பாரம்பரிய திருக்குடும்ப பக்திமாலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாரம்பரிய திருக்குடும்ப பக்திமாலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அர்ச். சூசையப்பர் நவநாள் - 9 ம் ஜெபம்

5-வது: தேவ சிநேகம் அடைய ஜெபம்

தேவசிநேகத்தில் மகா ஐஸ்வரியமுடைய வரான அர்ச். சூசையப்பரே! சகல திரவியங்களிலும் மகா அபூர்வமான திரவியமாகிய தேவசிநேகத்தை நான் அடைய எனக்காக சர்வேசுரனை மன்றாடும். என்னைப் படைத்தவரும், காப்பாற்றுகிறவரும், மோட்சம் கொடுக்கிறவரும், சகலவித நன்மை களுக்கும் ஊருணியுமாகிய என் தேவனை நான் சிநேகியாமல் பிறகு யாரை சிநேகிப்பேன்? ஜென்மப் பாவத்தால் அந்த சிநேகம் என்னிடம் அணைந்துபோனதால், மிகவும் மனம் நொந்து கலங்கி விசனப்படுகிறேன். படைக்கப்பட்ட நான் தாய் வயிற்றில் உற்பவமான நாள் முதல் இது வரையில் மதியீனத்தால் கட்டிக்கொண்ட சகல பாவத்தையும் பொறுத்து, என் நன்றிகெட்டதனத் தைச் சட்டை பண்ணாமல், உபகாரத்திற்கு மேல் உபகாரம் செய்து வருகிற ஆண்டவரது சிநேகத்தால் நான் இறந்துபோனாலல்லோ தாவிளை? திவ்ய இரட்சகராகிய சேசுகிறீஸ்துவை நேசிக்கா தவன் சபிக்கப்பட்டவன் என்று வேதத்தில் எழுதி யிருப்பதால் என்னை சகல ஆபத்துக்களிலு மிருந்து மீட்டு, தமது கோபாக்கினியின் இடி என் மேல் விழாமல் தடுத்த எனது பிரிய இரட்சகரை நான் நேசிக்காவிட்டால், நானே சபிக்கப்பட்டு அவரை விட்டு நித்திய காலம் பிரிவேன் என்றும் நினைத்து பயந்து நடுநடுங்குகிறேன். கண்களின் இச்சையாலும், மாமிசத்தின் இச்சையாலும், ஜீவியத்தின் பெருமையாலும், காணப்படும் பொருட் களின் மேல் நான் வைத்த ஆசையாலும், உலக வெகுமானத்தின் பேரில் கொண்ட விருப்பத் தாலும், என்னில் தேவசிநேகம் அற்றுப்போன தால், இவை எல்லாவற்றையும் விட்டு என்னையே நான் பகைத்து, என் தேவனை உருக்கமாக சிநேகிக் கும் வரத்தை நான் அடையச் செய்தருளும். உலக சிநேகத்தாலும், அழிந்து போகிற சரீரத்தின் பட்சத் தாலும், உன்னதமான மகிமையும், நித்திய பாக் கியமும், ஏக திரவியமும், அளவற்ற ஞானமும், இன்பக் கடலும், பரிபூரண சத்தியமும், நீதியும், ஞானமுமாயிருக்கிற என் தேவனை நான் இழப் பதை விட, அவரது சிநேகத்தால் என் இரத்த மெல்லாம் சிந்தி அவரது பாதத்தில் என் உயிரை விட்டாலல்லோ தாவிளை? தேவசிநேகம் நிறைந்த மகா பெரிய அர்ச்சியசிஷ்டவரே, சகல நன்மைகளுக்கும் உபகாரங்களுக்கும் ஊருணியான கர்த்தரை நான் என் சகல சத்துவங்களோடும், புத்தி சித்தம் அறிவோடும் எல்லாவற்றையும் பார்க்க, சிநேகிக்கச் செய்தருளும். தேவ கற்பனைகளின்படி நடப்பதே சிநேகமாகையால், உயிருக் கொட்டி அவைகளை அனுசரித்து தெய்வத் தோடு நான் ஐக்கியப்பட எனக்காக அவரை வேண்டிக்கொள்ளும். பாவத்தால் கறைபட்டுக் குளிர்ந்த என் இருதயம், இஸ்பிரீத்துசாந்துவால் அனல் கொண்டு அக்கினி ஆகாயத்தில் தாவுவது போல் என் இருதயம் தேவனை நோக்கித் தாவ எனக்காக வரங் கேட்டருளும். தெய்வத்தைச் சிநேகிக்கிற சிநேகத்தில் நான் தேவனுக்குள் ஐக்கியமாகி, எல்லா மனிதரையும், அவருக் குள்ளும், அவருக்காகவும் சிநேகிக்க அனுக்கிரகித் தருளும். இரக்கமுள்ள தேவசிநேகத்தால் என் விரோதிகளுக்கு நான் பொறுத்தல் கொடுத்துத் தின்மைக்கு நன்மை செய்யும் வரத்தை எனக்குப் பெற்றுத் தந்தருளும். 

ஆமென்.

அர்ச். சூசையப்பர் நவநாள் - 8 ம் ஜெபம்

4-வது: தேவ நம்பிக்கை அடைய ஜெபம்

இம்மைக்கும் மறுமைக்கும் சர்வேசுரன் பேரில் திடமான நம்பிக்கையை வைத்திருந்த அர்ச். சூசையப்பரே! விசுவசிக்கிறவனுக்கு வெட்க மில்லை, நம்பிக்கையுள்ளவனுக்கு பயமில்லை என்பதை அறிந்திருந்தாலும், அநித்தியமான வஸ்துக்ளோடு ஒட்டிக்கொண்டிருக்கிற கெட்ட மாம்சத்தினிமித்தம் நித்திய காரியங்களின் பேரில் எனக்கு நம்பிக்கைக் குறைவதைக் கண்டு மிகவும் விசனப்படுகிறேன். சர்வேசுரனின் வாக்குத்தத்தம் பெரிதே! நான் பாசங்களால் இழுபட்டு புகை போல் மறையும் அநித்தியப் படைப்புகளின் பேரில் நம்பிக்கை வைத்ததால் துக்கங்களும், கவலைகளும் என் தலைக்கு மேல் போயின. மகாத் துமாக்கள் தங்கள் நம்பிக்கையால் பரலோகம் ஏறினாற்போல, நான் நம்பிக்கையில் திடன் கொண்டு, உறுதியான ஜெப தவங்களால் மோட்ச பதவி அடையச் செய்தருளும். எனக்கு உறுதியான விசுவாசமிருந்தால், சுவாமியானவர் இருப்பதையும் நித்திய பதவி கொடுப்பதையும் நம்பி உலகக் கவலைகளால் மயங்காமல், நான் பாராததும், தேவ வாக்கு சொல்வதுமான காரியங்களில் ஊன்றி, காற் றுக்கு அசையா மலைபோல் அமர்ந்து துன்பங்களில் திடன் கொண்டிருப்பேன் அல்லவோ? அப்படி நான் இராததைப் பற்றி மெத்த மனஸ்தாபப்படு கிறேன். தேவசுதன் மனிதனாய்ப் பிறந்து பாடு பட்டு மரித்து உயிர்த்து பரமண்டலத்தில் ஏறினதே என் நம்பிக்கைக்கு அஸ்திவாரமாயிருக்க,  நான் இன்னும் நம்பிக்கையில் தத்தளிப்பதைக் குறித்து மனங்கலங்கி அழுகிறேன். இந்த இரட்சகரை மாத்திரம் அண்டி, நான் எனக்கும் உலகத்திற்கும் மரித்து, நம்பிக்கையில் உயிர் வாழ்ந்தாலல்லோ தாவிளை? தேவமாதா முதலான அர்ச்சியசிஷ்ட வர்களும், சம்மனசுக்களும் தாழ்ந்த இந்த உலகத் தில் உபத்திரவப்படும் மனிதர்களுக்காக வேண்டிக் கொள்வதை நான் அறிந்திருந்தும், இரவும் பகலும் ஓயாமல் அவர்களை நோக்கி அலறி அழுது இடை விடாமல் மன்றாடாததால் விசனப்படுகிறேன். வரப்போகிற நித்திய ஜீவியத்திற்கு நான் காத்திருப் பதால், அழிந்துபோகிற சரீரத்தின் பேரிலும் என்றென்றும் ஒழிந்துபோகும் பொருட்களின் பேரிலும் நான் நம்பிக்கை வைப்பதேன்? இன்பங் களிலும், துன்பங்களிலும் சர்வேசுரன் பேரில் ஒரே நம்பிக்கையாயிருந்த அர்ச். சூசையப்பரே, நீர் என் அழுகைக்கும் வேண்டுதலுக்கும் இரங்கி சர்வேசு ரனை மன்றாடினாலும், அவர் எனக்குத் திடமான நம்பிக்கையைத் தருவார் என்று எனக்குத் தெரியும். நம்பிக்கையுள்ளவர்களுக்குக் கலக்கமில்லை. ஆகவே என் இருதயம் ஒன்றிலும் கலங்காமல் சர்வேசுரன் பேரில் மட்டும் நம்பிக்கை வைக்கச் செய்தருளும். என் நம்பிக்கைக்கு ஆதாரமான மோட்சத்தில் என் இருதயம் இடைவிடாமல் குடிகொண்டிருக்கச் செய்தருளும். துன்ப துரிதங் களில் கலங்காமல் தேவ வாக்கியங்கள் பேரில் என் ஆசையயல்லாம் வைத்து, நான் சர்வேசுரனை மாத்திரம் நாடி அவர் பேரில் மாத்திரம் நம்பிக்கை யாயிருக்க எனக்காக அவரை வேண்டிக்கொள்ளும். 

ஆமென்.

