பாத்திமா மாதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாத்திமா மாதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பாத்திமா செபங்கள் 1917

என் தேவனே! உம்மை விசுவசிக்கிறேன், உம்மை ஆராதிக்கிறேன், உம்மை நம்புகிறேன், உம்மை நேசிக்கிறேன். உம்மை விசுவாசியாதவர்களுக்காகவும், உம்மை ஆராதியாதவர்களுக்காகவும், உம்மை நம்பாதவர்களுக்காகவும், உம்மை நேசியாதவர்களுக்காகவும் மன்னிப்புக் கேட்கிறேன்.

மகா பரிசுத்த தமத்திரித்துவமே, பிதாவே, சுதனே, இஸ்பிரீத்து சாந்துவே! உம்மை மிகவும் ஆராதிக்கிறேன். உலகமெங்குமுள்ள திவ்ய நற்கருணைப் பேழைகளில் இருக்கும் சேசுக்கிறிஸ்து நாதருடைய விலை மதிக்கப்படாத திருச்சரீரத்தையும், இரத்தத்தையும், ஆத்துமத்தையும், தெய்வீகத்தையும், அவருக்குச் செய்யப்படும் நிந்தை, துரோகம், அலட்சியத் துக்குப் பரிகாரமாக உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். சேசுவின் திரு இருதயத்தினுடையவும், மரியாயின் மாசற்ற இருதயத்தினுடையவும் அளவற்ற பேறுபலன்களைப் பார்த்து, நிர்ப்பாக்கியப் பாவிகளை மனந்திருப்பும்படி மன்றாடுகிறேன்.

ஓ என் சேசுவே, எங்களை மன்னியும். நரக நெருப்பிலிருந்து எங்களைக் காப்பாற்றும். எல்லா ஆன்மாக்களையும், விசே­மாய், யார் அதிகத் தேவையிலிருக்கிறார்களோ அவர்களையும் மோட்சத்திற்கு அழைத்தருளும்.

பாவிகளுக்காக  உங்களைப்  பலியாக்குங்கள்.   அடிக்கடி,  குறிப்பாக நீங்கள் ஏதாவது ஒரு பரித்தியாகம் செய்யும்போது: “ஓ சேசுவே! உமது அன்பிற்காகவும், பாவிகள் மனந்திரும்பவும், மரியாயின் மாசற்ற இருதயத்துக்கு எதிராகச் செய்யப்படும் பாவங்களுக்குப் பரிகாரமாகவும் இதைச் செய்கிறேன் என்று சொல்லுங்கள்.

முதல் சனி பக்தி முயற்சிகள்

மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு நிந்தைப் பரிகாரமாக:

நல்ல பாவசங்கீர்த்தனம் செய்தல்.

நற்கருணை உட்கொள்ளுதல்.

ஜெபமாலை ஜெபித்தல்.

15 நிமிடம் மாதாவுடன் இருந்து தேவ இரகசியங்களைத் தியானித்தல்.

கருத்துக்கள்

(தொடர்ச்சியாக ஐந்து முதல் சனிக்கிழமை பக்தி முயற்சியைச் செய்து ஒவ்வொரு மாதமும் கீழ்க்காணும் கருத்துக்களுள் ஒன்றிற்காக ஒப்புக் கொடுக்கவும்.)

ஐந்து முதல் சனி பரிகாரக் கருத்துக்கள்

1. ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த மரியாயின் அமலோற்பவத்திற்கு எதிராகச் செய்யப்படும் நிந்தைகளுக்குப் பரிகாரமாக.

2. தேவதாயின் தெய்வீகத் தாய்மைக்கு எதி ராகச் செய்யப்படும் நிந்தைகளுக்குப் பரிகார மாக.

3. கன்னிமாமரி முப்பொழுதும் கன்னிகை என்னும் சிறப்புக்கு எதிராகச் செய்யப்படும் நிந்தைகளுக்குப் பரிகாரமாக.

4. மாதாவின் பக்தியை சிறுவர், இளைஞ ரிடமிருந்து அழித்துவரும் நிந்தைகளுக்குப் பரிகாரமாக.

