யாத்திராகமம் - அதிகாரம் 16

இஸ்றாயேலியர் வனாந்தரத்திலிருக்கையிலே மோயீசனுக்கு விரோதமாய்ப் பேசினதும் - மன்னா விழுந்ததும்.

1. பிறகு இஸ்றாயேல் புத்திரருடைய சபையார் எல்லோரும் ஏலிமைவிட்டுப் பிரயாணமாகி எஜிப்த்து தேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே ஏலிமுக்கும் சீனாயிக்கும் நடுப் புறத்திலிருக்கிற சின்னென்னும் வனாந்தரத் திற்கு வந்து சேர்ந்தார்கள்.

2. அந்த வனாந்தரத்தில் இஸ்றாயேல் புத் திரருடைய கூட்டத்தாரெல்லாரும் மோயீச னையும் ஆரோனையும் விரோதித்து முறு முறுத்துப் பேசினார்கள்.

3. இஸ்றாயேல் புத்திரர் அவர்களை நோ க்கி: நாங்கள் எஜிப்த்து தேசத்திலே கர்த்த ருடைய கையாலே செத்துப் போனோமா னால் தாவிளை. அவ்விடத்திலே நாங்கள் இறைச்சி நிறைந்த பாத்திரங்களண்டையில் உட்கார்ந்து அப்பத்தைத் திருப்தியாகச் சாப்பிட்டு வருவோம். இந்த ஜனங்களெல் லோரையும் பட்டினி வைத்துக் கொல்ல வேண்டு மென்றல்லோ நீங்கள் எங்களை இந்த நிர்மானுஷியமான ஸ்தலத்திலே அழைத்து வந்தீர்கள் என்று சொல்ல,

4. ஆண்டவர் கேட்டு மோயீசனை நோ க்கி: இதோ நாம் உங்களுக்கு வானத்தி னின்று அப்பங்களை வருஷிக்கப் பண்ணு வோம். ஜனங்கள் வெளியே போய் ஒவ் வொரு தினத்திற்குப் போதுமானதை ஒவ் வொரு நாளிலும் சேர்க்கட்டும்; அதினால் அவர்கள் நமது நியாயப் பிரமாணப்படி நடப்பார்களோ நடக்கமாட்டார்களோ என்று அவர்களைச் சோதித்துப் பார்ப்போம்.

5. ஆறாம் நாளிலே அவர்கள் நாள்தோறும் சேர்த்ததைப் பார்க்கிலும் இரண்டத்தனை யாகச் சேர்த்து அதை ஆயத்தம்பண்னி வைக்கக்கடவார்கள் என்றார்.

6. இவ்வாறு மோயீசனும் ஆரோனும் இஸ்றாயேல் புத்திரரெல்லாரையும் நோக்கி: ஆண்டவர்தான் எஜிப்த்து தேசத்தினின்று உங்களைப் புறப்படப் பண்ணினாரென்று இன்று சாயரட்சை அறிந்துகொள்வீர்கள்.

7. அப்புறம் நாளை விடியற்காலத்திலே கர்த்தருடைய மகிமையைக் கண்டுகொள் வீர்கள்; உள்ளபடி அவருக்கு விரோதமாய் உங்கள் முறுமுறுப்புகளை ஆண்டவர் கேட் டிருக்கின்றார். நீங்கள் எங்கள் மேல் முணு முணுத்துப் பேசினதற்கு நாங்கள் எம்மாத் திரம் என்றார்கள்.

8. மீளவும் மோயீசன்: சாயந்தரத்தில் நீங்கள் புசிப்பதற்குக் கர்த்தர் உங்களுக்கு இறைச்சிகளையும், நாளை விடியற்காலத்தில் நீங்கள் திருப்தியடைவதற்கு அப்பங்களை யும் கொடுப்பார். நீங்கள் முறுமுறுத்து அவ ருக்கு விரோதமாய்ச் சொல்லிய குறை யெல்லாம் அவருடைய செவிக்கேறிற்று. நாங்கள் எம்மாத்திரம்? உங்கள் முறைப்பாடு எங்களுக்கல்ல, கர்த்தருக்கே விரோதமா யிருக்கிறதென்றான்.

9. பின்னும் மோயீசன் ஆரோனை நோ க்கி: நீ இஸ்றாயேல் புத்திரரின் சபை முழு வதையும் பார்த்து: நீங்கள் கர்த்தருடைய சந்நிதியில் வாருங்கள், உங்கள் முறுமுறுப்பு களை அவர் கேட்பார் என்று சொல்வாய் என்றான்.

