இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

நாட்பூசை காணுதல் 1

திவ்விய பூசையின் மகத்துவமானது நான் இப் பிரசங்கத்தின் முகப்பிலே எடுத்துச் சொன்ன வசனத்தினாலே போதியளவு நன்றாக விளங் கும். அர்ச். சுவிசேஷக அருளப்பர் ஞானப்பரவசமாகிப் பரலோகத்திலும் பூலோகத்திலும் அதிக ஆச்சரியமான தேவ அற்புதங்களைக் காட்சியாகக் கண்டு கொண்டிரு க்கையிலே, சருவேசுரனுடைய பலிபீடத்தின் முன் பாக தேவ செம்மறிப்புருவையானவர் கொல்லப்பட் ட பாவனையாக நிற்கக் கண்டார். இந்தக் காட்சியைச் சபைப்பிதாக்களும் வேதசாஸ்திரிகளும் வியாக்கியா யானம்பண்ணி, இது திவ்விய பூசையிலே நடக்கிற அதிசயத்திற்கு ஓர் குறிப்பே என்கிறார்கள். நமக்காக ஒருதரம் சிலுவையிலே பலியாக்கப்பட்ட தேவ செம் மறிப்புருவையாகிய-யேசுநாதசுவாமி, திவ்விய பூசைப் பலிப்பீடத்திலே மெய்யாகவே கொல்லப்படாவிட்டா லும், கொல்லப்பட்ட பாவனையாகத் தம்மைத்தாமே பலியாக ஒப்புக்கொடுத்துக் கொண்டு வருகிறார். உள்ளபடியே, தேவபிதாவானவர் உலகத்தின் பாவங்களைப் போக்கத் தம்மைத்தாமே பலியாய்ச் செலுத்துகிற தேவ குருவாகிய யேசுநாதசுவாமியை இவ்வுலகத்தில் அனுப்பியபோது, அவர் தமது பலியைக் கல்வாரி மேட்டிலே முற்றாக முடித்து விடும்படியாக அனுப்பவில்லை. ஆனால் அங்கே இரத்தஞ்சொரிந்து தொடங்கிய பலியை இரத்தஞ்சொரியா வண்ணம் உலகமுடியு மட்டும் தொடர்ந்து நடத்திக்கொண்டு வரவேண்டு மென்று சித்தமானார். தாவீது இராசாவின் வாயினால் ஏலவே சொல்லப்பட்ட வாக்கியத்தைக் கேளுங்கள் : ''ஆண்டவர் சத்தியஞ்செய்து திருவுளம்பற்றினார். அவர் இனி அதைக் குறித்து மனம் வருந்தவும் மாட் டார். அதாவது : நீர் மெல்க்கிசேதேக்குவுடைய மு றையின்படியே நித்தியமாகக் குருப்பிரசாதியாயிருக் கிறீர்.'' (சங்கீதம் 108 ; 4) இந்த வாக்கியமும், யேசுநாதசுவாமி தாம் ஒருமுறை கல்வாரிமேட்டிலே செலுத்திய இரத்தப் பலியை இப்போது, மெல்கிசேதேக்குவின் முறைப் படி, அதாவது : இரத்தஞ் சிந்தாதவிதமாயும் அப்பத் தின் இரசத்தின் குணங்களுக்குள்ளேயும் ஒப்புக்கொ டுத்துக்கொண்டுவருவதையே குறிக்கின்றது.

ஆகையால் கல்வாரியிலே செலுத்தப்பட்ட இரத் தப்பலியிலேயும் பூசைப்பலி யிலேயும் பலிப்பொருளும் பலியிடுகிறவரும் ஒரு வர்தாமே, சிலுவையிலேயே சுநாதசுவாமியுடைய திருச் சரீரமும் திரு இரத்தமும் உலகத்தின் பாவங்களைப் போக்கும் திவ்விய கிரயமாக ஒப்புக்கொடுக்கப்பட்ட து. அப்படியே, பூசைப்பீடத்தின் மேலும் யேசுநாத சுவாமியுடைய திருச்சரீரமும் திரு இரத்தமுமே நம து பாவங்களைப் போக்கும் கிரயமாக ஒப்புக்கொடுக் கப்படுகின்றது. உள்ளபடியே எங்கள் திவ்விய மீட்பரு டைய திருச்சரீரத்தையும் திரு இரத்தத்தையும் போல தேவபிதாவுக்கு உவப்பான காணிக்கை வானத்திலேயா வது பூமியிலேயாவது வேறில்லை. ஆகையாற்றான் வேதா" கமத்தில் எழுதியிருக்கிறதாவது: மிருகப் பலிகளையும் நைவேத்தியங்களையும் பிதாவே நீர் விரும்பினீரல்ல . , எனக்கோ ஒரு சரீரத்தை உருப்படுத்தினீர். புத்தகத் தின் தலை ஏட்டில் எழுதியிருக்கிறபடி, இதோ நான் தேவ சித்தத்தை நிறைவேற்ற வருகிறேன். அதாவது : என் சரீரத்தைப் பலியிடுகிறேன். * இந்தத் திவ்விய சரீரந்தானே திவ்விய பூசையில் நாள்தோறும் ஒப் புக்கொடுக்கப்பட்டுவருகிறது. (எபிரேயர் 10; 5-7, சங். 39; 8.)