5. மாதாவின் பக்திப் பொருட்களையும் உருவங்களையும் அகற்றி அவமதித்து வரும் நிந்தைகளுக்குப் பரிகாரமாக.

பலன்கள்

முதல் சனி பக்தியைப் பிரமாணிக்கமுடன் அனுசரிப்பவர்களின் மரண சமயத்தில் ஈடேற்றத் திற்கு அவசியமான சகல உதவிகளையும் அவர்களுக்குச் செய்வதாக தேவதாய் வாக்களித்துள்ளார்கள்.

பாத்திமா காட்சிகள்

போர்த்துக்கல் நாட்டில் பாத்திமா என்னும் சிற்றூரில் கோவா தா ஈரியா என்ற மலைச் சாரலில் லூஸியா, பிரான்சிஸ், ஜஸிந்தா என்ற மூன்று சிறுவர்களுக்கும் 1917-ம் ஆண்டு தேவ மாதா 6 முறை காட்சியளித்தார்கள்.  காட்சி அருளுமுன் கடவுள் தம் தூதனை அனுப்பி அக் குழந்தைகளை 1916-ம் ஆண்டு முதலே அதற்குத் தயாரித்துவந்தார்.  தினமும் தவறாமல் ஜெப மாலை செபியுங்கள். பாவிகள் மனந்திரும் பும்படியாக அவர்கள் அதிகமாக செபிக்கவும் கடவுள் அவர்களுக்கு அனுப்பும் துன்பங்களை ஏற்றுக்கொள்ளவும் வேண்டுமென்று அறிவுறுத் தினார்.  மாதாவின் மாசற்ற இருதயம் முட்களால் சூழப்பட்டும் குத்தித் துளைக்கப் பட்டும் காணப்பட்டது.  நன்றியற்ற மனிதர்கள் செய்யும் பாவங்களே அவை என்று மாதா கூறினார்கள்.

மூன்றாம் காட்சியில் மாதா நரகத்தைத் திறந்து காண்பித்தார்கள்.  பாவிகளைக் காப்பாற்ற உலகில் தன் மாசற்ற இருதயத்தின் மீது பக்தியை ஏற்படுத்த கடவுள் விரும்புகிறார் என்றும்  ரஷ்யா வைத் தன் மாசற்ற இருதயத்திற்கு ஒப்புக்கொடுக்க வேண்டுமென்றும் முதல் சனிக்கிழமைகளில் பரிகார நன்மை வாங்க வேண்டுமென்றும் கேட்டார்கள்.

மாதா வாக்களித்தபடியே 6-ம் காட்சியில் மாபெரும் சூரிய அதிசயத்தை நிகழ்த்தினார்கள். “நான் உங்களிடம் கூறுவதை நீங்கள் செய்தால் அநேக ஆன்மாக்கள் காப்பாற்றப்படுவார்கள். உலகில் சமாதானம் நிலவும்” என்றும் மாதா கூறினார்கள்.

மரியாயின் யுகம்

“மரியாயின் உற்பவம், பிறப்பு, வாழ்வு, உயிர்ப்பு, பரலோக ஆரோபணம் ஆகிய வாழ்வின் திருநிகழ்ச்சிகளில் ஏறக்குறைய எல்லா மனிதரிடமிருந்தும் தேவமாதாவை சர்வேசுரன் மறைத்து வைக்கக் கிருபை கூர்ந்தார்.  பிந்திய காலங்களில் மாதா வகிக்கும் பாகம் தலைசிறந்ததாக இருக்கும். மற்றெல்லாக் காலங்களையும் விட இக்காலங்களில் மாதா இரங்குவதிலும், வல்லமையிலும், வரப்பிரசாதம் வழங்குவதிலும் அதிகமாக விளங்கித் துலங்க வேண்டும். மாதா வழியாகவே உலகத்தின் மீட்பு ஆரம்பிக்கப்பட்டது. அவர்கள் வழியாகவே அது முற்றுப்பெறவும் வேண்டும்.  மாமரி இதுவரை இருந்ததை விட அதிகமாக அறியப்படவும், அதிகமாக நேசிக்கப்படவும், அதிகமாக மதிக்கப்படவும் வேண்டும் என கடவுள் விரும்புகிறார்” என்று மரியாயின் சுவிசேஷகர் அர்ச். லூயிஸ் மரிய மோன்போர்ட் கூறுகிறார்.

“உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே பகையை உண்டாக்குவோம்.  அவள் உன் தலையை நசுக்குவாள்.  நீயோ அவள் குதிங்காலைத் தீண்ட முயல்வாய்” (ஆதி. 3:15).

சர்வேசுரன் ஒரேயயாரு பகையைத்தான் ஏற்படுத்தினார்.  அது சமாதானத்திற்கு வர முடியாதது.  சிங்காரவனத்தில் ஏற்படுத்தப்பட்ட இந்தப் பகை உலக முடிவில் பயங்கரமாயிருக்கும். சாத்தானின் தலை நசுக்கப்படும். சர்வேசுரன் வெற்றி பெறுவார்.  கடவுள் மாதாவை வைத்தே உலக சிருஷ்டிப்பை ஆரம்பித்தார்.  அதுபோல் மாதாவை வைத்தே முடிப்பார்.  மாதாவின் மகிமை துலங்கும் இப்பிந்திய காலம் “மரியாயின் யுகம்” என்றழைக்கப்படும். சமீப நூற்றாண்டுகளில் சர்வேசுரன் பல காட்சிகள், வெளிப்படுத்தல்கள் மூலமாக மாதாவைப் பற்றியும், இறுதிக் காலத் தைப் பற்றிய பல உண்மைகளை மாதா வழியாகவும் வெளிப்படுத்தியுள்ளார்.

ஆன்மாக்களுக்கு பரலோக வரப்பிரசாத மழையைப் பொழிந்த அற்புத சுரூபக் காட்சி யுடன் இணைந்த வல்லமையுள்ள கன்னிகையின் காட்சி 1830-ல் அர்ச். கத்தரீன் லாபோருக்கு அருளப்பட்டது.

1846-ல் சலேத் நகரில் மெலானிக்கு மாதா மாபெரும் தீர்க்கதரிசனக் காட்சியளித்தார்கள்.  1858-ல் லூர்து நகரில் அர்ச். பெர்னதத்தம்மாளுக்கு மாதா 18 முறை ஜெபமாலை ஏந்தியவர்களாய்த் தரிசனையானார்கள்.  1917-ல் பாத்திமாவில் லூஸியா, பிரான்சிஸ், ஜஸிந்தா ஆகிய மூன்று சிறுவர்களுக்கு முன்னறிவித்தபடி, உலகமே அதிசயித்த சூரிய அற்புதத்தை நிகழ்த்தினார்கள்.  1943-ல் இத்தாலியிலுள்ள மோன்டிசியாரியில் தேவ இரகசிய ரோஜாவாகக் காட்சி தந்து மறக்கப்பட்டு மறைக்கவும்பட்ட பாத்திமா காட்சியின் செய்தியை ஞாபகமூட்டினார்கள். எனவே மரியாயின் யுகம் என்று அழைக்கப்படுகிற இக்காலத்தில் நாம் மாதாவை நோக்கி மன்றாடி அவர்களுடைய பாதுகாப்பையும், வரப்பிரசாதங் களையும் பெற்றுக் கொள்வோமாக.

அற்புத சுரூபம் மற்றும் வல்லமையுள்ள கன்னிகையின் காட்சி

தேவ நீதியின் கரம் மட்டுமிஞ்சிய மனித பாவங்களால் நிறைந்துள்ள மனுக்குலத்தை திருத்த வரும் என்று எதிர்பார்க்கப்படுகிற இவ்விறுதிக் காலங்களில் நம்மைப் பாதுகாக்கும் கேடயமாக மாதாவின் அமலோற்பவத்தை ஆண்டவர் நமக்குத் தரச் சித்தம் கொண்டார்.  1830-ல் அர்ச். கத்தரீன் லாபோர் வழியாக “வல்லமையுள்ள கன்னிகையாக” மாதா தன்னையே நமக்குத் தந்துள்ளார்கள்.  மாதாவின் அமலோற்பவ ஆடையை நாம் அணிந்திருக்கும் போது பசாசின் தாக்குதல்களிலிருந்தும் உலகத்தின் அழிவுகளிலிருந்தும் பாதுகாக்கப்படுவோம்.

