நன்மை வாங்க ஆயத்தம் 1

நேசத்துக்குப் பதில் நேசங் காட்டுகிற ஆத்துமங்கள்- தங்கள் இராசாவுக்கு விசுவாசமுள்ள பிரசைகளாயிருக்கிற ஆத்துமங்கள் -யேசு நாதசுவாமி தங்களுக்குள் ளே எழுந்தருளுவதற்குக் கொண்டிருக் கிற திருச் சித்தத்தை அறிந்தவுடனே, நற்கருணைக் குணங்களுக்குள்ளே வருகிற கர்த்தரை ஆசையினால் எதிர்கொண்டுபோய், புண்ணிய ஒழுக்கமாகிய தங் கள் உத்தரியத்தை விரித்து, பிசாசை வெற்றிகொண் ட செயவிருதுகளாகிய கிளைகளைத் துளிர்களைப் பரப் பிச் சந்தோஷ கோலாகலத்தோடே அவரைத் தங் கள் இருதயமாகிய சீயோன் பட்டினத்திற்குள்ளே வரவழைத்துக் கொள்ளுவார்கள். ஆண்டவர் இவ்வு லகத்திலே சஞ்சரித்த நாட்களிலே ஒருமுறை சக்கே யசு என்ற பாவியின் வீட்டிற்கு எழுந்தருளின போது அவன் அவருக்கு முன்பாகத் தெண்டனிட்டு நின் று: ''ஆண்டவனே இதோ என் ஆஸ் திகளிற் பாதி யை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன். நான் யாரு க்காவது நட்டம்வருவித்திருந்தால் நாலு மடங்கு இறு த்துப்போடுகிறேன்'' என்று மனஸ்தாபமும் அன்பும் விளங்கச் சொல்லிய துபோல (லூக் 19: 8) இவர்களும்: ''ஆண்ட வரே, தேவரீர் மிகவும் அபாத்திரனான என்னுடைய சிறு குச்சுக்குள்ளே பிரவேசிக்கலானீரே. தேவரீரு டைய நேசத்துக்காக நான் என் அயலாரை என்னைப் போலவே நேசிப்பேன். தேவரீருக்கும் அவர்களுக் கும் பொருந்தாத, சகல பாவப்பற்றுதலையும் விட்டு விடு கிறேன். நான் செய்த மோசங்களை உத்தரிக்க வும் சகல பாவச் சமயங்களை யும் விலக்கவும் முழுச் சித்தமாயிருக்கிறேன்'' என்று பிரார்த்திப்பார்கள்.

யேசுநாதர் சக்கேயசுவைப் பார்த்து : '* இன்றைக் கே இந்த வீட்டுக்கு இரட்சணியம் கிடைத்தது" என் று திருவுளம் பற்றினாரே. அப்படியே இந்நாளிலும் தம்மைப் பத்தி யோடு உட்கொள்ளுகிற ஆத்துமங்க ளுக்கெல்லாம் திருவுளம் பற்றியருளுகிறார். நம்மு டைய நேச மீட்பர் உ தாரகுணத்திலே பத்தியுள்ள ஆத்துமங்களுக்குத் தோல்வி போகக்கூடியவரா? அவர்கள் அவரைத் தாராள மான அன் போடே தங்கள் இருதயத்தில் ஏற்று உபசரிக்க, அவர் அவர்கள் மட்டில் தாராள மனங் காட்டாமற் போவாரா? ஒருபோதும் இல்லை. முற்காலம் அவரை முகமுகமாய்க் கண்டு உபசரித்தவர்களுக்குக் கிடைத்த சகல ஆசீர்வாத நன்மைகளும் இப்போது சற்பிரசாதத் திரைக்குள் அவரைக்கண்டு உபசரிக்கிற வர்களுக்கும் சம்பூரணமாய்க் கிடைக்கத் தப்பாது. அ. சற்பிரசாதம் பெற்றுக் கொண்ட பத்தியுள்ள ஆத்துமங்களே, முன்னாள் மூன்று வருஷமாய் யூதே யா கலிலேயா நாடெல்லாம் சுற்றித் திரிந்து உங்களுக் காக இளைத்து ஆயாசப்பட்ட யேசு நாதரின் தேவ திருச் சரீரம் இதோ உங்கள் ஆத்துமத் தில் வந்திருக் கிறது. எதினின்று வல்லமை புறப்பட்டுப்போய் குருடர் செவிடர் ஊமைகள் திமிர்வாதக்காரர் சப் பாணிகள் முதலிய நோயாளிகளைச் சுகப்படுத்திற் றோ, எந்தச் சரீரத்தின் ஸ்பரிசத்தினால் செத்தவர் கள் உயிர்த்தெழுந்தார்களோ அந்தத் திருச் சரீரம் இதோ உங்கள் உள்ளத்தில் எழுந்தருளியிருக்கிறது.

