சம்மனசுக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சம்மனசுக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நவவிலாச சம்மனசுக்களின் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சம்மனசுக்களுக்கு இராக்கினியாயிருக்கிற அர்ச். மரியாயே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச். பக்திச்சுவாலகர்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

அர்ச். ஞானாதிக்கர்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

அர்ச். பத்திராசனர்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

அர்ச். நாதகிருத்தியர்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

அர்ச். சத்துவகர்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

அர்ச். பலவத்தர்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

அர்ச். பிராதமிகர்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

அர்ச். அதிதூதர்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

அர்ச். காவல் தூதர்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

நவவிலாச சம்மனசுக்களுக்கும், சர்வேசுர னுடைய மக்களுக்கும் எப்போதும் பரிபாலகரா யிருந்த அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

லூசிபேரையும் அவனைச் சேர்ந்த கெட்ட சம்மனசுக்களையும் நரகத்தில் தள்ளின அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தானியேல் என்பவருக்கு அதிசய காட்சியை விளக்கிக் கூறிய அர்ச். கபிரியேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஸ்நாபக அருளப்பருடைய பிறப்பையும், அலுவல்களையும் சக்கரியாஸ் என்பவருக்கு முன் னறிவித்த அர்ச். கபிரியேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

திவ்விய சுதனின் மனிதாவதாரத்தை கன்னி மரியம்மாளுக்கு அறிவித்த அர்ச். கபிரியேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தோபியாஸ் என்பவரை சிந்தாயாத்திரையாய் கூட்டிக்கொண்டு போய், மீண்டும் கூட்டிக் கொண்டு சேர்த்த அர்ச். இரபாயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சாராள் என்பவளைப் பசாசின் சோதனையில் நின்று இரட்சித்த அர்ச். இரபாயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பெரிய தொபியாஸ் என்பவருக்குப் பார் வையை மீண்டும் தந்தருளின அர்ச். இரபாயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உன்னத சர்வேசுரனுடைய மகிமை சிங்காசனத் தைப் புடைசூழ்ந்திருக்கிற நவவிலாச சம்மன சுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் என்று என்றென்றைக்கும் சர்வேசுரனை ஸ்துதிக்கிற அர்ச். சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

பரலோகத்திலே இருக்கிற சர்வேசுரனுடைய சன்னிதானத்தை இடைவிடாமல் தரிசித்துக் கொண்டிருக்கிற அர்ச். சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

சூரியனை ஆடையாக அணிந்து நின்ற நித்திய பெண்மணியைச் சூழ்ந்து நிற்கின்ற நவவிலாச சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

நவவிலாச சம்மனசுக்களிலிருந்து தேவமாதா வின் பணிவிடைக்காக சர்வேசுரனால் தேர்ந் தெடுக்கப்பட்ட ஆயிரம் சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

மனுமக்களை விசாரித்துக் காப்பதற்கும், நல் வழியில் நடத்துவதற்கும் சர்வேசுரனால் கட்டளை பெற்றிருக்கிற அர்ச். காவல் சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

சோதோம் மக்களின் அக்கிரம குருட்டாட்டத் தால் அவர்களைத் தண்டித்த அர்ச். சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

அந்த அக்கிரம அவிசுவாசிகளில் நின்று  லோத் என்பவரையும் அவருடைய குடும்பத்தாரையும் மீட்டுக் காப்பாற்றின அர்ச். சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

யாக்கோபு என்பவரை சகல பொல்லாப்புகளி லிருந்து தப்புவித்தருளின அர்ச். சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

அவர் காட்சியில் கண்ட ஏணியிலே ஏறியும் இறங்கியும் இருந்த அர்ச். சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

மோயீசனுக்குத் தேவ கற்பனைகளைக் கொடுத்தருளிய அர்ச். சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

உலக இரட்சகர் பிறந்த சமயத்தில் சர்வேசுர னுக்கு ஸ்துதியும், மனிதர்களுக்கு சமாதானமும் உண்டாகக் கடவது என்று வாழ்த்திப் பாடிய அர்ச். சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

சேசுநாதரைச் சோதித்த பசாசு நீங்கினவுடனே வனாந்தரத்தில் அவருக்குப் பணிவிடை புரிந்த அர்ச். சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

