வியாகுல மாதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாகுல மாதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தேவமாதாவின் கண்ணீரின் ஜெபமாலை

(மாதா உலகில் இருக்கும்போதும், பல்வேறு காட்சிகளிலும், மற்றும் சுரூபங்களிலும் சிந்தும் கண்ணீர்களுக்குப் பரிகாரமாக)

ஜெபமாலையின் பாடுபட்ட சுரூபத்தில்:

சிலுவையில் அறையப்பட்ட சேசுவே!  உமது  பாதத்தடியில் சாஷ்டாங்கமாக விழுந்து, உமது துயரம் நிறைந்த சிலுவைப் பாதையில் அனுதாப வேதனையுடன் உம்மைப் பின்சென்ற உம் தாயின் கண்ணீர்களை உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம்.  நல்லவரான ஆண்டவரே!  உம் மிகப் புனித அன்னையின் கண்ணீர்கள் எங்களுக்குத் தரும் பாடங்களை நாங்கள் எங்கள் இருதயத்தில் ஏற்றுக் கொண்டு, அதனால் பூவுலகில் உமது திருச் சித்தத்தை நிறைவேற்றவும்,மோட்சத்தில் நித்தியத் திற்கும் உம்மைப் புகழ்ந்து துதிக்கவும் தகுதி பெற்றவர்களாகும்படி செய்தருள்வீராக. ‡ ஆமென்.

பெரிய மணிகளில்:

ஓ சேசுவே! நீர் உலகத்தி லிருக்கும்போது உம்மை அதிகமாய் நேசித்து, மோட்சத்தில் உம்மை மிகவும் அந்நியோந்நிய மாய் நேசிக்கிற உமது தாயின் கண்ணீர்களைப் பார்த்தருள்வீராக.

சிறிய மணிகளில்:

சேசுவே,, உம்முடைய மகா பரிசுத்த மாதாவின் கண்ணீர்களைப் பார்த்து, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். (இப்படி ஏழு விசை சொல்லவும்)

ஏழு மணி ஜெபத்திற்குரிய ஏழு மன்றாட்டுக்கள்

1. சேசுவே! ஓர் வாள் உம் இருதயத்தை ஊடுருவும் என்ற சிமையோனின் தீர்க்கதரிசனத் தைக் கேட்டு உமது மாதா சிந்திய கண்ணீர்களைப் பார்த்து எங்கள் துயர வேளைகளில் நாங்கள் விசுவாசத்திலும் உமது அன்பிலும் உறுதியோ டிருக்கக் கிருபை செய்வீராக.

2. சேசுவே!  உமது மாதா எஜிப்துக்கு ஓடிப் போனபோது சிந்திய கண்ணீர்களைப் பார்த்து எல்லா அகதிகள் மேலும், விசுவாசத்திற்காக உபத் திரவ வேதனைகளை அனுபவிக்கிறவர்கள் மேலும் இரக்கமாயிருப்பீராக!

3. சேசுவே!  மூன்று நாளாக உம்மைக் காணாமல் உமது தாய் தேடியலைந்தபோது சிந்திய கண்ணீர்களைப் பார்த்து, உம்மை இழந்து விட்ட ஆன்மாக்கள் மீண்டும் உம்மைக் கண்டடைய கிருபை செய்வீராக.

4. சேசுவே! உம்முடைய வேதனை நிறைந்த சிலுவையின் பாதையில் நீர் நடந்து சென்றபோது உமது தாய் சிந்திய கண்ணீர்களைப் பார்த்து, நோயாலும், துன்ப துரிதங்களாலும் நாங்கள் வருந்தும்போது எங்களுக்கு ஆதரவாயிருந்து, தப்பறை களில் விழுகிறவர்களின் வழியும், உயிரும் உண்மையும் நீரே என்பதை அவர்களுக்குக் காட்டி யருள்வீராக.

5. சேசுவே! நீர் சிலுவையிலே தொங்கி மரண அவஸ்தைப்படும்போது உமது மாதா வடித்த கண்ணீர்களைப் பார்த்து, மரண அவஸ்தையா யிருக்கிறவர்கள் மேல் இரக்கமாயிருந்து, நாங்கள் எங்கள் மரணத்தை உமது கரங்களிலிருந்து அன்போடு ஏற்றுக்கொள்ள கிருபை செய்வீராக.

6. சேசுவே! நீர் சிலுவையிலிருந்து இறக்கப் பட்டு மாதாவின் மடியில் வளர்த்தப்பட்டபோது, அத்தாய் சிந்திய கண்ணீர்களைப் பார்த்து, துன்ப வேதனைப்படுகிறவர்கள்மேல் இரக்கமாயிரும்.  அவர்களின் சக்திக்கு அதிகமான துன்பங்களை சர்வேசுரன் அனுமதிக்க மாட்டீர் என்ற உண்மையை அவர்கள் உணரச்செய்தருளும்.

7. சேசுவே!  நீர் கல்லறையிலே அடக்கம் செய்யப்பட்டபோது உமது மாதா சிந்திய கண்ணீர்களைப் பார்த்து நாங்கள் உம்மிலே உயிர்ப்போம் என்ற நம்பிக்கையால், மரண பயத்தை மேற்கொள்ள கிருபை செய்வீராக.  இந்நாட்களில் உம் சுரூபங்கள் சொரியும் கண்ணீர்களுக்குப் பரிகாரமாக எங்கள் துன்பங்களையும் எங்கள் அன்பையும் ஏற்றுக் கொள்வீராக.

கண்ணீர் ஜெபமாலையை “கிருபைதயாபத்து” மந்திரத்தைச் சொல்லி முடிக்கவும்.)

அர்ச். வியாகுலமாதா பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட மரியாயே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சர்வேசுரனுடைய அர்ச்சியசிஷ்ட மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கன்னியாஸ்திரீகளுக்குள்ளே உத்தம அர்ச்சியசிஷ்ட கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உபாதனையடைந்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வியாகுல மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கண்ணீர் சொரிந்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

துயரமடைந்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கைவிடப்பட்ட மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஆறுதலற்ற மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

குமாரனை இழந்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வாளால் ஊடுருவப்பட்ட மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சஞ்சலத்தில் அமிழ்ந்திய மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இருதயத்தினுள் சிலுவையையூன்றின மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மகா துக்கமுள்ள மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கண்ணீர்ச் சுனையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பாடுகளின் திரளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொறுமையின் கண்ணாடியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உறுதி நிலைமையின் குன்றே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

நம்பிக்கையின் பெட்டகமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கைவிடப்பட்டோர்களுக்கு அடைக்கலமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உபத்திரவப்படுகிறவர்களுக்கு கேடயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அவிசுவாசிகளின் ஜெயசீலியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

நிர்ப்பாக்கியர்களுக்கு ஆதரவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வியாதியஸ்தர்களுக்கு ஆரோக்கியமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மெலிந்தவர்களுக்குத் திடனே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

யாத்திரையில் அவதிப்படுகிறவர்களுக்குத் துறைமுகமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பெரும்புயலைத் தணித்தவளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

துன்பப்படுகிறவர்களுக்குத் தஞ்சமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

துஷ்டர்களுக்கு அச்சமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

விசுவாசிகளின் பொக்கிஷமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தீர்க்கத்தரிசிகளின் நேத்திரமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அப்போஸ்தலர்களின் உதவியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வேதசாட்சிகளின் கிரீடமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஸ்துதியர்களின் ஒளியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கன்னியாஸ்திரீகளின் ஆரமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கைம்பெண்களின் தேற்றரவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சகல அர்ச்சியசிஷ்டவர்களின் ஆனந்தமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

சேசுக்கிறீஸ்துநாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாகத் தக்கதாக, மிகவும் வியாகுலமுள்ள கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

சுவாமி தேவரீர் சிமியோன் தீர்க்கத்தரிசனம் சொன்னபடியே பாடுபட்ட பொழுது மகிமைப் பிரதாபமுள்ள கன்னித் தாயாரான மரியாயின் மகா மதுரமான ஆத்துமம் வியாகுல வாளால் ஊடுருவப்பட்டதாமே.  அவர்களின் வியாகுலத் தையும் வேதனையையும் வணங்கி ஆராதிக்கிற நாங்கள் அவருடைய சிலுவையைச் சுமுத்திரை யாய் நேசித்த சகல அர்ச்சியசிஷ்டவர்களின் மகிமையுள்ள பேறுகளினாலும் மன்றாட்டுக்களி னாலும் உமது திருப்பாடுகளின் பலனை அடையும்படி தயை புரிந்தருளும். ஆமென்.

1 பர. 1 அருள். 1 திரி.

தேவமாதா சிந்தின கண்ணீர்களுக்கிரங்கி மூன்று அருள் நிறை மந்திரம் சொல்லும் வகையாவது

மிகவும் வியாகுலம் நிறைந்த கன்னிகையே, உமது திருக்குமாரனுடைய ஜீவியத்திலும், மரணத்திலும் நீர் அழுத கண்ணீரைப் பார்த்து நாங்கள் செய்த பாவங்களுக்காக மனஸ்தாபமாயிருந்து உமக்கு ஆறுதல் வருமளவும் நாங்கள் பிரலாபித்தழ உம்மை மன்றாடுகிறோம். 

3 அருள் 1 திரி.

அர்ச். வியாகுல மாதா ஜெபமாலை

அர்ச். கன்னிமரியம்மாள் தமது திருக் குமாரனின் பாடுகள் நிமித்தமாக அநுபவித்த ஏழு வியாகுலங்களைத் தியானிப்போம்.

முதலாம் வியாகுலம்

இந்த முதல் இரகசியத்திலே அர்ச். கன்னி மரியம்மாளுக்குச் சிமியோன் சொன்ன தீர்க்கதரிசனத்தால் தமது திருக்குமாரனுடைய மரணத்தையும் மனுஷருடைய சேதத்தையும் அறிந்து, அவர்கள் தமது இருதயத்தில் வியாகுல வாளால் ஊடுருவப்பட்டார்களென்று தியானிப்போமாக. 1 பர. 7 அருள். 1 திரி.

இரண்டாம் வியாகுலம்

இந்த இரண்டாம் இரகசியத்தில் அர்ச். கன்னி மரியம்மாள் தமது திருக்குமாரனை ஏரோது என்பவன் கொல்லத் தேடுகிறதை அறிந்து, அவரை எடுத்துக் கொண்டு எகிப்து தேசத்துக்கு ஓடிப்போய் ஏழு வரு­மளவும் மகாதுக்கம் அநுபவித்தார்களென்று தியானிப்போமாக. 1 பர. 7 அருள். 1 திரி.

மூன்றாம் வியாகுலம்

இந்த மூன்றாம் இரகசியத்திலே அர்ச். கன்னி மரியம்மாள் தமது திருக்குமாரனோடு தேவாலயத்திற்குப் போனவிடத்தில் மூன்றுநாள் தேடியும் காணாமல் போனபடியினாலே தமது ஆத்துமத்தில் மிகுந்த வியாகுலப்பட்டார்களென்று தியானிப்போமாக. 1 பர. 7 அருள். 1 திரி.

