இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

15 பேர் பார்த்தது

1879- ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் நாள் ஐயர்லாந்து நாட்டிலுள்ள நாக் (knock) என்னும் கிராமத்தில் அன்று முழுதும் மழை பெய்தது. சுகத்துக்காக வேறிடம் சென்று திரும்பிய ஸ்ரீமதி பீண், அவளுடைய மகள் மேரி பீண் இருவரையும் உபசரிக்கும்படி நண்பர்கள் கூடியிருந்தார்கள். கோவில் விசாரணைக் குருவின் வீட்டு வேலைக்காரியான மேரி மக்லோலின் என்பவளும் அங்கு வந்திருந்தாள். இவள் வீடு திரும்புகையில் மேரி பீண் இவளுடன் துணையாகச் சென்றாள். கோவில் முகப்பைப் பார்த்த மேரி பீண், "அதோ அந்த சுரூபங்களைப்பார். கோவிலுக்கென்று பங்கு சுவாமி புதிய சுரூபங்களை வாங்கியதை நீ ஏன் எங்களிடம் சொல்லவில்லை?" எனக் கேட்டாள்.

“புதிய சுரூபங்களைப்பற்றி சுவாமி ஒன்றும் என்னிடம் சொல்லவில்லையே, இப்பொழுது ஏன் வாங்க வேண்டும்?” என மேரி மக்லோலின் மொழிந்தனள்

இருவரும் கோவிலை நோக்கி விரைந்து சென்றனர். தாங்கள் கண்ட காட்சி அவர்களைப் பிரமிக்கச் செய்தது. “அவை சுரூபங்களல்ல, அசைகின்றனவே.. ஏன்? தேவதாயல்லவா?" என மேரி பீண் கூறி, நடந்ததைத் தன் வீட்டில் தெரிவிக்கும்படி விரைந்தாள். “அம்மா, சீக்கிரம் வாருங்கள். தேவதாய் கோவில் முகப்பில் நிற்கிறார்கள்'' எனக் கூவிக்கொண்டே அவள் வீட்டிலுள்ள யாவரையும் அழைத்து விட்டு, முன் போல் கோவிலை நோக்கி ஓடினாள்.

அவள் சொன்னதை அவளுடைய சகோதரன் தோமினிக் நம்பவில்லை. “அம்மா, அவளைச் சீக்கிரம் போய் அழைத்து வாருங்கள்'' என அவன் சொன்ன போதிலும், தாயும் மகனும், மழையைக்கவனியாமல் கோவிலுக்குச் சென்றார்கள்.

கோவிலை அடைந்ததும், மேரியை அழைத்து வரவேண்டும் என்னும் எண்ணம் மறைந்தது. மேரி சொன்னது உண்மையே என அவர்கள் அறிந்தார் கள். இருவரும் சற்று நேரம் அசைவின்றி பிரமிப்புடன் நின்றனர். "உண்மையாகவே அது கன்னி மரியே. கடவுள் புகழப்படுவாராக'' என தாய் மொழிந்தாள். “ஆம், மேரி சொன்ன யாவும் உண் மையே. நம்மைக் கூப்பிட வந்தாளே, நல்ல பிள்ளை" என்றான் தோமிக்.

உப் இந்தச் செய்தியை மக்கள் கேள்விப் பட்டனர். பதினைந்து பேர் கூடி விட்டார்கள். அப்பொழுது மாலை ஏழரை மணி, நல்ல பகல் வெளிச்சம். இன்னும் மழை பெய்து கொண்டிருந்த போதிலும், காட்சி தோன்றிய இடம் நன்கு உலர்ந்திருந்தது.

தேவதாயின் இடது பக்கத்தில் சுவிசேஷகரான புனித அருளப்பர், வலது பக்கத்தில் புனித சூசை யப்பர், சற்று தூரத்தில் பீடம், பீடத்தில் செம்மறிப் புருவை, செம்மறிப் புருவைக்குப் பின்னால் பெரிய சிலுவை.

இரண்டுமணி நேரமாக காட்சி அப்படியே நீடித் தது. அங்கு நின்ற யாவரும் தேவதாயை நோக்கி பக்தியுடன் ஜெபித்துக் கொண்டிருந்தார்கள். அவர் கள் பரலோக அன்னையை நேசித்தார்கள்; வாழ்நாள் முழுவதுமே அவளை நோக்கி பிரார்த்தித்தார்கள். இப்பொழுது அவள் தங்களைச் சந்திக்கக் கிருபை கூர்ந்ததைப் பற்றி மகிழ்ந்தனர்.

பிரகாசம் நிறைந்த மேகத்தின் மத்தியில் நின்ற தேவதாய் தூய வெண்ணாடை தரித்திருந்தாள். அது கழுத்திலிருந்து பாதம் வரை தொங்கியது. சிரசில் பொற்கிரீடம்; அதன் மேல் ஜொலிக்கும் பல தங்கச் சிலுவைகள், கிரீடத்தின் அடியில் அழகிய ரோஜா மலர். குருவானவர் திவ்விய பூசை செய்கையில் கை களை விரித்திருப்பது போல், அன்னையின் கரங்கள் விரிந்திருந்தன; அவளது கண்கள் வானத்தை நோக்கின.

