இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

யாத்திராகமம் - அதிகாரம் 04

தேவன் அநேக அற்புதங்களைக் காட்டி மோயீசனை ஸ்திரப்படுத்தினதும் - மோயீசன் திரும்பி எஜிப்த்து தேசத்திற்குப் போனதும் - ஆரோன் அவனுக்குத் துணையாக நியமிக்கப்பட்டதும்.

1. அப்பொழுது மோயீசன் (கர்த்தரை நோக்கி): அவர்கள் என்னை நம்பவும், என் வாக்குக்குச் செவி கொடுக்கவுமாட்டார்கள்; கர்த்தர் உனக்குத் தரிசனமாகவில்லை என்று சொல்வார்களாக்கும் என்று பதில் கூற,

2. அவர் அவனை நோக்கி: உன் கையிலிருக்கிறதென்ன என்றார். அவன்: அது ஒரு கோல் என்று உத்தரஞ் சொல்ல,

3. ஆண்டவர்: அதைத் தரையிலே போடு என்றார். அவன் போடவே, அது சர்ப்பமாக மாறுபட்டுப்போனது கண்டு மோயீசன் விலகியோடினான்.

4. அப்பொழுது கர்த்தர்: உன் கையை நீட்டி அதின் வாலைப் பிடி என்று சொல்ல, அவன் பிடிக்கவே, அது அவன் கையிலே கோலாயிற்று.

5. ஆண்டவர் பிதாக்களின் தேவனாகிய கர் த்தர், அபிரகாமின் தேவன், இசாக்கின் தே வன், யாக்கோபின் தேவனாயிருக்கிறவரே உனக்குத் தரிசனமாயினாரென்று அவர்கள் நம்பும்பொருட்டு (இதுவே அடையாளம்) என்றார்.

6. மீண்டும் ஆண்டவர்: உன் கையை உன் மடியிலே வை என, அவன் மடியிலே வைத் தெடுத்தபோது, அது உறைந்த நீர்போல வெண்குஷ்டரோகம் பிடித்திருந்தது.

7. அவர்: உன் கையைத் திரும்பவும் உன் மடியிலே வையென, அவன் திரும்ப வைத்தெடுத்துப் பார்க்க, அது மற்றச் சதையைப் போலிருந்தது.

8. அப்பொழுது கர்த்தர்: சிலவேளை அவர்கள் முந்தின அடையாளத்தைக் கண்டு நம்பா மலும், உன் வார்த்தைக்குச் செவிகொடாம லுமிருப்பார்களானால், பிந்தின அடையாளத்தைக் கண்டு உன்னை நம்புவார்கள்.

9. அவர்கள் இவ்விரண்டு அற்புதங்களையும் கண்டு நம்பாமலும் உன் வார்த்தைக்குச் செவிகொடாமலும் இருப்பார்களேயாகில், அப்பொழுது நதி ஜலத்தை மொண்டு அதைத் தரையில் ஊற்றி விடு, நதியில் மொண்ட தண்ணீரெல்லாம் இரத்தமாக மாறிப் போ மென்றார்.

10. மோயீசன்: சுவாமீ! மன்றாடுகிறேன் கேளும்; நேற்றிலும் முன்றாநேற்றிலும் நான் வாக்குவல்லவனல்ல; விசேஷம்: தேவரீர் அடியேனுக்குத் திருவாக்கருளினது முதற் கொண்டு நான் திக்குவாயனும், மந்தநாவு முள்ளவனானேன் என்றான். 

11. ஆண்டவர் அவனை நோக்கி: மனிதன் வாயை உண்டாக்கினவர் யார்? அல்லது ஊமையனையும் செவிடனையும், கண் தெரிந்தவனையும் குருடனையும் படைத்தவர் யார்? நாமல்லவா?

12. ஆகையால் நீ போ, நாம் உன் வாயோடிருந்து நீ பேசவேண்டியதை உனக்குப் போதித்துக் கொடுப்போம் என்றார்.

13. அதற்கவன்: ஆண்டவரே! கெஞ்சிக் கே ட்கிறேன்: எவனை அனுப்புவிக்கிறீரோ அவனை அனுப்பியருளும் என்று சொல்லக் கேட்டு,

14. ஆண்டவர் மோயீசன்மேல் சினங்கொண்டவராய்: லேவியனாகிய ஆரோன் என்னும் உன் சகோதரன் வாக்கு வல்லவனென்று அறிந்திருக்கிறோம். அதோ அவன் உனக்கு எதிர்கொண்டு வருகிறானே, உன்னைக் கண்ட மாத்திரத்தில் மனமகிழ்வான்.

15. நீ அவனோடு பேசி நமது வாக்குகளை அவன் வாயிலே போடு: நாமோ உன் வாயிலும் அவன் வாயிலும் இருந்து நீங்கள் செய்ய வேண்டியதை உங்களுக்கு உணர்த்துவோம்.

16. அவன் உனக்குப் பதிலாகப் பிரஜையிடம் பேசி உனக்கு வாயாகவிருப்பான். நீயோ கடவுளுக்கு அடுத்தவைகளில் அவனுக்கு உபதேசியாவாய்.

17. இந்தக் கோலையும் உன் கையில் பிடித் துக் கொண்டு போ. அதைக்கொண்டே அற்புதங்களைப் பண்ணிவருவாய் என்றருளினார்.

