இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சகோதர அன்பு 1

முதன் முதல், பிறர் சினேகத்தை அனுசரிப்பதற் குப் பல தருணங்களிலே தன் நயத்தையும் சுகத்தையும் வெறுத்து விடுவது அவசி யம் என்கிறேன். ஏனெனில், பிறர் சினேகமாவது என்ன ? பிறருடைய இருதயங்களும் நம்முடைய இருதயமும் ஒன் றாய், பிறரும் நாமும் ஒருமனதுடையவர்களாயிருப் பதே பிறர் சினேகம். இருதய ஒற்றுமை இல்லா விடில் சினே கமில்லை. ஆதிக்கிறிஸ்தவர்களின் கூட் டம் முழுதும் ஒரே இருதயமும் ஒரே ஆத்துமமும் உள்ள தா யிருந்ததென்று அப்போஸ்தலர் நடபடி ஆக மத்திலே எழுதப்பட்டிருக்கிறது. (அப். தட 4; 32) அவர்கள் அந்நிய யோந்நிய சினேகமுள்ள வர்களாய் இருந்தார்கள் என் பதே இதன் கருத்து. இனி, என்னுடைய இருதயம் பிறருடைய இருதயங்களோடு ஒன்றாயிருக்கவேண்டு 'மானால், நான் சகலத்திலும் என் நயத்தையும் சுகத் தையும் தேடுகிறவனாயிருக்கக்கூடாது. என் நயத்தை, சுகத்தை மாத்திரம் தேடிக்கொண்டு வந்தால், எனக்கு நன்மை செய்கிறவர்களிலேயே-அதுவும் அவர்கள் நன்மை செய்யுந் தனையும் மாத்திரம் - பற்று தல் இருக் கும். அவர் களை மறு தலிக்கிறதினால், மறந்துவிடுகிற தினால் எனக்கு ஒரு சிறு நயம் உண்டாகக்கூடுமானா லும், உடனே அவர்களை மறு தலித்துவிடுவேன், மறந் துவிடுவேன். தன் நயத்தைச் சகலத்திலும் தேடுகிற வன் தனக்குள்ளே எப்போதும் அடைபடுகிறான். அவனுடைய இருதயவாசல் இறுக்கமாய்ப் பூட்டப் பட்டிருக்கிறது. ஆகையால், அவன் பிறரோடு அந் நி யோந்நியமாய்ச் சகவாசம் செய்வதுமில்லை. பிறர் அவ மேடு சகவாசம் செய்ய ஏவப்படுவதுமில்லை. இப்ப 'டிப்பட்டவனிடத்தில் பிறர் சினேகம் இருப்பது எப் படி? ஆகையால், தன் நயஞ் சுகங்களை எங்கும் தேடு கிறதற்கும் பிறர்சினே கத்துக்கும் ஒரு போதும் பொ ருத்தமில்லை என்று சொல்லக்கடவோம்.