உலகத்தை ஈடேற்றின திருக்குருதி-உங்கள் பாவங் களைக் கழுவுகிற தெய்வீகமான இரத்தம் முழுமை யும் இதோ உங்களுக்குள்ளே பாய்கிறது. அதின் ஒரேயொரு துளி சகல லோகங்களை யும் இரட்சித் துப் புனிதமாக்கப் போதிய தல்லவோ? மேலும், பாதாளங்களிலே அந்தப் பெரிய வெள்ளிக்கிழமை பின்னேரம் பிதாப்பிதாக்கள் கண்டு மகிழ்ந்ததும், சொல்லமுடியாத அலங்கிருத சோபனம் உள்ளது மாகிய எங்கள் ஆண்டவருடைய திரு மனுஷிக ஆத் - துமம், இதோ, உங்களுடைய இருதயத்தில் வந்தி - ருக்சிறது. அதின் அளவறுக்கப்படாத நேச அக் கினி, இதோ, உங்களுக்குள் ளேயே சுவாலித் தெரிகி றது. கடைசியாய்ச் சொல்ல வேண்டுமானால், மோசே சு முனிவர் எந்தச் சோதிப் பிரகாசத்தை முகங்கொ டுத்துப் பார்த்தால் இறந்துபோவாரென் று, அது கடந்துபோகும்போது ஓர் மலைப்பொந்தில் மறைந் திருந்துகொண்டு பின்புறத்தைக் காணக் கற்பிக்கப் பட்டாரோ, அந்த வாக்குக்கும் மனதுக்கும் எட்டா த பரஞ்சோதியாகிய சருவேசுரனின் தேவசு பாவமும் அல்லவோ உங்களிடத்தில் வந்திருக்கிறது! இசை யாஸ் என்கிற தீர்க்கதரிசி, ஒருநாள் ஆனந்தமான ஒரு பரவசத்தின் நடுவே, சருவேசுரனுடைய மகிமை யைக் கண்டாராம். கர்த்தரானவர் அதி உந்நதமான ஒரு சிங்காசனத்தில் வீற்றிருந்தார். அவருடைய சோபனத்தின் பிரகாசம் திசையெங்கும் நிறைந்து பரவியிருந்தது. அவர் திருச் சமுகத்திலே நிற்கிற பத்திச்சுவாலகர் என்கிற சம்மனசுக்களும் அந்தச் சோதியைக் கண்கொண்டு பார்க்கமாட்டாமல் தன் கள், இரெக்கைகளால் முகங்களை மூடிக்கொண்டு : தளங்களுக்குக் கர்த்தரான சருவேசுரன் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று உரத்த சத்தமாய்க் கூவி க் கொண்டு நின்றார்களாம். (இசை 6;1-3.)