அர்ச். சூசையப்பர் நவநாள் - 7 ம் ஜெபம்

3-வது: தேவ விசுவாசம் அடைய ஜெபம்

சர்வ வல்லமை பொருந்திய சர்வேசுரன் சிறு குழந்தையானபோது அவரை சாட்சாத் கடவுளென்று விசுவசித்து நடுநடுங்கி தேவ ஆராதனை செலுத்திக்கொண்டு வந்த அர்ச். சூசை யப்பரே! நான் உருக்கமுள்ள சாதாரண விசுவாச மடைய எனக்காக வேண்டிக்கொள்ளும். என் இருதயம் கெட்டுப்போன சுபாவத்தின்படியே அவிசுவாசத்தாலும், அவநம்பிக்கையாலும், சந்தேகங்களாலும் அலைக்கழிக்கப்படுவதால் இவ்வித மோசங்கள் நீங்க தேவ வசனம் சூரிய னைப் போல் என் இருதயத்தில் உதிக்கத்தக்க தாகச் சர்வேசுரனிடம் எனக்காக மன்றாடும். மனிதர்கள் பேரில், அநித்திய வஸ்துக்கள் பேரில் விசுவாசம் வைத்து நான் மோசம்போகாமல் செய் தருளும். என்னை உண்டுபண்ணின தேவனையும், அவரது பேரின்பமான மோட்சத்தையும், அவர் பாவிகளுக்குக் கட்டளையிட்ட பயங்கரமான நரகத்தையும், அவர் திருக்குமாரன் எனக்கு உண்டு பண்ணின கிருபையையும், பாவப் பொறுத்தலை யும் நான் உறுதியாக விசுவசிக்கிறேன். என் சரீரத் திலும், பலவீனத்தாலும், வெளித் தந்திரங்களாலும், பாவத்திற்கு ஆக்கினையாக வந்த காரணத்தாலும் நான் மூடப்பட்டிருப்பதால், நான் கண்ணால் பார்க்கக் கூடாததுமாய், என் இருதயம் உணரக் கூடாததுமான தேவ காரியங்களை உயிரூட்டி உஷ்ணம் பொருந்திய விசுவாசத்தோடு நான் விசுவசிக்கச் செய்தருளும். உலக இரட்சகர் இரட்சணியத்தின் வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருப் பதாலும், அவர் நெரிந்த நாணலை முறிக்கா மலும், மங்கிய தீயை அணைக்காமலும் இருப் பதாலும், உலக இருளின் பாதாளத்தில் அகப் பட்டுக்கொண்டு தத்தளிக்கிற என்னை அவர் புறக்கணிக்க மாட்டாரே, ஆகையால் தப்பறை யான உபதேசங்களாலும், மனிதரின் கோட்பாடு களாலும் நான் மோசம் போகாமல் எல்லா விஷயத்திலும் கிறீஸ்துநாதரைக் கண்டு பாவித்து, அவரிடம் நீதியையும் பாக்கியத்தையும் பெற்றுக் கொள்ளச் செய்தருளும். நான் விசுவாசத்தால் ஆபேலைப் போல தேவனுக்கு பலியிடவும், ஏனோக்கைப்போல வானமண்டலத்தில் எடுத்துக் கொள்ளப்படவும், நோவேயைப் போல மெய் யான திருச்சபையின் அவயவமாயிருக்கவும், ஆபிர காமைப்போல் எப்போதும் பரமண்டலத்தை நாடி நிற்கவும் செய்தருளும். விசுவாசத்தால் யாக்கோபு சம்மனசின் ஆசீர்வாதத்தைக் கொண்டதையும், விசுவாசத்தால் மனுப்புத்திரரில் அநேகர் சுபாவத் துக்கு மேற்பட்ட அநேக புதுமைகளைச் செய்த தையும் நான் அறிந்திருக்கிறேன். ஆகையால் உலகத்தாரோடு நான் மகிழ்ச்சி அடையாமல், என் இரட்சகரோடு துன்பத்தின் பாதையில் நான் நடக்கத் திடனுள்ள விசுவாசத்தை எனக்குத் தந்தருளும். பூர்வீக மகாத்துமாக்களைப் போல நான் உறுதியான விசுவாசம் கொண்டு, வானத்தினின்று இறங்கிய தேவ அப்பமாகிய திவ்ய நற்கருணையைப் புசித்துக்கொண்டு, தானியே லைப் போல நரக சிங்கமாகிய பசாசின் வாயை மூடச் செய்து, என்றென்றைக்கும் கர்த்தராகிய சேசுநாதரை நான் காணும்படி எனக்காக வேண்டிக் கொள்ள உம்மை மன்றாடுகிறேன். 

ஆமென்.

அர்ச். சூசையப்பர் நவநாள் - 6 ம் ஜெபம்

2-வது: தேவ பயம் அடைய ஜெபம்

சர்வேசுரனாலே மிகவும் உயர்த்தப்பட்ட அர்ச். சூசையப்பரே! ஞானத்திற்கு ஆரம்பமாகிய தெய்வபயத்தை எனக்கு வாங்கித் தந்தருளும். வானமும் பூமியும் அவைகளில் அடங்கிய காரி யங்களும் தெய்வ மகத்துவத்தையும் வல்லமை யையும் காட்டுவதால், எனக்கு எவ்வளவோ பயங் கரம் உண்டாயிருக்க வேண்டியது. என் நினைவு களும் வார்த்தைகளும், கிரியைகளும் தெய்வ பயத்தால் நடத்தப்படாமல் கெட்டுப் போன என் சுபாவத்தால் இழுக்கப்படுவதைக் கண்டு மிகுந்த விசனப்படுகிறேன். தேவ கற்பனைகளுக்கும் வேத வசனங்களுக்கும் என் மனது பய பட்சத்தோடு அமையாமல் உலக இச்சைகளுக்கும் கீழ்ப்படிவ தால், என் பிரலாபம் மிகுந்து போகிறது. தேவ கட்டளையைப் புறக்கணிப்பவனை தேவன் புறக் கணிப்பார் என்பதை நினைத்து நடுங்குகிறேன். தேவரீர் சிறு வயது முதல் தெய்வ சகாயத்தைக் கொண்டிருந்தீர். என் அசட்டையாலும், மந்த குணத்தாலும் தேவ கோபத்திற்கு உள்ளாகாதபடி அருமையான தேவ பயத்தை நான் அடையச் செய்தருளும். நான் சாவுக்கும், நோவுக்கும், சஞ்சலங்களுக்கும் அஞ்சாமல் பாவங்களையும், பசாசின் கிரியைகளையும் விட்டு, நான் என்னையே பகைக்கச் செய்தருளும். நான் சத்துருவுக்குப் பயப்படுவதுபோல, என்னைப் படைத்த ஆண்டவ ருக்குப் பயப்படாமல், ஒரு பிள்ளை தன் பிதா வுக்குப் பயப்படுகிற சிநேகம் நிறைந்த பயத்தை நான் அடையச் செய்தருளும். உபத்திரவங்களா லும், என் சுபாவ பலவீனங்களாலும், சோதனை களாலும் நான் தளராமல் நேசத்துக்குரிய தெய்வ பயத்தால் என் ஆத்துமம் தைரியம் கொண்டு நிலைநிற்க எனக்காக ஆண்டவரை மன்றாடும். நான் எல்லாக் காரியங்களிலும் சர்வேசுரனின் வல்லமையையும், ஞானத்தையும், கிரியையையும் யோசித்து நேச பயம் கொண்டு, இவ்வுலக துன்பங் களுக்கு நான் பயப்படாதிருக்கக் கிருபை செய் தருளும். செல்வங்களுக்கும், உலக ஆடம்பரங் களுக்கும் என் மனது இசைந்து அஞ்ஞானமான உலகக் கற்பனைகளுக்குப் பயப்படாமல், உள்ளத்திலும் வெளியிலும் கர்த்தருக்கு பயப்பட்டு அவருக்கு பயப்படுகிறவர்களுக்கு அவர் வாக்குத் தத்தம் செய்திருக்கிற இரட்சிப்பையும் இரக்கத் தையும், ஆசீர்வாதத்தையும், ஞானத்தையும், சகாயத்தையும், கிருபாகடாட்சத்தையும், மெய்யான பாக்கியத்தையும் அடையும்படிக்கு எனக்காக வேண்டிக்கொள்ளும். 

ஆமென்.

அர்ச். சூசையப்பர் நவநாள் - 5 ம் ஜெபம்

அர்ச். சூசையப்பரின் அடைக்கல ஜெபம்

1-வது தேவனை அறிய ஜெபம்

பாவ இருள் அகல பரிசுத்தத்தில் உயர்ந்து மனிதர் இயல்பு கொண்ட மட்டும் சம்பூரண மாய்க் கடவுளை அறிந்து ஆனந்த சந்தோ­த்தில் மூழ்கியிருந்த அர்ச். சூசையப்பரே! ஜென்மப் பாவத்தின் இருள் அகல ஆனந்தப் பிரகாசமுள்ள தேவன் வந்து என் அகத்தில் பிரவேசம் செய்யத் தக்கதாக எனக்காக அவரை இரந்து மன்றாடும். ஆடுகள் தங்கள் மேய்ப்பனையும், மாடுகள் தங்கள் எஜமானையும் அறிகின்றன. ஐயோ! என்னை உண்டுபண்ணி, இரட்சித்து ஆனந்த பாக்கியம் அளிக்கும் என் தேவனை என்னால் கூடிய வரை அறிந்து அவருக்குள் நான் ஒன்றித்துப் போகாம லிருப்பதால் எனக்கு வெகு சஞ்சலத் துயரமிருக் கிறது. திரியேக தேவனை அறிந்து அவரது சிநேகத் தைக் கொள்ளத்தக்கதாக முத்திப்பேறு பெற்ற வர்கள் சுபாவத்தை ஜெயிக்க எம்மாத்திரமோ அருந்தவம், தியானம், ஜெபம் செய்தார்கள். நான் பாவச் சகதியில் சிக்கி நொந்து பலவீனப்பட்டிருப் பதால், சூரியனைக் போல பரிசுத்தவான்களுக் குப் பிரகாசிக்கும் தேவ வசனங்களை நான் தியா னித்து, என் பலவீனத்திற்குத் தக்க ஜெபங்களைச் செய்து என்னை உருவாக்கின தேவனை அறியக் கிருபை செய்தருள உம்மை மன்றாடுகிறேன். என்னால் பிதாவுக்குத் தோத்திரமும் தேவ சுதனுக்கு ஸ்துதியும், இஸ்பிரீத்துசாந்துவுக்கு நமஸ்காரமும் உண்டாகச் செய்யும். தேவ சுபாவத் தின் மகிமைப் பிரகாசம் என் ஆத்தும அந்தரங் கத்தில் பதியவும், சிருஷ்டிப்புகளின் விவரங்களை அறிந்து நான் சிருஷ்டிகரிடம் சேரவும் செய்தரு ளும். நான் தீர்க்கதரிசனங்களால் தெளிந்து, சுவிசே­ அற்புதங்களால் ஊக்க ஒளி கொண்டு, கிறீஸ்துவின் அரும்பாடுகளாலும், தாழ்மையாலும் மனமகிழ்ச்சி கொண்டு உலகத்தை வெறுத்து அக்கினிமயமான தேவசிநேகத்தைக் கொள்ளக் கிருபை செய்தருளும். பசாசின் தந்திரங்களையும், உலக மாயைகளையும் ஜெயித்து, திரியேக தேவனை சுவைத்துப் பார்க்க வேண்டிய வரத்தை நான் அடைய கிருபை செய்தருளும். சர்வேசுரனை அறிகிற அறிவே நித்திய ஜீவன் என்று அர்ச்சிய சிஷ்டவர்கள் அகமகிழ்ச்சி கொண்டு எல்லாத் தந்திரங்களையும் வென்று நித்திய பேரின்பப் பேறுபெற்றவர்கள் என்று நான் அறிந்திருக் கிறேன். ஆகையால், தேவ சுதனோடு வெகு காலம் பழகிய தேவரீர் தயை புரிந்து தேவனை அறிகிற சாஸ்திரத்தை நான் அடையத்தக்கதாக அவரை எனக்காக வேண்டிக் கொள்ளும். 

ஆமென்.

