இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

யாத்திராகமம் - அதிகாரம் 13

முதல் பேறு அனைத்தும் தேவனுக்குப் பிரதிஷ்டையாக்கப்பட்டதும் - பாஸ்கு பண்டிகையை நினைவுகூறக் கட்டளையிடப்பட்டதும் - இஸ்றாயேலியர் ஜோசேப்பின் எலும்புகளை எடுத்துக்கொண்டு எஜிப்த்தை விட்டுப்போனதும்.
1. மீளவும் கர்த்தர் மோயீசனை நோக்கி:

2. இஸ்றாயேல் புத்திரருக்குள்ளே மனிதர்களிலாகிலும் மிருகங்களிலென்கிலும் கர்ப்பந் திறந்து பிறக்கும் முதற் பேறனைத்தையும் நமக்கு வசீகரணம் பண்ணுவாயாக. ஏனென்றால் சமஸ்தமும் நம்முடையது என்றார்.

* 2-ம் வசனம். இஸ்றாயேலியருக்குள் பிறக்கும் முதற்பேறான எல்லா ஆண்குழந்தைகளும் தேவதோத்திரத்திற்கும் ஆராதனைக்கும் ஊழியத்துக்கும், தலையீற்றான எல்லா ஆண் மிருகங்களும் தேவதோத்திரத்திற்குரிய பலிகளுக்கும் வசீகரணமாயிருக்க வேண்டுமென்பதே இவ்வாக்கியத்தின் அர்த்தமாம். இவ்வொழுங்கானது அது முதல் தேவசுதனான சேசுநாதர் சுவாமி தம்மைத்தாமே பலியிட்டு உலகத்தை மீட்டிரட்சித்த நாள் பரியந்தம் வழங்கி வந்தது.

3. ஆகையால் மோயீசன் பிரஜையை நோ க்கி: நீங்கள் எஜிப்த்தினின்றும் சிறைவாசத் தினின்றும் புறப்பட்ட இந்த நாளை நினைத் துக் கொள்ளுங்கள். ஆண்டவர் உங்களை அவ்விடத்தினின்று வலிய கரத்தைக்கொண்டு அப்புறப்படுத்தியருளினாரல்லவா? ஆத லால் நீங்கள் புளித்த அப்பத்தைச் சாப் பிடாதிருக்கக்கடவீர்கள்.

4. நவபலனாதிகளின் மாசத்தில் இன்று தானே நீங்கள் புறப்பட்டிருக்கிறீர்கள்.

5. (ஆண்டவர்) உனக்குக் கொடுப்பே னென்று உன் பிதாக்களுக்கு ஆணையிட்ட ருளியதும், பாலுந் தேனும் ஓடுகிறதுமான பூமியாகிய கானானையர், ஏத்தையர், ஆமோ றையர், ஏவையர், ஜெபுசேயர் என்பவர்க ளுடைய தேசத்தில் நீ பிரவேசமான பிற் பாடு இந்தத் திருவொழுக்கத்தை யாசரித் துக் கொண்டாடி வருவாய்.

6. (எப்படியெனில்) ஏழுநாள் புளியா தவைகளைச் சாப்பிடுவாய், ஏழாம் நாளிலோ ஆண்டவரது பண்டிகையாகும்.

7. ஏழு நாளும் புளியாததைப் புசிப்பீர் கள்; உன் வீட்டிலாவது உன் எல்லைகளிலா வது புளித்தது யாதொன்றும் உன்னிடத் திலே காணப்படலாகாது.

8. அந்நாளிலே உன் குமாரனை நோக்கி: நான் எஜிப்த்திலிருந்து புறப்பட்டபோது ஆண்டவர் எனக்குச் செய்தது இன்னதெ ன்று அவனுக்கு விபரித்துச் சொல்லுவாய்.

9. கர்த்தர் வல்ல கரத்தினாலே உன்னை எஜிப்த்திலிருந்து புறப்படச் செய்ததினால் அவருடைய திருக் கற்பனைகள் சர்வகால மும் உன் வாயிலிருக்கும் என்பதற்கு அந் தத் திருப்பண்டிகையே உன் கையிலுள்ள ஓர் அடையாளம் போலவும், உன் கண்க ளுக்கு முன் நிற்கும் ஒரு ஞாபக ஸ்தம்பம் போலவும் இருக்கும்.

10. நீ வருஷா வருஷம் கற்பித்த காலத் தில் இவ்வித ஆசாரத்தை ஆசரிக்கக்கடவாய்.

11. மீளவும் ஆண்டவர் உனக்கும் உன் முன்னோர்களுக்கும் ஆணையிட்டுச் சொல் லிய கானானையருடைய தேசத்திலே உட் பிரவேசிக்கப் பண்ணி அந்தத் தேசத்தை உனக்குக் கொடுத்த பிற்பாடு,

12. கர்ப்பத்தைத் திறந்து பிறக்கும் அனை த்தையும் உனக்கு இருக்கும் மிருக ஜீவன் களில் முதலீற்று அனைத்தையும் கர்த்த ருடையவைகளென்று அவருக்காகப் பிரி த்து வைப்பாய். அவைகளிலுள்ள ஆண்கள் யாவும் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பாயாக.

13. வேசரியின் தலையீற்றுக்குப் பதிலாக ஒரு ஆட்டைக் கொடுப்பாய். மீட்கக் கூடா தாயின் சாகடிப்பாய். ஆனால் மனிதனுக்குப் பிறக்கும் பிள்ளைகளில் தலைச்சன் புத் திரனைப் பணங்கொடுத்துத்தானே மீட்டுக் கொள்ளக் கடவாய்.

