இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

எபிரேயருக்கு எழுதிய நிருபம் - அதிகாரம் 10

புதிய ஏற்பாட்டின் ஒரே பலியால் சகல பாவமும் மன்னிக்கப்படுவதென்பது.

1. வேதப்பிரமாணமானது மெய்யான காரியங்களின் சாயலாகமுதலா யிராமல், வரப்போகிற நன்மைகளின் நிழலாய் மாத்திரம் இருந்தபடியால், வருஷாவருஷம் தவறாமல் ஒப்புக்கொடுக்கப்படுகிற ஒரேவித பலிகளினாலே (பீடத்தை) அண்டி வருகிறவர்களை ஒருபோதும் உத்தமராக்கமாட் டாது.

2. உத்தமராக்குமானால், பலியிடுகிறவர்கள் ஒருதரம் சுத்தமாக்கப் பட்டபின்பு இனிப் பாவமில்லையென்கிற மனச்சாட்சி அவர்களுக்கு உண்டாயிருக்கும் என்பதினாலே, பலிகள் ஒப்புக்கொடுக்கப்படுவது நின்று போயிருக்குமே.

3. ஆனால் பலிகள் நடப்பதினால் பாவம் உண்டென்று வருஷாவருஷம் நினைப்பூட்டப்படுகிறது.

4. ஏனெனில் காளை, வெள்ளாட்டுக்கிடாய் இவைகளின் இரத்தத்தினாலே பாவங்கள் மன்னிக்கப்படுவது முற்றும் கூடாத காரியமாமே.

5. இதனிமித்தம் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது சொல்லுகிறதாவது: நீர் பலியையும் நைவேத்தியத்தையும் விரும்பாமல், எனக்கு ஒரு சரீரத்தைப் பொருத்தினீர் (சங். 39:6, 7.)

6. பாவத்துக்குப் பரிகாரமாகத் தக னப்பலிகள் உமக்குப் பிரியப்படவில்லை.

7. அப்பொழுது என்னைக்குறித்து புத்தகத்தின் ஆரம்பத்தில் எழுதியிருக் கிறதுபோல்: சர்வேசுரா, உம்முடைய சித்தத்தின்படியே செய்ய இதோ வருகி றேன் என்று சொன்னேன் என்கிறார். (சங். 39:7)

* 7. புத்தகத்தின் ஆரம்பத்தில் எழுதியிருக்கிறதுபோல் என்பதின் அர்த்தமாவது: இரட்சகர் வருவாரென்று ஆதித்தாய் தகப்பனுக்கு ஆதியிலே வார்த்தைப்பாடு கொடுத்தபடியே இதோ இப்போது வருகிறேனென்று அர்த்தமாம்.

8. வேதப்பிரமாணத்தின்படி செலுத் தப்படுகிற பலிகளைக்குறித்து: பலி களையும் நைவேத்தியங்களையும் பாவத்துக்காகத் தகனப்பலிகளையும் நீர் விரும்பினதுமில்லை, அவைகள் உமக்குப் பிரியப்பட்டதுமில்லை என்று முந்தச் சொல்லி, அதற்குப்பின்:

9. சர்வேசுரா, உம்முடைய சித்தத்தை நிறைவேற்றுகிறதற்கு இதோ வருகிறேன் என்று சொன்னாரே. ஆகை யால் பிந்தின பலியை ஸ்தாபிக்கும்படி, முந்தினதை நீக்கிப்போடுகிறார் என்க.

10. அந்தச் சித்தத்தின்படி சேசுக்கிறீஸ்துநாதருடைய சரீரத்தை ஒரு தரம் ஒப்புக்கொடுத்ததினாலே நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்.

* 10. காளைகள், வெள்ளாட்டுக்கிடாய்கள் இவைகளின் இரத்தம் சர்வேசுரனுக்குப் பிரியப்படக்கூடாத காரியமாமே. பழைய ஏற்பாட்டில் கற்பிக்கப்பட்டிருந்த அப்படிப்பட்ட பலிகள் சேசுநாதர் கபாலமலையிலே செலுத்தவேண்டியிருந்த பலிக்கு அடையாளமாயிருந்ததொழிய, அவைகளால் யாதொரு பாவப்பரிகாரமும் ஆகத்தக்கதில்லை. ஆகையால் அர்ச். கன்னிமரியாயின் திரு உதரத்தில் சுதனாகிய சர்வேசுரன் மனுஷ சுபாவத்தைத் தரித்துக்கொண்டவுடனே தம்முடைய பிதாவை நோக்கி: என் பிதாவே, தேவரீர் பழைய ஏற்பாட்டிலே கற்பித்த மிருகங்களின் பலிகள் தேவரீருக்குப் பிரியப்படவில்லை. அதனாலே தேவரீருடைய நீதிக்கு யாதொரு பரிகாரமும் மனுக்குலத்தோருக்கு யாதொரு பிரயோசனமும் உண்டாகவில்லை. ஆனால் தேவரீர் எனக்கு ஒரு சரீரத்தைப் பொருத்தினீர். தேவரீருடைய சித்தத்தை நிறைவேற்றவும், மனுஷர்களுடைய பாவங்களுக்காக என் இரத்தத்தைச் சிந்தி உத்தரித்துத் தேவரீருடைய நீதிக்கு யோக்கியமான பரிகாரஞ் செய்யவும் இதோ ஆயத்தமாயிருக்கிறேன் என்று பிரார்த்தித்தார். பிதாவாகிய சர்வேசுரனும் தமது திருச்சுதனுடைய விண்ணப்பத்தைக் கையேற்றுக்கொண்டதினால் அவருடைய திரு இரத்தப்பலியினாலே நாம் கழுவப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம் என்றர்த்தமாம்.