பூங்காவனத்தில் மரண அவஸ்தைப்பட்ட சேசுநாதருக்கு ஆறுதல் சொல்லிய அர்ச். சம்மன சுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

அவருடைய கல்லறையில் தூய வெண்ணாடை அணிந்தவர்களாய்க் காணப்பட்ட சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

அவர் மோட்சத்திற்கு ஆரோகணமானபோது அவருடைய சீடர்களுக்குத் தரிசனையான அர்ச். சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

சேசுநாதர் ஜீவியரையும், மரித்தோரையும் நடுத் தீர்க்க மகிமையோடு எழுந்தருளி வரும்போது, தேவமாதாவுடன் அவரைப் புடைசூழ்ந்து வரவிருக்கும் அர்ச். சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

அச்சமயத்தில் ஆண்டவருக்கும் மாதாவுக்கும் முன்பாக சிலுவைக் கொடியை ஏந்தி வரப்போகிற அர்ச். சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

அப்போது நல்லோர்களையும், தீயோர் களையும் பிரிக்கப் போகிற அர்ச். சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

எங்கள் மன்றாட்டுக்களை சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுக்கிற அர்ச். சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

மனஸ்தாபப்படுகிற பாவியின் மேல் ஆனந்த சந்தோ­ம் கொள்கிற அர்ச். சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

மரணசமயத்தில் எங்களுக்கு உதவியாயிருக் கிற அர்ச். சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

ஆபிரகாமின் மடியில் இலாசரைக் கூட்டிக் கொண்டு போய் வைத்த அர்ச். சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

சகல பாவங்களுக்கும் பரிகாரம் செய்த பரி சுத்த ஆன்மாக்களை மோட்சத்துக்குக் கூட்டிக் கொண்டு போகிற அர்ச். சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

தேவ வல்லபவரத்தால் பற்பல அற்புதங் களையும், அதிசயங்களையும் செய்கிற அர்ச். சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

தங்கள் இரட்சண்ணிய சுதந்திரத்தைப் பற்றிக் கொள்கிறவர்களுக்கு உதவி செய்பவர்களாய் அனுப் பப்படுகிற பராமரிப்புள்ள அர்ச். சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

சர்வேசுரனுடைய சித்தத்தை நிறைவேற்றுகிற தேவ ஊழியர்களாகிய அர்ச். சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

இராச்சியங்களுக்கும் நாடுகளுக்கும் பரிபாலகர் களாக ஏற்படுத்தப்பட்டிருக்கிற அர்ச்.  சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

அநேகமுறை சத்துருக்களுடைய சேனை களைத் தோற்கடித்த அர்ச். சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

சிறைச்சாலைகளிலும் மற்ற அநேக ஆபத்துக் களிலுமிருந்து சர்வேசுரனுடைய அடியார்களை மீட்டுக் கொண்ட அர்ச். சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

வேதசாட்சிகளின் வேதனைகளில் அடிக்கடி ஆறுதலாயிருந்த அர்ச். சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

திருச்சபையை ஆளுகிற குரு சிரேஷ்டர்களை மிகுந்த பட்சத்தோடு பராமரிக்கிற அர்ச். சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

நவவிலாச சபைகளாய்ப் பகுக்கப்பட்டிருக்கிற சகல அர்ச். சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

சகல பொல்லாப்புகளிலேயும் நின்று உம் முடைய பரிசுத்த சம்மனசுக்களால், எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

பசாசினுடைய தந்திரங்களிலே  நின்று உம் முடைய பரிசுத்த சம்மனசுக்களால், எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

சகல பாவங்களிலேயும் நின்று, உம்முடைய பரிசுத்த சம்மனசுக்களால், எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

பிரிவினையிலும், பதிதத்தனத்திலேயும் நின்று உம்முடைய பரிசுத்த சம்மனசுக்களால், எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

கொள்ளை நோய், பஞ்சம், படையிலே நின்று உம்முடைய பரிசுத்த சம்மனசுக்களால், எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

ஆயத்தமில்லாமல் சடுதியிலே வருகிற துர்மரணத் திலே நின்று, உம்முடைய பரிசுத்த சம்மனசுக்களால், எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

நித்திய மரணத்திலே நின்று, உம்முடைய பரிசுத்த சம்மனசுக்களால், எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

