இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

நன்மை வாங்க ஆயத்தம் 2

ஆனால் ஆண்டவர் சில ஆத்துமங்களுக்குள்ளே பிரலாப அழுகையோடு எழுந்தருளுகிறார் என்றோ மே. பரம தேவாமிர்தமான சற்பிரசாதம் சிலருக்கு கொடிய விஷமுள்ள நஞ்சாக மாறிப்போகிறதென்று முந்தின பிரிவிலே சொல்லப்பட்டதே. இந்தச் சமா தான பிரபுவுக்கு நிஷ்டூரஞ் செய்யும் ஆத்துமங்க ளும் உண்டா ? அப்படிப்பட்ட நிர்ப்பாக்கியர்களிடத்திலும் அவர் எழுந்தருளுவாரா? ஆ கிறீஸ்தவர்களே, சாந்தகுணமுள்ள செம்மறிப்புருவை யாகிய எங்கள் கர்த்தர், தம்மை அப்பத்தின் குணங்களிலே - --- மறைத்தருளச் சித்தமான தயவின் நிமித் தமாய் அவரை நன்றிகேடாய், துரோகமாய்ப் பெற் றுக்கொள்ளுகிறவர்களும் உண்டு, தங்கள் மரணத் தீர்லையைத் தாங்களே உட்கொள்ளுகிறவர்களும் உண்டு (1 கொரிந். 11; 29.) பரிசுத்த கர்த்தர் இந்தத் துரோகி ஆத் துமங்களிலே துக்கித்தவராய்க் கண்ணீர்விட்டழு கிறவர்போலப் பிரவேசிக்கிறார். இவ்வளவு துக்கத் துக்கும் அழுகைக்கும் காரண மான வர்கள் யார்? அவர்களுடைய துரோகம் எப்படிப்பட்டது? - அளவில்லாத இரக்கம் உள்ள வரும், நமது அன் புநிறைந்த பிதாவு மாயிருக்கிற சருவேசுரன் சுபாவ மான பெலவீனத்தால் நாம் செய்த பாவங்கள் எவ்வளவு பாரமானவைகளாய், வெட்கங்கெட்டவைகளாய், சதிமானமுள்ளவைகளாயிருந்தாலும், அவைகளை யெல்லாம் பொறுத்தருளுவதற் குச் சாதாரண வழியாகப் பாவசங்கீர்த்தனத்தை ஏற்படுத்தியருளினார்.

பாவசங்கீர்த்தனத்திலே சுமக்கக்கூடாத பாரங்கள் ஏற்றப்படுவதில்லை. அ நுசரிக்கக்கூடாத தபசுகள் கடி ன ஒறுத்தல்கள் கற்பிக்கப்படுவதில்லை. பிரசித்த மான பங்கங்கள் அபராதங்கள் விதிக்கப்படுவதில்லை. ஆ னால், அவரவர் தான் தான் செய்த கனமான பாவங்க ளை யெல்லாம் ஒன்றும் ஒளியாமல் அறிக்கையிட வேண்டும். மெய்யான துக்கத்தோடு அறிக்கையிட வேண்டும். ஆதியந்தமில்லாத, அனைத்தையும் படை த்த, அளவில்லாத சருவேசுரனுக்கு நீசப் புழுவாகிய மனுஷன் செய்த துரோகத்துக்குப் பிராயச்சித்தமாக இவ்வளவு மாத்திரமே அகத்தியமாய்க் கேட்கப்படுகி ற து. ஆனால், ஐயோ, நரக ஓநாயாகிய பிசாசின் மாய மே! எத்தனையோ கிறீஸ்தவர்கள், விசேஷமாய், வாலப்பிராயமுள்ளவர்கள் சருவேசுரனுடைய இரக் கத்தின் பீடமாகிய இந்தச் சமாதான நீதியாசனத் தண்டை