புனித சூசையப்பர் வழக்கமாக படங்களில் சித்தரிக்கப்பட்டிருப்பது போல் உடையணிந்திருந்தார். தேவதாயை நோக்கியவராய் நின்ற அவரது சிரசு சற்று குனிந்திருந்தது. கூடி நின்ற மக்களுக்கு அவர் தேவதாயைச் சுட்டிக் காண்பிக்கிறாப் போலி ருந்தது.

இடது புறத்தில் தோன்றிய பெரிய பீடம் தரை யிலிருந்து எட்டு அடி உயரத்தில் இருந்தது. அது பொன்மயமான பிரகாசத்தால் சூழப்பட்டிருந்தது. அதில் சம்மனசுகளின் சிறகுகள் தோன்றின. பீடத் தில் நின்ற செம்மறிப் புருவையைச் சுற்றிலும் அழகிய தங்கநிறப் பிரகாசம்; செம்மறிப்புருவைக்குப் பின் ஒரு பாடுபட்ட சுரூபம்; அதில் நம் இரட்சகரின் உருவம்.

பீடத்தின் சுவிசேஷ பக்கத்தில் தரைக்குச் சமீப மாக ஆண்டவரின் பிரிய சீடனான புனித அருளப்பர் நின்றார். அவர் மேற்றிராணியாரின் உடை தரித்து தலையில் கிரீடத்துடனிருந்தார். அவரது இடது கரத்தில் சுவிசேஷ புத்தகம் இருந்தது. ஆசீர்வதிப் பதுபோல், அல்லது தேவ வார்த்தையைப் பிரசங்கிப்பது போல் அவரது வலது கரம் நீட்டப்பட்டி ருந்தது.

பரலோகத்திலிருந்து வந்த அவர்கள் இரண்டு மணி நேரமாக அதே நிலையில் நின்றனர். வாய் திறந்து ஒன்றும் பேசவில்லை. தேவதாயின் பாதங் களை முத்தி செய்யும்படி பிரிட்ஜெட் ட்ரெஞ்ச் என் னும் பெண் சென்றாள். சுவரே அவள் முகத்திற் பட் டது. “தோன்றிய உருவங்களில் அசைவு இல்லை, உயிரின் அடையாளம் கிடையாது. உயிருள்ள ஆட்க ளின் உயரத்துடன் காணப்பட்டன. என் கரங்களால் அன்னையின் பாதங்களைத் தொட முடியாது போனது ஏனோ தெரியவில்லை. அப்பொழுது கனத்த மழை பெய்து கொண்டிருந்தது என்றாலும், மூவரும் நின்ற இடத்தில் மழை விழவில்லை. தரையை என் கைக ளால் தடவிப் பார்த்தேன். நன்றாக உலர்ந்திருந்தது'' என ப்ரிட்ஜெட் ட்ரெஞ்ச் பின்னர் வாக்குமூலமளித் தாள்.

தேவதாய் தன் மக்களைத் தரிசிக்கவரும்போதெல் லாம் ஏதாவது செய்தி விடுத்துச் செல்வது வழக்கம். இங்கோ , மூவரில் எவராவது வாய் திறந்து பேச வில்லை. எனினும் அன்னையைப் பார்க்கப் பாக்கியம் பெற்ற பதினைந்து பேர்களும் அன்னை வந்த நோக் கத்தை அறிந்து கொண்டனர். அவர்களது உணர்ச்சி களை ப்ரிட்ஜெட் ட்ரெஞ்ச் என்பவள் வெளியிட்டிருக் கிறாள். “நான் அந்த இடத்தை அடைந்ததும் மூன்று உருவங்களையும் தெளிவாகப் பார்த்தேன். தேவ தாயே என் கவனத்தைக் கவர்ந்தாள். மற்ற இருவ ரையும் நான் அதிகமாகக் கவனிக்கவில்லை. உடனே நான் முழந்தாளிட்டு பரிசுத்த கன்னியை நான் காணக்கிருபை செய்த கடவுளுக்கு, 'நூறாயிரம் முறை நன்றி' எனக் கூவி ஜெபமாலை ஜெபிக்கத் தொடங்கி னேன். தேவதாயை நோக்குவதே பெரும் இன்பமா யிருந்தது. கடவுளுக்கு நன்றி செலுத்துவதும் ஜெபிப்பதுமாயிருந்தேன் ".

அந்தத் திரு யாத்திரை ஸ்தலத்துக்கு 1879-ம் ஆண்டிலிருந்து பலர் செல்கிறார்கள். செல்லும் ஒவ் வொருவரும் அன்னை தரும் செய்தியை உணர்கின் றனர். அவர்களது விசுவாசம் அதிக ஆழமாக ஊன்றுகிறது. நம்பிக்கை திடம் பெறுகிறது; பாவத் துக்காக துயரமும் தாழ்ச்சியும் உள்ளவர்களின் இதயங்களில் மரியாயின் வழியாக கிறிஸ்துநாதர் மேல் அன்பும் பத்தியும் அதிகரித்து வருகிறது.