இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ரோஜா மலர் 1. ஜெபமாலையில் வரும் ஜெபங்கள்

ஜெபமாலை இரண்டு அம்சங்களைக் கொண்டது. ஒன்று மனஜெபம்; மற்றது வாய் ஜெபம். ஜெபமாலையில் மனஜெபம் என்பது நம் ஆண்டவர் சேசு கிறிஸ்து, அவருடைய திரு அன்னை இவ்விருவரின் வாழ்வு, மரணம், மகிமை ஆகிய இரு நிகழ்ச்சிகளைப் பற்றிய ஆழ்ந்த சிந்தனையேயாம்.

வாய் ஜெபம் என்பது அருள் நிறை மந்திரத்தை பதினைந்து பத்து மணியாக ஒவ்வொரு பத்து மணிக்கு முன்னால் ஒரு பரலோக மந்திரத்துடன் சொல்வதாகும். இப்படிச் சொல்லும் போதே அப்பதினைந்து முக்கிய திரு நிகழ்ச்சிகளிலும் சேசுவும் மரியாயும் அனுசரித்த முக்கிய புண்ணியங்களை நினைத்து ஆழ்ந்து சிந்திக்கவும் வேண்டும்.

முதல் ஐந்து பத்து மணியிலும் நாம் ஐந்து சந்தோஷ தேவ இரகசியங்களை நினைக்க வேண்டும். இரண்டாவது ஐந்து பத்து மணியில் ஐந்து துக்க தேவ இரகசியங்களையும் மூன்றாம் ஐந்து பத்து மணியில் ஐந்து மகிமைத் தேவ இரகசியங்களையும் நினைவுற வேண்டும்.

இங்ஙனம் ஜெபமாலையில், மனஜெபமும் வாய் ஜெபமும் மிக அழகிய முறையில், இணைந்து காணப்படும். அவற்றின் மூலமாக நாம் சேசு, மாதா இவ்விருவரின் வாழ்வு, துயரம், மகிமை ஆகிய திரு நிகழ்ச்சிகளையும், புண்ணியங்களையும் பின்பற்ற வழியாகின்றது.