நான்காம் வியாகுலம்

இந்த நான்காம் இரகசியத்திலே அர்ச். கன்னி மரியம்மாள் தமது திருக்குமாரன் கபால மலையில் மரணமடைய சிலுவை சுமந்து போகையில், அவரை எதிர்கொண்டு மினவினபோது வாக்குக் கெட்டாத வியாகுலப்பட்டார்களென்று தியானிப்போமாக. 1 பர. 7 அருள். 1 திரி.

ஐந்தாம் வியாகுலம்

இந்த ஐந்தாம் இரகசியத்திலே அர்ச். கன்னி மரியம்மாள் தமது திருக்குமாரன் சிலுவையில் அறையுண்டு அவர் சகலராலும் கைவிடப்பட்டு ஓர் ஆறுதலுமில்லாமல் மரணமடைகிறதைக் கண்டு துக்க சாகரத்தில் அமிழ்ந்தி மனோவாக்குக் கெட்டாத வியாகுலப்பட்டார்களென்று தியானிப்போமாக. 1 பர. 7 அருள். 1 திரி.

ஆறாம் வியாகுலம்

இந்த ஆறாம் இரகசியத்திலே அர்ச். கன்னி மரியம்மாள் தமது திருக்குமாரனுடைய திருச் சரீரத்தைச் சிலுவையினின்று இறக்கி தமது மடிமேல் வளர்த்தி அதிலுள்ள காயங்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கையில் சொல்லக் கூடாத வியாகுலம் அநுபவித்தார்களென்று தியானிப் போமாக. 1 பர. 7 அருள். 1 திரி.

ஏழாம் வியாகுலம்

இந்த ஏழாம் இரகசியத்திலே அர்ச். கன்னி மரியம்மாள் தமது திருக்குமாரனுடைய சரீரத்தைக் கல்லறையில் அடக்கம் பண்ணின பின்பு அவரது மரணத்தையும் திருப்பாடுகளையும் தமது தனிமையையும் நினைத்து மட்டில்லாத துயரம் அனுபவித்தார்களென்று தியானிப்போமாக. 1 பர. 7 அருள். 1 திரி.

அர்ச். கன்னிமரியாயின் ஏழு வியாகுலங்களைக் குறித்து ஜெபம்

1. வியாகுல மாதாவே, உமது ஆத்துமத்திலே வியாகுல வாள் ஊடுருவப்படுமென்று சிமியோன் தீர்க்கதரிசனம் சொன்னதைக் கேட்டு மிகுந்த வியாகுலப்பட்டீரே.  அந்த வியாகுலத் தைப் பார்த்து நான் இவ்வுலக சீவியத்தை சட்டை பண்ணாமல் பரலோக சீவியத்தை அடையும்படி உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ள உம்மை மன்றாடுகிறேன்.  அருள்.

2. வியாகுல மாதாவே, நீர் ஏரோதென்பவ னுக்குப் பயந்து உமது திருக்குமாரனை எடுத்துக் கொண்டு எஜிப்து தேசத்துக்கு ஓடிப் போகிற போது நீர் மிகுந்த வியாகுலப்பட்டீரே.  அந்த வியாகுலத்தைப் பார்த்து நான் பசாசின் தந்திரங் களுக்குத் தப்பிப் பரலோக வழி தவறாமல் நடக்க உம்மை மன்றாடுகிறேன்.  அருள்.

3. வியாகுல மாதாவே, உமது திருக்குமாரன் பன்னிரண்டு வயதில் மூன்று நாள் காணாமல் போனதால் மிகுந்த வியாகுலப்பட்டீரே.  அந்த வியாகுலத்தைப் பார்த்து நான் பாவத்தினால் அவரை இழந்து போகாதபடிக்கு உம்மை மன்றாடுகிறேன்.  அருள்.

4. வியாகுல மாதாவே, உமது திருக்குமாரன் பாரமான சிலுவையைச் சுமந்து போகிறதைக் கண்டு நீர் மிகுந்த வியாகுலப்பட்டீரே.  அந்த வியாகுலத்தைப் பார்த்து, பாவத்தினால் எனக்கு வருகிற கஸ்திகளை இம்மையில் நான் பொறுமை யோடு சகிக்கவும் மறுமையில் ஈடேற்றம் அடையவும் உம்மை மன்றாடுகிறேன்.  அருள்.

5. வியாகுல மாதாவே, உமது திருக்குமாரன் எண்ணிக்கையில்லாத கஸ்தி வேதனைப்பட்டுச் சிலுவையிலே மரணம் அடைந்ததைக் கண்டு நீர் மிகுந்த வியாகுலப்பட்டீரே. அந்த வியாகுலத்தைப் பார்த்து அவருடைய திருப்பாடுகளையும் வேதனை களையும் நான் நினைத்து நல்ல மரணமடைய உம்மை மன்றாடுகிறேன்.  அருள்.

6. வியாகுல மாதாவே, உமது திருக்குமார னுடைய திருச்சரீரத்தை உமது திருக்கரங்களில் வளர்த்தி அதைக்கட்டி மினவிக் கொண்டபோது மிகுந்த வியாகுலப்பட்டீரே, அந்த வியாகுலத் தைப் பார்த்து அவருடைய மரண நினைவு என்னிருதயத்தில் பதிந்திருக்கவும், நான் என் பாவங்களுக்காக எப்போதும் கண்ணீர் சொரிந்து அழவும் உம்மை மன்றாடுகிறேன்.  அருள்.

7. வியாகுல மாதாவே, உமது திருக்குமார னுடைய திருச்சரீரத்தைக் கல்லறையில் அடக்கின பிற்பாடு நீர் மிகுந்த வியாகுலப்பட்டீரே, அந்த வியாகுலத்தைப் பார்த்து நான் ஒருபோதும் சர்வேசுரனை விட்டுப் பிரிந்து தனிமையாயிராத படிக்கு உம்மை மன்றாடுகிறேன்.  அருள்.

சேசுக்கிறீஸ்துநாதருடைய திருவாக்குத்தத்தங் களுக்கு நாங்கள் பாத்திரவான்களாகத்தக்கதாக, மிகவும் வியாகுலமுள்ள கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

எங்கள் ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துவே, தேவரீர் பாடுபடும் வேளையில் உமது திருமாதாவின் ஆத்துமம் வியாகுல வாளால் ஊடுருவப்பட்டதே.  அந்தத் தாயாராகிய பரிசுத்த கன்னிமரியம்மாள் எப்போதும் எங்கள் மரணநேரத்திலும் உமது இரக்கத்தினிடமாக எங்களுக்காக மனுப்பேசும்படி அநுக்கிரகம் செய்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம்.  பிதாவோடும் இஸ்பிரீத்து சாந்துவோடும் சதாகாலம் சீவியராய் இராச்சிய பரிபாலனம் செய்துவரும் உலக இரட்சகராகிய சேசுக்கிறீஸ்துவே, இந்த மன்றாட்டை எங்க ளுக்குத் தந்தருளும். 

ஆமென். 

(300 நாள் பலன்.)

சேசுவிடமும் மாதாவிடமும் ஜெபம்.

ஆண்டவராயிருக்கிற சேசுக்கிறிஸ்துவே, உமது திருப்பாடுகளின் வேளையில் தன் ஆத்துமத்தில் வியாகுல வாளால் ஊடுருவப்பட்ட உமது திருத்தாயாரும், நித்திய கன்னிகையுமான மாமரி, இரக்கத்தின் சிங்காசனத்திற்கு முன்பாக இப்பொழுதும், எங்கள் மரண நேரத்திலும் எங்களுக்காகப் பரிந்து பேசுவார்களாக.
ஆமென்.

பரிசுத்த இராக்கினியே, அடியேன் என் இருதயத்தில் உம்முடைய வியாகுலங்களையும், நேசத்தையும் உணரும்படியாக, உமது திருக்காயங்களை என் இருதயத்தில் பதியச் செய்தருளும். உமக்காக எனக்கு வரும் ஒவ்வொரு வியாகுலத்தையும் நான் பொறுமையோடு தாங்கும்படியாக எனக்கு வியாகுலங்களையும், உமக்காக மற்றெல்லா உலக நேசங்களையும் நான் வெறுத்துத் தள்ளும்படியாக, உம்மீது நேசத்தையும் எனக்குத் தந்தருளும்.

ஆமென்.

தேவ நீதியை சாந்தப்படுத்தும்படியாக மகா பரிசுத்த கன்னிகையின் பேறுபலன்களைப் பிதாவுக்கு ஒப்புக்கொடுக்கும் காணிக்கை ஜெபம்.

பின்வரும் காணிக்கை ஜெபத்தைச் சொல்வதன் மூலம் ஏராளமான நன்மைகள் பெறப்பட்டுள்ளன.

ஆண்டவரே, உமது தேவ நீதியை சாந்தப்படுத்தும் படியாக, உம்முடையவும், எங்களுடையவும் பரிசுத்த மாதா சிலுவையின் அடியில் நின்றபோது சம்பாதித்த பேறுபலன்களை உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம்.

ஆமென்.

வியாகுல ஜெபமாலை.

மாதாவின் கண்ணீர்மீது பக்தி முயற்சி.

(மாதா உலகில் இருக்கும்போதும், பல்வேறு காட்சிகளிலும், மற்றும் சுரூபங்களிலும் சிந்தும் கண்ணீர்களுக்குப் பரிகாரமாக)

ஜெபமாலையின் பாடுபட்ட சுரூபத்தில்:

சிலுவையில் அறையப்பட்ட சேசுவே! உமது பாதத்தடியில் சாஷ்டாங்கமாக விழுந்து, உமது துயரம் நிறைந்த சிலுவைப் பாதையில் அனுதாப வேதனையுடன் உம்மைப் பின்சென்ற உம்முடைய தாயின் கண்ணீர்களை உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். நல்லவரான ஆண்டவரே, உம் மிகப்புனித அன்னையின் கண்ணீர்கள் எங்களுக்குத் தரும் பாடங்களை நாங்கள் எங்கள் இருதயத்தில் ஏற்றுக்கொண்டு, அதனால் பூவுலகில் உமது திருச்சித்தத்தை நிறைவேற்றவும் மோட்சத்தில் நித்தியத்திற்கும் உம்மைப் புகழ்ந்து துதிக்கவும் தகுதி பெற்றவர்களாகும்படி செய்தருள்வீராக. ஆமென்.

ஏழு மன்றாட்டுக்கள்:

1. சேசுவே! ஓர் வாள் உம் இருதயத்தை ஊடுருவும் என்ற சிமையோனின் தீர்க்கதரிசனத்தைக் கேட்டு உமது மாதா சிந்தின கண்ணீர்களைப் பார்த்து எங்கள் துயர வேளைகளில் நாங்கள் விசுவாசத்திலும் உமது அன்பிலும் உறுதியோடிருக்கக் கிருபை செய்வீராக.

பெரிய மணியில்:
ஓ சேசுவே! நீர் உலகத்திலிருக்கும் போது உம்மை அதிகமாய் நேசித்து, மோட்சத்தில் உம்மை மிகவும் அந்நியோந்நியமாய் நேசிக்கிற உமது தாயின் கண்ணீர்களைப் பார்த்தருள்வீராக. (1)

சிறிய மணிகளில்:
சேசுவே உம்முடைய மகா பரிசுத்த மாதாவின் கண்ணீர்களைப் பார்த்து, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். (7)

2. சேசுவே! உமது மாதா எகிப்துக்கு ஓடிப்போனபோது சிந்திய கண்ணீர்களைப் பார்த்து எல்லா அகதிகள் மேலும், விசுவாசத்திற்காக உபத்திரவ வேதனைகளை அனுபவிக்கிறவர்கள் மேலும் இரக்கமாயிருப்பீராக!

