யாத்திராகமம் - அதிகாரம் 14

பரவோன் இஸ்றாயேலியர்களைப் பின்சென்றதும் - அவர்கள் செங்கடலின் மார்க்கமாய் நடந்துபோனதும்.

1. கர்த்தரோவென்றால் மோயீசனை நோக்கி:

2. நீ இஸ்ராயேல் புத்திரரிடம் பேசிக் கொண்டு அவர்கள் திரும்பி மக்தலமுக்கும் சமுத்திரத்துக்கும் நடுவாந்தரமும் பேல் செப்போனுக்குச் சமீபமுள்ள பிகாயிரோட் டுக்கு நேர்முகமாய்ப் பாளையம் இறங்கும் படி சொல்லுவாய்; அதன் அருகே கடலோரத்தில் பாளையம் இறங்குவீர்கள்.

3. ஏனென்றால், பரவோன் இஸ்றாயேல் புத்திரரைக் குறித்து: கரையாலே நெருக்கப் பட்டிருக்கிறார்களே, வனாந்தரமும் அவர்களை அடைத்திருக்கின்றதே என்று சொல்லுவான்.

4. நாமோ அவனுடைய மனதைக் கடினப் படுத்துவதால் அவன் உங்களைப் பின் தொ டருவான். அப்போது நாம் அவனாலும், அவ னுடைய எல்லாச் சேனைகளாலும் மகிமை அடைவோம். அதனால் நாம் கர்த்தரென்றே எஜிப்த்தியர் அறிவார்கள் என்று திருவுளம் பற்றினார். (இஸ்றாயேலியரும்) அவ்விதமே செய்தார்கள்.

5. அது நிற்க, ஜனங்கள் ஓடிப்போய் விட்டார்களென்று யாரோ பரவோன் அரச னுக்கு அறிவித்த மாத்திரத்தில், அவர்க ளுக்கு விரோதமாய்ப் பரவோனுக்கும் அவனு டைய ஊழியஞ் செய்கிறவர்களுக்கும் மனது வேறுபட்டுப் போயிற்று. அவர்கள் நம் வே லை செய்யாதபடி நாம் அவர்களைப் போக விட்டது அநியாயமல்லவா? என்றார்கள்.

6. அதைச் சொல்லி அவன் தன் இரதத் தைப் பூட்டித் தன் இராணுவத்தார் எல் லோரையுந் தன்னோடே கூட்டி,

7. அறுநூறு நல்ல முதல் தரமான இர தங்களையும், எஜிப்த்திலிருந்த நானாவித வண்டிகளையும் முஸ்திப்புப்படுத்தி எல்லாச் சேனைகளுடைய அதிபதிகளையும் சேர்த்துக் கொண்டனன்.

8. அப்புறங் கர்த்தர் எஜிப்த்து அரச னான பரவோனின் மனதைக் கடினப்படுத் தினமையால், அவன் இஸ்றாயேல் புத்திர ரைப் பின்சென்றான்; அவர்களோ மகா பலத்த கையால் ஆதரிக்கப்பட்டல்லோ புறப் பட்டிருந்தார்கள்.

9. எஜிப்த்தியர் அவர்களைத் தொடர்ந்து போய் அவர்கள் கடலோரத்திலே பாளை யம் இறங்கினதைக் கண்டுகொண்டார்கள். பரவோனுடைய குதிரைப் படைகளும்; இரதங்களின் படைகளும் சேனைகளு மெல்லாம் பெல்செப்போனுக்கு நேர்முகத்துள்ள பிகாயிரோட்டிலே நின்று கொண்டார்கள்.

10. பரவோன் சமீபித்து வரவே, இஸ்றாயேல் புத்திரர் கண்களை ஏறெடுத்துப் பார்த்துத் தங்களுக்குப் பிறகாலே எஜிப்த்தியர் இருக்கக் கண்டு மெத்தவும் பயந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்.

11. பிறகு மோயீசனை நோக்கி: எஜிப்த்தில் கல்லறைகள் இல்லாதிருந்ததினாலாக்கும் நீர் வனாந்தரத்திலே சாகும்படி எங்களைக் கூட்டி வந்தீர்? என்னத்தைச் செய்யக் கருதி எங்களை எகிப்த்தினின்று புறப்படச் செய்தீர்?

12. நாங்கள் எஜிப்த்திலே உமக்குச் சொன்ன பேச்சு இஃதாமன்றோ? எஜிப்த்தியருக்கு வேலை செய்ய எங்களைச் சும்மா விட்டுப்போம் என்று சொன்னோமல்லவா? வனாந்தரத்திலே சாவதைப் பார்க்கிலும் அவர்களுக்கு வேலை செய்கிறது எங்களுக்கு நலமாயிருக்குமே என்றார்கள்.

