சிந்தாயாத்திரை மாதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிந்தாயாத்திரை மாதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சிந்தாயாத்திரை மாதாவைக் குறித்து ஜெபிக்கும் ஜெபம்

சிந்தாயாத்திரை மாதாவே! திருச்சபை என்னும் கப்பலை ஏந்தும் தாயே! பாவப் பெருங்கடலை நீந்துவோருக்கு மெய்யான தெப்பமே, என் ஆண்டவருக்குப் பின் என் ஏக நம்பிக்கையே, நான் அகோர தந்திர வலைகளில் சிக்கிச் சமுசார சாகரத்தில் அமிழ்ந்து என் பாவத்தால் நெருக்கமான மோட்ச வழியை நான் எளிதாகக் கைக் கொள்ளாமல் போராடி வரும் இத்தருணத்தில், எனக்கு உதவியாக வந்து, வைத்தியனைப் போல என் பாவ நோயைக் குணப்படுத்தி, தாயைப் போல எனக்கு ஞான அமுதூட்டி, தைரியம் தந்து, என் ஞானக் கப்பலாகிய ஆத்துமமானது நித்திய பேரின்ப பாக்கிய மோட்சக் கரையை அடையத் தயை செய்தருளும்.  தாயே, 

ஆமென்.  

ஒரு அருள்.

சிந்தாயாத்திரை மாதா பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட மரியாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஜீவியர்களுடைய மாதாவாகிய திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பரலோக ரோஜா நந்தவனமான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உம்மை நம்பினவர்களுக்கு ஞான ஜீவிய ஊற்றான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஜெயமடைவதற்குத் திருவிருதான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஞானத்தின் சாயலான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஜெபத் தியானத்தின் திரு ஆலயமான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அடைக்கலப் பேழையான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உம்மை நம்பினவர்களுக்குத் துணையான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எருசலேமின் மகிமைக் கிரீடமான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

விடியற்காலத்தின் நட்சத்திரமான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சந்திரனைப் போல நிறைந்த அழகுள்ளவர் களான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சூரியனைப் போலப் பிரகாசிக்கின்றவர் களாகிய திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சமுத்திரத்தின் நட்சத்திரமான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சகல தீவினைகளிலேயும் நின்று எங்களை இரட்சிக்க மன்றாடுகிற திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எரிந்தும் வேகாத முள்மரமாக மோயீசன் கண்ட திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சாலமோன் என்கிறவருடைய பத்திராசன மான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே,  எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தங்க மயமாய் இலங்கும் உப்பரிகையான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பசித்திருக்கிறவர்களுடைய ஜீவனமான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வேதம் அடங்கிய பெட்டகமான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

முத்திரையிடப்பட்ட ஊற்றான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பஞ்சம் படை நோய்களிலே ஆதரவான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஜீவியம் சுரக்கும் கிணறான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அலைகடலில் திசை தப்பித் தேறுதல் இல்லாமல் திகைப்பவர்களுக்கு நல்வழியும் கரை யுமான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கப்பலேறித் தேசாந்திரியாயிருக்கிறவர்களைக் கைதூக்கி இரட்சித்துக் கொண்டு வருகிற திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பரதேசமாகிய இவ்வுலகமென்னும் பெருங் கடலில் நீந்தும் ஆத்துமாக்களுக்குப் பரலோகக் கரையைக் காண்பிக்கும் வெளிச்ச வீடாகிய திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஏழைகளுக்கு இரங்கும் தாயாரான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உத்தரிக்கிற ஸ்தலத்திலே இருக்கிறவர் களுக்குத் தாயாரான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உத்தரிக்கிற ஸ்தலத்திலே இருக்கிற ஆத்துமாக் களுக்கு இளைப்பாற்றியான திவ்விய சிந்தா யாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பராபரனின் பூஜிதமுள்ள தேவாலயமான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

யாக்கோபு என்பவர் கண்ட ஏணியான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சகல புண்ணியங்களுடையவும் ஞானக் கண்ணாடியான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சூரியனை ஆடையாகத் தரித்த பரம ஸ்திரீ யாகிய திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சந்திரனைப் பாதணியாய் அணிந்த தயாபரி யான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஈராறு நட்சத்திரங்களைத் திருமுடியில் புனைந்த இராஜேஸ்வரியாகிய திவ்விய சிந்தா யாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தெய்வீகத்தின் ஞானச் சுடராய் விளங்குகின்ற திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உம்மை மன்றாடுகிறவர்களுக்கு அடைக்கல அன்னையான திவ்விய சிந்தாயாத்திரை  மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