18. மோயீசன் போய்த் தன் மாமனாராகிய ஜெத்திரோ என்பவனிடத்திற்குத் திரும்பி வந்து: நான் புறப்பட்டுப் போய் எஜிப்த்திலிருக்கிற என் சகோதரர் இன்னும் உயிரோடிருக்கிறார்களோவென்று விசாரிக்கப் போகிறேன் என்று அவனுக்குச் சொல்ல, ஜெத்திரோ: சமாதானத்துடன் போகலாமென்று அனுப்பிவிட்டான்.

19. உள்ளபடி ஆண்டவர் மதியானிலே மோயீசனை நோக்கி: நீ எஜிப்த்துக்குத் திரும்பிப் போகலாம். ஏனென்றால் உன் உயிரை வாங்கத் தேடியவர்கள் எல்லோரும் இறந்து போனார்களென்றுரைத்தார்.

20. அப்பொழுது மோயீசன் தன் மனைவி யையும் குமாரர்களையும் அழைத்துக் கொண்டு அவர்களை வேசரியின் மீதேற்றித் தேவன் தந்த கோலைத் தன் கையில் ஏந்தினவனாய் எஜிப்த்துக்குப் போகப் பிரயாணமானான்.

* 20-ம் வசனம். தேவ கட்டளைப்படி மோயீசன் எஜிப்த்துக்குத் திரும்பிப் போகுமுன்னர், தனது இனத்தார் தேவ வாக்குத்தத்தங்களை மறவாதபடிக்கும், எஜிப்த்தியரால் நேரிடும் இக்கட்டுகளைப்பற்றி அவர்கள் மனஞ் சோராதபடிக்கும், தேவனால் ஏவப்பட்டு ஆதியென்னும் ஆகமத்தை எழுதினதன்றி, ஜோப் என்னும் ஆகமத்தையும் மொழிபெயர்த்து எழுதினாரென்பது பரம்பரையான சம்பிரதாயம்.

21. எஜிப்த்திற்குத் திரும்பிச் செல்லுகையிலோ ஆண்டவர் அவனை நோக்கி: நாம் உன் கையில் வைத்துக் கொடுத்த சகல அற்புதங்களையும் பரவோனின் முன் செய்யக் கவனமாயிரு; நாம் அவனுடைய மனதைக் கடினமாக விடுவோமாதலால் அவன் பிரஜையைப் போகவிடான்.

* 21-ம் வசனம். பரவோன் மகா பாவியாகித் தேவ கட்டளைகளை அனுசரியாமல் மீறிப் போகிறதினால், அவனுடைய அக்கிரமங்களுக்கு ஆக்கினையாக சுவாமி அவனைக் கைவிட்டு விட்டார். ஆனபடியால் அவன் மென்மேலும் அதிகமதிகமாய்ப் பாவத்திலே விழுந்தமிழ்ந்து வேண்டுமென்று கல்நெஞ்சன் ஆனான்.

22. அப்போது நீ அவனுக்குச் சொல்ல வேண்டியது என்னவெனில்: ஆண்டவர் சொல்லுகிறதாவது: இஸ்றாயேல் நமது சேஷ்ட புத்திரன். 

23. நமக்கு ஆராதனை செய்யும்படி நமது புத்திரனை அனுப்பிவிடு என்று நாம் உனக்குக் கற்பித்தும், நீ அவனை அனுப்பிவிட மாட்டேனென்றாய்; ஆதலால் இதோ நாம் உன் சேஷ்ட குமாரனைக் கொல்லவிருக்கின் றோம் என்பாய் என்றார்.

24. பின்னும் மோயீசன் வழியே போ கையில் ஆண்டவர் அவனுக்கு ஒரு சத்திரத்தி லே எதிர்ப்பட்டு அவனைக் கொல்ல எத் தனித்திருந்தார்.

25. உடனே செப்போறாள்அதி கருக்கான தோர் கல்லை எடுத்துத் தன் குமாரனது நுனித்தோலைச் சேதித்துப் பின்பு அவன் பாதங்களைத் தொட்டு: நீர் எனக்கு இரத்தப் பழிப் பத்தாவென்றாள்.

26. விருத்தசேதனத்தைப் பற்றி: இரத்தப் பழி பத்தாவென்று அவள் சொல்லிய மாத்தி ரத்தில் கர்த்தர் அவனை விட்டு விலகினார்.

27. இதனிடையில் ஆண்டவர் ஆரோனை நோக்கி: வனத்திலே மோயீசனுக்கு எதிர் கொண்டு போவென்று சொல்ல, அவன் போய்த் தேவமலையிடத்தே அவனுக்கு எதிர் கொண்டு அவனை முத்தமிட்டனன்.

28. அப்பொழுது மோயீசன் தன்னை அனுப்பிய ஆண்டவருடைய சகல வாக்கியங்களையும், அவர் கட்டளையிட்ட அற்புதங்களையும் ஆரோனுக்கு விவரித்துச் சொன்னான்.

29. பின்னும் இருவரும் கூடப் போய், இஸ்றாயேல் புத்திரரில் பெரியோர்களாகிய அனைவோரையும் கூட்டங் கூட்டினார்கள்.

30. அப்போது ஆண்டவர் மோயீசனுக்குச் சொல்லியிருந்த சகல வாக்கியங்களையும் ஆரோன் சொல்லி, ஜனங்களுக்கு முன்பாக அற்புதங்களையும் செய்தான்.

31. ஜனங்கள் விசுவசித்தார்கள். ஆண்டவர் இஸ்றாயேல் புத்திரரைச் சந்தித்தாரென்றும், அவர்களுடைய உபத்திரவங்களைக் கண்ணோக்கிப் பார்த்தாரென்றும் அவர்கள் அந்நேரத்திலறிந்து சாஷ்டாங்கமாய் விழுந்து தொழுதுகொண்டனர்.