இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

வேதாபிமானம் 2

யேசுநாதசுவாமியுடைய திருவேதம் பரிசுத்தமுமானது. அதுவே உலகத்திலுள்ள ஏக பரிசுத்த வேதம் என்றதை யாவரும் ஒத்துக்கொள்ளுவார்கள். அக்கியானிகளைப் பாருங்கள். அவர்களுடைய மார்க்கத்தின் தன்மை அவர்களிலேயே விளங்குகிறது. அவர்களுடைய வேதமோ பெரும்பாலும் அசுசியான கதைகளையே அடக்கியது. அவர்களுடைய தெய்வங்களோ சன்மார்க்கத்தின் மணமும் வீசப் பெறாதவர்கள். ஏனெனில் அக்கியான சமயங்களெல்லாம் மனுஷனால் உண்டானவைகள். ஆதியில் இருந்த உண்மை மார்க்கமானது. கொஞ்சங் கொஞ்சமாய்ச் சிதைந்து, காண்ணில்லாத் தவறுகளோடு கலந்து, மனுஷருடைய கட்டுக்கதைகளோடு ஒன்றாகி இப்போது காணப்படும் அக்கியான மார்க்கங்களாக நிற்கிறது தேவனால் உண்டான சத்திய வேதமோ முற்றும் பரிசுத்தமானது. அதை உண்டாக்கியவர் பரிசுத்தர். அதிலே உள்ள போதனைகள் பரிசுத்தமுள்ளவைகள். அதிலே உள்ள தேவதிரவிய அனுமானங்கள் முதலியவைகள் எல்லாம் பரிசுத்தத்துக்கே வழியாய் உள்ளவைகள். இந்தப் பரிசுத்ததனமானது சத்திய வேதத்தின் உண்மைக்கு வெகு துலாம்பரமான ஒரு அத்தாட்சியாய் விளங்குகிறது.

ஆனால், வேதம் தன்னிலேதானே பரிசுத்தமான து என்றாலும், உலகத்து மனிதர் வேதத்தின் போத னை யைக்கொண்டு அல்ல, அதை அனுசரிக்கிறவர்களுடைய சாதனை யைக் கொண்டு தான் அதைச் சோதித் துப் பார்ப்பார்கள். வேதம் சரி என்று கண்டாலும், அதற்குக் கண்களை மூடிக்கொண்டு வேதக்காரரையே பார்த்துக்கொள் ளுவார்கள். வேதக் காரரை எப்போதும் வேதத்தோடு ஒற்றுமைப்படுத்திப் பேசுவார்கள்; நியாயம் முடிப்பார்கள். இப்படி உல கத்தார் செய்வது சரியல்ல என்பது மெய் தான்; ஆயி னும், ஒவ்வொரு ம ர மும் அதன் தன் கனியால் அறி யப்படும் என்று வேதத்திலே சொல்லப்பட்டபடியே மனுஷரும் கிறீஸ்தவர்களைக் கொண்டே கிறீஸ் துவே தத்தின் பரிசுத்ததனத்தைப் பரிசோதிப்பார்கள். ஆகையால், கிறீஸ்தவர்கள் பரிசுத்தமாய் நடந்தால் மாத்திரம் தங்கள் வேதத்தை உலகத்திலே மகிமைப் படுத்துகிறவர்கள் ஆவார்கள். - இப்படியே ஆதிக் கிறீஸ்தவர்கள் செய்தார்கள் என்று வாசிக்கிறோம். அவர்களிடத்தில் விளங்கின ஒற்றுமை, விசுவாசம், தாழ்ச்சி, உதாரகுணம், உண் மை, பொறுமை எனும் இவைகளைக் கண்ட அக்கியானிகள் தங்கள் விருப்பத்துக்கு மாறா கவும், அவர்கள் பரிசுத்தவான்கள் என்றும், அவர்கள் கைக்கொண்ட வேதமே சுத்தமான வேதம் என்றும் புகழ்ந்தார்கள். கிறிஸ்தவர்கள் இவ்வளவு முன்மாதிரிகையாக நடந்து வந்தபடியால் தான் தெர்த் துல்லியன் எனும் அக்கா லத் துச் சபைப்பிதா ஒருவர் அக்கியானிகளை நோக்கி எழுதுகிறார்:- நாங்கள் சீவிக்கிற மாதிரியை --- எங்கள் நடக்கையைப் பார்த்துக்கொண்டு பின்பு எங்களைக் குறைசொல்லுங்கள். எங்களுள் ளே அநியாயம், சூது, விசு வாசகா தகம் முதலிய