இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

எபிரேயருக்கு எழுதிய நிருபம் - அதிகாரம் 11

விசுவாசமானது என்னவென்று சொல்லி, விசுவாசத்தினால் பிதாப்பிதாக்கள் செய்த அதிசயமான கிரியைகளையும் பட்ட பாடுகளையும் வர்ணிக்கிறார்.

1. விசுவாசமானது நாம் நம்பிக் காத்திருக்கவேண்டியவைகளின் அடிநிலையும், காணப்படாதவைகளின் நிச்சயிப்புமாயிருக்கின்றது.

2. இந்த விசுவாசத்தின் நிமித்தம் நமது முன்னோர்கள் நற்சாட்சியம் பெற்றார்கள்.

3. விசுவாசத்தினாலே காணப்படாத வைகள் காணப்பட்டவைகளாகும்படி, சர்வேசுரனுடைய வார்த்தையினாலே உலகங்கள் அமைக்கப்பட்டனவென்றும், அதரிசனமானவைகள் தரிசனமாயிற் றென்றும் விசுவாசத்தினால் அறிகிறோம்.

4. ஆபேல் தன் விசுவாசத்தினாலே காயீனுடைய பலியிலும் அதிக மேன்மை யான பலியைச் சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுத்தார். சர்வேசுரன் அவருடைய காணிக்கைகளைக் குறித்துச் சாட்சி கொடுத்ததினாலே அவர் தன் விசுவா சத்தினால் நீதிமான் ஆனாரென்று நற் சாட்சியம் பெற்றார். அவர் மரித்திருந் தும், அவருடைய விசுவாசத்தின் வழி யாய் இன்னும் பேசுகிறார். (ஆதி. 1:4; 4:4-8; மத். 23:35.)

* 4. ஆபேலும் ஆபேலைப்போல் விசுவாசத்தோடே மரித்த சகலமான அர்ச்சியசிஷ்ட வர்களும் உலகத்துக்கு மரித்தாலும், சர்வேசுரனிடத்தில் ஜீவியர்களாயிருந்து, தங்கள் சுகிர்த மாதிரிகையினாலே மனிதர்களுக்கு இன்னும் பேசுகிறாப்போல் படிப்பினையாய் இருக்கிறார்கள். மேலும் ஆபேலுடைய இரத்தம் ஆண்டவரைநோக்கிப் பழியென்று கூப்பிட்டதினால், பாவிகளுக்குப் பயமுறுத்திப் பேசுகிறதுபோலிருக்கிறது.

5. விசுவாசத்தினாலே ஏனோக்கென்பவர் மரணத்தைக் காணாதபடி எடுத்துக்கொள்ளப்பட்டார். சர்வேசுரன் அவரை எடுத்துக்கொண்டதினாலே கண்ணுக்குத் தெரியாமற் போனார். ஏனெனில் அவர் எடுபடுவதற்கு முன்னமே கடவுளுக்கு உகந்தவரென்று நற்சாட்சியம் பெற்றிருந்தார். (ஆதி. 5:24; சர்வப். 44:16.)

6. விசுவாசமில்லாமல் சர்வேசுரனுக் குப் பிரியப்படவே முடியாது. ஏனெனில் சர்வேசுரனை அண்டிப் போகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பதிலளிக்கிறவ ரென்றும் விசுவசிக்கவேண்டும்.

7. விசுவாசத்தினாலே நோவா என்பவர் தான் இன்னும் காணாதவைகளைக் குறித்து எச்சரிக்கப்பட்டு, பயத்தோடே தன் குடும்பத்தின் இரட்சணி யத்துக்காக ஒரு பேழையைச் செய்து, அத்தாலே உலகத்தைக் குற்றமுள்ள தென்று தீர்த்ததுமன்றி, விசுவாசத்தி னால் உண்டாகிற நீதிக்குச் சுதந்தர வாளியாக ஏற்படுத்தவும்பட்டார். (ஆதி. 6:14; சர்வப். 44:17.)