தன் நயத்தையும் சுகத்தையும் பிறர் பொருட்டா க வெறுத்துவிடுவதிலேயே விசேஷமாய்ப் பிறர்சினேகத்தின் அநுசரிப்பு அடங்கும் என்பது 1116 She வேதசத் தியமாயும் இருக்கின்றது. ''பிறரசினேகம் தன்னுடை யவைகளைத் தே from 41. Saaடித் திரியாது'' என்று அர்ச். சின்னப்பர் வசனித்திருக்கிறார். (1 கொரி. 13; 5) இந்தச் சத்தி யத்தை உணராமலே எத்தனையோ கிறீஸ்தவர்கள் மோசம்போகிறார்கள். அநேகர், பிறருக்கு ஒரு மயிர ளவு இளகிக்கொடாமலும், தங்களுடையவைகளை ஒரு சுடுகளவாவது பிறருக்கு நயமாகக் கைபறியவிடா மலும், எல்லாத்திலும் தங்கள் சித்தமே நடக்கவேண்டு மென்ற பிடிவாதத்தோடும் இருந்துகொண்டு, தாங் கள் எப்படியும் பிறர் சினேகத்தை அனுசரிக்கிறோம் என்றே எண்ணிக் கொள்ளுகிறார்கள். இவர்கள் தங் கள் புத்தியான நடக்கையைப் பற்றித் தங்களைப் புகழ் ந்து பேசிக்கொள்வதுமுண்டு.- நாங்கள் இன்னாரோ டு, இன்ன வீட்டாரோடு பேசுகிறது பறைகிறது இல் லை. எங்களுக்கும் அவர்களுக்கும் கொடுக்கல் வாங்கல் இல்லை. நாங்களும் எங்கள் பாடு. அவர்கள் தாங்க ளும் தங்கள் பாடு. நாங்களும் அவர்களுடைய தொற க்கிலே போவதில்லை. அவர்களும் எங்கள் தொறக்கி லே வரவேண்டியதில்லை. இது தான் அவர்களோடு சமாதானத்தைக் காத்துக்கொள்ளுகிறதற்கு வழி என்பார்கள். இது நல்ல நியாயம் போலத் தொனிக்கி றது. ஆனால் அர்ச், கிறி சோஸ் தொம் அருளப்பர் இப்படிப்பட்டவர்களை நோக்கிச் சொல்லுவதாவது: இது சமாதானத்தைக் காத்துக் கொள்ள வழி என்கி றீர்களா? இல்லை. இது தான் பிரிவினையைக் காத்துக் கொள்ள வழி. இது தான் பழிவாங்கும் குணத்தை மேலும் மேலும் வளர்த்துக்கொள்ள வழி. உங்கள் சத்துருக்களுக்குச் செய்யக்கூடிய தீங்கையெல்லாம் செய்யாமல் அவர்களைச் சும்மா விடுவது தான் பிறர் சினேகம்; வெளிப்படையாய் அவர்களைப் பழிவாங் காமல் விடுவது தான். பிறர் சினேகம் என்று எண் ணு கிறீர்கள். ஆனால் பிறர் சினேகமானது பிறரைச் சும் மா விடுவதிலேயல்ல அவர்களைச் சினேகிப்பதிலே அல்லவோ அடங்கும்? அவர்களைக் கூடியமட்டும் பழிவாங்காமல் இருப்பதிலே அல்ல, அவர்களுக்கு ஆபத் துவேளைகளில் என் கிலும் செய்யக்கூடிய நன்மைகள் ளைச் செய்வதிலே அல்லவோ அடங்கும்? - காரியத்தைத் தேற விசாரித்துப் பார்ப்போம். சில குடும்பங்களிலே, மிக நெருக்கமான உறவின் முறையாருள்ளே வருஷாவருஷ மாய்ப் பிரிவினை இருக்கிறதைக் காண்கிறோம். ஒரே சாதியார், நெருங்கிய பந்துக்கள், ஒரே இடத்தில் வசிக்கிறவர்கள் சிலர் நெடுங்காலமாய் ஒருவரோடு ஒ ருவர் பேசாமலும், ஒருவர் ஒருவருடைய நன்மைதின் மைகளிலே தா னும் சந்தோஷம் கொண்டாடி ஆறு தல் சொல்லப்போகாமலும் இருப்பார்கள். இப்படி நடப் பதுதான் கிறிஸ்தவர்களுக்குரிய சமாதானத்துக்குச் சூழ்ச்சமான வழியா? வழியென்றே இவர்கள் எண் ணிக்கொள்ளுகிறார்கள். ஆனால், இவர்கள் தங்களுக்கு 'அறிமுகமான பிறசமயிகளோடு தானும், அந்நியரோடு தானும் நடந்து கொள்ளாதவிதமாய்த் தங்கள் சொந் த இனத்தவர்களோடு, சகோதரர்களோடு, கூடவசிப் போரோடு நடந்து