எக் குற்றங்களும் இல்லை. கிறீஸ்தவர்கள் பலரை நீங்கள் மறியலில் அடைத்து வைத்திருக்கிறீர்கள் என்பது மெய் தான் ; ஆனால், அவர்கள் செய்த ஒரே குற்றம், கிறீஸ்து நாதரை விசுவசித்த குற்றமேயொழிய வேறல்ல என்பதற்கு நீங்களே சாட்சி. நாங்கள் மறைவிலே ஒருங்கு கூடுகிறோம் என்றது. மெய்தான். ஆனால், நாங்கள் கூடுவது சருவேசுரனை வழிபடுதற்கேயொழிய வேறொன்றுக் குமல்ல. செபஞ் செய்தபின் நாங்கள் தவக்கிரியைகளை அனுசரிக்கிறோம். எங்கள் சகோதர ஐக்கியத்தைக் கண்டுகொண்டு எங்கள் மார்க்கத்தைப்பற்றி நியாயந் தீருங்கள் - என்று எழுதினார் இந்த மாதிரியாக நாமும் இக்காலத்திலே நம்மைச் சூழ இருக்கிற அக்கியானிகளை நோக்கிச் சொல்லக்கூடுமா? . ஆதிக் கிறீஸ்தவர்கள் நடக்கைக்கும் நமது நடக்கைக்கும் எத்துணை வித்தியாசம்! வேதம் மாறிப்போகவில்லை என்பதிற் சந்தேகம் இல்லை. அவர்கள் விசுவசித்ததையே நாமும் விசுவசிக்கிறோம். ஆனால் நமது நடக்கை யோ கொள்கைக்கு ஒத்ததாய் இல்லை. ஒருவருடைய நடக்கைப்பிசகினாலே கிறீஸ்து நாதருடைய வேதவிசு வாசத்துக்குப் பழுது வராது என்று முன்னும் சொன் னேன். ஆனாலும், நாம் விசுவாசத்தின் பிரகாசமான வடிவத்தை நமது துர் நடக்கையாகிய படலினால் மூடிவிடும்போது, அதின் அழகை அக்கியானிகள் உள்ள படி காணக்கூடாமல் இருப்பார்கள் அல்லவா? அதிலே குற்றவாளிகள் நாம் தான் அல்லவா? திருச்சபையை விட்டு முற்றாய்ப் பிரிந்துபோனவர்களால் வேதத்துக்கு இவ்வளவு அவமானம் வராது. அதின் அங்கத்தவர்களாய் இருந்துகொண்டும், ஆண்டவருடைய திரு வேதத்துக்கு எதிராய் நடக்கிறவர்களாலே தான் வேதத்துக்குப் பெரிய அவமானம். இவர்களே அதின் முகத்திற் கரி பூசிவிடுகிறார்கள். இவர்களே யேசுநாதருடைய திருப் பத்தினியின் வதனத்தை உலகத்துக்கு வேற்று முகமாகக் காட்டிவருகிறார்கள்,

ஆ! கிறீஸ்தவர்களே, இந்த நாட்களிலே அவிசுவாசிகள் திருச்சபையைப் பார்த்து. அல்ல, அல்ல, அதின் அயோக்கியமான அங்கங்களைப் பார்த்து என்கிறேன். அவிசுவாசிகள் திருச்சபையைப் பார்த்து : ''இது தானா பூரண அலங்காரவதியாகிய நகரம்?'' (புலம்பல், 2; 15) இது தானா முன் ஒரு காலம் அத்தனை பரிசுத்தவான்களை, முனிவர்களை, கன்னியர்களைப் பிறப்பித்த நகரம்? இது தானா அத்தனை பட்டினங்களை இராச்சியங்களைத் திவ்வியமாக்கி, சீர் திருத்தி மகிமையில் உயர்த்திக் கடவுளுக்கு உகந்ததாக்கிற்று என்று சொல்லப்படுகிற சபை! இது தானா கொடிய காட்டு மிராண்டிகளான எத்தனையோ சாதிகளைச் சீவ இரக்கமும் தேவபத்தியும் உள்ளவர்களாக்கி அர்ச்சித்த திருக் கூட்டம்! என்று ஆச்சரியத்தோடு கேட்கவேண் டியிருக்கிறதல்லவா? திருச்சபையும் நமது மத்தியிலேயுள்ள திருச்சபையும் பெருமூச்சுக்களோடு ஆண்டவரைப் பார்த்து : ''கர்த்தாவே கண் நோக்கிப் பார்த்தருளும் ; இதோ நான் இழிகடையாய்ப் போனேன் (புலம்பல், 1; 110) என்று சொல்ல வேண்டியிருக்கிறதே!

