இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

எபிரேயருக்கு எழுதிய நிருபம் - அதிகாரம் 05

பிரதான குருப்பிரசாதியுடைய குணாகுணங்களையும் உத்தியோகத்தையும் வருணித்து சேசுக்கிறீஸ்துநாதர் நம்முடைய பிரதான குருப்பிரசாதியென்று காண்பிக்கிறார்.

1. எந்தக் குருப்பிரசாதியும் மனிதர்களுக்குள்ளே தெரிந்துகொள்ளப்பட்டு, காணிக்கைகளையும் பாவங்களுக்காகப் பலிகளையும் செலுத்தும் படிக்குத் தேவாராதனைக்கடுத்த காரியங்களில் மனிதர்களுக்குச் சனுவாக ஏற்படுத்தப்படுகிறான்.

2. ஏனெனில் அவன் தானும் பலவீனஞ் சூழ்ந்தவனாயிருக்கிறபடியினாலே, அறிவீனரோடும், நெறி தவறுகிறவர்களோடும் துயரப்படுகிறவனாய் இருக்கவேண்டும.

3. அதனிமித்தம் அவன் ஜனங்களுக் காகப் பாவப்பரிகாரப் பலி ஒப்புக் கொடுக்கவேண்டியதுபோல், தனக்காக வும் பலி ஒப்புக்கொடுக்கவேண்டியது.

4. அன்றியும் ஆரோனைப்போல் சர் வேசுரனாலே அழைக்கப்பட்டாலொழிய ஒருவனும் இந்த மகிமைக்குத் தானாய் ஏற்படுகிறதில்லை. (யாத். 28:1.)

5. அப்படியே கிறீஸ்துநாதரும் குருப் பிரசாதியாகும்படி தம்மைத் தாமே உயர்த்தவில்லை. ஆனால்: நீர் என்னு டைய குமாரன். இன்று நான் உம்மை ஜெனிப்பித்தேன் என்று அவரை நோக் கிச் சொன்னவரே அவரை உயர்த்தி னார். (சங். 2:7.)

6. அப்படியே வேறோரிடத்திலும்: நீர் மெல்க்கிசதேக்கின் முறைமையின் படியே என்றென்றைக்கும் குருப்பிரசாதி யாய் இருக்கிறீர் என்று திருவுளம்பற்று கிறார். (சங். 109:4.)

