இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

யாத்திராகமம் - அதிகாரம் 07

மோயீசன் பரவோனிடத்தில் போகும்படி தைரியம் கொண்டதும் - அவனுடைய கோல் சர்ப்பமாக மாறினதும் - சூனியக்காரர்கள் அதே விதமாய்ச் செய்ததும் - பரவோன் மனங் கடினப்பட்டதும் - நதித் தண்ணீர் இரத்தமாக மாறினதும்.

1. அப்போது கர்த்தர் மோயீசனை நோக்கி: பார், உன்னை நாம் பரவோனுக்குத் தேவ னாக நியமித்திருக்கிறோம். உன் சகோ தரனாகிய ஆரோனோ உன் தீர்க்கத்தரிசியா யிருப்பான்.

2. நாம் உனக்குக் கற்பிக்கும் யாவையும் அவனோடு நீ சொல்ல வேண்டும். அவனோ பரவோனை நோக்கி அவன் தேசத்தினின்று இஸ்றாயேல் புத்திரரை அனுப்பிவிடும்படி பேசுவான்.

3. ஆனால் நாம் பரவோனுடைய இருதய த்தைக் கடினப்படுத்தி எஜிப்த்து தேசத்திலே நமது அற்புதங்களையும், ஆச்சரியத்துக்குரிய புதுமைகளையும் மிகுதியாகக் காட்டு வோம்.

4. ஆயினும் அவன் உங்கட்குச் செவி கொ டுக்கமாட்டானாதலால், நாம் எஜிப்த்துக்கு விரோதமாய் நமது கையை ஓங்கி, நமது சேனைகளும் பிரஜைகளுமாகிய இஸ்றாயேல் புத்திரரை மகத்தான தண்டனைகளினாலே எஜிப்த்து தேசத்திலிருந்து புறப்பட்டுப் போகச் செய்வோம்.

5. நாம் எஜிப்த்தின் மேலே நம் கையை நீட்டி, இஸ்றாயேல் புத்திரரை அவர்கள் நடுவிலிருந்து புறப்படப்பண்ணும்போது நாமே ஆண்டவர் என்று எஜிப்த்தியர் அறிந்து கொள்ளுவார்கள் என்றார்.

6. ஆகையால் மோயீசனும், ஆரோனும் கர்த்தர் கற்பித்தபடி செய்து, அவ்விதமே நடந்தார்கள்.

7. அவர்கள் பரவோனிடம் போய்ப் பே சினபோது, மோயீசனுக்கு வயது எண்பதும், ஆரோனுக்கு வயது எண்பத்து மூன்றுமாம்.

8. மீளவும் கர்த்தர் மோயீசனுக்கும் ஆரோ னுக்கும் திருவாக்கருளி:

9. அற்புதங்களைக் காட்டுங்கள் என்று பர வோன் உங்களுக்குச் சொல்லும்பொழுது, நீ ஆரோனை நோக்கி: உன் கோலையெடுத்து அதைப் பரவோனுக்கு முன்பாகப் போடு என்பாய், அது சர்ப்பமாக மாறுபடும் என் றார்.

* 9-ம் வசனம். அந்தக் கோலை, இங்கு ஆரோனின் கோலென்றும், அங்கு மோயீசன் கோலென்றும் வேறிடங்களில் தேவனின் கோலென்றும் சொல்வதற்கு முகாந்தரமேதென்று கேட்கில், மோயீசனுக்கும் ஆரோனுக்கும் புதுமை அடையாளங்களைச் செய்யும்படி சுவாமி கருவியாகத் தந்தருளினார் என்கிறதினாலேதான்.

10. இவ்வாறு மோயீசனும் ஆரோனும் பரவோனிடத்தில் போயிருந்து கர்த்தர் கற்பித்திருந்தபடி செய்தார்கள். எப்படியென்றால், ஆரோன் பரவோனுக்கும் அவனுடைய ஊழியக்காரர்களுக்கு முன்பாகக் கோலை எடுத்தெறிய அது சர்ப்பமாக மாறுபட்டது.

11. பரவோனோ ஞானிகளையும் சூனியக் காரர்களையும் வரவழைத்தான்; இவர்க ளோ எஜிப்த்தில் வழங்கிய மந்திரங்களைக் கொண்டும், பல இரகசிய தந்திரங்களைக் கொண்டும் அவ்வண்ணமே செய்தார்கள்.

* 11-ம் வசனம். பில்லிசூனியமானது பேய்க்கடுத்த தொழில். பசாசின் சுபாவமான வல்லமையை உபயோகித்துக்கொண்டு எவர்கள் பற்பல ஆச்சரியத்துக்குரிய செய்கைகளால் மனிதர்களை மோசம் பண்ணுகிறார்களோ அவர்கள் பெரும் பாவிகளும் பசாசின் மக்களுமாயிருக்கிறார்கள். பில்லி சூனியக்காரர் முக்கியமாய் அஞ்ஞானமும் பேயாராதனையும் வழங்கிய தேசங்களிலே அகப்படுகிறார்கள். இந்த தேசத்தில் அநேகருண்டு.

12. எப்படியெனில், அவர்களில் ஒவ்வொ ருவன் தன் தன் கோலைப் போட்ட மாத்தி ரத்தில் அதுகள் சர்ப்பங்களாக மாறுபட்டன; ஆயினும் ஆரோனுடைய கோலானது அவர்களுடைய கோல்களை விழுங்கி விட்டது.