இனி, சிலுவையில் ஏறிப் பலிசெலுத்தின வரும், பூசைவேளை யிலே மறைந்து நின்று பலிசெலுத்துகிறவரும் ஒருவர் தாம் என்றதையுங் கவனி த்துக் கொள்ளுங்கள். யேசுநாதசுவாமி தாமே பூசைப்பலியைச் செலுத்துகிறார். குருவானவரோ, அவருடைய தானாபதியாக மாத்திரம் நின்று கைங்கரியஞ் செய்கிறார் என்பது வேதசாத்தியம். பூசையிலே கைங்கரியஞ் செ ய்கிற குருவானவர் மெய்யாகவே குருப்பட்டம் உள்ள வர் என்பதும் தம்முடைய உத்தியோகத்தைப் பூசை யிலே செலுத்துகிறார் என்பதும் மெய் தான். ஆனால் குருவானவர் யேசுநாதருடைய திவ்விய குருத்துவத் திலே பங்குபற்றினவரும், காணப்படாமல் நிற்கிற அவருக்குக் காணப்படும் தானாபதியாய் இருக்கிறவரு மே அல்லாமல், பூசைப்பலியைப் பிரதானமாய் ஒப் புக்கொடுக்கிறவருமல்ல, யேசுநாதசுவாமியினின்றும் புறம்பான குருத்துவ வல்லமை உடையவருமல்ல. ஆனபடியாற் தான் தேவநற்கருணை உண்டாக்குகிற போது குருவானவர், இது யேசு நாதருடைய சரீர மென்று சொல்லி உண்டாக்காமல், இது என் சரீர மென்று யேசுநாதருடைய வாக்காகவே சொல்லி உண் டாக்குகிறார். அப்பத்தையும் இரசத்தையும் தேவ திருச்சரீரமும் திரு இரத்தமும் ஆக்கத் தேவ வல்ல மையினால் அல்லாமல் கூடாது. ஆதலால் குருவானவர் தானாபதியாய் நின்று கைங்கரியஞ் செய்யும்போது, யேசுநாதசுவாமியே காணப்படாமல் நின்று பூசைப் பலியை ஒப்புக்கொடுத்தருளுகிறார். ஆனபடியாற்றான் அர்ச். கிறிசோஸ் தொம் அருளப்பர் சொல்லுவது : குருவானவர் பூசை சொல்லிக்கொண்டு நிற்கிறதை நீ " காணும்போது குருவானவர் தாம் அத் திருப்பலியை ஒப்புக்கொடுக்கிறார் என்று எண்ணாமல், கிறீஸ்துநாத ருடைய திருக் கரங்களே காணப்படாத விதமாய் விரிக்கப்பட்டிருக்கிறதை விசுவாசக் கண்ணாற் பார்த் துக்கொள் என்கிறார்.

