தவத்தின் அவசியம்

விபூதித்திருநாள்! 

தவத்துக்கேற்றகனிகளைக் கொடுங்கள். (அர்ச், மத். 3; 8.)

நம்முடைய திவ்விய மீட்பராகிய யேசுநாதசுவாமிக்கு முன்னோடியாய் அனுப்பப்பட்ட ஸ்நாபக யுவானியார், வனாந்தரத்திலே யோர்தான் நதிக்கரையிலே பச்சாத்தாப ஞானஸ்நானங் கொடுத்துக் கொண்டிருந்தார். பழைய ஏற்பாட்டின் ஆசாரங்களைக் கைக்கொள்ளுவதிலே பற்றுதலுள்ள யூதசனங்களெல்லாம் எருசலேமிலிருந்தும் யோர்தானின் சுற்றுப் புறங்களிலிருந்தும் கும்பல் கும்பலாய்ப் புறப்பட்டு ஸ்நாபகரிடத்தில் வந்து அவர் கையால் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டிருந்தார்கள்.

அவர்களுள்ளே வெளித் தோற்றமான ஒழுக்கங்களைக் காத்து நடப்பதிலே மிகவும் நுணுக்கமான பரிசேயர்கள் பலர் உலகத்துக்குரிய யோக்கியத்தை மாத்திரம் பெரிதாய்மதித்த சதுசேயர்கள் பலர் தேவாலயத்தின் பிரதான ஆசாரியரால் அனுப்பப்பட்ட வேதசாஸ்திரிகள் பலர். இவர்களெல்லாம் பழைய வேதத்தின் சடங்காசாரங்களைத் தட்ப நுட்பமாய் அனுசரிப்பது இரட்சணியத்துக்குப் போ துமென்று நம்பியிருந்தவர்கள். யுவானியாரோ, மெய்யான மனந்திரும்புதலும், அதற்கு அடையாளமான தவமுமில்லாமல் தேவமுனிவுக்குத் தப்பிக் கொள்ளக் கூடாதென்று இவர்களுக்குத் தெளிவாய்ப்பிரசங்கித்து: விரியன் பாம்பின் சந்ததியே, வரப்போகிற தேவ கோபாக்கினிக்குத் தப்பிக் கொள்ளும் வழியை உங்களுக்குக் காட்டினவன் யார்? தவத்துக்கேற்ற கனிகளைக் கொடுங்கள் : நீங்கள் தவஞ் செய்யாவிட்டால், இதோ கோடரியானது மரத்தடியில் வைத்திருக்கிறது; கனிகொடா மரமெல்லாம் வெட்டி அக்கினியிலே போடப்படும் என்று வசனித்து வருவார்.

உலகத்தை ஈடேற்ற எழுந்தருளிய திவ்விய குருவாகிய யேசுநாதசுவாமி பழைய ஏற்பாட்டை அழித்துவிடவல்ல, நிறைவேற்றவே வந்தவர் ஆகையால், பாவத்தின் நிழல் கூட இல்லாதவராகிய அவரும் சனத்தோடு சனமாய், கும்பலிலே ஒரு ஆளாய்ப் போய் ஸ்நாபகர் கையால் ஞானஸ்நானம் பெற்றார். பெற்றபின் ஸ்நாபக யுவானியாருடைய போதகத்தின் உண்மையை நமக்குக் காட்டும் பொருட்டும், தா்மே நமக்குத் தவத்தின் அவசியத்தைத் தமது முன் மாதிரிகையினாற் படிப்பிக்கும்பொருட்டு. வனாந்தரத்திற் போயிருந்து நாற்பது நாளாக அன் ன ட னம் இன்றிக் கடின தபசு செய்தருளினார். நமது கர்த்தருடைய இந்த நாற்பது நாள் உபவாசத்தின் ஞாபகமாகவே திருச்சபையானது இப்போது நிகழுகிற தபசு காலத்தை எற்படுத்தியிருக்கிறதென்பது, பிரியமான கிறீஸ்தவர்களே, நீங்கள் அறியாத காரியமல்ல. இந்தக் காலத்திலே திருச்சபையானது அர்ச். ஸ்நாபக யுவானியாருடைய வார்த்தைகளையே தானும் எடுத்தாண்டு, தவம் பண்ணாதிருக்கிற சகலரையும் நோக்கி: "தவத்துக்கேற்ற கனிகளைக் கொடுங்கள்'' என்று பிரசங்கிக்கிறது.

அர்ச். யுவானியார் காலத்திற் போலவே இக்காலத்திலும் அநேகர், தாங்கள் எத்தனை பாவங்களைச் செய்திருந்தும், எவ்வளவு அநித்திய தண்டனைக் கடனைத் தோள் மேற் சுமந்திருந்தும், தங்களுக்குப் பிரியமான பத்தக் கிருத்தியங்களையும், நோவாத சில திருச்சபை ஆசாரங்களையும் அனுசரித்துக்கொண் டால் அவைகளால் இரட்சணியம் அடைந்து விடலாம் என்று நம்பி மோசம் போகிறார்கள். ஆனால், சத்திய திருச்சபையோ, தவமின்றி இரட்சணியமடையக்கூடாதென்று என்றும் போலவே இன்றும் போதித்துக் கொண்டுவருகின்றதும் அன்றி, வருஷந்தோறும் இந்த நாற்பது நாட்காலத்தைத் தபசு காலமாக அனுசரித்துக்கொண்டும் வருகின்றது. திருச்சபையானது விசுவாசிகளுடைய நெற்றியிற் சாம்பல் பூசித் தவஞ் செய்யுங்கள் என்று ஏவிவிடுகின்ற இந்த நாளிலே, தவத்தின் அவசியத்தை நாம் நன்றாய் உணர்ந்துகொள்ளப் பிரயாசப்படுவதே உசிதம் அல்லவா? ஆதலால் இந்த நல்ல டமா தா இடையறாமற் போதித்துக்கொண்டுவருகிற இத் தவத்தின் தன்மை என்ன ? சகலரும் தவம் பண்ணுவது அவசியமா? நாம் எப்படித் தவஞ் செய்யவேண்டும் ? எனும் இவைகளை ஆராய்வோம். தயவு செய்து நல்ல கவனத்தோடும் பத்தி யோடும் கேட்டுக்கொள்ளுங்கள்.