இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

முகத்தாட்சிணியம் 1

முற்காலத்திலே சிறைகுட்டிகள் என்றும், அடி மைகள் என்றும் சொல்லப்பட்டவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தப் பா விப் பிராணிகளும் ஆ தாம் ஏவாளுடைய பிள்ளை கள் தான். அது கையால் சகல மனுஷருக்கும் சகோ தர முறை உடையவர் களே என்பது நிச்சயம். ஆனாலும், முற்காலத்திலே நடைபெற்ற ஒரு துர் வழக்கத்தினால், சிறைகுட்டிகளாய்ப் பிடிக்கப்பட்டிருந்த இந்த மனுப்பிறவிகள் கையில் கழுத்திற் கயிறு மாட்டப்பட்டு ஆடுமாடுக ளைப்போல் நடத்திக்கொண்டு போகப்பட்டார்கள். அவர்களுக்குச் சுயாதீனமில்லை. காணி பூமி இல்லை. தட்டு முட்டு இல்லை. அவர்களே தங்களைக் கொண்ட, வர்களுடைய தட்டு முட்டுக்களைப்போல, வாய்விடாச் சாதிகளான கால்நடைகளைப்போல் நடத்தப்பட் டார்கள், கால்நடைகளைப் போலச் சந்தை யிலே கொ ண்டுபோய் விலைக்கு விற்கப்பட்டார்கள். கிறீஸ் து வேதம் பரம்பவே, அடிமை வியாபாரமும் அடிமை ஆட்சியும் சற்றுச்சற்றாகக் குறைந்துபோய்விட்டது. கிறிஸ்தவர்களாகிய நாம் எல்லாரும் சுயாதீனம் உள்ள வர்களாய்ப் பிறந்திருக்கிறோம். மனச் சுதந்திரமுள் எவர் கள ா யிருக்கிறோம். கிறிஸ்து நாதர் எம்மை மீட் ட சுயாதீனத்தினால் சுயாதீனம் உள்ள வர்களாயிருக் கிறோம்.

ஆனால், பிரியமான கிறீஸ் தவர்களே , முகத்துக்கு அஞ்சி நடக்கிறவன், தன்னை இந்தத் துர்ப்பழக்கடா கிய கொடிய எசமா னுக்கு முழுப்படியே விற்றவனாய்ப் போய் விடுகிறான். உலகத்திலே ஒருபோதும் இருந் திராத நீ அடிமைத் தனத்துக்கு உள்ளாகிப்போகிறான். முகத்தாட்சணியம் தேடுகிற கிறீ ஸ் தவன் ஸ்பிரித்து சாந்து சருவேசுரன் தனக்கு ஏ வி த் தருகிற நல் எண்ணங்களின்படி நடக்கக் கூடாதவன் ஆகிறான். கையுங் காலுங் கட்டப்பட்டவனாகிறான். அவன் எந். த நன் மை யைச் செய்ய உன்னினாலும் மனிதர் என்ன நினைப்பார்கள், என்ன சொல்லுவார்கள் என்ற பய மான து வந் து தடுத்துக் கொண்டு நிற்கிறது. அதுமட் டா? எந்த அடிமையாவது ஒரே தடவையில் இரண்டு எசமான் களுக்குச் சிறையாயிருப்பது உண்டோ ? இல்லை. ஆயினும், முகத்தாட்சிணியமுள்ள வன் தன் ஊரிற் தன்னை அறிந்த சகல அசட்டையான கிறீஸ் த வர்களுக்கும், பாவிகளுக்கும், அக்கியானிகளுக்கும் ஒரு தடவையிலேதானே அடிமைப்பட்டவனும் அஞ் சிநடக்கவேண்டியவனும் ஆகிறான். எங்கே போனாலும் இன்னார் என்ன நினைப்பார்களோ என்று பயப்படுகி றான். இந்த ஓயாத பயத்தினால், அவனுக்கு வீட்டிலே செபஞ் சொல்லப் பயம்; திடந் தாதிமணி அடித்தால் திருந்தா தி சொல்லப் பயம்; சாப்பிடுமுன், சாப்பிட்ட பின் செபஞ் சொல்லப் பயம்; சிலுவை அடையாளம் போடப் பயம், சுரூபங்களுக்கும் குருமார் முதலிய வர்களுக்கும் ஆசாரம் பண்ணப் பயம் ; பத் தியோடு செபிக்கிற பாவனையாயிருக்கப் பயம் ; ஆசிநீர் தொட் டுப் போடப் பயம்; சற்பிரசாதத்தின் முன்னே முழந் தாளிடப் பயம்; கோ யிலிலே வாய் திறந்து சகலரோ டும் செபஞ் சொல்லப்பயம் ; சகலத்திலும் பயத்தினாற் கட்டப்பட்டுப் புண்ணியவழியைக் கைவிட வேண்டிய வனாகிறான்.