பாவிகளாயிருக்கிற நாங்கள் அர்ச். சம்மன சுக்கள் மூலமாக தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

எங்கள் பாவங்களைப் போக்கியருள வேண்டு மென்று அர்ச். சம்மனசுக்கள் மூலமாக தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

எங்களுக்குத் தயைசெய்து இரட்சித்தருள வேண்டுமென்று அர்ச். சம்மனசுக்கள் மூலமாக தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

பரிசுத்த பாப்பரசர் மற்றும் அதிசிரேஷ்ட அதிகாரிகளையும், சத்திய திருச்சபையில் ஏற்பட்ட சகல குருக்கள், துறவியரையும் தற்காத்தருள வேண்டுமென்று அர்ச். சம்மனசுக்கள் மூலமாக தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

சத்திய வேத இராஜாக்களுக்கும் பிரபுக் களுக்கும், ஜனங்களுக்கும் சமாதானத்தையும், சரியான ஒருமைப்பாட்டையும் தந்தருள வேண்டு மென்று, அர்ச். சம்மனசுக்கள் மூலமாக தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

பூமியிலே நல்ல பயிர் விளைவின் பலன் தந்து காப்பாற்ற வேண்டுமென்று அர்ச். சம்மனசுக்கள் மூலமாக தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

மரணமடைந்த சகல விசுவாசிகளுக்கும் நித்திய இளைப்பாற்றியைக் கட்டளையிட்டருள வேண்டுமென்று அர்ச். சம்மனசுக்கள் மூலமாக தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

எங்கள் மரண சமயத்தில் உம்முடைய சம்மன சுக்களை எங்களிடத்தில் அனுப்பியருள வேண்டு மென்று அர்ச். சம்மனசுக்கள் மூலமாக தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

மரணத்துக்குப் பின் எங்கள் ஆன்மாக்களைப்  பரிசுத்த சம்மனசுக்கள் மூலமாக ஏற்று, நித்தியப் பேரின்ப பாக்கியத்தைத் தந்தருள வேண்டு மென்று அர்ச். சம்மனசுக்கள் மூலமாக தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

சர்வேசுரனுடைய சுதனே, தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

சேசுகிறீஸ்துநாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்கள் ஆகத் தக்கதாக, முத்தரான பரிசுத்த சம்மனசுக்களுடைய சகலவித சபைகளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

பிரார்த்திக்கக்கடவோம்

தயாபரரான சர்வேசுரா, சொல்லற்கரிய தேவ பராமரிப்பினால் எங்களைக் காத்து நடத்த உம்முடைய பரிசுத்த சம்மனசுக்களை அனுப்பி யருளுகிறீரே.  உமக்கே தோத்திரம் உண்டாகக் கடவது.  தேவரீரை மன்றாடுகிற அடியோர்கள் இவ்வுலகத்தில் சம்மனசுக்களின் ஆதரவால் காப் பாற்றப்பட்டு, உமக்கும், அவர்களுக்கும் பிரியப் பட பிரமாணிக்க பக்தியாய் நடக்கவும், மோட் சத்தில் அவர்களோடு உம்மை என்றென்றும் ஸ்துதித்து வாழ்த்தவும் கிருபை செய்தருளும் சுவாமி. 

ஆமென்.

நவவிலாச சம்மனசுகளுக்காக ஜெபம்

1-வது. பக்திச் சுவாலகருக்கு.

அர்ச்சியசிஷ்ட பக்திச் சுவாலகரே, நீங்கள் சர்வேசுரனுடைய அளவில்லாத நன்மைத்தனத் தைப் பார்த்து நேச அக்கினியால் எரிந்திருக்கிறபடி யால், அந்த அக்கினியிலே ஒரு பொறி என் இருதயத்திலே விழுந்து அதிலுள்ள சகல நேச பாசம் எரிந்து தேவ பக்திச் சுடராகும்படிச் செய்ய உங்களை மன்றாடுகிறேன்.  ஆமென்.

2-வது. ஞானாதிக்கருக்கு.