கொள்ளுவதற்குக் காரணமென்ன வென்று விசாரித்துப் பார்ப்போம். ஒரு பகுதியார் சொல்லுவார்கள்: இன்னார் எனக்குக் கொடுத்த வாக் கை நிறைவேற்றவில்லை. அப்படி நிறைவேற்றாமல் விட்டதற்கு என்ன வெல்லக்கூடாத தடையிருந்த தோ அதைப்பற்றி விசாரிக்க எனக்குக் கவ்வையில் லை. ஆனபடியால் அந்த ஆளோடு எனக்கு இனி ஒரு சங்காத்தமுமில்லை. அல்லது, இன்னார் என்னுடைய -நன்மை தின்மைக்கு வரவில்லை. அல்லது, என் மரியா தையைக் காத்து நடக்கவில்லை. அல்லது, எனக்குப் பெரிய நட்டம் வருவித்தது. அந்த ஆள் எப்படிப் பட்ட வில்லங்கத்தினால், ஆற்றாத்தனத்தினால் இப் படிச் செய்ததோ அதைப்பற்றி நான் விசாரிக்க வேண்டியதில்லை. இனி என் சீவன் போகுமட்டும் அந்த ஆளோடு எனக்கோ கொண்டாட்டமில்லை. - இனி, மற்றப் பகுதியாரை விசாரித்துப் பார்த் தால், இவைகளிலும் அதிக காரசாரமான நியாயங்க ளைக் கேட்போம். நான் வாக்குக் கொடுத்த து மெய் தான். ஆனால், அவர்கள் பேசிய பேச்சின் படி நில்லா தபடியால் நானும் என் வாக்கை நிறைவேற்றவில்லை. அல்லது, அவர்கள், முன்னே என் னுடைய குடும்பத் திலே நிகழ்ந்த ஒரு நன்மைக்கு வராதிருந்தபடியால் நானும் அவர்கள் நன்மைக்குப் போகவில்லை. - அல் லது, எனக்கு அவர்கள் எவ்வளவோ மரியாதைக் குறைச்சல் பண்ணின படியால் நானும் அப்படிச் செய் தேன். அல்லது, என் பொருளை எடுத்துக் கொண்டு தராமல் விட்டபடியால் நானும் அவர்களுக்கு நட் டஞ் செய்தேன் என்று இப்படிச் சொல்லுவார்கள். காலம் போகப்போக இரு பகுதியிலும் குற்றச்சாட்டு கள் கூடிக்கொண்டே வரும். இந்தப் புகைச்சல்கள் எரிச்சல்கள், கோபங்கள் தாபங்கள் எல்லாவற்றை யும் மறைத்துக் கொள்ளும்படியாகவே: எங்களுக்கும் அவர்களுக்கும் கொடுக்கல் வாங்கல் இல்லை, அவர்க ளோடு சற்றும் கோபமில்லை என்பார்கள்.

கிறீஸ் தவர்களே, இது அல்ல பிறர் சினே கம். இரு பகுதியாரும் தங்களுடையவைகளைத் தேடுகிறார்கள். பிறர் சினேகமோ தன்னுடையவைகளைத் தேடாது. இவர்கள் ஒருவருக்கொருவர் சற்றேனும் விட்டுக் கொடாமலிருக்கிறார்கள். பிறர் சினேகமோ சமாதா னத்தின் பொருட்டுத் தனக்கு உரியவைகளையும் விட்டுவிடும். அவசியமான போதெல்லாம், தன் சொந் க நயஞ் சுகங்களை வெறுத்து விடும். இவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சொந்த நயஞ் சுகங்களிலேயே கண்ணாப் இருக்கிறார் கள். பிறர் சினேகமோ தன்னுடையவைகளை நினை யாது. இருபகுதியாரும் சற்றும் நு கைய விடாமல் ஒரு மூச்சாக இழுத்தபடி யால் சிநேகம் என்னும் கயிறு தெறித்துப்போயிற்று. இனி, பிறர் சினேகம் ஒரு சற்று மில்லை. தங்கள் மனச் சாட்சிக் கண்டனத்தைச் சாந்திபண்ணிக் கொள் ளும் படியாக மாத்திரமே இவர்கள் தங்களுக்குக் கோப மில்லை, கோ பமில்லை என்கிறார்கள். - கிறீஸ்தவர்களே, இப்படிப்பட்ட போலிப் பிறர் சினேகத்தை மெய்யான பிறர்சி?னகம் என்று நம்பி மோசம் போகவேண்டாம். சமாதானத்தின் பொருட் டுத் தன் நயஞ் சுகங்களை வெறுத்துவிட ஆயத்தமாய் . இராதவனிடத்தில் கடுகளவேனும் பிறர் சினேகமில்லை.

