இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

எபிரேயருக்கு எழுதிய நிருபம் - அதிகாரம் 07

மெல்க்கிசதேக்கின் முறைமைக்கு ஒத்திருக்கிற கிறீஸ்துநாதருடைய குருத்துவம் லேவியருடைய குருத்துவத்துக்கு மேற்பட்ட தென்று காட்டுகிறார்.

1. சலேமின் இராஜாவுமாய், உன்னத கடவுளின் குருப்பிரசாதியுமாய் இருந்த அந்த மெல்க்கிசதேக் என்பவர் இரா ஜாக்களைச் சங்கரித்துத் திரும்பிவந்த அபிரகாமுக்கு எதிர்கொண்டுபோய் அவரை ஆசீர்வதித்தார். (ஆதி. 14:18.)

2. அபிரகாமோ, இவருக்குத் தம்முடைய சகல பொருட்களிலும் பத்திலோர் பாகத்தைப் பகிர்ந்தார். இவருடைய முந்தினபேருக்கு நீதி இராஜன் என்றும், சலேம் இராஜா என்கிற மற்றொரு பேருக்குச் சமாதான இராஜன் என்றும் அர்த்தமாம்.

* 2. மெல்க்கிசதேக் என்னும் இவருடைய முந்தின பெயருக்கு நீதிராஜன் என்று அர்த்தமாம். (மெல்கு=இராஜா; சதேக்=நீதி.)

3. இவருக்குப் பிதா, மாதா, வம்ச வரலாறு இல்லை. இவர் வாழ்நாட்களின் துவக்கமும், ஜீவியகாலத்தின் முடிவும் இல்லாதவராய்த் தேவ சுதனுக்கு ஒப் பனையாகி என்றென்றைக்கும் குருப் பிரசாதியாக நிலைத்திருக்கிறார்.

* 3. இவருக்குத் தாய் தகப்பன் இல்லை என்பது கருத்தல்ல. ஆனால் இவருடைய தாய் தகப்பன் பெயரும் வம்சத்தின் பெயரும் வேதாகமத்தில் எழுதப்படவில்லையென்றும், இவருடைய முன்னோர்களும் இவருடைய பிள்ளைகளும் குருப்பட்டத்தை அடைந்தவர்கள் அல்லவென்றும் அர்த்தங்கொள்ளும். ஆகையால் குருப்பட்டத்தின் விஷயமாய்த் தகப்பன், பிள்ளைகள் இல்லாதவரென்று சொல்லியிருக்கிறது. இதிலே விசேஷமாய் இவர் சேசுநாதருடைய குருத்துவத்தின் சாயலாயிருக்கிறார்.

4. இவருக்குப் பிதாப்பிதாவாகிய அபிரகாமே தமது பொருட்களில் முதல் தரமான பத்திலோர் பாகத்தைக் கொடுத்திருக்க, இவருடைய பெருமை எவ்வளவென்று ஆராய்ந்து பாருங்கள்.

5. அன்றியும் லேவியின் புத்திரரில் குருப்பட்டம் பெற்றவர்கள் அபிரகா மின் அரையினின்று வந்தவர்களாயி னும், தங்கள் சகோதரராகிய ஜனங்கள் கையிலிருந்து நியாயப்பிரமாணத்தின் படி பத்திலோர் பாகம் வாங்குவதற்குக் கட்டளை பெற்றிருந்தார்கள் என்பது மெய்யே. (எண். 18:21.)

6. ஆகிலும் இவருடைய கோத்திரம் அவர்களுடைய கோத்திர வரிசையில் எண்ணப்படாதிருந்தாலும், இவர் அபிர காமிடத்தில்தானே பத்திலோர் பாகம் வாங்கி, வாக்குத்தத்தங்களைப் பெற்றவ ராகிய அவரையே ஆசீர்வதித்தார்.

7. ஆனால் சிறியவன் தனக்கு மேற்பட்டவனாலே ஆசீர்வதிக்கப்படுகிறான் என்பதற்கு ஆக்ஷேபனை இல்லையே.