பெரிய மணியில்:
ஓ சேசுவே! நீர் உலகத்திலிருக்கும் போது உம்மை அதிகமாய் நேசித்து, மோட்சத்தில் உம்மை மிகவும் அந்நியோந்நியமாய் நேசிக்கிற உமது தாயின் கண்ணீர்களைப் பார்த்தருள்வீராக. (1)

சிறிய மணிகளில்:
சேசுவே உம்முடைய மகா பரிசுத்த மாதாவின் கண்ணீர்களைப் பார்த்து, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். (7)

3. சேசுவே! மூன்று நாளாக உம்மைக் காணாமல் உமது தாய் தேடியலைந்தபோது சிந்திய கண்ணீர்களைப் பார்த்து உம்மை இழந்துவிட்ட ஆன்மாக்கள் மீண்டும் உம்மைக் கண்டடைய கிருபை செய்வீராக.

பெரிய மணியில்:
ஓ சேசுவே! நீர் உலகத்திலிருக்கும் போது உம்மை அதிகமாய் நேசித்து, மோட்சத்தில் உம்மை மிகவும் அந்நியோந்நியமாய் நேசிக்கிற உமது தாயின் கண்ணீர்களைப் பார்த்தருள்வீராக. (1)

சிறிய மணிகளில்:
சேசுவே உம்முடைய மகா பரிசுத்த மாதாவின் கண்ணீர்களைப் பார்த்து, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். (7)

4. சேசுவே! உம்முடைய வேதனை நிறைந்த சிலுவையின் பாதையில் நீர் நடந்து சென்றபோது உமது தாய் சிந்திய கண்ணீர்களைப் பார்த்து, நோயாலும் துன்ப துரிதங்களாலும் நாங்கள் வருந்தும்போது எங்களுக்கு ஆதரவாயிருந்து, தப்பறைகளில் விழுகிறவர்களின் வழியும் உயிரும் உண்மையும் நீரே என்பதை அவர்களுக்குக் காட்டியருள்வீராக.

பெரிய மணியில்:
ஓ சேசுவே! நீர் உலகத்திலிருக்கும் போது உம்மை அதிகமாய் நேசித்து, மோட்சத்தில் உம்மை மிகவும் அந்நியோந்நியமாய் நேசிக்கிற உமது தாயின் கண்ணீர்களைப் பார்த்தருள்வீராக. (1)

சிறிய மணிகளில்:
சேசுவே உம்முடைய மகா பரிசுத்த மாதாவின் கண்ணீர்களைப் பார்த்து, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். (7)

5. சேசுவே! நீர் சிலுவையிலே தொங்கி மரண அவஸ்தைப்பட்டபோது உமது மாதா வடித்த கண்ணீர்களைப் பார்த்து, மரண அவஸ்தையாயிருக்கிறவர்கள் மேல் இரக்கமாயிருந்து, நாங்கள் எங்கள் மரணத்தை உமது கரங்களிலிருந்து அன்போடு ஏற்றுக்கொள்ள கிருபை செய்வீராக.

பெரிய மணியில்:
ஓ சேசுவே! நீர் உலகத்திலிருக்கும் போது உம்மை அதிகமாய் நேசித்து, மோட்சத்தில் உம்மை மிகவும் அந்நியோந்நியமாய் நேசிக்கிற உமது தாயின் கண்ணீர்களைப் பார்த்தருள்வீராக. (1)

சிறிய மணிகளில்:
சேசுவே உம்முடைய மகா பரிசுத்த மாதாவின் கண்ணீர்களைப் பார்த்து, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். (7)

6. சேசுவே! நீர் சிலுவையிலிருந்து இறக்கப்பட்டு வியாகுல மாதாவின் மடியில் வளர்த்தப்பட்டபோது, அத்தாய் சிந்திய கண்ணீர்களைப் பார்த்து, துன்ப வேதனைப்படுகிறவர்கள் மேல் இரக்கமாயிரும். அவர்களின் சக்திக்கு அதிகமான துன்பங்களை சர்வேசுரன் அனுமதிக்க மாட்டார் என்ற உண்மையை அவர்கள் உணரச் செய்தருளும்.

பெரிய மணியில்:
ஓ சேசுவே! நீர் உலகத்திலிருக்கும் போது உம்மை அதிகமாய் நேசித்து, மோட்சத்தில் உம்மை மிகவும் அந்நியோந்நியமாய் நேசிக்கிற உமது தாயின் கண்ணீர்களைப் பார்த்தருள்வீராக. (1)

சிறிய மணிகளில்:
சேசுவே உம்முடைய மகா பரிசுத்த மாதாவின் கண்ணீர்களைப் பார்த்து, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். (7)

7. சேசுவே! நீர் கல்லறையிலே அடக்கம் செய்யப்பட்டபோது உமது மாதா சிந்திய கண்ணீர்களைப் பார்த்து, நாங்கள் உம்மிலே உயிர்ப்போம் என்ற நம்பிக்கையால், மரண பயத்தை மேற்கொள்ள கிருபை செய்வீராக.

பெரிய மணியில்:
ஓ சேசுவே! நீர் உலகத்திலிருக்கும் போது உம்மை அதிகமாய் நேசித்து, மோட்சத்தில் உம்மை மிகவும் அந்நியோந்நியமாய் நேசிக்கிற உமது தாயின் கண்ணீர்களைப் பார்த்தருள்வீராக. (1)

சிறிய மணிகளில்:
சேசுவே உம்முடைய மகா பரிசுத்த மாதாவின் கண்ணீர்களைப் பார்த்து, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். (7)

ஓ சேசுவே! நீர் உலகத்திலிருக்கும்போது உம்மை அதிகமாய் நேசித்து, மோட்சத்தில் உம்மை மிகவும் அந்நியோந்நியமாய் நேசிக்கிற உமது திருத்தாயாரின் கண்ணீர்களைப் பார்த்தருள்வீராக.
(3 முறை சொல்லவும்).

முடிவு ஜெபம்.

ஓ மரியாயே, சிநேகத்தினுடையவும் துயரங்களுடையவும், இரக்கத்தினுடையவும் தாயே, உம்முடைய ஜெபங்களை எங்களுடைய ஜெபங்களுடன் சேர்த்து, எங்களுடைய வேண்டுதல்களை உமது தாய்மையுள்ள இரத்தக்கண்ணீரின் பெயரால் ஏற்றுக்கொண்டு, நாங்கள் சேசுவையே எப்போதும் நோக்கியிருக்கவும், நாங்கள் கேட்கும் வரப்பிரசாதங்களுடன் இறுதியாக நித்திய ஜீவியக் கொடையையும் தந்தருளும்படி உம்மிடம் தாழ்மையுடன் மன்றாடுகிறோம்.

உமது இரத்தக் கண்ணீரால், துயரம் மிகுந்த தாயே, சாத்தானுடைய ஆட்சியை அழித்தருளும். தெய்வீக சிநேகத்தால் கட்டுண்டவராகிய சேசுவே, உலகத்தை பயமுறுத்தும் தப்பறைகளிலிருந்து அதனைக் காத்தருளும்.

ஆமென்.

வியாகுல அருள் நிறை மந்திரம்.

அர்ச்சியசிஷ்டதனமுள்ள பாப்பரசராகிய ஒன்பதாம் பத்திநாதர் நம் இரட்சகருடையவும், அவருடைய வியாகுல மாதாவுடையவும் மிகக் கசப்பான துன்பங்களின் மீது ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தார். நமது ஆண்டவரின் பாடுகளையும், அவரது திருமாதாவின் வியாகுலங்களையும் அடிக்கடி தியானிப்பது, பாவிகளை மனந்திருப்பவும், மனஸ்தாபம், தவம், பரிகாரம் ஆகியவற்றிற்கான ஒரு நிலையான தூண்டுதலை அவர்களுக்குத் தரவும் மிகப் பயனுள்ள ஒரு வழியாக அவருக்குத் தோன்றியது. எனவே 1847-ல் அவர் வியாகுல மாதாவுக்குத் தோத்திரமாக இயற்றப்பட்ட ஒரு புதிய அருள்நிறை மந்திரத்தை அங்கீகரித்தார்.  அந்த ஜெபம் பின்வருமாறு:

வியாகுலங்கள் நிறைந்த மரியாயே வாழ்க, சிலுவையில் அறையப்பட்டவர் உம்முடனே. பெண்களுக்குள் மிகுந்த இரக்கத்திற்குத் தகுதியுள்ளவர் நீரே, உம்முடைய திருவயிற்றின் கனியாகிய சேசுவும் மிகுந்த இரக்கத்திற்குத் தகுதியானவரே. அர்ச். மரியாயே, சிலுவையில் அறையப்பட்டவரின் மாதாவே, உம்முடைய திருக்குமாரனை சிலுவையில் அறைந்த நாங்கள், மனஸ்தாபக் கண்ணீரை இப்பொழுதும், எங்கள் மரண நேரத்திலும் பெற்றுக் கொள்ளும்படியாக, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஆமென்.

வியாகுல மாதாவின் படத்திற்கு முன் சொல்லத்தகும் ஜெபம்.

என் ஆண்டவராகிய சேசுக்கிறிஸ்துநாதரின் மிகுந்த நேசமுள்ள திருமாதாவே, மனஸ்தாபத்தினால் நொறுங்கிய உள்ளத்தோடு உம்மை நோக்கித் திரும்பும் எவனையும் தள்ளி விடாதவரும், துன்பப்படுவோரைத் தேற்ற மறுக்காதவருமாகிய தேவரீருடைய திருப்படத்தின் முன்பாக, நீசப் பாவியாகிய நான் ஆழ்ந்த பக்தியோடு வந்து, என் முழு பலத்தையும் கொண்டு உம்மை நேசிக்கவும், வாழ்த்தித் துதிக்கவும் வேண்டிய வரப்பிரசாதத்தை எனக்குப் பெற்றுத் தந்தருளும்படியாக உம்மை இரந்து மன்றாடுகிறேன்.

ஓ மரியாயின் இரக்கமுள்ள திரு இருதயமே, மிக அநேக பாவிகள் ஏற்கெனவே உம்மிடமிருந்து இரக்கத்தைப் பெற்றுக் கொண்டது போலவே நானும் உம்மிடமிருந்து இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளத் தயை செய்தருளும். ஏனெனில், ஓ மகா பரிசுத்த மரியாயே, உம்முடைய இருதயம் இரக்கத்தின் இருதயமேயன்றி வேறு என்னவாயிருக்கிறது? இந்தக் கிருபையின் ஆசனத்திடமிருந்து அந்த வரப்பிரசாதத்தை மன்றாடிக் கேட்கும் யாருக்கும் அது மறுக்கப்படுவது எப்படி?