* 6. பிதாவாகிய சர்வேசுரன் தம்முடைய திருக்குமாரனைப் பார்த்து ஆணையிட்டு: மெல்க்கிசதேக்கின் முறைமையின்படிக்கு நீர் என்றென்றைக்கும் பூசிக்கிற குருவாயிருக்கிறீர் என்று திருவுளம்பற்றினார். அந்த மெல்க்கிசதேக்கோவெனில் அப்பத்தையும் திராட்ச இரசத்தையும் பலிபூசையாக ஒப்புக்கொடுத்துக்கொண்டு வந்தார் என்று ஆதியாகமம் 14-ம் அதி. 18-ம் வசனத்தில் காண்கிறோம். ஆகையால் சேசுநாதரும் மெல்க்கிசதேக்கின் முறைமையின்படிக்குக் குருவாயிருக்கக்கொள்ள, அவரும் அப்பத்தையும் திராட்ச இரசத்தையும் பலிபூசையாக அவசியமாய்ப் பலியிடுகிறவராயிருக்க வேண்டியது. இல்லாவிட்டால் மெல்க்கிசதேக்கின் முறைமைகளின்படிக்குக் குருவாயிருக்கமாட்டார். அப்பமும் திராட்ச இரசமுமுள்ள அந்தப் பலிபூசையைஅவர் பெரிய வியாழக்கிழமையிலே தம்முடைய சீஷர்கள் முன்பாக நிறைவேற்றினதைக் காண்கிறோம். அப்பத்தையும் திராட்ச இரசத்தையுங்கொண்டு சேசுநாதர் அன்றைக்கு நிறைவேற்றின பூசையும், மறுநாள் தாம் கபாலமலையிலே ஒப்புக்கொடுக்கப்போகிற பலிபூசையும் ஒன்றுதானென்று அவர்தாமே காட்டத் திருவுளமாகி, உங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்படுகிற என் சரீரம் இதுவே என்று திருவுளம்பற்றினார். அல்லாமலும் மலேக்கியாஸ் தீர்க்கதரிசியானவர் முதல் அதிகாரம் 11-ம் வசனத்தில் சொல்லுகிறபடியே, சூரியன் உதிக்கிற இடந்துவக்கி அஸ்தமிக்கிற இடமட்டும் எல்லா இடங்களிலும் சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுக்கப்படும் உத்தமமான பலிபூசையும் அதுவேயல்லாமல் வேறில்லை. சேசுநாதர் என்றென்றைக்கும் அந்தப் பூசையை நிறைவேற்றவேண்டிய குருவாயிருக்கையிலே, சேசுநாதர் நித்திய குருவாக என்றென்றைக்கும் நிறைவேற்றவேண்டிய பூசை இதுவேயல்லாமல் வேறில்லை. அதனிமித்தம் அவர் தம்முடைய அப்போஸ்தலர்களைப் பார்த்து: நீங்கள் இதைச் செய்யும்போதெல்லாம் என்னை நினைவுகூர்ந்து, அதாவது: என் நாமத்தினால் செய்வீர்களாக என்று கற்பித்தார் என்று அறிவோம். ஏனெனில் திருச்சபைக்கு குருமார்கள் அத்திவ்விய பூசையை நிறைவேற்றும்போது சேசுநாதருக்குப் பதிலாளிகளாய் இருக்கிறார்களொழிய தங்கள் சுயசெய்கையாகப் பலியை ஒப்புக்கொடுப்பதில்லை. ஆனால் சேசுநாதருடைய வார்த்தையாகத்தானே: இது என் சரீரம் என்றும், இது என் இரத்தம் என்றுஞ் சொல்லிப் பலியை நிறைவேற்றுகிறார்கள். ஆதலால் உலகமெங்கும் திருச்சபைக் குருமார்களாலே ஒப்புக்கொடுக்கப்படுகிற பலிபூசைக்கு சேசுநாதர் தாமே பிரதான குருவும் பிரதான பலியிடுகிறவருமாயிருந்து மெல்க்கிசதேக்கின் முறைமையின்படிக்கு என்றென்றைக்கும் பூசித்துக்கொண்டுவருகிற குருவாயிருக்கிறார்.

7. இவர் தம்முடைய மாம்ச ஐக்கிய நாட்களில் தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி உரத்த சத்தத்தோடும், கண்ணீர்களோ டும் விண்ணப்பங்களையும், மன்றாட்டு களையும் ஒப்புக்கொடுத்தபோது, தம் முடைய பயபக்தியைப்பற்றிக் கேட் டருளப்பட்டார்.

8. அவ்வண்ணமே அவர் தேவசுதனா யிருந்தும், தம்முடைய பாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு,

9. சம்பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்பட்டிருக்கிற யாவருக்கும் நித்திய ஈடேற்றத்தின் காரணராகி,

10. மெல்க்கிசதேக்கின் முறைமையின்படியே பிரதான குருப்பிரசாதி என்று சர்வேசுரனால் நாமம் சூட்டப் பட்டார்.

11. இந்த மெல்க்கிசதேக்கைப்பற்றி நாம் விஸ்தாரமாய்ப் பேசலாம். ஆயினும் நீங்கள் கேட்கச் சக்தியற்றவர்களாகை யால், அதை விளங்கப்பண்ணுகிறது கூடாத காரியம்.

12. எப்படியெனில், காலத்தைப் பார்த்தால் போதகராய் இருக்கவேண்டிய உங்களுக்குச் சர்வேசுரனுடைய வாக்கியங்களின் முதல் நூலாதாரங்களை மறுபடியும் உபதேசிக்க வேண்டியதாயிருக்கிறது. நீங்கள் பலமான போஜனத்தையல்ல, பாலையே உண்ண வேண்டியவர்களாய் இருக்கிறீர்கள்.

13. பால்குடிக்கிற எவனும், குழந்தையாயிருக்கிறபடியினாலே, நீதிமொழி யை அறியக்கூடியவனல்ல.

14. பூரண வயதுள்ளவர்களுக்குப் பலமான ஆகாரம் தகும். ஏனெனில் இவர்கள் நன்மை தின்மை பகுத்தறியும்படி வழக்கத்தினால் அப்பியாசப் பட்ட புலன்களை உடையவர்கள்.