இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பரிசுத்த பூசைப்பலியின் உன்னத மகத்துவம்

பரிசுத்த பூசைப்பலியின் உன்னத மகத்துவம், அப்பலியை நிறைவேற்ற அவசியமானவையாக இருக்கும் காரியங்களிலிருந்தும் தெளிவாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. 

பூசை ஒப்புக்கொடுக்கப் படுவதற்கு : 

1) கிறீஸ்துநாதரின் ஸ்தானத்திலிருந்து பலி நிறை வேற்றும் அபிஷேகம் பெற்ற ஒரு குருவானவர் தேவைப்படுகிறார்; 

2) அபிஷேகம் செய்யப்பட்ட ஒரு பலிபீடம் தேவைப்படுகிறது. அது ஒவ்வொரு தேவாலயத்திலும், சிற்றாலயத்தில் பிற பகுதிகளை விட உயர்வான இடத்தில் இருக்க வேண்டும். ஏனெனில் அது மாசு மறுவற்ற செம்மறிப்புருவையாகிய கிறீஸ்துநாதர் சிலுவையில் அறையப்பட்டு, பலியிடப்பட்ட கல்வாரியைக் குறிப்பதாக இருக்கிறது; 

3) பல வகையான குருத்துவ உடுப்புகள் தேவைப்படுகின்றன. அவை : 

அ) அமீஸ் என்னும் தோள்பட்டு, இதைக் குருவானவர் முதலில் தம் தலை மீது வைத்து, அதன்பின் கழுத்தைச் சுற்றி வைத்துக் கட்டிக் கொள்கிறார்; இது, கைப்பாஸின் வீட்டில் யூதர்கள் சேசுநாதரின் திருமுகத்தை மூடி, "உன்னனை அடித்தவன் யாரென்று எங்களுக்குச் சொல்" என்று கூறி அவரைப் பரிகாசம் செய்யப் பயன்படுத்திய லினன் துணியைக் குறிக்கிறது; 

ஆ) ஆல்ப் என்னும் நெடு வெண்ணங்கி, இது ஏரோதின் வீட்டில் ஒரு பைத்தியக்காரனாக ஏளனம் செய்யப்படுமாறு சேசுநாதருக்கு அணிவிக்கப் பட்ட வெண்ணாடையைக் குறிக்கிறது; 

இ) இடைக்கச்சை, குருவானவர் இதைக் கொண்டு தம் இடையைக் கட்டிக் கொள்கிறார்; இது ஒலிவத் தோட்டத்தில் கிறீஸ்துநாதரைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட கயிற்றைக் குறிக்கிறது; 

ஈ) கைப்பட்டு, இது குருவானவரின் இடது கரத்தில் அணியப்படுகிறது. இது கிறீஸ்துநாதரின் கரங்களைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட கயிறுகளைக் குறிக்கிறது; 

உ) கழுத்துப் பட்டு, இதைக் குருவானவர் தம் கழுத்தில் அணிந்து, அதன் முனைகளை ஒன்றுக்கொன்று குறுக்காக வைத்துக் கட்டிக் கொள்கிறார். இது, கிறீஸ்துநாதர் மரணத்திற்குத் தீர்வையிடப்பட்டபோது, அவரைப் பிணைத்திருந்த சங்கிலிகளைக் குறிக்கிறது; 

ஊ) பூசை ஆயத்தம்; இது சேசுநாதருக்கு அஞ்ஞான சேவகர்கள் முள்முடி சூட்டிய போது, அவருக்கு அணிவித்த இரத்தாம்பர உடையைக் குறிக்கிறது; பூசை ஆயத்தத்தின் மீதுள்ள சிலுவை, கிறீஸ்துநாதர் ஆணிகளால் அறையப்பட்ட சிலுவையைக் குறிக்கிறது; அதிலுள்ள தூண், சேசுநாதர் கசைகளால் அடிக்கப்படுவதற்காகக் கட்டப்பட்ட தூணைக் குறிக்கிறது; 

4) மந்திரிக்கப்பட்ட திருக்கிண்ணம் அவர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையை, அல்லது அவர் பருக வேண்டியிருந்த கசப்பான கிண்ணத்தைக் குறிக்கிறது; 

5) கிண்ணத்தை மூடப் பயன்படுத்தப்படும் பல்லா; இது அவரது கல்லறையை மூடிய பெரிய கல்லைக் குறிக்கிறது; 

6) அப்பத் தட்டு, அல்லது சிறிய வெள்ளித் தட்டு, அவரது திருச்சரீரம் அடக்கம் செய்யப்படுவதற்கு முன், அதில் பூசப்பட்ட தைலங்கள் இருந்த பாத்திரங்களைக் குறிக்கிறது; 

7) ஒரு திருமேனித் துகில், அல்லது மெல்லிய, சதுர வடிவிலான லினன் துகில், இது சேசுநாதரின் திருச்சரீரத்தைச் சுற்றிக் கட்டப்பட்ட அடக்கத் துகிலைக் குறிக்கிறது; மேலும், 

8) ஒரு சுத்திகரத் துகில் உள்ளது, அது திருக்கிண்ணத்தைத் துடைக்கப் பயன் படுத்தப்படும் சிறு துணியாகும், இது அவரது அடக்கத்தின் போது பயன்படுத்தப்பட்ட மற்ற துணிகளைக் குறிக்கிறது; 

9) திருக்கிண்ணத்தை மூடப் பயன்படுத்தப்படும் பட்டுத்துணி, இது அவரது மரணத்தின் போது, மேலிருந்து கீழாக இரண்டாகக் கிழிந்த தேவாலயத் திரையைக் குறிக்கிறது; 

10) இரு சிறு குடுவைகள்; இவை, சிலுவையின் மீது அவருக்குக் குடிக்கத் தரப்பட்ட பிச்சுக் கலந்த காடி வைக்கப்பட்டிருந்த பாத்திரங்களைக் குறிக்கிறது; இவை தவிர, 

11) ஒரு பெரிய அப்பமும், 

12) திராட்சை இரசமும், 

13) தண்ணீரும், 

14) இரண்டு மெழுகுவர்த்திகளும் ; 

15) இரண்டு மெழுகுவர்த்தித் தண்டுகளும்; 

16) ஒரு பூசைப் புத்தகமும், 

17) அதை வைக்க ஒரு சட்டம் அல்லது திண்டும்; 

18) பீடத்தின் மீது விரிக்க, மூன்று பீடத் துகில்களும்; 

19) ஒரு லாவாபோ, அல்லது குரு கைகளைக் கழுவியபின் விரல்களைத் துடைக்கப் பயன்படுத்தும் சிறு துகிலும்; 

20) ஒரு மணியும் ; 

21) பீடத்தின் நடுவில் ஒரு பாடுபட்ட சுரூபமும்; 

22) குருவுக்குப் பதில் கூற ஒரு பீடப் பரிசாரகனும் பூசைக்குத் தேவை. 

ஏறக்குறைய இந்த எல்லாப் பொருட்களும் பூசைக்கு அத்தியாவசியமானவை. எந்த அளவுக்கு இவை அவசியம் என்றால், முழுமையான அவசியமின்றி இவற்றில் எதையாவது அலட்சியம் செய்யும் குருவானவர் ஒரு கனமான பாவம் கட்டிக் கொள்கிறார். இதற்கு ஓர் உதாரணத்தை நாம் இங்கு தருகிறோம் :