8. அன்றியும் இங்கே பத்திலோர் பாகம் வாங்குகிறவர்கள் மரிக்கிற மனுஷர்கள். அங்கேயோ அதை வாங்கினவர் உயிரோடிருக்கிறவர் என்று சாட்சியம் பெற்றவர்.

9. ஆகையால் பத்திலோர் பாகத்தைப் பெற்ற லேவியும் அபிரகாம் மூலமாய் இவருக்குப் பத்திலோர் பாகஞ் செலுத்தினான் என்று சொல்லலாமே.

10. ஏனெனில் மெல்க்கிசதேக் என்பவர் அபிரகாமுக்கு எதிர்ப்பட்ட போது, லேவி தன் பிதாவின் அரை யிலிருந்தான்.

11. ஆகையால் லேவியருடைய குருத்துவ நாட்களில் ஜனங்கள் வேதப்பிரமாணத்தைப் பெற்றிருக்க அவர்களுடைய குருத்துவத்தினால் சகல சம்பூரணமும் உண்டாவதாயிருந்தால், ஆரோனுடைய முறைமைப்படி அழைக்கப்படாமல் மெல்க்கிசதேக்கின் முறைமைப்படி அழைக்கப்பட்ட வேறொரு குருப்பிரசாதி எழும்பவேண்டுமென்பதற்கு அவசியம் என்ன?

12. அப்படிக் குருத்துவம் கை மாறினபோதே, நியாயப்பிரமாணமும் மாறவேண்டியது அவசியமாமே.

13. ஆனால் இவைகள் எவரைக் குறித்துச் சொல்லப்பட்டிருக்கிறதோ, அவர் வேறொரு கோத்திரத்தைச் சேர்ந்தவர். அந்தக் கோத்திரத்தில் எவனும் பலிபீடத்துக்கு ஊழியம் பண்ணி னவனல்ல.

14. நம்முடைய ஆண்டவர் யூதாவின் கோத்திரத்தில் பிறந்தார் என்பது வெட்டவெளியாய் இருக்கின்றது. குருத்துவ விஷயமாய் அந்தக் கோத்திரத்தைப்பற்றி மோயீசன் ஒன்றுஞ் சொல்லவில்லையே.

15. அல்லாமலும் மெல்க்கிசதேக்குக்கு ஒப்பனையாக வேறொரு குருப்பிரசாதி எழும்புவாராகில், மேற்சொல்லியது இன்னும் அதிகமாய் வெளியாகின்றது.

16. இவர் மாம்ச சம்பந்தமான கட்டளையாகிய பிரமாணத்தின்படி குருவாகாமல், அழியாத ஜீவியத்துக்குரிய வல்லமையின்படி குருப்பிரசாதியானார்.

17. ஏனெனில் நீர் மெல்க்கிசதேக்கின் முறைமைப்படி எந்நாளும் குருப்பிரசாதியாயிருக்கிறீர் என்று சத்தியமாய்ச் சொல்லப்பட்டிருக்கின்றது. (சங். 109:4.)

18. இதற்கு முந்திய நியாயப்பிரமாணம் பலவீனமுள்ளதும், உபயோக மற்றதுமாய் போனதினாலே அது தள்ளு படியாயிற்று.

19. ஏனெனில் அந்தப் பிரமாணமானது யாதொன்றையும் உத்தமமாக்கவில்லை. ஆனால் நம்மைச் சர்வேசுரனிடத்தில் நெருங்கிப் போகச்செய்கிற மேலான நம்பிக்கைக்கு அது ஓர் வழியாயிருந்தது.

20. இவர் ஆணையின்பேரில்தான் குருப்பிரசாதியானார் என்பது எவ்வளவு பெரிய காரியம். மற்றவர்கள் ஆணை யின்றிக் குருக்களானார்கள்.

21. இவரையோவெனில் ஆண்டவர்: நீர் எந்நாளும் குருவாயிருக்கிறீரென்று நான் ஆணையிடுகிறேன். அதனிமித்தம் நான் மனம் வருந்துகிறதில்லையென்று சொல்லி ஆணையின்பேரில் குருவாக்கினார். (சங். 109:4.)