மிகுந்த கருணையும், தயவிரக்கமும் உள்ள மாதாவே, துன்பப்பட்டுள்ள ஓர் இருதயத்திற்கு உம்முடைய தயவும் ஆதரவும் எவ்வளவு அதிகமாய்த் தேவைப்படுகிறது என்பதை நீர் அறிந்திருக்கிறீர். ஏனெனில் மனுக்குலம் முழுவதும் ஒன்றாய்ச் சேர்ந்தாலும் அதனால் தாங்க முடியாத அளவுக்கு உமது துன்பங்களும், வேதனைகளும் மகா தீவிரமுள்ளவையா யிருந்தன.

ஓ, உமது நேசக் குமாரனின் உருக்குலைக்கப்பட்ட உருவத்தை நீர் கண்டு தியானித்தபோதும், சிதைக்கப்பட்டதும், உயிரற்றதுமான அவருடைய திருச் சரீரத்தை உமது கன்னிமைக் கரங்களில் தாங்கி, உமது தாய்க்குரிய இருதயத்தின் மீது மென்மையாகச் சேர்த்துக் கொண்டு, எண்ணற்ற தடவைகள் அதை அரவணைத்து, சுட்டெரிக்கும் கண்ணீர் வெள்ளத்தைக் கொண்டு அதை மூடி, இறுதியாக உமது சேசுவின் காயப்பட்ட நெற்றியின் மீது உமது வாதைப்பட்ட இருதயத்தைச் சாய்த்த போது, உமது ஆத்துமத்தை நிரப்பிய சொல்லிலடங்காத கசப்பை எந்த மனிதனால் உணரக் கூடும்!

இந்த வாக்குக் கெட்டாத உம்முடைய வேதனையை உமக்கு ஞாபகப்படுத்தி, என் பாவங்களுக்கு மன்னிப்பைப் பெற்றுத் தரும்படியாக உம்மை மன்றாடுகிறேன். மரியாயே, இப்போது நீர் உமது கரங்களில் தாங்கியுள்ள சேசுவிடம் எனக்காகப் பரிந்து பேசியருளும்! ஓ சேசுவே! ஓ மரியாயே! உங்கள் சொல்லொணாத துன்பத்தைப் பார்த்து, நீசப் பாவியாகிய அடியேன் மீது தயவாயிருங்கள். ஓமிகுந்த நேசத்திற்குரிய சேசுவே, எனக்காக நீர் தாங்கிய சகல காயங்களையும், வேதனையையும் உமது பரலோகப் பிதாவுக்குக் காண்பித்தருளும். அளவற்ற இனிமையுள்ள திவ்விய கன்னிகையே, தேவரீர் என் நிமித்தமாக சிந்தின கண்ணீர் முழுவதையும் அவருக்குக் காண்பியும். ஓ திருச்சுதனே! ஓ மாதாவே! எனக்காக நீங்கள் அனுபவித்த எல்லா அவஸ்தைகளையும், எல்லா இருதய வாதையையும் அவருக்குக் காட்டுங்கள்.

மரியாயே, உமது வியாகுலங்களின் இந்த வேதனை மிக்க பரம இரகசியத்தின் வழியாக, பிதாவாகிய சர்வேசுரனிடமிருந்து எனக்கு இரக்கத்தைப் பெற்றுத் தாரும். உமது நேசப் பிரிய குமாரனின் நொறுக்கப்பட்டதும், உயிரற்றதுமாகிய திருச்சரீரத்தை உமது தாய்க்குரிய கரங்களில் எடுத்து, முன்பு நீர் செய்த அதே விதமாக இப்போது சேசுவின் குத்தித் திறக்கப்பட்ட திருவிலாவையும், உமது உடைந்த இருதயத்தையும், அவரது கசப்பான துன்பங்களையும், உமது வேதனையுள்ள தயாள இரக்கத்தையும், அவருடையவும், உம்முடையவும் சுட்டெரிக்கிற கண்ணீர்களையும், அவருடையவும், உம்முடையவும் பெருமூச்சுகளையும், ஒரே வார்த்தையில், சேசுவும் நீரும் இவ்வுலகில் அனுபவித்த சகல துன்பங்களையும் நித்திய பிதாவுக்கு ஒப்புக்கொடுத்தருளும். இந்தத் துன்பங்களின் வழியாக, இரக்கத்தையும் மன்னிப்பையும் எனக்குப் பெற்றுத் தந்தருளும்.

ஆமென்.

வியாகுல மாதாவிடம் நல்ல மரணத்திற்கான ஜெபம்.

வியாகுல மாதாவே, சேசுவின் திருச்சிலுவையினடியில் நின்றபோது தேவரீர் அனுபவித்த கொடிய வேதனையையும், சேசுவின் மீது நீர் கொண்டிருந்த அளவற்ற நேசத்தையும் பார்த்து, என் கடைசி அவஸ்தையில் என் அருகிலிருக்கத் தயை செய்வீராக. என் வாழ்வின் கடைசி மூன்று மணி நேரத்தை உமது தாய்க்குரிய இருதயத்திடம் நான் ஒப்படைக்கிறேன். நம் மகா பிரியத்திற்குரிய ஆண்டவரின் மரண அவஸ்தையோடு இந்த நேரத்தையும் ஒன்றித்து, நித்திய பிதாவுக்கு ஒப்புக்கொடுப்பீராக. என் மரணத்திற்கு முன்பாக உத்தமமான சிநேகத்தோடும், மனஸ்தாபத்தோடும் திவ்விய நன்மை உட்கொள்ளும் வரப்பிரசாதத்தையும், சேசுவின் மெய்யான பிரசன்னத்தில் என் ஆத்துமம் என் உடலை விட்டுப் புறப்படும் வரப்பிரசாதத்தையும் எனக்குப் பெற்றுத் தரும்படியாக, கல்வாரியின் மீது உம்முடைய கண்ணீரோடு ஒன்றாகக் கலக்கப்பட்ட சேசுவின் விலைமதியாத திரு இரத்தத்தை என் பாவங்களுக்குப் பரிகாரமாக நித்தியப் பிதாவுக்கு அடிக்கடி ஒப்புக்கொடுக்கும்படி உம்மை இரந்து மன்றாடுகிறேன்.

பரிபூரண அன்புக்குப் பாத்திரமான மாதாவே, என் மரண வேளை நெருங்கி வரும்போது, என்னை உம்முடைய குழந்தையாக சேசுவிடம் சமர்ப்பித்து, என் சார்பாக அவரிடம், "மகனே, இவனை மன்னியும், ஏனெனில் தான் செய்தது இன்னதென்று இவன் அறியாதிருந்தான். இன்று இவனை உம்முடைய இராச்சியத்திற்குள் ஏற்றுக்கொள்ளும்'' என்று சொல்வீராக.

ஆமென்.

வியாகுல மாதா சுரூபத்திற்கு முன்பாகச் சொல்லத்தகும் ஜெபம்.

பல கோவில்களிலும், சிற்றாலயங்களிலும் தனது தேவசுதனின் மரித்த சரீரத்தைத் தன் கரங்களில் தாங்கியுள்ள மரியாயைச் சித்தரிக்கும் சுரூபம் இருப்பதை நாம் காண்கிறோம். இவை "பியெட்டா சுரூபங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இத்தகைய சுரூபங்களைச் சந்தித்து, வியாகுல மாதாவின் வல்லமையுள்ள மன்றாட்டின் வழியாக விரும்பிய வரத்தைக் கேட்டு மன்றாடுவதன் மூலம் எண்ணற்ற வரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

மிகுந்த தயாளமுள்ள மாதாவே, உமது திருக்குமாரனின் சிதைக்கப்பட்ட திருச்சரீரத்தை உமது கன்னிமைக் கரங்களில் தாங்கிக் கொண்டபோதும், உமது தாய்மையுள்ள இருதயத்தோடு சேர்த்து அணைத்துக் கொண்டபோதும், மிகுந்த மென்மையும், கனிவும் நிரம்பிய முத்தங்களால் அவரை நீர் நிரப்பியபோதும், எப்பேர்ப்பட்ட கசப்பு உமது திரு இருதயத்தை நிரப்பியது! இந்த வாக்குக் கெட்டாத உமது மனக் கசப்பைப் பார்த்து, என் பாவங்களுக்கு மன்னிப்பைப் பெற்றுத் தந்தருள உம்மை மன்றாடுகிறேன். மரியாயே, ஈனப் பாவியாகிய அடியேனுக்காக, தேவரீர் இப்போது உம் கரங்களில் தாங்கியுள்ள உம் சேசுவிடம் மன்றாடும். உமது தாய்க்குரிய கரங்களில் உமது திருக்குமாரனுடைய நொறுக்கப்பட்ட திருச்சரீரத்தை எடுத்து, இதே நிலையில் அவரை எனக்காக பரலோகப் பிதாவுக்கு ஒப்புக்கொடுத்தருளும். எனக்கு வரப்பிரசாதத்தையும், இரக்கத்தையும், விசேஷமாக...

(நீ பெற விரும்புகிற விசேஷ வரத்தை இங்கு குறிப்பிடவும்)

எனக்குப் பெற்றுத் தரும்படியாக, சேசுவின் துளைக்கப்பட்ட திரு இருதயத்தையும், அவரது திருப்பாடுகளையும், மரணத்தையும், உம்முடைய அளவிட முடியாத சகல வியாகுலங்களையும் அவருக்கு ஒப்புக்கொடுப்பீராக.

ஆமென்.

தேவதாயே, தயை செய்து பாவி என்னிருதயத்தில் சேசு காயம் பதியும்.

மரியாயே, எங்கள் நம்பிக்கையே, எங்கள் பேரில் தயவாயிரும்!

அர்ச்சியசிஷ்ட வியாகுல மாதாவின் பிரார்த்தனை.