அர்ச்சியசிஷ்ட ஞானாதிக்கரே, நீங்கள் சர்வே சுரனுடைய அளவில்லாத வல்லமையையும், ஆச்சரியமான உன்னத இரகசியங்களையும் பிரத்தியட்சமாய்ப் பார்த்து ஞான சமுத்திரமாய்த் தெளிந் திருக்கிறதினால், உங்களுடைய ஒரு கதிர் என் மனதிலே விழுந்து சகல அஞ்ஞான இருளை நீக்கிச் சர்வேசுரன் பேரிலேயும், பரலோக விஷயங்களி னாலேயும் மனதைத் தெளிவிக்கும்படி உங்களை மன்றாடுகிறேன். ஆமென்.

3-வது. பத்திராசனருக்கு.

அர்ச். பத்திராசனரே, நீங்கள் சர்வேசுர னுடைய அளவில்லாத இராஜ நீதி தவறாமல் அதனால் வருகிற சகல துக்கத்தையும் சுகத்தையும் நல்ல மனதோடு கையேற்று நடக்கச் செய்யும் படிக்கு உங்களை மன்றாடுகிறேன். ஆமென்.

4-வது. நாதகிருத்தியருக்கு.

அர்ச். நாதகிருத்தியரே, நீங்கள் சர்வேசுர னுடைய காரியங்களை அவர் அருளால் செய்கிறீர் களே.  அப்படிப்பட்ட வல்லமையால் என்னைத் திருத்தி என் சரீர இச்சையின்படியே நான் நடவாமல் தேவசித்தத்தை அறிந்து நடக்க என் மனதைத் தெளிவிக்கும்படி உங்களை மன்றாடுகிறேன். ஆமென்.

5-வது. சத்துவகர்களுக்கு.

அர்ச். சத்துவகரே, சுபாவ கிரமமாய்ச் செய்ய இயலாத காரியங்களை நீங்கள் தேவ பலத்தால் அற்புதமாய்ச் செய்கிறபடியால், என்னுடைய சரீர  துர்ப்பலத்தினால் நான் செய்யமுடியாத தர்ம வீரியங்களைத் தேவப்பிரசாத பலத்தால் செய்யும் படி என் மனதைத் திடப்படுத்த உங்களை மன்றாடுகிறேன். ஆமென்.

6-வது. பலவத்தருக்கு.

அர்ச்.பலவத்தரே, நீங்கள் தேவகாரியங்களுக்கு பசாசு செய்கிற எதிரிடைகளைத் தள்ளுகிறதி னால், நான் செய்கிற தர்மக் கிரியைகளுக்கு வரும் விக்கினங்களை அகற்றும்படிக்கு உங்களை மன்றாடுகிறேன்.  ஆமென்.

7-வது. பிராதமிகருக்கு.

அர்ச். பிராதமிகரே, நீங்கள் இராஜ பிரதானிகளையும், அவர்களுடைய இராச்சியங்களையும் தற்காத்து நடத்தி வருகிறதினால், நான் வசிக்கிற நாட்டிலும், கிராமத்திலும் யாதொரு சத்துருவின் விக்கினம் வராமல் தற்காத்து, அரசரும், இராச் சியத்தாரும் தேவசித்தம் தவறாமல் நடக்கச் செய்யும்படி உங்களை மன்றாடுகிறேன்.  ஆமென்.

8-வது. அதிதூதர்களுக்கு.

அர்ச்சியசிஷ்ட அதிதூதர்களே, நீங்கள் பிரதானமான விசேஷங்களை உலகத்திலே அறிவிக்கத்தக்கதாகச் சர்வேசுரனால் அனுப்பப்படுகிறதினால், என் ஆத்தும ஈடேற்றத்திற்கு வேண்டிய காரியங்களை எனக்கு அறிவித்து அதற்கான கிரியைகளை நான் செய்து நாளைக் கழிக்க நல்வழியைக் காண்பிக்கும்படிக்கு உங்களை மன்றாடுகிறேன். ஆமென்.

9-வது. தூதர்களுக்கு.

அர்ச்சியசிஷ்ட தூதர்களே, நீங்கள் மனுஷருக்குக் காவலாளியாய்ச் சர்வேசுரனுடைய எந்தெந்தப் பணிவிடைக்கும் அனுப்பப்படுகிற தினால், எந்த வேளையிலேயும் என்னைக் கிருபா கடாட்சமாய்ப் பார்த்து, நல்ல வழியைக் காண்பித்து, என்னுடைய வேண்டுதலையும், கிரியைகளையும் சர்வேசுரனுக்கு ஒப்படைத்து, உங்களுடைய சித்தத்தின்படியே என்னை நடத்த உங்களை மன்றாடுகிறேன். 

