இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

யாத்திராகமம் - அதிகாரம் 12

வருஷத்தின் ஆரம்பம் மாற்றப்பட்டதும் - பாஸ்காப் பண்டிகை ஸ்தாபிக்கப்பட்டதும் - தலைப்பேறுகள் கொல்லப்பட்டதும் - இஸ்றாயேலியர் எஜிப்த்து தேசத்தைவிட்டுப் புறப்பட்டதும்.

1. ஆண்டவர் இன்னமும் எஜிப்த்து தேசத்திலே மோயீசனுக்கும் ஆரோனுக்கும் திருவாக்கருளிய தென்னவென்றால்:

* 1-ம் வசனம். அவர்களை எஜிப்த்து தேசத்தைவிட்டுப் புறப்படுவதற்கு முன் சுவாமி மேற்படி வாக்கியத்தைச் சொல்லியருளினார்.

2. இம்மாதமே உங்களுக்கு மாதங்களின் துவக்கமாம், இதுவே வருஷத்திய மாதங் களில் ஆதிமாதமாகும்.

* 2-ம் வசனம். அக்காலத்து இஸ்றாயேலியர் திஸ்ரி (அதாவது: புரட்டாசி) என்னும் மாதத்தை வருஷத்தின் முதல் மாதமென்று எண்ணிக்கொள்வார்கள். கர்த்தர் அதை மாற்றிப் பங்குனி மாதமான நிசாம் என்னும் மாதத்தையே வருஷத்தின் தலைமாதமாயிருக்குமென்று கட்டளையிட்டார். அதன் முகாந்தரமேதெனில், கடவுள் மனுக்குலத்தைப் படைத்ததும், தமது பிரஜையை எஜிப்த்து சிறையினின்று இரட்சித்ததும், வாக்குத்தத்தப் பூமியிலே பிரவேசிப்பித்ததும் அந்த நிசாம் மாதத்தில்தான். மறுபடியும் சேசுநாதர் சுவாமி கன்னிமரியாயின் பரிசுத்த உதரத்தில் உற்பவித்ததும், சிலுவையிலே மரணித்ததும், அந்த நிசாம் மாதமே. ஆகையால் இஸ்றாயேலியர் முந்தின தேவசகாயங்களை ஞாபகப்படுத்தும் படியாகவும், இனி நடக்கும் பரம இரகசியங்களைக் குறித்துச் சுவாமிக்குத் தோத்திரம் பண்ணும்படியாகவும் தேவன் அந்த மாற்றுதலைச் செய்தது நியாயம்.

3. நீங்கள் இஸ்றாயேல் புத்திரரின் சபை யார் யாவரையும் கூப்பிட்டுச் சொல்லுங்கள்: இம்மாதத்தின் பத்தாம் தேதியிலே குடும் பத்திற்கும் வீட்டிற்கும் ஒவ்வொருவர் ஒவ் வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்தெடுக் கக் கடவார்கள்.

4. ஆனால் ஒருவனுடைய வீட்டிலிருக்கி றவர்கள் ஆட்டுக்குட்டியைப் புசிப்பதற்குப் போதுமான பேர்களாய் இராமற்போனால் அவன் தன் வீட்டுக்கு அயலாரில் ஆட்டுக் குட்டியைப் புசிப்பதற்கு எத்தனைப் பேர் கள் இருக்கத்தக்கதோ, அந்த இலக்கத்துக் கேற்றபடி அத்தனைப் பேர்களை வரப் பண்ணுவான்.

* 4-ம் வசனம். பாஸ்காப் பண்டிகை ஆட்டுக்குட்டியைப் புசிக்கப் பத்துப் பேர் கூடிக் கொள்ளுவார்கள். சில விசை பதினைந்து பேர்கள் ஒன்றாய்ச் சேர்ந்து அதைச் சாப்பிடுவார்கள்.

5. ஆட்டுக்குட்டியோவென்றால், மாசற்ற தும், ஆண்பாலானதும் ஒருவயதுள்ளதுமா யிருக்க வேண்டியது. ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும் அந்த முறையின்படியே தெரிந்து கொள்ள வேண்டும்.