அர்ச். சூசையப்பர் நவநாள் - 4 ம் ஜெபம்

ஓ! யூதேயா நாட்டை ஆண்ட கீர்த்திப் பிரதாபமுள்ள இராஜாக்களின் குலத்தில் உதித் தவரே, பிதாப்பிதாக்களின் சற்குணத்தின் சுதந்தர வாளரே, உத்தம பாக்கியவானாகிற அர்ச். சூசை யப்பரே! அடியேனுடைய மன்றாட்டைக் காது கொடுத்துக் கேட்டருளும். சேசுநாதருக்கும் அர்ச். மரியம்மாளுக்கும் பிற்பாடு, என் அத்தியந்த வணக்கத்துக்கும் முழு விசுவாசத்திற்கும் காரண ரும் உன்னத பாதுகாவலுமாயிருப்பவரே! நீர் சிறந்த அர்ச்சியசிஷ்டவராயிருக்கிறீரே. தாழ்மை யில் சர்வேசுரனுக்கு மிகுந்த தூய்மையோடும், முழு ஆசையோடும் தொண்டு செய்து வருவோ ருக்கு நன்மாதிரிகையாக, அந்தரங்கத்தில் விளங்கி நின்ற மகா அர்ச்சியசிஷ்டவரே, உமது பேரில் விசுவாசம் கொண்ட பக்திமான்களோடு நானும் ஒருவனாக உமக்குப் பணிவிடை புரிய என்னை முழுவதும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். பிள்ளை யைப் போல உமக்கு நான் கீழ்ப்படியவும், உம்மை சிநேகிக்கவும் அநுக்கிரகம் செய்தருளும். நீர் என் பிதாவும், நான் உமது பிள்ளையும் ஆகையால், பிள்ளையாகிய நான் பிதாவாகிய உமக்குச் செலுத்த வேண்டிய வணக்கத்தையும், உமது பேரில் வைக்க வேண்டிய நம்பிக்கையையும், அன்பையும் நான் அடையச் செய்தருளும். திருச்சபைக்கு உட்பட்ட கிறீஸ்தவர்களுக்காகப் பரிந்துபேசும் வல்லமை பொருந்திய நியாய தூதுவரே, நீர் சர்வேசுரனிடம் அடியோர்களுக்காகப் பேசின மனு வீண் போனதில்லையயன்று அர்ச். தெரேசம் மாள் உறுதியாய் சொல்லியிருக்கிறாரே! ஆகை யால் அடியேன் இப்பொழுது உமக்குச் செலுத்தும் இந்த வேண்டுதல் மூலம் என் மனுவை அடைய எனக்காக ஆண்டவரிடம் மன்றாடியருளும். ஓ சிறந்த அர்ச்சியசிஷ்டவரே! நித்திய சமாதானத் தோடு நான் சம்பந்தப்பட்ட அர்ச். திரித்துவத் துக்கு என்னை ஒப்புக்கொடுத்தருளும். ஆண்டவ ரின்  பரிசுத்த சாயலாய்ப் படைக்கப்பட்ட நான் பாவக்கறையால் அசுத்தப்படுத்திக்கொள்ள விடா தேயும். என் திவ்ய இரட்சகர் தமது அன்பின் சுவாலையை என் இருதயத்திலும் சகல விசுவாசி களின் இருதயங்களிலும் பற்றியயரியச் செய்ய அவரிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். திவ்ய சேசு குழந்தையாய் இருந்தபோது கொண் டிருந்த பரிசுத்த தன்மையையும் தாழ்ச்சியையும் நாங்கள் எங்கள் இருதயத்தில் பெற்றுக்கொள்ளச் சுவாமியை மன்றாடியருளும். உமது பரிசுத்த மணவாளியாகிய முப்பொழுதும் கன்னித் தாயின் பேரில் நான் வைத்திருக்கும் விசுவாசம் அதிகரிக் கக் கட்டளையிட்டருளும். நீர் இறக்கும்போது சர்வேசுரனிடம் பெற்ற பாக்கியத்தைப் பார்த்து இரட்சகருடையவும், தேவமாதாவினுடையவும் பாதுகாவலில் நான் உயிர்விடச் செய்து, என் ஜீவியத்திலும் மரணத்திலும் என்னைப் பாதுகாத்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன். 

ஆமென்.

அர்ச். சூசையப்பர் நவநாள் - 3 ம் ஜெபம்

நல்ல மரணத்தைக் கொடுக்கிற வரமுள்ள அர்ச். சூசையப்பரே! நான் செய்த பாவத்தால் எனக்கு ஆகாத சாவு வருவதற்குப் பாத்திரவானா யிருந்தாலும், உமது பேரில் நான் வைத்த நம்பிக் கையின் காரணமாக தேவரீர் சர்வேசுரனை இரந்து எனக்கு நல்ல மரணத்தைக் கட்டளையிடுவீர் என்று நம்பியிருக்கிறேன். இப்படிப்பட்ட பாக் கியமான மரணத்தை நான் அடையத்தக்கதாக நீர் அனுபவிக்கிற வாக்குக்கெட்டாத மோட்ச பாக் கியத்தைக் குறித்து உம்மை மன்றாடுகிறேன். தேவ வரங்களால் நிறைந்த அர்ச். சூசையப்பரே வாழ்க! கர்த்தராலும் கர்த்தருடைய திருத்தாயாராலும் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே! உம்முடைய திருக் கன்னிப் பத்தினியின் கனியாகிய சேசு ஆசீர்வதிக் கப்பட்டவருமாமே. கடவுளுடைய தாயாரின் பரிசுத்த பத்தாவான அர்ச். சூசையப்பரே, உம்  ஊழியரும், பிள்ளைகளுமாயிருக்கிற எங்களுக் காக வேண்டிக்கொள்ளும். சேசுகிறீஸ்துநாத ருடையவும், கன்னிமரியம்மாளுடையவும் திருக் கரங்களில் பாக்கியமான மரணத்தை அடைந்தவர் நீரே.  எங்களுக்கு  இப்போதும்  எங்கள்  மரண நேரத்திலும் ஒத்தாசையாயிரும். அருளினாலே பூரண சூசையப்பரே வாழ்க. சேசு மரியாயும் உம்முடனே. ஆடவருக்குள் ஆசீர்வதிக்கப்பட் டவரும் நீரே! உமது பத்தினியின் திருவயிற்றின் கனியாகிய சேசு ஆசீர்வதிக்கப்பட்டவரே. அர்ச். சூசையப்பரே, அர்ச். தேவமாதாவின் துணைவரே, சேசுநாதரைப் போ´த்தவரே, உமது பேரில் பக்தியாயுள்ளவர்களுக்காக வேண்டிக்கொள்ளும். இஸ்பிரீத்துசாந்துவின் வரங்களால் பூரண சூசை யப்பரே வாழ்க, அர்ச். தேவமாதாவுக்குப் பிள்ளை யான சேசுநாதர் அனந்த கிருபையோடு உமக்குப் பிள்ளையாக வந்ததால் தேவதாயார் பெண் களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டது போல, நீரும் ஆடவருக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவரே. கிறீஸ்து வின் பிதாவென்னும் பெயர் படைத்த அர்ச்.  சூசையப்பரே! அர்ச். தேவமாதாவுக்குப் பரிசுத்த பத்தாவே, இந்த உலகத்தில் உமக்குக் கீழ்ப்படிந்த சேசுநாதர் பாவிகளாயிருக்கிற எங்களுக்கு இப்போதும் எங்கள் மரண நேரத்திலும் கிருபை செய்யும்படி எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். 

ஆமென்.

அர்ச். சூசையப்பர் நவநாள் - 2 ம் ஜெபம்

எனது இரட்சணியப் பிதாவான சூசை முனீந்திரரே! சேசுநாதர் பூலோகத்தில் உமக்கு மிகுந்த அமைதலோடு கீழ்ப்படிந்து மகா தயை யோடும், வெகுமானத்தோடும் ஆதரித்து நடந் தாரே; இப்போது பரலோகத்தில், உமது சுகிர்தங் களுக்குப் பலன் கொடுக்கிற இடத்தில், நீர் கேட் கிற எந்தக் காரியங்களுக்கும் இல்லை என்கிற துண்டோ? அதில்லையே, ஆனதினால் நீர் எனது தயவான பிதாவைப் போல எனக்காகப் பிரார்த் தித்து, முதலாவது - நான் என் சகல பாவங்களை யும் வெறுத்து, துர்க்குணங்களை அருவருத்து, சுகிர்தங்களுக்குப் பிரயாசைப்படும்படி தேவ வரப்பிரசாதமடையச் செய்தருளும். இரண்டா வது ‡ நான் நடக்கிற நல்ல வழிக்குப் பசாசு பண்ணுகிற சர்ப்பனைகளையும், உலகத்திலுள்ள விக்கினங்களையும் அகற்றி, என் சகல ஆபத்து அவசரங்களிலே பிரசன்னராய் எனக்கு நீர் சகாயம் செய்ய வேண்டும் என்று மன்றாடுகிறேன். இந்த நன்மைகளை எல்லாம் சர்வேசுரனின் சித்தத்தின் படியே அடைய உமது காருண்ணியமுள்ள அடைக் கலத்தை நம்பியிருக்கிறேன். சாகிறவர்களுக்கு உறுதித் துணையாகிய அர்ச். சூசையப்பரே! உமது வலது பக்கத்தில் நீர் வளர்த்த உம்முடைய பிள்ளையயன்று பேர் கொண்ட சேசுநாதரும், உமது இடது பக்கத்தில் உமது பத்தினியாகிய தேவ மாதாவும் உமக்கு ஆறுதல் சொல்லிக் கொண் டிருந்ததால் ஆனந்த சந்தோஷத்தோடு மரணத்தை அடைந்தீரே; அதை நினைத்து உம்மை வணங் கும் எங்களை இப்பொழுதும் மரண நேரத்திலும் சேசுநாதரும் தேவமாதாவும் தங்கள் திருக்கரங் களால் எங்கள் ஆத்துமங்களை ஒப்புக்கொள் ளவும், உறுதியோடு நாங்கள் மரணமடையவும் அனுக்கிரகம் செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம் 

ஆமென்.