பாத்திமா மாதாவுக்கு அர்ப்பண ஜெபம்

எங்கள் அன்புத் தாயும் அரசியுமான மரியாயே! ரஷ்யாவை மனந்திருப்பி உலக மக்களுக்கு சமாதானம் தருவேன் என்று பாத்திமாவில் வாக்களித்தீர்களே. எங்களுடையவும் உலகத்தினுடையவும் பாவங்களால் உங்கள் மாசற்ற இருதயத்திற்கு நேரிட்ட நிந்தைகளுக்குப் பரிகாரமாக எங்களுக்கு நேரிடும் சகல துன்பங்களையும் பரித்தியாகமாக ஏற்றுக் கொள்கிறோம். ஐம்பத்து மூன்று மணி ஜெபமாலையை தியானித்துச் சொல்வோம். எங்களை உங்கள் மாசற்ற இருதயத்திற்கு ஒப்புக்கொடுக்கிறோம்.  அதன் அடையாளமான கார்மெல் உத்தரியம் அணிந்திருக்கிறோம். (உத்தரியத்தை முத்தமிடவும்.) இந்த ஒப்புக்கொடுத்தலை அடிக்கடி, விசேஷமாய் சோதனை நேரத்தில் புதுப்பிப்போம் தாயே.  ஆமென்.

பாத்திமா பரிகார ஜெபம்

(நெற்றி தரையில்பட கவிழ்ந்து)

என் தேவனே, உம்மை விசுவசிக்கிறேன். உம்மை ஆராதிக்கிறேன்.  உம்மை நம்புகிறேன். உம்மை நேசிக்கிறேன். உம்மை விசுவசியாதவர்களுக்காகவும், உம்மை ஆராதியாதவர்களுக்காகவும், உம்மை நம்பாதவர்களுக்காகவும், உம்மை நேசியாதவர்களுக்காகவும் உமது மன்னிப்பைக் கேட்கிறேன்.  

(மும்முறை).

பாத்திமாவில் சம்மனசு சொன்ன திவ்ய நற்கருணைக்கு நிந்தைப் பரிகார ஜெபம்.

ஓ! மகா பரிசுத்த திரித்துவமே, பிதாவே! சுதனே! இஸ்பிரீத்து சாந்துவே! உம்மை மிகவும் ஆராதிக்கிறேன். உலகெங்குமுள்ள நற்கருணைப் பேழைகளிலிருக்கும் சேசுகிறீஸ்துவின் விலை மதிக்கப்படாத திருச்சரீரத்தையும், இரத்தத்தையும், ஆத்துமத்தையும், தெய்வீகத்தையும், அவருக்குச் செய்யப்படும் நிந்தை, துரோகம், அலட்சியத்துக்குப் பரிகாரமாக உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன். சேசுவின் திருஇருதயத்தினுடையவும் மரியாயின் மாசற்ற இருதயத்தினுடையவும் அளவற்ற பேறுபலன்களைப் பார்த்து நிர்ப்பாக்கிய பாவிகளை மனந்திருப்பும்படி மன்றாடுகிறேன்.

ஆமென்.

பாத்திமாவில் தேவ அன்னை மூன்று சிறுவர்களுக்கு சொல்லிக்கொடுத்த ஜெபம்:

ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். நரக நெருப்பிலிருந்து எங்களைக் காப்பாற்றும். சகல ஆத்துமாக்களையும் மோட்சத்தில் சேர்த்தருளும். விசேஷமாய் உமது இரக்கம் யார் யாருக்கு அதிகத் தேவையோ அவர்களையும் மோட்சத்தில் சேர்த்தருளும்.

ஆமென்.

பாத்திமா இராக்கினிக்கு செபம்.


ஓ! பரிசுத்த செபமாலையின் இராக்கினியே! பாத்திமாவின் மதுரமுள்ள தாயே! போர்த்துகல் தேசத்தில் தோன்ற இரக்கம் கொண்டு, ஒரு காலத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்த அந்த தேசத்தின் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சமாதானத்தை அடைந்து தந்தவளே, எங்கள் பிரிய நாட்டின் மேல் கிருபைக் கண் கொண்டு பார்த்தருளும்.

பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கும் அதனை உமது வல்லமையால் உயர்த்தி ஞானத்திலும் உறுதியான ஒழுக்கத்திலும் அதை மீண்டும் ஸ்தாபிக்கும்படி உம்மை இரந்து மன்றாடுகிறோம்.

சமாதானத்தைத் திரும்பக் கொண்டு வாரும்; அன்றியும் பூமியிலுள்ள சகல மனிதர்களுக்கும் சமாதானத்தைக் கொடுத்தருளும்; அதனால் எல்லா தேசத்தவர்களும், முக்கியமாய் எங்களுக்குச் சொந்தமானவர்கள் தேவரீரைத் தங்கள் இராக்கினியாகவும் சமாதானத்தின் இராக்கினியாகவும் வாழ்த்தி ஆனந்திக்கக் கடவார்கள்.

சமாதானத்தின் இராக்கினியே மனுக்குலத்துக்கு நிலையான சமாதானத்தை அடைந்து தந்தருளும்.

ஆமென்.

பாத்திமா இராக்கினி பிரார்த்தனை.

சுவாமி கிருபையாயிரும். 2
கிறிஸ்துவே கிருபையாயிரும். 2
சுவாமி கிருபையாயிரும். 2

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்.
கிறிஸ்துவே எங்கள் பிராத்னையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட பாத்திமா மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பாத்திமாவெனும் சிற்றூரில் ஆடு மேய்க்கும் பிள்ளைகளுக்கு ஆறு முறை தரிசனையான மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சிறு பிள்ளைகளைப் போல் ஆவது மோட்ச இராஜ்ஜியத்துக்கு அவசியம் என்று காண்பிக்க , மூன்று ஏழை பாமர பிள்ளைகளுக்குக் காட்சியளித்த பாத்திமா மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அமைதியான ஆத்துமத்திலே ஆண்டவர் பேசுகிறார் என்று காண்பிக்க, ஏகாந்தமும் அமைதியும் பொருந்திய மலைச் சாரலில் காட்சியளித்த பாத்திமா மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தம்மைத் தேடுகிற மக்களை தேவனும் தேடுகிறார் என்று காண்பிக்க ஜெபமாலை பக்தியில் சிறந்து விளங்கி ,'மரியாயின் நிலம்' என்று அழைக்கப்பட்ட போர்த்துகல் நாட்டில் தரிசனை கொடுக்கத் திருவுளமான பாத்திமா மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