* 5-ம் வசனம். செம்மறி ஆட்டுக்குட்டி அகப்படாத பட்சத்திலே வெள்ளாட்டுக் குட்டியை அதற்குப் பதிலாக உபயோகித்துக் கொள்வதற்கு உத்தரவு கொடுக்கப் பட்டிருந்தாலும் இஸ்றாயேலியர் முக்கியமாய் செம்மறி ஆட்டுக் குட்டியையே உபயோகம் பண்ணி வருவார்கள்.

6. அதை இம்மாதத்தின் பதினான்காம் தேதிவரைக்கும் வைத்துக்கொண்டு இஸ்றா யேல் சபையின் ஒவ்வொரு கூட்டத்தாரும் சாயங்காலத்தில் அதை அறுத்து,

7. அதின் இரத்தத்தில் கொஞ்சமெடுத்து, எந்த வீட்டிலே ஆட்டைப் புசிப்பார்க ளோ அவ்வீட்டு வாசல் நிலைக்காலிரண்டி லும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளிக்க வேண்டும்.

* 7-ம் வசனம். அந்த இரத்தத்தைச் சிலுவை வடிவமாய்ப் பூசிவருவது இஸ்றாயேலியருடைய வழக்கமென்று அர்ச். எரோணிமுஸ் வசனித்திருக்கிறார்.

8. பிறகு அன்று இராத்திரியிலே அடுப் பிற் சுட்ட மாம்சங்களைக் காட்டுக் கீரைக ளோடும் புளித்திராத அப்பங்களோடும் புசிப்பார்கள். 

9. பச்சையாயும் தண்ணீரில் அவிக்கப் பட்ட மாம்சத்திலொன்றுந் தின்னாமல் அடுப் பிலே கேவலம் பொரித்த கறியைப் புசிக்க வேண்டும். (ஆட்டின்) தலை, கால், குடல் (முதலியவையெல்லாம்) புசிப்பீர்களாக.

10. அதிலே எதையும் விடியற்காலம் வரை யில் மீதியாக வைக்கவேண்டாம், சேஷம் எதாகிலும் இருக்குமேயாகில், அதை அக்கினியாற் சுட்டெரிக்கக்கடவீர்கள்.

11. அதைப் புசிக்கவேண்டிய மேரையா வது: நீங்கள் இடுப்பிலே கச்சைக் கட்டி, கால்களிலே பாதரட்சை தொடுத்தவர்களா யும், கையிலே கோலைப் பிடித்தவர்களாயும் அதைத் தீவிரமாய்ப் புசிக்கக்கடவீர்களாக. ஏனெனில் அது கர்த்தருடைய பாஸ்கா (அதாவது கர்த்தருடைய கடத்தல்.)

12. உள்ளபடி அந்த இராத்திரியிலே நாம் எஜிப்த்து தேசமெங்கும் கடந்துபோய் எஜிப்த்திலுள்ள மனுஷனாதி மிருக ஜீவன் மட்டும் தலைப்பேறாயிருப்பவை எல்லாம் அதம்பண்ணி எஜிப்த்திய தேவதைகளின் மேலே நீதியைச் செலுத்துவோம்.

* 12-ம் வசனம். எபிறேயருடைய ஐதீகப் பிரமாணப்படி மேற்சொல்லிய இராத்திரி யிலே எஜிப்த்தியர் ஆராதனை செய்யும் விக்கிரகங்களெல்லாம் குப்புற விழுந்தனவென்று அர்ச். எரோணிமுஸ் எழுதி வைத்தார்.

13. நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாயிரு க்கும். அந்த இரத்தத்தைக் காணவே உங்களை நாம் கடந்துபோவோம்; இப்படி நாம் எஜிப்த்து தேசத்தைத் தண்டிக்கும்போது அழிக்கும் வாதை உங்களுக்குள் வராதிரு க்கும்.

14. நீங்களோ அந்நாளை ஞாபகப்படுத்த வேண்டிய நாளாக வைத்துக்கொண்டு அதை உங்கள் தலைமுறைதோறும் ஆண்டவருடைய திருவிழாவென்று என்றைக்கும் கொண்டாடி ஆசரிக்கக்கடவீர்கள்.

15. (அது எவ்விதமென்றால்,) புளிப்பில் லா அப்பங்களை ஏழுநாள் அளவும் புசிப் பீர்கள். முதலாந் தினத்தில் புளித்த மாவு வீட்டிலே இருக்கப்படாது. முதலாம் நாள் தொடங்கி ஏழாம் நாள் மட்டும் புளித்த அப்பந் தின்பவன் எவனோ, அவன் ஆத்து மம் இஸ்றாயேலில் இருந்து அறுப்புண்டு போகும்.