வந்தும், தாங்கள் செய்த துரோகங்களோ டே இன்னும் மகா பழியான வேறொரு தேவ துரோ கத்தைக்கூட்டி, கள்ளப் பாவசங்கீர்த்தனம்பண்ணிக் கொண்டு, இந்தக் கடைசித் துரோகத்தோடு சற்பிர சாதமும் பெற்றுக் கொள்ளத் துணிகிறார்கள். ஆ மதி கேடே! ஆ நிஷ்டூரமே ! - கள்ளப் பாவசங்கீர்த்தனத்தின் மதிகேடு விளங் கும்படி அதின் காரணத்தைப் பாருங்கள். ஒரு சொற் ப வெட்கம், கூச்சத்தினாலல்லவோ, விசேஷமாய், துரோகமான பாவசங்கீர்த்தனஞ் செய் கிறார்கள்! எந்த நோயாளியாவது வைத் தியனிடத்திலே தன் அபாயமான நோயைச் சொல்லக் கூசி மறைப்பதுண்டோ? எவ்வளவு மறைவான இடத்திலே ஒரு இரணம் உண் டுபட்டாலும் அதற்குச் செய்ய வேண்டிய சிகிச்சையைச் செய்யாமற் கூச்சத்தினாலே மூடி வைப்பார் உண்டோ? அல்லாமலும், ஒரு நல்ல பிதாவிடத்திலே உன்னிலே அநுதாபமும் இரக்கமும் நிறைந்த உன் ஆத்தும் குருவிடத்திலே, தனிமையாய், மூன் ராம்பேர் அறியாமல், எப்போதாவது வெளிவருமெ ன்ற பயத்தின் நிழல் தானும் இல்லாமல்-உன் பாவத் தை ஒருதரம் அறிக்கையிட்டுவிடுவது இவ்வளவு கூச்சமென்றால், இதினால் மேலும் ஒரு படுபாதகத் தைக் கட்டிக்கொள்ளத் துணிவாயென்றால், கடைசி நாளிலே, பொதுத் தீர்வையின் தருணத்திலே, நீ ஒளி த்துவைத்த பாவமும், ஒளித்ததினால் கட்டிக்கொண்ட புதுத் துரோகமும் சகல லோகமும் அறிய உன்நெற் றியிலே எழுதிவிட்டவண்ணமாய்ப் பிரசித்தமாக்கப் படும்போது எவ்வளவு அதிக மான பங்கமும் வெட் கக்கேடுமா யிருக்கும் ! இதைச் சகிக்கவும் உன்னால் முடியுமோ! இல்லையில்லை. குருவானவர் உன் பாவத் தைக்கேட்டு உன்னிற் குறை நினைப்பாரென்றபயமும், பிறகு சொல்லலாம், கடைசிப் பாவசங்கீர்த்தனத்தி லே எல்லாம் நேர் சீராக்கிக்கொள்ளுவோம் என்ற நம் பிக்கையும் எல்லாம் பிசாசின் தந்திரம். பாவி தன து அதிக இலெச்சைகேடான பாவங்களைச் சொல்லும் போது குருவான வர் அவனிலே குறை நினைப்பதற்கு முழுதும் மாறாய், அவ்வளவு நிதார்த்தமான ஒரு பாவசங்கீர்த்தனத்தைப்பண்ண அந்தப் பாவி அடை ந்து கொண்ட வரப்பிரசாதத்தைப்பற்றி அகமகிழ்ந்து பூரிப்பார். அவனை அவமதிப்பதற்குப் பதிலாய், முற் றாக 11 னந்திரும்பிவிடுவதற்குரிய ஒரு தேவவரப்பிர சாதத்தை அடைந்து கொண்ட அந்தப்பாவியின்மட் டில் பெரிய மதிப்பும் கண்ணியமும் கொள்ளத் தொட ங்குவார். இது என்னுடைய சொந்த அநுபவம்.