சேசுக்கிறீஸ்துநாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாயிருக்கத் தக்கதாக, திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

நித்திய பிதாவாகிய சர்வேசுரா, அர்ச்சிஷ்ட பரிசுத்த கன்னிமரியாயைக் குறித்து மன்றாடுகிற நாங்கள் அந்த உத்தம நாயகியின் வேண்டுதலினால் இந்தப் பரதேச யாத்திரையில் நேரிடும் சகல ஆபத்துக்களிலும் நின்று காக்கப்பட்டு, சத்திய சன்மார்க்கத்திலே தவறுதலின்றி நடந்து நன்மரணத்தையும் நித்திய மோட்சானந்த பாக்கியத்தையும் கண்டடைய அனுக்கிரகம் பண்ணியருளும்.  இந்த மன்றாட்டுக்களையயல் லாம் எங்கள் ஆண்டவராகிய சேசுகிறீஸ்துநாத ருடைய திருமுகத்தைப் பார்த்துத் தந்தருளும். 

ஆமென்.

கடல் பயணிகள், தொழிலாளர் ஜெபம்

சர்வ வல்லபரான சர்வேசுரா!  முன்னாளில் பெரும் வெள்ளத்தில் மிதந்த நோவாவின் பெட்டகத்தை ஆசீர்வதிக்கத் தேவரீர் தயை புரிந்தது போல, இதோ எம் மன்றாட்டுக்களுக்கு இரங்கி, இந்தக் கலம் / கப்பலில் பயணம்  செய்பவர்கள் அனைவரையும் உம் திருக்கரத்தால் ஆசீர்வதித் தருளும்.

கடல் மேல் நடந்து சென்ற அர்ச்சியசிஷ்ட இராயப்பருக்குத் தேவரீர் செய்தது போல, உம் வலது கரத்தை நீட்டி, இவர்களுக்கும் ஆதரவு கொடுத்தருளும்.  பரலோகத்தினின்று உமது பரிசுத்த தூதரை அனுப்பி, இந்தக் கலத்தில் / கப்பலில் உள்ள யாவரையும் சகல விதமான ஆபத் துக்களிலிருந்தும் காப்பாற்றும்படிச் செய்தருளும்.  சகல எதிர்ப்புகளையும் அகற்றி, உம் ஊழியர்களை எப்பொழுதும் அவர்கள் விரும்பும் துறைமுகத் துக்குப் பாதுகாப்பாய்க் கொண்டுபோய்ச் சேர்த்து, அவர்கள் தங்கள் தொழில்களை எல்லாம் சரிவரச் செய்து முடித்த பிறகு, தக்க காலத்தில் தங்கள் சொந்தக் கரைக்கு மகிழ்ச்சியாய்த் திரும்பி வந்து சேரத் தயை புரிவீராக.  சதாகாலமும் ஜீவியரும் இராச்சிய பரிபாலனம் பண்ணுகிறவருமாய் இருக்கிற ஆண்டவரே. 

ஆமென்.

அர்ச்சியசிஷ்ட சிந்தாத்திரை மாதா ஜெபம்.

தந்தையே இறைவா! இந்நாட்களில் பயணம் செய்யும் என்னை உம்முடைய அன்பின் பாதுகாப்பில் வைத்தருளும். ஆபத்துகளிலிருந்தும் குறிப்பாக இயந்திர கோளாறுகளிலிருந்தும், இயற்கை சீற்றங்களிலிருந்தும் என்னை பாதுகாத்தருளும். நீர்நிலைகள், காடுகள் வழியாகவும், மலைகள் மீதும் பயணம் செய்யும் போது விவேகத்துடனும், ஞானத்துடனும் பயணம் செய்ய அருள்புரியும்.

இயற்கையை மதித்து நடக்க கற்பியும். இதன் மூலம் இயற்கையின் சக்தியை ஒருபோதும் பழிக்காமலும், அவமதிக்காமலும் இருப்பேனாக. நான் பாதுகாப்புடன் வீடு திரும்பி செல்லும் போது உம்முடைய அருள் வரங்களை நினைத்துப் பார்த்து நன்றி உள்ளவனாக இருப்பேனாக. என்னைப் போன்று பயணம் செய்யும் அனைவருக்கும் உம்முடைய பாதுகாப்பும், அரவணைப்பும் கிடைப்பதாக. இம் மன்றாட்டுகள் எல்லாம் எங்கள் அர்ச்சியசிஷ்ட சிந்தாத்திரை அன்னை வழியாக உம்மை மன்றாடுகிறேன்.