16. முதலாம் நாள் பரிசுத்த நாளும் சிறப் பாய்க் கொண்டாடவேண்டிய திருவிழா வாகும். ஏழாம் நாளும் அதே பிரகாரம் வணக் கத்துக்குரியதாயிருக்கும். அவைகளில் ஒரு வேலையுஞ் செய்யலாகாது. நீங்கள் சாப்பிடு வதற்குத் தேவையான வேலை மாத்திரஞ் செய்யலாம்.

17. புளிப்பில்லா அப்பத்தின் அந்தப் பண்டிகையை ஆசரிப்பீர்களாக. ஏனென் றால், அந்த நாளில் தானே நாம் உங்கள் சேனையை எஜிப்த்து தேசத்தினின்று புறப் படப்பண்ணுவோம். நீங்களும் உங்கள் தலை முறைகள் தோறும் நித்திய நியம நிஷ்டை யாய் அந்த நாளை ஆசரிக்கக்கடவீர்கள்.

18. (அதாவது) முதலாம் மாதத்திலே (அம்) மாதத்தின் பதினாலாம் நாளிலே சாயங்காலந் துவக்கி மேற்படி மாதத்திலே இருபத்தோராம் தேதி சாயந்தரம் வரைக்கும் புளியா அப்பத்தைப் புசிப்பீர்கள்.

19. ஏழுநாளளவும் புளிப்பானது உங்கள் வீடுகளில் இல்லாதிருக்கக்கடவது; அந்நிய ரிலாவது சுதேசத்தாரிலாவது எவனாகிலும் புளிப்பானதைச் சாப்பிட்டிருப்பானோ அவன் ஆத்மா இஸ்றாயேல் சபையினின்று அறுப்புண்டு போகும்.

20. நீங்கள் புளித்ததில் யாதொன்றை யும் சாப்பிடாமல் உங்கள் எல்லா வீடுகளி லும் புளிப்பில்லாத அப்பத்தைப் புசிப்பீர் கள் (என்றருளினார்.)

21. மோயீசனோவெனில், இஸ்றாயேல் புத்திரரில் பெரியோர்களான யாவரையும் வரவழைத்து: நீங்கள் ஒவ்வொருவரும் போய் உங்கள் குடும்பத்திற்குத் தக்காற்போல் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்தெடுத் துக்கொண்டு பாஸ்காவைப் பலியிடுங்கள்.

22. பின்பு ஈசோப்புக் கொழுந்துக் கொ த்து எடுத்து அதை வாசற்படிக் கிண்ணியி லுள்ள இரத்தத்திலே தோய்த்து வாசல் நிலைக்கால்களின் மேற்சட்டத்திலும் நிலைக் கால்கள் இரண்டிலுந் தெளியுங்கள். விடியற் காலமட்டும் உங்களிலொருவரும் வீட்டு வாசலைக் கடக்கப்படாது.

23. ஏனெனில், கர்த்தர் எஜிப்த்தியரைச் சங்கரிப்பதற்குக் கடந்துவருங்கால், கதவு நிலை யின் மேற்சட்டத்திலும் நிலைக்கால்களிரண் டிலும் இரத்தமிருப்பதைக் காணும்போது சங்கரிப்போனை உங்கள் வீடுகளிலே பிரவே சித்து உங்களை அதம்பண்ணவொட் டாமல் வாசற்படியை விலகித் தாண்டிப்போவார்.

* 23-ம் வசனம். பாஸ்கா ஆட்டுக்குட்டி சேசுநாதருடைய அடையாளமாயிருந்தது.

24. இவ்வாக்கியத்தை உனக்கும் உன் புத்திரருக்கும் நித்தியப் பிரமாணமாகக் கைக் கொள்ளக்கடவாய்.

25. பின்னரும் ஆண்டவர் தாம் சொல்லி யபடி உங்களுக்குக் கொடுக்கப்போகிற தே சத்திலே நீங்கள் போய்ச் சேர்ந்தபோது மேற்படி நியம நிஷ்டைகளை ஆசரிக்கக் கட வீர்கள். 