அர்ச். சூசையப்பர் நவநாள் - 1 ம் ஜெபம்

சூசை முனிவரே! அருளிலும் வரப்பிரசாதத்திலும் உமக்குச் சமானமுள்ளவன் யார்? பிதாவாகிய சர்வேசுரனின் பொருட் காப்பாளர் நீர்; சுதனாகிய சர்வேசுரனை வளர்த்த தந்தை நீர்; இஸ்பிரீத்துசாந்துவிட மாய்த் தமது பத்தினிக்கு விரத்த நிழலானவர் நீர்; பரம திரித்துவத்தால் திவ்ய இரகசியங்களின் சஞ்சிதக்காரராய்த் தெரிந்து கொள்ளப்பட்டவர் நீர்; சர்வமும் சிருஷ்டித்தவருடைய மாதாவுக்கு உத்தம பத்தாவானவர் நீர்; இப்படிப்பட்ட உமது மகிமையை வாழ்த்த தேவ தூதர்களுக்கும்கூட அரிதாயிருக்க, அடியேனுக்கு இயல்வதெப்படி? ஆனால் என் ஆசையும் பக்தி யும் நிறைவேறத்தக்கதாக இயன்ற வரை உம்மைத் துதிக்கக்கடவேனாக. தாயின் உதரத்திலே தேவ வரப்பிரசாதத்தால் அலங்கரிக்கப்பட்டதால், பாக்கியவாளன் நீர் வாழ்க, வாழ்க! பாவ உலகில் நீர் பிறந்து, பாவப் பழுதில்லாமல் ஜீவித்ததால் பாக்கியவாளன், நீர் வாழ்க, வாழ்க! தண்ணீரில் உற்பவித்த புஷ்பம் தண்ணீரோடு கலவாமலிருப்பது போல, பெண் குடும்ப வாசத்தில் வாழ்ந்து, பெண் ணோடு உறவின்றி இருந்ததால் பாக்கியவாளன், நீர் வாழ்க, வாழ்க! சுகிர்தவாளனென்று முதன் முதல் தேவ வாக்கியத்தில், சுவிசே­த்தில் நிரூபிக்கப்பட்டதால் பாக்கியவாளன், நீர் வாழ்க, வாழ்க! பழுதற்ற கன்னிதானத்தோடு விவாக சரணத்தின் பலனாகிய புத்திர பலனை இஸ்பிரீத்து சாந்துவால் அடைந்ததால் பாக்கியவாளன், நீர் வாழ்க, வாழ்க! இருபத்தேழு வரு­ம் தேவமாதா வோடு உரையாடி, அவர்களது புண்ணியங்களின் பின்சென்றதால் பாக்கியவாளன், நீர் வாழ்க, வாழ்க! கிறீஸ்துநாதருக்குக் காவலான தேவதூத ராக உம்மைக் கையேற்றுக் கொண்டதால் பாக்கியவாளன், நீர் வாழ்க, வாழ்க! சேசுநாதருக்கு உமது கையால் உணவு ஊட்டி, உடுத்தி, சீராட்டி, கையில் ஏந்திப் பணிவிடை செய்ததால் பாக்கிய வாளன், நீர் வாழ்க, வாழ்க! தேவ குமாரன் உம்மைப் பிதாவென்று கூப்பிட்டதால் பாக்கிய வாளன், நீர் வாழ்க, வாழ்க! அறுபது வயது ஆகும் வரை தேவகுமாரனுக்கும் மாதாவுக்கும் துணை செய்து சாகிற வேளையில் அவர்களும் ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்கும்போது, உமது சுகிர்தம் நிறைந்த ஆத்துமத்தை அவர்கள் கையில் ஒப்புக்கொடுத்ததாலும், அவர்கள்தாமே உம்மை அடக்கம் செய்ததாலும் பாக்கியவாளன், நீர் வாழ்க, வாழ்க! மோட்ச இராச்சியத்தில் தேவ மாதாவுக்குப் பிறகு எல்லாரிலும் அதிக மோட்ச மகிமையை அடைந்திருப்பதால் பாக்கியவாளன், நீர் வாழ்க, வாழ்க! தேவமாதா உம்மை மெய்யான பத்தாவாகவும், தேவசுதன் உம்மை கைத்தாதை யாகவும் வெகுமானித்து, நீர் கேட்டதெல்லாம் செலுத்துவதால், பாக்கியவாளன், நீர் வாழ்க, வாழ்க! நீர் பழுதற்ற கன்னித்தானன் ஆனதினால், கன்னியருக்குத் தஞ்சம்; மெய்யான விவாக சரணனு மானதால் விவாக சரணருக்குத் தஞ்சம்; திவ்ய பாலனான சேசுவைக் காத்ததால், தாய் தந்தை இல்லாத சிறுவருக்குத் தஞ்சம்; தேவமாதாவை யும், குமாரனையும் கொண்டு அநேக தூரம் பரதேசியாய் வழிநடந்ததினால் பரதேசிகளுக்கும் தஞ்சம்; இப்படியே யாவரும் உமது தஞ்சத் தையும், அடைக்கலத்தையும் நம்பியிருக்கிறபடி யால், நானும் என்னை உமக்கு அடிமையாக ஒப்புக்கொடுக்கிறேன். சேசு மரியாயோடு நீரும் என்னை அடிமையாகக் கையேற்றுக்கொண்டு, உமது திருச்சித்தத்தின்படியே நடப்பித்து, பரகதி யில் என் ஆத்துமம் சேரும்படி கிருபை செய்தருளும். 

ஆமென்.

அர்ச். சந்தியாகப்பர் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

ஜென்ம பாவமில்லாமல் உற்பவித்த அர்ச். மரியாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தேவ மாதாவால் சிநேகிக்கப்பட்ட சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கலிலேயா நாட்டைச் சேர்ந்த செபதேயு என்பவருக்கு அருமை மகனான சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுநாதர் சுவாமி உம்மை அழைக்கும் போது தந்தையையும், வலைகளையும் விட்டு மனமுவந்து அவரைப் பின்சென்ற சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அவராலே உம்முடைய சகோதரனோடு இடியின் மக்களென்று அழைக்கப்பட வரம் பெற்ற சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுநாதர் சுவாமி உருமாறினபோதும், நூற்றுவர் தலைவனின் இறந்த மகளை உயிர்ப்பிக் கும்போதும் அவர் அருகே இருந்த சந்தியாகப்பரேஎங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுநாதர் சுவாமி பூங்காவனத்திற்குப் போகும்போது, அவரோடு போகும் பேறுபெற்ற சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுநாதர் சுவாமி மோட்சம் சென்ற பின், அவரைத் தவிர வேறு தெய்வமில்லை என்று யூதேயா தேசத்திலும், சமாரியா தேசத்திலும் போதித்த சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஸ்பெயின் நாட்டில் பலருக்கு சத்திய வேதத்தை போதித்து, மாயவித்தைக்காரனாகிய இரமோசன் என்பவனுக்கு ஞானஸ்நானம் கொடுத்த சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுக்கிறீஸ்து நாதர் சுவாமியுடைய வேதத்தைத் திடனோடு போதித்ததை கேட்ட எரோது அகரிப்பா என்பவன் உமக்கு மரணத் தீர்ப்பிட்டபோது மனமகிழ்ச்சி அடைந்த சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உம்மை கொலைக் களத்துக்கு கூட்டிக் கொண்டு போகும்போது, உம்மோடு கூட வந்தவன் நீர் வேத சாட்சியாவதற்கு உமக்கிருந்த அகமகிழ்ச்சியைக் கண்டு, தானும் கிறீஸ்தவன் என்றபோது மிகவும் மகிழ்ச்சியடைந்த சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இவன் கொலைக் களத்திற்குப் போய் சேர்ந்த உடனே, உம்மைக் கொலைக்களத்திற்கு சேவகனாக கூட்டிக்கொண்டு வந்ததை நினைத்து உம்மிடம் பொறுத்தல் கேட்டபோது, அவனைத் தழுவி முத்தமிட்டு உனக்கு சமாதானம் உண்டாகுக என்று வாழ்த்திய சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நூறு சம்மனசுக்கள் உம்மை சூழ்ந்து வர இத்தாலி நாட்டிற்கு போய், திருச்சபையைப் போதித்து அவ்விடத்தில் சேசுநாதர் சுவாமி யுடைய வேதம்போதித்துக் கொண்டே ஸ்பெயின் நாட்டிற்கு வந்த சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அற்புதமான வகையாய் எபேசு நகரில் தேவ அன்னையைக் கண்டு, அவர்கள் பாதத்தில் விழுந்து வணங்கிய சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அப்போது தேவ அன்னை உம்முடைய கரத்தைப் பிடித்துத் தூக்கவும், அனேக வரங்களை அந்த இராக்கினியிடத்தில் பெற்றுக் கொள்ளும் பேறு பெற்ற சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அப்போது நீர் ஜெருசலேம் பட்டணத்தில் வேத சாட்சியாகப் போகிறீரென்று தேவ அன்னை சொல்லக் கேட்டு அத்தருணத்தில், எனக்கு உதவியாக வரவேண்டுமென்று அவளைக் கேட்டுக் கொண்ட சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஜெருசலேம் பட்டணத்திலே மகா தைரியத்தோடு வேதத்தைப் போதிக்கும்போது, திருச்சபையின் எதிரிகளாலே பிடிபட்டு, தேவ அன்னை கொடுத்த வாக்கை நினைத்து, அவளை நோக்கி மன்றாடிய சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அந்நேரத்தில் தேவ அன்னை அநேக சம்மனசுக்களால் புடைசூழ வருவதை கண்டு அக்களித்து, துன்புற்றோருக்குத் தேற்றரவே என அகமகிழ்ந்து உரத்த சத்தமாய் கூவின சந்தியாகப்பரே  எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உம்முடைய தலையை வெட்டும்போது, தேவ அன்னை உன் ஆன்மாவை கையில் ஏந்தி சேசுநாதருக்கு ஒப்புக் கொடுக்க வரம்பெற்ற சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உம்முடைய திருச்சரீரம் கொம்போஸ்தெல்லா என்கிற பட்டணத்திற்குக் கொண்டு போகப் பட்டபோது, அவ்விடத்தில் அற்புதங்கள் பல நடக்கவே மக்கள் பொருத்தனை செய்து வணங்கப் பெற்ற சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நீர் மோட்சம் சென்றபின் ஸ்பெயின் நாட்டின் கிறீஸ்தவர்கள்பேரில் பகைவர் படை எடுக்கும்போது, அவர்கள் உம்மைப் பார்த்து வேண்டுதல் செய்ய, பயங்கரத் தோற்றமுள்ள வெள்ளைக் குதிரை மீதேறி வந்து, பகைவர் படையை முறியடித்துத் துரத்திய சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

சேசுகிறீஸ்துநாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களா யிருக்கத்தக்கதாக. அர்ச்சிஷ்ட சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

எங்கள் ஆண்டவரான சேசுக் கிறீஸ்துவே! அப்போஸ்தலரான அர்ச்சியசிஷ்ட சந்தியாகப்பருக்கு உன்னதமான வரங்களைத் தந்து, ஜெருசலேம் பட்டணத்திலும் இஸ்பானியா தேசத்திலும், இத்தாலியா தேசத்திலும் அவரால் அநேக புதுமைகளைச் செய்து ஏராளமான மக்களைத் சத்திய வேதத்தில் உட்படுத்தினீரே, அவரைப் போற்றித் துதிக்கிற எங்களுக்கும் வாழ்வின் துன்பங்கள் எல்லாவற்றையும் வென்று இவ்வுலகப் பற்றுகள் நீங்கி மோட்ச முடிபெற அருள்புரிவீராக. 

ஆமென். 

அர்ச். சந்தியாகப்பர் நவநாள் ஜெபம்

தேவ அன்னையினால் மிகவும் நேசிக்கப்பட்டவரும் சேசுவின் சீடருமான அர்ச்சிஷ்ட சந்தியாகப்பரே திருச்சபையின் எதிரிகளால் துன்புறுத்தப்பெற்ற ஸ்பெயின் நாட்டு கிறீஸ்தவர்களுக்கு இரங்கி வெள்ளைக் குதிரை மேல் ஏறி எதிரிகள் படையை முறியடித்த புனித அப்போஸ்தலரே! அறநெறியை விரும்பாதவர்களாலும், பிசாசுகளினாலும் வீண், பொய், மாயைகளினாலும் நான் படும் துயரம் எவ்வளவோ பெரிதாகியிருக்கிறது. நான் விரும்புகின்ற நன்மையை அல்ல, நான் விரும்பாத தீமையையே செய்ய ஏவப்பட்டு பரிதவிக்கிறேன்.  நெருக்கப்படுகிற நாளில் என்னைக் கூப்பிடு  அப்போது நான் உன்னை விடுவிப்பேன் என்ற வேத வாக்கியத்தை நினையாமல் உருக்கமாக ஜெபம்செய்ய மறந்து என் ஆபத்துக்களில் மிகவும் பரிதவிக்கிறேன். கேளுங்கள் கொடுக்கப் படும், தேடுங்கள் அகப்படும், தட்டுங்கள் திறக்கப்படும் என்ற வேதவாக்கை  துன்ப வேளையில் மறந்து போகிறேன். நீர் என்மீது இரக்கம்வைத்து எனக்காக கடவுளை மன்றாடி என் ஆபத்துவேளையில் நான் வெற்றி பெற எனக்குத் துணையாகவாரும். நான் பலவீனன் நான் செய்த பாவங்களே என்னை நெருக்கத் தொடங்குகின்றன. எனக்கு நேரிட்டிருக்கும் துன்பங்களாகிய சிலுவையை  நான் சுமக்க வேண்டும் என்பது அவர் சித்தமானால் அவர் திருச்சித்தம் நிறைவேறட்டும். ஆபத்துக்களில் உதவுகிற அர்ச்சிஷ்ட சந்தியாகப்பரே எங்கள் அன்புக் காவலரே, நான் என் பலவீனங்களில் தடுமாறி விழாமல் காத்தருளும்.