கிறீஸ்துநாதர் கற்பித்த பிறர் சிநே கமான து தன் நயஞ்சுகங்களை வெ றுப்பதோடு கூடிய ஒரு புண்ணி யம். ஒவ்வொருவரும் தன் தன் நயஞ்சுகங்களைத் தேடுகிறதாகிய சினேகம் உலகத்திலே எப்போதாவது இல்லாமற் போகவில்லை யேசுநாதசுவாமி வருமுன்னேயும் அது இருந்தது; அவர் எழுந்தருளிவந்த காலத்திலும் காணப்பட்டது; இப்போது மிகவும் நீசமான அக்கியானச் சாதிகளுள்ளே தானும் இருக்கிறது. தனக்கு நன்மை செய்கிறவர்களை, தனக்கு உவப்பானவர்களை, உதவியானவர்களை நேசிக்கிறது அதிசயமல்ல. மிருகங்களுள்ளே தானும் இதற்கொத்த சுபாவப்பற்றுதல் ஒன்று உண்டு. ஆனால், யேசுநாதசுவாமி தமது சீஷருக் குக் கற்பித்த பிறர் சினேகம் உலகத்தலே வேறு எந் தச் சமயத்தவர்களுள்ளாவது இல்லாத ஒரு விசேஷ சினேகம். '' இதனால் சகலரும் உங்களை எனது சீஷ ரென்று அறிந்து கொள்ளுவார்கள்'' என்றார். அவர் கற்பித்த பிறர் சினேகம் உலகத்திலே முன் ஒரு போ தும் இல்லாத சினேகம் 'ஓர் புதுக்கற்பனையை உங்க ளுக்குத் தருகிறேன். அதாவது : நான் உங்களைச் சினே கித்தது போல நீங்களும் ஒருவரை ஒருவர் சினேகி யுங்கள். '' (அருள . 13;34) ஆ! கிறீஸ்தவர்களே, கர்த்தர் வசனித்த இந்தத் திருவாக்கை உங்கள் நெஞ்சிலே இருத்தித் தியானித்துக்கொள்ளுங்கள். ஆண்டவர் தந்த புதுக்கற் பனை யின் தன்மை இதிலே அடங்கியிருக்கிறது. 'நான் உங்களைச் சிநேகித்ததுபோல நீங்களும் ஒருவரை ஒருவர் சினேகியுங்கள்.'' அவர் எங்களை எப்படி நேசி த்தார்? அவருடைய பிறர் சினே கம் எப்படிப்பட்டது? அ து சற்றென் கிலும் தன் நயம் பாராதது, தன் சுகத் தைத் தேடாதது நீங்கள் அறிவீர்களா? யேசுநாத சுவாமி எங்களை எப்படி நேசித்தார்! எது வரைக்கும் நேசித்தார் என்று நான் எடுத்துச் சொல்லவும் வேண் டுமா? அவர், அளவில்லாத மகிமையின் தேவனாயிருக் க மனுஷருடைய சமாதானத்தின் பொருட்டுத் தம து மகிமையை வெறுத்து ஒரு அடிமை வேஷமாய், மானிடகோலராய் வந்தாரே (எ பி 12, 2 பிலிப். 