ஆமென்.

காவல் சம்மனசுக்குத் தன்னை ஒப்புக்கொடுக்கும் செபம்

எனக்குக் காவலாயிருக்கிற சர்வேசுரனுடைய பரிசுத்த சம்மனசானவரே! தெய்வீக கிருபையால் உம்மிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட எனக்கு ஞான வெளிச்சம் கொடுத்து என்னைக் காத்து நடத்தி ஆண்டருளும். 

ஆமென். 

(100 நாள் பலன்)

அர்ச். காவலான சம்மனசின் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சம்மனசுக்களுடைய இராக்கினியாகிய அர்ச். மரியாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அர்ச். மிக்கேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அர்ச். கபிரியேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அர்ச். இரபேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எங்களுக்கு காவலாயிருக்கிற அர்ச். சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எங்களைக் காக்கிறதிலே மிகவும் பிரமாணிக்கராயிருக்கிற சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எங்களை ஆதரிக்க எந்நேரமும் கவனிக்கிறவராயிருக்கிற சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மிகுந்த மகிமைப்பிரதாப வல்லமையுள்ள காவலாகிய சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தவறாத சத்திய சாட்சியாகிய சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எங்களுக்குப் பிரியாத துணையாகிய சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இப்பரதேசத்தில் ஆத்துமத்துக்கு ஆறுதலாகிய சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மிகுந்த ஞான விவேகத்தோடே நடப்பிக்கிறவராகிய சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பரிசுத்த கற்புள்ள நேசராகிய சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தயை நிறைந்த ஆயராகிய சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பரிசுத்ததனத்தைக் காக்கிறவராகிய சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உத்தம ஆலோசனையை ஏவுகிறவராகிய சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சாந்தம் தயவோடே புத்திமதி சொல்லுகிற வராகிய சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இருதயத்தைப் பிரகாசிப்பிக்கிறவராகிய சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஏகாந்தத்தில் ஞானக்கதிர் வீசுகிறவராகிய சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

காணப்படாதவராயிருந்தாலும் வழிகாட்டியாகிய சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எந்தக் காரியங்களையும் ஒழுங்கோடே நடத்துகிறவராகிய சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பலவீனத்தில் எங்கள் தஞ்சமாகிய சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எங்களுக்காக சர்வேசுரனிடத்தில் மிகவும் ஏற்கத்தக்க மனுப்பேசுகிறவராகிய சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தேவகிருபைச் சிம்மாசனத்தில் எங்கள் செபங்களைச் செலுத்துகிறவராகிய சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பலத்த உதவியாகிய சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எங்கள் சத்துருக்களோடே யுத்தம் செய்கிறதிலே ஒருபோதும் தோல்வியடையாதவராகிய சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பசாசுக்களுக்குப் பயங்கரமான சாட்டையாகிய சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

குற்றஞ் செய்கிறவர்களைக் கண்டிக்கிறவராகிற சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

திடனற்ற சமயத்தில் ஸ்திரப்படுத்துகிறவராகிய சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வியாதியில் உதவியாயிருக்கிற சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

துயரத்தில் ஆறுதலாகிய சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மரண அவஸ்தையில் தேற்றரவாகிய சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஞான யுத்தத்தில் தைரியம் வருவிக்கிறவராகிய சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஜெயங்கொள்ளுகிறவர்களுக்குத் தேவ கிருபையால் முடிசூட்டுகிறவராகிய சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பரிசுத்த ஆத்துமாக்களை கைக்கொள்ளுகிறவராகிய சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

யுத்தசபையின் வச்சிரத் தூண்களாகிய காவலான சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நவவிலாச சபையாயிருக்கிற சகல பரிசுத்த சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

சேசுவே, எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

நடுநடுக்கமான தீர்வை நாளில் நாங்கள்  நித்திய சாபத்துக்குள்ளாகாதபடிக்கு, எங்கள் காவலாகிய பரிசுத்த சம்மனசானவரே, ஞான யுத்தத்தில் எங்களைக் காத்தருளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வேசுரா சுவாமி! மனோவாக்குக்கெட்டாத உமது கிருபையுள்ள பராமரிக்கையால் எங்களைக் காக்கத் தேவரீருடைய பரிசுத்த சம்மனசுக்களை நியமித்தனுப்பச் சித்தமானீரே.  உம்மை மன்றாடு கிற நாங்கள் அவர்கள் ஆதரவில் எப்பொழுதும் காப்பாற்றப்படவும் நித்தியமாய் அவர்களுடைய பேரின்ப ஐக்கியத்தில் வாழ்ந்திருக்கவும் எங்கள் ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துவின் திருமுகத்தைப் பார்த்து அநுக்கிரகம் செய்தருளும் சுவாமி. 

