இயேசுவின் திருப்பாடுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இயேசுவின் திருப்பாடுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சேசுநாதருடைய திருப்பாடுகளின் செபம்.

எங்களுக்காக மனிதனாய்ப் பிறந்துஎங்கள் மேல் வைத்த அன்பினால் சிலுவையில் அறையுண்டு உயிர்விட்ட சேசுவேஎங்கள்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

எங்களுடைய பாவச்சுமையை தேவரீர் சுமந்துஅதன் கனத்தால் தேவரீருடைய இருதயம் நைந்துமரணமட்டும் துக்கமாய் உம்முடைய சரீரம் இரத்த வியர்வையில் தோய்ந்து, ஜெத்சமனித் தோட்டத்தில் கடின அவஸ்தைப்பட்ட சேசுவேஎங்கள்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

பூங்காவனத்தில் மிகுந்த துக்கப்பட்டு பிதாவே உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கடவது” என்று பிதாவை வேண்டிக்கொண்ட சேசுவேஎங்கள்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

உம்முடைய அப்போஸ்தலர்களால் கைவிடப்பட்டுமுத்தமிட்ட துரோகியாகிய யூதாஸ் என்பவனால் யூதருக்குக் கையளிக்கப்பட்ட சேசுவேஎங்கள்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

சங்கிலிகளாலும்கயிறுகளாலும் கட்டப்பட்டு வழியில் தேவ தூஷனை சொல்லி அடிக்கப்பட்டு ஒரு குற்றவாளி போல நீசமான மரணத் தீர்ப்புப்பெற இழுத்துக்கொண்டு போகப்பட்ட சேசுவேஎங்கள்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

அன்னாஸ்கைப்பாஸ்பிலாத்துஏரோது இவர்கள் முன்னால் அவமானமாய் கொண்டுபோய் நிறுத்தப்பட்டுஅநியாயமாய்க் குற்றஞ்சாட்டப்பட்டுகன்னத்தில் அறையப்பட்டுநிந்திக்கப்பட்ட சேசுவேஎங்கள்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

திருமுகம் மூடப்பட்டவருமாய்சட்டைகள் கழற்றப்பட்டவருமாய்கற்றூணில் கட்டுண்டு மிகுந்த நிஷ்டூரத்தோடு அடிக்கப்பட்ட இயேசுவேஎங்கள்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

முள்முடி தரிக்கப்பட்டுதிருமுகத்தில் துப்பப்பட்டுதிருச்சிரசில் மூங்கிற்றடியினால் அடிக்கப்பட்டுஓர் பரிகாச இராஜாவாக அவமானப்படுத்தி நிந்திக்கப்பட்ட சேசுவேஎங்கள்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

உம்முடைய திருச்சரீரமெல்லாம் அடிகளால் கிழிக்கப்பட்டுதிருஇரத்தம் வெள்ளமாய் ஓடயூதர்களுடைய கோபம் தீரும்படியாய் பிலாத்து என்பவனால்இதோ மனிதன்” என்று யூதர்களுக்குக் காட்டப்பட்ட சேசுவேஎங்கள்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

தேவரீர் அவர்களுக்கு எண்ணிறந்த நன்மைகளைச் செய்திருந்தும்இருதயம் வெடிக்கும்படி தேவரீருடைய திருச்சரீரம் கிழியுண்டிருந்ததைக் கண்டும்உம்மை விட்டுக் கொலைகாரனான பரபாசைத் தெரிந்துகொண்டதைப் பார்த்தும் அதிக துயரமடைந்த சேசுவேஎங்கள்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

சிலுவை மரணத்துக்குத் தீர்ப்பு பெற்ற சேசுவேஎங்கள்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

நிந்தையும் அவமானமுமான சிலுவையைச் சுமந்து மிகவும் சாதுள்ள ஓர் செம்மறிப் புருவையைக் கொலைக்களத்துக்கு இழுத்துக் கொண்டு போகிறதுபோல கொண்டு போகப்பட்ட சேசுவேஎங்கள்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

அகோர வேதனையினாலும்தேகத்தில் இரத்தமெல்லாம் குன்றிப்போனபடியாலும்சிலுவையின் பாரத்தால் அநேகதரம் கீழே விழுந்த சேசுவேஎங்கள்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

சிலுவையைச் சுமந்து செல்லும் பாதையில்தேவரீருடைய பரிசுத்த வியாகுல மாதாவை சந்தித்துப் பொறுக்க முடியாத கஸ்தியும்உருக்கமும் அனுபவித்த சேசுவேஎங்கள்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

சிலுவையை சுமந்து கொண்டு போகத் தேவரீருக்கு உதவி செய்த சீரேன் நகர சீமோனின் இருதயத்தை தேவசிநேக அக்கினியால் மூட்டி எரியப்பண்ணின சேசுவேஎங்கள்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

வேற்றுருவாயிருந்த தேவரீருடைய திருமுகத்தை வெரோணிக்கம்மாள் துடைத்தபொழுதுஅந்தத் துகிலிலே உம்முடைய திருமுகம் அற்புதமாய் பதியச் செய்த சேசுவேஎங்கள்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

சிலுவையைச் சுமந்துகொண்டு போகையில் உம்மைப் பார்த்து அழுதப் பரிசுத்தப் பெண்களுக்கு ஆறுதல் சொன்ன சேசுவேஎங்கள்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

உம்முடைய காயங்களோடே ஒட்டியிருந்த ஆடைகள் உரியப்பட்டதினாலே அகோர வேதனையும் மானபங்கமும் அனுபவித்த சேசுவேஎங்கள்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

திருப்பாதங்கள் கொடூர இரும்பாணிகளாலே துளைத்து அறையுண்டுஇரு கள்வர் நடுவில் சிலுவையில் உயர்த்தப்பட்ட சேசுவேஎங்கள்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

சிலுவையில் தேவரீர் அனுபவித்த கடைசி மரண அவஸ்தை நேரத்தில் எங்கள் மேல் கொண்ட இரக்கத்தால் உம்முடைய திருமாதாவை எங்களுக்குத் தாயாகக் கையளித்துஅவருடைய தயாளமுள்ள மாதாவுக்குரிய அன்புக்கு எங்களை ஒப்புக்கொடுத்த சேசுவேஎங்கள்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

தேவரீரோடு சிலுவையிலே அறையுண்டு பச்சாதாபக் கள்ளனுக்கு மோட்ச இராச்சியத்தை அன்றே வாக்களித்த சேசுவேஎங்கள்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

தேவரீருடைய துக்க சாகரத்தில் உம்முடைய பரமபிதாவினால் கைவிடப்பட்டுஉம்முடைய தாகத்துக்கு மனிதர் கசப்பான காடியைக் கொடுக்கஅந்நேரத்தில் எவ்வித ஆறுதலும் இன்றித் தவித்த சேசுவேஎங்கள்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

சிலுவையில் மரித்த எங்களுடைய பாவப் பொறுத்தலுக்காக தேவரீருடைய உயிரைப் பரமபிதாவுக்குப் பலியாக்கின சேசுவேஎங்கள்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

எங்கள் மேல் சொரிந்த தேவசிநேகத்தினாலே உம்முடைய உயிரை எங்களுக்கு பலியாக்கின பின்னும்உயிரற்ற உமது திரு இருதயம் ஈட்டியால் குத்தப்பட்டுக் கடைசித்துளி இரத்தமும்தண்ணீரும் சிந்திய சேசுவேஎங்கள்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

தேவரீருடைய திருச்சரீரம் சிலுவையினின்று இறக்கப்பட்டு வியாகுலம் நிறைந்த உம்முடைய திருமாதாவின் மடியில் வளர்த்தப்பட்ட சேசுவேஎங்கள்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

தேவரீருடைய திருச்சரீரமானது பரிமளத் தைலத்ததால் பூசப்பட்டுபரிசுத்த கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்ட சேசுவேஎங்கள்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

செபிப்போமாக.

மதுரமான சேசுவேதேவரீருடைய பரிசுத்த பாடுகளினாலும்சிலுவை மரணத்தினாலும்திருக்காயங்களினாலும்திரு இரத்தத்தினாலும் எங்களைச் சடுதி மரணத்தினின்றும்நிர்ப்பாக்கிய சாவினின்றும் காப்பாற்றிபாவத்தினின்றும்நித்திய நரகத்தினின்றும் இரட்சித்துஎன்றென்றும் உமது திரு இருதயத்திற்குள் எங்களை வைத்துக் காப்பாற்றியருளும் சுவாமி

ஆமென்.

சிலுவையில் தொங்கியபடி சேசுநாதர் சுவாமி திருவுளம்பற்றிய ஏழு வாக்கியங்கள்

(விசேஷமாக பெரிய வெள்ளியன்று சொல்லத்தக்கது.)

நமது திவ்விய இரட்சகராகிய சேசுகிறீஸ்து நாதர் தமது மரணத் தறுவாயில் சொன்ன ஏழு வாக்கியங்களும், நாம் மோட்சம் செல்வதற்காக அவர் ஏற்படுத்தியுள்ள ஏழு தேவத்திரவிய அனுமானங் களைக் குறிக்கின்றன.  இரத்தம் சிந்தியபடி கர்த்தர் உரைத்த இந்த வாக்கியங்களை சற்று சிரமம் எடுத்து சிந்திப்போம். உருக்கமுடன் தியானிப்போம்.  கவனமுடன் செயல்படுத்துவோம்.


முதல் வாக்கியம்

“பிதாவே! இவர்களை மன்னித்தருளும். ஏனெனில் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்” (லூக். 23:34)

ஆண்டவரை உலகம் அறிந்து கொள்ள வில்லை.  அவருடையவர்கள் கூட அவரை ஏற்றுக் கொள்ளவில்லை (அரு. 1:10‡11). ஆகவே அவரை உபாதைப்படுத்தி சிலுவையில் வதைக்கிற யூதர் களுடைய பாவம் எவ்வளவு பெரியதென்று அவர்கள் அறியாதிருந்தார்கள். ஆயினும் தமது பாடுகளின் இரட்சணியப் பேறுபலன்களை அவர்களுக்கும் அடைந்து கொடுக்கவேண்டும் என ஆண்டவர் விரும்புகிறார்.  தம்மைப் பகைத்து சிலுவையில் அறைந்து கொலைசெய்கிற அந்தக் கொடிய விரோதிகளையும் அவர் மனமார நேசிக் கிறார் பாருங்கள்.  அவர் போதித்ததை அவரே செய்து காட்டுகிறார்!  “உங்கள் சத்துராதிகளைச் சிநேகியுங்கள்.  உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்” (மத். 5:44).  இத்தலைசிறந்த கிறீஸ்தவ தத்துவத்தை நமதாண்டவர் கொலை யுண்டவாறே நிரூபித்துக் காட்டுகிறார். தமது இரத் தத்தினாலும், தேவ சிநேகத்தினாலும் தம்மைக் கொல்பவர்களுக்கு உயிர் கொடுக்க விரும்பி, அவர்களுக்காகப் பிதாவை மன்றாடுகிறார். அவர்கள் தங்கள் அநீதத்தை உணர்ந்து மன்னிப்பு எதுவும் கேட்கவில்லை. ஆயினும் அவர்களை மன்னிக்கும்படி மன்றாடுகிறார்.  “பிதாவே இவர் களை மன்னித்தருளும்.  ஏனெனில் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்.” 

ஆ கிறீஸ்தவர்களே! நாம் பரலோக மந்திரத்தில் என்ன சொல்கிறோம்?  “எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பது போல எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.” இப்படி ஜெபிக்கிற நாம் நம்மைப் பகைக்கிறவர்களைப் பகைக்கவும், நம்மைப் பழிக்கிறவர்களைப் பழி வாங்கவும் நினைக்கிறோம். ஆனால் நமதாண்டவர் தம் பகைவர்களுக்கு மோட்சம் கொடுக்கவும், தம்மைக் கொல்லுகிறவர்களுக்கு நித்திய ஜீவியம் கொடுக்கவும் மன்றாடுகிறார்!

மன்னிப்புக் கேட்காமலிருக்கும்போதே மன்னிப்பு வழங்கும் ஞானஸ்நானம் என்னும் தேவத்திரவிய அனுமானத்தைக் குறிப்பிடும் இம்முதல் வாக்கியத்தினால் நமது இரட்சகர் பாவத்தில் பிறக்கும் மனிதர்களுக்கெல்லாம் இலவசமாக மன்னிப்பு அளிக்கத் தயாராயிருப் பதைக் காட்டுகிறார்.

ஜென்மப் பாவத்தினால் மனிதர்கள் இழந்துபோன தேவசிநேக உறவையும், தெய்வீக உயிரையும் நாம் ஞானஸ்நானத்தில் பெறுகிறோ மென்றால், அதாவது ஜென்மப் பாவமும், கர்மப் பாவமும் போக்கப்பட்டு, நாம் ஞானஸ்நானத்தில் சர்வேசுரனுக்கும் திருச்சபைக்கும் பிள்ளைகளாகப் பிறக்கிறோம் என்றால், கிறீஸ்துநாதருடைய ஞான சரீரத்தின் உறுப்பாக மறுபிறப்பு அடைந்த இந்த நித்திய ஜீவிய வரமானது, சிலுவையில் பாடுபட்டு  இரத்தம் சிந்திய நிலையில் சேசுநாதர் சுவாமி நமக்காகப் பிதாவிடம் மன்னிப்புக் கேட்டு மன்றாடியதன் பேறுபலனாலேயே நமக்குக் கிடைத்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.  எனவே ஞானஸ்நானம் என்னும் முதல் தேவ திரவிய அனுமானத்திற்கு வல்லமையும், உயிரும் கொடுப்பதன் குறிப்பாகவே ஆண்டவர் தமது முதலாவது வாக்கியத்தைத் திருவுளம்பற்றினார் என்பது தெளிவாகிறது.

இவ்வாக்கியத்தின் வல்லமையால், சகல மனிதருக்கும் இலவசமாக மன்னிப்பளிக்கத் தயாராயிருக்கும் நம்முடைய நாதரைப் பார்த்து, சிலுவையடியில் நிற்கும் மாதாவிடம் மன்றாடி பகைவர்களுக்கும் மன்னிப்பளித்து, நன்மை செய்யும் வரத்தையும், நமது ஞானஸ்நான வார்த் தைப்பாட்டில் நிலைபெறும் வரத்தையும் நமக்குத் தரும்படி கேட்போமாக.