13. அப்போது மோயீசன் ஜனங்களை நோக்கி: அஞ்சவே வேண்டாம். நீங்கள் நின்றுகொண்டு இன்று கர்த்தர் செய்யப்போகிற மகத்துவங்களைப் பாருங்கள்: உள்ளபடி நீங்கள் இப்போது காண்கிற இந்த எஜிப்த்தியரை இனி எந்தக் காலத்திலுமே காணப்போவதில்லை.

14. ஆண்டவர் உங்களுக்காகப் போராடுவார், நீங்களோ பேசாதிருப்பீர்கள் (என்றுரைத்தான்.)

* 14-ம் வசனம். இங்கே மோயீசனுடைய சுகிர்த சாந்தகுணம் எவ்வளவு நேர்த்தியாய் விளங்குகிறது. அவர் இஸ்றாயேலியரின்பேரில் பட்சம்வைத்து அவர்களுக்கு எத்தனை உபகாரங்களைச் செய்துவந்திருந்தாலும் அவர்கள் நன்றிகெட்டவர்களாய் அவர் மேல் எப்போதும் முறுமுறுத்து விரோதித்து வந்தார்கள். ஆனால் அவர் சுவாமியுடைய மகிமையை மாத்திரந் தேடுகிறவராகையால் சகலத்தையும் பொறுமையோடு சகித்துக்கொண்டு வந்தார்.

15. பிறகு கர்த்தர் மோயீசனை நோக்கி: நீ நம்மிடத்திலே முறையிடுகிறதென்ன? இஸ்றாயேல் புத்திரரைப் புறப்பட்டுப் போகச் சொல்லு.

16. நீயோ உன் கோலை ஓங்கி உன் கையைக் கடலின் மேல் நீட்டிச் சமுத்திரத்தைப் பிரித்துவிடு; இஸ்றாயேல் புத்திரர் அதன் நடுவிலே கால் நனையாமல் நடந்து போவார்கள்.

17. உங்களைப் பின் தொடரும்படி நாம் எஜிப்த்தியரின் மனதைக் கடினப்படுத்து வோம். அதனால் பரவோனாலும், அவனு டைய சேனைகளாலும், அவனுடைய இரதங் குதிரைகளினாலும் நாம் மகிமையை அடைவோம்.

18. இப்படி நாம் பரவோனாலும் அவனுடைய இரதங்களாலும் குதிரைகளினாலும் மகிமை அடைந்தபோது ஆண்டவர் நாமே என்று எஜிப்த்தியர் அறிந்து கொள்ளுவார்கள் என்றருளினார்.

19. அப்போது இஸ்றாயேல் பாளையத்தின் முன் நடந்துகொண்டிருந்த தேவதூதனானவர் பெயர்ந்து அவர்களுக்குப் பின்னாக நடந்தார்; அவரோடுகூட மேகஸ்தம்பமும் விலகி அவர்கள் பிறகாலே காணப்பட்டது.

20. அது எஜிப்த்தியரின் சேனைக்கும் இஸ் றாயேலியரின் சேனைக்கும் இடையில் நின்றுகொண்டது. அம்மேகமானது அந்தகாரமுள்ளதும் இரவிலே ஒளியை வீசுகிற துமாயிருந்தமையால் இஸ்றாயேல் சேனையும் எஜிப்த்தியரின் சேனையும் இராமுழுவதும் ஒன்றுடன் ஒன்று சேரக் கூடாமற் போயிற்று.

21. அப்போது மோயீசன் கடலின்மேல் கையை நீட்டினான்; நீட்டவே கர்த்தர் இரா முழுதும் அதியுக்கிரமான உஷ்ணமுள்ள காற்றை வீசுவித்துக் கடலை வாரிக் கட்டாந் தரையாக மாற்றினார். ஜலம் இருபிரிவாகி விட்டது.

22. இஸ்றாயேல் புத்திரரும் வரண்ட கட லின்நடுவே பிரவேசித்தனர். ஏனென்றால் ஜலமானது அவர்களுக்கு வலது புறத்திலும் இடது புறத்திலும் மதிலைப் போல நின்று கொண்டிருந்தது.

23. தொடர்ந்து வருகிற எஜிப்த்தியர்களும் பரவோனுடைய இரதங்களும், குதிரை வீரர் களும் அவர்களுக்குப் பின்னாகச் சமுத்திரத் தின் நடுவே பிரவேசித்தனர்.