ஆமென்.

காவல் சம்மனசானவரை நோக்கி ஜெபம்

(திருநாள் : அக்டோபர் 2)

அதிமிக பிரமாணிக்கம் அமைந்த காவலனே! அடியேனுக்குப் பிரியாத துணைவராக சர்வேசுரனால் நியமிக்கப்பட்டு எப்போதும் என்னண்டையிலிருந்து என்னை ஆண்டு நடத்தி வரும்   சம்மனசானவரே இன்று (பெயர்) ஆகிய நான் உம்மை என் பாதுகாவலராகவும் அடைக்கலமாகவும் தெரிந்து கொண்டு என்றென்றைக்கும் என்னை முழுதும் உமது பராமரிப்பில் வைத்து விடுகிறேன். மேலும் நான் உமது மகிமைப் பிரதாபத்துக்கு விரோதமான எவ்வித வார்த்தைகளினாலும் கிரிகைகளினாலும் உம்மைவிட்டுப் பிரியாமலிருப்பதுமன்றி எனக்குக் கீழ்ப்பட்ட மற்றவர்களும் தேவரீருக்கு விரோதமாய் ஏதாவது சொல்லவும் அல்லது செய்யவும் விடுகிறதில்லையென்றும் பிரதிக்கினை பண்ணுகிறேன். ஆதலால் இன்று முதல் என் மரண பரியந்தம் உமது ஊழிய னாக என்னை ஏற்றுக் கொள்ளும். நான் செய்யும் சகல கிரியைகளிலும் எனக்கு ஒத்தாசை செய்து விசேஷமாய் என் மரணநேரத்தில் என்னைக் கைவிடாமல் காத்து இரட்சித்தருளும். 

ஆமென்.

சகல சம்மனசுக்களையும் அர்ச்சிஷ்டவர்களையும் நோக்கி ஜெபம்.

தூதர்களே, அதிதூதர்களே, பத்திராசனர்களே, நாதகிருத்தியர்களே, ஞானாதிக்கர்களே, பிராதமிகர்களே, சத்துவகர்களே, பத்திச்சுவாலகர்களே, பலவத்தர்களே, சர்வேசுரனுடைய சகல அர்ச்சிஷ்டவர்களே, ஸ்திரீ பூமான்களாகிய சகல பரிசுத்தர்களே, விசேஷமாக என் பாதுகாவலர்களாகிய அர்ச்சிஷ்டவர்களே, அடியேன் சர்வ வல்லவராகிய சர்வேசுரனுடைய புகழ்ச்சிக்காகவும் மகிமைக்காகவும், என் சொந்த நன்மைக்காகவும், அவருடைய பரிசுத்த திருச்சபைகாகவும் இந்த உன்னதமான பலியை அவருக்கு ஒப்புக்கொடுக்கத் தகுதியுள்ளவனாகும்படியக, எனக்காகப் பரிந்து பேசத்தயை செய்வீர்களாக.

ஆமென்.

காவல் சம்மனசுக்குத் தன்னை ஓப்புக்கொடுக்கும் செபம்.

எனக்குக் காவலாயிருக்கிற சர்வேசுரனுடைய பரிசுத்த சம்மனசானவரே! தெய்வீக கிருபையால் உம்மிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட எனக்கு ஞான வெளிச்சம் கொடுத்து என்னைக் காத்து நடத்தி ஆண்டருளும்.

ஆமென். 

(100 நாள் பலன்)

நவவிலாச சபை சம்மனசுக்களுக்கு பிரார்த்தனை.