14. பிற்காலத்திலே உன் புத்திரன் இஃ தென்ன என்று வினவுங்கால், நீ அவனை நோக்கி: ஆண்டவர் வலிய கரத்தால் எங் களை எஜிப்த்து நாட்டினின்றுஞ் சிறை வா சத்தினின்றும் விடுதலையாக்கினாரே.

15. உள்ளபடி பரவோன் எங்களைப் போகவிட மாட்டாமல் முரண்டிக் கல் நெஞ் சனானதைக் கண்டு, ஆண்டவர் மனுஷ னுடைய தலைச்சன் புத்திரன் முதற்கொ ண்டு மிருகங்களுடைய தலையீற்றுமட்டும் எஜிப்த்திலுள்ள முதற்பேறானதெல்லாம் சாகடித்தார். அதைப் பற்றி நானுங் கர்ப்பந் திறந்து பிறக்கும் ஆணையெல்லாம் கர்த்த ருக்குப் பலியிட்டு என் குமாரர்களில் முதற் பேறானதெல்லாம் மீட்டுக்கொண்டும் வருகின்றேன் என்பாய்.

16. ஆகையால் இது உன் கையிலே ஓர் அடையாளமாகவும், உன் கண்களுக்கு முன் நிற்கும் ஒரு ஞாபகக் குறியாகவும் இருக்கக் கடவது. ஏனெனில் ஆண்டவர் வலிய கரத்தினால் எங்களை எஜிப்த்து தேசத்தி னின்று அப்புறப்படுத்தியருளினார் என்று (மோயீசன்) சொன்னான்.

17. பரவோன் ஜனங்களைப் போகவிட்ட பின்பு தேவன்: யுத்தத்தைக் கண்டால் அவர் கள் மனமடிந்து எஜிப்த்துக்குத் திரும்புவார் களென்று எண்ணி அவர்களைப் பிலிஸ் தியரின் தேசத்துச் சுறுக்கு வழியாய்க் கொண்டு போகாமல்,

* 17-ம் வசனம். சுவாமி தமது பிரஜைகளை மீட்டிரட்சித்து வாக்குத்தத்தப் பூமியிலே சேர்க்க வல்லவராய்த் தான் இருந்தார். ஆனால் அவர் அவசரமின்றிப் புதுமைகளைச் செய்வதைப் பார்க்கிலும் அவர்களுடைய பலவீனத்துக்கு மனதிரங்கிச் சுற்று வழியாய் அவர்களைப் போகக் கட்டளையிடச் சித்தமுள்ளவரானார்.

18. செங்கடலோரத்திலிருக்கிற வனாந் தர வழியே சுற்றிச் சுற்றிப் போகப்பண்ணி னார். இஸ்றாயேல் புத்திரர் ஆயுதமணிந்த வர்களாய் எஜிப்த்து தேசத்திலிருந்து புறப் பட்டுப் போனார்கள்.

19. அன்றியும் மோயீசன் ஜோசேப்பின் அஸ்திகளைத் தன்னோடே எடுத்துக்கொண்டு போனான். ஏனென்றால் கடவுள் உங்க ளைச் சந்திப்பார். (அப்பொழுது) நீங்கள் இவ்விடத்தினின்று என் அஸ்திகளை உங்க ளோடேகூட எடுத்துக்கொண்டு போங்க ளென்று சொல்லி ஜோசேப்பு இஸ்றாயேல் புத்திரரைச் சத்தியமாய் வாக்குத்தத்தம் கொடுக்கச் செய்திருந்தான்.

* 19-ம் வசனம். இஸ்றாயேலியர் ஜோசேப்பின் அஸ்திகளை மாத்திரமல்ல, யாக்கோபின் அஸ்திகளையும் யாக்கோபின் மக்களான பிதாப்பிதாக்களுடைய அஸ்திகளையும் அவர்கள் கொண்டுபோனதாக அப்போஸ்தலர் நடபடியென்னும் வேதாகமம் 7:15,16 வசனங்களில் எழுதியிருக்கின்றது.

20. அவர்கள் சொக்கோட்டிலிருந்து புறப் பட்டு வனாந்தரத்தின் ஓரமாயுள்ள ஏட் டா மிலே பாளையம் இறங்கினார்கள்.

21. அவர்களுக்கு வழியைக் காண்பிக்கத் தக்கதாக ஆண்டவர் பகலில் மேகஸ்தம்ப மாயும், இரவில் அக்கினி ஸ்தம்பமாயும் அவர்களுக்கு முன் சென்று இரவும் பகலும் அவர்களை நடத்தி வந்தார்.

22. பகலில் மேக ஸ்தம்பமும், இரவில் அக்கினி ஸ்தம்பமும் ஜனங்களிடத்தில் ஒரு நாளும் விலகிப்போகவில்லை.

* 22-ம் வசனம். அப்புதுமையான தூணானது பகலிலே இஸ்றாயேலியரை மறைக்கும், இராவிலே அவர்களுக்கு வழியைக் காட்டும். அதுபோல் தேவ இஷ்டப்பிரசாதம் நம்மைப் பகைவரின் முகத்தே ஆதரித்துக் கரையேறும் பாதையை நமக்குக் காட்டிவருகிறதல்லவா?