21. உன் நற்செயல்களோடு சேர்ந்துள்ள குறைபாடுகளில் பலவற்றை அவர் அகற்றுகிறார்.
22. பாவசங்கீர்த்தனத்தில் நீ ஒருபோதும் சொல்லியிராத, மறக்கப்பட்ட அல்லது உனக்குத் தெரியாத பாவங்களை அவர் மன்னிக்கிறார்.
23. உன் பாவக் கடன்களிலும், மீறுதல்களிலும் குறைந்த பட்சம் ஒரு பகுதிக்காவது பரிகாரம் செய்யும் பலிப் பொருளாக அவர் தம்மையே ஒப்புக்கொடுக்கிறார்.
24. நீ பூசை காணும் ஒவ்வொரு முறையும், மிகக் கடுமையான தவ முயற்சிகளை விட அதிகமாக உன் பாவங்களுக்குரிய பரிகாரத்தை நீ செலுத்தலாம்.
25. கிறீஸ்து பேறுபலன்களின் ஒரு பகுதியை உன் கணக்கில் வைக்கிறார். நீ உன் பாவங்களுக்குப் பரிகாரமாக, பிதாவாகிய சர்வேசுரனுக்கு அவற்றைச் செலுத்தலாம்.
26. உனக்காகக் கிறீஸ்துநாதர் தம்மையே அனைத்திலும் அதிக பயனுள்ள சமாதானப் பலியாக ஒப்புக்கொடுக்கிறார். சிலுவையின் மீது தமது எதிரிகளுக்காக அவர் பரிந்து பேசியது போல, உனக்காகவும் அவர் ஏக்கத்தோடு பரிந்து பேசுகிறார்.
27. அவரது விலை மதியாத திரு இரத்தம், அவரது புனித இரத்த நாளங்களிலிருந்து வெளிப்பட்ட இரத்தத் துளிகளுக்கு ஒப்பான கணக்கற்ற வார்த்தைகளில் உனக்காகப் பரிந்து பேசி ஜெபிக்கிறது.
28. அவரது திருச்சரீரம் தாங்கிய ஆராதனைக்குரிய ஒவ்வொரு காயமும் உனக்காக இரக்கத்தை உரக்க மன்றாடும் குரலாக இருக்கிறது.
29. இந்தப் பரிகாரப் பலியானவரின் நிமித்தமாக, பூசையின் போது நீ முன்வைக்கும் விண்ணப்பங்கள், மற்ற சமயங்களில் உனக்கு வழங்கப்படுவதை விட அதிசீக்கிரமாக உனக்கு வழங்கப்படும்.
30. பூசையில் பங்குபெறும்போது ஜெபிப்பதைப் போல அதிக நன்றாக வேறு ஒருபோதும் உன்னால் ஜெபிக்க முடியாது.
31. இது ஏனெனில் கிறீஸ்துநாதர் தம் ஜெபங்களை உன் ஜெபங்களோடு இணைத்து, அவற்றைத் தம் பரலோகப் பிதாவுக்கு ஒப்புக்கொடுக்கிறார் என்பதாலேயே.
32. அவர் உன் தேவைகளோடும், நீ உள்ளாகக் கூடிய ஆபத்துக்களையும் அறிந்து கொள்கிறார், உனது நித்திய இரட்சணியத்தைத் தமது தனிப்பட்ட கவலையாக்கிக் கொள்கிறார்.
33. கூடியிருக்கும் தேவதூதர்களும் கூட உனக்காக மன்றாடு கிறார்கள், உன் பரிதாபமான ஜெபங்களைக் கடவுளின் சிம்மாசனத்திற்கு முன்பாக ஒப்புக்கொடுக்கிறார்கள்.
34. உன் நிமித்தமாகக் குரு பூசை நிறைவேற்றுகிறார். அதன் பலனாக தீய சத்துரு உன்னை நெருங்கத்துணிய மாட்டான்.
35. உனக்காகவும், உன் நித்திய இரட்சணியத்திற்காகவும் அவர் பூசை நிறைவேற்றுகிறார், சர்வ வல்லபரான கடவுளுக்குப் பரிசுத்த பலியை ஒப்புக்கொடுக்கிறார்.
36. நீ பூசை காணும்போது, நீ உன்னிலேயே உன் ஆவியில், உனக்காகவும், மற்றவர்களுக்காகவும் பூசை ஒப்புக்கொடுக்கக் கிறீஸ்துவானவரால் அதிகாரம் பெற்றுள்ள ஒரு குருவாக ஆகிறாய்.
37. இந்தப் பரிசுத்த பலியை ஒப்புக்கொடுப்பதன் மூலம் நீ பரிசுத்த தமத்திரித்துவத்திற்கு அனைத்து காணிக்கைகளிலும் அதிக ஏற்புடைய பலியைச் செலுத்துகிறாய்.
39. உண்மையாகவே விலைமதிக்க முடியாததாக இருக்கும் ஒரு பலியை நீ ஒப்புக்கொடுக்கிறாய், ஏனெனில் இந்தப் பலி, கடவுளேயன்றி வேறு எதுவுமில்லை .
40. இந்தப் பலியால், கடவுளுக்கு மட்டுமே தகுதியுள்ள முறையில் அவருக்கு நீ மகிமை செலுத்துகிறாய்.