இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

யாத்திராகமம் - அதிகாரம் 06

தேவன் அதோனாயி என்கிற தம்முடைய திருநாமத்தை வெளிப்படுத்தினதும் - இஸ்றாயேல் புத்திரர்களுக்கு ஆறுதல் சொன்னதும் - மோயீசன், ஆரோன் என்பவர்களுடைய வம்ச அட்டவணையும்.

1. அப்போது கர்த்தர் மோயீசனை நோ க்கி: நாம் பரவோனுக்குச் செய்வதை நீ க்ஷணமே காணப்பெறுவாய். உள்ளபடி அவன் பலத்த (நமது) கரத்தைக் கண்டே அவர்களைப் போகவிட்டுப் பலவந்தமாய் அவர்களைத் தன்தேசத்திலிருந்து புறப்படும்படி தானே மன்றாடுவான் என்றருளினார்.

2. மீளவும் ஆண்டவர் மோயீசனை நோ க்கி: நாம் ஆண்டவர்;

3. நாம் அபிரகாமுக்கும் இசாக்குக்கும் யாக்கோபுக்கும் சர்வ வல்லப தேவனாய்த் தரிசனமானவராயிருக்கிறோம்; ஆனாலும் அதோனாயி என்னும் நமது நாமத்தை அவர்களுக்குத் தெரிவித்தோமில்லை.

* 3-ம் வசனம். 3: 14-க்குரிய வியாக்கியானத்தைக் காண்க. அதோனாயிக்கு ஆண்டவர் என்று அர்த்தம்.

4. அவர்கள் பரதேசிகளாய் அந்நியர்க ளாய்த் தங்கள் தேசமாகிய கானான் என்னும் தேசத்தை அவர்களுக்கு அளிப்பதாக அவர் களோடே உடன்படிக்கையைச் செய்தோம்.

5. எஜிப்த்தியர் அவர்களை உபாதித்ததி னிமித்தம் இஸ்றாயேல் புத்திரர் விட்ட பெரு மூச்சை நாம் கேட்டு நமது உடன்படிக்கை யை நினைத்தோம்.

6. ஆகையால் நீ நம் பேராலே இஸ்றாயேல் புத்திரரை நோக்கி: ஆண்டவராகிய நாமே, எஜிப்த்தியருடைய சிறையினின்றும் உங்க ளை விடுதலையாக்கி, அடிமைத்தனத்தி னின்றும் மீட்டிரட்சித்து ஓங்கிய கரத்தினாலும் மகா தண்டனைகளினாலும் உங்களை நாம் ஈடேற்றுவதுமன்றி,

7. உங்களை நமக்குப் பிரஜையாகச் சுவீகரித்துக்கொண்டு உங்கள் தேவனாக இருப்போம். பிறகு நீங்கள் உங்கள் தேவனாகிய ஆண்டவர் நாமென்று அறிவீர்கள். எந்த அடையாளத்தினாலென்று கேட்டால், உங்களை நாம் எஜிப்த்தியருடைய சிறையினின்று விடுவித்து,

8. அபிரகாம் இசாக் யாக்கோப் என்ப வர்களுக்கு நாம் ஆணையிட்டுக் கொடுப்பதா கத் திட்டமாய்ச் சொல்லிய தேசத்திலே உங்களைப் பிரவேசிக்கப் பண்ணுவதினாலே தான். உள்ளபடி ஆண்டவராகிய நாம் அதை உங்களுக்குச் சுதந்திரமாய்க் கொடுப் போமென்று சொல்வாயென்றார்.

9. அவ்வண்ணமே மோயீசன் இஸ்றா யேல் புத்திரருக்குச் சகலத்தையும் விவரித் துச் சொன்னான். அவர்களோ மன வியா குலத்தையும் தாளாத வேலையையும் பற்றி அவனுக்குச் செவிகொடுக்கவில்லை.

10. அதின் பிறகு கர்த்தர் மோயீசனை நோக்கி:

11. நீ பரவோன் என்னும் எஜிப்த்திய ராயனிடம் போய் அவன் இஸ்றாயேல் புத் திரரைத் தன் தேசத்தினின்று அனுப்பிவிடச் சொல் என்றார்.

12. மோயீசன் ஆண்டவருடைய சமூகத்திலே நின்று: இஸ்றாயேல் புத்திரர்கள் என் வாக்கியத்திற்குச் செவி கொடுக்க வில்லை; பரவோன் எப்படிச் செவிகொடுப் பான்? விசேஷம்: நான் விருத்தசேதன மில்லாத உதடுகளையுடையவன் அல்லோ என்றான்.

13. கர்த்தர் மோயீசனோடும் ஆரோனோ டும் அவ்வண்ணமே பேசினார். இஸ்றாயேல் புத்திரர்கள் எஜிப்த்து தேசத்திலே நின்று போகவேண்டிய விசேஷத்தைப் பற்றி அந் தப் புத்திரர்களிடத்திலும் எஜிப்த்திய அரசனான பரவோனிடத்திலும் அவர் சொல்லிய கட்டளை அவைகளேயாம்.

