பாவத்தின் கொடுமை 1

முதன் முதல் பாவத்தில் அடங்கியிருக்கிற நெ றி கேட்டையும், தேவ விரோத வைரத்தையும், அவமானத்தையும் பார்ப்போம். - பாவமா வ து என்ன ? தேவகட்டளையை மீறுவதே பாவம். தேவனுடைய கட்டளையை மனு ஷன் மீறு கிறான். படைத்தவர் சொல்லிய சொல்லைப் படைக்கப்பட்டவன் தட்டுகிறான். இது தான் பாவம், இ தின் கனத்தையும், காத்திரத்தையும், பழி யையும், கொடுமையையும் கண்டுகொள் ள த் தக்க தா கத் தேவன் யார் என்றும், மனுஷன் யார் என்றும் 23வருடைய கட்டளையை இவன் மீற கிறதாவது என் ன வென் றும் யோசித்துப்பார்க்க வேண்டும்.

சருவேசுரன் யார்? அவரே வானத்தையும் பூமி யையும், சந்திர சூரிய நட்சத்திரங்களையும், இவ்வுல கத்திலுள்ள சகலத்தையும் உண்டாகக் கடவதென்ற ஒரேவாக்கினால் உண்டாக்கின வர். அவரே நமது கண் காணுகிறதும் காணாததுமான சகலத்தை யும் தம்முடைய உள்ளங்கையிலே வைத் துப் பிடித்திருப்பது போலத் தாங்கிக் காப்பாற்றி, சகலத்திலும் பரவினாலும் சகலத் திலும் மேலாக உயர்ந்து, எல்லாம் வல்லவராய் இருக் கிறவர். மழைகளை வருஷிக்கப்பண்ணுகிறவரும், சண் டமாருதங்களை மோதப்பண்ணுகிறவரும், மின்னல் கள் முழக்கங்களுக்குக் கட்டளை பண்ணுகிறவரும் அவரே. காற்றும் கடலும், வெயிலும் மழையும், பனி யும் நெருப்பும் அவர் சொற்கேட்டு நடக்கின்றன. அ வர், தாம் சிருட்டித்தவைகளின் மேலே கோபங் கொண்டு, தம்முடைய நீதியின் கையை அசைத்தா லும், பூலோக மேலோகம் எல்லாம் எரிந்து தீய்ந்து இருந்தவிடமும் தெரியாமல் அற்றுப்போம். அள வில்லாதவராகிய நம்முடைய தேவனின் மகிமைப்பிர தாபத்தை எடுத்துச்சொல்ல அற்ப புத்தியுள்ள மனு ஷனால் முடியுமா? - இவ்வளவு மனோவாக்குக்கு அடங்காத மகிமைப். பிரதாபம் உள்ளவராகிய பரலோக பூலோக கர்த்தா வானவர் தாம் கட்டளை பண்ண, மனுஷன் மீறுகிறான்.

ஐயோ! மனுஷன் என்றால் யார்? சருவத்துக்கும் வல்லவரான கர்த்தராலே ஒருபிடி மண்ணினால் உண்டாக்கப்பட்டு, அவராலே தான் ஒரு ஆத்துமத்தையும் பெற்றுக் கொண்ட பிச்சைக்காரன். பிச்சைக்காரன் என்கிறேன்! ஒரு பிச்சைக்காரன் உங்களிடம் பிச்சைக்கு வந்தால், அவனுக்கு ஏதாவது உங்களிடம் உள்ள திற் கொடுப்பீர்கள். ஆனால் அவனை நீங்கள் உண்டுபண்ணி விடுகிறதில்லையே. சகோதரனே, நீயோ இருக்கிற இருத்தலைக்கூடச் சருவேசுரனிடத்திலிருந்து பெற் றுக்கொண்ட ஒரு பஞ்சை. நீ உன் தாயின் வயிற்றில் உதிக்குமுன் அதோ வெளியே கிடக்கிற கல்லிலும் பார்க்க அதிக கேடுகெட்ட நிலையிலிருந்தாய். கல்லு உலகம் உண்டான நாட்தொட்டாவது இருந்துவருகி ற து. நீயோ இருபது முப்பது நாற்பது, அல்லது, அற மிஞ்சினால், நூறு வருஷத்துக்குமுன் இருந்ததுமில்லை. உலகத்திலே உன்னைப்பற்றி நினைத்தாருமில்லை. சரு வேசுரனே உன்னை அநாதியாக நினைத்துத் தமது அள வில்லாத தயவினால் ஒரு பொருளாக்கி, உனக்கு ஒரு சரீரத்தையும் ஒரு