சுவாமி கிருபையாயிரும். 2.
கிறீஸ்துவே கிருபையாயிரும். 2.
சுவாமி கிருபையாயிரும். 2.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.
கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பிரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமத்திரித்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

வியாகுல வாளால் ஊடுருவப்பட்ட அர்ச். மரியாயே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பாவம் நிறைந்த இப்பரதேசத்தில் சொல்லிலடங்காத வியாகுலம் அனுபவித்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உம்முடைய திவ்விய குழந்தையான சேசுநாதர் மாட்டுக் கொட்டிலில் காற்று குளிர் வறுமை முதலியவைகளால் பட்ட உபத்திரவத்தைக் கொண்டு அளவற்ற துயரமடைந்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

விருத்தசேதனத்தில் திவ்விய குழந்தை சிந்தின இரத்தத்தையும், அனுபவித்த நோக்காடுகளையும் கண்டு அழுது துக்கித்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சேசுநாதருக்கும், உமக்கும் வரவிருந்த நிர்ப்பந்தங்களை அர்ச். சிமியோன் வெளிப்படுத்தக் கேட்டு, வியாகுல வாளால் ஊடுருவப்பட்டமாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தேவாலயத்தில் உம்முடைய திவ்விய குமாரனை தேவ நீதிக்கு உத்தரிப்புப் பலியாக மிகுந்த மனத் துயரோடு ஒப்புக் கொடுத்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஏரோது என்கிற இராஜா உம்முடைய நேச பாலகனைக் கொல்லத் தேடுகிறதைக் கேட்டு மனோவாக்குக் கெட்டாத சஞ்சலத்திற்கு உள்ளான மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தேவபிதாவின் கட்டளைப்படியே திவ்விய குழந்தையை எடுத்துக்கொண்டு எகிப்தென்கிற அந்நிய தேசத்திற்குப் புறப்பட்ட மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அந்தப் புறவின இராச்சியத்தில் அநேக வருஷம் திவ்விய பாலகனோடு பரதேசியாய் கஷ்டத்தை அனுபவித்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பன்னிரண்டு வயதில் உமது ஆனந்தமாகிய திவ்விய சேசு உம்மைப் பிரிந்து காணாமல் போனதினால் மூன்று நாள் துக்க சாகரத்தில் அமிழ்ந்தின மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சேசுநாதர் வேதத்தைப் போதிக்கச் சுற்றி வருகையில் அநேக முறை பாவிகளான யூதர் அவரை நிந்தித்துத் தூஷித்ததினால் மட்டற்ற வியாகுலமடைந்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுநாதர் பாடுபடப் போவதற்கு உம்மை உத்தரவு கேட்டுக் கொள்ளுகையில், ஆத்துமம் பிரிந்தாற் போல் துக்க வேதனைக்கு உட்பட்டமாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சேசுநாதர் பூங்காவனத்தில் துக்க மிகுதியால் இரத்த வேர்வை வேர்த்து மரண அவஸ்தைப்பட்டதைக் கேட்டு மனம் இளகிப் பரிதவித்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

திவ்விய கர்த்தர் ஒரு கள்ளனைப் போலப் பாவிகளால் பிடிபட்டுச் சங்கிலி, கயிறுகளால் கட்டவும், சீடர்களால் கைவிடவும்பட்டதை அறிந்து திரளான கண்ணீர் விட்டழுத மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உம்முடைய மாசற்ற குமாரன் அன்னாஸ், கைப்பாஸ் என்கிற பிரதான ஆசாரியர் வீட்டில் பொய் சாட்சிகளால் குற்றஞ் சாட்டவும், சாவுக்கு நியமிக்கவும் பட்டதைக் கேட்டுத் தயங்கிக் களைத்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

திவ்விய நாதர் நீச ஊழியர்களால் திருக்கன்னத்தில் அடிக்கவும், திருமுகத்தில் துப்பவும், இராத்திரி முழுவதும் சகல வித நிந்தை அவமானக் கொடுமையுடன் வாதிக்கவும் பட்டதால் அளவிறந்த துயரப்பட்ட மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பிலாத்து, மாசற்ற நாதரைப் பரபாஸ் என்கிற கொலைபாதகத் திருடனோடே ஒரே வரிசையாய்க் காண்பிக்க, யூதர்கள் பாதகனை விடுதலையாக்கி, சேசுநாதரைக் கொல்லக் கூவினதால் அகோரதுக்கத்தால் மனம் நொந்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சேசுநாதர் கற்றூணில் கட்டுண்டு கொடிய சேவகரால் பட்ட அடியெல்லாம் உமது இருதயத்தில் பட்டாற்போல் வேதனை அனுபவித்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அடியால் உமது நேச சேசுவின் திருத்தசை தெறிக்க, திரு இரத்தம் வெள்ளமாய் ஓட, திருமேனியெல்லாம் ஏக காயமானதைக் கண்டு இருதயம் பிளந்து விம்மிக் களைத்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கர்த்தருடைய திருச்சிரசில் முள்முடி வைத்து அழுத்தவும், மூங்கில் தடியால் அடிக்கவும் எப்பக்கத்திலும் முட்கள் தைத்து இறங்கவும் அவைகளின் வழியாகச் சிந்தின இரத்தத்தால் திருமுகமும், தாடியும் நனையவும் கண்டு வியாகுல முட்களால் இருதயத்தில் குத்தப்பட்ட மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உம்முடைய ஏக நேசரைச் சிலுவையில் அறைய வேண்டும் என்கிற அநியாயத்தீர்வையைக் கேட்டு வியாகுல அம்பினால் ஊடுருவப்பட்டமாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மகா அவமானத்தோடு உம்முடைய திவ்விய சுதன் திரளான சனங்கள் சூழப் பாரமான சிலுவையைச் சுமந்து வருகிறதைக் கண்டிரங்கிப் பிரலாபித்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஒரு செம்மறியைப் போலக் கொலைக்களத்திற்குக் கூட்டிக் கொண்டு போகப்பட்ட உம்முடைய நேச குமாரனைத் துக்கித்துப் பின் சென்ற மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

துஷ்ட சேவகர் திவ்விய சேசுவின் காயங்களோடு ஒட்டியிருந்த வஸ்திரங்களைத் தோல் உரிப்பது போல் உரிக்கக் கண்டு ஏங்கின மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அவரைச் சிலுவையில் அறைகிற சத்தத்தைக் கேட்டு, வியாகுல மிகுதியால் பரிதவித்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உம்முடைய நேச குமாரன் இரு கள்ளருக்கு நடுவே உயர்ந்த சிலுவையில் ஸ்தாபிக்கவும், திரளான சனங்களால் காணவும், நிந்தித்துத் தூஷிக்கவும் பட்டதைப் பார்த்து, மனம் உருகி, கண்ணீர் வெள்ளமாய்ச் சொரிந்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சேசுநாதர் மூன்று மணி நேரம் சிலுவையில் கொடூர நிர்ப்பந்தங்களுடனே தொங்குகிறதைக் கண்டு வியாகுலத்தால் அவரோடே சிலுவையில் அறையுண்ட மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சேசுநாதர் தமக்குப் பதிலாய்ச் சீடனான அருளப்பரை உமக்கு மகனாகத் தந்து, "என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்ற துயர வசனம் கேட்டுப் பரிதவித்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உமது நேச குமாரன் தலை குனிந்து மரிக்கிறதைக் கண்டு, உமது உயிர் பிரிந்து போகிறதை விட அதிக வேதனைக்கு உட்பட்ட மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உயிர் பிரிந்த திவ்விய சேசுவின் விலாவை ஒரு சேவகன் ஈட்டியால் குத்தித் திறந்ததைக் கண்டு வியாகுல வாளால் ஊடுருவப்பட்ட மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சீடர்கள் சிலுவையினின்று இறக்கின சேசுநாதரின் திருச்சரீரத்தை உமது மடியில் வளர்த்தின போது, திருக்காயங்களைத் துயரத்தோடு உற்றுப் பார்த்து, முத்தி செய்து, திரளான கண்ணீரைச் சொரிந்து பிரலாபித்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உம்முடைய நேச சேசுவின் திருச்சரீரம் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டபோது துக்கத்தில் அமிழ்ந்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அவர் அடக்கமான பின்பு தேவரீர் தனிமையில் இருந்ததாலும், அவரது திருப்பாடுகளை இடைவிடாமல் நினைத்ததாலும் அளவற்ற துக்க வியாகுலத்திற்கு உட்பட்ட மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வியாகுல மிகுதியால் சகல வேதசாட்சிகளை விட அகோர வேதனை அனுபவித்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சகல உபத்திரவ வியாகுலத்திலும், மாறாத பொறுமையின் உத்தம் மாதிரிகையான மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

துன்ப துயரத்தில் அடியோர்களுக்கு அடைக்கலமும், ஆறுதலுமாகிய வியாகுல மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உலகின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப்புருவையாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப்புருவையாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப்புருவையாகிய சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சேசுக்கிறிஸ்துநாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாகத்தக்கதாக, மிகவும் வியாகுலமுள்ள கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பிரார்த்திக்கக்கடவோம்.
கருணைச் சமுத்திரமாகிய திவ்விய சேசுவே, தேவரீர் அடியோர்களுக்காகப் பட்ட கணக்கில்லாத கொடூர கஸ்தி நிர்ப்பந்த வேதனைகளுக்கும் மோட்ச இராச்சியத்தில் சுதந்தரித்துக் கொண்ட அளவில்லாத பேரின்ப மகிமை வல்லபத்திற்கும், உமது நேச திருமாதாவைப் பங்காளியாக்கத் திருவுளமானீரே சுவாமி! தேவரீர் உமது திருப்பாடுகளையும், நேச மாதாவின் வியாகுலத்தையும் பார்த்து, உமது திரு இரத்தப் புண்ணியப் பேறுகளுக்கும் அடியோர்களைப் பங்காளிகளாக்கி, உமது பேரின்ப இராச்சியத்தின் ஆனந்த மகிமைக்கு எங்களைப் பாத்திரவான்களாகச் செய்தருளும்.

ஆமென்.

மகா பரிசுத்த கன்னிமாமரியின் ஏழு வியாகுலங்களுக்குத் தோத்திரமாக செய்யப்படும் ஏழு ஜெபங்கள்.

(பாப்பரசர் ஏழாம் பத்திநாதரால் 1815-ல் அங்கீகரிக்கப்பட்டது.)

ஜெபத்தைத் தொடங்கும் விதம்:

சர்வேசுரா, எனக்கு உதவியாக வாரும். கர்த்தாவே, எனக்கு ஒத்தாசை செய்யத் தீவிரியும்.

பிதாவுக்கும் சுதனுக்கும் இஸ்பிரீத்துசாந்துவுக்கும் மகிமை உண்டாவதாக. ஆதியிலே இருந்தது போல, இப்பொழுதும், எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக.
ஆமென்.

குறிப்பு: ஒவ்வொரு வியாகுல ஜெபத்திற்குப் பிறகும் ஒரு தடவையாக மொத்தம் ஏழு தடவைகள் அருள்நிறை மந்திரம் ஜெபிக்கப்பட வேண்டும்.

முதல் வியாகுலம் - சிமியோனின் தீர்க்கதரிசனம்.

ஓ மிகவும் வியாகுலம் நிறைந்த மரியாயே, பரிசுத்தரும், வயோதிபருமான சிமியோனின் தீர்க்கதரிசனத்தைக் கேட்டு உம்முடைய மென்மையான இருதயம் பட்ட வியாகுலத்தை தியானித்து, அடியேன் உமக்காக துக்கப்படுகிறேன். அன்பான தாயே, இவ்வளவு அதிகமாகத் துயருற்ற உம்முடைய மாசற்ற இருதயத்தின் மூலமாக, எனக்குத் தாழ்ச்சி என்ற புண்ணியத்தையும், தெய்வ பயம் என்ற பரிசுத்த கொடையையும் பெற்றுத் தந்தருளும். 1 அரு.

இரண்டாம் வியாகுலம் - திருக்குடும்பம் எகிப்துக்கு ஓடிப் போதல்.

ஓ மிகவும் வியாகுலம் நிறைந்த மரியாயே, எகிப்துக்கு ஓடிச் சென்ற போதும், அங்கே தங்கியிருந்தபோதும், மகா நேசமுள்ள உம்முடைய மாசற்ற இருதயம் அனுபவித்த வேதனையை தியானித்து, அடியேன் உமக்காக துக்கப்படுகிறேன். அன்பான தாயே, இவ்வளவு அதிகக் கலக்கத்திற்கு உள்ளான உம்முடைய திரு இருதயத்தின் மூலமாக, உதாரம் என்னும் புண்ணியத்தையும், தேவபக்தி என்னும் பரிசுத்த கொடையையும் எனக்குப் பெற்றுத் தந்தருளும். 1 அரு.