திருச்சபையிலே எமது மத்தியிலேயும் பரிசுத்த மான, முன் மாதிரிகையான், சாங்கோ பாங்கத்தின் சுகந்த பரிமளம் வீசுகிற ஆத்துமாக்கள் உண்டு என் பதை நான் மறுக்கவில்லை. ஆனால் இவர்கள் மிகக் கொஞ்சம் பேர். பெருவாரியான சனமெல்லாம் திருச்சபைக்கு அவமானமாகவே நடக்கிறது. பிறசமயத்த வர்களும், அருமையாய், இலைமறைகாய் போலக் கா ணப்படும் சுத்த விசுவாசிகளை அல்ல, தங்களோடு நாளிலும் பொழுதிலும் புழங்கிவருகிற சனத்திரளைக் கொண்டுதான் வேதத்தை உரைத்து நிறுத்துப் பார்ப் பார்கள். இச் சன த்திரளோ உலகத்தின் வழியிற் பட்டு அக்கிரமங்களைச் செய்வதாயிருக்கிற து. கிறீஸ் தவர்கள் என்ற நாமத்தை ஒழிய சீவியத்தை நினைவி னாலே தானும் அறியாததாயிருக்கிறது. இச்சனம் திருச்சபைக்கு, எங்கள் ஆண்டவர் அருளிச்செய்த திருவேதத்துக்கு ஒரு பெரும் அவமானம்! சகிக்க முடியாத அவமானம்! '' எல்லாரும் பின் வாங்கிப்போ னார்கள். எல்லாரும் பிரயோசனம் அற்றவர்கள் ஆனார் கள்” என்ற சங்கீத வாக்கியம் (13ம் சங்கீதம், 3 .) இந்தக் கெட்ட கிறீஸ் தவர் களுக்கு, ஐயையோ, மிகவும் நன்றாகவே பொரு ந்துகிறது.

ஆ பாவிகளே, கிறீஸ்துநாதர் எவ்வளவோ பாடு பட்டுத் தம்முடைய திரு இரத்தத்தினாலே கழுவிச் சுத்தமாக்கிய சபையை நீங்கள் உலகத்துக்குமுன்னே அவலக்ஷண மாக்கிக் காண்பிக்கத் துணி ந்து கொண்டீர்களே ! வேதத்துக்கு ஒவ்வாத உங்களுடைய நடை யினால், பிறசினேகத்துக்கு எதிரான உங்கள் வியாச்சியங்களால், அடிபிடிகளினால், பகை வன் மங்களினால், உங்கள் வியபிசார மோக நடக்கையினால், உங்கள் அநியாய வட்டிகளினால் - யேசு நாதருடைய திருவேதம் அக்கியானிகளுக்குள்ளே தூஷணிக்கப்படக் காரணமாகிறீர்களே . ஆண்டவர் தமது திருப்பாடுகளின் வேளை யிலே பட்ட கசையடிகளையும் நிந்தை அலமா னங்களையும் நீங்கள் இப்போது மீண்டும் புதுப்பிக்கி றீர்களே. உங்களால் கிறீஸ்துநாதர் அவமானப் படுகிறாரே. (* ரோமர், 2; 24) ஆகையால் உங்கள் சொந்த ஆத்தும் ஈடேற்றத்தின் பொருட்டாக அல்லாவிடில், யேசுநா தருடைய திரு வேத மகிமையின் பொருட்டாவதுபிள்ளைக்குரிய தேவநேசத்தின் பொருட்டாக அல்லா விடில், ஒருவருக்கு மற்றொருவர் செலுத்தவேண்டிய தாகிய நீதிக்கடமையின் பொருட்டாவது இனிச் சுவி சேஷத்துக்கு ஒத்தபடி நடக்கவருந்தவேண்டாமோ? - - இப்போது முடிக்கவேண்டும். பிரியமானவர்க ளே, இதுவரையில் கேட்டவைகளை மன திலே இருத்தித் தியானித்து நீங்கள் எல்லாரும் மெய்யான வேத அபிமானம் உள்ள வர்கள் ஆகக்கூடுமானால் எவ்வளவு நன்மையாயிருக்கும்! அதினால் உங்கள் ஆத்து மக்களுக்கு எவ்வளவு பிரயோசனம் உண்டாகும்! திருச்சபையின் விருத் திக்கு எவ்வளவு அனுகூலமாகும்! உங்களால் பேசு நாதசுவாமியுடைய ஈடேற்றுகிற திருநாமம் எவ்வள வு