இரண்டாவது வாக்கியம்

“இன்றே நீ என்னோடு கூடப் பரகதியில் இருப்பாயயன்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” (லூக். 23:43)

நமதாண்டவருடைய இந்த வாக்கியம் அவரது வலப்பக்கத்தில் தொங்கிக் கொண்டிருந்த நல்ல கள்ளனுக்கு நம்பிக்கை உறுதியளிக்கிறது. தீஸ்மாஸ் என்னும் பெயருடைய இவன் வாழ்நாள் முழுவதும் கள்ளனாயிருந்தாலும் தன்னோடு ஒரு குற்றவாளியாக சிலுவையில் அறையப்பட் டிருக்கும் சேசுநாதர் சுவாமியை உண்மையாகவே சர்வேசுரன் எனக் கண்டுகொள்கிறான்.

இடதுபுறக் கள்ளன் ஆண்டவரைப் பழித்து பகைத்து, நிந்தித்து, “நீர் தேவனானால் உம்மையும், எங்ளையும் இச்சிலுவையிலிருந்து இரட்சியும்.  இல்லையயன்றால் உம்மைத் தேவனென்று சொல் லிக் கொண்டதேன்?” எனப் பரிகாசம் செய்த போது,  வலதுபுறக் கள்ளன் அவனைக் கடிந்து, “நீயும் இந்த ஆக்கினைத் தீர்ப்புக்கு உள்ளாகி யிருந்தும் சர்வேசுரனுக்குப் பயப்படுகிறதில் லையோ?  நமக்கு இது நியாயந்தான்.  நம்முடைய செய்கைகளுக்குத் தக்க சம்பாவனையைப் பெறு கிறோம்.  இவரோ ஒரு பொல்லாப்பும் செய்தவ ரல்ல” என்று சொல்லி, சேசுநாதரை நோக்கி, “சுவாமி, தேவரீர் உம்முடைய இராச்சியத்தில் சேரும்போது அடியேனை நினைத்தருளும்” என்று விண்ணப்பம் பண்ணினான் (லூக்.23:40-43).  ஆண்டவர் அதைக் கேட்டு அவன் மேல் மகா கருணை கொண்டு, அவனுடைய சகல பாவங்களையும், அவைகளுக்குரிய ஆக்கினைகளையும் பொறுத்து, “இன்றே நீ என்னோடு கூடப் பரகதியில் இருப்பாயயன்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” என்று இரண்டாம் வாக்கியம் திருவுளம்பற்றுகிறார்.

இது ஒரு விசேஷ சலுகை!  உத்தரிக்கிற ஸ்தலம் செல்லாமலே மோட்சத்திற்குச் செல்லும் வரப்பிரசாத சலுகை. இச்சலுகையை அவன் அடைந்து கொள்ள இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று அவன் கிறீஸ்துநாதருக்கு  சாட்சியம் கூறி, வேதசாட்சியானான்.  இன்னொன்று சிலுவை யடியில் நின்ற மாதாவிடம் தயவு வேண்டி அவன் மன்றாடியிருந்தான்.  மாதாவும் அவனுக்காக சேசு நாதரிடம் பரிந்துபேசி, இந்தச் சலுகை வரத்தை அடையச் செய்தார்கள்.  (உத்தரியம் அணிபவர் களுக்கு மாதா வாக்களித்துள்ள சனிக்கிழமைச் சலுகை.)

நாமனைவரும் இந்தக் கள்ளனைப்போலவே இருக்கிறோம். ஆயினும் பாவங்கள் பதினாயிரம், குற்றங்குறைகள் ஏராளம் நம்மிடம் உண்டு! ஆயினும் நாம் சேசுநாதரை சர்வேசுரன் என்று அறிந்து, அவரை நேசித்து, உத்தம விதமாய் ஒழுகு வதற்கான தைரியமும், மன உறுதியும் உண்டாக, (இவையே உறுதிப்பூசுதலின் பலன்கள்) சேசு நாதரின் பாடுகளும், இரத்தமும் நம்மை ஞான ஜீவியத்தில் உறுதிப்படுத்துகின்றன.  இந்த உறுதிப் படுத்தும் வரப்பிரசாதமே உறுதிப்பூசுதல் என்னும் தேவத்திரவிய அனுமானத்தில் நமக்கு வழங்கப் படுகிறது. எனவே சிலுவையில் ஆண்டவர் உயிர் விடுமுன் உரைத்த இரண்டாவது வாக்கியம், உறுதிப் பூசுதல் என்னும் தேவ திரவிய அனுமானத்தைக் குறிக்கும் வாக்கியம் என்பது தெளிவாகிறது.


மூன்றாவது வாக்கியம்

“ஸ்திரீயே, இதோ உம் மகன்... இதோ உன் தாய்” (அரு.19:26,27) 

சிலுவையடியில் நின்று கொண்டிருந்த தேவமாதா அந்நேரத்தில் தம் திருமகனுடைய வாயிலிருந்து தமக்கு ஆறுதலாக ஏதாவது வார்த்தை வெளிவரும் என்று எண்ணி ஆவலோடு எதிர்பார்த்தார்கள்.  அப்படியே ஆண்டவரும் தமது தாயாருக்கு ஆறுதலாக மட்டுமல்ல, தமது பலியின் பலனை மனிதர்களுக்கெல்லாம் பகிர்ந் தளிக்கும் தாயாக மாதாவை அறிவிக்க விரும்பி னார்.  ஆகவே ஆண்டவர் மாதாவைப் பார்த்து, “ஸ்திரீயே” என்று கூப்பிட்டு, அருளப்பர் என்னும் சீ­னைக் காண்பித்து, “இதோ உமது மகன்” என்றும், மறுபடியும் அருளப்பரைப் பார்த்து, மாதாவைக் காண்பித்து, “இதோ உன்னுடைய தாயார்” என்றும், மூன்றாம் வாக்கியத்தைத் திருவுளம்பற்றினார்.

இந்த வாக்கியத்தால் நமதாண்டவர் தமக்குப் பதிலாக தம் மாதாவுக்கு அருளப்பரை மகனாகவும், இவ்வுலகத்தில் ஆதரவாகவும் கொடுத்ததோடு இத்திருத்தாயாரை சகல மனித ருக்கும் தாயாகவும், நம்மை மாதாவுக்குப் பிள்ளை களாகவும் கொடுத்தார்.

இங்கே மாதாவுக்கும், நமக்குமிடையே உள்ள தாய்‡சேய் உறவை ஆண்டவர் வெளிப்படுத்துகிறார். தாய் என்றால் பிள்ளைக்கு உயிர் அளித்து, உணவூட்டி வளர்ப்பவள். சேய் என்றால் தாயின் சாயலாய், தாயைப் போல் பிள்ளையாய் வளர்வது. சேசுநாதர் சுவாமி சிலுவையில் தமது உயிரையும், சரீரத்தையும், இரத்தத்தையும் நமக்காகவே கையளித்தார்.  ஜீவிய அப்பம் நானே (அரு.6:48) என்று சேசுநாதர் தமது கல்வாரிப் பலியில் கையளித்த திருச்சரீரத்தையும், இரத்தத் தையும் தேவ நற்கருணை என்னும் திவ்விய உணவாக நமக்குப் பரிமாறி ஊட்டி வளர்க்கும் தாயாக மாதாவை அந்நேரத்தில் ஏற்படுத்தச் சித்த மானார்.  அது மட்டுமல்ல, மாதாவும் சேசுநாத ருக்குத் தமது சொந்த இரத்தத்திலிருந்து உயிரும் உடலும் தந்து, கிறீஸ்துநாதர் என்னும் சாயலைக் கொடுத்து வளர்த்தது போல, நமக்கும் தேவ நற்கருணை மூலம் தமது மாசற்ற இரத்தத்தின் வல்லமையை ஈந்து, கிறீஸ்து அவர்கள் என்னும் சாயலில் வளர்த்து வரும் அன்னையாகத் திகழும் விசே­ அலுவலை உணர்த்துவதே இந்த  மூன்றாம் வாக்கியத்தின் நோக்கம் என்பது தெளிவாகிறது.

இங்கே ஆண்டவர் மாதாவைத் “தாயே” என்று அழைப்பதால் வரும் இயல்பான ஆறுதலைக் கூட தியாகம் செய்யவும், அதே வேளையில் தம் தாயின் இருதயத்தில் தாய்க்குரிய உணர்ச்சி வேகத் தால் அவர்களது துயரம் அதிகரித்து விடாமலிருக் கவும் ஸ்திரீயே என்று அழைத்துப் பேசுகிறார்.


நான்காவது வாக்கியம்

“தாகமாயிருக்கிறேன்” (அரு. 19:28)

அந்நேரத்தில் அரிமத்தியா சூசை என்பவரும், நிக்கோதேமுவும் வேகமாக வந்து தங்களுக்கு வழிவிடக் கேட்டார்கள். “என்ன அவசரம்?” எனப் படைவீரர்கள் தடுத்து நிறுத்த, “நாங்கள் சேசுநாத ருடைய நண்பர்கள்.  அவரிடம் செல்ல வேண்டும்” என்றார்கள்.  அதைக் கேட்டுக் கோபமடைந்த பெரிய குருக்கள், “அந்தக் குற்றவாளியின் நண்பர்கள் என்று கூறிக் கொள்ளத் துணியும் நீங்கள் யார்?” என்று கேட்டார்கள்.  இந்தக் கேள்விக்கு “யூத மகா சங்கத்தின் புகழ் பெற்ற உறுப்பினர், அரிமத்தியா சூசை நான்.  இவர் யூதர் களின் தலைவர் நிக்கோதேமு” என்றார் சூசை.  அதற்கு அவர்கள், “குற்றவாளி ஒருவனுக்குத் துணை செல்பவர்கள் குற்றவாளிகளே” என்றார்கள்.  உடனே வந்தது பதில்: “கொலைகாரர்களுக்குத் துணை செல்பவர்கள் கொலையாளிகளே ஆவர்” என்று!

சிலுவையில் சேசுநாதர் ஏற்கெனவே மரித்தவர் போல் ஆனார். அவரது சரீரம் அசை வின்றி சிலுவையில் படாமல் மூன்று ஆணிகளில் மட்டும் தொங்கிக் கொண்டிருந்தது. ஏனென்றால் ஆண்டவர் பட்ட வாதைகளால் இளைப்பும், தவிப்பும் அதிகரித்தது.  சரீரம் முழுவதும் காந்த லாகி அகோர வேதனைக்குள்ளாக்கியது. அந்நேரத்தில் தொண்டையும், நாவும் வறண்டு போக, தம் இருதயத்தில் ஏற்பட்ட ஒருவகை ஏக்கம்! அதாவது தம்முடைய மரணத்தின் பேறு பலன்களை அநேகர் அடைய வேண்டும் என்ற ஆசைத் தாகம்!  நமதாண்டவருக்குத் தண்ணீர்த் தாகம் ஒருபுறம் இருந்தாலும் அவருடைய ஆத்தும இரட்சணியத் தாகமே இப்போது அதிகமாக அவரை வாதித்தது.  அதாவது இத்தனை பாடுகள், இரத்தம் சிந்துதல், இவை யாவும் ஏராளம் பேருக்கு வீணாய்ப் போகிறதே என்ற ஏக்கத்தை அவரால் தாங்கக் கூடவில்லை.  எனவே ஆண்டவர் மிக வருத்தத்துடன் கூறுகிறார், “தாகமாயிருக்கிறேன்” என்று.

இவ்விதம் அவர் வசனித்த நான்காவது வாக்கியத்தினால், ஆன்மாக்கள் தங்கள் பாவங் களுக்காகப் பச்சாத்தாபப்பட்டு மனந்திரும்பு வதையே அவர் வெகுவாக ஆசீத்தார்.  பாவசங் கீர்த்தனம் என்னும் தேவதிரவிய அனுமானத்தை அலட்சியம் செய்யும் ஆன்மாக்களுக்காக அவர் அனுபவித்த தவிப்புதான் அவரது உண்மையான தாகம்!

ஆ கிறீஸ்தவர்களே! உங்களுக்கு நல்ல பாவசங்கீர்த்தனம் செய்வதற்குத் தேவையான மனஸ்தாப வரம் வேண்டுமா?  வேண்டாமா?  நமதாண்டவருக்கு இருக்கிற தாகம், ஆவல் உங்களுக்கு இருக்கிறதா?  அந்த வரத்தைப் பெற ஒரு வழியுண்டு. பாவிகளுக்கும் சேசுநாதருக்கும் இடையே நின்று மனஸ்தாப வரம் பெற உதவிடும் தேவ தாயிடம் பேசுவதே அந்த வழி. அப்படிச் சென்றால் மனஸ்தாப வரம் நிச்சயம் பெறலாம்.


ஐந்தாவது வாக்கியம்

“என் சர்வேசுரா, என் சர்வேசுரா, ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்” (மாற்கு. 15:34)

சேசுநாதர் பூங்காவனத்தில் அவஸ்தைப் பட்டபோது, பூலோகத்தில் அவருக்கு எவ்வித ஆறுதலும், ஆதரவும் இல்லை என உணர்ந்தார். அதே மரண அவஸ்தை இப்போது சிலுவையில் அவரைக் கவ்விக்கொள்கிறது.  தேவ சிநேகத்திற்காக வேதசாட்சியம் அனுபவிக்கிற புனிதர்களுக்குத் தேவ உதவியினால் மிகுந்த தேற்றரவு கிடைக்கும்.  ஆனால் சிலுவையில் தாங்க முடியாத வேதனை யினால் புழுப்போல் துடித்துக்கொண்டிருக்கும் நமதாண்டவருக்குத் தமது பிதாவினாலும் யதொரு ஆறுதலும் வராமல் போயிற்று.  இப்படி அவர் தமது அநாதி பிதாவினாலும் கைவிடப் பட்டதுதான் அவரது மரண அவஸ்தைக்கு முதற் காரணமாக இருந்தது. இதுவே நமதாண்டவரை அதிகமாகப் பாதித்தது. இதுவே அவரது கடைசி மரண அவஸ்தை!  இந்த அவஸ்தையின் அகோரத் தினால் நமது நேச ஆண்டவரின் கடைசித் துளி இரத்தமும் வெளிப்படுகின்றது!  எங்கும் இருள் சூழ்ந்து விட்டது!  எங்கும் அமைதி நிலை. அனைவரும் அச்சத்தோடு அவரைப் பார்த்து நிற்க, ஆண்டவர் உரத்த சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்ன ஐந்தாம் வாக்கியம்: “ஏலோயி, ஏலோயி, லாம்மா சபக்தானி!  அதாவது, என் சர்வேசுரா, என் சர்வேசுரா, ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்?” 