இரக்கம் நிறைந்த அப்போஸ்தலரே துன்ப வேளையில் உதவி செய்யும் அற்புதரே! என்னைச் சூழ்ந்திருக்கும் துன்பங்களிலும், ஆபத்துக்களிலும் நான் அலைக்கழிக்கப்பட்டு, கலங்காதபடி என்னைத்தேற்றி அரவணைத்தருளும் அன்று எதிரியின் படையை முறியடிக்க உம்மை நம்பி அபயமிட்ட ஸ்பெயின் நாட்டவருக்கு உதவியாய் வந்து அவர்களுக்கு வெற்றி அளித்தது போல், இருகரம்கூப்பி உம்மைநோக்கி அபயமிடும் எங்களுக்கு இவ்வேளையில் உதவியாய் வந்து, என்னைச் சூழ்ந்து நிற்கும் ஆன்ம எதிரிகளை முறியடித்துத் துரத்தி தேவ உதவியால் நான் முழுவெற்றி அடைய எனக்காக கடவுளை மன்றாடும்!

ஆண்டவராகிய சர்வேசுரன் உமது மன்றாட்டினால் என் வேண்டுதலைக் கேட்டருள்வார். நீர் கூவி அழைத்த தேவ அன்னை விரைந்து வந்து உமக்கு உதவி செய்தது போல், நீரும் என் மரண நேரத்தில் வந்து எனக்கு உதவி செய்து நான் நல்ல மரணம் அடைந்து, முடிவில்லாப் மோட்ச பாக்கியத்தைப் பெற சர்வேசுரனை நோக்கி மன்றாடும். 

ஆமென்

திவ்ய தஸ்நேவிஸ் மாதாவின் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிரித்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சர்வலோக சராசரங்களையும் படைக்கு முன்னமே சர்வேசுரனால் தெரிந்து கொள்ளப்பட்ட திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தீயையுமிழ்ந்து தீக்குணங்களையே ஓயாது செய்கின்ற ஆதி சர்ப்பத்தின் தலையை நொறுக்கி நசுக்கிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

குளிர்ந்த நிலவைப் பொழியும் சந்திரனைப் பாததாமரையால் மிதித்திலங்குந் திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அடர்ந்த இருளை நீக்குஞ் செஞ்சுடராகிய ஆயிரங்கதிரோனை ஆடையாகத் தரித்திலங்கும் திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பன்னிரண்டு விண்மீன்களைத் திருமுடியின் மகுடமாய்க் சூடியிலங்கும் திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பைசாசகணங்கள் நடுங்கிப் பதுங்கும் பரிசுத்த நாமாலங்காரியாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அறுமூன்று மகுடாதிபதிகளின் குலவிளக் காய் விளங்கும் திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வலம்புரியுதிர்த்த வெண்முத்தைப் பார்க்கி லும், மகா அலங்காரம் பொருந்திய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அகில முழுவதும் போற்றும் அருணனாகிய சுவாமிக்கு முன் தோன்றும், உதயதாரகையாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சகல வரப்பிரசாதங்களும் மலிந்த சம்பூரண அலங்காரியாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தாவீதரசனின் திருமுடியில் துலங்கிய ஜீவ ரத்தினமாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பிரிய தத்தத்தினாற் பூரணமானவளே வாழ்கவென்று, பிரபல தேவதூதனால் வாழ்த்தித் துதிக்கப்பட்ட திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பரலோக பூலோக பாதாளலோகமென்னுந் திரிலோகங்களிலும் அடங்காத தேவாதி தேவனைத் திருவுதரத்திலடக்கித் தாங்கிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கொடுங்கோலனாகிய ஏரோதரசனின் கொலை பாதகத்திற்கஞ்சிக் குழந்தையாயிருந்த உலக இரட்சகரை, எகிப்து இராச்சியத்துக்குக் கொண்டு போய் இரட்சித்தவளாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மகோன்னத பரிசுத்த கோதுமை அப்பத்தின் மாதாவாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அக்கினிக்குள் வேகாத அழகிய முட்செடி யில் தோன்றிய, அசரீரி வாக்கியத்தின் திரு மகளாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அப்போஸ்தலர்கள் மேலிறங்கிய சிவந்த அக்கினிநாக்கு உருவத்தின் அமல பத்தினியாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பூலோக ஆசைகளை வெறுத்து, மேலோக ஆசை கொண்ட வேதசாட்சிகளின் திட தைரியமாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பாவ துர்க்கந்தத்தை ஒழிக்கும் பரிமளக் கந்தமாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பேய்க்குணங்கொண்ட படைகளைச் சிதறடிக்கும் வாள் ஆயுதமாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வேத விரோதமாய் படரும் அடர்ந்த கார்மேகங்களைத் துரத்தியடிக்கும் பிரசண்ட மாருதமாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சத்திய திருச்சபையின் அழியாத வச்சிரத் தூணாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மோட்ச சாம்ராஜ்யத்தின் வெற்றி துவஜ மாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சந்நியாசிகளுக்கும் கன்னியாஸ்திரிகளுக்கும் முன்மாதிரியாகும் கற்பலங்காரம் நிறைந்த திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சர்வலோகங்களையும் பரிபாலிக்க நாம் அதிகாரமுடையோமெனக் காண்பிக்க, சர்வ லோக நாயகனைத் திருக்கரத்தேந்தி இலங்கும் திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உலக மீட்பராகிய உமது குமாரன் ஞானஸ் நானம் பெற்ற நன்னீர் நிறைந்த யோர்தான் நதியாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஆதித்தாய் தந்தையர் செய்த தோஷத்தை நீக்கி, அடைபட்டிருந்த மோட்ச கபாடத்தை திறந்தருளிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சத்திய வேதத்தை தூஷித்து அலையும் பதிதரின் பொல்லாத நாவிற்கு ஆணியாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பாவிகளுக்காகப் பரிந்து பேசிப் பரகதி கொடுக்கும் வரம்நிறைந்த பாவிகளின் அடைக்கல மாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கடலிலும் வனத்திலும் வருந்தும் பக்தர்களுக்கு, வலியத் தரிசனையாகி அகமகிழ்வோடு உதவி புரியும் ஆபத்திற்கு அபயமாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தீராத நோயாளிகளுக்கு உத்தம மருந்தாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வாடாத திவ்விய மணமெறியும் ரோசாப் புஷ்பமாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அழுகண்ணர்களின் அழியாத பாக்கியமாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மகாத்துமாக்களின் மகத்துவம் தங்கிய நல்ல ஆலோசனையாகும் திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தருமவான்களின் விசேஷ தயாளமாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொறுமையின் குன்றாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தாழ்ச்சியின் பொக்கிஷமாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

நவவிலாச சம்மனசுக்களின் மகிமை மிகுந்த அரசியாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சத்திய வேத இராஜாக்களுக்குள் சமாதானத்தை வளர்க்கும், ஐக்கியம் நிறைந்த சக்கரவர்த் தினியாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பரலோக சக்கரவர்த்தியின் அமல பத்திராசன மாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கொள்ளை நோயை விலக்கும் வல்லபம் வாய்ந்த மகா பண்டிதையாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சர்வலோகநாயகன் சொன்ன சத்திய வாக்கி யத்தின் சாட்சியாக வானமண்டலத்தில் பிரகாசிக்கும் பச்சை வில்லாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வெண்பொன்னை நிகர்த்த பனிமயமாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

நீலோற்பவத்தைப் பழிக்கும் இரு நேத்திரங் களால் எங்களை எந்நாளும் கடாட்சித்து காத் தருளும் காருண்ய தாயாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சாதுக்களாகிய சகல புனிதர்களின் சதா ஆனந்தமாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சிலுவைப் பத்திராசனத்தில் உயிர்விடும் தருணம் உலக இரட்சகராகிய உமது திருக் குமாரனால் எங்களுக்குக் கையளிக்கப்பட்ட ஏக அடைக்கலத் தாயாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உரோமை மாநகரில் பத்ரீஸ் அருளப்பருக்கும் அவர் மனைவிக்கும் பிரசன்னமாகி, எஸ்கலீன் மலையில் ஒரு தேவாலயம் கட்டும்படி திருவாய் மலர்ந்தருளிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பனி பெய்யக் கூடாத உஷ்ணக் காலத்தில் உறைபனியைப் பெய்வித்து, ஆலயங்கட்ட இடத்தையும் அளவையும் காண்பித்தருளிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பரிசுத்த லிபேரியு பாப்பரசருக்குத் தரிசனை தந்து, அதிசயங்களைச் செய்தருளிய எஸ்கலீன் மலை நாயகியான திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி. 

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும். சேசுவே, எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றைக்கும் ஆண்டவருடைய திருநாமம் வாழ்த்தப் படக்கடவது.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வலோக கர்த்தாவும், உலக மீட்பருமாகிய உத்தம சேசுவே! தேவரீரை மனு­ சுபாவத்தின் படியே பெறுமுன்னும், பெறும்போதும், பெற்றதின் பின்னும் கன்னிமை குன்றாதிருக்க வரம் பெற்ற தேவரீருடைய திருமாதாவின் பாதாரவிந்தங்களை அடைக்கலமாய்த் தேடிக் கொள்ளுகிற அடியோர், அத்திருமாதாவின் வல்லமையுள்ள மன்றாட்டினால் உலகம், சரீரம், பசாசெனும் சத்துருக்களுடைய மாய்கையாகிய அந்தகாரத்துள் அகப்படாமல் தேவரீருடைய பரிசுத்த வரப்பிரசாதமாகிய திருச்சுடர் பரவிய இருதயங்களோடு, இவ்வுலகத்திலே தேவரீருக் குப் பணிசெய்து, சதா காலமும் பேரின்ப வீட்டிலே அத்திருத்தாயாரோடும் சகல வானோர்களோடும் தேவரீரைத் தோத்தரித்து வாழக்கிருபை புரிந்தருளும் சுவாமி. பிதா வோடும் இஸ்பிரீத்துசாந்துவோடும் சதா காலமும் சீவியருமாய் இராட்சிய பாரம் பண்ணுகிறவருமாய் இருக்கிற ஆண்டவரே.

ஆமென்.

திவ்விய தஸ்நேவிஸ் ஆண்டவளின் மாலை வணக்கம்

ஜெபமாலை வியாகுல காரணிக்கம் ஐந்து

பிதாவுடையவும் சுதனுடையவும்....

திவ்விய இஸ்பிரீத்துவே....

(1) பிரார்த்திக்கக்கடவோம்

வியாகுலம் மிகுந்த மாதாவே! உம்முடைய திருக்குமாரன் எங்களுக்காகப் பாடுபடத் துவங்கி, பூங்காவனத்திலே அநாதி பிதாவை நோக்கி வேண்டுதல் செய்திருக்கும்போது சர்வாங்கமும் உதிரமாக வேர்த்ததினால் மகா விதனப்பட்டீரே! அந்த வியாகுலத்தைப் பார்த்து, நாங்கள் செய்கிற சகல நற்கிரியைகளையும் சர்வேசுரனுக்கு வேண்டுதலோடே துவக்கவும் முடிக்கவும் எங்களுக்காகப் பிரார்த்தித்துக்கொள்ளும். ஒரு பர, பத்து அருள், ஒரு திரி.