ஆமென்.

அர்ச்சியசிஷ்ட சிந்தாயாத்திரை மாதாவை நோக்கி மன்றாட்டு.

எங்கள் அன்பான அன்னையே! சிந்தாயாத்திரை மாதாவே! உமது எழில் வதனத்தைக் காணவும், உம்மைப் போற்றி புகழவும் உமது அருள் துணையை வேண்டவும் உமது திருக்கோவிலைத் தேடி வந்துள்ளோம்.

உம் பிள்ளைகளாகிய எங்களைக் கைவிடாதேயும் தாயே! உம் திருக்கரத்தில் நீர் எந்தியிருக்கும் உமது திருமகன் இயேசுவே எங்களையும் உமக்கு பிள்ளைகளாகத் தந்துள்ளார் என்பதை எண்ணி உரிமையோடு உம்மை வேண்டுகிறோம்.

உலகமாகிய கடலிலே அலைமோதும் படகுபோல் எங்கள் வாழ்க்கையின் பல்வேறு கவலைகளாலும் சுமைகளாலும் நோய்களாலும் அலைகழிக்கப்படுகிறோம். நாங்கள் பயணம் செய்யும் இந்த உலகில் எந்தவிதமான ஆபத்துக்களும் இன்றி விண்ணகத்துறை சேர அருள்புரியும்.

கடலிலே எழும் காற்றிலும், புயலிலும், கொடிய அலைகளிலும் சிக்குண்டு எங்கள் தோணிகளும், படகுகளும் தத்தளிக்காமல், கடல் பயணம் செய்த உமது திருமகன் இயேசுவிடம் எங்களுக்காக பரிந்து பேசி எல்லா மரக்கலங்களையும் அவைகளில் பயணம் செய்வோரையும் பாதுகாத்தருளும்.

அம்மா சிந்தாயாத்திரைத் தாயே! அன்று திபேரியாக் கடலில் நடந்த அற்புதத்தைப் போல் எங்கள் எளிய படகுகளையும் மீன்களால் நிரப்ப உம் திருமகனை மன்றாடும்.  நீர் கையில் ஏந்தியுள்ள கப்பலைப்போல் எங்கள் ஒவ்வொருவரின் குடும்பக் கப்பலையும் உமது அரவனைப்பில் வைத்துப் பாதுகாத்தருளும்.

அன்னைக்குரிய பாசத்தோடு எங்களையும் எங்கள் குழந்தைகளையும் எங்கள் நகரில் வாழும் எல்லா மக்களையும் நல்ல உடல் நலத்தோடும் ஆன்மீக வளத்தோடும் பொருளாதார செழிப்போடும் வாழ வைத்தருளும். எங்கள் இளைய தலைமுறையினரும், ஆபத்தான வழிகளில் சென்று வாழ்க்கைப் படகை சீரழித்துவிடாமல் நல்வழி காட்டியருளும் அம்மா!

திரைகடல் ஓடியும் திரவியம் தேடும் மக்களின் தொழில் முயற்சிகள் எல்லாம் வெற்றி பெற அருள்புரியும். நோவாவின் பேழையை வெள்ளப்பெருக்கிலிருந்து பாதுகாத்த இறைத்தந்தையின் பரிவிரக்கத்தை பாவிகளாகிய எங்களுக்கும் என்றென்றும் பெற்றுத்தாரும் தாயே!

ஆமென்.

வாகன ஓட்டுநர்களுக்கான செபம்.

(வாகனத்தை ஓட்டும் முன் செபிக்க வேண்டிய செபம்).

நம்பினோர் அனைவரையும் பாதுகாக்கும் விண்ணக தந்தையே, எம் இறைவா, நீர் உம்மக்களை செங்கடலை பிளந்தும், பாலைவனத்தின் வழியாகயும் பாதுகாப்புடன் செழிப்பான நாட்டிற்கு அழைத்து செல்ல மோயிசனை வழிநடத்துபவராக அனுப்பினீரே,  உம் அன்பு மக்களை மீட்பதற்காக இயேசு கிறிஸ்துவையே இவ்வுலகிலே மனுவாக்கி மீட்டு  இன்றும் தூய ஆவியானவரை வழிநடத்துபவதாகவும் கொடுத்ததற்கு உம்மை போற்றி, நன்றி கூறுகிறேன்.