2; 8) அளவில்லாத செல் வபாக்கியங்கள் உள்ள வராயிருக்க, எங்களைச் சரு வேசுரனோடு உறவாக்கும் பொருட்டுத் தமது செல் வங்களைத் துறந்து மிகத் தரித்திரரானாரே. நித்திய ஆனந்த பாக்கியத்தை விட்டுத் துக்கம் நிறைந்த மனி தனானாரே. மட்டில்லாத பரிசுத்த சொரூபியாயிருக்க, எங்கள் பெலவீனத்துக்கு இரங்கிப் பாவியின் நீச கோலத்தை எடுக்கவும், தமது தேவ கீர்த்திக்குப் பங் கமாக, பேய் பிடித்தவன், பெருந்தீனிக்காரன் என்று ” சொல்லப்படவும் திருவுள மானாரே. குற்றவாளிகளா கிய நாங்கள் அவரை முந்தித் தேடிப் போக வேண்டி யிருக்க, அவர் முந்தி எங்களைத் தேடிவந் தாரே. இப் படிப்பட்ட தமது பிறர் சினேகத்தைத் தான் எங்கள் பிறர்சினே கத்துக்கும் மாதிரிகையாக ஏற்படுத்தியரு ளுகிறார். நாம் உங்களைச் சிநேகித்ததுபோல உலகத்தில் முன் ஒருபோது கேட்கப் படாத இந்தப் புதுச் சினே கத்தைத் தான் எங்களுக்கும் கற்பிக்கிறார். ஓர் புதுக் கற்பனையை உங்களுக்குத் தருகிறேன்.
ஆகையால் கிறீஸ்தவர்களே, நீங்கள் உங்கள் நய த்தைச் சற்றேனும் கைபறிய விடாமல், உங்கள் சுகத்துக்கு ஒரு சிறு குறையும் வராமல், உங்கள் மகிமை, கீர்த்தி, பொருள், பண்டம் பிடிவாதம் இவைகள் ஒன்றுக்கும் பழுதில்லாமல் கிறீஸ் துநாதர் கற்பித்த பிறர் சினேகத்தை அனுசரித்துப் போடலாம் என்ற எண்ணுகிறீர்கள்? அப்படிச் செய்யக் கூடுமா னால், யேசுநாதசுவாமி தம்முடைய பிறர் சினேகத் தைத்தானே எங்களுடைய பிறர் சினேகத்துக்கு மாதி ரியாக எடுத்துச் சொல்ல வேண்டியதென்ன? அதற் காக ஓர் புதுக் கற்பனை யைத் தரவேண்டியதென்ன? அக்கியானிகளும் இப்படிப்பட்ட பிறர் சினேகம் உள் - ளவர்களாயிருக்கிறார்களே. இதைக் கிறீஸ்து நாதரு டைய சீஷருக்கு ஓர் விசேஷ அடையாளமென்று எப் படிச் சொல்லலாம்? ஆதித் திருச்சபையிலே கிறீஸ் தவர்கள் எல்லாரும் ஒரே இரு நயமும் ஒரே ஆத்துமமும் உள்ள வர்களாய்ச் சீவித்து வந்தபோது அக்கி யானிகள் அவர்களைப்பார்த்து '' இவர்கள் ஒருவரை ஒருவர் எவ்வளவாய்ச் சினேகிக்கிறார்கள் பாருங்கள்'' என்று சொல்லி வருவார்கள் என்பதாக தெற்றுல்லி யன் என்கிற சபைப்பிதா எழுதி வைத்தார். இக்கா லத்திலேயும் அக்கியானிகள் அதே வார்த்தைகளைச் சொல்லக்கூடும். ஆனால் பரிகாசமாய் இவர்கள் ஒரு வரை ஒருவர் எவ்வள வாய்ச் சினேகிக்கிறார்கள் பாருங் கள. இவர்கள் தங்களைக் கிறீஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்டாலும், எங்களுள் ளே