11. அன்றியும் ஒவ்வொரு குருவும் தன் குருத்துவத்தொழிலை நிறைவேற்ற அனுதினமும் தயாராயிருந்தது, ஒருபோதும் பாவத்தை நிவர்த்திக்கக் கூடாத ஒரேவகைப் பலிகளை அடிக்கடி செலுத்துகிறார். (எபி. 8:3; யாத். 29:38; எண். 28:3.)

12. இவரோ பாவங்களுக்காக ஏக பலி ஒன்றைச் செலுத்தி, என்றென்றைக்கும் சர்வேசுரனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்து,

13. இனித் தம்முடைய சத்துருக்கள் தமக்குப் பாதப்படியாகப் போடப் படும் வரையில் காத்திருக்கிறார். (சங். 109:1.)

14. ஏனெனில் அந்த ஏக பலி ஒன்றினால் அர்ச்சிக்கப்பட்டவர்களை என் றென்றைக்கும் உத்தமராக்கினார்.

* 14. இந்த ஒரே பலியைக்குறித்து 7-ம் அதிகாரம் 28-ம் வசனத்திலே விவரிக்கப்பட்டிருக்கிற வியாக்கியானத்தைக் காண்க.

15. இதைக்குறித்து இஸ்பிரீத்து சாந்துவும் நமக்குச் சாட்சி சொல்லுகிறார். எப்படியெனில்:

16. அந்த நாட்களுக்குப்பின் நான் அவர்களோடு பண்ணும் உடன்படிக்கை இதோ என்றபின்பு கர்த்தர் சொல்வதாவது: என்னுடைய பிரமாணங்களை நான் அவர்களுடைய இருயதங்களிலே பதித்து, அவைகளை அவர்களுடைய மனதிலே வரைவேன். (எரே. 31:33; எபி. 8:8.)

17. அவர்களுடைய பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி ஒருபோதும் நான் நினைக்கப்போகிறதில்லை என்கிறார்.

18. பாவம் எப்பொழுது மன்னிக்கப்பட்டதோ, இனிப் பாவத்துக்காகப் பரிகாரப்பலி கிடையாதே.

* 18. ஞானஸ்நானத்தால் பாவத்துக்குப் பூரண மன்னிப்பு உண்டாவதினால் அதுக்காகப் பாவ நிவாரணப்பலி கொடுப்பது அவசரமாயிராது. ஞானஸ்நானத்துக்குப்பின் உண்டான பாவங்களுக்கு நமது ஆண்டவருடைய மரணத்தின் சக்தியால் மாத்திரம் நிவாரணமாகிறபடியாலும் அதுவும் ஏற்கனவே ஒப்புக்கொடுக்கப்பட்டிருப்பதாலும் வேறே ஒரு புது நிவாரணப்பலியும் அவசரமாயிராதென்பது இனி பாவத்துக்குப் பலியிராது என்பதுக்கு அர்த்தமாம்.

19. ஆகையால் சகோதரரே, கிறீஸ்து நாதருடைய இரத்தத்தைக்கொண்டு பரிசுத்த ஸ்தலங்களில் பிரவேசிப்பதற் கான நம்பிக்கையும்,

20. அவருடைய சரீரமாகிய திரையின் வழியாய் அவர் நமக்குத் திறந்த புதிதும் ஜீவியந் தருவதுமாகிய மார்க்கமும்,

21. சர்வேசுரனுடைய வீட்டுக்கு அதிகாரியான பிரதான குருப்பிரசாதியும் நமக்கு உண்டாயிருக்க,

22. துர்மனச்சாட்சி நீங்க, தெளிக்கப் பட்ட இருதயங்களும் பரிசுத்த ஜலத் தால் கழுவப்பட்ட சரீரமும் உள்ளவர்க ளாய்ப் பூரண விசுவாசத்தோடும் உண் மையான இருதயத்தோடும் அவரிடம் அண்டிப் போவோமாக. (எபே. 5:26.)

