இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

யாத்திராகமம் - அதிகாரம் 11

எஜிப்த்தியரின் தலைச்சன் பிள்ளைகள் கொல்லப்படுமென்று மோயீசன் பரவோனைப் பயமுறுத்தினது.

1. பின்னும் கர்த்தர் மோயீசனை நோக்கி: நாம் இன்னும் ஒரு வாதையைப் பரவோன் மேலும் எஜிப்த்தின்மேலும் வரப்பண்ணுவோம், அப்புறம் அவன் உங்களை இவ்விடமிருந்து போகவிடுவதன்னியில் உங்களைத் துரத்தியும் விடுவான்.

2. ஆகையால் நீ பிரஜைகளையெல்லாம் நோக்கி: ஒவ்வொரு புருஷனும் அவனவன் மித்திரனிடத்திலும், ஒவ்வொரு ஸ்திரீயும் அவளவள் அயலாளிடத்திலும் பொன் வெள்ளி உடமைகளைக் கேட்டுக்கொள்ளும்படி சொல்லு.

* 2-ம் வசனம். (3:22-ம் வசனத்திற்குரிய விளக்கத்தைக் காண்கவும்.) வருகிற அதிகாரத்தில் 35, 36-ம் வசனங்களிலுள்ள வர்த்தமானங்களை வாசிக்கும்போது அந்த விளக்கத்தை மறவாதிருக்கவேண்டியது.

3. அவ்விதமே எஜிப்த்தியரின் கண்களிலே ஜனங்களுக்குத் தயவு கிடைக்கும்படி கர்த்தர் செய்தருளுவார். உள்ளபடி எஜிப்த்து தேசத்தில் பரவோன் ஊழியர்களின் பார்வைக்கும் சர்வ ஜனங்களின் பார்வைக்கும் மோயீசன் மிகவும் மகா புருஷனக எண்ணப் பட்டிருந்தான்.

4. அப்பொழுது மோயீசன் (பரவோனை நோக்கி): ஆண்டவர் சொல்லுகிறதேதெனில்: நடுராத்திரியிலே நாம் எஜிப்த்து தேசத்தைச் சந்திக்க வருவோம். 

5. அப்பொழுது சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும் பரவோனின் தலைச்சன் பிள்ளைமுதல் எந்திரக்கல்லைச் சுழற்றிவிடும் அடிமைப்பெண்ணுடைய தலைப்பிள்ளை வரைக்கும் எஜிப்த்து தேசத்திலிருக்கிற முதற் பேறனைத்தும் மிருக ஜெந்துக்களின் தலையீற் றனைத்துமே சாகும்.

6. அதினால் எஜிப்த்து நாடெங்கும் முன்னும் பின்னும் இல்லாத பெருங்கூக்குரல் உண்டாகும். 

7. ஆனாலும் இஸ்றாயேல் புத்திரர் அனைவருக்குள் மனிதர் முதல் மிருக ஜீவன் வரைக்கும் ஒரு நாயும் முதலாய்க் குலைப்பதில்லை. அவ்வித அபூர்வ அடையாளத்தினாலே கர்த்தர் எஜிப்த்தியருக்கும் இஸ்றாயேலியருக்கும் வித்தியாசம் உண்டு பண்ணுகிறாரென்று நீங்கள் அறிவீர்கள்.

* 7-ம் வசனம். இது எபிறேய பாஷையில் வழங்கிய ஒரு பழமொழியாம்; இதின் அர்த்தமென்னவென்றால், இஸ்றாயேலியர் தங்கள் மட்டிலும், தங்களுக்குச் சொந்தமானவைகளின் மட்டிலும், யாதொரு கவலையும் நஷ்டமும்படாமல் அமரிக்கையாயும் சுகஜீவியர்களாயும் இருப்பார்கள் என்பதே.

8. அப்போது உம்முடைய ஊழியராகிய இவர்களெல்லோரும் என்னிடம் வந்து பணி ந்து நீயும் உனக்குக் கீழ்ப்படுகிறவர்கள் யா வரும் புறப்பட்டுப் போங்களென்று சொல் லுவார்கள். அதின் பிறகுதானே நாங்கள் புறப்படுவோமென்று சொல்லி,

9. உக்கிரமமான கோபத்தோடே மோ யீசன் பரவோனை விட்டுப் புறப்பட்டான். அப்போது கர்த்தர் மோயீசனை நோக்கி: எஜிப்த்து தேசத்தில் இன்னும் அனேகப் புது மைகள் நடக்கும்படியல்லோ பரவோன் உங்கள் விண்ணப்பத்திற்குச் செவிகொடுக்க மாட்டான் என்றார்.

10. மோயீசனும் ஆரோனும் எழுதப்பட்ட மேற்படி அற்புதங்களையெல்லாம் பரவோனுக்கு முன்பாகச் செய்தார்கள். ஆனால் கர்த்தர் பரவோனுடைய மனதைக் கடினப்படுத்தினமையால் அவன் இஸ்றாயேலியரைத் தேசத்தை விட்டுப் போகும்படி உத்தரவு கொடுக்கவில்லை.