மூன்றாம் வியாகுலம் - சேசுபாலன் தேவாலயத்தில் காணாமல் போனது.

ஓ மிகவும் வியாகுலம் நிறைந்த மரியாயே, உம்முடைய பிரியமுள்ள சேசு காணாமல் போனபோது உம்முடைய கலக்கமுற்ற இருதயத்தை வாதித்த ஏக்கமுள்ள கவலைகளை தியானித்து, அடியேன் உமக்காக துக்கப்படுகிறேன். அன்பான தாயே, இவ்வளவு அதிகமாகத் துயருற்ற உம்முடைய மாசற்ற இருதயத்தின் மூலமாக, எனக்குப் பரிசுத்த கற்பு என்ற புண்ணியத்தையும், அறிவு என்ற பரிசுத்த கொடையையும் பெற்றுத் தந்தருளும். 1 அரு.

நான்காம் வியாகுலம் - மாதா கல்வாரிப் பாதையில் சேசுவைச் சந்திக்கிறார்கள்.

ஓ மிகவும் வியாகுலம் நிறைந்த மரியாயே, சேசுநாதர் சிலுவை சுமந்து வருகையில் தேவரீர் அவரைச் சந்தித்தபோது, உம்முடைய மென்மையான இருதயம் பட்ட வியாகுலத்தை தியானித்து, அடியேன் உமக்காக துக்கப்படுகிறேன். அன்பான தாயே, இவ்வளவு அதிகமாகத் துயருற்ற உம்முடைய மாசற்ற இருதயத்தின் மூலமாக, எனக்குப் பொறுமை என்ற புண்ணியத்தையும், திடம் என்ற பரிசுத்த கொடையையும் பெற்றுத் தந்தருளும். 1 அரு.

ஐந்தாம் வியாகுலம் - சேசு சிலுவையில் மரிக்கிறார்.

ஓ மிகவும் வியாகுலம் நிறைந்த மரியாயே, சேசுவின் மரண அவஸ்தையின்போது அவருக்கருகில் நின்று கொண்டிருப்பதில் உம்முடைய தாராளமுள்ள இருதயம் அனுபவித்த வேதசாட்சிய வேதனையை தியானித்து, அடியேன் உமக்காக துக்கப்படுகிறேன். அன்பான தாயே, இவ்வளவு அதிகமாகத் துயருற்ற உம்முடைய மாசற்ற இருதயத்தின் மூலமாக, எனக்கு மட்டுத்திட்டம் என்ற புண்ணியத்தையும், விமரிசை என்ற பரிசுத்த கொடையையும் பெற்றுத் தந்தருளும். 1 அரு.

ஆறாம் வியாகுலம் - மரித்த சேசுவின் திருச்சரீரத்தை மாதா தன் திருக்கரங்களில் பெற்றுக்கொள்கிறார்கள்.

ஓ மிகவும் வியாகுலம் நிறைந்த மரியாயே, அவரது திருவிலா ஈட்டியால் குத்தித் திறக்கப்பட்டு, அவரது திரு இருதயம் ஊடுருவப்பட்டபோதும், அவருடைய திருச் சரீரம் சிலுவையிலிருந்து இறக்கப்பட்டு உமது திருமடியில் வளர்த்தப்பட்டபோதும், உத்தம அன்பினால் பரிதபித்த உம்முடைய இருதயம் பட்ட காயத்தை தியானித்து, அடியேன் உமக்காக துக்கப்படுகிறேன். அன்பான தாயே, இவ்வளவு அதிகமாகத் துயருற்ற உம்முடைய மாசற்ற இருதயத்தின் மூலமாக, எனக்குப் பிறர் சிநேகம் என்ற புண்ணியத்தையும், புத்தி என்ற பரிசுத்த கொடையையும் பெற்றுத் தந்தருளும். 1 அரு.

ஏழாம் வியாகுலம் - சேசு கல்லறையில் அடக்கம் செய்யப்படுகிறார்.

ஓ மிகவும் வியாகுலம் நிறைந்த மரியாயே, சேசுநாதருடைய திருச்சரீரம் கல்லறையில் அடக்கம் செய்யப்படுவதைக் கண்டு, உம்முடைய மகா நேசமுள்ள திரு இருதயம் அனுபவித்த மிகக் கொடிய வியாகுலத்தை தியானித்து, அடியேன் உமக்காக துக்கப்படுகிறேன். அன்பான தாயே, இத்தகைய கைவிடப்படுதலின் கசப்பினுள் அமிழ்த்தப்பட்ட உம்முடைய மாசற்ற இருதயத்தின் மூலமாக, எனக்கு விழிப்பாயிருத்தல் என்ற புண்ணியத்தையும், ஞானம் என்ற பரிசுத்த கொடையையும் பெற்றுத் தந்தருளும். 1 அரு.

சேசுக்கிறிஸ்துநாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாகத் தக்கதாக, மிகவும் வியாகுலம் நிறைந்த கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஜெபிப்போமாக.
ஆண்டவராகிய சேசுக்கிறிஸ்துவே, உமது கசப்பான திருப்பாடுகளின் நேரத்தில் வியாகுல வாளால் தன் மகா பரிசுத்த ஆத்துமத்தில் ஊடுருவப்பட்ட உமது திருத்தாயாராகிய மகா பரிசுத்த கன்னிமாமரி, உமது கிருபாசனத்திற்கு முன்பாக, இப்பொழுதும், எங்கள் மரண நேரத்திலும் எங்களுக்காகப் பரிந்து பேச வரமருளும்படி உம்மை மன்றாடுகிறோம். பிதாவோடும், இஸ்பிரீத்து சாந்துவோடும் சதாகாலமும் ஜீவிக்கிறவரும் இராச்சியபாரம் பண்ணுகிறவருமான உலக இரட்சகருமாகிய உம் வழியாக இந்த வரத்தை மன்றாடிக் கேட்கிறோம்.

ஆமென்.

வியாகுல அன்னைக்குத் தோத்திரமாக சொல்லப்படும் ஜெபங்கள்.

வியாகுலச் சங்கீதம் (ஸ்தாபாத் மாத்தெர்).

வியாகுலம் நிறைந்த தேவதாயார் தம்முடைய திவ்விய குமாரன் சிலுவையில் அறையுண்டிருந்ததைப் பார்த்து நின்று அழுது கொண்டிருந்தார்கள்.

வாக்குக் கெட்டாத துயரத்தின் வியாகுல வாள் தமது திரு இருதயத்தில் ஊடுருவப்பட்டு ஆறுதல் அற்று நின்றார்கள்.

ஒன்றான திவ்விய குமாரனுக்குத் தாயான இந்த ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் சொல்வதற்கு அரிதான துக்க துயரத்தை அடைந்திருந்தார்கள்.

நிர்ப்பந்தப்பட்ட தம்முடைய திவ்விய குமாரனைக் காண்பதினால் பிரலாபித்து அழுது நொந்து பரிதவித்து நின்றார்கள்.

இத்தனை வியாகுலம் நிறைந்த தேவதாயாரைப் பார்க்கும்போது, மனிதருக்குள்ளே அழாதிருக்கிறவர்கள் உண்டோ?

தம்முடைய திவ்விய குமாரனைப் பார்த்து நின்று அழுத இந்தத் தாயாரைக் கண்டவர்கள் உடனே அழாதிருப்பார்களோ?

தன் சம்மனசுக்களுடைய குற்றங்களுக்காக நரம்புத் தாரை வழியாக இரத்தம் ததும்பி சிந்தி ஓடுகிறதைப் பார்த்தார்கள்.

நல்ல சிநேகத்தின் மாதாவே! உம்முடைய வியாகுலத்தினால் உம்மோடு என் ஆத்துமம் மிகவும் துக்கப்பட்டு அழச் செய்தருளும்.

என்னுடைய இருதயம் தேவனாகிய கிறீஸ்துநாதரைச் சிநேகித்து, அவர் பேரில் பிரியப்பட்டு உருகச் செய்தருளும்.

திவ்விய தாயாரே! உம்முடைய திருக்குமாரன் சிலுவையில் பாடுபட்ட காயங்களை என் இருதயத்தில் பதிப்பித்தருளும்.

உம்முடைய திருக்குமாரன் அனுபவித்த கஸ்திகளையும், பாடுகளையும் எனக்குப் பங்கிட்டருளும்.

என்னுடைய ஜீவன் முடியும் வரையும் சிலுவையில் அறையுண்ட என் அன்பரை நினைத்துத் துக்கித்திருக்கச் செய்தருளும்.

அப்படியே இந்தச் சிலுவை அடியில் உமக்குத் துணையாயிருந்து உம்மோடு நான் அழவும், வியாகுலப்படவும், கஸ்திப்படவும் ஆசையாயிருக்கிறேன்.

கன்னியாஸ்திரீகளுக்குள் மேன்மையான கன்னிகையே, என் மேல் இரக்கம் வைத்து உம்மோடுகூட நானும் அழுகிறதற்கு அநுக்கிரகம் செய்தருளும்.

சேசுநாதருடைய திரு மரணத்தை நினைத்து அவருடைய பாடுகளுக்குப் பங்காளியாகி அவருடைய காயங்களை நான் ஸ்துதிக்கச் செய்தருளும்.

உமது திருக்குமாரனுடைய திருக்காயங்களில் அன்பு கூர்ந்து, நொந்து அவருடைய சிலுவையைத் தழுவி அவரைச் சிநேகிக்கச் செய்யும்.

நடுத்தீர்வை நாளிலே உம்முடைய ஒத்தாசையினாலே நான் திடங்கொண்டு உம்மால் தப்பித்து விடப்படக் கடவேனாக.

நான் சிலுவையால் காப்பாற்றப்பட்டுக் கிறீஸ்து வினுடைய மரணத்தால் தேறி வரப்பிரசாதத்தில் ஓங்கப் பண்ணியருளும்.

என் சரீரம் மரிக்கும்போது என் ஆத்துமம் நித்திய மோட்சத்தில் சேரும்படிக்கு அநுக்கிரகம் செய்தருளும்.

ஆமென்.

வியாகுலம் நிறைந்த கன்னிகையே! கிறீஸ்துநாதருடைய பாடுகளினால் நாங்கள் ஈடேற்றம் பெறத் தக்கவர்களாகும்படிக்கு, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பிரார்த்திக்கக்கடவோம்.
எங்கள் ஆண்டவராயிருக்கிற சேசுக்கிறிஸ்துநாதரே, அன்று சிமியோன் அருளின மொழியின்படியே உம்முடைய பாடுகளினாலேயும், திருமரணத்தினாலேயும் உமது மாதாவாயிருக்கிற அர்ச்சியசிஷ்ட மரியம்மாள் என்கிற பரிசுத்த கன்னிகையுடைய அமிர்தமான திவ்விய இருதயத்தில் வாள் ஊடுருவப்பட்டதே. அப்படிப்பட்ட உமது தாயாருடைய வியாகுலத் துன்பத்தை நினைத்து வணங்குகிறவர்களாகிய நாங்கள் அனைவரும் உம்முடைய பாடுகளிலேயும் திரு மரணத்திலேயும் உண்டாகிய பாக்கியமான பலன்களை அடையவும், சதாகாலமும் உம்மைக் கண்டு களிகூர்ந்திருக்கவும் எங்களுக்குப் பிரசன்னராய்க்கிருபை செய்தருளும்.

