13-05-1917

1917-ம் ஆண்டு மே 13-ம் நாள் ரோமையில் பதி னைந்தாம் ஆசீர்வாதப்பர் மொன் சிஞ்ஞோர் யுஜேனி யோ பச்செல்லி என்னும் குருவானவருடைய தலைமீது தம் கரங்களை வைத்து அவரை அப்போஸ்தலர்களின் ஸ்தானாதிபதிகளில் ஒருவராக்கினார். நடுப்பகலில் திரிகால ஜெபத்துக்காக ரோமைநகர்க்கோவில் களின் மணிகள் அடிக்கப்படுகையில் திருச்சபைக்கு ஒரு புதிய மேற்றிராணியார் கொடுக்கப்பட்டார். இவர் ஒரு நாள் இராயப்பருடைய சிம்மாசனத்தி லேறி 12-ம் பத்திநாதர் என்னும் பெயருடன் திருச் சபையை ஆளும்படி நியமிக்கப்பட இருந்தவர்.

அதே நாளில் ஐரோப்பாவின் கிழக்குக் கோடி யில் ருஷ்யாவிலுள்ள மாஸ்கோவில் கத்தோலிக்க கோவில் ஒன்றில் இருநூறு சிறுவர்களுக்கு மரியா அலெக்ஸாந்திரோவ்னா என்னும் பெண் ஞானோப தேச பாடம் கற்பித்துக் கொண்டிருந்தாள். முன் வாசலருகில் பெருஞ் சத்தம் கேட்டது. குதிரை மீது வந்தவர்கள் உள்ளே நுழைந்து நற்கருணைக் கிராதிமேற் பாய்ந்து தாண்டி, பீடத்தைத் தகர்த் தெறிந்து, சுரூபங்களையெல்லாம் தவிடு பொடியாக்கி, சிறுவர்கள் மீது பாய்ந்து அவர்களிற் சிலரைக் கொன்றார்கள். வரவிருந்த பொது உடைமைப் புரட்சியின் முதல் அட்டூழியம் இது. மரியா அலெக்சாந்திரோவ்னா அச்சத்தால் கத்திக்கொண்டு வெளியேறி, புரட்சிக்காரன் ஒருவனிடம் ஓடி, நடந் ததைச் சொன்னாள். அந்தப் புரட்சிக்காரன் லெனின் தான். "நடந்தது எனக்குத் தெரியும், நான் தான் அவர்களை அனுப்பினேன்'' என லெனின் சாவதான மாகக் கூறினான்.

அதே 1917-ம் ஆண்டு மே 13-ம் நாள் ஐரோப்பா வின் மேற்குக் கோடியிலுள்ள போர்த்துக்கல் நாட் டில் லூஸி, பிரான்சிஸ், ஜஸிந்தா என்னும் சிறுவர் கள் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கையில் நடுப் பகல் திரிகால மணி அடித்தது. மூவரும் முழந் தாளிட்டு வழக்கம் போல் ஜெபமாலை ஜெபித்தார் கள். அவர்களுக்கு தேவதாய் காட்சி கொடுத்தாள். அக்டோபர் மாதம் வரை ஒவ்வொரு மாதமும் 13-ம் தேதியன்று அவர்கள் அங்கு வர வேண்டுமென்று தேவதாய் கூறினாள்.

மொத்தம் ஆறு முறை பரலோக அன்னை தோன் றினாள். 1917 ஜூலை 13-ம் நாளன்று தேவதாய் மூன் றாம் முறையாக தரிசனையானாள். அது, முதல் உலக யுத்தத்தின் மூன்றாம் ஆண்டு. "இந்த யுத்தம் முடி யப் போகிறது. நான் உங்களுக்குச் சொன்ன பிரகாரம் மக்கள் செய்வார்களானால், அநேக ஆத்துமங்கள் காப்பாற்றப்படும், சமாதானத்தை அடைவார்கள். ஆனால் மக்கள் தொடர்ந்து பாவஞ் செய்து கடவுளை மனநோகப் பண்ணுவார்களானால், அடுத்த பாப்பா னவருடைய ஆட்சியின்போது இன்னொரு அதிக பயங்கரத்துக்குரிய யுத்தம் ஆரம்பிக்கும் " என தேவ தாய் மொழிந்தாள்.

(11-ம் பத்திநாதரின் ஆட்சியில் ஸ்பெயின் நாட் டில் கொடிய யுத்தம் நடந்தது. இரண்டாம் உலக யுத்தத்தின் முன்னோடி அது. பொது உடைமையர் 14000 குருக்கள் கன்னியர் சந்நியாசிகளைக் கொன்று, பெரிதும் சிறிதுமாக 22000 கோயில்களை அழித்த னர் )

இரண்டாம் உலக யுத்தத்தையும் தேவதாய் முன் னறிவித்தாள். “காரணமறியாத ஒரு பிரகாசம் ஓரி ரவில் பிரகாசிக்கும். உலகத்தை அதன் பல அக்கிர மங்களுக்காக யுத்தத்தாலும் பஞ்சத்தாலும், வேத கலகத்தாலும் கடவுள் தண்டிக்கும் நேரம் சமீபித்து வருகிறதென அறிந்து கொள்ளுங்கள் " என மாமரி கூறினாள். அந்த வெளிச்சம் 1938-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி இரவு காணப்பட்டது. அந்த யுத்தம் வெகு பயங்கரமானதாயிருக்கும் என லூஸி முன் அறிவித்தாள்.