ஆத்துமத்தையும் தந்து ஆளாக்கி விட்டார். உன்னை உண்டுபண்ணி ஆளாக்கிவிட்டது மாத்திரமோ? உண்டுபண்ணியபின் உன்னை அவர் தாமே தாங்கிப்பிடித்துக் காத்துக்கொண்டு வராவிட் டால், பின்னும் நீ ஒன்றுமின்மையாகி பாழாகவே போய்விடுவாய். பணியக்கிடக்கும் ஒர்கல்லைக் கையில் தூக்கிப்பிடித்தால், பிடித்திருக்குமட்டும் அது மே (லே ஒரு கை யினுயரத்துக்கு இருக்கும். கைவிட்டா லோ, மறுபடியும் பணியவிழுந்துபோம். இதுபோல, பாழாய்க்கிடந்த உன்னை ஆளாக்கித் தூக்கிப்பிடித் துக்கொள்ளுகிறவர் சருவேசுரன். அவர் தம்முடைய பாதுகாவலென் கிற கையை விட்டாலோ, நீ மறுபடி யும் பாழேபாழாகி இருந்த இடமும் தெரியாமல், இன் மையாய்ப் போய்விடுவாய். - இப்போது, மனுஷா, உன்னைச் சற்று நேரம் சரு வேசுரனோடு ஒத்துப்பார். குடந்தான் தன்னை உண்டு பண்ணிய குயவனோடு தன்னை ஒத்துப்பார்க்கத் துணிந்துகொண்டாலும், நீ உன்னைச் சருவேசுரனோடு ஒத் துப்பார்க்கத் துணிவாயா ? வேதபுத்தகம் சொல்வதைக்கேள். '' உலகத்தின் சாதிகள் எல் லாம் சருவேசு ரன் முன்னே ஓர் வாளி தண்ணீரில் ஓர் சிறு துளிபோ லும், தரா சிலேவைத்த சின்னஞ்சிறிய மணற்பொ டி போலும் எண்ணப்படும். இதோ தீவாந் தரம் எல்லாம் கொஞ்சந் தூசி போல் இருக்கிறது; சகல சனங்களும் ஆண்டவருக்குமுன் னே இல்லாதவைகள் போ லாம். ஆண்டவருக்குமுன் னே அவர்கள் ஒன்றுமில்லாமைபோலவும், வியர்த்தம் போலவும் இருக்கிறார்கள்.”'(இசை . 40; 15-17 ) இப்படியிருக்க, அவர் சமுகத்திலே உன்னை ஊத்தைக்குள் உதிக்கும் ஒரு புழுவென் பேனோ? அருவருப்பு நிறைந்த பாழ்ங்கிண ற என்பேனோ? என்ன என்பேன்? அப்பா, நீ ஒன்று' மல்ல, நீ சுத்த சூனியம். நீ தானோ அ ள வில்லாத சரு வேசுரனுடைய சொல்லை மீறத் துணிகிறவன்!

கிறீஸ்தவர்களே, சருவேசுரனுடைய கற்பனை யை மனம் பொருந்தி மீறுவது என்பது எவ்வளவு வாக்குக்கு அடங்காத மகா பாரதூரமா ன அக்கிரமம் என்றதைச் சருவேசுரன் தாமே இசையாஸ் தீர்க்கதரிசி வாயாற் சொல்லிய வாக்கினால் கண்டு பிடித்துக்கொள் ளு ங்கள். ''வான ங்களே கேளுங்கள். பூமியே செவி கொடுப்பாயாக, ஆண்டவர் திருவுள் ம்ற் று வ தா வ து : நாம் பிள்ளைகளை வளர்த்து மகிமைப்படுத்தி வைத் தோம், அவர்களோ நமக்கு அவமானம் பண்ணினார் கள். எருது தன்னை க் கொண்டவனை அறியும். கழுைதயும் தன் எசமானுடைய தொட்டிலை மறவாது இசிறவேல் சன மோ நம்மை அறிந்த தில்லை, நம்சனம் விளங்கிக்கொண்டதில்லை ” என்கிறார். (இசை . 