ஆமென்.

ஒரு விலையேறப்பெற்ற காணிக்கை.

ஆர்ஸின் பங்குக் குருவான அர்ச். வியான்னி அருளப்பர், தமது அவசரத் தேவைகளின்போது, இரத்தத்தாலும், காயங்களாலும் முழுவதுமாக மூடப்பட்ட நமது திவ்விய இரட்சகரை, மரியாயின் திருக்கரங்களின் வழியாக, நித்திய பிதாவுக்கு ஒப்புக்கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மிக விலையேறப்பெற்ற வரப்பிரசாதங்களைத் தவறாமல் பெற்றுக் கொள்வதற்கான வழி இது என்று அவர் கூறினார். இதற்காக பின்வரும் ஜெபத்தைப் பயன்படுத்தலாம்.

வியாகுல மாதாவாகிய அர்ச். மரியாயே, உமது திருக் குமாரனின் திரு மரணத்தின்போது நீர் அனுபவித்த சொல்லிலடங்காத கொடிய வாதைகளின் வழியாக,

(தேவையான வரத்தைக் குறிப்பிடவும்)

என்னும் வரத்தை எனக்குப் பெற்றுத் தரும்படியாக, இரத்தத்தினாலும், காயங்களினாலும் முழுவதுமாய் மூடப்பட்ட உமது நேசப் பிரிய குமாரனை என் நிமித்தமாக நித்திய பிதாவுக்கு ஒப்புக்கொடுத்தருளும்.

ஆமென்.

சேசுவின் திரு மரணத்தின்போது மாமரி அனுபவித்த ஏழு வியாகுலங்களை தியானித்து, பாக்கியமான மரணமடைய மன்றாட்டு.

குறிப்பு: இந்த ஜெபங்கள் வழக்கமான மாதாவின் ஏழு வியாகுல மன்றாட்டுக்களிலிருந்து வேறுபட்டவை.

முதல் வியாகுலம்.

வியாகுல மாதாவாகிய மகா பரிசுத்த மாமரியே, உம்முடைய நேச குமாரன் புனித வியாழனன்று உம்மிடம் விடை பெற்றுக்கொண்டபோது உம்முடைய ஆத்துமத்தைக் குத்தித் துளைத்த கொடூர வேதனையை உமக்கு ஞாபகப்படுத்துகிறேன். வேதனையின் வாள் எப்படி உம்முடைய ஆத்துமத்தை ஊடுருவியது என்பதையும், அந்நேரத்தில் எத்தகைய சுட்டெரிக்கும் கண்ணீர்த் துளிகளை நீர் சிந்தினீர் என்பதையும் நினைவுகூர்ந்தருளும். அடியேன் என் நண்பர்களிடம் விடைபெறும்போதும், மரணத்தின் கசப்பில் என் சரீரம் என் ஆத்துமத்திலிருந்து பிரிக்கப்பட இருக்கும் போதும், எதிரியானவன் என் மேல் எந்த அதிகாரமும் கொண்டிராதபடி, மகா பரிசுத்த மரியாயே, எனக்கு உதவியருளும். 1 அருள்.
ஆமென்.

இரண்டாம் வியாகுலம்.

வியாகுல மாதாவாகிய மகா பரிசுத்த மாமரியே, உம்முடைய நேச திருக்குமாரன் அவமானமுள்ள விதத்தில் காட்டிக் கொடுக்கப்பட்டாரென்றும், யூதர்களால் கைது செய்யப்பட்டு, கட்டப்படவும், அடிக்கப்படவும், தள்ளப்படவும், அதன்பின் முதலில் அன்னாஸிடமும், பிறகு கைப்பாஸிடமும் இழுத்துச் செல்லப்படவும் தம்மைக் கையளித்தார் என்றும், அங்கே ஓநாய்களுக்கு மத்தியில் அகப்பட்ட செம்மறிப்புருவையைப் போல், ஒரு கைதியாக்கப்பட்டு, பொய்சாட்சிகளால் குற்றஞ்சாட்டப்பட்டார் என்றும் அர்ச்சியசிஷ்ட அருளப்பர் உமக்குச் செய்தி கொண்டு வந்த போது, தேவரீருடைய ஆத்துமத்தைக் குத்தித் துளைத்த கொடூர வேதனையை உமக்கு ஞாபகப்படுத்துகிறேன். மரியாயே, எத்தகைய வேதனையின் வாள் அப்போது உம் ஆத்துமத்தை வாதித்தது என்பதையும், எத்தகைய சுட்டெரிக்கும் கண்ணீர்த்துளிகளை நீர் சிந்தினீர் என்பதையும் நினைவுகூர்ந்தருளும். மரியாயே, என் கடைசி வேளையில், என் இருதயம் கவலையாலும், வேதனையாலும் நிறைந்திருக்கும்போது, உம்முடைய பிரசன்னத்தால் என்னைப் பலப்படுத்தித் தேற்ற வேண்டுமென்றும், அதைரியத்தினுள் விழுந்து விடாதபடி தேவரீர் என்னைப் பாதுகாக்க வேண்டுமென்றும் உம்மை மன்றாடுகிறேன். 1 அரு.
ஆமென்.

மூன்றாம் வியாகுலம்.

வியாகுல மாதாவாகிய மகா பரிசுத்த மரியாயே, புனித வெள்ளியன்று பிலாத்து உமது பிரிய குமாரனை ஜனங்களுக்கு முன்பாக அழைப்பித்து, ''இதோ மனிதன் பாருங்கள்!'' என்று கூறியதைத் துயரமிக்க உம்முடைய சொந்தக் கண்களால் கண்டபோது உம்முடைய ஆத்துமத்தை ஊடுருவிய கொடிய வேதனையை அடியேன் உமக்கு ஞாபகப்படுத்துகிறேன். நீர் ஒருபோதும் இந்த விதமாய் அவரை அறிந்திராத அளவுக்கு மிகக் கொடூரமான முறையில் உருக்குலைக்கப்பட்டவராக உமது மகா மதுரம் பொருந்திய திருக்குழந்தையானவரைக் கண்டபோது, உமது மென்மையுள்ள இருதயம் அனுபவித்த துன்பத்தை நினைவு கூர்ந்தருளும். தாய்மார்களில் உத்தம தாயான மரியாயே, சம்மனசுக்கொத்த அவருடைய திருமுகம் இவ்வளவு அச்சத்திற்குரிய விதமாய் உருக்குலைந்து, இரத்தத்தாலும் எச்சிலாலும் மூடப்பட்டிருப்பதையும், அவருடைய திருச்சிரசு முள்முடி சூட்டப்பட்டிருப்பதையும், அவருடைய திருச் சரீரம் முழுவதும் ஒரு மனிதன் என்று இனியும் சொல்ல முடியாத அளவுக்கு காயப்படுத்தப்பட்டிருந்ததையும் கண்டபோது, தேவரீர் என்னவெல்லாம் நினைத்திருப்பீர்! மரியாயே, பேசும்! யூதர்கள் வெறிகொண்டவர்களைப் போல, "அவனைச் சிலுவையில் அறையும்! சிலுவையில் அறையும்" என்று கூச்சலிட்டதையும், அதன்பின் பிலாத்து இட்ட அந்த மகா பாதகமான தீர்ப்பையும் கேட்டபோது, உமது மாசற்ற இருதயம் எப்பேர்ப்பட்ட துன்பம் அனுபவித்தது என்று எனக்குச் சொல்லும்! உமது தாய்க்குரிய இருதயத்தைக் கிழித்த இந்த மகா கசப்பான தாக்குதல்களைப் பார்த்து, அடியேன் என் ஜீவியத்தின் கணக்கை ஒப்புவிக்கும்படி கண்டிப்புள்ள நடுவருக்கு முன்பாக அழைக்கப்படும் வேளையில், அவர் எனக்கு சாதகமாகத் தீர்ப்பிடும்படியாக, என் அற்பமான நற்செயல்களோடு உம்முடைய மகா உத்தமமான பேறுபலன்களையும் ஒன்றிணைக்கும்படியாக அடியேன் உம்மை இரந்து மன்றாடுகிறேன். 1 அரு.
ஆமென்.

நான்காம் வியாகுலம்.

வியாகுல மாதாவாகிய மகா பரிசுத்த மரியாயே, ஓர் இளம் செம்மறிப்புருவையைப் போல் உம்முடைய மாசற்ற திருக்குழந்தையானவர், தாம் கொல்லப்பட வேண்டியிருந்த கொல்கொதாவுக்குச் செல்லும் பாதையில், முற்றிலும் சோர்ந்து போனவராகவும், பாரமான சிலுவை சுமத்தப்பட்டவராகவும் உம்மை எதிர்கொண்டு வருகிறதைக் கண்டபோது உமது ஆத்துமத்தைக் குத்திக் கிழித்த கொடூர வேதனையை அடியேன் உமக்கு ஞாபகப்படுத்துகிறேன். ஓ அளவற்ற வியாகுலத்தால் நிறைந்த திருமாதாவே, தமது கொடிய பாரத்தின் கீழ் அவர் அமிழ்ந்து போகிறதையும், கொலைஞர்களால் தள்ளப்பட்டும், அடிக்கப்பட்டும் முன்னேறிச் செல்ல தூண்டப்படுவதையும் காண்பது உமக்கு எப்பேர்ப்பட்ட கொடிய வேதசாட்சியமாக இருந்தது. ஓ பரிசுத்த கன்னிகையே, உம்முடைய ஆராதனைக்குரிய திவ்விய பாலன் தமது பாரமான சிலுவையைச் சுமந்து வருகிற துயரமான காட்சியால் முழுவதுமாகக் குத்தித் துளைக்கப்பட்ட உம்முடைய தாய்க்குரிய இருதயத்தின் வழியாக, என் கடைசி அவஸ்தையில் உம்முடைய திருமுக ஒளியால் நான் தேற்றப்படவும், பலப்படுத்தப்படவும் தக்கதாக, உம்முடைய இரக்கமுள்ள கண்களை என்னை நோக்கித் திருப்புமாறு உம்மை இரந்து மன்றாடுகிறேன். 1 அரு.
ஆமென்.

ஐந்தாம் வியாகுலம்.

வியாகுல மாதாவாகிய மகா பரிசுத்த மரியாயே, உமது நேசப் பிரிய குமாரன் மிகவும் மனிதத்தன்மையற்ற விதமாக, தமது திருக்கரங்களையும், திருப்பாதங்களையும் துளைத்த பெரிய ஆணிகளால் சிலுவையில் அறையுண்ட சத்தத்தைத் தேவரீர் கேட்டபோது, உம்முடைய ஆத்துமத்தை நசுக்கி வாதித்த மகா கொடிய வேதனையை அடியேன் உமக்கு ஞாபகப்படுத்துகிறேன். ஓ மிகுந்த நேசமும், அளவற்ற வியாகுலமும் நிறைந்த மாதாவே, அந்நேரத்தில், சுத்தியலின் ஒவ்வொரு அடியும் உம்முடைய மென்மையான இருதயத்தை எவ்வளவு கொடூரமாக வாதித்திருக்கும்! உம்முடைய மாசற்ற இருதயம் எப்பேர்ப்பட்ட கொடிய காயங்களைப் பெற்றிருக்கும்! இந்த உமது துன்பங்களின் வழியாகவும், பரலோகத்தையும் கூட ஊடுருவிய உம்முடைய சுட்டெரிக்கும் கண்ணீர்கள், பெருமூச்சுகளின் வழியாகவும், அடியேன் மரண அவஸ்தைப்படும்போதும், மரணத்தின் அம்புகள் என் இருதயத்தைப் பிளக்கும்போதும் தேவரீர் என்னைக் கைவிடாதிருக்கும்படியாக உம்மை மன்றாடுகிறேன். 1 அரு.
ஆமென்.