26. அப்போது உங்கள் பிள்ளைகள் இவ் வித வேதாசாரத்தின் அர்த்தமென்ன என்று உங்களை வினாவுங் காலத்தில்,

27. நீங்கள் இது ஆண்டவருடைய கடத் தற்குரிய பலியாம், அவர் எஜிப்த்தியரைச் சங்கரித்தபோது, எஜிப்த்திலுள்ள இஸ்றாயேல் புத்திரரின் வீடுகளைத் தாண்டிப் போய் நமது வீடுகளை இரட்சித்தருளினார் என்று அவர்கட்குச் சொல்லுவீர்கள் என்றான். (இதைக்கேட்டு) ஜனங்கன் தலைவணங்கி நமஸ்காரஞ் செய்தனர்.

28. இஸ்றாயேல் புத்திரர்கள் போய் மோயீசனுக்கும் ஆரோனுக்கும் கர்த்தர் கட் டளையிட்டிருந்தபடி செய்தார்கள்.

29. பிறகு சம்பவித்த தென்னவென்றால், நடுராத்திரியிலே சிம்மாசனத்தின்மேல் வீற் றிருந்த பரவோனுடைய தலைச்சன்பிள்ளை முதல் சிறைச்சாலையில் அடைப்பட்ட அடி மைப்பெண்ணுடைய தலைப்பிள்ளை வரைக் கும், எஜிப்த்து தேசத்திலிருந்த முதல் பே றனைத்தையும் மிருக ஜீவன் தலையீற் றனைத் தையும் கர்த்தர் அதம்பண்ணினார்.

30. பரவோனும் அவனுடைய சமஸ்த ஊழியர்களும் எஜிப்த்தியர் யாவரும் இராத் திரியில் எழுந்திருந்தார்கள். எஜிப்த்தில் மகா கூக்குரலுண்டாயிற்று, ஏனெனில் சாவில் லாத ஒரு வீடுமில்லை.

31. இராத்திரியிலே பரவோன் மோயீச னையும் ஆரோனையும் வரவழைத்து: நீங்க ளும் இஸ்றாயேல் புத்திரர்களும் எழுந்தி ருந்து என் ஜனங்களை விட்டுப் புறப்பட்டுப் போய், நீங்கள் சொன்னபடி கர்த்தருக்குப் பலியிடுங்கள்.

32. நீங்கள் கேட்டிருந்தபடி உங்கள் ஆடு களையும் மாடுகளையும் ஓட்டிக் கொண்டு புறப்பட்டுப்போங்கள், என்னையும் ஆசீர் வதியுங்கள் என்றான்.

33. எஜிப்த்தியர்களோ: நாங்கள் எல்லோ ரும் சாகப் போகிறோமேயென்று சொல்லி சீக்கிரமாய்த் தேசத்திலிருந்து இஸ்றாயேல் ஜனங்கள் புறப்பட்டு தேசத்தை விடும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார்கள்.

34. ஆகையால் அவர்கள் பிசைந்த மா புளி க்குமுன் எடுத்து, அதைத் தங்கள் போர் வைகளில் கட்டித் தங்கள் தோள்மேல் சுமந்து கொண்டார்கள்.

35. மோயீசன் கற்பித்திருந்தபடி செய்து இஸ்றாயேல் புத்திரர்கள் எஜிப்த்தியரிடத் திலே பொன் உடைமைகளையும், வெள்ளி உடைமைகளையும் பற்பல வஸ்திரங்களையும் கேட்டுக் கொண்டார்கள்.

36. கர்த்தர் அவர்களுக்கு எஜிப்த்தியரு டைய கண்களில் தயவுகிடைக்கச் செய்த மையால் அவர்கள் கேட்டதை இவர்கள் கொடுக்க இஸ்றாயேலியர் எஜிப்த்தியரைக் கொள்ளையிட்டார்கள்.

* 36-ம் வசனம். (3:22-ம் வசனத்திற்குரிய விளக்கத்தைக் காண்க.) சகலத்துக்கும் ஆதி கர்த்தரும் சர்வ வல்ல எஜமானுமாயிருக்கிற கடவுள் மனிதருடைய மனதுகளைத் திருப்பவும் மாற்றவும் வல்லமையுள்ளவர்.

37. இஸ்றாயேல் புத்திரர் இராமசேசை விட்டுச் சொக்கோட்டுக்குப் போனார்கள். அவர்கள் பிள்ளைகளை எண்ணாமல் சுமார் ஆறு லட்சம் பதாதி வீரர்களாயிருந்தார்கள்.