கிறீஸ்தவர்களே, இவ் வள வு அ கோ சரமான உன் ன த மகிமையுள் ள தான: யேசுநாதருடைய தேவசுபாவமும், நீங்கள் சற்பிர' சாதம் வாங்கும்போது உங்களுள்ளே வந் து வீற்றி ருக்கிறது. உங்களுடைய இருதயத்தலம் அ தினு டைய மகிமையால் நிறைந்து போகிறது. எவ்வளவு ஆச்சரியங்கள் ! இவைகளுக்காக நாம் ஆண்டவருக்கு ஆனந்தக் கண் ணீ ரினாலும், அச்சம் மேலிட்ட மவு ன த்தினாலுமல்லாமல் வேறு விதமாய் ஏற்றபடி நன் றியறிதல் காட்டுவது கூடாதல்லவோ!

- இவ்வளவு அன்போடும் தயாளத்தோடும் தம் மை முழு தும் ஆத்தும ங்களுக்குக் கொடுத்துவிடுகிற வர்-தம்முடைய மாசில்லாத் திருச் சரீரத்தையும், விலையேறப்பெற்ற திரு இரத்தத்தையும், திவ்விய அழகு வாய்ந்த ஆத்துமத்தையும், தேவ சுபாவத்தையும் கூட. அவர்களுக்குக் கையளித் துவிடுகிறவர் - மேலும், அவர்களுக்குச் செய்யாத நன்மையும் உண்டோ ? அளித்தருளாத வரப்பிரசாதமும் உண்டோ ? பெரும் ஆழியாய் நிறைந்திருக்கிற ஓர் தடாகத்திலே எவ்வளவு தேவையானாலும் =34ள்ளிக் கொள்ளுவ தற்கு நீர் உண்டே , அவரவர் கொண்டுபோகும் பாத்திரத்தின் குறைவே அல்லாமல், தடாகத்தில் நிறைந்து தேங்கியிருக்கிற தண்ணீரில் பற்றாதிருக் குந் தன்மை காணப்படாதே. சலம் தேங்கி வழியும் குளத்தின் மடை எவ்வளவு திறந்துவிடப்பட்டிருக் குமோ, அவ்வளவு ஏராள மான சலங்கள் வயல்களிற்பாய்ந்து நீர்ப்பாய்ச்சுமே. ஆகையால் தக்க ஆயத் தத்தோடும், நேச வேட்கையோடும் ஒருமுறை மாத் திரம் திவ்விய சற்பிரசாதம் அநுபவித்தாலும், அர்ச் சியசிஷ்டனாதற்கு அது போதும் என்று வேத பாரகர்கள் வசனிப்பார்கள். திவ்விய சற் பிரசாதத் தை '' நன்மை ” என் றும் '' நிறைவேற் றம்'' என்றும் சொல்லுகிறோமே. ஆமாம். அது நமக்கு வேண்டிய சகல நன்மைகளும் அடங்கிய மகா நன்மை . நமது சகல ஆசைகளிலும் நிறைவேற்றத்தைத் தரும் திவ் திய கருவூலம்.. - பத்தியோடு சற்பிரசாதம் வாங்குகிற ஆத்துமங் களுக்கு, முதன் முதல், புண்ணிய வழியில் வர்த்திப்ப தற்கு ஞானப்பெலன் உண்டாகும். சகல சக்கிற மேந்துகளைப்போலவும், அ வைகளிலும் விசேஷமாக வும், இந்தச் சக்கிறமேந்து இஷ்டப்பிரசாதத்தை அதிகரிக்கின்றது. அதா வது: இதி னால் ஆத்துமமான து தேவ நேசத் திலும், அதோடு கூடியதாகிய பிறர் சிநேகத்திலும் வளர்ந்து பெலப்படுகிறது. இது தான் விசேஷமாய் ஆத் துமத்தைப் போஷித்து வளர்க்கிற சக்கிறமேந்து. ஆத்துமத்தின் ஞானப் போசன மாகவே ஆண்டவர் இதை ஏற்படுத்தியருளினார். ஆதலால் தான் சரீர வலிமையையும் உறுதியையும் அடைய விரும்புகிற வர்கள் நல்ல போசனத்தை அடிக்கடியும் ஆசையோ டும் சாப்படுவதுபோல, தேவசிநேகத்திலே வளரவும் சுத்தவாளராகவும், விரும்புவோரெல்லாம் இந்தத் தெய்வீக போசனத்தை ஆவலோடும் அடிக்கடியும் அருந்திவருகிறார்கள்.