* 7. காணாதவைகளேதெனில், ஜலப்பிரளயந்தான். அதைப்பற்றி அவருக்கு அறிவிக்கப் படுகிறதுபோது அது வர இன்னும் 100-வருஷகாலமிருந்தது. அப்படியே அது வருமென்று விசுவசித்து ஆயத்தம்பண்ணினார்.

8. அபிரகாமென்று அழைக்கப்பட் டவர் தான் சுதந்தரமாகப் பெற்றுக் கொள்ளவேண்டியிருந்த ஸ்தலத்துக்குப் போகும்படி விசுவாசத்தினாலே கீழ்ப் படிந்து, தான் போகிற இடம் இன்ன தென்று அறியாமல் புறப்பட்டுப் போ னார். (ஆதி. 12:1-4; சர்வப். 44:20-23.)

9. விசுவாசத்தினாலே அவர் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திலே அந்நியதேசத்தில் இருந்தாற்போல் சஞ்சரித்து, அந்த வாக்குத்தத்தத்துக்கு உடன்சுதந்தரராகிய ஈசாக்கோடும் யாக்கோபோடும் குடிசைகளிலே குடி யிருந்தார்.

10. ஏனெனில் ஸ்திரமான அஸ்திவாரத்தோடே சர்வேசுரனாலே உற்பத்தியாக்கப்பட்ட நகரத்துக்காக அவர் காத்திருந்தார்.

* 10. சர்வேசுரனாலே கட்டப்பட்ட மோட்சமாகிய பரம ஜெருசலேமுக்குச் சேருவோ மென்று விசுவசித்து அபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்கள் இவ்வுலகத்திலே வீடுகளையும் பட்டணங்களையுங் கட்டாமல், அந்நியரைப்போலவும் வழிப்போக்கரைப் போலவும் கூடாரங்களில் சஞ்சரித்துவந்தார்கள்.

11. மலடியான சாராள் தனக்கு வயது காலமாய்விட்டாலும், கர்ப்பந் தரிக்கும்படியான சக்தியை விசுவாசத் தினாலே பெற்றுக்கொண்டாள். ஏனெ னில் வாக்குத்தத்தஞ்செய்தவர் பிர மாணிக்கமுள்ளவரென்று விசுவசித் தாள். (ஆதி. 17:19: 21:2.)

12. அப்படியே செத்தாற்போலிருந்த ஒருவரிடத்திலிருந்து வான நட்சத்திரங் களைப்போல் ஏராளமாகவும் கடற்கரை மணலைப்போல் எண்ணிறந்தவர்களாகவும் பிள்ளைகள் உற்பத்தியானார்கள். (உரோ. 4:19; ஆதி.15:5.)

* 12. அபிரகாமென்பவர் வயதுசென்று, புத்திரசந்தானம் உண்டாவதற்குக் காலங்கடந்துபோய், சாவுக்குக் கிட்டினவராயிருக்கையில்: உனக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்குமென்று சர்வேசுரன் அவருக்குச் செய்த வார்த்தைப்பாட்டை விசுவசித்து, வானத்தின் நட்சத்திரங்களுக்கும் கடற்கரை மணலுக்கும் ஒப்பாக எண்ணில்லாத புத்திரர்களுக்குத் தகப்பனானார். அந்தப் புத்திரர்கள் இஸ்ராயேல் புத்திரர்மாத்திரமல்ல, அவரைப்போல மெய்விசுவாத்தைக் கொண்டிருக்கிற சகலமான விசுவாசிகளும் அவருக்குப் புத்திரர்களென்று அறியவும்.

13. இவர்கள் எல்லாரும் வாக்குத்தத்தங்களை அடைந்துகொள்ளாமல், அவைகளைத் தூரத்தில் கண்டு வாழ்த்தி, தாங்கள் பூலோகத்திலே பரதேசிகளும் அந்நியருமென்று வெளிப்படுத்தி விசு வாசத்தோடு மரித்தார்கள்.