சுவாமி கிருபையாயிரும். 2
கிறிஸ்துவே கிருபையாயிரும். 2
சுவாமி கிருபையாயிரும். 2

கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா எங்களைத் தயைப்பண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பிரீத்து சாந்துவாகிய சர்வேசுரா எங்களைத் தயைப்பண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சிஷ்டதமதிரித்துவமாயிருக்கிற ஏக சர்சுேரா எங்களைத் தயைப்பண்ணி இரட்சியும் சுவாமி

சம்மனசுக்களின் இராக்கினியாயிருக்கிற அர்ச்சிஷ்ட மரியாயே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச்சிஷ்ட பக்திச் சுவாலகர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச்சிஷ்ட ஞானாதிக்கர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச்சிஷ்ட பத்திராசனர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச்சிஷ்ட நாதகிருத்தியர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச்சிஷ்ட சத்துவகர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச்சிஷ்ட பலவத்தர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச்சிஷ்ட பிராதமிகர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச்சிஷ்ட அதிதூதர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச்சிஷ்ட காவல் தூதர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

காவல் தூதரை நோக்கி செபம்

எனக்குக் காவலாய் இருக்கிற சர்வேசுரனுடைய சம்மனசானவரே! தெய்வீக கிருபையால் உம்மிடத்தில் ஒப்படைக்கப்பட்ட எனக்கு ஞான வெளிச்சம் கொடுத்து என்னைக் காத்து வழிநடத்தி ஆண்டருளும்.

ஆமென்.

காவல் சம்மனசை நோக்கி செபம்.

அதிமிக பிரமாண்டம் கொண்ட காவலரே! எனக்குப் பிரியாத துணைவராக இறைவனால் நியமிக்கப்பட்டு எப்போதும் என் அருகிலிருந்து என்னை ஆண்டு வழி நடத்தி வரும் வான தூதரே! இன்று நான் உம்மை என் பாதுகாவலராகவும், அடைக்கலமாகவும் தெரிந்து கொண்டு, என்றென்றைக்கும் என்னை முழுவதும் உமது பராமரிப்பில் வைத்து விடுகிறேன். மேலும் நான் "உமது மகிமை பெருமைக்கு விரோதமான எவ்வித சொல்லினாலும், செயலினாலும் உம்மை விட்டுப் பிரிய மாட்டேன். மற்றவர்களும் உமக்கு எதிராக ஏதாவது சொல்லவும், செய்யவும் விட மாட்டேன்." என்று உறுதி கூறுகிறேன். ஆதலால் இன்று முதல் என் வாழ்நாள் எல்லாம் ஊழியராக என்னை ஏற்றுக் கொள்ளும்! என் ஒவ்வொரு செயலிலும் எனக்கு உதவியாக இருந்து  என்னைக் கைவிடாமல் காத்தருளும்!

ஆமென்!

காவல் சம்மனசை நோக்கிச் செபம்.

அதிமிக பிரமாணிக்கம் அமைந்த காவலரே! அடியேனுக்குப் பிரியாத துணைவராக இறைவனால் நியமிக்கப்பட்டு எப்போதும் என் அருகிலிருந்துஎன்னை ஆண்டு நடத்தி வரும் வான தூதரே! இன்று(பேர்) ஆகிய நான் உம்மை என் பாதுகாவலராகவும் அடைக்கலமாகவும் தெரிந்து கொண்டுஎன்றென்றைக்கும் என்னை முழுதும் உமது பராமரிப்பில் வைத்து விடுகிறேன். மேலும் நான் உமது மகிமை பிரதாபத்துக்கு விரோதமான எவ்விதசொல்லினாலும் செயலினாலும் உம்மை விட்டுப் பிரியாமலிருப்பதும் அன்றி எனக்கு கீழ்ப்பட்ட மற்றவர்களும் தேவரீருக்கு விரோதமாய் ஏதாவதுசொல்லவும் செய்யவும் விடுகிறதில்லை என்றும் உறுதி செய்கிறேன். ஆதலால் இன்று முதல் என் மரண பரியந்தம் உமது ஊழியனாக என்னைஏற்றுக் கொள்ளும். நான் செய்யும் செயல்களிலும் எனக்கு உதவி செய்து, சிறப்பாக என் மரண நேரத்தில் என்னைக் கைவிடாமல் காத்தருளும்.

ஆமென்.