23. நம்முடைய நம்பிக்கையை வெளிப்படுத்துவதில் தத்தளியாமல் நிலைநிற்போமாக; (ஏனெனில் வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்)

24. பரம அன்புக்கும் நற்கிரியைகளுக் கும் நமக்குத் தூண்டுதலுண்டாகும் படி ஒருவரை ஒருவர் கவனிப்போமாக.

25. சிலருக்குத் துர்வழக்கமாய் இருக் கிறதுபோல நாம் சபைக்கூட்டத்தை விட்டுவிடாமல் ஒருவரை ஒருவர் தேற்று வோமாக. அந்த மகாநாள் எவ்வளவுக்கு நெருங்கக் காண்பீர்களோ அவ்வளவுக்கு அதிகமாய் இவ்விதஞ் செய்யுங்கள்.

26. ஏனெனில் சத்தியத்தை அறியும் அறிவை நாம் கைக்கொண்டபின்பு மனதாரப் பாவஞ் செய்வோமாகில், பாவப் பரிகாரமான வேறொரு பலி (நமக்குக்) கிடையாதே. (எபி. 6:4; 1 அரு. 5:16.)

27. பயங்கரமான நடுத்தீர்வைக்கு எதிர்பார்த்தலும், விரோதிகளைப் பட்சிக்கப்போகிற கோபாக்கினியுந்தான் உண்டாயிருக்கும்.

28. மோயிசனுடைய பிரமாணத்தை மீறுகிறவன் சற்றும் இரக்கமடையாமல், இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கு மூலத்தால் சாகிறான். (உபாக. 17:6; மத். 18:16; அரு. 8:17; 2 கொரி.13:1.)

29. அப்படியானால், தேவ சுதனைக் காலின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தப்படுத்தின உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, வரப்பிரசாத இஸ்பிரீத்துவுக்கு அவமானஞ் செய்கிறவன் எத்தனையோ அதிக அகோரமான ஆக்கினைகளுக்குப் பாத்திரவானாயிருப்பானென்று நினைக்கிறீர்கள்?

30. ஏனெனில் பழிவாங்கல் என் காரியம், பதிலளிப்பதும் நான்தான் என்று சொன்னதும், மீளவும் கர்த்தர் தம்முடைய ஜனங்களை நடுத்தீர்ப்பாரென்று சொன்னதும் யார் என்று அறிவோம். (உபாக. 32:35; உரோ.12:19.)

31. ஜீவந்தர கடவுளின் கையில் விழுவது பயங்கரமான காரியம்.

32. நீங்கள் உங்கள் முந்தின நாட்களை நினைத்துக்கொள்ளுங்கள். அப்போது நீங்கள் தெளிவடைந்து உபத்திரவங்களின் பெரும் போராட்டத்தைச் சகித்தீர்களே.

33. ஒரு பக்கத்தில் நிந்தைகளிலும் உபத்திரவங்களிலும் பார்க்கிறவர்க ளுக்கு வேடிக்கையானீர்கள். மற்றொரு பக்கத்தில் அப்படிப் பாடுபட்டவர்க ளுக்கு நீங்களும் கூட்டாளிகளானீர்கள்.

34. எப்படியெனில் விலங்கிடப்பட்டவர்களுக்கு நீங்கள் மனதிரங்கினதுமன்றி, அதிக உத்தமும் நிலைபெற்றதுமான ஐசுவரியம் உங்களுக்கு உண்டென்று அறிந்து சந்தோஷமாய் உங்கள் ஆஸ்தி களையும் கொள்ளையடிக்கவிட்டீர்கள்.

35. ஆதலால் மிகுந்த சம்பாவனைக்கு ஏதுவான உங்கள் நம்பிக்கையை இழந்து போகாதேயுங்கள்.

36. நீங்கள் தேவசித்தத்தை நிறைவேற்றி, வாக்குத்தத்தத்தைக் கைக்கொள்ளும்டியாகப் பொறுமை உங்களுக்கு அவசரமாயிருக்கின்றது.

37. இன்னும் இருப்பது சொற்பக்காலம். வரவேண்டியவர் வருவார். தாமதம்பண்ணார்.

38. என் நீதிமான் விசுவாசத்தினாலே பிழைப்பான். அவன் அதைவிட்டுப் பின்வாங்குவானாகில், என் ஆத்துமம் அவன்மேல் பிரியங்கொள்ளாது என்று எழுதியிருக்கிறதே. (அபகூக். 2:4; உரோ. 1:17; கலாத். 3:11.)

39. நாமோ கேட்டுக்கு ஏதுவாய்ப் பின் வாங்குகிற பிள்ளைகளாயிராமல், ஆத் தும ஈடேற்றத்துக்குரிய விசுவாசத்தைக் கைப்பற்றுகிற புத்திரராயிருக்கிறோம்.