14. இப்படி வெளிப்படுத்துகிறவர்கள் தங்கள் சுயதேசத்தை நாடிப்போகிறதாகத் தெரியப்படுத்துகிறார்களே.

15. தாங்கள் விட்டுவந்த தேசத்தின் பேரிலே அவர்களுக்கு எண்ணமுண்டா யிருந்ததானால், அவ்விடத்திற்குத் திரும் பிப் போவதற்கு அவர்களுக்குக் கால மிருந்ததே.

16. ஆனால் அவர்கள் நாடினது மேலான தேசமாகிய பரலோகமல்லோ. அதைப்பற்றிக் கடவுளும் தாம் அவர்க ளுடைய கடவுளென்று அழைக்கப்படக் கூச்சப்படவில்லை. ஏனெனில் அவரே அவர்களுக்கு ஓர் நகரத்தை ஆயத்தம் பண்ணினார்.

* 16. பிதாப்பிதாக்கள் வாக்குத்தத்த பூமியாகிய மோட்சபாக்கியத்தை மரித்தவுடனே அடைந்துகொள்ளவில்லை. சேசுநாதர் மரித்து உயிர்த்துப் பரலோகத்திற்கு எழுந்தருளும்போது அவர்களுக்கு மோட்சத்தைத் திறந்தார். ஆனால் அவர்கள் அதை விசுவாசமென்கிற கண்ணாலே தூரத்தில் நின்ற தரிசித்தாற்போல் அந்தப் பார்வை யால் அகமகிழ்ந்து, அதை ஆசித்து அழைத்து, இப்பூவுலகத்தில் தாங்கள் பரதேசிக ளென்றும், வழிப்போக்கரென்றுஞ் சொல்லிக்கொண்டு வந்தார்கள். ஆனால் தங்களை வழிப்போக்கரென்று சொல்லுகிறவர்கள் தங்கள் சொந்த தேசத்தை நாடுகிறவர்களென் றல்லோ சொல்லவேண்டும். அப்படியிருக்க, அவர்கள் நாடினது எந்தத் தேசம்? அவர்கள் விட்டுவந்த கானான் தேசமோ? அல்ல. ஏனெனில், அதன்மேல் அவர்களுக்கு நாட்டமா யிருந்தால், தங்கள் ஆயுசுகாலத்திலே அவ்விடத்திற்குத் திரும்பிப் போயிருக்கலாமே. ஆனால் அவர்கள் விசுவாசத்தினாலே மோட்சத்தின்மேல் நாட்டமாயிருந்தார்கள். ஆகையால் சர்வே சுரனும் தம்மை அபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுடைய தேவனென்று சொல்லக் கூச்சப்படா திருந்ததுந்தவிர அவர்களுக்கும் அவர்கள் விசுவாசத்தைப் பின்சென்று நடக்கும் அவர்களு டைய புத்திரர்களுக்கும் பரம ஜெருசலேமாகிய மோட்ச நகரத்தை ஆயத்தம்பண்ணினார்.

17. அபிரகாம் சோதிக்கப்பட்ட போது விசுவாசத்தினாலே ஈசாக்கைப் பலியிட்டார். (ஆதி. 22:1; சர்வப். 44:21.)

18. ஆனால் ஈசாக்கினாலே உனக்குச் சந்ததி உண்டாகுமென்று அவருக்குச் சொல்லப்பட்டிருந்ததே. வாக்குத்தத்தத் தைப் பெற்றிருந்த அந்த ஏக புத்திர னையே அவர் ஒப்புக்கொடுத்தார். (ஆதி. 21:12; உரோ. 9:7.)

19. ஆகையால் அவரைச் சர்வேசுரன் மரித்தோரினின்று உயிர்ப்பிக்க வல்லவரென்று அவர் எண்ணியிருந்தார். அப்படியே அவரை ஒரு உவமானமாகவும் பெற்றுக்கொண்டார்.