உலகத்தைத் தண்டிக்கப் போவதாக கடவுள் கூறும்பொழுதெல்லாம் அந்தத் தண்டனைகள் நிபந் தனையுடன் கொடுக்கப்படுகின்றன; அதாவது மக்கள் மனந்திரும்புவார்களானால் தண்டிக்கப்படமாட்டார் கள். நினிவே பட்டணம் இதற்கு நல்ல உதாரணம். "இன்னும் நாற்பது நாட்களாம், நினிவே அழிந்து போகும்'' என கடவுளுடைய தீர்க்கதரிசியான யோனாஸ் நினிவே நகரெங்கும் சென்று கூவிச்சொன் னார். பெரியோர் முதல் சிறியோர் வரை நகரவாசிகள் யாவரும் தவம் செய்தனர். தங்கள் துர் வழியினின்று திரும்பினார்கள். ஆண்டவர் அவர்களுடைய கைங்கிரி யாதிகளைக் கண்டு அவர்களுக்கு அனுப்புவதாய்க் கூறிய தீமையை அவர்கள் மேல் இரக்கங்கொண்ட வராய் அனுப்பாது விடுத்தார்.''

“மக்கள் தொடர்ந்து கடவுளை பாவத்தினால் மன நோகப் பண்ணுவார்களானால்'' பலவித தீமைகள் உலகுக்கு வரும். பாவஞ் செய்வதை நிறுத்துவார் களானால் அந்தத் தீமைகள் வராதொழியும். ஆனால் கடவுளுடைய செல்வ மக்களான கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களே தொடர்ந்து பாவம் செய்து வருகை யில் பிறமறையினரைச் சொல்ல என்ன இருக்கிறது? ஆதலின் கத்தோலிக்க மக்களே தங்கள் தலை மீது மண்ணை வாரிப்போட்டுக் கொள்கின்றனர்:

சோதோம் கொமோரா பட்டணங்களில் பத்துப் பேர் நீதிமான்களாயிருந்தால் அந்த இரு நகரங்களை யும் நாசமாக்காது காப்பாற்றுவதாக கடவுள் கூறி னார். இப்பொழுது நாசத்தை நாடிச்செல்லும் உலகத் தைக் காப்பாற்ற கத்தோலிக்கராவது தங்களை நீதி மான்களாக்க முயல வேண்டும்.

உலகமானது கடவுளை இழந்து திண்டாடுகிறது. பன்னிரண்டு வயதில் யேசுவை இழந்த போது தேவ தாயே அவரைத் தேடிக் கண்டு பிடித்தவள், இப் பொழுதும் அவளுடைய உதவி உலகுக்குத் தேவை. "பாவிகளுக்காக பரித்தியாகங்கள் செய்வீர்களாக. அடிக்கடியும் விசேஷமாக பரித்தியாகங்கள் செய்யும் போதும், 'ஓ யேசுவே, உம்மேல் நான் கொண்டுள்ள நேசத்துக்காகவும், பாவிகள் மனந்திரும்புவதற்காக வும் மரியாயின் மாசற்ற இருதயத்துக்குச் செய்யப் படும் நிந்தைகளுக்குப் பரிகாரமாகவும், எனச் சொல்லி வாருங்கள்..... யுத்த முடிவுக்காக ஜெபமாலை சொல்லி வாருங்கள். என் மன்றாட்டுப் பலனே இந்த வரத்தை மனிதருக்குப் பெற்றுக் கொடுக்கும் ......

ஜெபமாலையில் ஒவ்வொரு பத்து மணிக்குப் பின்னும் 'ஓ என் யேசுவே, எங்கள் பாவங்களை மன்னியும், நரக நெருப்பினின்று எங்களைக் காப்பாற்றும், எல்லா ஆத்துமங்களையும் விசேஷமாக உமது இரக்கம் யாருக்கு மிகத் தேவையாயிருக்கிறதோ, அவர்களை யும் மோட்சத்துக்கு இட்டுச் செல்லும்' என்னும் மன்றாட்டைச் சொல்லுங்கள் ...... தீமைகள் நீங்க வேண்டுமானால் உலகத்தை என் மாசற்ற இருதயத் துக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும். என் இருதயத் துக்கு வருவிக்கப்படும் நிந்தைகளுக்குப் பரிகாரமாக முதற் சனிக்கிழமை தோறும் பரிகாரமாக நன்மை வாங்க வேண்டும்...... நான் சொல்கிற பிரகாரம் மக் கள் செய்வார்களானால், ருஷியா மனந்திரும்பும், சமா தானம் ஏற்படும். அல்லாவிடில், ருஷியா தன் தப்ப றைகளை உலகெங்கும் பரப்பி, யுத்தங்களை எழுப்பும். திருச்சபைக்கு விரோதமாய் குழப்பங்களை உண்டாக் கும். நல்லவர்கள் துன்புறுத்தப்படுவார்கள். பாப் பானவர் வெகுவாக துன்பப்படுவார். நாடுகள் அழிக்கப்படும்''.