1; 2,3) கட்டளையை மீறு வது மாத்திரமல்ல, சருவேசுரனை அறியாமலிருப் பது தானும் மகா பாதகமாம். இசிறவேல் சனமோ நம்மை அறிந்த தில்லை. வானங்களே கேளுங்கள். பூமி யே செவிகொடு. ஏனென்றால், இப்படிப்பட்ட து ரோகம், அதா வது: மனிதன் தன்னைப் படைத்துப் பிள்ளை போலக் காத்துவருகிறவரை அறியாதிருக்கிற தாகிய துரோகத்தை வானங்கள் காண வும் கேட் கவும் கூடுமானால் அவைகள் ஏங்கித் திகைத்து நிற் கும். பூமியுங் கோபங்கொண்டு பதறும். ஆண்ட வர் உத்தரவு கொடுத்தால், சகல சிருட்டிகளும் எழுந் து இத்தனை துரோகியான மனுஷனை அ முக்கி நசுக்கி நிர்மூலமாக்கிவிடும். ஆ! சிறீஸ் தவர்களே, சருவேசுர னை அறியாமலிருக்கிறதே அவ்வளவு துரோகமானால், அறிந்தும் மனம் பொருந்தி அவருடைய கட்டளையை மீறுவது எவ்வளவு மகா மகா பாரப் பழியோ ! - தேவகட்டளையை மீறுவது என்றால் என்ன ? சருவேசுரன் தாம் படைத்த மனுஷன் நித்திய சீவிய த்தை அடைந்து உய்யத்தக்கதாக அவனைப்பார்த்து: கொலை செய்யாதிருப்பாயாக. மோகபாவஞ் செய்யாதிருப்பாயா களவு செய்யாதிருப்பாயாக. பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக. பிதாவையும் மாதாவையும் சங்கிப்பாயாக என்று திருவுளம்பற்றுகிறார். (லூக் 18; 20) மனிதனோ மாட்டேன் என்கிறான். வானத்திலே உள்ள சந்திர சூரிய நட்சத்திரங்களும், காற்று மழைகளும் ஆண் டவர் திருவுளம்பற்றினபடியே அமைந்து நடக்கின்ற ன ' பட்சிகள் மிருகங்கள் மரங்கள் எனும் சராசரங்கள் எல்லாம் அவர் இட்ட ஒழுங்கு தவறாமல் ஒழுகு கின றன. மனிதன் மாத்திரம் தனக்கு அள வில்லாப் பரம உபகாரியானவர் கொடுத்தருளிய மனச்சுயாதீ னம் என்கிற வரத்தினால் கருவங்கொண்டு, " நான் அ மையேன்?' என்கிறான் (யெரேமியாஸ் 2; 20) அவர் தமக்கு ஊழியம்பண் ணக்கொடுத்த கைகளால் பாவக்கிரியைகள் பண்ணுகி றான். அவர் தம்மை நோக்கி உயர்த்தக் கொடுத்த கண் களால் விலக்கப்பட்ட மோசமான பார்வைகளைப் பார்க்கிறான். அவர் தம்மை அறியும்படி கொடுத்த புத்தியால் சூழ்ச்சமாய்ப் பாவஞ்செய்யும் வழிகளைத் தேடுகிறான். தான் ஒருநாள் இறந்து அவரிடம் போ கவேணுமே, தன்னை அவர் ஒருநாள் சிங்கேற்றுக்குச் சமான மாய் நின்று நீதிநெறியோடும், கோப உக்கிர மத்தோடும் நடுத் தீர்ப்பாரே. அவர் இப்போதும் தன் னை நோக்கி விழித்தகண் சிமிட்டாதிருக்கிறாரே என்று அறிந்தும், அவருடைய சொல்லைத் துணிந்து மீறுகி றான். தனக்கு மனம்போன கெட்ட இன்பத்தின் மேலே அவனுக்கு எவ்வளவு ஆவேசமும், அதைத் தேட வேண்டாமென்று கட்டளை பண்ணியவர்பேரி லே எவ்வளவு கருவியமும் உண்டென்றால், கூடுமா னால் அவரை அவருடைய தேவ பத்திராசனத் திலே நின்று இழுத்துக் கீழேவிழுத்தவும், தன்னாற் கூடுமா னால் அவரையும் அழித்து அ தம்பண்ணிவிடவும் பிரி பப்படுவான். ஆ! ஆண்டவரே! அடியேன் நிர்ப்பாக் கியமாய் இதற்குமுன் சிலவிசை பாவஞ்செய்தபோ து தேவரீருக்குப்பண்ணிவிட்ட சொல்லி முடியாத அவமானத்தை நினைந்து நினைந்து தேம்பித் தேம்பி அழுதுவருகிறேன் சுவாமி. ஐயோ பிதாவே! நீதி யுள்ள கர்த்தாவே! தாவீதென்கிற இராசா தேவரீருக்கு ஒருதரம் பா வதுரோகம் பண்ணின தற்காகத் தம் து சீவியகாலமெல்லாம் இராக்காலந்தோறும் தம் கட்டிலைக் கண்ணீரால் நனைத்துவந்ததுபோல நானும் என் கண்ணீரால் என் பாயை நனைத்துவர எனக்குத் தருபவரார் ?