22. ஆகையால் சேசுநாதர் ஆணையின்பேரில் குருப்பிரசாதியானது எவ்வளவு பெரிதோ, அவ்வளவு மேன்மையான உடன்படிக்கைக்குப் பிணையாளியானார்.

23. அன்றியும் அந்தக் குருக்கள் மரணத்தின் நிமித்தம் எப்பொழுதும் நிலைநிற்கக் கூடாதவர்களானபடியால், அநேகர் குருக்களாக ஏற்படுத்தப்பட்டார்கள்.

24. இவரோ நித்தியகாலம் நிலைத்திருப்பவரானதால் என்றென்றைக்கும் குருத்துவம் உள்ளவராயிருக்கிறார்.

25. ஆகையால் இவர் நமக்காக மனுப்பேசுவதற்கு எப்போதும் ஜீவிய ராயிருந்து, தமது மூலமாய்ச் சர்வே சுரனிடத்தில் அண்டிவருகிறவர்களை என்றென்றைக்கும் இரட்சிக்க வல்ல வராயிருக்கிறார்.

26. பரிசுத்தரும், மாசில்லாதவரும், அமலரும், பாவிகளினின்று பிரிக்கப்பட்டவரும், பரமண்டலங்களுக்கு மேலாக உயர்ந்தவருமாகிய இவ்வித பிரதான குருப்பிரசாதி நமக்கு உண்டாயிருப்பது தகுதியாமே.

27. இவர் மற்றக் குருப்பிரசாதிகளைப்போல் முன்பு தம்முடைய சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாள்தோறும் பலியிடவேண்டுவதில் லை. ஒரேவிசை தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்து இதை நிறைவேற்றி னார். (லேவி. 16:6.)

28. வேதப்பிரமாணமானது பலவீன முள்ள மனிதர்களைக் குருப்பிரசாதிக ளாக ஏற்படுத்துகிறது. வேதப்பிரமாணத்துக்குப்பிறகு ஆணையோடு சொல்லப் பட்ட வாக்கியமோ என்றென்றைக்கும் உத்தமராகிய சுதனையே ஏற்படுத்து கின்றது.

* 28. இதில் அவர் பழைய ஏற்பாட்டின் ஆசாரியர்களைப்போல் நாள்தோறும் பலியிடவேண்டியதில்லை. ஒரேவிசை தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்து இதை நிறைவேற்றினார் என்கிற வாக்கியம் இந்த நிருபம் 5-ம் அதி. 6-ம் வசன வியாக்கியானத்தில் காண்பித்தபடியே சேசுநாதர் அநுதினமும் சர்வேசுரனுக்குப் பலியிடுகிறவரென்கிற சத்தியத்துக்கு விரோதமென்று நினைக்கவேண்டாம். ஏனெனில், அதிலே சொல்லியிருக்கிறது போல் சேசுநாதர் கபாலமலையில் தம்மைப் பலியாக ஒப்புக்கொடுத்து, ஒரே ஒருவிசையாக நிறைவேற்றின இரத்தஞ்சிந்தின அந்த ஒரே பலியைத் தாம்தாமே இரத்தஞ் சிந்தாத மேரையாய்ப் பெரிய வியாழக்கிழமையே அப்பம் இரசம் இவற்றின் குணங்களுக்குள்ளே நிறைவேற்றி, அநுதினமும் அப்படி அதை நிறைவேற்றத் தம்முடைய அப்போஸ்தலர் களுக்குக் கற்பித்தார். ஆகையால் இரத்தஞ் சிந்தாத அந்தப் பலிபூசை அநுதினம் நடந்தாலும், சேசுநாதர் பலமுறை பாடுபட்டுத் தமது இரத்தம் சிந்துகிறாரென்று சொல்லக்கூடாது. அர்ச். சின்னப்பர் இதிலே சொல்லுகிறாப்போலே கர்த்தர் இரத்தஞ் சிந்துகிற பூசையை ஒரே ஒருவிசைதான் நிறைவேற்றினார். இதைப்பற்றியே அர்ச். சின்னப்பர் இந்த அதிகாரம் 24-ம் வசனத்தில் என்றென்றைக்கும் குருத்துவமுள்ளவரா யிருக்கிறாரென்று தெளிவாய்க் காட்டுகிறார்.