சம்மனசுகளின் கீதம்


உன்னதங்களிலே (சிரம் வணங்கி) சர்வேசுரனுக்கு மகிமையும், பூலோகத்தில் நல்ல மனதுள்ள மனிதர்களுக்குச் சமாதானமும் உண்டாவதாக. நாங்கள் உம்மைப் புகழ்கிறோம். உம்மை வாழ்த்துகிறோம், (சிரம் வணங்கி) உம்மை ஆராதிக்கிறோம், உம்மை மகிமைப்படுத்துகிறோம்.

உமது மேலான மகிமையினிமித்தம் (சிரம் வணங்கி) உமக்கு நன்றியறிந்த தோத்திரஞ் செலுத்துகிறோம்).தேவனாகிய ஆண்டவரே, பரலோக இராசாவே, சர்வ வல்லபரான பிதாவாகிய சர்வேசுரா, ஏக குமரானாய் பிறந்து சுதானாகிய ஆண்டவரே, (சிரம் வணங்கி) சேசு கிறிஸ்துவே, தேவனாகிய ஆண்டவரே, சர்வேசுரனுடைய செம்மறிப் பருவையே, பிதாவின் குமாரனே, உலகத்தின் பாவங்களைப் போக்குகிறவரே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். உலகத்தின் பாவங்களைப் போக்குகிறவரே, (சிரம் வணங்கி) எங்கள் மன்றாட்டை ஏற்றுக் கொள்ளும். பிதாவின் வலப்பாரிசத்தில் வீற்றிருக்கிறவரே, எங்கள் பேரில் இரக்கமாயிரும்.

ஏனெனில் நீர் ஒருவர் மாத்திரமே பரிசுத்தர். நீர் ஒருவர் மாத்திரமே ஆண்டவர். நீர் ஒருவர் மாத்திரமே மகா உன்னதமானவர். (சிரம் வணங்கி) சேசுக் கிறீஸ்துவே, (சிலுவை அடையாளம் வரைந்து) இஸ்பிரீத்துசாந்துவோடு பிதாவாகிய சர்வேசுரனின் மகிமையில் வீற்றிருக்கிறீர்.

ஆமென்.

காவல் சம்மனசுக்குத் தன்னை ஒப்புக்கொடுக்கும் செபம்

எனக்குக் காவலாயிருக்கிற சர்வேசுரனுடைய பரிசுத்த சம்மனசானவரே! தெய்வீக கிருபையால் உம்மிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட எனக்கு ஞான வெளிச்சம் கொடுத்து என்னைக் காத்து நடத்தி ஆண்டருளும். ஆமென். 

(100 நாள் பலன்)

காவல் சம்மனசு ஜெபம்.

எங்களுக்கு காவலாய் இருக்கிற சம்மனசானவரே, தெய்வீக கிருபையால் உம்மிடம் ஒப்படைக்கப்பட்ட என்னை, ஞான ஒளியால் பிரகாசித்து, காத்து, வழிநடத்த வேண்டுகிறேன்.

ஆமென்.

⛪ சம்மனசுக்களின் கீதம்.

உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாகுக! பூவுலகில் நல் மனத்தோருக்கு அமைதியும் ஆகுக. உம்மைப் புகழ்கின்றோம். உம்மை வாழ்த்துகின்றோம். உம்மை ஆராதிக்கின்றோம். உம்மை மகிமைப்படுத்துகின்றோம். உமது மேலான மாட்சிமையின் பொருட்டு உமக்கு நன்றி கூறுகின்றோம். ஆண்டவராகிய சர்வேசுரா வானுலக அரசரே, எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரா.

ஏக சுதனாய் செனித்த ஆண்டவரே, இயேசு கிறிஸ்துவே ஆண்டவராகிய சர்வேசுரா, சர்வேசுரனின் செம்மறியே, பிதாவின் சுதனே, உலகின் பாவங்களைப் போக்குபவரே, எங்கள் மேல் இரக்கமாயிரும், உலகின் பாவங்களைப் போக்குபவரே, எங்கள் மன்றாட்டை ஏற்றருளும், பிதாவின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே எங்கள் மேல் இரக்கமாயிரும், ஏனெனில் இயேசுக்கிறிஸ்துவே நீர் ஒருவரே பரிசுத்தர். நீர் ஒருவரே ஆண்டவர். நீர் ஒருவரே உன்னதர்.

பரிசுத்த ஆவியோடு, பிதாவாகிய சர்வேசுரனின் மாட்சிமையில் இருப்பவர் நீரே.! ஆமென்.