செபமும் தவமும் கிறிஸ்தவ வாழ்வுக்கு அவசியம் என்று காண்பிக்க பத்து வயதுக்கு உட்பட்ட சிறு பிள்ளைகளிடத்தில் ஜெப தவம் செய்யும்படி கேட்ட பாத்திமா மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இரட்சண்யமடையவும் உலக சமாதானத்தைப் பெற்றுக் கொள்ளவும் ஜெபமாலை ஜெபிப்பது மிகவும் முக்கியம் என்று காண்பிக்க , காட்சி தந்து அனுதினமும் ஜெபமாலை சொல்லும்படி கேட்டுக் கொண்ட பாத்திமா மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பூலோக கடமைகளில் சிக்குண்டிருக்கிற நாங்கள் பரலோகத்துடன் எவ்வித தொடர்பு கொள்ள வேண்டுமானாலும் அதற்குத் தகுந்த ஆயத்தம் அவசியம் என்று காண்பிக்க , அக்குழந்தைகளுக்கு முன்னால், ஒரு தேவதூதனை அனுப்பி ஒரு வருட காலமாய் அவர்களைத் தயாரித்த பாத்திமா மாதவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சர்வேசுரனை விசுவசித்து ஆராதித்து நம்பி நேசிப்பது ஒவ்வொரு மனிதனுடையவும் கடமை என்று காண்பிக்க , சம்மனசின் முதல் காட்சியிலேயே அதற்கேற்ற அரிய செபம் ஒன்றை எங்களுக்குக் கற்றுத் தந்த பாத்திமா மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கடவுளின் திருச்சந்நிதியில் மனிதன் மிகுந்த தாழ்ச்சியுடன் பணிந்து ஆராதனை வேண்டும் என்று காண்பிக்க நெற்றி தரையில் பட அச்செபத்தை சம்மனசானவர் சொல்லும்படி கட்டளையிட்ட பாத்திமா மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பாவத்தில் இருந்தும் நரகத்தில் இருந்தும் காப்பாற்றும்படி ஆண்டவரிடம்  மன்றாடுவது அவசியம் என்று காண்பிக்க, ஜெபமாலையின் ஒவ்வொரு பத்து மணிமுடிவிலும் அதற்கான ஒரு தனி ஜெபம் சொல்லும்படி கற்பித்த பாத்திமா மாதாவே,, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஒறுத்தல் முயற்சி செய்வது அவசியம் என்றும் எங்களுக்கு இவ்வுலகில் நேரிடும் எல்லாவற்றையும் பாவப் பரிகாரமாக நாங்கள் ஒப்புக் கொடுக்க வேண்டும் என்றும் சம்மனசுக்களின் வாயிலாக போதித்தருளிய பாத்திமா மாதாவே,, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சுவிசேஷ போதனைகளையும் திருச்சபையின் படிப்பினைகளையும் நாங்கள் மறந்துவிடாதிருக்கும்படியாக , உங்களுடைய காட்சிகளாலும் உரையாடல்களாலும் கத்தோலிக்க ஞான உபதேசத்தை முழுமையாக போதித்து அருளிய பாத்திமா மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இயேசுக்கிறிஸ்து நாதர் உண்மையாகவே திவ்விய நற்கருணையில் இருக்கிறார் என்ற மகா உன்னத சத்தியத்தின் உண்மையை காண்பிக்க அப்ப இரச குணங்களில் நற்கருணையை ஏந்திய சம்மனசானவரை அனுப்பி, அதிலே இயேசுவை அந்த மூன்று குழந்தைகளும் ஆராதித்து அவரை உட்கொள்ளும்படி செய்த பாத்திமா மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தேவ நற்கருணையில் அப்பத்தின் குணங்களுக்குள்ளேயும் முந்திரிகைப்பழ இரசத்தின் குணங்களுக்குள்ளேயும் இயேசுநாதருடைய திருச்சரீரம், இரத்தம், ஆத்துமம், தேவசுபாவம் எல்லாம் அடங்கி இருப்பதையும் அந்த இயேசுக்கிறிஸ்து உலகத்திலுள்ள எல்லா தேவ நற்கருணைப் பேழைகளிலும் இருக்கிறார் என்பதையும் தேவதூதனின் மற்றொரு ஜெபத்தால் எங்களுக்குப் படிப்பித்தருளிய பாத்திமா மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நற்கருணையில் தந்தை மகன் தூய ஆவியாகிய கடவுள் ஆராதிக்கப்பட வேண்டும் என்று காண்பிக்க அதற்கென ஒரு மனவல்லிய ஜெபத்தை அம்மூன்று சிறுவர்களுக்கும் உணர்த்தி அருளிய பாத்திமா மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நன்றியற்ற மனிதரால் சகிக்கக்கூடாத விதமாக நின்தைப்படும் நற்கருணை ஆண்டவருக்கு நிந்தைப் பரிகாரமாக , மிக பரிகார நன்மை உட்கொள்ளும்படி அச்சிறுவர்களைத் தூண்டிய பாத்திமா மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இயேசுவின் திரு இருதயத்துடன் உங்கள் மாசற்ற இருதயமும் ஒன்றாக நேசிக்கப்பட்டு நிந்தைப் பரிகாரம் செய்யப்பட வேண்டும் என்பது கடவுளின் சித்தம் என்று கூறி அதற்காக முதல் சனிக்கிழமை பக்தியை ஏற்படுத்திய பாத்திமா மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மரியாயின் மாசற்ற இருதயத்துக்காகப் பரிகாரம் செய்யும் கருத்தோடு தொடர்ச்சியாக 5 முதல் சனிக்கிசமைகளில் பாவசங்கீர்த்தனம் செய்து நற்கருணை utkondu , 53 மணி ஜெபமாலை சொல்லி கால்மணி நேரம் ஜெபமாலை தேவ இரகசியங்களை நினைத்தபடி மாதாவுடன் தங்கி இருப்பதே முதல் சனி பக்தி என்று விளக்கிக் கூறிய பாத்திமா மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மரியாயின் அமலோற்பவம் தெய்வீகத் தாய்மை, எப்போதும் கன்னிமை ஆகிய சிறப்புகளுக்கு எதிராகவும் மாதாவின் பக்தியை அழிப்பதும் மாதாவின் திரு உருவங்களை அகற்றி அவமதிப்பதும் ஆகிய ஐந்து வகை நிந்தைகளுக்குப் பரிகாரமாகவே 5 முதல் சனி பக்தி என்று இயேசுவே விளக்கிக் கூறும் அளவுக்கு தேவ சலுகைகளைப் பெற்றுள்ள பாத்திமா மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