10. பிறகு ஆரோன் இஸ்றாயேல் புத்திர ரின் முழு சபையோடே பேசிக் கொண்டி ருக்கையில் அவர்கள் வனாந்தர முகமாய்த் திரும்பிப் பார்த்துக்கொண்டார்கள். அச்க்ஷ ணமே கர்த்தருடைய மகிமை மேகத்திலே காணப்பட்டது.

11. ஆண்டவர் மோயீசனை நோக்கி:

12. நாம் இஸ்றாயேல் புத்திரரின் முறுமு றுப்புகளைக் கேட்டுக்கொண்டோம். நீ அவர் களை நோக்கி: சாயந்தரம் இறைச்சிகளைப் புசிப்பீர்கள். விடியற்காலத்தில் அப்பங்க ளைத் திருப்தியாகச் சாப்பிடுவீர்கள், உங்கள் தேவனாகிய கர்த்தர் நாமே என்று அறிந்து கொள்வீர்கள் என்று சொல்லென்றார்.

13. இவ்வாறு சாயந்தரத்தில் காடைகள் வந்து விழுந்து பாளையத்தை மூடிக் கொண்டன. விடியற்காலத்தில் பாளையத்தைச் சுற்றிலும் பனி பெய்திருந்தது.

14. பூமியை மூடிக்கொண்ட பிற்பாடு வனாந்தரத்திலே உரலிலே குத்தப்பட்டதும், உறைந்த பனிக்கட்டியைப் போன்றதுமான ஏதோ ஒரு வஸ்து காணப்பட்டது.

15. இஸ்றாயேல் புத்திரர் அதைக் கண்டு அது இன்னதென்று அறியாமையால், ஒரு வரையொருவர் நோக்கி: மன்னு! அதாவது: இது யாதோ என்று சொன்னார்கள். அப் பொழுது மோயீசன் அவர்களைப் பார்த்து: இது கர்த்தர் உங்களுக்குப் புசிக்கத் தந்தருளிய அப்பம்.

* 15-ம் வசனம். அந்த அற்புதமான மன்னாவைத் தேவநற்கருணைக்கு முன்னடையாளமாகச் சர்வேசுரன் எபிறேயருக்குத் தந்தருளினார். அவர் சுவிசேஷத்திலே திரு வுளம் பற்றினதாவது: மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்: மோயீசன் உங்களுக்குப் பரமண்டலத்தினின்று வந்த அப்பத்தைத் தரவில்லை; என் பிதாவானவரே பர மண்டலத்தினின்று வந்த உண்மையான அப்பத்தை உங்களுக்குத் தந்தருளுகிறார்; ஏனென்றால் பரமண்டலத்தினின்று இறங்கி உலகத்திற்குச் ஜீவியம் அளிக்கிறவர் எவரோ அவரே சர்வேசு ரனுடைய அப்பமாயிருக்கின்றார்.... ஜீவிய அப்பம் நானே. என்னிடத்தில் வருகிறவன் எவனோ அவன் பசியடையான், என்னை விசுவசிக்கிறவன் எவனோ அவன் ஒருக்காலும் தாகமாயிரான்... ஜீவிய அப்பம் நானே, உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள். இதுவோ பரமண்டலத்திலிருந்து இறங்கிய அப்பமாகையால், இதைப் புசித்திருப்பவன் சாகான். பரமண்டலத்திலிருந்து இறங்கிய ஜீவிய அப்பம் நானே. இவ்வப்பத்தை எவன் சாப்பிட்டிருப்பானோ அவன் என்றும் ஜீவிப்பான்; நான் கொடுக்கவிருக்கிற அப்பமோ உலகத்தின் ஜீவியத்திற்குரிய என் மாம்சமே என்று திருவுளம் பற்றினார். (அருளப்பர் 6:32,33,35,48,52-ம் வசனங்கள்.) மன்னாவுக்கும் திவ்விய நற்கருணைக்கும் அளவில்லாத வித்தியாசமிருந்தபோதிலும் இதற்கு அது முன் குறிப்பாயிருந்ததென்பதற்குச் சந்தேகமில்லை. எப்படியெனில், இஸ்றாயேலியர் வாக்குத்தத்தப் பூமிக்குச் சேரும்பரியந்தம் அவர்கள் சஞ்சரித்துவந்த வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்தே காப்பாற்றப்பட்டார்கள்; அப்படியே கிறீஸ்தவர்களும் மோட்சக் கரையேறியடையுமட்டும் சற்பிரசாதமானது அவர்களுக்கு ஆகாரமும் ஆதாரமுமாயிருக்கிறது. மன்னா அவரவருடைய அவசரத்திற்கும் விருப்பத்திற்கும் தக்கபடி வேறுவேறு உருசிகரமாயிருந்ததே; அதுபோல் நாம் உலகத்தையும் அதின் நானாவித மாய்கைகளையும் வெறுத்துவிட்டோமானால், நமக்குத் தேவநற்கருணையின் வழியாய்ச் சகல இன்பமும் கிடைக்குமே. இராக்காலத்தில்தான் மன்னா இஸ்றாயேலியருக்குப் பெய்யும். நாம் இன்னும் சர்வேசுரனை முகமுகமாய்க் காணாமல் விசுவாசத்தைக்கொண்டு அவரைத் தேடி வருகிற அந்தஸ்து அந்தகார அந்தஸ்தென்று சொல்லலாம். அப்படிப்பட்ட தர்மசங்கடமான அந்தஸ்தில் தேவ நற்கருணையே நமக்கு வேண்டிய ஆறுதலையும் தேறுதலையும் தந்தருளுகின்றது. மன்னா அவரவருக்கும் வேண்டிய மட்டும் அகப்படும், எவன் அதிகமாகச் சேர்த்தானோ அவனுக்கு அது மிஞ்சாது. எவன் அதைக் குறைவாகச் சேர்த்தானோ அவனுக்கு அது மட்டாயிராது. அதுபோல் தேவநற்கருணையிலே சேசுநாதர் கோதுமை அப்பம் திராட்ச இரசமென்கிற குணங்களில் மெய்யாகவே எழுந்தருளியிருக்கிறார். அந்தக் குணங்களில் எவன் பெரும் அம்சம் உட்கொண்டானோ அவன் பூரணமாய்க் கிறீஸ்துநாதரைப் பெற்றான். எவன் சின்னஞ் சிறிய அம்சம் உட்கொண்டானோ அவனும் பூரணமாகக் கிறீஸ்துநாதரைப் பெற்றான்.