இல்லாத ஒரு விசேஷ அந்நியோந்நிய அன்பு, ஐக்கியம் இவர் களுள்ளே உண்டா ? இவர்களுள் ளே எங்களுட் போலவே சச்சரவுகளும், வழக்குகளும், விரோதங் களும், வைராக்கியங்களும் காணப்படுகின்றன. இவர் களும் தங்களுக்கு வேண்டியவர்களை மாத்திரமே நே சிக்கிறார்கள். பணத்தையும், உதவியையும் இன்னும் தங்களுக்குப் பிரியமான வேறு நயங்களையும் விரும்பு கிறார்களன்றிப் பிறரை நேசிக்கிறதாய்க் காணோமே என்று அக்கியானிகள் சொல்லக்கூடியதாய் இருக்கி றது. ஆகையால், சகோதரனே, நீ உனக்கு நன்மை செய்கிறவர்களே ாடும் உனக்கு உபகாரம் பண்ணுகிற வர்களோடும் உனக்கு உதவியானவர்களோடும் மாத்தி ரம் கொண்டாடிக்கொண்டு, மற்றவர்கள் இருக்கிறார்கள் ளோ என்றும் கவனியாமலிருந்தால், அவர்களுக்கு நீ ஒன் றிலும் இள கா மல், பிடித்த பிடியைக் கொஞ்ச மேனும் நெகிழ விடாமல், ஒரு நன் மையுஞ் செய்யா மல், அவர்கள் செய்யுங் குற்றங்களை யே போற்க்கொ ண்டு, அவர்கள் குறைகளையே பாராட்டிக்கொண்டு, ஒருபோதும் அவர்களுக்கு உபசாரமில்லாமல், எப். போதும் அவர்களோடு கோபிக்க ஆயத்தமாயும், அவர்கள் செய்த நன்மைகளை நினை யாமல் தீமைகளை யே சீவனுள்ள வரையும் மனதில் பேணிக்கொண்டும் வருவாயானால், நீ இவ்வித நடைதான் புத்தியான நடை, சமாதானமாய் இருப்பதற்குச் சூழ்ச்சமான பாதையென்று சொல்லப் பிரியமானற் சொல்லிக் கொள். ஆனால் யேசுநாதசுவாமியைப் பின்பற்றுகிறது இப்படியல்ல. அவர், தாம் உன்னை நேசித்தது போல நீ பிறரை நேசிக்கவேண்டுமென்று காத்திருக்கிறார். இது ஒரு சுவிசேஷ புத்திமதியல்ல, சாங்கோபாங்கத் துக்கு அடுத்த ஆலோசனையல்ல. சகலருக்கும் பொ துவான கற்பனை. இது நமது கற்பனை என்று திருவு ளம் பற்றினார். இந்தக் கற்பனைக்கு இசைய, நீ அவர் உன்னை நேசித்ததுபோல உன் பிறத்தியாரையும் நேசி யாமல் விட்டால், உன்னுடைய சூழ்ச்சமான புத்தி யின்படியல்ல, தாம் உனக்குக்காட்டிய முன் மாதிரி யின் படியே உன்னை நடுத்தீர்ப்பார் என் றதை மறந்து . போகாதே.
ஆனால், பிறர் சினேகத்தை அனுசரிப்பதற்கு உள் ள படியே நாம் எமக்கு உரியவைகளை உரித்தாடாமல் விடவேண்டுமோ? இது மெத் தக் கடுமையான போதகமாய் இருக்கிறதே என்பிர்களாக்கும்.