மனிதர்களின் பாவத்தால் பரலோகம் அடைக்கப்பட்டு விட்டதே!  பிதாவின் இரக்கப் பார்வை கூட தடுக்கப்பட்டு விட்டதே என்ற பரிதவிப்பினால் ஆண்டவர் எழுப்பிய ஆறுதலற்ற கதறல் ஒலி அது!

ஆம். நமது மரண அவஸ்தையின்போது நாம் ஆறுதலைக் கண்டடைவதற்காக, அவர் யாதொரு ஆறுதலுமின்றிக் கதறுகிறார் பாருங்கள்! அவஸ்தைப்பூசுதல் என்னும் தேவத்திரவிய அனுமானத்தினால் மரண சமயத்தில் நமது ஆத்துமத்திற்கும் சரீரத்திற்கும் ஆறுதலைத் தரும் பொருட்டு, ஆண்டவர் தம் மரண சமயத்தில் அவஸ்தைப்படுகிறார்!  தாம் ஆறுதல் அற்று, நாம்  ஆறுதல் அடைய! நாம் அனைவரும்நல்ல மரண வரம் அடைவதற்காக நமதாண்டவர் இந்த ஐந்தாம் வாக்கியத்தை உரைத்துள்ளார்.

கிறீஸ்தவர்களே!  நமது துயர சம்பவங் களின் போது, அல்லது வேதசாட்சியம் அனுபவிக் கும்போது சற்றுப் பொறுமையாயிருந்து, தேவ சித்தத்தை ஏற்றுக் கொண்டால் ஏற்படும் தெய்வீக ஆறுதலைக் கண்டடைய நாம் கற்றுக் கொள்ளும்படியாகவே பிதாவாகிய சர்வேசுரன் தமது நேச குமாரனின் துக்கத்தைப் பார்க்க வில்லை!


ஆறாவது வாக்கியம்

“எல்லாம் முடிந்தது” (அரு. 19:30)

பிரதம குருவின் தாய்!  தேவதாய் - குருக்களின் தாயாக இருக்கிறார்கள்.  இத்தாயிடம் சேர்க்கப்பட்டுள்ள பாடுகளின் பேறுபலன்கள் எல்லாம் இனிமேல் மனித ஆன்மாக்களுக்குக் குருத்துவத்தால் வழங்கப்படும்!  இவ்விதமாக சேசு நாதர் சுவாமி ஆயராகவும், போதகராகவும், குருவாகவும் இருந்து இவ்வுலகில் செய்து முடித்த ஆன்மீக அலுவலை உலக முடிவு வரை சகல ஆன்மாக்களுக்கும் கொண்டு செல்லத் தேவையான எல்லாம் முடிந்து விட்டது! எல்லாம் நிறைவேறி விட்டது!  பிதாவினால் நியமிக்கப்பட்ட இத்திருச் சித்தத்தைப் பரிபூரணமாக நிறை வேற்றிய நமதாண்டவர் இனி அமைதியாக உயிர் விடலாம்.  இவ்விதம் குருத்துவம் என்னும் தேவ திரவிய அனுமானமே இரட்சணிய அலுவல்.  இப்போது ஆண்டவர் தம் தாயைப் பார்த்து மெதுவாக, “அம்மா, அம்மா!” என்று தீனக் குரலில் கூப்பிடுகிறார்.  மாதாவுக்கு மட்டும் அது கேட் கிறது. நீங்களும் என்னைக் கைநெகிழ்ந்து விட்டீர் களா? என்பது போல் அது மாதாவுக்கு ஒலிக் கிறது! மாதாவும் சேசுவைப் பார்க்கிறார்கள்.  அப்பார்வையில், இல்லை மகனே, இதோ நான் இங்கே இருக்கிறேன்.  நானும் உம்மோடு பலியாக விரும்புகிறேன் என்னும் பதில் மொழி ஒலிக் கிறது!

ஆண்டவரின் குரல் தொடர்கிறது.  ஆம்.  எனது இரட்சணியப் பணி, அதாவது என் குருத்துவ அலுவல் இதோ நிறைவுபெறுகிறது.  இவ்வலுவலைத் தொடரப் போகும் திருச் சபையின் குருக்களுக்கும் தாயாக நீங்கள் உலகில் இருக்க வேண்டும் எனக் கூறுவது போல நமதாண்டவர், “எல்லாம் முடிந்தது” என்று ஆறாம் வாக்கியம் திருவுளம்பற்றுகிறார்.

இவ்வாக்கியத்திற்குச் சரியான அர்த்தம் என்னவெனில், மனிதர்கள் ஈடேற்றமடைவதற்குத் தேவையான சகல வரப்பிரசாதப் பேறுபலன்களும் தமது திவ்ய இரத்தத்தினால் சம்பாதிக்கப்பட்டு, மாதா என்னும் பொக்கி­ சாலையில் சேமிக்கப் பட்டு விட்டன.  இரட்சணியம் முற்றுப்பெற்று விட்டது.  தீர்க்கதரிசனங்கள் நிறைவேறி விட்டன என்பதாகும்.

“வெள்ளாட்டுக் கிடாய்கள், கன்றுக் குட்டிகள் இவைகளின் இரத்தத்தோடல்ல, தமது சொந்த இரத்தத்தோடே பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசித்து, நித்திய இரட்சணியத்தை சேசுநாதர் நமக்குப் பெறுவித்தார்” (எபி. 9:12).

நித்திய குருவாகிய சேசுநாதர் கல்வாரியில் நிறைவு செய்த இக்குருத்துவ அலுவல், இனி கத்தோலிக்கத் திருச்சபையில் குருத்துவம்   என்னும் தேவதிரவிய அனுமானத்தினால் தொடரும்!


ஏழாவது வாக்கியம்

“பிதாவே! என் ஆத்துமத்தை உமது கரங்களிலே ஒப்புக்கொடுக்கிறேன்” (லூக். 23:43)

கடைசியாக நமதாண்டவர் ஒரு நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்!  இதோ அவர் பிதாவோடு மீண்டும் ஒன்றிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது!  அதாவது, அவரது மரணம்தான் மகிமை யின் வாசல். மனித இரட்சணியத்திற்காக மனிதனாய்ப் பிறந்து, மனிதப் பிறவிகளுக்குரிய சகல வேதனை, துன்பம், நோக்காடுகள், பசி, தாகம், உஷ்ணம், குளிர், கடைசியாக இப்போது மரணம் ஆகிய அனைத்திற்கும் தம்மைக் கையளித்து, தலைசாய்க்கவும் இடமில்லாத ஒரு பரிதாப வாழ்வு வாழ்ந்த பிறகு, இதோ தமது பிதாவோடு மீண்டும் இணைந்து தமது தேவ சுபாவத்தின் மகிமையோடு, மகிமைப்படுத்தப்பட விருக்கும் தமது மனித சரீரத்தின் மகிமையையும்  அவர் மீண்டும் பெற இருக்கிறார்! எனவே பரம பிதாவிடம் தமது ஆத்துமத்தை ஒன்றிக்கும்படி, சேசுநாதர் சுவாமி தெளிவான குரலில், “பிதாவே, என் ஆத்துமத்தை உமது கரங்களிலே ஒப்புக் கொடுக்கிறேன்” என்று ஏழாம் வாக்கியம் திருவுளம்பற்றுகிறார்.

அப்போது நமது ஆண்டவர் கண்களை மூடி, திருச்சிரசு சாய்ந்து கவிழ, சகலருக்கும் சீவன் கொடுக்கிற அவர் உயிர் விடுகிறார்.  மரித்தவர் களைச் சீவிக்கச் செய்கிற ஆண்டவர் மரிக்கிறார்.

இவ்வுலக அநித்திய வாழ்வு முடிந்ததும், மனிதர்கள் நித்திய ஜீவியத்தில் சர்வேசுரனோடு கொள்ள வேண்டிய நித்திய ஒன்றிப்புதான் உண்மை யான வாழ்வு. அந்த நித்திய நிச்சயமான வாழ்வின் வாசலைத்தான் சேசுநாதர் தமது பாடுகளாலும், மரணத்தாலும் திறக்கிறார்.  அந்த உண்மையான பரலோக வாழ்வின் வாசல்தான் நமது நல்ல மரணம்!  இம்மரண வாசல் வழியாக நமது மனுUகம் கடவுளின் தெய்வீகத்தோடு இணைந்து பேரின்பம் அனுபவிப்பதையே மெய்விவாகம் என்னும் தேவதிரவிய அனுமானம் முன் உணர்த்து கிறது. மேலும் கிறீஸ்தவர்களின் விவாகமானது கிறீஸ்துநாதருக்கும், திருச்சபைக்கும் உண்டான ஞான ஐக்கியத்துக்கு அடையாளமாயிருக்கிறது என்றும், அதன் காரணமாக, இது பெரிய தேவ திரவிய அனுமானமாயிருக்கிறது என்றும் அர்ச்சியசிஷ்ட சின்னப்பர் கூறுகிறார் (எபே. 5:25‡33).

உள்ளபடி, கிறீஸ்தவர்களுடைய விவாக மானது கிறீஸ்துநாதருக்கும், திருச்சபைக்கும் உண் டான ஞான ஐக்கியம் மட்டுமல்ல, சேசுநாதருக்கு ஞான சரீர உறுப்புகளையும், திருச்சபைக்கு மக்களையும் அது உற்பத்தி செய்து கொடுக்கிறது.

ஆகவே, இவ்வுலகத் திருமண வாழ்வு முற்றிலும் பரலோக நோக்கு உடையதாக இருக்க வேண்டும்.  அதெப்படியயனில், சரீர பாவ இன்பத்தை நோக்கமாகக் கொண்டிராமல், மோட்ச இராச்சியத்திற்குப் பிரஜைகளை உருவாக்குகிற புனித குடும்பங்களாக, அதாவது, கறைதிரை இவை முதலியவைகள் ஒன்றுமில் லாமல், அர்ச்சிக்கப்பட்டதும், மாசற்றதுமான மகிமை உள்ள சபையாக அது துலங்க வேண்டும் (எபே.5:27).  அப்படி நம் குடும்பங்கள் இருக்கின் றனவா?  ஆண்டவரே, நீரே எங்களை இரட்சித் திருக்கிறீர்!  ஆகவே நீர் உமது ஆத்துமத்தை நித்திய பிதாவின் கரங்களிலே ஒப்புக்கொடுத்ததைப் பார்த்து எங்களை உம்மோடு நித்திய மோட்சப் பேரின்பத்துக்குப் பாத்திரவான்களாக்கிக் கொள்ளும் சுவாமி.

சேசுநாதருடைய திருத்தோள் காயத்தின் ஜெபம்

என் நேசத்துக்குரிய சேசுவே, கடவுளின் மாசற்ற செம்மறியே!  நான் மிகவும் நிர்ப்பாக்கிய பாவி யானாலும், நீர் உமது பாரமான திருச்சிலுவை யைச் சுமந்துகொண்டு போனபோது உமது திருத் தோளை நிஷ்டூரமாய்க் கிழியச் செய்து, உமது திருச் சரீரத்திலுண்டான சகல காயங்களால் நீர் அனுப வித்த துயரத்தைப் பார்க்கிலும் அதிக துயரத்தை வருவித்த உமது திருத்தோளின் காயத்தைச் சாஷ்டாங்கமாய் வணங்கி நமஸ்கரிக்கிறேன்.  மட்டற்ற துயரப்பட்ட சேசுவே, உம்மைப் புகழ்ந்து ஸ்துதித்து, உமது திருத்தோளின் கடூர காயத்திற் காக உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்து கிறேன்.  நீர் அனுபவித்த இந்த மட்டற்ற வேதனை உமது சிலுவையின் பாரச் சுமையால் அதிகரித் ததின் மேல் நான் நொந்தழுது, பாவியாகிய என் பேரில் தேவரீர் இரக்கமாயிருக்கவும்,  என் பாவ அக்கிரமங்களைப் பொறுத்து உமது சிலுவையின் பாதை வழியாய் என்னை மோட்ச பாக்கியம் சேர்ப்பிக்கவும் தயைபுரிய வேணுமென்று உம்மை இரந்து மன்றாடுகிறேன். ஆமென்.

மதுர சேசுவே! உமது திருத்தோளின் கடூர காயத்தைப் பார்த்து உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்கள் பேரில் இரக்கமாயிரும்.

ஆமென்.

ஏழு தவச் சங்கீதம்

(தாவீது என்கிற இராஜா பாடின சங்கீத ஆகமமான நூற்றைம்பது சங்கீதங்களில் ஏழு சங்கீதங்களைத் திருச்சபை தெரிந்தெடுத்துத் தவ செபமாக நியமித்ததினால் பாவத்தினிமித்தம் துக்க மனஸ்தாப முயற்சியாக அவைகளை உரைத்து வேண்டிக் கொள்வது பூர்வீகந் துவக்கி நடக்கின்ற நல்ல முறையாம்.)

1-வது. 6-ம் சங்கீதம்

(வியாதியஸ்தன் வைத்தியனை மன்றாடுகிறது போல, பாவத்தினால் மெலிந்து கலங்கின ஆத்துமமானது சர்வேசுரனைப் பிரார்த்தித்து அவருடைய சந்நிதியிலே அழுது பிரலாபிக்கிறதைக் குறித்தும், ஆண்டவர் அந்தப் பிரலாபத்தைக் கேட்பதைக் குறித்தும் பாடியிருக்கின்றது.)