(2) பிரார்த்திக்கக்கடவோம்

வியாகுலம் மிகுந்த மாதாவே! உம்முடைய திருக்குமாரன் கற்றூணிலே கட்டுண்டு அடிபட்டதினால் மகா விதனப்பட்டீரே! அந்த வியாகுலத்தைப் பார்த்து, எங்கள் பாவத்துக்கு வருகிற ஆக்கினையைச் சர்வேசுரன் விலக்கத்தக்கதாக எங்களுக்காகப் பிரார்த்தித்துக் கொள்ளும். ஒரு பர, பத்து அருள், ஒரு திரி.

(3) பிரார்த்திக்கக்கடவோம்

வியாகுலம் மிகுந்த மாதாவே! உம்முடைய திருக்குமாரனுக்குப் பரிகாச ராஜாவாக முள்முடி தரித்ததினால் மகா விதனப்பட்டீரே! அந்த வியாகுலத்தைப் பார்த்து, உலகத்தார் எங்களுக் குப் பண்ணுகிற பரிகாச நிந்தனைகளை, நாங்கள் நல்ல மனதோடு பொறுத்துக்கொள்ள எங்களுக்காகப் பிரார்த்தித்துக்கொள்ளும். ஒரு  பர, பத்து அருள், ஒரு திரி.

(4) பிரார்த்திக்கக்கடவோம்

வியாகுலம் மிகுந்த மாதாவே! உம்முடைய திருக்குமாரன் பாரமான சிலுவையைச் சுமந்து கபால மலைக்குப் போகிறதைக் கண்டு மகா விதனப்பட்டீரே! அந்த வியாகுலத்தைப் பார்த்து, எங்கள் பாவத்தினுடைய பாரமும் கஸ்தியும் குறையத்தக்கதாக எங்களுக்காகப் பிரார்த்தித்துக் கொள்ளும். ஒரு பர, பத்து அருள், ஒரு திரி.

(5) பிரார்த்திக்கக்கடவோம்

வியாகுலம் மிகுந்த மாதாவே! உம்முடைய திருக்குமாரன் சிலுவையிலே அறையுண்டு மரித்ததைக் கண்டு மகா விதனப்பட்டீரே! அந்த வியாகுலத்தைப் பார்த்து, நாங்களும் அவருடைய நேசத்துகாக எங்கள் பிராணனைக் கொடுக்கத் தயவோடிருக்கும்படி எங்களுக்காகப் பிரார்த் தித்துக் கொள்ளும். ஒரு பர, பத்து அருள், ஒரு திரி.

குறிப்பு : (ஐந்து 10 மணிக்குத் தனித்துச் சொன்னால் 5 வருஷ பலன். மற்றவர்களோடு சொன்னால் 10 வரு­ பலன். பாவசங்கீர்த்தனம் பண்ணி நற்கருணை பெற்றும், சற்பிரசாதத்துக்கு முன் எழுந்தேற்றமில்லாமலும் சொன்னால், பரிபூரண பலன். ஆசீர்வதிக்கப்பட்ட ஜெபமாலை யோடு சொன்னால் வேறுபலன்கள் உண்டு.)

திவ்விய தஸ்நேவிஸ் மாதா நவ (ஒன்பது) மன்றாட்டுகள்

முதல் மன்றாட்டு

வானுலகவாசிகள் சிரசிற் புனைகின்ற தூய லீலியை நிகர்த்த திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே! தெய்வீகத்தின் ஆலயமே! பகலவனின் ஒளிபட பதுங்கியயாழிவது பனியின் சுபாவமாயிருக்கிற நீர் எஸ்கலின் மலைமேல் பனிபெய்யக்கூடாத உஷ்ண காலத்தில் நீர் உறைபனியைப் பெய்து ஆலயங்கட்ட இடத்தையும் அளவையும் காண் பித்து, சூரியனின் வெப்பத்தால் பனி உருகிப் போகாதிருக்கச்செய்து உமது மகத்துவம் வாய்ந்த வல்லபத்தைக் காண்பித்தீரே. அமலோற்பவியே, தேவன் அடியோர்களின் ஆத்துமத்திலும் தமது வரப்பிரசாதங்களைப் பெய்து, உமது காலால் தலை நொறுங்குண்டு ஓலமிட்டழுது கிடக்கும் பசாசின் தந்திரங்களால் அவ்வரப்பிரசாதங்கள் சிதறிப் போகாதிருக்கக் கிருபை பாலித்தருளும். அருள் நிறை மந்திரம்

இரண்டாம் மன்றாட்டு

மகா புதுமைக் களஞ்சியமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே! வரப்பிரசாதத்தின் கரை காணாத சமுத்திரமே! ஆகாயத்துலாவும் நட்சத்திரங்களைக் கிரீடமாகச் சூடிய இராக்கினியே! நீர் மலடியாயிருந்த பாக்கியவதியாகிய அர்ச்சியசிஷ்ட அன்னம்மாளின் உதிரத்தில் தெய்வ கிருபையால் நீர் ஜென்ம மாசணுகாது உற்பவித்து, “அமலோற்பவி” யயன்னும் நாம அலங்காரத்தினால் சர்வ லோகத்திலும் பிரகாசிக்கின்றீரே. மாதாவே! புதுமைக்கிருப்பிடமாகிய நீர் புண்ணியவாட்டி யாகிய அன்னம்மாளின் வயிற்றில் உற்பவித்ததை யயண்ணுகையில், சர்வேசுரன் உம்மைப் புதுமைக் கரசியயன்று காட்டும் பொருட்டாய்ச் செய்த மகா புதுமையயன்று எண்ணித் துதிக்கிறோம். நல்ல தாயாரே! சர்ப்ப வடிவங்கொண்ட பேயின் மாய்கைக்குள் அகப்பட்ட ஏவையின் மக்களென் னும் பாவிகளாகிய எங்களிடத்தில் மோட்ச பேரின்பத்திற்கு இன்றியமையாததான நன்மை கள் உற்பவிக்க கிருபை பாலித்தருளும். அருள் நிறை மந்திரம்

மூன்றாம் மன்றாட்டு

புண்ணியவான்கள் ஆசையோடணிந்து கொள்ளும் ஆபரண மாலையாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே! தீர்க்கத்தரிசிகளுடைய இராக்கினியே! தேவலோகாதிபதியாகிய கடவுள் முக்காலத்திலும் கன்னித்துவங்குன்றாத உமது திருவுதரத்தில் அவதாரம் பண்ணும் போது நீர் அடைந்த ஞானசந்தோ­த்தை எடுத்துச் சொல்ல இலகு, சூட்சுமம், அட்சயம், பிரகாசமென்னும் நான்கு வரங்களால் நிறைந்த வானோர்களாலுங் கூடுமோ! நல்ல தாயாரே, அடியோர்களும் அப்பரலோக நாயகனை நற்கருணை வழியாய் எங்களுடைய இருதயத்திற் கொண்டு, பகையைச் செய்கின்ற பஞ்சேந்திரியங்களை அடக்கிச் சந்தோ´க்கக் கிருபை பாலித்தருளும். அருள்நிறை மந்திரம்

நான்காம் மன்றாட்டு

நீண்ட கோலைக் கொண்டு ஆட்டுமந்தை களை மேய்த்து வந்த தாசர்களாகிய மோயீசன், தாவீது என்பவர்களை செழிய கோலைத் தாங்கி பூலோகத்தை அரசாளச் செய்த சர்வ வல்லபரின் மகளாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே! நீர் கற்பமடைந்ததையறியாத வாடாத பூங்கொடி தாங்கிய மாசற்ற உமது மணவாளன் கொண்ட சந்தேகத்தையறிந்து கடவுளை மன்றாடி கபிரியே லென்னும் வானவரால் அச்சந்தேகத்தை நிவர்த்தி செய்து மனோதைரியங் கொடுத்தருளினீரே. நல்ல தாயாரே! அடியோர்களும் சத்திய வேதத் தின் பரம இரகசியங்களில் சந்தேகங்கொண்டால் அவைகளைத் தேவ உதவியால் நிவர்த்தி செய்து மனோதைரியம் அடையக் கிருபை பாலித்தருளும். அருள்நிறை மந்திரம்

ஐந்தாம் மன்றாட்டு

பசாசுகளை எதிர்த்து தாக்கி அவைகளுடைய அடாத கர்வத்தை அடக்கி பாதாளலோகத்திற்கு விரட்டியோட்டுகிறவளாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே! கருணையும் நன்மையும் நிறைந்த தூய மேகமே! நீர் சர்வலோக கர்த்தாவை மிருகங்கள் அடையும் குடிலிற்பெற்று, காய்ந்த புல்லணையிற் கிடத்தி, பனியால் வருந்தின மகா வருத்தத்தைத் தாழ்மையோடு பொறுத்திருந்தீரே, நல்ல தாயாரே! அடியோர்களும் சர்வேசுரனின் திருவுளத்திற்கமைந்து இந்த அநித்திய உலகத்தில் வரும் துன்பங்களைத் தாழ்மையோடு அனுசரிக் கக் கிருபை பாலித்தருளும். அருள் நிறை மந்திரம்

ஆறாம் மன்றாட்டு

வாசனை கமழுந்தேனைச் சொரிகின்ற பசிய நிறங்கொண்ட திரண்ட கனிகளைக் கொடுக்கும் திராட்சைக் கொடியாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே! எல்லாத் தலைமுறைகளும் பாக்கிய வதியயனப் புகழ்ந்து துதிக்கிற ஜெயராக்கினியே! சோதிட சாஸ்திர வல்லவர்களாகிய மூவரசர்கள் ஒன்றுகூடி நீர் பயந்தருளிய பாலகனான சுவாமி யையும் உம்மையும் பூலோக மோட்சமாகிய பெத்லேகேமின் சிறு குகையில் தரிசித்து, சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிய, இராஜ நமஸ்காரத்தைப் பெற்றருளினீரே, நல்ல தாயாரே! சேசுவின் மந்தையாடுகளாகிய எங்களை இம்மை யில் ஓநாய்களாகிய நஞ்சிலுங்கொடிய பதிதக் கூட்டங்கள் நாசம் செய்யாதபடி பாதுகாத்து, மறுமையில் நாங்கள் ஆறு லட்சணராகிய உமது திருக்குமாரனை வாழ்த்தி நமஸ்கரிக்க கிருபை பாலித்தருளும். அருள் நிறை மந்திரம்

ஏழாம் மன்றாட்டு

பெத்லேகமென்னும் திருத்தலத்தில் யாக்கோபு என்பவருக்குக் கடவுளால் காண்பிக்கப்பட்ட மோட்ச ஏணியாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே! சர்வ வல்லபம் பொருந்திய கடவுளை திருவயிற்றில் பத்து மாதந்தாங்கிப் பெற்றெடுத்து, அத்திருக்குழந்தையாகிய எம்மானுவேல் என்னும் உலக இரட்சகரைப் பிதாவாகிய சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுத்தீரே. நல்ல தாயாரே, அடியோர் களும் அழிந்து போகும் பூலோக செல்வங்களின் மாய்கைகளினால் நாற்றச்சரீரத்தின் தொந்தரவு களினாலும் அலைக்கழிக்கப்படாது எங்களை முழுவதும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். களங்கமில்லாத கன்னிகையே! அடியோர்களுக்கு மோட்ச வீட்டில் சிறிது இடம் தருவித்துக் கிருபை பாலித்தருளும். அருள் நிறை மந்திரம்