24. காலைச் சாமம் ஆரம்பித்திருக்கும் நே ரத்திலே கர்த்தர் அக்கினியும் மேகமுமான ஸ்தம்பத்திற்குள்ளிருந்து எஜிப்த்தியரின் சேனைகளின் மீது நோக்கமுற்று அவர்களு டைய படைகளை அதம்பண்ணினார்.

25. எவ்வாறெனில், இரதங்களின் உருளை கள் சுழல, அவைகள் அதிக ஆழத்தில் கவிழ்ந்து போயின. அதினால் எஜிப்த்தியர்: இஸ்றா யேலை விட்டோடிப் போவோமாக! இதோ கர்த்தர் நம்மையெதிர்த்து அவர்களுக்குச் சகாயமாகப் போராடுகின்றனர் என்றார்கள்.

26. அப்பொழுது கர்த்தர் மோயீசனை நோக்கி: சமுத்திரத்தின் மேலே கையை நீட்டு; நீட்டினால் ஜலங்கள் திரும்பி எஜிப்த் தியர் மேலும் அவர்களுடைய இரதங்களின் மேலும் குதிரைகளின் மேலும் வந்து விழு மென்றார்.

27. மோயீசன் கடலின்மீது கையை நீட் டினான். நீட்டவே விடியற்காலத்தில் கடல் வேகமாய்த் திரும்பி வந்தது. எஜிப்த்தியர் ஓடிப்போகையில் ஜலங்கள் அவர்களுக்கு எதிராக வந்தமையால் கர்த்தர் அவர்களைக் கடலின் நடுவே கவிழ்த்துப் போட்டார்.

28. இவ்வாறு ஜலங்கள் திரும்பி வந்து, தொடர்ந்து கடலிற் பிரவேசித்திருந்த பர வோனுடைய சர்வ சேனைகளின் இரதங்க ளையும் குதிரைகளையும் மூடின. அவர்களில் ஒருவனும் தப்பித்துக்கொள்ளவில்லை.

* 28-ம் வசனம். இஸ்றாயேலியர் செங்கடலைக் கால் நனையாமற் கடந்த வர்த்தமானத்தைச் சத்தியவேதத்தையறியாத ஜாதி ஜனங்களும் முதலாய் அறிந்தார்களென்பதற்குப் பற்பல அத்தாட்சிகளுண்டு. அப்புதுமை நடந்தேறிய கடலே அதனால் செங்கடல் என்று இந்நாள் வரையிலும் அழைக்கப்பட்டு வருகிறது. ஏனென்றால் சங்கரிக்கப்பட்ட பரவோன் சேனைவீரருடைய இரத்தத்தினால் கடலின் ஜலம் செந்நிறமாய்விட்டது.

29. இஸ்றாயேல் புத்திரரோவென்றால் வறண்டுபோன கடலின் நடுவே நடக்கை யில் அவர்களுடைய வலது புறத்திலும் இடது புறத்திலும் ஜலங்கள் மதில்போல் இருக்கும்.

30. இவ்வாறு கர்த்தர் அந்நாளிலே இஸ் றாயேலியரை எஜிப்த்தியருடைய கைகளி னின்று இரட்சித்தருளினார்.

* 30-ம் வசனம். இவ்வற்புதமான சங்கதியைப் பற்றி: விக்கிரகாராதனைக்கு உட்பட்டுத் தேவப் பிரஜைகளைத் துன்புறுத்திய எஜிப்த்தியர் நம்முடைய காலத்து லெளகீகருக்கும் நாஸ்தீகருக்கும் முன் அடையாளமாயிருந்தார்கள். கல்நெஞ்சனான பரவோன் ஆத்துமாக்களை மயக்கி அடிமையாக்கும் பசாசுக்கு அடையாளம். மோயீசனோ ஆத்துமாக்களைப் பாவச் சிறையினின்று இரட்சிக்கிற சேசுநாதருக்கு அடையாளமாயிருக்கிறார். செங்கடலைக் கடந்த இஸ்றாயேலியரோ ஞானஸ்நான ஜலத்தினாற் சுத்திகரிக்கப்பட்ட கிறீஸ்துவர்களுக்கு முன் அடையாளமாம் என்று அர்ச். அகுஸ்தின் எழுதிக்கொடுத்தார்.

31. பிறகு அவர்கள் கடற்கரையில் எஜிப்த்தியரின் சவங்களைக் கண்டபோதும், ஆண்டவர் அவர்களைக் கண்டித்துக் காண்பித்த வல்லமையைக் கண்டுணர்ந்தபோதும் கர்த்தருக்குப் பயந்து அவரிடத்திலும் அவருடைய தாசனான மோயீசனிடத்திலும் விசுவாசம் வைத்தார்கள்.