சுவாமி!  தேவரீர் கோபமாயிருக்கும்போது என்னைத் தண்டியாதேயும் சுவாமி.  உமது கோபாக்கினி வேளையில் என்னை கடிந்து கொள்ளாதேயும்.

நானோ வெகு பலவீனன். என்மேல் இரக்க மாயிரும்.

என் எலும்புகள் நெக்கு விட்டிருப்பதால் எனக்கு ஆரோக்கியம் கொடுத்தருளும்.

என் ஆத்துமமோ வெகுவாய் கலங்கியிருக் கிறது.  ஆனால் சுவாமி! நீர் எந்த மட்டும் எனக்கு உதவி செய்யாமல் இருப்பீர்?

சுவாமி, தேவரீர் எனது முகமாய் திரும்பி என் ஆத்துமத்தை ஈடேற்றி உமது கிருபையைக் குறித்து என்னை இரட்சித்தருளும்.

ஏனென்றால் மரணத் தன்மையில் உம்மை யாரும் நினைப்பாரில்லை.  நரகத்தில் உம்மை ஸ்துதிக்கிறவனார்?

பிரலாபப்பட்டு மிகவும் மெலிந்தேன்.  இராத்திரி தோறும் என் கண்ணீரால் என் கட்டிலைக் கழுவி, என் கண்ணீரால் என் படுக் கையை நனைத்துக் கொண்டு வருகிறேன்.

கோபாக்கினையால் என் கண்கலங்கிச் சிவந்தது.  என் சகல சத்துருக்கள் நடுவில் வெகு நாளாய் அகப்பட்டுத் தளர்ந்தேன்.

ஆண்டவர் என் அழுகைக் குரலைக் கேட் டருளினார்; ஆகையால் அக்கிரமங்களைச் செய்கிற நீங்களெல்லாரும் என்னை விட்டு அகன்று போங்கள்.

ஆண்டவர் என் வேண்டுதலைக் கேட்டு எனது விண்ணப்பத்தைக் கையேற்றுக் கொண்டார்.  என் சத்துருக்களெல்லோரும் வெட்கி மிகவும் கலங்கக் கடவார்கள்.  அதிசீக்கிரத்தில் வெட்கமும் ஈனமும் மூடி பின்னிட்டு போகக் கடவார்கள்.

பிதாவுக்கும் சுதனுக்கும் இஸ்பிரீத்துசாந்து வுக்கும் ஸ்தோத்திரம் உண்டாகக்கடவது.

தமது விலைமதியாத திரு இரத்தத்தால் நம்மை மீட்டு இரட்சித்த சேசுநாதருக்கு அநவரத காலமும் ஸ்தோத்திரமும் ஸ்துதியும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.


2-வது: 31-ம் சங்கீதம்.

(நல்ல மனதோடு பாவத்தை விட்டுச் சர்வேசுரனைச் சேருவதின் பேரிலும் ஆண்டவர் நமது இக்கட்டில் அடைக்கலமுமாய், நல்லோர்க்கு இன்பமுமாய், புல்லோர்க்கு துன்ப ஆக்கினை இடுபவருமாய் இருக்கிறார் என்றதின் பேரிலும் பாடியிருக்கின்றது.)

எவரெவர் பாவம் பொறுக்கப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்.  எவரெவர் பாவம் மறைக்கப்பட்டதோ, அவர்களும் பாக்கிய வான்கள்.

ஆண்டவர் எவனுடைய பாவத்தை அவன் மேல் சாட்டாமலிருக்கிறாரோ, அவன் பாக்கிய வான்.  எவனுடைய மனதில் கபடமில்லையோ, அவனும் பாக்கியவான்.

நான் என் பாவத்தை வெளிப்படுத்தாமல் மவுனமாகி, நாளெல்லாங் கூக்குரலிட்டதினால் என் எலும்புகள் தளர்ந்து போயிற்று.

ஏனென்றால் உமது கைப்பாரம் அல்லும் பகலும் என்மேற் சுமந்ததினால் முள்ளு தைத்திறங்கினாற் போலக் கடின துயரப்பட்டு ஆறாட்டமாய்ப் புரண்டு கிடந்தேன்.

என் பாவத்தை உமக்கு அறிக்கையிட்டேன்.  என் அநீதத்தை உமக்கு மறைத்தேனில்லை.

நான் எனக்கு விரோதமாக என் அக்கிரமத்தை ஆண்டவரிடத்தில் சங்கீர்த்தனம் செய்வே னென்று சொல்லவே, நீர் என் பாவக் கேட்டைப் பரிகரித்தருளினீர்.

இதைப் பற்றித் தர்மாத்துமாக்களெல்லாரும் தக்க சமயம் பார்த்து உம்மை மன்றாடுவார்கள்.  இத்தன்மையாய் வெள்ள நீர் எப்படி புரண்டு வந்தாலும் அவர்கள் மட்டும் ஏறாது.

என்னைச் சூழ்ந்திருக்கிற துன்பங்களில் எனக் கடைக்கலமும் நீரே;  என் சந்தோ­மாகிய கர்த்தாவே, என்னை வளைத்துக்கொண்டிருக் கிறவர்களிடத்தில் நின்றென்னைக் காத்         தருளும்.

நடக்க வேண்டிய வழியை உனக்குக் கற்பித்து, உனக்கு உணர்வைத் தந்து, உன்மேல் நமது பார்வையை நிறுத்துவோம்.

ஞானமில்லாத குதிரை, கோவேறு கழுதை களைப்போல் இராதேயுங்கள்.  உங்களருகிற் சேராத அந்த மிருகங்களின் வாயை வாரினாலுங் கடிவாளங்களாலும் இறுக்கிக் கட்டுங்கள்.

பொல்லாதவர்களுக்கு அநேகம் ஆக்கினை கள் உண்டு.  ஆனால் ஆண்டவர் பேரில் பக்தி நம்பிக்கையாய் இருக்கிறவர்களை தேவ கிருபை சூழ்ந்திருக்கும்.

நீதிமான்களே, ஆண்டவரிடத்தில் அக மகிழ்ந்து சந்தோஷப்படுங்கள். செவ்விய இருதயத்தோரே, நீங்கள் எல்லாரும் அவரிடத்தில் உங்கள் மேன்மையைப் பாராட்டுங்கள்.

பிதாவுக்கும் சுதனுக்கும் இஸ்பிரீத்துசாந்துவுக்கும் ஸ்தோத்திரம் உண்டாகக்கடவது.

தமது விலைமதியாத திரு இரத்தத்தால் நம்மை மீட்டு இரட்சித்த சேசுநாதருக்கு அநவரத காலமும் ஸ்தோத்திரமும் ஸ்துதியும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.


3-வது.  37-ம் சங்கீதம்.

(பாவத்தால் ஆத்துமத்தில் பட்ட புண்களைத் தெளிவிக்கிறதின்மேலும், நல்லோர் துன்பப்படுகையில் சிநேகிதராலும் கைவிடப்படுகிறதின் மேலும், தபசுக்குட்பட்ட ஆத்துமமானது சர்வேசுரனுடைய நீதிக்கு உத்தரிப்பதற்காக வழிபாடாக இலெளகீகத் துன்பங்களைக் கையேற்றுக் கொண்டு அநுபவிக்க எப்பொழுதும் ஆயத்தமாய் இருக்கிறதின் மேலும் பாடியிருக்கின்றது.)

சுவாமி, தேவரீர் கோபமாயிருக்கும்போது என்னைத் தண்டியாதேயும்.  உமது கோபாக்கினி வேளையில் என்னைக் கடிந்து கொள்ளாதேயும்.

ஏனெனில் நீர் விட்ட அம்புகள் என்னை ஊடுருவிப் பாய்ந்தன, உமது கையின் பாரம் என்மேல் சுமந்தது.

உமது கோபத்தின் முகத்தே எனது மாம்சத்தில் சுகமற்றுப் போயிற்று, என் பாவங்களின் முகத்தே என் எலும்புகள் உருவற்றுக் கலகலத்துப் போயின.

ஏனென்றால் என் அக்கிரமங்கள் என் தலைக்கு மிஞ்சி என்னை மூழ்கடித்தும் வெகு பாரச் சுமையாக என்னை இருத்தியும் போட்டது; என் மதியீனத்தினால் என்னுடைய காயங்கள் புழுத்து, நாறிப் போயிற்று.

நான் மிகவுந் தரித்திரனாய் உடல் கூனிப் போய் நாள்முழுதும் துக்கத்தால் முகம் வாடித் திரிகிறேன். ஏனெனில் என் இடுப்பானது அக்கினிப் பிரவேசமாய் பற்றியயரிகிறது.  என் சரீரத்தில் நல்ல சதை எங்குமில்லை.

நான் வெகு வேதனைக்கும் ஈனத்துக்கும் உள்ளானேன்.  என் இருதயத்தின் அங்கலாய்ப் பினால் புலம்புகிறேன்.  என் ஆண்டவரே, என் ஆசைகளெல்லாம் உமக்குத் தெரிந்திருக்கிறது.  என் பிரலாபம் உமக்கு மறைந்திருக்கவில்லை.

என் இருதயம் கலங்கி என் சத்துவம் என்னைக் கைவிடுகிறது. என் கண்ணொளி மங்கிப் போகி றது.  என்னைச் சேர்ந்தார் சிநேகிதரும் என்மேல் எதிர்த்து நெருக்கி விரோதமாக நின்றார்கள்.

என்னருகில் இருந்தவர்கள் அகலப் போனார்கள். என் உயிர் பறிக்க எண்ணினவர்கள் எனக்கு வெகு கொடுமை செய்தார்கள்.

எனக்கு பொல்லாங்கு தேடினவர்கள் என் னோடு வீண்வார்த்தை பேசி, நாள் முழுதும் என்னை மோசம் போக்கும் விதத்தை யோசித் தார்கள்.

நானோவென்றால், காதுகேளாத செவிடனைப் போலவும், வாய் திறவாத ஊமையைப் போலவும் இருந்தேன். நான் கேட்கச் செவியில்லாதவனும், மறுத்துச் சொல்ல நாவில்லாதவனும் ஆனேன்.

சுவாமி, உம்மை நம்பியிருக்கிறேன்.  என் சர்வேசுரா சுவாமி, என் மன்றாட்டைக் கேட் டருளும்.

என் கால் தடுமாறும்போது என் மேல் இடும்பு பேசின என் சத்துருக்கள் இன்னும் என்னைக் கண்டு மனமகிழாதபடி உம்மைக் கேட்டுக் கொண்டேன்.  ஆகிலும் நான் தண்டனைப்பட ஆயத்தமாயிருக்கிறேன். என் சஞ்சலம் எந்நேரமும் என் முன்பாக நிற்கிறது.

ஏனெனில் என் அக்கிரமங்களைச் சொல்லிக் காட்டுவேன். என் பாவங்களை நினைத்து சிந்தைப் படுவேன்.  ஆனால் என் சத்துருக்கள் உயிரோ டிருந்து என்னிலும் பலமானார்கள்.

நியாயமில்லாதென்னைப் பகைக்கிறவர்கள் பலுகிப்போனார்கள்.  நான் நன்மையைப் பின் சென்றதால் நன்மைக்குப் பதில் தின்மை செய்கிற வர்கள் என்னைத் தூற்றுகிறார்கள்.

என் சர்வேசுரா சுவாமி, என்னைக் கைவிடா தேயும்; என்னை விட்டு அகலாதேயும்.  எனக்கு இரட்சணியமாயிருக்கிற சர்வேசுரா சுவாமி, தீவிரத்தில் வந்து எனக்கு உதவி செய்தருளும்.

பிதாவுக்கும் சுதனுக்கும் இஸ்பிரீத்துசாந்து வுக்கும் ஸ்தோத்திரம் உண்டாகக்கடவது.

தமது விலைமதியாத திரு இரத்தத்தால் நம்மை மீட்டு இரட்சித்த சேசுநாதருக்கு அநவரத காலமும் ஸ்தோத்திரமும் ஸ்துதியும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.


4-வது. 50-ம் சங்கீதம்.

(தாவீது இராஜா தமது கண்முன்பாக எப்பொழுதும் இருக்கிற தமது பாவங்களைக் குறித்துச் சர்வேசுரனை நோக்கிப் பிரலாபித்துப் பாவத்தில் நின்று அதிகமதிகமாய்த் தம்மைப் பரிசுத்தமாக்கித் தமக்கு வரப்பிரசாதங்களையும் புதிதான இருதயத்தையும் கொடுத்தருள வேணுமென்று சர்வேசுரனை மன்றாடினதும், தாழ்ச்சியும் மனஸ்தாபமுமுள்ள இருதயமே சர்வேசுரனுக்குப் பிரிய பலி என்கிறதுமாகப் பாடியிருக்கிறது.)

சர்வேசுரா சுவாமி, உமது தயையின் விசாலத்திற்குச் சரியானபடி என்மேல் இரக்கமாயிரும்.  உமது இரக்கப் பெருக்கத்துக்கு ஒத்தபடி என் அக்கிரமங்களை நிர்மூலமாக்கும்.

இன்னும் அதிகமாய் என் குற்றங்களில் நின்று என்னைக் கழுவி, என் பாவங்களில் நின்று என்னை விடுவித்துப் பரிசுத்தப்படுத்தும்.

நானோ எனது அக்கிரமங்களை அறிந்திருக் கிறேன்.  என் பாவம் எந்நேரமும் என் கண்முன்னே நிற்கிறது.

உமக்கு மாத்திரமே குற்றஞ்செய்தேன்; உம் முடைய சந்நிதிக்கு முன்னே தீங்கு புரிந்தேன்; நீர் உமது வாக்குத்தத்தத்தில் பிரமாணிக்கராய் இருக் கிறீரென்றும், உமது தீர்வையிலே நீதிபரராயிருக் கிறீரென்றும் விளங்கும்படி என் குற்றங்களைப் பொறுத்தருளும்.

நானோவென்றால், அக்கிரமத்தில் சென்மித்தேன்; என் தாயார் பாவத்தில் என்னைக் கர்ப்பந் தரித்தாள்.  

நீர் சத்தியத்தை நேசித்து உமது பரம ஞானத்தின் மறைவுள்ள இரகசியங்களை எனக்கு விளங்கச் செய்தருளினீர்.  