இந்தப் போசனம், மேலும், கிறிஸ்தவர்களே, ஆசாபாசங்களின் விறைத் தணியச்செய்து, பிசாசின் மாயத்தை அகலப்பண்ணி, ஆத்துமங் களைப் பாவத்தினின்று காக்கிற ஒரு" மாற்று மருந்து. சற்பிரசாதத்தைப் பத் தியோடு வாங்கும் ஒவ்வொரு முறையும் கீழாங்கிஷத்தின் வலி ஒடுங்கும். பரலோ க காரியங்களிலே விருப்பமும் ஆசையும் பிறக்கும். எத்தனை பொல்லாப் பாவப் பழக்கக்காரர், சற்பிரசாதம் பத்தியோடு வாங்கிவந்த தினாலே தங்கள் துர்ப்பழக்கத்தின் அடிமைத்தனத் தை வென்று சாங்கோ பாங்க நெறியிலே பிரவேசித் திருக்கிறார்கள்! எத்தனை சஞ்சலமான சோதனை கள், தக்க ஆயத்தத்தோடு சற்பிரசாதம் வாங்கின சணமே அகன்று போய் விடுகின்றன! ஆத்துமம் சாவான பாவத்தில் விழாமற் காக்கும் சஞ்சீவி சற்பிரசாதம் தானே...

திவ்விய சற்பிரசாதந் தானே தேவ ஊழியத்தி லே மேலான ஆசைகளையும், சருவேசுரனுக்காகச் சீவ னை விடவும் ஆயத்தமா யிருக்கும் திடவீரியத்தையும் கொடுக்கும் பரம் மூலிகை. ஆண்டவருக்காகப் பெரி யபெரிய காரியங்களைச் செய்தவர்களெல்லாம், அவை களைத் தொடங்குவதற்கு ஏவுதலையும், நிறைவேற்றுவ தற்குக் கடைப்பிடியையும் இந்தப் பெலவத்தரின் அப்ப மூலமாகவே பிரதான மாக அடை ந்துகொண்டார்கள். ஆதித் திருச்சபை யின் வேதசாட்சிகள் தங்களைப் பட்சிக்க விடப்பட்ட துஷ்ட மிருகங்களின் முன் அஞ்சா மற்போய் விழவும், முட்சில்லுக்களின் வாதை யையும் செந்தீச்சூளை யின் அக்கினியையும் சித்திர வதைப்புக்களின் அகோரத்தையும் பாராமல் எங்கள் அரிய மீட்பரின் திருநாமத்தை இராசாக்கள் முன் அறிக்கையிடவும் பெலன் கொடுத்தது சற்பிரசாத மாகிய அற்புத போசனந்தானே.