எட்டாம் மன்றாட்டு

சுடர்விட்டெரிந்த தீக்குள்ளிருந்தும் சிறிதும் வேகாமல் ஜொலித்து நின்ற முட்செடியும், சுகந்த பரிமளம் மிகுந்த சந்தன விருட்சங்களால் நிறைந்த நந்தவனமுமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே! மகத்துவந்தங்கிய ஜெயசீலியே! நீர் கானா நகரின் மெய்விவாக விருந்தில் உமது திருச்சுதனை வேண்டிச்செய்த மகா புதுமையை சர்வலோகமும் அறியுமன்றோ. மனுக்குலத்தின் பாவத்தை நாசஞ்செய்ய வந்த நாயகி! மரியாயின் அடைக்கலத்தின் பேரில் நம்பிக்கை வைத்திருக் கும் எல்லாருக்கும் பரலோக கபாடம் திறக்கப்படு மென்று அர்ச்சியசிஷ்ட பெனவந்தூர் உரைத்த வாக்கியத்தையயண்ணி, உம்மை தேடிவரும் அடியோர்களுடைய அவசர நேரத்திலும் தனித்தீர்வை நாளிலும் உமது திருக்குமாரனை வேண்டி கிருபை பாலித்தருளும். அருள் நிறை மந்திரம்

ஒன்பதாம் மன்றாட்டு

மேகஞ்சூழ்ந்த எஸ்கலின் மலைத்தேவாலயத்தில் எழுந்தருளிப் பிரகாசிக்கின்ற தேவநாயகியாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே! மாசில்லாத உமது திருமேனியில் ஆடையாகத் தரித்தருளிய சிவந்த கிரணங்களை வீசுஞ் சூரியனைக் கண்டு, மலர்ந்த, வாடாத, குளிர்ந்த தாமரை மலர்களாகிய உமது பாதங்களண்டை யில் இதோ அடியோர்கள் வந்து, அப்பாத தாமரையானது பொழியும் தேனாகிய கிருபையை வண்டுகளாகிய நாங்களடையும் பொருட்டாய், தயை செய்யுமென்று பேரொலியோடு வீழ்ந்து துதிக்கின்றோம். அம்மணி, மக்களுடைய அழுகுரலைக் கேட்டு மனமிரங்கி உதவி புரியாத மாதாவுமுண்டா! இல்லையே, ஓ! திரியேக கடவுளால் பரலோக இராக்கினியாகக் கிரீடம் சூட்டப்பட்ட மாதாவே! உமது அடைக்கலத்தைத் தேடி ஓடி வருபவர் எவ்வளவு பெரிய பாவியாயிருந்த போதிலும், உமது கிருபாகடாட் சம் அவரைப் புறக்கணித்துத் தள்ளினதில்லை யயனும் சத்தியத்தை சருவலோகமும் அறியுமே. பனிமயத் தாயே! உம்மைப் பாவிகளின் அடைக்கலமென்று திருச்சபை உரத்துச் சொல்லுவது அபத்தமாமோ! அமலோற்பவ நாயகியே, சம்மனசுக்களின் திரள்களுக்கு எல்லாம் மேலாக உமது திருக்குமாரனுடைய பாதத்தடியில், மோட்சராக்கினியாய் மகுடந் தாங்கி வீற்றிருக்கும் நீர், எங்களுக்காக உமது திருக்குமாரனிடத்தில் கேட்கும் வரங்களைக் கொடாமல் மறுத்துத் தடை சொல்லுவாரோ?  ஒருபோதும் இல்லை. ஓ! இரட்சணிய இருப்பிடமே! எங்கள் பாவங்களுக்குத் தண்டனையாக இவ்வுலகில்வரும் பஞ்சம், படை, கொள்ளை நோய், பெருவாரிக் காய்ச்சல் முதலிய பயங்கர மான தீமைகளை விலக்கிப் பாதுகாத்து இரட்சியும். ஆபத்திற்க்கு அபயமே! பசாசின் தந்திரத்தினால் திருச்சபையினின்று விலகிக் கெட்டுப் போன பதிதர், பிரிவினைக்காரர் மனந்திரும்பி மறுபடியும் திருச்சபையில் சேரத் தயை செய்யும். உலகத்தின் எத்திசையிலும் சத்திய வேதம் பரவச் செய்யும். அன்புள்ள அன்னையே! எங்கள் பேரிலும், எங்கள் குடும்பங்கள் பேரிலும், உறவினர் உபகாரிகள் பேரிலும், சத்திய வேத இராஜாக்களின் பேரிலும், திருச்சபையின் பேரிலும் கருணைக்கண் நோக்கியருளும், நல்ல தாயாரே! இந்த மன்றாட்டுக்களையயல்லாம் சர்வ வல்லமையுள்ள எங்களாண்டவரான சேசுக்கிறிஸ்துநாதரை வேண்டிக் கிருபை பாலித்தருளும். அருள் நிறை மந்திரம்

ஆமென். 

திவ்விய தஸ்நேவிஸ் மாதா ஜெபம்

பிதாவாகிய சர்வேசுரனுடைய குமாரத்தியே! சுதனாகிய சர்வேசுரனுடைய தாயாரே! இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரனுக்கு மிகவும் பிரியமுள்ள நேசமே! மனிதருக்கு அடைக்கலமே! சர்வலோகத்திற்கும் ஆண்டவளே! உமக்குப் பிள்ளைகளாயிருக்கிற நாங்களெல்லாரும், உமது திருப்பாதத்திலே சாஷ்டாங்கமாக விழுந்து, எப்படியாகிலும் எங்களைக் காப்பாற்ற வேண்டு மென்று உம்மைப் பிரார்த்திக்கிறோம். தேவ மாதாவே! நீர் ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித் தீரே, எங்கள் ஆத்துமம் சரீரத்தை விட்டுப் பிரிகிற நேரம், நாங்களும் பாவமில்லாதிருக்கச் செய்தருளும். மாதாவே, உம்மை நம்பினோம் எங்களைக் கைவிடாதேயும், மாதாவே! உம்மை நம்பினோம் எங்களைக் கைவிடாதேயும், தேவமாதாவே, உம்மை நம்பினோம் எங்களைக் கைவிடாதேயும். விசே­மாய் நாங்கள் சாகிற தருவாயில் மோசம் போகாதபடிக்கு, பசாசி னுடைய தந்திரங்களை எல்லாந்தள்ளி, நாங்கள் உம்முடைய திருக்குமாரன் அண்டைக்கு வரத்துணையாயிரும். இதனிமித்தமாய் உம்மு டைய பரிபூரண ஆசீர்வாதத்தைக் கேட்டு நிற்கிறோம். அதை அடியோருக்கு இரக்கத்தோடே கட்டளை பண்ணியருளுந் தாயாரே! மாதாவே! ஆண்டவளே! 

ஆமென்.

ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த அர்ச். மரியாயே! பாவிகளுக்கு அடைக்கலமே! இதோ உம்முடைய அடைக்கலமாக ஓடி வந்தோம். எங்கள்பேரில் இரக்கமாயிருந்து எங்களுக்காக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக் கொள்ளும். 

(அருள் நிறைந்த மரியாயே மும்முறை செபிக்கவும்)

உத்தரிக்கிற ஸ்தலத்துக்குப் போகாமல் மோட்சம் செல்ல உதவக் கூடிய பரிகார ஒப்புக்கொடுத்தல் ஜெபம்

நித்திய பிதாவே!  இன்று தினத்திலும் என் சீவிய காலம் முழுவதும் நான் கட்டிக் கொண்ட சகல பாவங்களுக்கும் பரிகாரமாக, சேசு மரிய இருதயங்களை அவர்களின் நேசத்தோடும் சகல பாடுகளோடும் சகல பேறுபலன்களோடும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.

நித்திய பிதாவே! இன்று தினத்திலும் என் சீவிய காலம் முழுவதும் நான் குற்றங்குறை களோடு செய்த நன்மைகளை சுத்திகரிப்பதற்காக சேசு மரிய இருதயங்களை அவர்களின் நேசத் தோடும் சகல பாடுகளோடும் சகல பேறுபலன்களோடும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.

நித்திய பிதாவே!  இன்று தினத்திலும் என் சீவிய காலம் முழுவதும் நான் செய்யத் தவறிய நன்மைகளுக்கு ஈடாக சேசு மரிய இருதயங்களை அவர்களின் நேசத்தோடும், சகல பாடுகளோடும், சகல பேறுபலன்களோடும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன்.  ஆமென்.

(குறிப்பு: இந்த செபத்தைத் தினமும் பக்தி யுடன் சொல்லிவந்த ஒரு சகோதரி, அதனிமித்தம் தான் உத்தரிக்கிற ஸ்தலம் போகாமல் மோட்சம் சென்றதாக தன் உடன் சகோதரிக்கு காட்சியில் தோன்றி சொல்லியுள்ளதாக ஒரு வரலாறு உள்ளது.)

பூமியதிர்ச்சி வராதபடி ஜெபம்

(பூமியதிர்ச்சியைத் தடுக்க செய்யப்படும் பூசையில் “நற்கருணை உட்கொண்டபின் ஜெபம்.”) 

ஆண்டவரே! உம்முடைய பரம இரகசியங்களை உட்கொள்ளுகிற எங்களைக் காப்பாற்றியருளும். எங்கள் பாவங்களின் காரணமாக நடுநடுங்கக் காணும் பூமியைத் திடமாக்கியருளும். இந்தத் தண்டனைகள் உம்முடைய கோபத்தினால் வருகின்றன என்றும் உமது இரக்கத்தினால் அவை நின்று போகின்றன என்றும் மனிதர்கள் தங்கள் உள்ளங்களில் உணர்ந்து கொள்ளும் படியாக இந்த மன்றாட்டை எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்து வழியாகத் தந்தருளும். 

ஆமென்.

உத்தரிக்கிற ஆத்துமங்களுக்காக மாதாவிடம் காணிக்கை ஜெபம்

மிகவும் பரிசுத்த கன்னிமரியாயே!  உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்கள் பேரில் இரக்க மிகுந்த தேற்றரவு மாதாவே! அடியேன் இதோ உமது திருப்பாதத்தண்டையில் சாஷ்டாங்கமாக விழுந்து பிரார்த்தித்து ஒப்புக்கொடுக்கும் காணிக்கை என்னவென்றால், என் அநுதினக் கிரிகையினாலே நான் அடையக் கூடிய பூரண பேறுபலன்களையும் என் மரணத்துக்குப் பின் எனக்காக ஒப்புக்கொடுக் கும் செபதப பலன்களையும் தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.  மரித்த விசுவாசிகளின் ஆத்துமங் களின் நன்மைக்காகத் தேவரீர் சித்தம்போல் அவைகளைப் பிரயோகிக்கக் கிருபை புரிந்தருளும்.  தற்காலத்திலும் பிற்கால நித்தியத்திலும் எனக்கு வரக்கூடிய நன்மை பலன்களையயல்லாம் சுயநல நாட்டமின்றி தாயின் நேசமுள்ள உமது பராமரிப்பிலேயே முழுவதும் ஒப்படைத்து விடுகிறேன்.  உமது திருக்குமாரனாகிய ஆண்டவர் தமது கிருபை இரக்கத்துக்கு அல்லது நீதிக்கேற்றபடி உமது திருக்கரங்களின் வழியாய் அடியேனுக்கு நியமித்தனுப்பும் நன்மை துன்பங்களையயல்லாம் மனப்பூரணமான அமைதலோடு இப்போதே கையேற்றுக் கொள்கிறேன். 