நீர் ஈசோப்பென்கிற புல்லினால் என்மேல் தெளித்தருளுவீர்; நானும் சுத்தமாவேன். நீர் என்னைக் கழுவுவீர்; வெண் பனிக்கட்டியிலுந் தூய்மையாவேன்.

என் செவிகளுக்கு இன்பத்தையும் சந்தோஷத் தையுந் தந்தருளுவீர். தளர்ந்துபோன என் எலும்புகள் திடன்கொண்டு எழுந்து அக்களிக்கும்.

என் பாவங்களைப் பாராமல் உமது முகத்தைத் திருப்பி என் அக்கிரமங்களையயல்லாம் போக்கியருளும்.

சர்வேசுரா, என்னிடத்தில் சுத்தமான இருத யத்தை உண்டாக்கி என் உள்ளத்தில் நீதி முறை யுள்ள புத்தியைப் புதுப்பித்தருளும்.

உமது சந்நிதியில் நின்று என்னைத் தள்ளாதே யும். உம்முடைய இஸ்பிரீத்துசாந்துவை என்னிடத் தில் நின்று மறுபடி வாங்கிக் கொள்ளாதேயும்.

உமது இரட்சணியத்தின் ஆனந்தத்தை மறுபடி எனக்குத் தந்தருளும்; உமது மேலான ஞானத்தால் என்னை உறுதிப்படுத்தும். அநீத ருக்கு உமது மார்க்கத்தைப் போதிப்பேன்.  துஷ்டர் உம்மிடத்தில் திரும்புவார்கள்.

சர்வேசுரா, என் இரட்சகரான சர்வேசுரா, இரத்தப் பழிகளில் நின்று என்னை மீட்டு விடுதலை யாக்கியருளும்; அப்போது என் நாவானது உமது நீதியை புகழ்ந்தேத்தும்.

ஆண்டவரே! என் இதழ்களைத் திறந்தருளும்.  என் வாய் உம்முடைய தோத்திரங்களை எடுத்துக் கூறும்.

ஆண்டவரே! உமக்குப் பலி வேண்டியிருந்தால் மெய்யாகவே பலி கொடுப்பேன்; ஆனால் சர்வாங்க தகன பலிகள் உமக்குப் பிரியமாயிருக்கிறதில்லை.

துக்கப்படுகிற உள்ளமே ஆண்டவருக்குப் பிரியமான பலி.  மனஸ்தாபத்தினாலே நொறுங் கித் தாழ்ச்சியுள்ள இருதயத்தைப் புறக்கணிக்க மாட்டீரே சுவாமி.

ஆண்டவரே!  உமது நன்மைத்தன்மையில் சீயோன் என்ற பர்வதத்தின் மேல் கிருபையா யிரும்; ஜெருசலேமென்கிற பட்டணத்தின் மதில்கள் எடுக்கப்பட தயை செய்தருளும்.

அப்பொழுது நீதியின் பலியும், சர்வாங்க தகனப் பலியும் காணிக்கைகளும் உமக்கு ஏற்கை யாகும். அப்பொழுதே உமது பீடத்தின் மேல் நவ சுகாரியப் பலிகளைக் கொடுப்பார்கள்.

பிதாவுக்கும் சுதனுக்கும் இஸ்பிரீத்துசாந்து வுக்கும் ஸ்தோத்திரம் உண்டாகக்கடவது.

தமது விலைமதியாத திரு இரத்தத்தால் நம்மை மீட்டு இரட்சித்த சேசுநாதருக்கு அநவரத காலமும் ஸ்தோத்திரமும் ஸ்துதியும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.


5-வது.  101-ம் சங்கீதம்.

(இந்த சங்கீதம் தீர்க்கதரிசியாகிய தாவீது இராஜாவைப்போல் அவரவர் தங்கள் தங்கள் பாவத்தின்மேல் மனஸ்தாபப்பட்டு பாவத்தின் ஆக்கினையாகிய துன்பங்களில் சர்வேசுரனை மன்றாடுகிறதற்கு மகா உதவியுமாய்   திருச்சபைக்கு மகா உச்சிதமான செபமுமாய் பாடியிருக்கின்றது.)

ஆண்டவரே! என் மன்றாட்டைக் கேட்டருளும்.  என் அபயசத்தம் உமது சந்நிதி மட்டும் வரக்கடவது.

எனக்கு உமது திருமுகத்தைத் திருப்பிக்கொள்ளாதேயும்; நான் துன்பப்படும் எந்தெந்த நாளிலும் என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்துக் கொடுத்தருளும்.

நான் எந்தெந்த நாளில் உம்மை மன்றாடி னாலும் என் மன்றாட்டைத் தீவிரமாய்க் கேட் டருளும். ஏனெனில் என்னுடைய நாட்கள் புகை போல் மறைந்து போயிற்று.

என் எலும்புகள் அடுப்பின் விறகைப் போல துவண்டு போயிற்று.  என் ஆகாரத்தைப் புசிக்க மறந்துவிட்டதினால் என் இருதயங் காய்ந்து வெயி லில் அடிபட்ட புல்லைப் போல் உலர்ந்தேன்.

என் பிரலாபப் பெருமூச்சின் பேரொலியால் எனது தோலோடு என் அஸ்திகள் ஒட்டிப் போயிற்று.

வனாந்தரத்தில் தனித்திருக்கும் பெலிக்கான் போலவும் தனி வனத்தில் தங்கின ஆந்தை போலவுமானேன். கண்ணுறக்கமற்றேன்.  தனிப் பட்டுக் கூரைமேல் அமர்ந்த குருவிபோல் ஆனேன்.

என் சத்துருக்கள் என்னை நாள் முழுவதும் தூ­ணம் சொல்கிறார்கள்.  என்னைப் புகழ்ந் தவர்கள் எனக்கு எதிராய்ச் சபதம் கூறுகிறார்கள்.

அதேனென்றால், சாப்பாடாகச் சாம்பலை அருந்தி தண்ணீரோடு என் கண்ணீரைப் பானம் பண்ணினேன்.  உமது சினத்தையும் கோபாக் கினையையும் பற்றி இவ்விதம் செய்தேன்.

ஏனென்றால், நீர் என்னை உயர்த்திப் பின்பு கீழே விழ அடித்து நொறுக்கினீர்.  என்னுடைய நாட்கள் நிழலைப் போல் சாய்ந்து போயிற்று;  நானோ புல்லைப்போல் உலர்ந்தேன்.

ஆனால் ஆண்டவரே!  நீர் சதாகாலங்களும் இருக்கின்றவர்; உமது திருநாமத்தின் ஸ்மரண மோவெனில் அநவரத காலமும் நிலைத்து நிற்கும்.

சீயோன் என்ற மாநகருக்குக் கிருபை புரியும் காலம் வந்து நேரிட்டமையால் தேவரீர் எழுந் தருளி அதன்மேல் இரக்கம் செய்தருளும்.

அதேனென்றால் உம்முடைய அடியார் அந்த நகரத்தின் தகர்ந்த கற்களின்மேல் பிரியமாகி, அதன் மண்ணின்மேலும் இரக்கமானார்கள்.

ஆண்டவரே!  சகல சனங்களும் உமது திரு நாமத்துக்கும், சமஸ்த மண்டலேஸ்வரரும் உமது அர்ச்சிய மகிமைக்கும் அஞ்சுவார்கள்.

அதேதெனில், சீயோன் என்ற நகரத்தை ஆண்டவர் கட்டுவித்த தமது மகிமைப் பிரதாபத் திற் காணப்படுவார்.  அவர் தாழ்ச்சி உள்ளவர் களுடைய வேண்டுதலுக்குத் திரும்பிச் செவி தந்ததல்லாமல் அவர்களுடைய மன்றாட்டைப் புறக்கணித்ததில்லை.

இனிவரும் சந்ததிக்கு இவைகள் எழுதப் பட்டிருக்கும்;  இனிமேல் உண்டாகும் ஜனம் ஆண்டவரை ஸ்துதிக்கும்.

ஏனென்றால், ஆண்டவர் தமது அர்ச்சிய சிஷ்டதனத்தின் உன்னதத்திலிருந்து திருக்கண் ணோக்கினார். விலங்கில் கிடக்கிறவர்களுடைய பிரலாபத்தைக் கேட்கவும் கொலையுண்டு போனவர்களுடைய பிள்ளைகளைக் கட்டவிழ்த்து விடுவிக்கவுமே.

இப்படி விடுதலையான ஜனங்களும் இராஜாக்களும் ஆண்டவருக்குத் திருப்பணி புரியக்கூடும்பொழுது சீயோன் பட்டணத்தில் ஆண்டவருடைய திருநாமத்தைக் கொண்டாடி ஜெருசலேம் நகரில் அவருடைய திருப்புகழைப் பாடத்தக்கதாகவும் பரலோகத்தில் நின்று பூலோகத்தைப் பார்த்தருளினார்.

அடியான் தன் சத்துவத்தின் மத்தியில் அவருக்குச் சொன்னதாவது: என் ஆயுசினுடைய சொற்பத்தை எனக்குக் காட்டியருளும்.  என் ஆயுள் நடுவில் என்னை அழைத்துக் கொள்ளா தேயும். உம்முடைய வரு­ங்கள் தலைமுறை தலைமுறையாக நிற்கின்றது.

சுவாமி! தேவரீர் தாமே ஆதியிலே பூமண்டலத்துக்கு அஸ்திவாரமிட்டீர்.  வான மண்டலங்கள் உமது கைத்தொழிலாமே.

இவைகள் சிதைந்துபோம்; நீரோ நிரந்தரம் இருக்கிறவராமே.

உடுத்திய உடைபோல இவையயல்லாம் பழசாய்ப்போம்;  ஆடைமாற்றுகிறது போலத் தேவரீர் அவைகளை மாற்றுவீர்; அவைகளும் மாறுபட்டுப் போம்.

நீரோவெனில் எக்காலமும் ஒரே சீராயிருக் கிறவர். உம்முடைய வரு­ங்கள் ஒழிவதில்லை.

உம்முடைய அடியார்களின் பிள்ளைகள் உம்மோடு வாசஞ்செய்வார்கள். அவர்களுடைய சந்ததியும் என்றென்றும் நன்னெறியில் நடத்தப் படுவதாமே.

பிதாவுக்கும் சுதனுக்கும் இஸ்பிரீத்துசாந்து வுக்கும் ஸ்தோத்திரம் உண்டாகக்கடவது.

தமது விலைமதியாத திரு இரத்தத்தால் நம்மை மீட்டு இரட்சித்த சேசுநாதருக்கு அநவரத காலமும் ஸ்தோத்திரமும் ஸ்துதியும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.


6-வது. 129-ம் சங்கீதம்.

(பாவப் பொறுத்தல் அடைய சர்வேசுரனை மன்றாட உருக்கத்தின் மாதிரிகையாகப் பாடி யிருக்கின்றது.)

சுவாமி பாதாளத்தில் நின்று உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; சுவாமி!  என் சத்தத்தைக் கேட்டருளும்.  எனது விண்ணப்பத்தின் பேரொலியை உமது செவிதந்து கேட்டருளும்.  ஆண்டவரே! நீர் எங்கள் பாவங்களைப் பாராட்டுவீராகில் உமக்கு முன்பாக நிருவாகம் செய்கிறவனார்?

ஆனால் தேவரீரிடத்தில் தயாளமான மன்னிப் பிருக்கிறபடியாலும், உமது வேத முறைமையைப் பற்றியும் சுவாமி உம்மை நம்பிக் காத்திருக்கிறேன்.

என் ஆத்துமம் ஆண்டவருடைய திருவசனத்தின்மேல் ஊன்றிக் காத்திருக்கின்றது.  என் ஆத்துமம் ஆண்டவரிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறது.

உதய சாமக்காவல் நேரந்துவக்கி இரவு பரியந்தம் இஸ்ராயேல் ஜனம் ஆண்டவரை நம்பிக் காத்திருக்கக்கடவது.  ஏனென்றால், சுவாமி தயையுள்ளவர்; அவரிடத்தில் இரட்சணியம் ஏராளமாய் இருக்கின்றது.

அவரே இஸ்ராயேல் ஜனத்தை அதன் சகல பாவங்களில் நின்று இரட்சித்தருளுவார்.

பிதாவுக்கும் சுதனுக்கும் இஸ்பிரீத்துசாந்து வுக்கும் ஸ்தோத்திரம் உண்டாகக்கடவது.

தமது விலைமதியாத திரு இரத்தத்தால் நம்மை மீட்டு இரட்சித்த சேசுநாதருக்கு அநவரத காலமும் ஸ்தோத்திரமும் ஸ்துதியும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.


7-வது. 142-ம் சங்கீதம்.

(தீர்க்கதரிசியாகிய தாவீது இராஜா, தாம் படுகிற உபத்திரவங்களில் தேவ கிருபையை இரந்து கேட்டு சர்வேசுரன் தமது நீதியின் உக்கிரத்துக்கு ஒத்த வண்ணம் நடப்பியாமல் தயையோடு நடப்பித்தருள வேணுமென்று சர்வேசுரனை மன்றாடிப் பாடியிருக்கின்றார்.)

சுவாமி! என் வேண்டுதலைக் கேட்டருளும். உமது சத்தியத்தின்படி என் விண்ணப்பத்திற்குக் காது கொடுத்தருளும்.

உமது நீதியின்படி என் மன்றாட்டை ஏற்றுக் கொள்ளும்.  குற்றம் பாராட்டி உம்முடைய அடியானைத் தீர்வையிடப் பிரவேசியாதேயும்.

ஏனெனில் சீவனுள்ளவரில் எவனும் உமக்கு முன்பாக பரிசுத்தனாகத் தோன்ற மாட்டான்.

என் சத்துராதி என் ஆத்துமத்தை உபத்திரவப் படுத்தி என்னுயிரை வதைத்துப் பூமியில் சிறுமைப்படுத்தினான்.

முற்காலத்தில் மாண்டு போனவர்களைப் போல என் சத்துரு என்னை இருட்டில் குடிகொண் டிருக்கச் செய்தான்.  என்னைக் குறித்து என் புத்தி அமைந்து துக்கத்தில் அமிழ்ந்தி, என் இருதயம் கலங்கிப் போயிற்று.