மேலும், இந்தத் தேவ திரவிய அனுமானத் தினா லேதானல்லவோ ஆத்துமங்கள் சருவேசுரனோடு இவ்வுலகத்திலே இனிமேலில்லை என்றபடி அவ்வளவு ஐக்கிய பந்தனமாக இணைக்கப்பட்டு ஒன்றாகுகின்றன! சற்பிரசாதமே விசேஷமாகத் தேவ ஐக்கியத்தின் சக்கிறமேந்து. ''நம து மாமிசத்தைப் புசித்து உதிரத் தைப் பானம்பண்ணுகிறவன் நம்மில் வசிக்கிறான், நாமும் அவனில் வாசமாயிருக்கிறோம்.'' (அருளப்பர் 6; 5) சருவேசுரனும் ஆத் துமமும் ஒருவரில் ஒருவர் வசிக்கிறதென்ற இந்த ஒற்றுமையைக் காட்டிலும் அதிக நெருக்கமான, ஒன் றிப்பான ஒற்றுமை இம்மையிலுண்டோ ? ஆ இதை எப்படி எடுத்துச்சொல்லுவேன்! வேதசாத்திரிகள் சொல்லுகிறபடி, மெழுகோடு மெழுகை உருக்கிவார்த் தால் எப்படி யாகுமோ, அப்படியே, ஆண்டவரோடு சற்பிரசாதம் பெறுகிற பத்தியுள்ள ஆத்துமம் ஒன் றாய்ப்போகிறது என் போமோ! நெருப்பில் சிவக்கக் காய்ச்சிய இரும்பு எப்படி நெருப்பைப்போலப் பிர காசிக்குமோ, அப்படியே, தேவனைத் தன் இருதயத் திலேபெற்று, தேவ னுடைய அருட்பிரசாதங்களிலே தோய்ந்த ஆத்துமம் தேவனையேபோல தேவ சுபா வத்திலே பங்குபற்றிப் பிரகாசிக்கும் என்போமோ?எவ்வளவு ஆச்சரியமான ஒன் றிப்பு சற்பிரசாதத்தினால் ஆத்துமம் சருவேசுரனோடு அடைகிற ஒன்றிப் பு! ஆ கிறீஸ் தவர்களே, நீங்கள் யேசு நாதசுவாமியை உங்கள் இருதயங்களிலே எழுந்தருளப்பண்ணிக் கொள்ளும் பாக்கியமுடைய வர்களாயிருக்கும்போது உங்களுடைய நீச சுபாவம் ஒரு விதத்திலே மறைந்து காணாமற்போகிறது. உங்களுடைய பெலவீனம் ஞான வல்லமையாகிறது. உங்களுடைய ஒன் று மில் லா வறுமைத் தனம் செல்வ பாக்கியமாகிவிடுகிறது. உங்களுடைய அறியாமையாகிய இருள் தேவஞான த்தினாற் துலங்குகிறது. நீங்கள் தேவ பிதாவுக்கும் மோட்சவாசிகளுக்கும் ஆநந்தமாகிறீர்கள். நித்திய பேரின்பத்தின் அச்சாரத்தை அடைந்து சொள்ளு கிறீர்கள். உங்கள் இருதயமே பரலோக இராச்சியம் போலச் சொலிக்கிற து.

ஆ! எங்களை மட்டின் றி நேசித்தவரான தேவ சுதனே, செகமீட்பரே, யேசுநாதரே, தேவரீரைப் பத்தியோடு பெற்றுக்கொள்ளுகிறவர் கள் அடைந்து மகிழும் வரப்பிரசாத பொக்ஷங்களை, ஆபத்துக்க டுத்த சகாயங்களை, உ. தாரம் விளங்குகிற ஏவுதல் களை, ஞான திடதைரியத்தை, தேவ ஒன்றிப்பின் பந்தன த்தை, சகலவித சம்பன்ன உபகார ஐசுவரி யங்களை மனு ஷ நாவான து ஒருபோதும் சரியாக எடு த்துச் சொல்ல அ றியாது. இந்தப் பரம தேவதிர வி ப அனுமானத்தை எங்கள் பேரில் தேவரீர் வைத்த அணை கடந்த, ஆச்சரியமான, மனந்தடுமாறச்செய்கிற அத்தியந் த நேசத்தினால் உண்டாக்கிவைத்ததற்காக அடியோர்கள் தேவரீரைச் சதாகாலமும் தோத்தி சித்துப் போற்றிப் புகழ்ந்து வர அதுக்கிரகஞ்செய்த ருளும்.