பிரியமான கிறீஸ்தவர்களே , இப்போது சற்று நேரம் மனதினாலே பிரயாணம் பண்ணி என்னோடுகூடக் கல்வாரி மேட்டுக்கு வாருங்கள். இதோ எருசலேம் பட்டணத்தின் மதிலுக்கு வெளியே உள்ள அந்தத் தலையோட்டு மலையின்மேல் நிற்கிறோம். எங்கள் இரட்சணியமா கிய யேசுநாதர் பதினைந்தடி நீளப் பாரச்சிலுவையைச் சுமந்துகொண்டு தமது இரத்தத்தில் தோய்ந்தவராய், திருக்காயங்கள் நிறைந்தவராய், துஷ்டசேவகரால் தள் ளி நடத்தப்பட்டு அம்மேட்டின் உச்சியில் வந்துசேரு கிறார். இதோ அவரைச் சிலுவையிலே கிடத்தித் திருப் பாத கரங்களிலே ஆணி அறைகிறார்கள். அறைந்தபின் ஆணிமுனைகளை மடக்கிச் சிலுவையை உயர்த்தி அதை நடுவதற்குக் கிண்டிய குழிக்குள் விழத் தட்டி நிறுத்து கிறார்கள். நம்முடைய ஆண்டவர் வானத்துக்கும் பூமிக் கும் நடுவே மூன்று மணித்தியாலமாகத் தொங்கி நமக் காகப் பிதாவைப் பிரார்த்தித்தருளுகிறார். வானங்கள் மெளனமாய்க் கேட்டுக்கொண்டிருக்கின்றன. பூமி ஓடி இருக்கின்றது. கணக்கில்லாத சம்மனசுகள் அள வில்லாப் பிரமிப்போடு ஆராதித்துக்கொண்டிருக்கிறார் கள். எங்கள் ஆண்டவர் எமது பாவங்களுக்காகப் படவேண்டிய டாடெல்லாம் பட்டு உத்தரித்த பின் எல் லாம் முடிந்ததென்று சொல்லித் தமது திரு ஆத்து மத். :தைப் பிதாவின் கரங்களில் ஒப்புவித்துச் சீவனை விடு கிறார். தேவமாதாவும் புண்ணிய ஸ்திரிகளும் துக்க சாகரத்தில் அமிழ்ந்துகிறார்கள். சற்று நேரத்துக்கெல் லாம் பூமியெங்கும் அந்தகாரம் வியாபித்துவிட்டது. அவருடைய அந்தரங்க சீஷர்களில் இருவர் வந்து திரு ச்சரீரத்தைச் சிலுவையால் இறக்கி கல்லறையில அட க்கம்பண்ணுகிறார்கள். அங்கே சம்மனசுகளின் சேனை :அத்திருவுடலைச் சூழ்ந்து ஆராதித்துக்கொண்டிருக்கி ன்றது. எவ்வளவு மன அருட்சியான காட்சி! கிறீஸ் த வர்களே நீங்கள் இவைகளையெல்லாம் கண்ணாலே கண் டிருந்தால் எவ்வளவாக மனதுருகி, இனி அந்த இடத் தைவிட்டுப்போகவும் மாட்டாதிருப்பீர்கள்.

இப்போது என்னோடுகூட வேறோர் இடத்துக்கு வாருங்கள். நாங்கள் இனி, ஒரு சத்தியவேத கோவிலுக்குப் போவோம். இதோ ஒரு குரு வானவர் பூசை சொல்லிக்கொண்டு நிற்கிறார். கிறிஸ்தவர்களே உங்கள் சரீரக் கண் களையல்ல விசுவாசக் கண்களைத் திறந்து பாருங்க கள். எழுந்தேற்ற மணி அடிக்கிறது. பூசகர் குனிந் து நின்று அப்பத்தின் மேலும் இரசத்தின் மேலும் தேவ வசீகர வார்த்தைகளை உச்சரிக்கிறார். நீங்கள் உடனே முகம் குப்புற விழுந்து ஆராதிக்கிறீர்கள். ஏனெனில் இதோ பீடத்தின் மேலே யேசுநாதசுவா மியுடைய திருச்சரீரமும் திரு இரத்தமும் எழுந்த ருளி வந்து விட்டன. சிலுவையிலே தம்மை ஒப்புக் கொடுத்தவர் இதோ பீடத்தின் மேல் தம்மை ஒப்புக் கொடுத்துக்கொண்டிருக்கிறார். இதோ அந்தத் திருச் சரீரமும் திரு இரத்தமும் குருவானவரால் வானத்துக்கும் பூமிக்கும் நடுவே உயர்த்தப்படுகிறது. வானோர் ஆச்சரிய வசத்தராய் வாய் புதைத்து ஆராதித்து நிற் கிறார்கள். பாதாளத்தார் நடுநடுங்குகிறார் கள். யேசு நாத சுவாமி சிலுவையின் மேல் இருந்து மன்றாடியது போலவே பீடத்தின் மேல் இருந்தும் மன்றாடுகிறார். எங்கள் பாவங்களுக்காகத் தம்மைத் தாமே ஒப்புக் கொடுக்கிறார். இத் திருப்பலியின் முடிவிலே அந் தத் திருச்சரீரம் ஒன்றில் புதுக்கல்லறைக்குச் சமா னமான ஓர் ஆத்து மத்திலே உட்கொள்ளப்படுகின் றது. அல்லது! சம்மன சோரின் சேனை புடைசூழ சற்பிரசாத பேழை என்னும் கல்லறையில் வைத்துக் காக்கப்படுகின்றது.