இது என் உபதேசமல்ல, இந்த உபதேசத்தைப்பற்றிச் சற்றேனும் சந்தேகமில்லை. இது எமது சினே கத்தின் பொருட்டுத் தம்முடைய சீவனையுந் தந்த அவருடைய உபதேசமேயன்றி மனு ஷனுடைய உபதேசமல்ல. மனுச் சுபாவத்துக்கு அரு மையான இவ் உபதேசத்தை மனுஷன் தானாக ஏற்ப டுத்தியிருக்கவே மாட்டான். அர்ச். அருளப்பர் தம் து முதலாம் நிருபத்தின் 3-ம் அதிகாரத்திலே சொல்லியிருக்கிறதைக் கேளுங்கள், '' சருவேசுரன் நமக்கா கத் தமது சீவனை விட்டதிலே அவருடைய சினேகத் தைக் கண்டுகொண்டோம். நாங்களும் சகோதரருக் காகச் சீவனை விடவேண்டும்'' என்கிறார். சீவனைவிட வேண்டும். ஆம், பிறர் சினேகத்துக்காகச் சிவனை விட வேண்டிய தருணங்களுமுண்டு. கொள்ளை நோய் காலத்தில் ஒரு தாய் அல்லது சகோதரம் தன் பிள்ளை களின் பொருட்டுச் சகோதரத்தின் பொருட்டுச் சீவ மோசமான ஆபத்துக்குத் தன்னைக் கையளிக்கவேண் டி வராதா? பின்னும் பிறர் சினேகத்துக்காக எங்கள் கீர்த்தியைக் கைவிடவேண்டிய தருணங்களுமுண்டு. எனக்கு என் சகோதரன் எவ்வளவு அவமானத்தை வருவித்தாலும், நான் தின்மைக்குத் தன்மை செய் யக் கூடாது என்று தேவகட்டளை இருக்கிறபடியால் என் கீர்த்திக்கு வந்த பழுதையும் சகித்துக்கொள்ள வேண்டி இருக்கிறதல்லவா? மேலும் பிறர் சினேகத் துக்காகப் பொருள் பண்டங்களைக் கைவிட வேண் டிய தருணங்களுமுண்டு. இதைத் திவ்விய கர்த்தர் தாமே' திருவுளம்பற்றினார். ''உன் அங்கியை எடுத் துக் கொள்பவனிடத்தில் அதைக் கேட்க வேண் டாம்'' என்று அர்ச். லூக்கா சுவிசேஷத்தில் 6-ம் அதிகாரத்தில் திருவுளம் பற்றியிருக்கிறார். என் பொ ருளை ஒருவன் எடுத்துக்கொண்டால் கோட்டிலே நான் அதை அறவாக்கப்படாதோ என்பீர்கள். அற வாக்கலாம் ஆனால், அதனால் உன் சகோதரனோடு உனக்குள்ள பிறர் சினேகம் கெடுமென்று அறிந்தால், உன் அங்கியிலும் பார்க்கப் பிறர் சினேகம் பெரிதான படியால், அங்கியை விட்டுவிட வேண்டும் என்பது தேவ கட்டளை. இதனால் வழக்காடுவோர் எல்லாரை யும் நான் ஒருங்கே கண்டிருக்கிறேன் என்று விளங்கிக்கொள்ள வேண்டாம். ஆனாலும், அதிகப்பற்றாக வழக்குகளினால் எதிரியின் பொருளெல்லாம் அழிந்து அவன் நிர்ப்பாக்கியன் ஆகிறபடியால், அவ் வழக்கு கள் அநீதியுள்ளவைகளாய்க் கிறிஸ்தவர்களுக்கு இரு க்கவேண்டிய இரக்கத்துக்கு விரோதமான வைகளாய் வருகின்றன என்றதைச் சொல்லாமல் விடலாமா ? அவ் வழக்குகளினால் மனத்தாங்கல்களும் பகைகளும் அதிகரிக்கிறபடியால், அவைகள் பிறர் சினேகத்துக்கு நேரே விரோதமான வைகளாய் இருக்கின்றன என்ப தை நீங்களே அறியீர்களா?

ஆகையால், நாம் பிறர் சினேகத்தை அனுசரிக்க விரும்பினால் பல தருணங்களிலே நமது சுயநயஞ் சுக ங்களை விட்டுவிட வேண்டுமென்பது வெளிப்படை.