* 19. ஈசாக்கின் வழியாய் தமக்குச் சந்ததியுண்டாகுமென்று அபிரகாம் சர்வே சுரனாலே வாக்குத்தத்தம் பெற்றிருந்தாலும், செத்தவனைமுதலாய்ச் சர்வேசுரன் மரித்தோரிலிருந்து உயிர்ப்பிக்க வல்லவராயிருக்கிறதினால் தன் குமாரனைப் பலியிட்டாலும் அந்த வாக்குத்தத்தம் நிறைவேறுமென்று அவர் விசுவசித்து, அந்த குமாரனைச் சர்வேசுரனுக்குப் பலியிடப் பின்வாங்கினவரல்ல. அந்த விசுவாசத்துக்குச் சம்பாவனையாகத் தன் குமாரனை உயிருள்ளவனுமாய்ப் பெரிய தேவரகசியத்துக்கு அடையாளமுமாய்க் கையேற்றுக்கொண்டார். இந்த அடையாளம் ஏதென்றால், அபிரகாமுடைய ஏக குமாரனாகிய ஈசாக் என்பவர் தம்முடைய பலிக்கு வேண்டிய விறகைச் சுமந்துகொண்டு ஓரேப்பு என்னும் மலையுச்சிமட்டும் சென்றபோது சிலுவையைச் சுமந்து அதிலே அறையுண்டு மரித்து தம்மைத்தாமே பலியாக ஒப்புக்கொடுத்த சர்வேசுரனுடைய ஏக குமாரனாகிய சேசுக்கிறீஸ்துநாதருக்கு அடையாளமாயிருந்தார். மரணத்தினின்று உயிரோடே அபிரகாமுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட ஈசாக்கு, சிலுவையிலே மரித்து தகனபலியானபிறகு மூன்றாம் நாள் உயிர்த்துத் தம்முடைய பிதாவின் வலது பாரிசத்தில் சேர்ந்த சேசுநாதருக்கு அடையாளமாயிருந்தார்.

20. விசுவாசத்தினாலே ஈசாக்கு பின்வருங் காரியங்களை முன்னோக்கி யாக்கோபையும் ஏசாவையும் ஆசீர்வதித்தார். (ஆதி. 27:27-40.)

21. விசுவாசத்தினாலே யாக்கோபு தன் மரண வேளையில் யோசேப்பின் குமாரர் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து, அவர் செங்கோலின் முனையைப் பிடித்து நமஸ்கரித்தார். (ஆதி. 48:15; 47:31.)

* 21. ஈசாக்கைப்போல் யோசேப்பும் சேசுநாதருக்கு ஓர் அடையாளமாயிருந்தார். எப்படியெனில், அவர் தன் சகோதரரால் விற்கப்பட்டு, அவருடைய வஸ்திரம் செம்மறியாட்டின் இரத்தத்தில் துவைக்கப்பட்டு, எஜிப்து தேசத்துக்குக் கொண்டு போகப்பட்டு அநியாயமாய்க் குற்றஞ் சாட்டப்பட்டுச் சிறையிலேயே அடைக்கப்பட்ட பின்பு அதிலிருந்து மிகுந்த மகிமையோடே எஜிப்து தேசத்துக்குக் இரட்சகனாகவும் எஜிப்தாரைப் போஷித்த தகப்பனாகவும் பாரவோன் இராஜாவாலே ஏற்படுத்தப்பட்டதுபோல், சேசுநாதரும் தம்முடைய சீஷனாகிய யூதாஸால் யூதர்களுக்கு விற்கப்பட்டு, கட்டுண்டு, அநியாயமாய்க் குற்றஞ் சாட்டப்பட்டு, மரித்துக் கல்லறையில் அடக்கம்பண்ணப்பட்டபிறகு அதிலே நின்று ஒட்டோலகமாய் உயிர்த்தெழுந்து உலக இரட்சகராகவும் தம்முடைய பிரஜைகளைத் தேவநற்கருணையைக்கொண்டு போஷிக்கிறவராகவும், பிதாவாகிய சர்வேசுரனாலே ஏற்படுத்தப்படுவாரென்று யாக்கோபு என்பவர் காட்சியில் கண்டு யோசேப் என்பவருடைய செங்கோலின் நுனியை நமஸ்கரிக்கும்போது அந்தச் செங்கோலுக்கு அடையாளமாயிருந்த சேசுநாதருடைய நித்திய அரசை வணங்கினார் என்று அர்த்தமாம்.