ஆமென்.

உத்தரிக்கிற ஸ்தலத்திலுள்ள ஆத்துமங்களுக்காக ஜெபம்

திவ்விய சேசுவே, உத்தரிக்கிற ஸ்தலத்தின் ஆத்துமங்கள் பேரில் இரக்கமாயிரும். தாவீது அரசனின் புத்திரனாகிய சேசுவே! சிலுவைப் பாரத்தால் அதிகரித்த உமது திருக்காயங்களின் கொடிய வேதனைகளைப் பார்த்து, உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்கள் பேரில் இரக்கமாயிரும்.  சுவாமி, தேவரீர் அன்று சிலுவைப் பீடத்தில் பலியாகும் போது பச்சாதாபக் கள்ளனுக்குக் கிருபை புரிந்தது போல், இந்த ஆத்துமங்களின் பேரில் இரக்கமாயிருந்து அவர்களை உமது பிரத்தியட்ச தரிசனையின் பாக்கியத்தில் சேர்த்தருளும். அங்கே சகல அர்ச்சியசிஷ்டவர் களோடேயும், சம்மனசுக்களோடேயும் அவர்கள் சதாகாலமும் தேவரீரை வாழ்த்தி ஸ்துதித்துக் கொண்டிருப்பார்களாக.

ஆமென்.

உன்னதத்தில் வீற்றிருக்கிற எங்கள் பிதாவே! உத்தரிக்கிற ஸ்தலத்திலே வேதனைப்படும் ஆத்துமங்களுக்காக திவ்விய சேசுக்கிறீஸ்துவின் விலைமதியாத திரு இரத்தத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன்.  சுவாமி! பரிசுத்தரே, சர்வ வல்லப பரிசுத்தரே, அட்சயரான பரிசுத்தரே சுவாமி!  எங்கள்மேல் இரக்கமாயிரும்.  பாவிகளுக்குப் பொறுத் தலைத் தந்தருளும்.  மரித்த சகல விசுவாசிகளுக்கும் நித்திய இளைப்பாற்றியைக் கட்டளை யிட்டருளும். 

ஆமென்.  

(நாள் 1-க்கு 300 நாள் பலன்)

உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச். மரியாயே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

சர்வேசுரனுடைய அர்ச். மாதாவே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

கன்னியர்களுக்குள்ளே உத்தம அர்ச். கன்னிகையே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச். மிக்கேலே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

தூதரும் அதிதூதருமாகிய சகல சம்மனசுக்களே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

நவவிலாச சபையாயிருக்கிற சகல சம்மனசுக்களே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

அர்ச். ஸ்நாபக அருளப்பரே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச். சூசையப்பரே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

பிதாப்பிதாக்களும், தீர்க்கதரிசிகளுமாகிய சகல அர்ச்சியசிஷ்டவர்களே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

அர்ச். இராயப்பரே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச். சின்னப்பரே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச். அருளப்பரே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

அப்போஸ்தலரும் சுவிசேஷகருமாகிய சகல அர்ச்சியசிஷ்டவர்களே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

அர்ச். முடியப்பரே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச். லவுரேஞ்சியாரே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

வேதசாட்சிகளான சகல அர்ச்சியசிஷ்டவர்களே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

அர்ச். கிரகோரியாரே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச். அமிர்தநாதரே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச். அகுஸ்தீனே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச். எரோணிமுவே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

மேற்றிராணிமார்களும், ஸ்துதியர்களுமாகிய சகல அர்ச்சியசிஷ்டவர்களே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

வேத வித்தியாபாரகரான சகல அர்ச்சியசிஷ்டவர்களே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

குருக்களும், ஆசிரியர்களுமாகிய சகல அர்ச்சியசிஷ்டவர்களே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

சந்நியாசிகளும் தபோதனர்களுமாகிய சகல அர்ச்சியசிஷ்டவர்களே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

அர்ச். மரிய மதலேனே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச். கத்தரீனாளே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச். பார்பரம்மாளே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

கன்னியாஸ்திரீகளும், விதவைகளுமாகிய சகல அர்ச்சிசியஷ்டவர்களே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

ஆண்டவருடைய திருவடியார்களான ஸ்திரீ பூமான்களாகிய சகல அர்ச்சியசிஷ்டவர்களே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

தயாபரராயிருந்து, அவர்கள் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி.

தயாபரராயிருந்து, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

சகல பொல்லாப்புகளிலே நின்று, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

உமது கோபத்திலே நின்று, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

உமது நீதி அகோரத்திலே நின்று, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

கடூர வியாகுலத்திலே நின்று, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

கொடிய ஆக்கினையிலே நின்று, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

மரணத்தின் பயங்கரமான இருளிலே நின்று, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

அக்கினிச் சுவாலையிலே நின்று, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

கொடிய ஆக்கினையிலே நின்று, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

மரணத்தின் பயங்கரமான இருளிலே நின்று, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

அக்கினிச் சுவாலையிலே நின்று, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

துயரமான அழுகையிலே நின்று, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

உத்தரிக்கிற ஸ்தலத்து சிறைச்சாலையிலே நின்று, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய திரு மனுஷாவதாரத்தைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய மாசில்லாத உற்பவத்தையும் பிறப்பையும் பார்த்து, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய மதுரமான நாமத்தைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய பாலத்துவத்தைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய ஞானஸ்நானத்தையும், உபவாசத்தையும் பார்த்து, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய மிகுந்த தாழ்ச்சியைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய சுறுசுறுப்பான கீழ்ப்படிதலைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய கிருபையின் மிகுதியையும் அளவில்லாத சிநேகத்தையும் பார்த்து, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய கொடூர உபத்திரவங்களையும் நிர்ப்பந்தங்களையும் பார்த்து, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய இரத்த வேர்வையைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீர் கட்டுண்ட கட்டுகளைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீர் பட்ட அடிகளைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய திரு முண்முடியைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய திருச்சிலுவையைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய கடூரமான மரணத்தைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய ஐந்து திருக்காயங்களைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

எங்கள் மரணத்தை ஜெயித்தழித்த தேவரீ ருடைய அவமானமுள்ள மரணத்தைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய விலைமதியாத திரு இரத்தத் தைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய மகிமையான உத்தானத்தைப் பார்த்து,  அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய அதிசயமான ஆரோகணத் தைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேற்றரவு பண்ணுகிறவராகிய இஸ்பிரீத்து சாந்துவின் ஆகமனத்தைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

நடுத்தீர்க்கிற நாளிலே,  அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

பாவிகளாயிருக்கிற நாங்கள் தேவரீரை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

பாவியாயிருந்த மக்தலேன் அம்மாளுக்கு பாவ மன்னிப்புத் தந்தவரும் நல்ல கள்ளனுடைய மன்றாட்டைக் கேட்டவருமாகிய தேவரீரை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

மரணத்தின் திறவுகோலையும் நரகத்தின் திறவுகோலையும் கைக்கொண்டிருக்கிற தேவரீரை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

இரட்சணியத்துக்கு உரியவர்களை இலவச மாய் இரட்சிக்கிற தேவரீரை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

எங்கள் சகோதரர் பந்துக்கள் உபகாரிக ளுடைய ஆத்துமங்களை உத்தரிக்கிற ஸ்தலத் திலே நின்று இரட்சித்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

பூலோகத்திலே யாரும் நினையாத சகல ஆத்துமங்களுக்கும் தயவு செய்ய வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

கிறீஸ்துநாதரிடத்தில் இளைப்பாறுகிற சகல ருக்கும் குளிர்ச்சியும் பிரகாசமும் சமாதானமு முள்ள இடத்தைக் கட்டளையிட்டருள தேவரீரை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

பாவ தோஷத்தால் அவர்களுக்கு உண்டாகிற ஆக்கினையைக் குறைக்க வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

அவர்கள் துயரத்தைச் சந்தோமாக மாற்றியருளத் தேவரீரை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

அவர்களுடைய ஆசை நிறைவேறத் தயை புரிய வேண்டுமென்று தேவரீரை மன்றாடு கிறோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

அவர்கள் உம்மைப் புகழ்ந்து ஸ்துதி பலியை உமக்குச் செலுத்தும்படி செய்தருள தேவரீரை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

உம்முடைய அர்ச்சியசிஷ்டவர்களின் கூட்டத்தில் அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டு மென்று தேவரீரை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

சர்வேசுரனுடைய குமாரனே, தேவரீரை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

கிருபையின் ஊரணியே, தேவரீரை மன்றாடு கிறோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வே சுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, அவர்களுக்கு இளைப்பாற்றியைத் தந்தருளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, அவர்களுக்கு இளைப்பாற்றியைத் தந்தருளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, அவர்களுக்கு நித்திய இளைப்பாற்றியைத் தந்தருளும்.

சுவாமி கிருபையாயிரும்.
கிறீஸ்துவே கிருபையாயிரும்.
சுவாமி கிருபையாயிரும்

பரலோக மந்திரம்.

நரக வாசலில் நின்று, அவர்களுடைய ஆத்துமங்களை மீட்டு இரட்சித்தருளும்.

சமாதானத்தில் இளைப்பாறுவார்களாக! - அப்படியே ஆகக்கடவது.

சுவாமி எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். எங்கள் அபயசத்தம் தேவரீருடைய சந்நிதி மட்டும் வரக்கடவது.

பிரார்த்திக்கக்கடவோம்

சகல விசுவாசிகளுடைய சிருஷ்டிகரும் இரட்சகருமாகிய சர்வேசுரா, மரித்த உமது அடியோர்களுக்காகச் செய்யப்படுகிற பக்தியுள்ள மன்றாட்டுகளை அங்கீகரித்து அவர்கள் மிகுந்த ஆவலோடே ஆசிக்கிற பாவமன்னிப்பைக் கிருபை செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடு கிறோம். சதாகாலமும் சீவியரான சர்வேசுரா,  இந்த மன்றாட்டைத் தயவோடே கேட்டருளும் சுவாமி.

நித்திய பிதாவே! பெற்றோர் பந்துக்கள், சிநேகிதர், உபகாரிகள் முதலியவர்களைத் தக்க விதமாய் நேசித்து அவர்களுக்கு வேண்டிய நன்மை செய்யக் கற்பித்தருளினீரே.  ஆகையால் எங்களைப் பெற்று அன்போடு வளர்த்து ஆதரித்தவர்களும் பற்பல உபகாரம் எங்களுக்குச் செய்தவர்களும் எங்கள் பந்துக்கள், சிநேகிதர், முதலானவர்களும் வேதனை நீங்கி நித்திய காலம் உம்மைச் சந்தோ­மாய்த் தரிசித்துக் கொண் டிருக்கத் தேவரீர் கிருபை செய்தருள வேண்டு மென்று மன்றாடுகிறோம்.

மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளுவோமாக. நித்திய இளைப்பாற்றியை அவர்களுக் குத் தந்தருளும் சுவாமி.  முடிவில்லாத பிரகாசமும் அவர்களுக்குப் பிரகாசிக்கக் கடவது.

கிருபைதயாபத்து மந்திரம்.

ஆமென்.