கிறீஸ்தவர்களே, பாவசங்கீர்த்தனங்களைக் கேட்கிற சகல குருமாருடைய அநுபவமும் இது தான். ஏன்? ஆண்டவர் தாம் சொன்னாரே - மனந்திரும்பிப் பச்சாத்தாபப்படுகிற பாவியைக் குறித்துப் பரலோகத்திலே தேவதூதர்களின் மத்தியிலே சந்தோஷமுண்டாயிருக்கும் என்றார். (லூக், 15; 10.) இந்தச் சந்தோஷ பாக்கியத் திலே ஆத்தும குருவும் வெகுவாய்ப் பங்குபற்றுகிறார் என் றதை நம்புங்கள். - இனி ஒருகாலம் கடைசிப் பாவசங்கீர்த்தன த்தி லே எல்லாம் நேராக்கிக் கொள்ளுவேன் என்ற மோச மான நம்பிக்கை பிசாசின் ஆகப் பெரிய, பயங்கரமான தந்திரம். நல்ல பாவசங்கீர்த்தனஞ் செய்ய நமது சொந்தப் பெலனால் கூடுமா? கூடாது. சருவேசுரனுடைய விசேஷ வரப்பிரசாதம் இன்றிக் கூடாது. ஆனால், புதுப் புதுத் தேவ துரோகங்களைக் கூடக் கட்டிக்கொண்டு வருவதுதானா இந்த விசே ஷ வரப்பிரசாதத்தை அடைவதற்கு வழி! சாவான பாவத்தை ஒளித்துச் செய்கிற பாவசங்கீர்த்தனம் ஒவ்வொன்றும், ஒவ்வொரு பாரத் தேவதுரோகம். ஒவ்வொரு முறையும் யேசுநாதருடைய இரட்சிக்கிற திரு உ திரத்தைக் காலால், ஐயோ, பாதகமாய் மிதிப் பதற்குச் சரி, இனி, இப்படிப்பட்ட பாவசங்கீர்த்த னத்தின் பின், என்ன சொல்லுகிறேன்.-தேவதுரோ கத்தின் பின், திவ்விய சற்பிரசாதத்தை வாங்கத் துணி வது, மன தினால் வாக்கினால் நினைக்க உரைக்கக்கூடாத மகா தேவபழி. இவ்வாறான , ஒன்றைவிட ஒன் று கதித்ததான, மகா மகா துரோகங்களை,பழிகளைச் சுமந் துகொண்டு வரும்போது தானோ, கடைசியாக நல்ல பாவசங்கீர்த்தனம் பண்ணுவதாகிய புதுமையான வர ங் கிடைக்கும்? சருவேசுரனைப் பகிடி பண் ணுவது போன்ற இத் துர்ச்சிந்தையோடு, கடின இருதயத் தோடு இருக்கிற பாவி, தன க்கும் அன்புள்ள கர்த்த ருக்கும் செய்கிற நிஷ்டூரம் இவ்வளவு அவ்வளவு என்று எடுத்துச் சொல்லத்தக்கதல்ல.

கள்ளப் பாவசங்கீர்த்தனத்தோடு சம்பிரசாதம் பெறுவோரைப் போலவே மனந்திரும்பாமல், அதா வது, சாவான பாவப் பற்று தலோடு பாவசங்கீர்த்த னஞ் செய்தவர்களும் அபாத்திரமாய், தேவ துரோக மாய்ச் சற்பிரசாதம் வாங்குகிறார்கள். இந்தப் பிந் திய விதமாய்ப் பலனற்ற பாவசங்கீர்த்தனம் பண்ணு வோரின் தொகை கள்ளப் பாவசங்கீர்த்தனம் பண் ணுவோர் தொகையிலும் அதிகம். ஏனெனில் இது அ திக மறைவான ஒரு குறை பாடு. உள் ள படியே எத்தனை பேர் இருதயத்திலே வன்மத் தை வைராக்கியத்தை வைத்துக்கொ ண்டு, தங்களுக்குக் குற்றஞ் செய்தவர் களுக்குப் பொறுதி கொடுக்கச் சம்மதி யாமல், அவர்களைப் பழிவாங்கவேண்டுமென்ற கருத்தை மாற்றாமல் ஒப்புர வாக்குதலின் சக்கிறமேந்தைப்பெறத் துணிகிருர்கள்! எத்தனை பேர் பொல்லாத சிநேகங்களை அற 1.மறந்து விடாமல், தொடுப்புக்களை நீக்கிவிடாமல், தங் கள் மனச்சாட்சியின் கண்டனத்தைத் தணிப்பதற் காகமா த்திரம், இருதயத்திற் சுமந்த சுமையை வெளிப் பாவனை க்கு இறக்கிப்போடமட்டும் பாவசங்கீர்த்த ன பண்ணப் போகிறார்கள்! - இன் னும் எத்தனை யோ விதமான பாவப்பற்று தல்களும் இப்படியே உண்டு.