16. ஆண்டவர் கற்பித்திருக்கிறது என்ன வென்றால், அவரவர் புசிக்கும் அளவுக் குத் தக்கபடி அவரவர் எடுத்துச் சேர்க்கக் கடவார். உங்கள் கூடாரத்தில் எத்தனைப் பேர் குடியிருக்கிறார்களோ ஆளுக்கு ஒவ் வொரு கொமோர் எடுத்து அத்தனையும் சேர்த்து வருவீர்கள் என்றான்.

17. இஸ்றாயேல் புத்திரர் இவ்வாறு செய்து சிலர் அதிகமாகவும் சிலர் குறைவாகவும் சேர்த்த பின்பு,

18. அதைக் கொமோரால் அளந்தார்கள். மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு அதிகமிருந்ததுமில்லை, கொஞ்சமாய்ச் சேர்த்தவனுக்குக் குறைவாயிருந்ததுமில்லை. அவரவர் தாங்கள் புசிக்கும் அளவுக்குத்தானே சேர்த்துக் கொண்டிருந்தார்கள்.

19. பிறகு மோயீசன்: ஒருவனும் விடியற் காலம் வரைக்கும் அதிலே ஒன்றும் பத்திரப்படுத்தி வைக்கக்கூடாதென்று சொன்னான். (சொல்லியும்)

20. மோயீசனுடைய சொல்லைக் கேளாமல் அவர்களில் சிலபேர்கள் அதில் கொஞ்சம் விடியற்காலம் மட்டும் பத்திரப்படுத்தி வைத்தார்கள். அது பூச்சி பிடித்தது. பிறகு அது மக்கிப்போயிற்று. அவர்கள்மேல் மோயீசன் கோபங்கொண்டான். 

21. அதை விடியற்காலந்தோறும் அவரவர் புசிக்கும் அளவுக்குத் தக்கதாய் அவரவர் சேர்ப்பார்கள். வெய்யிலேறவே அது உருகிப் போகும்.

22. ஆறாம் நாளிலோவென்றால், ஒவ்வொரு ஆளுக்கு இரண்டு கொமோர் வீதமாக இரண்டத்தனை ஆகாரஞ் சேர்த்தார்கள். பிறகு சபையின் தலைவர் எல்லோரும் மோயீசனிடத்திற்கு வந்து அதை அறிவித்தார்கள்.