ஆறாம் வியாகுலம்.

வியாகுல மாதாவாகிய மகா பரிசுத்த மரியாயே, கண்ணீரின் வற்றாத சுனையாக மாறியிருந்த உமது கண்களை உயர்த்தி, உம்முடைய நேச குமாரன் சொல்லிலடங்காத வாதைகளோடு சிலுவையில் தொங்குவதையும், அவருடைய எதிரிகள் கேலி பரிகாசத்தையும், தேவதூஷணங்களையும் கொண்டு அவர்மேல் வெற்றி பெறுவதாகத் தோன்றுவதையும் நீர் கண்டபோது உம்முடைய ஆத்துமத்தைக் குத்தி ஊடுருவிய கொடிய வேதனையை அடியேன் உமக்கு ஞாபகப்படுத்துகிறேன். ''என் சர்வேசுரா, என் சர்வேசுரா, ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்?'' என்ற வார்த்தைகளைக் கேட்டபோது, உம் இருதயம் எத்துணை கொடூரமாகக் கிழிக்கப்பட்டிருக்கும்! ஓ, கொடுமையாக வாதிக்கப்பட்ட பரிசுத்த அன்னையே, "எல்லாம் முடிந்தது!'' "பிதாவே, என் ஆத்துமத்தை உமது கரங்களில் ஒப்படைக்கிறேன்" என்று உமது திருச்சுதன் உரத்த சத்தமாய்க் கூக்குரலிட்டபோது, சிலுவையின் அடியில் எவ்வளவு ஆறுதலற்றவராய் நீர் நின்று கொண்டிருந்தீர் என்பதை நினைவுகூர்ந்தருளும். ஓ, உமது திருச்சுதனானவர் சிலுவையின் மீது மரித்தபோது, உம் தாய்க்குரிய இருதயத்தை வாதித்த கொடிய வாதையும், துயரமும் எவ்வளவு பயங்கரமானதாயிருந்தது! உமது நேச குமாரனின் கசப்பான திரு மரணத்தின் வழியாக, என் மரண வேளையில் தேவரீர் எனக்கு ஒத்தாசை செய்ய வேண்டுமென்றும், என் எளிய ஆத்துமத்தை உமது திருக்கரங்களில் எடுத்து, உமது தெய்வீகக் குமாரனிடம் அதை சமர்ப்பிக்க வேண்டுமென்றும் அடியேன் உம்மை இரந்து மன்றாடுகிறேன். 1 அரு.
ஆமென்.

ஏழாம் வியாகுலம்.

வியாகுல மாதாவாகிய மகா பரிசுத்த மரியாயே, உமது திருக்குமாரனின் உயிரற்ற திரு இருதயம் ஓர் ஈட்டியால் குத்தித் திறக்கப்பட்டபோது உமது ஆத்துமத்தை ஊடுருவக் குத்திய கொடூர வேதனையை அடியேன் உமக்கு ஞாபகப்படுத்துகிறேன். அந்நேரத்தில் உமது நேச இருதயம் முழுவதுமாகக் குத்தித் துளைக்கப்பட்டது! ஓ துக்கத்தால் தாக்கப்பட்ட மாதாவே, உம்முடைய திருச்சுதனின் மரித்த திருச்சரீரம் சிலுவையினின்று இறக்கப்பட்டு, உமது கன்னிமைக் கரங்களில் வளர்த்தப்பட்ட போதும், உமது கண்ணீர் வெள்ளத்தால் அது கழுவப்பட்ட போதும் நீர் அனுபவித்த சொல்லிலடங்காத வேதனையை யார் உணரக் கூடும்! அவருடைய திருக்கரங்களிலும், பாதங்களிலும் உண்டான பெரிய காயங்களைக் கண்டு நீர் எவ்வளவு பயங்கரமுள்ள துயரத்தில் அமிழ்த்தப்பட்டீர்! அவருடைய தெய்வீகத் திருவதனம் உம்மால் கூட அடையாளம் காண முடியாத அளவுக்கு உருக்குலைந்து போயிருக்கிறதைக் கண்டு, நீர் அனுபவிக்காத வேதனை என்னவுண்டு? உமது இருதயத்தில் விழுந்த வேதனைத் தாக்குதல்களால் கற்களும் இளகியிருக் காதோ! அவை பகுத்தறிவற்ற மிருகங்களையும் உம்பேரில் தயவு கொள்ளச் செய்திருக்காதோ! ஆகவே, ஓ மகா தயவிரக்கமுள்ள மாதாவே, இந்த உம்முடைய சகல துயரங்களின் வழியாகவும், என் இறுதி அவஸ்தையில் என் ஆத்துமத்தின் பேரில் நீர் தயவு காண்பிக்கவும், உமது கண்ணீர்களால் அதைச் சுத்திகரிக்கவும், உமது திருச்சுதனின் திருச்சரீரத்தை தேவரீர் முன்பு கைகளில் ஏந்தியிருந்தது போல, என் ஆத்துமத்தையும் ஏந்தி, அதை நித்திய மோட்ச ஆனந்த சந்தோஷத்திற்குள் நடத்திச் செல்ல வேண்டு மென்றும் உம்மை இரந்து மன்றாடிப் பிரார்த்திக்கிறேன். 1 அரு.

வியாகுலம் நிறைந்த மரியாயே, கிறிஸ்தவர்களின் திருமாதாவே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
ஆமென்.

காணிக்கை ஜெபம்.

நித்திய பிதாவே, எங்கள் பாவங்களுக்குப் பரிகாரமாகவும், உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்களுக்கு உதவியாகவும், பரிசுத்த தாய்த் திருச்சபையின் தேவைகளுக்காகவும், பாவிகள் மனந்திரும்புவதற்காகவும் சேசுக்கிறிஸ்து நாதருடைய திரு இரத்தத்தையும், திருப்பாடுகளையும், மரணத்தையும், மகா பரிசுத்த கன்னி மாமரியின் வியாகுலங்களையும், அர்ச்சியசிஷ்ட சூசையப்பரின் வியாகுலங்களையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம்.

வியாகுலம் நிறைந்த கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!

ஆமென்.

வேதசாட்சிகளின் இராக்கினியான மாமரியை நோக்கி ஜெபம்.

மகா பரிசுத்த கன்னிகையும், வேதசாட்சிகளின் இராக்கினியுமான மரியாயே, என் மகனுக்குரிய நேசத்தின் உண்மையுள்ள மரியாதையை ஏற்றுக்கொள்ளும். மிக அநேக வாள்களால் ஊடுருவப்பட்ட உமது மாசற்ற இருதயத்திற்குள் என், எளிய ஆத்துமத்தை ஏற்றுக்கொள்ளும். உலக இரட்சணியத்திற்காக சேசுநாதர் மரிக்கத் திருவுளமான திருச்சிலுவையின் அடியில் அடியேனை உம்முடைய வியாகுலங்களின் அன்பனாக ஏற்றுக்கொள்ளும். வியாகுலம் நிறைந்த கன்னிகையே, எத்தகைய துன்ப சோதனைகளையும், எதிர்ப்புகளையும், நோய்களையும் எனக்கு அனுப்ப நம் ஆண்டவர் சித்தங்கொள்கிறாரோ, அவற்றையெல்லாம் உம்மோடு சேர்ந்து நான் மகிழ்ச்சியோடு ஏற்று தாங்கிக் கொள்கிறேன். என் மனதின் ஒவ்வொரு நினைவும், என் இருதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் உமக்கான தயவிரக்கத்தினுடையவும், நேசத்தினுடையவும் ஜெபமாக இருக்கும்படியாக, என் துன்பங்கள் எல்லாவற்றையும் உமது வியாகுலங்களின் நினைவாக, உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன். மகா மதுரமுள்ள மாதாவே, என் மீது தயவாயிரும், உமது திருக்குமாரனாகிய சேசுவோடு என்னைத் திரும்பவும் ஒன்றித்தருளும்; அவருடைய வரப்பிரசாதத்தில் நான் நிலைத்திருக்க எனக்கு அருள்வீராக. அடியேன் மோட்சத்தில் தேவரீரை சந்தித்து, என்றென்றும் உமது மகிமைகளைப் பாடிக் கொண்டிருக்கும்படியாக, என் மரண அவஸ்தையில் எனக்கு உதவி செய்தருளும்.

ஆமென்.

வியாகுல மாதாவை நோக்கி ஜெபம்.

(அர்ச். ஜெர்ரூத்தம்மாள் இயற்றியது.)

ஓ பாக்கியவதியான கன்னி மரியாயே, சர்வேசுரனுடைய அமலோற்பவத் தாயாரே, தேவரீர் சேசுநாதருடைய அகோர துன்ப துயரங்களைக் கண்டு நேசத்தினுடையவும், துக்கத்தினுடையவும் வேதசாட்சியத்தைத் தாங்கினீரே! நீர் உமது எண்ணிலடங்காத கஸ்திகளின் மூலமாகவும், நித்தியப் பிதாவுக்கு அவருடைய ஏக பேறான திருச்சுதனை ஒரு தகனப் பலியாகவும், என் பாவங்களுக்கான பரிகாரப் பலியாகவும் ஒப்புக்கொடுத்ததன் மூலமாகவும், என் இரட்சணிய அலுவலில் நீர் சேசுவோடு ஒத்துழைத்தீர். பாவியாகிய என்னை மீட்டு இரட்சிப்பதற்காக, மெய்யான சர்வேசுரனும், மெய்யான மனிதரும், உம் திருவுதரத்தின் கனியுமான சேசுவையே இழந்து போகுமளவுக்கு உம்மைத் தூண்டிய வாக்குக் கெட்டாத நேசத்திற்காக அடியேன் உமக்கு நன்றி செலுத்துகிறேன். நான் உறுதியான பிரதிக்கினையோடு என் ஜீவியத்தைத் திருத்திக் கொள்ளவும், புதிய பாவங்களால் என் நேச இரட்சகரை இனி ஒருபோதும் நான் சிலுவையில் அறையாதிருக்கவும், அவருடைய வரப்பிரசாதத்தில் என் மரணம் வரைக்கும் நிலையாயிருந்து, அவருடைய சிலுவை யினுடையவும், திருப்பாடுகளுடையவும் பேறுபலன்களின் வழியாக நித்திய ஜீவியத்தை நான் பெற்றுக் கொள்ளவும் தக்கதாக, பிதாவிடமும், சுதனிடமும் உமது வியாகுலங்களின் தவறாத பரிந்து பேசுதலை எனக்காகப் பயன்படுத்தியருளும்.

ஆமென்.

நேசத்தினுடையவும், துயரத்தினுடையவும், இரக்கத்தினுடையவும் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.