முதல் சனி பக்தியைப் பிரமாணிக்கமுடன் அனுசரிப்பவர்களின் மரண சமயத்தில் , ஈடேற்றத்திற்கு அவசியமான சகல உதவிகளையும் அவர்களுக்குச் செய்வதாக வாக்களித்துள்ள பாத்திமா மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பாவத்தின் பலனாக யுத்தம் பஞ்சம் ஆகிய துன்பங்கள் நேருகின்றன என்று கூறி அவற்றை தடுக்க செபமாலையும் தவ முயற்சிகளும் செய்து உங்கள் மாசற்ற இருதய பக்தியைக் கைக்கொள்ளும்படி தூண்டி ,இதுவே பாத்திமா செய்தி என்று உலகிற்கு உணர்த்தி வருகின்ற பாத்திமா மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பாத்திமா காட்சிகள் கடவுளால் ஆனவை என்று எல்லோரும் நம்பும்படியாக ,1917 அக்டோபர் 13 ஆம் நாளில் 6 ஆம் காட்சியின் போது சூரியனில் மாபெரும் அற்புதத்தை நிகழ்த்திய பாத்திமா மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உங்கள் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டால் இரஷ்யா மனந்திரும்பும், உலக சமாதானம் வரும், இல்லாவிடில் இரஷ்யா தன் தப்பறைகளை உலகமெங்கும் பரப்பும் , யுத்தங்களையும் வேத கலாபனைகளையும் தூண்டி விடும் என்று எச்சரித்த பாத்திமா மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மனிதர்கள் போதிய ஜெப தப ஜெபமாலைகள் சொல்லாவிட்டால் இனம் தெரியாத ஒரு ஒளி ஓர் இரவில் தோன்றி அடுத்து வரவிருக்கும் மகா பெரிய ஆக்கினைகளை முன்னறிவிக்கும் என்று தீர்க்கதரிசனமாகக் கூறியுள்ள பாத்திமா மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ரஷ்யா மனம் திரும்புவதற்கு ஏதுவாக அந்நாட்டைப் பரிசுத்த மரியாயின் மாசற்ற இருதயத்துக்கு பாப்பரசர் உலக மேற்றிராணிமார்களுடன் சேர்ந்து ஒப்புக் கொடுக்க வேண்டும் என்ற இயேசுவின் நிபந்தனையை லூசியாவிடம் அறிவித்த பாத்திமா மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நாங்கள் நம்பிக்கை இழந்து போகாவண்ணம் இறுதியில் என் மாசற்ற இருதயம் வெல்லும் பாப்பரசர் ரஷ்யாவை என் இருதயத்துக்கு ஒப்புக் கொடுப்பார் உலக சமாதானம் வரும் என்று கூறி அருளிய பாத்திமா மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பாவிகளுக்காக ஜெபித்து பரித்தியாகம் செய்ய ஆளில்லாததால் அநேக ஆத்துமங்கள் நரகத்திற்குப் போகிறார்கள் என்று வேதனையுடன் கூறி பாவிகளுக்காக எங்களை மன்றாடத்தூண்டிய பாத்திமா மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நரகத்திற்குச் செல்லும் பாவிகளில் பெரும்பாலானவர்கள் கற்புக்கெதிரான  பாவங்களுக்காகவே அங்கு செல்கிறார்கள் என்று ஜெசிந்தா வழியாகக் கூறி பரிசுத்தத்தனத்தின் மட்டில் எங்கள் கடமையை உணர்த்திய பாத்திமா மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பாப்பரசரும் திருச்சபையும் கொடுமையாக அலைக்கழிக்கப்படுவதை முன்கூட்டியே அறிவித்து , அதிலிருந்து காப்பாற்றும்படி அதிகமான ஜெப தவம் அனுசரித்து ஜெபமாலையைப் பக்தியுடன் தியானித்து சொல்லும்படி கற்பித்த பாத்திமா மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, எங்கள் மன்றாட்டை தயவாய்க் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