22. யோசேப்பு சாகும் வேளையில் இஸ்ராயேல் புத்திரர் எஜிப்து தேசத்தை விட்டுப் புறப்படுவார்களென்பதை விசு வாசத்தினாலே முன்னதாக அறிவித்து, தன் எலும்புகளைக்குறித்தும் கட்டளை யிட்டார். (ஆதி. 50:23, 24.)

* 22. யோசேப் என்பவர் மரிக்கும்வேளையில் தம்முடைய சகோதரர்களை அழைத்து: இனி வருங்காலத்தில் இத்தேசத்தைவிட்டு உங்கள் புத்திரர்கள் வாக்குத் தத்தத்தின் பூமிக்குப் புறப்படுவார்கள்; அப்போது என் சரீரத்தின் எலும்புகளை இங்கே விடாமல் கூடக்கொண்டுபோகவேண்டுமென்று அவர்களுக்குக் கற்பித்தாரென்று அர்த்தமாம்.

23. மோயீசன் பிறந்தபோது அவர் அழகுள்ள பிள்ளையென்று அவருடைய தாய்தந்தையர் கண்டு, இராஜாவுடைய கட்டளைக்குப் பயப்படாமல், விசு வாசத்தினாலே மூன்று மாதம் அவரை ஒளித்துவைத்தார்கள். (யாத். 2:2; 1:17.)

24. மோயீசன் என்பவர் பெரியவரானபிறகு விசுவாசத்தினால் தான் பாரவோனுடைய குமாரத்திக்கு மகனாயிருக்கவேண்டியதில்லை என்று, 

25. அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதிலும், சர்வேசுரனுடைய ஜனங்களோடு துன்பப்படுவதே நலமென்று தெரிந்துகொண்டு,

26. எஜிப்தாருடைய பொக்கிஷங்களிலும் கிறீஸ்துநாதருடைய அவ மானங்களை அதிகப் பெரிதான திர வியமாக எண்ணினார். ஏனெனில் இனிவரும் சம்பாவனையை நோக்கிக் கொண்டிருந்தார்.

27. விசுவாசத்தினாலே அவர் அதரிசனரைத் தரிசித்தாற்போல் உறுதியாயிருந்து, இராஜாவுடைய கோபாக்கினைக்கு அஞ்சாமல், எஜிப்து தேசத்தை விட்டுப் போனார். (யாத். 2:15; 10:28.) 

28. முதல் பேறானவைகளைச் சங்கரித்தவர் இஸ்ராயேலரைத் தொடாதபடிக்கு அவர் விசுவாசத்தினாலே ஆட் டுக்குட்டியின் இரத்தத்தைத் தெளித் துப் பாஸ்காவைக் கொண்டாடினார். (யாத். 12:21.)

29. விசுவாசத்தினாலே அவர்கள் செங்கடலைக் கட்டாந்தரையைக் கடக்கிறதுபோல் கடந்தார்கள். எஜிப்தியர் அப்படியே செய்யத்துணிந்து அமிழ்ந் திப் போனார்கள். (யாத். 14:22, 28)

30. விசுவாசத்தினாலே அவர்கள் ஜெரிக்கோ கோட்டையின் மதில்களை ஏழுநாள் சுற்றிவரவே, அவைகள் தகர்ந்து விழுந்தன. (ஜோசு. 6:20.)