ஆனாலும், பிரியமானவர்களே, சாவான பாவத் தை உள்ள படியே . வெறுத்துவிடாமல், மெய்யான மனந்திரும்புதல் இல்லாமல் செய்கிற பாவசங்கீர்த்த னம் எல்லாம் வீண் பாவசங்கீர்த்தனம். மனம் பொ ருந்தி இப்படிச் செய்வதெல்லாம் தேவ நிந்தை, சுவாமித் துரோகம். முன் சொல்லியபடி சகல சாவான பாவங்களையும் அறிக் கையிடுதலும், சகல சாவான பாவங் களுக்காகவும் மெய்யான மனஸ்தாபமாய்--பயம்பொருந்திய மனஸ் தா பமாயாவது-இருப்பதும் ஆகிய இவை இரண்டும் பச் , சாத்தாப தேவ திரவிய அனுமானத்தின் பலிப்புக்கு அவசியம். சாவான பாவத்தை ஒளிப்பது பச்சாத் தாபத்தை எப்படிப் பலனற்றதும் தேவதுரோகமுள் ள தும் ஆக்கிப்போடுகிறதோ, அப்படியே, சாவான பாவத்தை மெய்யாகவே வெறுத்துவிடாமல் அந்தத் தேவதிரவிய அனுமானத்தை வாடிக்கை யின் நிமித்த மோ வேறு முகாந்திரமாகவோ பெறப் போவதும் அதைப் பலன் அற்றதும் தேவதுரோகம் உள்ள தும் ஆக்கிப்போடுகிறது. மன ஸ் தாபமில்லாமல், அதாவது, வேறு வகையாய்ச் சொல்லுகில், மனந்திரும்புதலில்லா மல், சருவேசுரனை விட்டுப் பாவத்தை நாடிய ஆத்து மம் பாவத்தை உண்மையாகவே விட்டு, சருவேசுரனை நாடாமல் --செய்யும் பாவசங்கீர்த்தனம் பலிப்ப தில்லை . இரண்டு வகையிலே எந்த விதமாயாவது துரோ கமான பாவசங்கீர்த்தனம் பண்ணியபின் தம்மைச் சற்பிரசாதத்தில் உட்கொள்ளத் துணிகிற * நிர்ப்பாக் கியமுள்ள ஆத்துமத்திலே பிரவேசிக்கும்போது, நம் முடைய அள வற்ற நேச மீட்பராகிய ஆண்டவர் கண்ணீர்விட்டு அழுகிறவர்போலாகிறார். அவர் எருசலேம் பட்டணத்தை நோக்கிச் சொல்லிய வாக்கியங்களையே அந்த ஆத்துமத்தை நோக்கியும் சொல்லுவது போலி ருக்கும்: ''உன்னுடைய இந்த நாளிலானாலும் உன் சமாதானத்துக்கு உரியவைகளை நீ அறிந் தாயென்றா லோ! இப்போதோ அவைகள் உன் கண்களுக்கு மறைந்திருக்கிறது. உன் சத்துருக்கள் உன்னைச் சூழ அகழ் பொறித்து, உன்னை வளைந்து கொண்டு, எப்பக் கத்திலும் நெருக்கி , உன்னைத் தரைமட்டமாக்கும் நாட்கள் வரும்!'' (லூக். 15. 