துதிக்கப்படுவதாகும்! கிறீஸ்தவர்களே! நாம் எல் லாம், வேதத்துக்கு ஒவ்வாத நடக்கையினால், வேண் டா வெறுப்பினால் விசுவாசக்குறைவினால் திருச்ச பைக்கு மோசஞ்செய்யாதபடி கவனித்துக்கொள்ள வேண்டிய து பாரமான ஒரு கடமை; திருச்சபையின் ஸ்தாபகராகிய யேசுநாதர் மட்டில் நீதியின் பேரால் நாம்கொண்ட கண்டிப்பான கடமை. திருச்சபைக்கு மோசஞ் செய்யாமல் விடுவதென்பது மாத்திரமல்ல, அதற்கு உதவி செய்வதும் அல்லவோ எமது கடமை! ஆகையால், நம்மிடத்திலே உ யிருள்ள விசுவாசத்தைத் தூண்டி எழுப்பிக்கொள்ள வேண்டும். வேதசத் தியங்களை மேலும் மேலும் நன்றாய்ப் படித்தும் கேட் டும் தேர்ந்துகொண்டு, வேதவிஷயமான காரியங்களில் எல்லாம் திருச்சபைக்காக நின்று போராடவேண்டும். திருச்சபையின் வாழ்விலே சந்தோஷமும், தாழ்விலே துக்கமும் கொள்ளப் பழகவேண்டும். அப்பால், நாம் விசுவசிக்கிற திருப்போ தகத் துக்கு ஒப்ப, சாந்தம், பொறுமை, நீதி, நேர்மை, கற்பு, மட்டசனம் முதலிய சுகிர்த புண்ணியங்களை அனுசரித்து யேசுநாதசுவர் மி யுடைய தருச் சாயல் நம்மிலே காணப்படச் செய்ய அதிகமதிகமாய் வருந்த வேண்டும். இவ் உபாயங்களி னாலே திருச்சபையானது நமது மத்தியிலே விருத்தி யாகச் செய்துகொண்டு வருவோம், எத்தனை குரு மார் எத்தனை அரும் பிரயாசங்களோடு திருச்சபை யை விருத்தியாக்க உழைத்து வருகிறார்கள்! அவர் கள் கட்ட வருந்துவதை நாம் நமது ஒழுக்கமற்ற நடையினாலே பிடுங்கி எறிந்து கொண்டிருப்போமா? இல்லை, ஓர் போதும் இல்லை. கிறிஸ்தவர்களே, நாமும் அந்தப் பரிசுத்த வேலையிலே பங்குபற்றுவோம் - நாமும் நமது துப்புரவான சீவியத்தினாலும். வேதகா ரியங்களிலே காட்டுகிற கரிசனை யினாலும், வேத விஷ யங்களைப்பற்றி நாம் கொண்டிருக்கிற நிச்சய உணர் வினாலும், அக்கியானிகளும் பதி தரும் மனந்திரும் பித் திருச்சபை விருத்தியாகச் செய்வோம். இன்று தொட்டு நாம் திருச்சபையின் மகிமையே நமது மகி மை என்றபடி நடப்போம். நாம் பிறந்த குடிகுலத் தைப் பற்றி நாம் எவ்வளவு சுணை யுள்ள வர்கள்! நம து குலத்துக்கு எதிராய்ச் சொன்ன தை நமக்கு எ தி ராய்ச் சொன்ன தாகப் பாவிக்கிறோமே. நமது குலத் துக்கு இழிவானது ஒன்றையும் செய்யப்படாது என்றதே விரதமாக நடக்கிறோமே. அப்படியானால், திரு ச்சபை அல்லவா நமக்கு உலக பிறப்பைத் தந்த குடி குலத்திலும் பெரிய மகா மகிமையுள்ள குடியும் குல 'மும் ! அதைப்பற்றி நாம் சுணையற்றிருக்கலாமா? அ பி மானம் இல்லாமல் இருக்கலாமா? ஆகாது ஆகாது. ஆதலால், இது தொட்டே நாம் உத்தம விசுவாசிக ளாய், உத் தம் கிறீஸ் தவர்களாய் நடக்கத் தொடங் குவோமாக. சருவேசுரனுடைய வார்த்தையை மகி மைப்படுத்தத் தொடங்குவோமாக. அநந் த நீதிபர ராகிய அவரும் நம்மை ஒருநாள் பரலோக இராச்சி யத்திலே மகிமைப்படுத்தியருளுவார். ஆமென்.