கல்வாரிப் பீடத்திலே நீங்கள் மனதின் கண்ணாற் கண்டதற்கும், பூசைப்பீடத்திலே விசுவாசக்கண்ணாற் கண்டதற்கும் வித்தியாசம் என்ன? பிரதானமான வித்தியாசம் ஒன்றும் இல்லை. இரண்டிடத்திலும் பலியிடுகிறவரும் ஒருவர். பலிப்பொருளும் ஒன்று. பலிக்கிருததியத்தோடு சேர்ந்த வரலாறுகளிலே ஏதா வது வித்தியாசம் உண்டென்றால், நமது ஆண்டவர் சிலுவைப்பீடத்திலே இரத்தஞ்சிந்தி மரித்தது போல பூசைப்பீடத்திலே மரிக்கிறதில்லை என்பது ஒரு வித் தியாசந்தான். ஆனால் ஒருதரம் மாமிசத்தில் மரித்து உயிர்த்தெழுந்தவராகிய நமது மீட்பர், இனி மரியா தவராய் எமக்காகப் பலியாவது எவ்வளவு ஆறுதல்! பூசையிலே மரணமில்லாமையாகிய ஆறு தல் நமக்கு இருந்தாலும், முன் ஒருமுறை ஆண்டவர் நமக்காக மரித்ததின் ஞாபகம் இல்லாமற்போகாது. தேவ வசீக ரத்தில் அப்பத்தின் குணங்களும் இரசத்தின் குணங்க ளும் புறம்பாக வைக்கப்படுவதினால், அவருடைய திருஇரத்தஞ் சிந்து தல் நினைப்பூட்டப்பட்டு, தேவசெம்மறி ப்புருவையானவர் சற்பிரசாதக் குணங்களும் தம்மை மறைப்பதினாலே கொலையுண்ட பாவனை யாகவே காண ப்படுகிறார். மேலும் சிலுவைப்பலிக்கும் பூசைப்பலிக் கும் ஏதும் பிரதான மல்லாத வித்தியாசம் உண்டென் றால், அந்த வித்தயாசமானது அதிலே இல்லாத தேவ தாழ்ச்சி இதிலே காணப்படுவது ஒன்று தான் என்று சொல்லலாம். அர்ச். அக்கினா தோமையார் சொல் லியதுபோல 'சிலுவையிலே தேவசுபாவம் மாத்திரம் மறைந்திருந்தது. இதிலேயோ தேவ சுபாவத்தோடு கூட மனுஷ சுபாவமும் மறைந்திருக்கிறது'' இதினாலே ஆண்டவர் இன்னும் அதிகமான அதிசயத்துக்கும் சிநேகத்துக்குமே உரியவராகிறார். மேலும் சிலுவைப் பலிக்கும் பூசைப்பலிக்கும் இடையில் ஏதும் பிரதா ன மல்லாத வித்தியாசம் உண்டென்றால், அது ஒரு இடத்திலே ஒரு முறை மாத்திரம் நடந்திருக்கையில் லே, இது எல்லாக் காலத்திலும் பூமியின் எந்தெந் தத் தேசத்திலும் நடக்கின்றது என்பதேயாம். இதில் னாலே அதிக தேவ அற்புதங்கள் தாம் காணப்படுகின் றன. மேலும் ஏதும் பிரதானமல்லாத வித்தியாசம் உண்டென்றால், சிலுவைப்பலி சகல லோகத்துக்கும் பொது வாக ஒப்புக்கொடுக்கப்பட்ட இடத்திலே, பூசைப்பலியோ, தனித்தனியே அவரவருடைய இர ட்சணிய வேலையை நடத்தி முடிப்பதற்காக ஒப்புக் கொடுக்கப்படுகின்றது. இதனால் நாம் ஒவ்வொருவ ரும் அர்ச். சின்னப்பருடைய வார்த்தைகளிலே : கிறீ ஸ்துநாதர் என்னைச் சிநேகித்து எனக்காகத் தம்மை ஒப்புக்கொடுத்திருக்கிறாரே (கலாத். 2; 20.) என்று சொல்லக்கூடியவர்களாகிறோம்.