38. கணக்கிலடங்காத பல ஜாதியான ஜனங்கள் அநேகர் அவர்களோடே புறப்பட் டுப் போனதுமன்றி மிகுதியான ஆடுமாடுகளும் நானாவகைப்பட்ட ஜீவஜெந்துக்களும் போயிற்று.

39. எஜிப்த்திலிருந்து அவர்கள் கொண்டு வந்த பிசைந்த மாவைப் புளிப்பில்லாத அப்பங்களாகச் சாம்பலுக்குள்ளே போட் டுச் சுட்டார்கள். அவைகள் புளியாத அப்பங் களாயிருந்தன. ஏனெனில் எஜிப்த்தியர் அவர்களைத் தாமதிக்கவொட்டாமல் சீக்கிர மாய்ப் புறப்பட்டுப் போகக் கட்டாயப் படுத் தினதினாலே அவர்கள் தங்களுக்கு வழிக் கென்று ஒன்றும் ஆயத்தம் பண்ணவில்லை.

40. இஸ்றாயேல் புத்திரர் எஜிப்த்திலே குடியேறி வசித்த காலம் நானூற்று முப்பது வருஷம்.

41. அந்த நானூற்று முப்பது வருஷம் முடிந்த அன்றைய தினமே ஆண்டவருடைய சேனைகளெல்லாம் எஜிப்த்து தேசத்திலிருந்து புறப்பட்டன.

42. கர்த்தர் அவர்களை எஜிப்த்து தேசத் தினின்று அப்புறப்படுத்திய அந்த இராத் திரி கடன்திருநாளாயிற்று; இஸ்றாயேல் புத்திரர் எல்லாருந் தலைமுறைகள்தோறும் ஆசரிக்கக்கடவார்கள்.

43. கர்த்தர் இன்னமும் மோயீசனுக்கும் ஆரோனுக்கும் திருவாக்கருளி: பாஸ்காவின் சட்டதிட்டமாவது: அந்நியரிலொருவனும் அதைப் புசிக்கவேண்டாம்.

* 43-ம் வசனம். ஆண்டவர் எப்போது அவைகளை வசனித்தாரென்று கேட்கில், இஸ்றா யேலியர் எஜிப்த்தை விட்டுப் புறப்பட்ட கொஞ்ச காலத்தின் பின் என்று அறிக.

44. ஆனால் விலைக்குக் கொள்ளப்பட்ட அடிமையானவன் எவனும் விருத்தசேதனம் செய்யப்பட்ட பிறகு அதைப் புசிக்கலாம்.

45. அந்நியனுங் கூலியாளும் அதைப் புசிக்க வேண்டாம்.

46. அதை ஒரு வீட்டுக்குள்ளே புசிக்க வேண்டியதொழிய அந்த மாமிசத்தில் கொஞ்சமேனும் வீட்டிலிருந்து வெளியே கொண்டு போகவொண்ணாது. அதில் ஒரு எலும்பையும் முறிக்கக்கூடாது.

47. இஸ்றாயேல் புத்திர சபையார் எல் லோரும் அதை ஆசரிக்கக்கடவார்கள்.

48. அந்நியன் ஒருவன் உங்களிடத்தில் வந்து குடியேற மனதாகிப் பாஸ்காவை ஆசரிக்கக் கேட்டால் முந்த முந்த அவனைச் சேர்ந்த ஆண்களெல்லாம் விருத்தசேதனம் பண்ணப்படுவார்கள், பிறகு அவன் (அதைச்) சட்டப்படி கொண்டாடக்கடவான். அவன் அப்போது சுதேசியைப்போலிருப்பான், ஆனால் விருத்தசேதனமில்லாத எவனாகிலும் அதில் புசிக்க வேண்டாம்.

49. உங்களிடத்தில் வந்து குடியேறின பரதேசிக்கும் சுதேசிக்கும் ஒரே பிரமாணமிருக்கும் (என்றார்.)

50. கர்த்தர் மோயீசனுக்கும் ஆரோனுக்கும் கற்பித்திருந்தபடியே இஸ்றாயேல் புத்திரர் எல்லோரும் செய்தார்கள்.

51. கர்த்தர் அன்றையதினமே இஸ்றாயேல் புத்திரர் எல்லோரையும் அணியணியாக எஜிப்த்து தேசத்திலிருந்து புறப்படச் செய்தனர்.