31. விசுவாசத்தினால் ராஹாப் என்னும் வேசியானவள் வேவுகாரரைச் சமாதானத்தோடு விடுதியில் ஏற்றுக் கொண்டதின் நிமித்தம் அவள் அவிசுவாசிகளுடனே கூடச் சாகவில்லை. (ஜோசு. 2:3; இயா. 2:25.)

* 31. ராஹாப்பென்னும் வேசியானவள் இஸ்ராயேல் பிரஜைகளிடத்தில் சர்வே சுரன் பண்ணுகிற அற்புதங்களைக் கேள்விப்பட்டு தன் துர்நடக்கையை விட்டுச் சர்வேசுரனை விசுவசித்து மோயீசனாலே அனுப்பப்பட்ட வேவுகாரர்களுக்குத் தன் வீட்டில் விடுதி கொடுத்ததினாலே இஸ்ராயேல் பிரஜைகள் ஜெரிக்கோ கோட்டையைப் பிடித்து அழிக்கும்போது அந்த ஸ்திரீக்கு யாதொரு பொல்லாப்புஞ் செய்யப்படாத படிக்கு யோசுவே கற்பித்தார்.

32. இதற்குமேல் இன்னம் என்ன சொல்ல? ஜெதேயோன், பாராக்கு, சம்சோன், ஜெப்தே, தாவீது, சாமுவேல் என்பவர்களையும், தீர்க்கதரிசிகளையுங் குறித்துப் பேசுவேனாகில் நேரம் போதாதே.

33. இவர்கள் விசுவாசத்தைக் கொண்டு இராச்சியங்களை ஜெயித்தார்கள், நீதியைச் செலுத்தினார்கள், வாக்குத்தத்தங்களைக் கைக்கொண்டார்கள், சிங்கங்களின் வாயை அடைத்தார்கள், (நியா. 4:7, 11, 14, 15; தானி. 6:22.)

34. அக்கினியின் உக்கிரத்தை அவித் தார்கள், வாள்முனைக்குத் தப்பி னார்கள், வியாதியில் ஆரோக்கிய மடைந்தார்கள், யுத்தத்தில் வல்லவர்களானார்கள், அந்நியருடைய பாளையங்களை முறியடித்தார்கள். (தானி. 3:22.) 

35. ஸ்திரீகள் தாங்கள் சாகக்கொடுத்தவர்களை உயிரோடு எழுந்திருக்கப் பெற்றார்கள். வேறு சிலர் விடுதலை யாகச் சம்மதியாமல் அதிக உத்தமமான உத்தானத்தை அடையும்படிக்கு வதைக் கப்பட்டார்கள்.

36. வேறு சிலர் இகழ்ச்சி நகைப்பு களுக்கும், அடிகளுக்கும், இன்னும் விலங் குகளுக்கும், சிறைக்கும் உள்ளானார்கள்.

37. கல்லால் எறியப்பட்டார்கள், வாளால் அறுக்கப்பட்டார்கள், சோதிக்கப்பட்டார்கள், பட்டயத்தினால் வெட் டுண்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல் களையும் உடுத்தித்திரிந்து, தரித்திரத் தையும் இக்கட்டுகளையும் துன்பங் களையும் பட்டநுபவித்தார்கள்.

38. இவர்கள் உலகத்திலிருக்க உல கம் பாத்திரமாயிருக்கவில்லை; வனாந் தரங்களிலும், மலைகளிலும், கெபிகளி லும், பூமியின் சுரங்கங்களிலும் சுற்றித் திரிந்தார்கள். (1 மக். 2:28-30.)

39. இவர்கள் எல்லாரும் விசுவாசத்தின் சாட்சியத்தால் புகழப்பட்டிருந்தும், வாக்குத்தத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை.

40. நாமில்லாமல் இவர்கள் சம்பூரணம் அடையாதபடிக்குச் சர்வேசுரன் நமக்கு அதிக மேன்மையான ஒரு தயவைச் செய்யச் சித்தமானார்.