23. அவன் அவர்களை நோக்கி: நாளைக்குக் கர்த்தருக்குப் பிரதிஷ்டையான சபாத் ஓய்வு நாளாம்; செய்யவேண்டியதெல்லாம் இன்று செய்யுங்கள். சமைக்க வேண்டியதையும் சமைத்துக்கொள்ளுங்கள், பிறகு மீதியாயிருப்பதையெல்லாம் நாளைக் காலையில் மட்டும் வைத்துக்கொண்டிருங்கள், ஆண்டவர் சொல்லிய வாக்கியம் இதுவே என்றான்.

24. அவர்கள் மோயீசன் கற்பித்திருந்த படி செய்திருக்க, அது நாறவுமில்லை, அதிலே புழு பிடிக்கவுமில்லை.

25. அப்போது மோயீசன்: இன்று கர்த்தருடைய சபாத்தாகையால் அதைச் சாப்பிடுங்கள். இன்று நீங்கள் அதை வெளியிலே காணப்போகிறதில்லை.

26. ஆறுநாளும் அதைச் சேர்த்துக் கொள் ளுங்கள். ஏழாம் நாளிலே கர்த்தருடைய சபாத் ஓய்வு நாளானதால் அது அகப்படாது.

27. அது நிற்க, ஏழாம் நாளின்போது ஜனங்களிலே சிலர் அதைச் சேர்க்கும்படி வெளியே போயிருக்க, அவர்கள் அதில் ஒன்றுங் காணவில்லை.

28. ஆண்டவர் மோயீசனை நோக்கி: நம் முடைய கட்டளைகளையும், பிரமாணங்களையும் அனுசரிக்க எந்தமட்டும் மனதில்லாமல் இருப்பீர்கள்?

29. பாருங்கள்: ஆண்டவர் சபாத் நாளை உங்களுக்கு அருளினதாலல்லோ ஆறாம் நாளிலே உங்களுக்கு இரட்டிப்பாக ஆகாரந் தந்தருளினார். ஏழாம் நாளிலே உங்களில் எவனும் தன் தன் இடத்தை விட்டுப் புறப்படாமல் அவனவன் தன் தன் ஸ்தானத்திலிருக்க வேண்டும்.

30. அவ்வாறே ஜனங்கள் ஏழாம் நாளில் சபாத் ஓய்வு கொண்டாடினர்.

31. அவ்வாகாரத்திற்கு இஸ்றாயேல் வம் சத்தார் மன்னா என்று பேரிட்டார்கள். அது கொத்தமல்லிபோல் வெண்ணிறமுள்ள தாயிருந்தது. மாவுந் தேனும் கலந்து எவ் வித உருசி இருக்குமோஅதுக்கு அவ்வித உருசியே இருக்கும்.

32. அப்போது மோயீசன்: கர்த்தர் கற் பித்தது யாதெனில், உங்களை நாம் எஜிப்த்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணும் போது வனாந்தரத்திலே எவ்வித ஆகாரம் உங்களுக்கு அருளினோமென்று உங்கள் சந்ததியார் கண்டறியத்தக்கதாக மன்னா வென்னும் அவ்வாகாரத்தில் ஒரு கொமோர் கொண்டது அத்தனைச் சேர்த்து அவர்களுக் காகப் பத்திரம் பண்ணி வைக்கவேண்டு மென்றார் என்றான்.

33. பிறகு மோயீசன் ஆரோனை நோக்கி: நீ ஒரு கலசத்தை எடுத்துக் கொண்டு, ஒரு கொமோர் நிறைய மன்னாவை அதிலே போட்டு உங்கள் தலைமுறைகள்தோறும் காப்பாற்றுவதற்குக் கர்த்தர் சந்நிதியிலே வைத்துக்கொள்ளக்கடவாய்.

34. ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளை யிட்டபடி என்றான். பிறகு ஆரோன் அந்தக் கலசத்தைப் பிற்காலத்துக்கென்று கர்த்தர் சந்நிதியிருக்கும் கூடாரத்திலே வைத்தான்.

35. அப்புறம் இஸ்றாயேல் புத்திரர்கள் தாங்கள் குடியேறவேண்டிய தேசத்துக்கு வரும் வரையிலும் நாற்பது வருஷகாலமாய் மன்னாவைப் புசித்தார்கள். அவர்கள் கானான் தேசத்து எல்லையில் சேருமட்டுமே அந்த ஆகாரத்தைப் புசித்து வந்தார்கள்.

36. ஒரு கொமோர் ஆனது ஏப்பியிலே பத்தில் ஒரு பங்கு.