இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

எபிரேயருக்கு எழுதிய நிருபம் - அதிகாரம் 13

பிறரையும், தன்னையும் வேதத்தையும் பற்றிப் பற்பல புத்திமதிகளைச் சொல்லி நிருபத்தை முடிக்கிறார்.

1. சகோதர அன்பு உங்களில் நிலைத் திருப்பதாக.

2. அந்நியரை உபசரிக்க மறவாதிருங் கள். அதனாலே சிலர் தாங்கள் அறியாம லே தேவதூதர்களை உபசரித்தது உண்டு. (உரோ. 12:13; 1 இரா. 4:9; ஆதி. 18:3.)

3. விலங்கிடப்பட்டவர்களுடனே கூட நீங்களும் விலங்கிடப்பட்டவர்கள் போல், அவர்களை நினைத்துக் கொள் ளுங்கள். நீங்களும் ஒரு சரீரத்தோடிருக் கிறீர்களென்று எண்ணி, துன்பப்படு கிறவர்களையும் (மறவாதேயுங்கள்).

4. யாவருக்குள்ளும் விவாகமானது சங்கைக்குரியதாயும், விவாகமஞ்சமானது அசுசிப்படாததாயும் இருப்பதாக. காமாதுரர்களையும் விபசாரரையும் தெய்வம் நடுத்தீர்க்கும்.

5. உங்கள் ஒழுக்கம் பேராசையின்றி, உள்ளது போதுமென்று இருக்கட்டும். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவரே சொல்லி யிருக்கிறார். (ஜோசு. 1:5.)

6. ஆகையால், ஆண்டவரே எனக்கு உதவி; மனிதன் எனக்கு என்ன செய்வானோவென்று பயப்படமாட்டேன் என்று நாம் நம்பிக்கையோடு சொல்லலாமே. (சங். 117:6.)

7. உங்களுக்குத் தேவ வாக்கியத்தைப் போதித்து, உங்களுக்கு ஞான வழி காட்டினவர்களை நினைவுகூருங்கள். அவர்களுடைய நடக்கையின் முடிவை உற்றுப்பார்த்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்.

8. சேசுக்கிறீஸ்துநாதர் நேற்றும் இருந்தவர்; இன்றும் இருக்கிறவர். அவரே என்றும் இருப்பவர்.

9. விபரீதமும், நூதனமுமான போத கங்களால் இழுபட்டுப்போகவேண்டாம்; ஏனெனில் இருதயத்தைப் போஜனங் களால் அல்ல, இஷ்டப்பிரசாதத்தால் உறுதிப்படுத்துவது உத்தமம். போஜன வித்தியாசம் பார்த்து நடந்தவர்களுக்கு அதனாலே ஒரு பலனுமாகவில்லை.

* 9. உங்களுக்குப் போதிக்கப்பட்ட சுவிசேஷத்தில் ஸ்திரமாய் நிலைத்திருந்து, நூதனமும் விபரீதமுமான பதிதத் துர்ப்போதனைகளால் மயங்கிக் கெடாதபடி எச்சரிக்கையாயிருங்கள். விசேஷமாய்ப் பழைய ஏற்பாட்டின் ஆசாரப்படி பலியிடப்பட்ட போஜன பதார்த்தங்களின்மேல் நீங்கள் விசுவாசப்பற்றுதல் வைக்காமல், இஷ்டப்பிரசாதத்தின்மேலும், இருதயப் பரிசுத்ததனத்திலும் பற்றுதல் வைப்பீர்களாக. அந்தப் பதார்த்தங்களைப் புசித்த யூதர்கள் அதனால் யாதொரு பிரயோஜனத்தையும் அடையவில்லை. ஆகிலும் ஒரு பலிபீடமும் பலியிடப்பட்ட தேவநற்கருணையாகிற போஜனமும் நமக்கு உண்டு. அந்தப் போஜனத்தினால் நம்முடைய இருதயம் தேவ இஷ்டப்பிரசாதத்தில் பலப்படுகிறது. ஆனால் பழைய ஏற்பாட்டை அநுசரிக்கவேணுமென்கிறவர்கள் இந்தத் திவ்விய போஜனத்தைப் புசிக்கக்கூடாதென்று அர்த்தமாம்.

10. நமக்கு ஒரு பலிபீடமுண்டு. அதிலுள்ளவைகளைப் புசிப்பதற்குப் (பழைய) ஏற்பாட்டின் கூடாரத்துக்கு ஊழியஞ்செய்கிறவர்களுக்குச் சுதந்தரமில்லை.

11. ஏனெனில் எந்த மிருகங்களின் இரத்தம் பாவப் பரிகாரமாக பிரதான குருப்பிரசாதியினால் பரிசுத்த ஸ்தலத்துக்குள் கொண்டுவரப்படுகிறதோ, அந்த மிருகங்களின் உடல்கள் பாளையத்துக்குப் புறம்பே சுட்டெரிக்கப் படுகின்றன. (லேவி. 16:27.)