நான் பூர்வகாலங்களை நினைத்து உமது செய லெல்லாம் யோசித்து எண்ணினேன்; உம்முடைய திருக்கரங்களின் செய்கைகளின் மேல் தியானம் செய்தேன். உம்மை நோக்கி என் கைகளை விரித்தேன்.

நீரில்லா நிலம் போல் என் ஆத்துமம் வறண்டு உம்மை நோக்கித் தாவுகிறது.  ஆண்டவரே!  என் ஆவி சோர்ந்து போகின்றது.  என் வேண்டுதலைத் தீவிரமாய்க் கேட்டருளும்.

உமது திருமுகத்தைத் திருப்பிக் கொள்ளா தேயும்; திருப்பிக் கொள்வீராகில் குழியிலிறங்கிப் போகிறவர்களுக்குச் சமானமாவேன்.

நான் உம்மை நம்பியிருக்கின்றமையால் அதிகாலமே நான் உமது தயை மொழியைக் கேட்கச் செய்தருளும்.

என் ஆத்துமம் உம்மை நோக்கி எழுந்தபடி யால், நான் நடக்க வேண்டிய வழியை எனக்குப் படிப்பித்தருளும்.

நான் உம்மைத் தஞ்சமென்று ஓடி வந்த தினால், சத்துருக்களிடத்தில் நின்று என்னைத் தற்காத்தருளும்.  தேவரீர் என் தேவனாகையால், நான் உமது சித்தத்தின்படியே செல்லக் கற்பித் தருளும்.

உம்முடைய நல்ல இஸ்பிரீத்துவானவர் என்னை நன்மார்க்கத்திலே நடப்பிப்பாராக;  சுவாமி, உமது திருநாமத்தின் கீர்த்தியைக் குறித்து உமது நீதிக்கு ஒத்தபடி என்னைச் சீவிக்கச் செய்வீராக.

உபத்திரவத்திலே நின்று என் ஆத்துமத்தை விடுதலையாக்கி உமது தயவினால் என் சத்துருக் களைச் சங்கரித்துப் போடுவீராக.  நான் உம் முடைய அடியானாதலால் என் ஆத்துமத்தை உபாதிக்கிறவர்கள் எல்லோரையும் நிர்மூலஞ் செய்தருளும்.

சுவாமி!  எங்கள் பாவங்களையும் எங்களை ஈன்றவர்களுடைய பாவங்களையும் நினையா  தேயும்.  எங்கள் பாவங்களுக்காகப் பழிவாங்கத் திருவுளமாகாதேயும்.

பிதாவுக்கும் சுதனுக்கும் இஸ்பிரீத்துசாந்து வுக்கும் ஸ்தோத்திரம் உண்டாகக்கடவது.

தமது விலைமதியாத திரு இரத்தத்தால் நம்மை மீட்டு இரட்சித்த சேசுநாதருக்கு அநவரத காலமும் ஸ்தோத்திரமும் ஸ்துதியும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.

ஆமென்.

சேசுநாதருக்குச் செய்யப்பட்ட பதினைந்து இரகசிய வாதைகள்

(அர்ச். கிளாரம்மாள் சபையைச் சேர்ந்த      முத். மரிய மதலேன் என்ற கன்னிகைக்கு கீழ்வரும் வெளிப்படுத்தல் அருளப்பட்டது. இவள் உரோமையில் வாழ்ந்தவள். சேசு மரிப்பதற்கு முந்திய இரவில் அவர் பூங்கா வனத்தில் பிடிபட்டபின் வெளியில் தெரியாமல் அவருக்குச் செய்யப்பட்ட இரகசிய உபாதை களைப் பற்றி தனக்குக் கொஞ்சம் வெளிப்படுத் தும்படி முத். மரிய மதலேன் நமதாண்டவரிடம் அன்போடு கேட்டு வந்தாள்.  அவளுடைய விருப் பத்தை ஆண்டவர் ஏற்றுக்கொண்டு பின்வருமாறு அவளிடம் கூறினார்.)

உலகத்திலுள்ள சகல மனிதர்களையும்விட அதிக ஈனமானவன் நான்தான் என்று யூதர்கள் கருதினார்கள்.  ஆகவே அவர்கள்:

1. என் கால்களை ஒரு கயிற்றால் கட்டி ஒரு கற்படிக் கட்டுகளின் படிகள் வழியாக என்னைக் கீழே இழுத்துக் கொண்டுபோய் அசுத்தமான குமட்டுகிற நிலவறையில் தள்ளினார்கள்.

2. என் வஸ்திரங்களைக் கழற்றி விட்டு கணுக்கள் உள்ள இரும்பால் என் தேகத்தை தேள் கொட்டுவது போல் கொட்டினார்கள்.

3. என்னை மண்ணில் கிடத்தி என் தேகத்தை சுற்றி ஒரு கயிற்றைப் போட்டு அதன் இரு ஓரங்களையும் பிடித்து தரையில் என்னை இழுத்துக் கொண்டு போனார்கள்.

4. உருவக்கூடிய முடிச்சுப் போட்டு என்னை ஒரு மரக்கட்டையில் கட்டித் தொங்க விட்டார்கள்.  முடிச்சு உருவி அவிழ்ந்த போது நான் கீழே விழுந்தேன். இந்த வாதையின் கொடுமை தாங்காமல் நான் இரத்தக் கண்ணீர் வடித்தேன்.

5.  என்னை ஒரு கம்பத்தில் கட்டிவைத்து பற்பல ஆயுதங்களைக் கொண்டு என் தேகத்தில் குத்தினார்கள்.

6. கற்களைக் கொண்டு என்னை அடித் தார்கள்.  தணலைக் கொண்டும் எரிபந்தங்களைக் கொண்டும் என்னைச் சுட்டார்கள்.

7. செருப்புத் தைக்கிற ஊசியால் என்னைக் குத்தித் துளையிட்டார்கள். கூரிய ஈட்டிகள் என் தோலையும் சதையையும் கீறி இரத்த நரம்புகளைக் கிழித்தன.

8. அவர்கள் என்னை ஒரு கம்பத்தில் கட்டி காய்ச்சப்பட்ட உலோகத் தகட்டில் வெறுங் காலாக நிற்க வைத்தார்கள்.

9. ஒரு இரும்புத் தொப்பியை என் தலை மேல் வைத்து, மிக மோசமான அசுத்தம் படிந்த கந்தைகளால் என் கண்களை கட்டினார்கள்.

10. கூர்மையான ஆணிகளால் நிரம்பிய ஒரு நாற்காலியில் என்னை உட்கார வைத்தார்கள். இதனால் ஆழமான காயங்கள் ஏற்பட்டன.

11. என் உடலின் இக்காயங்களில் காய்ச்சிய ஈயத்தையும், குங்குலியத்தையும் ஊற்றினார்கள். இந்த வாதனைக்குப் பின் மறுபடியும் என்னை அந்த ஆணி நாற்காலியில் உட்காரச் செய்ததால் ஆணிகள் மேலும் ஆழமாக சதைக்குள் சென்றன.

12. வெட்கமும் வேதனையும் எனக்கு உண்டாகும்படியாக என் தாடி முடிகளைப் பிடுங்கிய துவாரங்களில் ஊசிகளை ஏற்றினார்கள்.  பின் என்னைப் புறங்கை கட்டி அந்த நிலவறைச் சிறையிலிருந்து என்னை அடித்துக் குத்திக் கொண்டே வெளியே நடத்திக் கொண்டு போனார்கள்.

13. அவர்கள் என்னை ஒரு சிலுவைமேல் கிடத்தி அதிலே எவ்வளவு இறுக்கமாக என்னைக் கட்டினார்களென்றால் என்னால் மூச்சுவிட முடியவில்லை.

14. நான் அப்படித் தரையில் கிடக்கும் போது என் தலையில் மிதித்தார்கள். உடல் மேல் ஏறி நடந்தார்கள்.  இதனால் என் மார்பு காயப்பட்டது.  பின் ஒரு முள்ளை எடுத்து அதைக் கொண்டு என் நாவில் குத்தி அதனுள் செலுத் தினார்கள்.

15. அவர்கள் என்னைப் பற்றி மிக ஆபாசமான வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டே என் வாய்க்குள் மிக அசிங்கமான மனிதக் கழிவுப் பொருட்களை ஊற்றினார்கள்.

இதன்பின் சேசு அந்த சகோதரியைப் பார்த்துக் கூறுவார்:

என் மகளே! இப்பதினைந்து கொடுமை களையும் மதித்து வணங்கும்படியாக இவைகளை நீ எல்லாருக்கும் அறிவி.  யார் யார் ஒவ்வொரு நாளைக்கு இவற்றில் ஒரு வாதனையை அன்போடு எனக்கு ஒப்புக் கொடுத்து பின்வரும் ஜெபத்தைச் சொல்வார்களோ, அவர்களை நடுத்தீர்வை நாளில் நித்திய மகிமையால் சன்மானிப்பேன் என்றார்.

ஜெபம்

என் ஆண்டவரே என் தேவனே! தேவரீர் உம்முடைய விலையேறப்பெற்ற திரு இரத்தத்தைச் சிந்திய இப்பதினைந்து இரகசிய வாதைகளை மகிமைப்படுத்துவது என்னுடைய மாறா விருப்பமாக இருக்கிறது. சமுத்திரக் கரைகளில் எத்தனை மணல் பரல்கள் இருக்கின்றனவோ, வயல்களில் எத்தனை தானிய மணிகள் உள்ளனவோ, பூமியின் மேடுகளில் எத்தனை புல் இலைகள் காணப் படுகின்றனவோ, சோலைகளில் எத்தனை கனிகள் உள்ளனவோ, மரங்களில் எத்தனை இலைகள் உள்ளனவோ, தோட்டங்களில் எத்தனை மலர்கள் பூக்கின்றனவோ, வானத்தில் எத்தனை நட்சத்திரங்களோ, மோட்சத்தில் எத்தனை சம்மனசுக்களோ, பூமியில் எத்தனை சிருஷ்டிகளோ அத்தனை ஆயிரம் தடவைகள் தேவரீர் மகிமை பெறுவீராக!  புகழப்படுவீராக!  உயர்வு பெறுவீராக!

ஓ! மகா அன்புக்குப் பாத்திரமான ஆண்டவராகிய சேசுவே! உம்முடைய மகா பரிசுத்த இருதயமும் உம்முடைய விலையேறப் பெற்ற திரு இரத்தமும், மனுக்குலத்திற்காக நீர் கொடுத்த தெய்வீகப் பலியும், மிகப் பரிசுத்தமான பீடத்தின் தேவதிரவிய அனுமானமும், மிகவும் பரிசுத்த கன்னிகையான மரியாயுடையவும், நவவிலாச சம்மனசுக்களுடையவும், ஆசீர்வதிக்கப்பட்ட புனிதர்களின் வரிசைகளுடையவும், என்னுடையவும், சகலருடையவும் மகிமையையும் புகழையும் உயர்வையும் பெறுவீராக! இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் நித்திய காலமும் பெறுவீராக!  ஆமென்.

(இப்பக்தி முயற்சி 2-ம் கிளமென்ட் என்னும் பாப்பானவரால் (1730-1740) அங்கீகரிக்கப் பட்டது.)

சேசுநாதருடைய திரு இரத்தத்தின் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

நித்திய பிதாவின் ஏக சுதனாகிய கிறீஸ்துவின் இரத்தமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மனிதவதாரம் எடுத்த தேவ வார்த்தையான கிறீஸ்துவின் இரத்தமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

புதிய நித்திய ஏற்பாட்டினுடைய கிறீஸ்துவின் இரத்தமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இரத்த வேர்வை வேர்த்தபோது தரையில் வழிந்தோடிய கிறீஸ்துவின் இரத்தமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

கற்றூணில் கசையால் அடிபட்டபோது சொரிந்தோடிய கிறீஸ்துவின் இரத்தமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

முள்முடி சூட்டப்பட்டபோது வெளியான கிறீஸ்துவின் இரத்தமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சிலுவையில் சிந்தப்பட்ட கிறீஸ்துவின் இரத்தமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

எங்களுடைய இரட்சணியத்தின் கிரயமான கிறீஸ்துவின் இரத்தமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

பாவ மன்னிப்புக்கு அத்தியாவசியமான கிறீஸ்துவின் இரத்தமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

திவ்விய நற்கருணையில் பானமாயிருப்பதும் ஆத்துமங்களைக் கழுவுகிறதுமான கிறீஸ்துவின் இரத்தமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இரக்கத்தின் நீரோட்டமான கிறீஸ்துவின் இரத்தமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

பசாசுக்களை வெல்லும் கிறீஸ்துவின் இரத்தமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

வேதசாட்சிகளின் திடமான கிறீஸ்துவின் இரத்தமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

ஸ்துதியர்களுடைய பலமான கிறீஸ்துவின் இரத்தமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

கன்னியர்களைப் பிறப்பிக்கிற கிறீஸ்துவின் இரத்தமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

ஆபத்தில் சிக்கித் தவிப்போர்க்கு தெம்பான கிறீஸ்துவின் இரத்தமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உழைப்பை எளிதாக்குகிற கிறீஸ்துவின் இரத்தமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அழுகையில் ஆறுதலளிக்கும் கிறீஸ்துவின் இரத்தமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மனஸ்தாபப்படுவோரின் நம்பிக்கையான கிறீஸ்துவின் இரத்தமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மரிப்போரின் ஆறுதலான கிறீஸ்துவின் இரத்தமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இருதயங்களின் சமாதானமும் இனிமையு மான கிறீஸ்துவின் இரத்தமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

நித்திய சீவியத்தின் அச்சாரமான கிறீஸ்துவின் இரத்தமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து ஆத்துமங்களை விடுவிக்கிற கிறீஸ்துவின் இரத்தமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

எல்லா மகிமைக்கும் சங்கைக்கும் முற்றிலும் தகுதிவாய்ந்த கிறீஸ்துவின் இரத்தமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

ஆண்டவரே, உமது திரு இரத்தத்தால் எங்களை இரட்சித்தீர். சர்வேசுரனுடைய இராச்சியமாக எங்களை ஏற்படுத்தினீர்.