நான் வாகனத்தை ஓட்டும் போது விவேகத்துடன் ஒட்டவும், ஞானத்துடனும், ஒரே சிந்தனையோடும், ஒரே மன நிலையோடு ஒட்டவும், இயற்கை பாதிப்புகள், ஆபத்துக்கள் வரும் பொழுது பதற்றமில்லாமல் வாகனத்தை ஒட்டவும், என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பயணிகளை (சரக்குகளை) பாதுகாப்புடனும், கொண்டு சேர்க்கவும் பயணத்தின் பாதுகாவலியான சிந்தாத்திரை மாதா வழியாக உம்மை மன்றாடுகிறேன்.

ஆமென் .

கடல் தொழிலாளர்களுக்கான செபம்

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, முன்னால் பெரும் வெள்ளத்தில் தண்ணீரில் மிதந்த நோவாவின் பெட்டகத்தை ஆசிர்வதிக்க நீர் தயை புரிந்தது போல இதோ என் மன்றாட்டுகளுக்கு இரங்கி இந்த கலத்தில் (படகு, தோனி, கப்பல்) பயணம் செல்பவர்கள் அனைவரையும் உம வலது திருக்கரத்தால் ஆசிர்வதியும்.

கடல்மேல் நடந்து சென்று புனித இராயப்பருக்கு உம் வலது கரத்தை நீட்டி செய்தது போல இவர்களுக்கும் ஆதரவு கொடுத்தருளும்.

விண்ணகத்தினின்று உம் வானதூதர்களை அனுப்பி இந்த கலத்தில் (படகு, தோனி, கப்பல்) உள்ள யாவையும் எல்லா விதமான ஆபத்துகளிலிருந்து காப்பாற்றும்படிச் செய்யவும்.

எல்லா எதிர்ப்புகளையும் அகற்றி உம் ஊழியர்களை எப்பொழுதும் அவர்கள் விரும்பும் துறைமுகத்துக்கு பாதுகாப்பாய் சேர்த்து, அவர்கள் தங்கள் தொழில்களை எல்லாம் சரிவரச் செய்து முடித்த பிறகு தக்க காலத்தில் தங்கள் சொந்தக் கரைக்கு மகிழ்ச்சியாய் திரும்பி வந்து சேரத் தயை புரிவீராக.

இந்த மன்றாட்டுகளை எல்லாம் எங்கள் தூய சிந்தாத்திரை அன்னை வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

ஆமென்.

(1-பர.,1-அருள்.,1-திரி)

அர்ச்சியசிஷ்ட சிந்தாத்திரை மாதவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஆமென்.

சிந்தாத்திரை மாதா ஜெபமாலை தேவரகசியங்கள்.

1. குழந்தை இயேசுவை பெற்றெடுக்க அன்னை மரியாளும் அர்ச்சியசிஷ்ட சூசையப்பரும் யூதாவில் உள்ள பெத்தலேகேமிற்கு பயணமானதை (குழந்தை வரம், நலம் வேண்டி) தியானிப்போம். (லூக் 2  :5).

2. அன்னை மரியாளும், அர்ச்சியசிஷ்ட சூசையப்பரும் குழந்தை இயேசுவோடு எகிப்திற்கு இரவிலே பயணமானதை (ஆபத்தில் பாதுகாப்பு வேண்டி)  தியானிப்போம் (மத் 2 :14).

3. அன்னை மரியாளும், அர்ச்சியசிஷ்ட சூசையப்பரும் கலிலேயாவில் உள்ள நசரேத்திற்க்குபயணமானதை (திருக்குடும்ப வாழ்க்கை பயணம் வேண்டி ) தியானிப்போம் (மத் 2 : 23).

4. அன்னை மரியாள் பாஸ்கா விழா கொண்டாட எருசலேம் பயணமானதை (இறை பக்தி வேண்டி ) தியானிப்போம் (லூக் 2 :41).

5. அன்னை மரியாள் இயேசுவோடு கல்வாரிப் பாதையில் பயணமானதை (துன்பத்தில் துணை வேண்டி ) தியானிப்போம் (யோவா 19 : 25).

⛪ சிந்தாயாத்திரை மாதா பிரார்த்தனை!

சுவாமி கிருபையாயிரும்!
கிறிஸ்துவே கிருபையாயிரும்!
சுவாமி கிருபையாயிரும்!

கிறிஸ்துவே! எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்!
கிறிஸ்துவே! எங்கள் பிரார்த்தனையைக் நன்றாகக் கேட்டருளும்!