" முகத்தாட்சிணியந் தேடுகிறவன் புண்ணியத் தைக் கைவிடுகிறதோடு நின்று விடுவானா ? இன்னார் என்ன சொல்லுவார்களோ நினைப்பார் களோ என்ற பயத்தினால் பாவத்தை யும் கட்டிக்கொள்ளத் துணிகிறவனாகிறான். இரண்டொரு உதாரணத்தைப் பார்ப்போம். சில புரோட்டெஸ் தாந் தர்களோடு அக் கியானிகளோடு பேசிக்கொண்டு நிற்கிறீர்கள். கடன் பூசைக்கு மணியடிக்கிறது. அவர்களுக்குக் காரியத் தைச் சொல்லிவிட்டுப் பூசைக்குப்போகத் துணிகிறீர்களில்லை.-- உங்களோடு பேசிக்கொண்டு நிற்கிறவர்களுள் ஒருவன் பரிசுத்த கற்புக்கு விரோதமான அ சுசி யான வார்த்தைகளைப் பேசுகிறான் ; கதைகளைச் சொல்லுகிறான்; பாட்டுகளைப் படிக்கிறான். நீங்களும் ஓம் ஆம் என்று சொல்லிக் கேட்டுக்கொண்டு நில்லா விட்டால் நிற்போர் என்ன நினைப்பார்களோ, என்ன சொல்லுவார்களோ என்ற பயத்தினால் அடிமைகொ ள்ள ப்பட்டு, நினை வினா லும் சம்மதத்தினாலும் பாவத் தில் விழுகிறீர்கள் - உங்களோடு சம்பா ஷிவிக்கிறவர் கள் திருச்சபையைத் தூஷணிக்கிறார்கள். சத்திய | வேதத்துக்கு எதிராகப் பொய்களை விழுங்கிக் கக்குகி றார்கள். பாவசங்கீர்த்தனம் முதலிய தெய்வீக வழி பாடுகளைப் பழிக்கிறார்கள். நீங்களோ ஊமைபோல் இருக்கிறீர்கள். முகத்தாட்சிணியம் உங்களைக்கோழை நெஞ்சாக்கிப்போட்டது உங்கள் வாயைப் பூட்டிப் போட்டது. நீங்களும் அவர்களோடுகூடச் சிரித்து உங்கள் மாதாவைப் படுபாதகமாய் இகழுகிறீர்கள். உங்கள் தேவனை மறு தலிக்கவும் வேண்டியவர்களாகி றீர்கள். நீங்கள் கிறிஸ்தவர்கள் என்றதையும் அக் கிரமமாய் மறைக்கவேண்டி வருகிறது. அல்லது வேறு ஓர் உதாரணம்: உங்களுக்குக் குற்றஞ் செய்த ஒருவ னுக்குப் பொறுதிகொடுக்கவும், அவனோடு உறவு கூடுவதற்குரிய காரியங்களை முந்தி நீங்களே செய்ய வும் தூண்டப்படுகிறீர்கள், யேசு நாதருடைய பாரி சுத்த முன் மாதிரியும், அவருடைய திருப்போதகமும் இதை உங்கள் மன திற் புகுத்தி உறுத்திக்கொண்டிரு க்கின்றன. ஆனால், ஐயோ முகத் தாட்சணியத்தின் கொடுங்கோன்மையே, உலகத்தார் எங்களைக் கோ ழையர்கள் என்று சொல்லார்களா? எங்களிலேதான் குற்றம் என்று பேசிக்கொள் ளார்களா? சரிக்குச்சரி பழிவாங்காவிட்டால் சக்கட்டை என்று சொல்லார்களா? என்ற எண்ணத் தூண்ட த் தூண்டப் பொறு தியான நல்லுணர்ச்சிகளையெல்லாம் மறந்து, வன்மஞ் சாதித்து, பரலோகத்துக்கு முன் னாகவும், பூலோகத் துக்கு முன்னாகவும் பாரப் பழிக்குள்ளாகிறீர்கள். வேறோர் உதாரணம்; நீங்கள் கூடிப்போகிற ஆட்கள் தவறணை க்குள் நுழைகிறார்கள். நாங்கள் அங்குவர வில்லையென்று சொல்ல, உங்களுக்குத் துணிவில்லை. குடி காரச் சினேகிதர் உரோசம் பொங்கி வார்த்து வார் த் துத் தர நீங்களும் மிருகம் அமைவதுபோல் அமை ந்து, உங்கள் தேவனின் கட்டளையைமீறி, வெறிக்கக், குடிக்கிறீர்கள். எவ்வளவு நீச அடிமைத்தனம்! முற் காலமிருந்த சிறைகுட்டிகளின் அடிமைத்தனத்திலே சரீரம் மாத்திரம் கட்டுப்பாட்டுக்குள் அடங்கியிருந் தது. கயிறும் சங்கிலியும் கையைக் காலைக் கழுத் தைச் சுற்றி மாட்டப்பட்டிருந்ததே ஒழிய ஆத்துமத் தன் தத்துவங்களுக்குக் கட்டுப்பாடு இடப்படவில்லை. ஆனால், முகத் தாட்சணியத் துக்கு இடங்கொடுக்கிற வனுடைய அடிமைத்தனம் அ திலும் எத்தனை யோ மடங்கு அதிக கேடாகிறதே. இதிலே மனம், புத்தி, சித்தம் எல்லாத்திலும் சங்கிலி யிட்டுக் கட்டிவைத்த துபோலிருக்கிறதே. சகலத்திலும் ஒரு எசமானுக் கல்ல, ஊரில் எத்தனை பத்தியற்றவர்களுண்டோ , எத்தனை நையாண்டிக்காரருண்டோ அத்தனை பேருக்கும் ஒரே தடவையில் அடிமைப்பட்டிருக்க வேண்டி, வருகிறதே ! இதை விடக் கொடிய சிறைக்கோலம் எப்போதாவது இருந்ததுண்டா? இருக்கக்கூடுமா ?