இப்படிப் பூசைப் பலியான து சிலுவைப் பலி யோடு ஒன்றாய் இருக்கும் போது அதின் மகத்துவத்தை எடுத்துச் சொல்லவும் வேண்டுமா? ஆகையால் தான் சிலுவையிலே கிறீஸ்துநாதர் அடைந்த மரணம் எவ்வளவு பெறுபேறு உள்ளதோ, பூசைப்பலியும் அவ்வளவு பெறு பேறு உள்ளதென்று அர்ச். கிறிசோஸ் தொம் அருளப்பர் வசனித்திருக்கிறார். ஓ! திவ்விய பூசையின் மகத்துவத்தை, அருமையை, விலைமதிக்கரிய விலையை நாம் ஒருபோதும் இவ்வுலகத்தில் சரியாய் அறியவே மாட்டோம். அர்ச். பொனவெந்துர் உரைத்தபடி "திவ்விய பூசையானது சருவேசுரன் மனிதருக்குக் காட்டியருளிய சகல சிநே கத்திலும், செய்தருளிய சகல நன்மைகளி னும் சங் க்ஷேபமாயிருக்கின்றது. அர்ச். பிராஞ்சீஸ் கு சலேசி யார் சொல்லியபடி '' இந்தப் பரம இரகசியமானது தேவசிநேகத்தின் ஆழ்ந்த சமுத்திரம் முழுமையை யும் தன்னுள் அடக்கிக்கொண்டிருக்கின்றது '' அர்ச். லேயோனாட்டுடை ய வருணணை யின் படி, உலகத்துக் குச் சூரியன் எப்படியோ, திருச்சபைக்குத் திவ்விய பூசையும் அப்படியேயாம். சூரியன் உலகத்துக்கு மழையையும் விளைவையும் கொடுக்கிறது போல. திவ் விய பூசை திருச்சபைக்குச் சகல வரப்பிரசாதங்களை யும் கொடுக்கிறது பூசையிலே சருவேசுரன் தாமே எமக்காக எழுந்தருளியிருந்து மன்றாடி, எ மக்கு வேண்டிய சகல நன்மைகளையும் பொழிந் தருளுகிறார். யேசுநாதசுவாமி அதிலே நமது பாவங்களுக்குத்தக்க உத்தரிப்பைச் செலுத்தி நமக்காகப் பரிந்து பேசுகி றார். உலகத்தின் அக்கிரமங்களினால் ஓயாமல் கோபம் மூட்டப்படுகிற தேவ மகத்துவமானது இத்திருப்பலியாலே தான் சாந்தியாகி உலகத்தைத் தண்டியா மல் விட்டுக்கொண்டிருக்கிறதென்று அர்ச்சியசிஷ்டர் கள் சொல்லுகிறார்கள். சருவேசுரன் இக் காலத்தி திலே உலகத்தை ஆளும் முறையை மாற்றிப்போட் ந டவர் போலக் காணப்படுகிறாரே. முற்காலம் ஒரே பாவத்துக்காக அவர் எவ்வளவு கொடூர ஆக்கினை களை விதித்ததாக வாசிக்கிறோம். பெஞ்சமின் கோத்திரத் தாருட் சிலர் செய்த ஒரே வியபிசாரப் பாவத்துக் காக இருபத்தையாயிரம் பேர் வாளால் அரிந்து கொல்லப்படச் சருவேசுரன் கட்டளையிடுகிறார். (நியா. 20; 35) தாவீது இராசாவுடைய ஒரு வீண் மகிமையான எண்ணத்துக்காக எழுபதினாயிரம் பேர் கொள்ளை நோயாலிறக்கிறார்கள். (2 இராசாக். 24-15) பெத்சாமித் எனும் ஊரவர்கள் வாக் குத்தத்தப் பேழைக்குள்ளே அனாசாரமாய்ப் பார்த் தபடியால் அவர்களில் ஐம்பதினாயிரம் பேர் மாளுகிறார்கள். (1 இராசாக். 6, 19) ஆனால் இப்போது கிறீஸ்தவர்களுள் ளே தானும் எத்தனையோ எத்தனை யோ விபசாரங்கள், "சோரத்தனங்கள், வன் மங்கள், பகைகள், தேவதூ ஷ ணங்கள், அனாசாரங்கள் நடந்தபோதிலும் சருவே சுரன் உடனே தண்டியாமல் இருப்பதற்குக் கார ணமென்ன? உலகமெங்கும் எக்காலத்திலும் ஒப்புக் கொடுக்கப்பட்டுவருகிற பூசைப்பலியே காரணமென் று அர்ச்சியசிஷ்டர்கள் வசனிக்கிறார்கள்.