்து எடுக்கிறார்கள் '' (மத். 11 : 12) ''ஓ சீவி யத் துக்குச் செல்லுகிற பாதை எவ்வளவு ஒடுக்கமும், வாசல் எவ்வளவு இடுக்சமுமாயிருக்கிறது (மத். 7 ; 14) என்று திருவுளம் பற்றுகிறார். ஆமாம், தவஞ் செய்யாதவர் கள் கிறீஸ்தவர்களல்ல, அதாவது கிறீஸ்து நாதருடை யவர்கள் அல்ல. ஆகையால் கிறீஸ்தவர்களாகிறவர்கள், ஏதோ ஒருவிதத்தில் தவஞ் செய்யவேண்டியவர்களே என்பது சத்தியத்திலும் சத்தியம் ; வெளிப்படையில் லும் வெளிப்படை.