பிரார்த்திக்கக்கடவோம்.

சர்வ வல்லவரும் நித்தியருமாயிருக்கிற சர்வேசுரா, உமது ஏக குமாரனை உலக இரட்சகராக நியமித்து அவரது இரத்தத்தால் சாந்தமடைய திருவுளமானீரே. எங்கள் இரட்சணியத்தின் கிரயமாகிற அந்தத் திரு இரத்தத்தை வணங்கவும் அதன் வல்லமையால் இவ்வுலக வாழ்வின் தீமைகளிலிருந்து பாதுகாக்கப்படவும் அதனால் பரலோகத்தில் நித்திய சம்பாவனையைப் பெற்று மகிழவும் எங்களுக்கு அருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.  எங்கள் ஆண்டவராகிய அதே கிறீஸ்து வழியாக இதை எங்களுக்குத் தந்தருளும்.  

ஆமென்.

கர்த்தருடைய ஐந்து காய ஜெபம்

சேசுகிறீஸ்துநாதர் பாடுபட்ட சிலுவையடியிலே தேவமாதா கூட நிற்கிறதுபோலவும், அவருடைய திருக்காயங்களையும், அக்காயங்களிலே நின்று வடிந்தோடும் திரு இரத்தத்தையும் கண்ணால் காண்கிறது போலவும் தியானித்து விசுவாசமாயிருக்கிறது.  அதாவது: என் கர்த்தரே!  தேவரீர் மெய்யான சர்வேசுர னும் மெய்யான மனிதனும் ஒன்றாயிருந்து, அடியோர்களுக்காகப் படாத பாடுபட்டுச் சிலுவையிலே அறையுண்டு மரணத்தை அடைந்தீர் என்கிறதினாலே, தேவரீரை வணங்கித் தோத்திரம் பண்ணுகிறோம்.  தேவரீர் இத்தனை சகாய உபகாரங்களை அடியோர்களுக்குக் கட்டளை பண்ணினதினாலே, சகல சம்மனசுக்கள் முதலிய மோட்சவாசிகளோடே தேவரீரை வேண்டிக்கொள்கிறோம். அப்படியே தேவரீருடைய திருக்காயங்கள் ஐந்தையும் வணங்குகிறோம்.

1. சேசுகிறீஸ்துநாதரே சுவாமி! தேவரீருடைய இடதுபாதத்தின் திருக்காயத்தை வணங்கி நமஸ்கரித்து முத்தி செய்து ஆராதனை பண்ணுகிறோம். திவ்விய சேசுவே! இந்தத் திருக் காயத்தையும் தேவரீருடைய திவ்விய மாதாவின் அத்தியந்த வியாகுலத்தையும் குறித்து, நாங்கள் செய்த பாவமெல்லாம் எங்கள் நினைவிலே வரவும், அவைகளுடைய தின்மைத்தனத்தைக் கண்டுபிடித்து அவைகளை முழுமனதோடே வெறுக்கவும் கர்த்தர் கிருபை செய்தருள வேணு மென்று உம்மை மன்றாடுகிறோம். ஒரு பர. அருள். திரி.

2. சேசுகிறீஸ்துநாதரே சுவாமி! தேவரீ ருடைய வலது பாதத்தின் திருக்காயத்தை வணங்கி நமஸ்கரித்து முத்தி செய்து ஆராதனை பண்ணுகிறோம். இனிய சேசுவே! இந்தத் திருக்காயத்தையும் தேவரீருடைய திவ்விய மாதாவின் அத்தியந்த வியாகுலத்தையும் குறித்து, நாங்கள் செய்த பாவங்களுக்கு மெய்யான மனஸ்தாபம் உண்டாகத் தக்கதாக தேவரீர்  கிருபை செய்தருள வேணுமென்று உம்மை மன்றாடுகிறோம். ஒரு பர. அருள். திரி.

3. சேசுகிறீஸ்துநாதரே சுவாமி! தேவரீருடைய இடது கரத்தின் திருக்காயத்தை வணங்கி நமஸ்கரித்து முத்தி செய்து ஆராதனை பண்ணுகிறோம். நேச  சேசுவே! இந்தத் திருக்காயத்தையும் தேவரீருடைய திவ்விய மாதாவின் அத்தியந்த வியாகுலத்தையும் குறித்து, நாங்கள் இனிமேல் ஒருக்காலும் பாவங்களைச் செய்யாதிருக்க வேண்டிய ஒத்தாசை செய்தருள  வேணுமென்று உம்மை மன்றாடுகிறோம்.  ஒரு பர. அருள். திரி.

4. சேசுகிறீஸ்துநாதரே சுவாமி! தேவரீருடைய வலது கரத்தின் திருக்காயத்தை வணங்கி நமஸ்கரித்து முத்தி செய்து ஆராதனை பண்ணுகிறோம். உன்னத சேசுவே! இந்தத் திருக்காயத்தையும் தேவரீருடைய திவ்விய மாதாவின் அத்தியந்த வியாகுலத்தையும் குறித்து, நாங்கள் பாவப் பொறுத்தல் அடைந்து இஷ்டப்பிரசாதத்தோடே மரித்து மோட்ச பாக்கியத்தை அடையத் தக்கதாக தேவரீர் கிருபை செய்தருள வேணுமென்று உம்மை மன்றாடுகிறோம். ஒரு பர. அருள். திரி.

5. சேசுகிறீஸ்துநாதரே சுவாமி! தேவரீருடைய திருவிலாவின் திருக்காயத்தை வணங்கி நமஸ்கரித்து முத்தி செய்து ஆராதனை பண்ணுகிறோம். அன்புக்குரிய சேசுவே! இந்தத் திருக் காயத்தையும் தேவரீருடைய திவ்விய மாதாவின் அத்தியந்த வியாகுலத்தையும் குறித்து, தேவரீ ருடைய மட்டற்ற சிநேகத்தை எங்களுக்குக் கட்டளை பண்ணவும், கடைசியாய் நாங்கள் சாகிற தருணத்திலே தேவரீருடைய திருக்காயங் களுக்குள்ளே மறைந்தவர்களாய் நல்ல மரணமடையவும், தேவரீர் கிருபை செய்தருள வேணுமென்று உம்மை மன்றாடுகிறோம். ஒரு பர. அருள். திரி.

அதன்பின் பிதாவாகிய சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுக்கிற வகையாவது

பிதாவாகிய சர்வேசுரா சுவாமி!  தேவரீருக்கு உகந்த குமாரனுமாய் எங்களுக்குக் கர்த்தருமாயிருக்கிற சேசுகிறீஸ்துநாதர் எங்களுக்காக இத்தனை பாடுகள் பட்டாரே.  அவருடைய பாடுகளையும் பீடையையும் சிலுவையையும், மரணத்தையும் அடக்கத்தையும் துக்கத்தையும் அவருடைய திருக்காயங்களிலே நின்று வடிந்தோடும் திரு இரத்தத்தையும் பார்த்துப் பாவிகளாகிய அடியோர்கள் கேட்கிற இந்த ஐந்து மன்றாட்டுகளையும்  அவருடைய ஐந்து திருக் காயங்களையும் குறித்து கட்டளை பண்ணி யருளும் சுவாமி.  

ஆமென். 

1 பரலோக   மந்திரம் சொல்லவும்.

சிலுவையில் அறையுண்டிருக்கும் கர்த்தரை நோக்கி ஜெபம்

திவ்விய சேசுவே!  பூலோக இரட்சண்ணியத்தினிமித்தம் தேவரீர் மனிதாவதாரமெடுத்துப் பிறந்தீர்! விருத்தசேதனப்பட்டீர்; யூதர்களாலே புறக்கணிக்கப்பட்டீர்; துரோகியான யூதாசினால் முத்தமிட்டுக் காட்டிக் கொடுக்கப்பட்டீர்; சங்கிலியால் கட்டுண்டு, மாசற்ற செம்மறிப் புருவையைப் போல கொலைக்களத்துக்கு நடத் திக்கொண்டு போகப்பட்டீர். அன்னாஸ், கைபாஸ், பிலாத்து, ஏரோது இவர்கள் சமூகத்தில் அவமானமாய் நிறுத்தப்பட்டீர்.  பொய்ச்சாட்சிகளால் குற்றம் சாட்டப்பட்டீர்.  சாட்டை, கசை வார்களினால் அடிக்கப்பட்டீர். நிந்தை கோரணியாய்த் திருக்கண்கள் மூடிக் குட்டப்பட்டீர்; திருமுகத்தில் துப்பப்பட்டீர்; முள்முடி சூட்டப்பட்டு, மூங்கிற்றடியால் அடிக்கப்பட்டீர்; திருச் சட்டைகள் உரியப்பட்டீர்; ஆணிகளால் சிலுவையில் அறையுண்டு உயர்த்தப்பட்டீர்;  கள்ளர்களில் ஒருவனாய் எண்ணப்பட்டீர்; பிச்சுக் கலந்த புளித்த காடி குடிக்கக் கொடுக்கப்பட்டீர்; ஈட்டியால் குத்தப்பட்டீர்; என் ஆண்டவரே, சுவாமி! அடியேன் எவ்வளவு பாவியாயிருந்தாலும் நான் இப்போது தியானித்துப் பூசிக்கும் உமது திருப் பாடுகளைக் கொண்டும் உமது திருச்சிலுவை மரணத்தைக் கொண்டும் என்னை நரக ஆக்கினையினின்று மீட்டு இரட்சித்து உமது வலது பாரிசக் கள்ளனுக்கு கட்டளையிட்ட மோட்ச பாக்கியத்தில் அடியேனையும் சேர்க்க தயை புரியும்.  பிதாவோடேயும், இஸ்பிரீத்துசாந்துவோடேயும் சதாகாலம் சுயஞ்சீவியராய் இராச்சிய பரிபாலனம் பண்ணுகிறவருமாயிருக்கிற ஆண்டவரே.  

ஆமென்.

சுவாமி பாடுபட்ட சுரூபத்தை பார்த்துத் தியானிக்கும் ஜெபம்

என் ஆசைக்குரிய சேசு மரித்தாரோ? ஒருநாளும் மரிக்கக் கூடாதவர் மரித்தாரோ?  சகல மனிதர் உயிரைக் கடந்த மேலான உயிருள்ளவர் உயிர்விட்டாரோ?  எல்லாருக்கும் உயிரளிப்பவர் உயிர் விட்டாரோ? மனுமக்களுக்காகத் தேவ சுதன் இறந்தாரோ? ஆண்டவர் அடிமைகளுக்காக இறந்தாரோ? பாவிகளுக்காகப் பரிசுத்தர் உயிரிழந்தாரோ? ஓநாய்களுக்காகச் செம்மறிப் புருவை மாய்ந்ததோ? என் சேசுவே!  நீரோ இந்தச் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது? சீவன் பிரிந்து உடல் விறைத்திருக்கும் உம்மையே சிநேகித்து ஆராதித்துப் போற்றிப் புகழ்ந்து வாழ்த்தி ஸ்துதித்து வணங்கி நமஸ்கரிக்கிறேன் சுவாமி.

சம்மனசுகளால் ஆராதிக்கப்படும் தேவ சிரசே! மனிதருக்காகக் கல்லிலும் புல்லிலும் சயனித்ததுமாய், முண்முடி அழுத்தின காயத்தால் ஒழுகி வடிந்த திரு இரத்தத்தில் தோய்ந்து மூர்ச்சையடைந்து உயிர் விட்டுக் கவிழ்ந்திருக்கும் என் சேசுவின் திருச்சிரசே!  இந்தச் சிலுவையில் உம்மை வணங்குகிறேன். கிருபையுடைத்தான சேசுவைப் பார்த்து நீ மனிதருக்காகப் பட்ட அவமானத்தையும் அடைந்த நிந்தையையும் குறித்து என் அகங்கார கர்வத்தைப் போக்கித் தாழ்ச்சி உள்ளவனாகச் செய்வாயாக.

சம்மனசுகளுக்கு அனந்த சந்தோஷங் கொடுக்கிறதுமாய் சூரியனை மங்கடிக்குஞ்சோதி பிரகாச சுந்தர ஒளியுள்ளதுமாய் மனுமக்களில் ரூபலாவண்ய அலங்காரம் உள்ளதுமாய் இருக்கிற சேசுவின் திருமுகமே!  மனிதரின் அசுத்த உமிழ் நீரால் அழுக்கடைந்து அடிகளால் கன்றி, சிரசின் காயத்தில் நின்று ஓடிவிழும் இரத்தத்தால் சிவந்து, உயிர் பிரிந்ததினால் வெளுத்திருக்கும் என் சேசுவின் திருமுகமே! இந்தச் சிலுவையில் உம்மை வணங்குகிறேன்.  கிருபையுடைத்தான சேசுவைப் பார்த்து, நீ மனு­ருக்காக வேறுபட்டு வேற்றுருவானதைக் குறித்து பாவத்தால் நான் கொண்ட அவலட்சண சொரூபத்தை மாற்றி இஷ்டப்பிர சாதத்தால் அழகுள்ளவனாகச் செய்வாயாக.

எங்கள் பாவத்திற்காக அழுது சிலுவை முதலான உபத்திரவங்களைச் சந்தோ­மாகத் தரிசித்து கிருபாகடாட்சத்தோடு எங்களை நோக்கி எங்கள் குற்றங்களைப் பார்க்கச் சகிக்க மாட்டாமல் மூடியிருக்கும் என் சேசுவின் திரு விழிகளே!  இந்தச் சிலுவையில் உங்களை வணங்குகிறேன்.  கிருபையுடைத்தான சேசுவைப் பார்த்து, நீங்கள் எனக்காக சிந்தின கண்ணீரின் பலனை நான் இழந்து போகாதபடி உங்கள் கண்ணீரோடு என் கண்ணீரையும் ஒருமிக்கச் சேர்க்க எனக்கு வேண்டிய மனஸ்தாபத்தைத் தந்தருள்வீர்களாக.