செபிப்போமாக:

தமது ஜீவியத்தாலும் உத்தானத்தாலும் எங்களுக்கு நித்திய இரட்சணிய பேறுபலனை சம்பாதித்தருளிய ஏக புத்திரனின் பிதாவாகிய சர்வேசுரா சுவாமி!

அந்தத் தேவ இரகசியங்களை முத்திப்பேறு பெற்ற புனித கன்னி மரியாளின் மகா பரிசுத்த ஜெபமாலை வழியாக நினைவுகூரும் அடியோர்கள் பாத்திமாவில் அவர்கள் காட்டிய வழியின்படியே நடந்து அதிலுள்ள வாக்குத்தத்தங்களின் பேற்றை அடையத்தக்கதாக உதவி புரிந்தருளும்.

இவைகளை எல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவின் திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் சுவாமி!

ஆமென்.

பாத்திமா இராக்கினிக்கு ஜெபம்.

ஓ! பரிசுத்த செபமாலையின் இராக்கினியே ! பாத்திமாவின் மதுரமுள்ள தாயே! போர்த்துகல் தேசத்தில் தோன்ற இரக்கம் கொண்டு, ஒரு காலத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்த அந்த தேசத்தின் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சமாதானத்தை அடைந்து தந்தவளே, எங்கள் பிரிய நாட்டின் மேல் கிருபைக் கண் கொண்டு பார்த்தருளும்.

பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கும் அதனை உமது வல்லமையால் உயர்த்தி ஞானத்திலும் உறுதியான ஒழுக்கத்திலும் அதை மீண்டும் ஸ்தாபிக்கும்படி உம்மை இரந்து மன்றாடுகிறோம்

சமாதானத்தைத் திரும்பக் கொண்டு வாரும்; அன்றியும் பூமியிலுள்ள சகல மனிதர்களுக்கும் சமாதானத்தைக் கொடுத்தருளும்; அதனால் எல்லா தேசத்தவர்களும் , முக்கியமாய் எங்களுக்குச் சொந்தமானவர்கள் தேவரீரைத் தங்கள் இராக்கினியாகவும் சமாதானத்தின் இராக்கினியாகவும் வாழ்த்தி ஆனந்திக்கக் கடவார்கள் ஆமென்

செபமாலையின் இராக்கினியே எங்கள் தேசத்துக்காக வேண்டிக் கொள்ளும்

சமாதானத்தின் இராக்கினியே மனுக்குலத்துக்கு நிலையான சமாதானத்தை அடைந்து தந்தருளும்.

ஆமென்.

பாத்திமா செபங்கள்.

பாத்திமா சம்மனசின் செபம்:

என் தேவனே உம்மை விசுவசிக்கிறேன், உம்மை ஆராதிக்கிறேன், உம்மை நம்புகிறேன், உம்மை நேசிக்கிறேன், உம்மை விசுவசியாதவர்களுக்காகவும், உம்மை நேசியாதவர்களுக்காகவும் மன்னிப்பு கேட்கிறேன்.

பாத்திமா ஒப்புக்கொடுத்தல் செபம்:

சேசுவே, உமது அன்பிற்காகவும், பாவிகள் மனந்திரும்பவும், மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு விரோதமாகச் செய்யப்படும் பாவங்களுக்குப் பரிகாரமாகவும் இதை ஒப்புக்கொடுக்கிறேன்.

பாத்திமா நற்கருணைச் செபம்:

மிகப் பரிசுத்த திரித்துவமே, உம்மை ஆராதிக்கிறேன். என் தேவனே! என் தேவனே! மிகவும் திவ்விய நற்கருணையில் உம்மை நேசிக்கிறேன்.

ஆமென்.