* 32-40. ஜெதேயோன், சம்சோன் முதலானவர்கள் ஆண்டவர்மேல் வைத்த விசுவாசத்தைக்கொண்டு பிலிஸ்தேயர், கல்தேயர் முதலான பற்பல சத்துருக்களோடே யுத்தஞ்செய்து வெற்றியடைந்தார்கள். அந்த விசுவாசத்தைக்கொண்டே இஸ்ராயேல் பிரஜையை நடத்தி நீதியைச் செலுத்தினார்கள். இஸ்ராயேலருக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பூமியைச் சுதந்தரித்துக்கொண்டார்கள். விசுவாசத்தினால் தாவீது, சம்சோன், தனியேல், சிங்கங்களின் வாயினின்று இரட்சிக்கப்பட்டார்கள். விசுவாசத்தினால் மூன்று வாலர் அக்கினிச்சுவாலையினின்று காக்கப்பட்டார்கள். விசுவாசத்தினால் தாவீது, எலியாஸ் முதலானவர்கள் வாள்முனைக்குத் தப்பினார்கள். விசுவாசத்தினால் எசேக்கியாஸ், தோபியாஸ், யோப் முதலானவர்கள் வியாதியாய்க் கிடந்து செளக்கியத்தை அடைந்தார்கள். விசுவாசத்தினால் இஸ்ராயேல் பிரஜைகளின் பல வீரர் வீரசூரத்தை அடைந்தார்கள். விசுவாசத்தினால் பிறதேசத்தாருடைய படைகளை முறியடித்தார்கள். விசுவாசத்தினால் சரேத்தாள் விதவையும், சுனாமித்தாளும், மரித்த தங்கள் பிள்ளைகளை எலியாஸ், எலிசேயுஸ் தீர்க்கதரிசிகளினால் மரித்தவர்களில் நின்று எழுப்பப்பெற்று உயிரோடே கைக்கொண்டார்கள். விசுவாசத்தினால் எலேயாசார் முதலானவர்கள் மோட்சத்தில் உயிர்வாழ விரும்பி, வேதத்துக்கு விரோதமான காரியங் களைச் செய்யாதபடிக்குப் பிராணனைக் கொடுக்கத் துணிந்தார்கள். விசுவாசத்தினால் அநேகர் அடியையும் நிந்தையையும் விலங்குகளையும் பொறுமையோடே சகித்தார்கள். விசுவாசத்தைப்பற்றி நபோத், எலியாஸ் முதலானவர்கள் கல்லாலெறியப்பட்டார்கள். இசையாஸ் முதலான சிலர் இரம்பத்தால் அறுக்கப்பட்டார்கள். சிலர் வாள்முனையால் மரித்தார்கள். சிலர், விசேஷமாய்த் தீர்க்கதரிசிகள், ஆட்டுத்தோல்களை உடுத்திக்கொண்டு தரித்திரம், கஸ்தி, துன்பங்களை அநுபவித்து, உலகம் அவர்களுக்கு அபாத்திரமாயிருந்ததினால், வனாந்தரங்களில் திரிந்து, மலைகளிலும் கெபிகளிலும் பூமியின் சுரங்கங்களிலும் சஞ்சரித்துச் சிதறடிக்கப்பட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் எல்லோரும் விசுவாசத்தினால் அத்தனை பெரிதானவைகளைச் செய்திருந்தும், விசுவாசத்தைப்பற்றி அத்தனை துன்பங்களை அநுபவித்திருந்தும் தங்கள் விசுவாசத்துக்குரிய நித்திய சம்பாவனையை அப்போது கைக்கொள்ளவில்லை. சர்வேசுரன் நமதுமேல் வைத்த அபரிமித பட்சத்தின் நிமித்தம் நம்முடனேகூட அவர்கள் இதைக் கைக் கொள்ளும்படி இக்காலம் வரைக்கும் அவர்களைக் காத்துக்கொண்டிருக்கப் பண்ணினாரென்று அர்த்தமாம்.