அமிர்த பிரசங்கங்களைச் சொல்லி அரிதான தருமங்களை எளிதாகச் செய்ய போதித்து அனைவருக்கும் மோட்ச வழியைப் படிப்பித்து அருந்தாகத்திற்குப் பிச்சும் புளித்த திராட்சைபழ இரசத்தையும் சுவைபார்த்த என் சேசுவின் திரு நாவே! இந்தச் சிலுவையில் உம்மை வணங்கு கிறேன்.  கிருபையுடைத்தான சேசுவைப் பார்த்து, நீர் போதித்த நெறி வழியில் வழுவாமல் நடந்து என் சேசுவின் திருநாமம் ஒன்றே என் நாவுக்கு இனிதா யிருக்கும்படி உலக காரியமெல்லாம் எனக்குக் கசப்பாயிருக்கச் செய்வாயாக.

பரலோக பூலோக பாதாளத்தைப் படைத்து பரலோகத்திற்கும் பூலோகத்திற்கும் உறவுகட்டி பரகதி வாசலைத் திறந்து பாவிகளுக்குத் தஞ்சமாக கைவிரித்து பாரஆணிகளால் சிலுவையில் அறை யுண்ட என் சேசுவின் திருக்கரங்களே!  இந்தச் சிலுவையில் உங்களை வணங்கி நமஸ்கரிக்கிறேன்.  கிருபையுடைத்தான சேசுவைப் பார்த்து எனக்காக விரிக்கப்பட்ட திருக்கரங்களே, நான் ஒருபோதும் என் சேசுவை விட்டுப் பிரியாதபடி நேச ஆணிகளால் என்னையும் உங்களோடு சேர்த்து அறைவீர்களாக.

கல்லிலும் முள்ளிலும் காட்டிலும் மேட் டிலும் சுற்றித் திரிந்து என்னைத் தேடி அலைந்து பாவத்தால் என் காலில் விழுந்த தளையை அறுக்க சிலுவையில் அறைபட்ட என் சேசுவின் திருப் பாதங்களே! இந்தச் சிலுவையில் உம்மை வணங்குகிறேன்.  கிருபையுடைத்தான சேசுவைப் பார்த்து இனி நான் அவரை விட்டு அகலாதபடி என்னை உங்கள் அருகில் சேர்த்துக் கொள்வீர் களாக.

போர் வீரனின் ஈட்டியின் வலிமையினால் குத்துண்டு காயப்பட்டதைவிட எங்கள் பேரில் வைத்த நேசப் பெருக்கத்தால் அதிக காயப்பட்டு இரத்தமெல்லாம் சிந்தி சிநேக அக்கினி மயமாய்ப் பற்றிஎரியும் என் சேசுவின் திரு இருதயமே!  இந்தச் சிலுவையில் உம்மை வணங்கி நமஸ்கரிக்கிறேன்.  கிருபையுடைத்தான சேசுவைப் பார்த்து சேசுவின் சிநேகம் என்னிடத்தில் குடி கொண்டு இருக்கும்படி குத்துண்டு திறந்த திரு விலாக் காயத்தால் என்னுள்ளத்தில் எழுந்தருளி வந்து உனக்குப் பதிலாக என் இருதயத்தைச் சேசுவின் இடத்தில் வைப்பாயாக.  ஆ! என் சேசுவே! ஆசைக்குரிய சேசுவே! சிநேக தேவனான சேசுவே, உம்மை இத்தனை நிஷ்டூரமாய் வாதித் ததார்?  கொடிய நெஞ்சமுள்ள பிரதான குருக் களும், வேதபாரகரும், யூதரும் துஷ்ட குணமுள்ள சேவகருமோ உம்மை இப்படி வதைத்தார்கள்?  உம்மைத் தேவனென்றும் தேவ சுதனென்றும் மனிதரை மீட்டுஇரட்சிக்கவந்த இரட்சகர் என்றும் விசுவசியாத அந்தக் குருடர் அல்லவே உம்மை வதைத்தவர்கள்!  உம்மைத் தேவனென் றும் இரட்சகரென்றும் அங்கீகரிக்கிற நானல்லவோ வெட்கமும் ஈவும் இரக்கமுமில்லாமல் உமது திரு முகத்தில் துப்பினேன்?  நானல்லவா உமது தசை கிழிய அடித்து முண்முடியைச் சிரசில் பதித்தேன்? நான் அல்லவோ உமது கைகால்களையும் விலாவையும் குத்தித் திறந்தேன்? பரலோகமும் பூலோகமும் சாட்சியாயிருக்க நான் அல்லவோ உம்மைக் கொன்று கொலைப்படுத்தினேன்?  ஐயோ என் ஆண்டவரே, நான் செய்த கொடு மைக்கு இனி என்ன செய்வேன்?  நான் இத்தனை நிஷ்டூரங்களைச் செய்தும் இன்னும் என்மேற் தயை பாராட்டி என் உயிரைப் பறியாமல் எனக்கு உமது இஷ்டப்பிரசாதத்தைக் கொடுக்கக் காத்துக் கொண்டிருக்கிற என் நல்ல சேசுவே!  நீர் படும் உபாதைகளைக் கண்டு கருங்கல்லும் பாறையும் வாய் விட்டழுகிறதுபோல் பிளந்து நிற்க, கல்லிலும் ஈரமற்ற என் இருதயம் ஒன்றே கலங்காது நிற்கிறது. நீர் படும் உபாதைகளையும் அந்த உபாதைகளுக் குக் காரணமான உமது சிநேகப் பெருக்கத்தையும் கண்டு என் இருதயம் தணலில் விழுந்த மெழுகு போல் இளகுகிறது.  இந்த மட்டும் நான் உமக்குச் செய்த நிஷ்டூரம் போதும்; இனியாகிலும் நான் உமக்குத் துரோகம் செய்யாதிருக்க எனக்கு வேண்டிய இஷ்டப்பிரசாதத்தைத் தந்தருளும்.

தயாபரரான சேசுவே!  நீர் என்னைப் பற்றியும் என்னாலும்தானே இத்தனை உபாதைப்பட்டும் இன்னும் உமது பேரில் இரங்காதிருப்பேனோ!  ஆண்டவரே! உம்மை மிகவும் சிநேகித்து உமது திருப் பாடுகளின் மேல் இரங்கி, இடைவிடாதழுது அங்க லாய்த்தவர்களோடு நானும் ஒருவனாகச் சேர்ந்து அங்கலாய்க்கிறேன்.  அர்ச்சியசிஷ்ட மரியாயே! சேசுநாதர் பாடுபடும்பொழுதும் சிலுவையில் தொங்கிச் சீவன் விடும்பொழுதும், சீவன் பிரிந்த திருச்சரீரத்தை உமது திருமடியில் வைத்திருக்கும் பொழுதும் நீர் அனுபவித்த சொல்லிலடங்காத துக்க வியாகுலம் இப்பொழுது உமக்கொன்றும் அவசியமில்லாததினால் அந்த துக்க வியாகுலமெல் லாம் எனக்குதந்தருளும்.  என்மேல் வைத்த இரக்கத்தால் உயிர்விட்ட அவரைக்கண்டு நானும் அவர்மேல் இரக்கத்தால் உயிர்விடக் கடவேனாக.

சேசுவே!  என் உடலைவிட்டு இன்னும் உயிர் பிரிய  தேவரீர் திருவுளமாகாததினால் என் தோஷ துரோகத்தைக் கண்டு கூச்சப்பட்டு மனஸ்தாப மிகுதியால் உமது பாதத்தில் விழுந்து இடை விடாது கண்ணீர்சொரிய அநுக்கிரகம் செய் தருளும். ஆண்டவரே! மனஸ்தாப மிகுதியால் அநேக ஆத்துமாக்களின் இருதயம் பொடிப்பொடியாய் நொறுங்கினாற்போல என் இருதயமும் நொறுங் கவும் என் கண்கள் இரண்டும் ஓயாமல் கண்ணீர் சொரியும் ஊற்றுகளாயும், என் கண்ணீர் இரத்தக் கண்ணீராகவும் செய்தருளும்.  உமது பாடுகளின் மேலுள்ள உருக்கத்தாலும், என் பாவங்களுக்காகப் படும் மனஸ்தாப மிகுதியினாலும் என் உயிர் பிரிய உமக்குச் சம்மதமில்லாவிட்டாலும் என் பாவங் களுக்குப் பொறுத்தலாவது கட்டளையிட்டருளும்.

ஆயிரம் பதினாயிரம் முறை நரகத்திற்குப் பாத்திரமான என் பாவங்களைப் பொறுத்தருள நியாயமில்லையயன்றாலும் உமது நன்மைத் தனத்தை மறந்து உம்மை மறுதலித்த இராயப் பருக்கும் உம்மிடம் பொறுத்தல் கேட்ட நல்ல கள்ளனுக்கும் பாவப் பொறுத்தல் கட்டளையிட் டீரென்கிறதினால் நான் உமது தயையை நம்பி என் பாவங்களுக்குப் பொறுத்தல் கேட்கிறேன். உம்மை வதைத்த கொடிய சத்துருக்களுக்காக உமது திவ்விய பிதாவை இரந்து கொண்டதி னாலும், உமது கொலைகாரரில் ஒருவனாகிற எனக்கும் அந்த மன்றாட்டின் பலன் கிடைக்க வேண்டியதல்லோ! என் பாவங்களைப் பொறுத் தருள வேண்டுமென்று உம்மை நான் மன்றாடும் மன்றாட்டு உமது மன்றாட்டின் பலன் அல்லாமல் என்சத்துவமல்ல என்கிறதினால் உமது மன்றாட்டும் ஒருமிக்க வீண் போகாதபடி நீர் துவக்கினதை நீரே முடித்தருளும்.

உமது பிதாவானவர் இப்பொழுது உம்மை சகல படைக்கப்பட்ட வஸ்துக்களுக்கும் அதிபதி கர்த்தாவாகவும் சகல சீவியர்களுக்கும் மரித்தவர்களுக்கும் மத்தியஸ்தராகவும் ஸ்தாபித்திருக்கிற தினால் அப்பொழுது நீர் அவரைக் கேட்டுக் கொண்ட மன்றாட்டை இப்பொழுது நீர்தாமே கட்டளையிட வல்லவராயிருக்கிறதினால், அப்பொழுது நீர் ஆசைப்பட்டுக் கேட்ட எங்கள் பாவப் பொறுத்தலை இப்பொழுது நீரே எங்களுக்குக் கட்டளையிட்டருளும்.

ஆண்டவரே! நீர் விருத்தசேதனம் செய்து கொண்டபொழுதும், பூங்காவனத்தில் அவஸ் தைப்பட்ட பொழுதும், கற்றூணில் கட்டி அடிபட்ட பொழுதும், முள்முடி தரிக்கப்பட்ட பொழுதும், இரத்தத்தோடு ஒட்டியிருந்த உமது வஸ்திரத்தை உரிந்தபொழுதும், உமது கை கால்களில் ஆணி அறைந்தபொழுதும், திருவிலா வைக் குத்தித் திறந்தபொழுதும், ஒழுகி வடிந்த உமது திரு உதிரத்தைப் பார்த்து, என் பாவங் களையும் இன்னும் மற்றுமுண்டான மனிதருடைய பாவங்களையும், நான் யாருக்காக மன்றாட வேண்டியிருக்குமோ அவர்களுடைய பாவங் களையும், என் தப்பிதத்தினால் பாவத்தைக் கட்டிக் கொண்டவர்களுடைய பாவங்களையும் பொறுத்தருளும்.  எங்கள் பாவங்களினிமித்தம் எங்களுக்காகச் சிந்தப்பட்ட திரு இரத்தத்தைக் குறித்து எங்கள் பேரில் கிருபையாயிருக்க மன்றாடு கிறோம். எங்களை பழிவாங்கக் கேளாமல் எங்க ளுக்கு இரக்கம் செய்ய அபயமிடும் உம் இரத்தத் தைக் குறித்து எங்கள் மேல் இரக்கமாயிருக்க மன்றாடுகிறோம். எங்கள் தோ­ துரோகங்களை அளவு கடந்த பேறுள்ள உமது இரத்தத்தைக் குறித்து எங்கள் மேல் கருணையாயிருக்க மன்றாடுகிறோம்.  எங்களுக்காக மனுப்பேசும் திரு இரத்தத்தைக் கொண்டுதானே தயையுள்ள சேசுவே!  தயையாயிரும் சுவாமி தயையாயிரும் என்று அலறி அழுகிறோம்.  அந்தத் திரு உதிரத்தில் ஒரு துளி எங்கள் இருதயத்தில் தெளித்தருளும், எங்கள் பாவ தோஷங்களெல்லாம் நிர்மூலமாய்ப் போகும்.

ஆண்டவரே! எங்கள் மன்றாட்டுக்கு இரங்கி எங்கள் பாவங்களைப் பொறுத்தருளினதினால் இத்தனை துரோகங்களைச் செய்தபின், எங்கள் நன்றிகெட்டதன்மையைப் பாராமல் இன்னமும் உமது கிருபையைத் தானே குறித்துத் தயைபுரிந் தீரென்று நினைத்து உமது மேல் அதிக நன்றி பாராட்டி எங்கள் குற்றங்களுக்காக அதிக மனஸ்தாபப்படுவோம். ஆ!  என் நல்ல சேசுவே! எங்கள் நன்றிகெட்ட தன்மை கரை காணாததாயிருந்தாலும் உமது நன்மைத்தன்மை அதிலும் கரை காணாத கருணைக் கடலாயிருக்கிறது.  சேசுவே! என் பாவப் பெருக்கத்தையும் உமது நன்மையின் விசாலத்தையும் நீர் அனுபவித்த வேதனை நோவுகளின் அகோரத்தையும் உமது அன்பின் பூரிப்பையும் காணும்பொழுது என் னிடத்தில் பிறக்கும் விம்மல் தேம்பல் பெருமூச் சினால் என் இருதயம் வெடித்து நாவடைத்துப் போகிறது.  இனி உமது திருப்பாதத்தைக் கட்டி அணைத்துக் கொண்டு, ஆ! சேசுவே!  ஆ! என் பாவமே!  ஆ!  என் கொடுமையே!  ஆ!  நன்மையே! ஆ! சிநேகமே!  ஆ! அன்பே!  அன்பே! என்று சொல்லுவேன். 

ஆமென்.