14. குடும்பக் கிரமப் பிரகாரமாய் வீட்டா ரின் தலைவர் யாரென்றால்: இஸ்றாயேலின் சேஷ்ட குமாரனான ரூபனுடைய புத்திரர்களாவன: ஏனோக், பள்ளு, எஸ்றோன், கார்மீ இவர்களே ரூபனுடைய வம்சத் (தலைவர்கள்);

15. சீமையோனின் மக்கள்: ஜாமுவேல், ஜாமீன், அகோத், ஜக்கிம், சோவார், கானா னைய ஸ்திரீயின் குமாரன் சாவூல் இவர்களே சீமையோனுடைய வம்சத் (தலைவர்கள்);

16. வம்சக் கிரமப்படி லேவியினுடைய மக்களின் பெயர்களோ: ஜேற்சோன், கா வாட், மேறாரி இவர்களேயாம். லேவியின் வாழ்நாட்களோ நூற்றுமுப்பத்தேழு வரு டங்களாம்.

17. ஜேற்சோனின் மக்கள்: தங்கள் வம் சக்கிரமப்படி: லோப்னி, சேமையீ.

18. காவாட்டின் மக்கள்: அம்ராம், இசார், ஏபிரோன், ஒசியேல். காவாட் வாழ்ந்த வருடங்களோ நூற்று முப்பத்துமூன்று.

19. மேறாரியின் மக்கள்: மொகோலியும் மூசியுமாம். இவர்களே வம்ச வரிசைப்படி லேவியினுடைய சந்ததிகள்.

20. அம்ராமோ தனது தந்தையின் சகோ தரனுடைய குமாரத்தியாகிய ஜொக்காபேட் என்பவளை விவாகம் செய்தான்: அவனுக்கு அவள் வயிற்றிலே மோயீசனும் ஆரோனும் பிறந்தனர். அம்ராம் வாழ்ந்த வருடங்களோ நூற்றுமுப்பத்தேழு.

* 20-ம் வசனம். மோயீசனும் ஆரோனும் தேவபிரஜைகளுக்குத் தூதர்களும் மந்திரிமாருந் தீர்க்கத்தரிசிகளுமானபடியால் அவர்களுடைய ஜென்மத்தின் வரலாறு இவ்விடத்திலே கூறப்பட்டிருக்கிறது நியாயம்.

21. இசாரின் மக்களோ: கோரையும், நெபேகும், செக்கிரியுமாம்.

22. ஒசியேலின் மக்களோ: மிசயேலும், எலிசபானும், செத்திரியுமாம்.

23. ஆரோனோவென்றால் அமினதாபின் குமாரத்தியும் நாசோனின் சகோதரியுமான எலிசபேட் என்பவளை விவாகம் செய் தான். இவள் அவனுக்கு நதாப், அபியு, எலியெசார், இட்டமார் என்பவர்களைப் பெற்றாள்.

24. கோரையின் மக்களோ: ஆசேரும், எல்கானாவும், அபியசாபுமாம். இவர்கள் கோரையுடைய வம்சங்களாமே.

25. ஆரோனின் குமாரனாகிய எலியெசா ரோவென்றால் புத்தியேலுடைய குமாரத்தி களில் ஒருத்தியை விவாகஞ் செய்தான். இவள் அவனுக்குப் பினேஸ் என்பவனைப் பெற்றாள். வமிசாவமிச வரிசைப்படி லேவி யர் கோத்திரத்தாரின் தலைவர் இவர்களே.

26. இஸ்றாயேல் புத்திரரை அணியணி யாக எஜிப்த்து தேசத்திலிருந்து வெளிப் படுத்தவேணுமென்று கர்த்தரால் கட்டளை யைப்பெற்ற மோயீசனும் ஆரோனும் இவர் களே.

27. எஜிப்த்தினின்று இஸ்றாயேல் புத்திரரைக் கூட்டிக்கொண்டு போகும் பொருட்டு எஜிப்த்து ராயனாகிய பரவோனோடே பேசிக்கொண்டவர்களும் இவர்களே, மோயீசனும் ஆரோனும் இவர்களே.

28. எஜிப்த்து தேசத்தில் கர்த்தர் மோயீசனோடு திருவாக்கருளிய நாளிலே,

29. ஆண்டவர் மோயீசனை நோக்கி: நா மே ஆண்டவர், நாம் உன்னோடு பேசுகிறதெ ல்லாவற்றையும் எஜிப்த்து ராயனாகிய பரவோனுக்குச் சொல்வாய் என்று சொன்னபோது,

30. மோயீசன் ஆண்டவருடைய சமூகத்திலே நின்று: அடியேன் விருத்தசேதனமில்லாத உதடுகளையுடையவனாயிருக்க, பரவோன் எனக்கு எப்படி செவி கொடுப்பான் என்றனன்.