41-44.) ஆ இப்படிப்பட்ட கேடும் ஆத்து மத்துக்கு வருவதுண்டா? ஆம், உன்னுடைய இந்த நாளிலானாலும், அதாவது: சருவேசுரன் ஒரு ஆத்து மத்தைத் தட்டி அருட்டி மனஸ் தா பத்துக்கு அழைக் கிறவேளை யிலேயென்கிலும், அவர் அ தினிடத்திலே எழுந்தருளுகிற நாளிலென் கிலும், அது மனந்திரும் பாமல் தன்னைக் கடினப்படுத்திக்கொண்டிருக்குமா னால் அவர் அதைக் கைவிட்டுவிடுவார். அனைத்தை யும் தாங்குகிறவரினால் கைவிடப்பட்ட ஓர் ஆத்துமத் தின் நிலையை எப்படி எடுத்துச் சொல்லுவோம்! அது சத்துருவாகிய பிசாசினால் வளைக்கப்பட்டு, பிசாசு வெட்டி வெட்டித் திறந்துவிடும் புதுப்புதுப் பாவச் சமயங்களாகிய பொறிக்கிடங்குகளில் அகப்பட்டு, முழுதும் அ தின் கைவசமாகி நரக பாதாளம் மட்டும் இழுத்துக்கொண்டுபோகப் படுவதாகும். எவ்வளவு பரிதாபகேடு! மாற்றக்கூடாதகேடு! நித்தியமான கேடு!

பிரியமான கிறிஸ்தவர்களே, இது பாஸ்குவார மல்லவா? ஆண்டவரை நாமெல்லாரும் நம் இருதயங் களிலே எழுந்தருளப் பண்ணவேண்டிய நாட்களல்ல வா? எங்கள் இரட்சணியமாகிய அவருடைய உலக சஞ் சார காலத்தின் அழுகைப்பிரலாபத்தை நாம் இந் தக்காலத்திலே புதுப்பித்து விடாதபடி கவனஞ்செலு த்த வேண்டும். நம்முடைய பழைய பாவங்களின் நினை வால் மனமுருகி, கண்ணீர் சிந்தி, அவைகளை நல்ல பாவசங்கீர்த்தன த் தி னாலும் பற்பல பத்திவேகமுள் ள தவக்கிரியைகளினா லும் மேலும் மே லும் நீக்கி, நமது ஆத்துமங்களைச் சுத்தமாக்கி, அவைகளிலே ஆண்டவர் ஆனந்தத்தோ டு எழுந்தருளி நம்மை ஆசீர்வதிக்கும் படி ஆயத்தஞ் | செய்ய வேண்டும். தேவ சாபத்துக்கும் நித்திய கேட் டுக்கும் உரிய விதமாய்ச் சற்பிரசாதத்தைப் பெற்றுக் கொள்ளுகிறவர்களின் தொகையிலே சேராமல், ஆசீர் வாதத்துக்கும் நித்திய பாக்கியத்துக்கும் உரிய வித மாய்ப் பெற்றுக் கொள்ளுகிறவர்களாக வேண்டும். இவ்விதமாய், நாம் எங்கள் ஆண்டவருடைய வரு கைக்கு ஆயத்தமாகி, விசுவாசத்தினால் அவரை எதிர் கொண்டு, தாழ்ச்சியினால் உபசரித்து, அன்பினால் அரவணைத்து நமது சீவியகாலமெல்லாம் அவரோடு ஐக்கியமாய்ச் சீவிப்போமானால், மறுமையிலே அவருடைய திருமுக தரிசனத்தை அடைந்து பேரின்பமாய் வாழுவோம்.

ஆமென்.