* 12-ம் வசனம். ஆரோனின் கோலானது சூனியக்காரர்களுடைய கோலை விழுங்கியது. அதுபோல உண்மையானது பொய்யை வெல்லும். சர்வேசுரன் அருளிய சத்தியவேதமும் அக்கியான சமயங்களை எல்லாம் அழித்தொழிக்கும்.

13. ஆனபடியினாலே பரவோனுடைய இருதயம் கடினமாகிவிட்டது. கர்த்தர் சொல்லியிருந்தபடி அவன் மோயீசனுக்கும் ஆரோனுக்கும் செவிகொடுக்கவில்லை.

14. அப்போது கர்த்தர் மோயீசனை நோ க்கி: பரவோனுடைய நெஞ்சம் கடினமாய் விட்டது, பிரஜையை அனுப்பி விட அவனு க்கு மனதில்லை.

15. நீ காலமே அவனிடத்திற்குப் போ; அதோ நதியை நாடி வருவான்; நீ நதிக் கரையிலே அவனுக்கு எதிராகச் சென்று சர்ப் பமாய் மாறுபட்ட கோலை உன் கையிலே பிடித்துக்கொண்டு,

16. பரவோனை நோக்கி: வனாந்தரத்தில் நமக்குப் பூசை செய்யம்படி நம் பிரஜையை அனுப்பிவிடென்று சொல்லச் சொல்லி எபி றேயருடைய தேவனாகிய கர்த்தர் உம்மி டத்தே என்னை அனுப்பினாரென்றாலும் இதுவரையிலும் நீர் கேளாமற் போனீர்.

17. ஆதலால் கர்த்தர் சொல்லுகிறதாவது: ஆண்டவர் நாமென்று எதினாலறிவாயெ னில், இதோ என் கையிலிருக்கிற கோலினா லே நதியிலிருக்கிற தண்ணீர்மேல் அடிப்பேன். அடிக்கவே ஜலம் உதிரமாக மாறிப்போம். 

18. நதியிலுள்ள மச்சங்கள் முதலாய் செத்துத் தண்ணீர் நாறிப்போகுமாதலால், எஜிப்த்தியர் நதித் தண்ணீரைக் குடித்து வாதிக்கப்படுவார்கள் என்று சொல்லுவாய் என்றார்.

19. பிறகு கர்த்தர் மோயீசனைப் பார்த்து: ஆரோனுக்கு நீ சொல்லவேண்டியது ஏதெ னில்: எஜிப்த்தில் எவ்விடத்திலுமுள்ள நீர் நிலைகள், நதிகள், அருவிகள், குட்டைகள், ஏரி முதலியவைகளெல்லாம் இரத்தமாய்ப் போகத் தக்கதாகவும், எஜிப்த்திலெங்கும் மரப்பாத்திரங்களும் கற்பாத்திரங்களும் உதிரத்தால் நிறைந்திருக்கத்தக்கதாகவும் நீ கோலையெடுத்து உன் கையை நீட்டுவாயாக.

20. ஆண்டவர் கட்டளையிட்டபடியே மோயீசனும் ஆரோனும் செய்தார்கள். இவன் கோலை எடுத்துப் பரவோனுக்கும் அவனுடைய தாசர்களுக்கு முன்பாக நதிச் ஜலத்தை அடித்தான், அடிக்கவே ஜலம் உதிரமாக மாறிப்போயிற்று.

21. அன்றியும் நதியிலுள்ள மீன்களும் மடிய, நதியும் நாறலாய்ப் போக, நதித் தண்ணீரைக் குடிக்க எஜிப்த்தியருக்குக் கூடாமற் போயிற்று. எஜிப்த்து தேசமெங்குமே இரத்த மாயிருந்தது.

22. பிற்பாடு எஜிப்த்தியருடைய மந்திர வாதிகள் தங்கள் மந்திரவித்தையினாலே அவ்வண்ணமாகச் செய்தார்கள். அதைக் கண்டு பரவோனுடைய மனம் கடினமாகி ஆண்டவர் கட்டளையிட்ட பிரகாரம் அவன் அவர்கட்குச் செவிகொடாதே இருந்தான்.

* 22-ம் வசனம். தண்ணீர் நிலைகளெல்லாம் இரத்தமாக மாறிப்போனது ஏக நேரத்திலல்ல. கிரமக் கிரமமாய் ஒன்றன்பின் ஒன்றாக நடந்து வந்தது. இல்லாவிட்டால் சூனியக்காரருக்கு எங்கேதான் தண்ணீர் அகப்பட்டிருக்கும் தங்கள் சூனியத்தைக் காட்ட?

23. அவன் புறங்காட்டித் தன் வீட்டினுள் பிரவேசித்ததல்லாதே இம்முறையிலும் முதலாய் அவன் மனம் இணங்கவேயில்லை.

24. ஆனால் நதியின் தண்ணீர் குடிக்க உதவாதபடியால் குடிக்கத்தக்க தண்ணீருக்காக எஜிப்த்தியர் நதியோரம் நெடுக ஊற்றுக் குழி தோண்டினார்கள்.

25. கர்த்தர் நதியை அடித்த முதல் கொண்டு ஏழுநாள் கடந்து போயின.