பரமண்டலங்களிலே இருக்கின்ற பிதாவாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!

பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!

பரிசுத்த திரித்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா எங்களைத் தயைபண்ணி, இரட்சியும் சுவாமி!

அர்ச்சியசிஷ்ட மரியாயே!

சீவியர்களுடைய மாதாவாகிய

திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

பரலோக ரோஜா நந்தவனமான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

உம்மை நம்பினவர்களுக்கு ஞானச் சீவிய ஊற்றான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

செயமடைவதற்குத் திருவிருதான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

ஞானத்தின் சாயலான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

செபதியானத்தின் திரு ஆலயமான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

அடைக்கலப் பேழையான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

உம்மை நம்பினவர்களுக்குத் துணையான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

எருசலேமின் மகிமைக் கிரீடமான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

விடியற்காலையின் நட்சத்திரமான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

சந்திரனைப் போல நிறைந்த அழகுள்ளவளான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

சூரியனைப் போல் பிரகாசிக்கின்றவளான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

சமுத்திரத்தின் நட்சத்திரமான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

சகல தீவினைகளிலேயும் நின்று, எங்களை இரட்சிக்க மன்றாடுகிற திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

எரிந்தும் வேகாத முள்மரமாக மோசேஸ் கண்ட திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

சாலமோன் என்கிறவருடைய பத்திராசனமான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

தங்கமயமாயிலங்கும் உப்பரிகையான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

பசித்திருக்கிறவர்களுடைய ஜீவனமான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

வேதம் அடங்கிய பெட்டகமான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

முத்திரையிடப்பட்ட ஊற்றான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

பஞ்சம் படை நோய்களிலே ஆதரவான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

சீவியஞ்சுரக்கும் கிணறான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

அலைகடலில் திசை தப்பித் தேறுதலில்லாமல் திகைப்பவர்களுக்கு நல்வழியும் கரையுமான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

கப்பலேறித் தேசாந்திரியாயிருக்கிறவர்களை கைதூக்கி இரட்சித்துக் கொண்டு வருகிற திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

பரதேசமாகிய இவ்வுலகமெனும் ஆழியில் நின்ற ஆத்துமாக்களுக்குப் பரலோகக் கரையை காண்பிக்கும் வெளிச்ச வீடாகிய திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

ஏழைகளுக்கு இரங்கும் தாயாரான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

உத்தரிப்பு ஸ்தலத்திலே இருக்கிற தாயாரான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

உத்தரிப்பு ஸ்தலத்திலே இருக்கிற ஆத்துமாக்களுக்கு இளைபாற்றியான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

பராபரனின் பூஜ்ஜிய தேவாலயமான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

யாக்கோபு் என்பவர் கண்ட ஏணியான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

சகல புண்ணியங்களிலும் ஞானப் கண்ணாடியான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

சூரியனை ஆடையாய்த் தரி;த்த பரம ஸ்தீரியான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

சந்திரனைப் பாதக் குடறாக அணிந்த தயாபரியான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

தெய்வீகத்தின் ஞானக்சுடராய் விளங்குகின்ற திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

உம்மை மன்றாடுகிறவர்களுக்கு அடைக்கல அன்னையான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய யேசுவே – எங்கள் பாவங்களை பொறுத்தருளும் சுவாமி!

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய யேசுவே – எங்கள் பிரார்த்தனையை தயவாய் கேட்டருளும், சுவாமி!

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய யேசுவே – எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி!

இயேசுக்கிறிஸ்து நாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு நாங்கள் பேறுபெற்றவர்களாக இருக்கத் தக்கதாக, திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

செபிப்போமாக,
நித்திய பிதாவாகிய சர்வேசுரா, முத்திப்பேறு பெற்ற பரிசுத்த கன்னி மரியாயைக் குறித்து மன்றாடுகிற நாங்கள் அந்த உத்தம நாயகியின் வேண்டுதலினால் இந்தப் பரதேசயாத்திரையில் நேரிடுஞ் சகல ஆபத்துக்களிலும் நின்று காக்கப்பட்டு, சத்திய சன்மார்க்கத்திலே தவறுதலின்றி நடந்து நன்மரணத்தையும் நித்திய மோட்சானந்த பாக்கியத்தையும் கண்டடைய அனுக்கிரகம் பண்ணியருளும். இந்த மன்றாட்டுக்களை எல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்துக் தந்தருளும். ஆமென்.