12. அதனிமித்தம் சேசுநாதரும் தம் முடைய இரத்தத்தைக்கொண்டு ஜனங் களை அர்ச்சிக்கும்படி பட்டணத்தின் வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்.

13. ஆதலால் நாம் அவருடைய நிந்தையைச் சுமந்துகொண்டு, பாளையத்துக்குப் புறம்பே அவரிடம் புறப்பட்டுப் போவோமாக.

* 13. வருத்தம், கஸ்தி, உபத்திரவம் ஆகிய சிலுவையைச் சுமந்துகொண்டு நாம் கிறீஸ்துநாதரிடம் செல்லவேண்டுமென்று நமக்கு இவ்வசனத்தில் கற்பிக்கப்படுகிறது.

14. ஏனெனில் நமக்கு இங்கே நிலை பெற்ற பட்டணமில்லை. இனி வரும் பட்டணத்தையே நாடிப்போகிறோம். (மிக். 2:10.)

15. ஆகையால் அவரைக்கொண்டு தேவநாமத்தை ஸ்துதித்து வெளியாக்குகிற உதடுகளின் கனியாகிய தேவ தோத்திரப் பலியை எந்நாளும் சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுப்போமாக.

16. இதன்றியே தர்மஞ்செய்வதையும், உங்களுக்கு உள்ளதை நிரந்து கொள்வதையும் மறவாதிருங்கள். ஏனெனில் இப்படிப்பட்ட பலிகளால் தெய்வ சனுவை அடைகிறோம்.

17. உங்கள் ஞான வழிகாட்டிகளுக் குப் பணிந்து அடங்கி நடங்கள். ஏனெ னில் அவர்கள் உங்கள் ஆத்துமங்களுக் காக உத்தரவாதம் பண்ணவேண்டி யவர்களாகக்கொள்ள, உங்கள்மேல் விழிப்பாயிருக்கிறார்கள். அவர்கள் அதைச் சந்தோஷத்தோடேயன்றி ஆயா சத்தோடு செய்யவிடாதேயுங்கள். ஏனெனில் இப்படிச் செய்யவிடுவது உங்களுக்கு யோக்கியம் அல்ல.

18. எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள். ஏனெனில் எல்லாக் காரியங்களிலும் ஒழுங்காய் நடக்கவேண்டு மென்று நாம் விரும்புவதினால், நல் மனச்சாட்சியுடையவர்களாய் இருக்கிறோமென்று நிச்சயித்திருக்கிறோம். (2 கொரி. 1:12.)

19. விசேஷமாய் நான் அதிசீக்கிரத்தில் உங்களிடம் வந்து சேருவதற்காக நீங்கள் இப்படிச் செய்யவேண்டு மென்று மிகவும் வருந்திக் கேட்டுக் கொள்ளுகிறேன்.

20. கடைசியாய் நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளின் பெரிய மேய்ப்பரான நமது ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்து நாத ரை மரித்தோரினின்று எழுந்து வரச் செய்த சமாதான தேவன், (உரோ. 15:33.)

21. சேசுக்கிறீஸ்துநாதரைக் கொண்டு தமது சமுகத்திற்குப் பிரியமானதை உங்களிடத்தில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய சித்தத்தின்படி செய்ய உங்களைச் சகலவித நற்கிரியைகளுக் கும் இணக்குவாராக. சேசுக்கிறீஸ்துநாதருக்கே அநவரதகாலமும் மகிமையுண்டாவதாக. ஆமென்.

22. சகோதரரே, இந்த ஆறுதலான வார்த்தைகளை நீங்கள் பொறுமையாய் ஏற்றுக்கொள்ள உங்களை மன்றாடுகிறேன். ஏனெனில் உங்களுக்கு வெகு சுருக்கமாய் எழுதுகிறேன்.

23. சகோதரனாகிய தீமோத்தேயு விடுதலையாக்கப்பட்டாரென்று அறிந்துகொள்ளுங்கள். அவர் சீக்கிரத்தில் வந்து சேர்ந்தால், அவருடனே கூட நான் வந்து, உங்களைக் காண்பேன்.

24. உங்கள் ஞான வழிகாட்டிகள் யாவருக்கும், சமஸ்த பரிசுத்தவான்களுக்கும் மங்களஞ் சொல்லுங்கள். இத்தாலியாவிலுள்ள சகோதரர் உங்களுக்கு மங்களஞ் சொல்லுகிறார்கள்.

25. வரப்பிரசாதம் உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.


எபிரேயர் நிருபம் முற்றிற்று.