இன்னும், தேவகட்டளையை மீறுவதென்றால் என்ன ? நீச மனுஷனானவன் ஈருவேசுரனை யும் அவராற் படைக்கப்பட்ட ஓர் நீசப் பொரு ளையும் ஒப்பிட்டுப்பார்த்து-- தராசிலே நிறுத்துப் பார்த்து, படைக்கப்பட்ட பொருளே வேண்டுமென்று கொள்ளுகி றான்; படைத்தவர் வேண்டாமென்று தள்ளுகிறான். அனந்த கருணையுள்ள பிதாவாகிய சருவேசுரனுக்குத் தான் இனிப் பிள்ளை யல்ல என்று முடிவு கட்டிவிடுகிறான். அம்மட்டோ ! பாவி தன்னை மீட்ட அளவில்லாத இரக்கமுள்ள யேசுநாதரை, யூதர் சிலுவையில் அறைந்ததுபோலத் தானும் அறைகிறான். அவரை மிதித்து அவருடைய திரு இரத்தத்தையும் அவமாக்குகிறான் என்று அர்ச். சின்னப்பர் எழுதியிருக்கிறார். (எபி 10: 29) அம்மட்டோ ! இல்லை இல்லை. தன்னுடைய இருதயத்திலே சமாதான இராசாவாக வீற்றிருந்த ஸ்பிரீத்து சாந்துவைப்பார்த் து- அந்த அளவில்லாத அன்பின் சுரூபியை விளி த்து : போம் போம், பிசாசுக்கு இடங்கொடும். நீர் இனி எனக்கு இராசாவல்ல, நான் இதோ பிசாசுக்கு அடிமையாய்ப் போகிறேன் என்று, ஆ! கொடுமை யே! துணிந்து சொல்லி, இவ்வளவு அவ்வளவு என்று எவராலும் மதிக்க ஒண்ணாத மகா தேவ அவமானத் தைப்பண்ணுகிறான்.

ஐயோ! என்னென்று சொல்லுவேன்! சருவே சுரனுக்குப் பாவத்தினாலே வருகிற அவமானத்தை, பங்கத்தை எப்படி உங்களுக்குச் சித்திரித்துக்காட்டு வேன்! அள வில்லாத சருவேசுரன் எவ்வளவு பெரியவரோ, நீச மனுஷன் எவ்வளவு அற் பனோ, அவ்வளவுக்கும், அந்த அவமா னம் பாரதூரமான அ ள வில்லாத அலமானமாகிறதே. - பாவத்தினால் விளையும் இந்த அவமானம் எப்படிப்பட்டதென்றால், சருவேசுரன் மாற் நம் அடையக்கூடியவராயிருந்தால், அதனால் அவர் மாறி இடைந்து அ ள வில்லாத துயர கஸ்தி வருத்தத் துக்கு உள்ளாகி விடுவார் என்று வேதசாஸ்திரிகள் சொல்லுவார்கள், பாவந் தான் சருவேசுரன் சகிக்க மாட்டாத பெருந்தீமை. அதை அவர் தம்முடைய பரிசுத்த சுபாவத்தின் சண்டவேகமெல்லாங்கொண்டு பகைக்கிறார். பாவமுள்ள ஆத்துமத்தைக் காண்பது இனிமேல் இல்லையென்ற அசுத்த அருவருப்பைக் கண்டு, துர் நாற்ற வெடுக்கை மணந்து உவாந்தியெடுக் கவருவதுபோலிருக்கும். சாவான பாவம் உள்ளவன் வெளிக்கு மேனி மினுக்கிப் பட்டுப்பட்டாவளிகளைத் - தரித்து ஊசாடித் திரிந்தாலும், உள்ளே இருதயத் தைச் சோதிக்கிற ஆண்டவருக்கு அவன் பொறுக்க முடியாத அரோசிக துர்நாற்றம் வீசி வெடித்து மனம் வடிகிற பிணத்திலுங் கேடு. பாவமுள்ள பெண், புறத் தியிலே பூணாரம் பூட்டிப் பொற்சரிகைப் பீதாம்பரப் பட்டு உடுத்து, வாஷங் கமழுகிற முட்டாக்கிட்டு, பிலுக்கிக் குலுக்கிவந்தாலும், ஆண்டவருக்கு அவள் ஆயிரம் நரக அசுத்த பாதாளத்திலும் அதிக அருவ ருப்பு. சருவேசுரன் தமது நீதியை மாத்திரஞ் செலுத் துவாரானால், அவரிடத்திலே இரக்கம் என்கிற இந் த மகா இனிமை பான, உருக்கமான லட்சண மில்லா திருந் தால் ஓர் ஆத்துமம் ஒருசாவான பாவஞ்செய்யத் துணிந்தவுடனே, அதை இப்போதுள்ள நரகத்திலும் அதிக கொடூரமான பதினாயிரம் நரகங்களிற்போட்டு, எண்ண நினைக்கக்கூடிய சகல வாதைகளையும் அதற்கு ஒருமிக்கப் பண்ணினாலும் , அவருக்குப் பாவத்தினால் வந்த அவமானம் நீங்காது; பாவத்தின் மேல் அவரு க்கு உள்ள பகை தீராது. "அண்டவரே! அக்கிரமத் தைச் செய்கிற சகலரையும் தேவரீர் பகைத்தீர்”.