இயேசுவின் இரக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இயேசுவின் இரக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சேசுநாதருடைய இரக்கத்தின் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்கக் காரணமாயிருந்த இரக்கத் தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

சகலமும் சிருஷ்டிக்கப்பட காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

எங்களை தினமும் அர்ச்சிக்கும் இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

மகா பரிசுத்த திரித்துவத்தின் பரம இரக சியத்தை எங்களுக்கு வெளிப்படுத்தக் காரணமா யிருந்த இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

கடவுளின் சர்வ வல்லமையை மானிடருக்கு வெளிப்படுத்தக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

பரலோக சம்மனசுக்களை சிருஷ்டிக்கக் காரண மாயிருந்த இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

ஒன்றுமில்லாமையிலிருந்து எங்களை உரு வாக்கக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

உலகம் முழுவதையும் பரிபாலிக்கும் இரக்கத் தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

எங்களுக்கு நித்திய வாழ்வை அருளக் காரண மாயிருந்த இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

நாங்கள் அடையவிருந்த தண்டனைகளி லிருந்து எங்களைக் காப்பாற்றி வரக் காரணமா யிருக்கும் இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

பாவச் சேற்றிலிருந்த எங்களை மீட்டுக் கைதூக்கக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

மனித அவதாரத்தையும், பாடுகளையும் மரணத்தையும் ஏற்றுக் கொள்ளக் காரணமா யிருந்த இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

சகல மனிதருக்கும் எப்பொழுதும் எல்லா விடங்களிலும் உதவியளிக்க காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

உமது வரப்பிரசாதங்களை முன்னதாகவே எங்களுக்கு அருளக் காரணமான இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

தெய்வீகப் பரம இரகசியங்களை எங்களுக்கு வெளிப்படுத்தித் துலங்கச் செய்த இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

சத்தியத் திருச்சபையை ஸ்தாபித்த இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

தேவ திரவிய அனுமானங்களின் கொடைகளில் காண்பிக்கும் இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

ஞானஸ்நானத்திலும் பச்சாத்தாபத்திலும் நீர் அருளும் இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

திவ்விய நற்கருணையிலும் குருத்துவத்திலும் நீர் தந்தருளிய இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

பாவிகளை மனம் திருப்புவதில் நீர் காண்பிக்கும் இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

அவிசுவாசிகள் ஒளி பெறுவதில் நீர் காண்பிக்கும் இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

நீதிமான்களின் அர்ச்சிப்பில் நீர் வெளிப்படுத் திய இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

உமது திருக்காயங்களிலிருந்து சுரந்தோடிய இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

உமது மகா பரிசுத்த திரு இருதயத்திலிருந்து சுரக்கும் இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

இரக்கத்தின் தாயாக பரிசுத்த தேவ மாதாவை எங்களுக்குத் தர காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

நோயாளிகளுக்கும் துன்பப்படுவோருக்கும் ஆறுதலான இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

நொறுங்கிய இதயங்களுக்கு ஆறுதலான இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

கதிகலங்கித் தவிக்கும் ஆன்மாக்களின் ஆறுதலான இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

மரிப்போரின் அடைக்கலமாகிய இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களின் ஆறுத லான இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

சகல அர்ச்சியசிஷ்டவர்களின் பரலோக ஆனந்தமாகிய இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

இரட்சிக்கப்பட்டவரின் பரலோக ஆனந்தமாகிய இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

அற்புதங்களின் வற்றாத துணையாகிய இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

ஆண்டவருடைய இரக்கம், அவருடைய சகல சிருஷ்டிப்புக்கள் பேரிலும் உள்ளது. ஆதலால் ஆண்டவருடைய இரக்கத்தை என்றென்றைக்கும் பாடுவோம்.

பிரார்த்திக்கக் கடவோம்.

மகா தயை நிறைந்த சர்வேசுரா!  இரக்கத்தின் தந்தையே, ஆறுதலின் தேவனே, உம்மில் விசுவாசமும் நம்பிக்கையும் கொண்ட ஆன்மாக்கள் மீது இரக்கம் கொண்டீரே; உமது அளவற்ற இரக்கத்தைக் குறித்து எங்கள் பேரில் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும்.  இத்துன்ப உலகில் எங்களுக்கு நேரிடும் பெரிய  சோதனைகளிலும், உமக்குப் பிரமாணிக்கமாயிருக்க உமது இரக்கத்தின் வரப்பிரசாதங்களை எங்கள் மீது நிறையப் பொழிந்தருளும். இந்த மன்றாட்டுக்களையெல்லாம் தேவரீரோடும் இஸ்பிரீத்து சாந்துவோடும் சுயஞ்சீவியராய் சதாகாலமும் இராச்சிய பரிபாலனஞ் செய்யும் உமது திவ்விய குமாரன் சேசுக்கிறீஸ்துநாதர் பெயரால் எங்களுக்குத் தந்தருளும் சுவாமி. 

ஆமென்.

சகோதரி பவுஸ்தீனாவுக்கு சேசு கற்பித்த இரக்கத்தின் ஜெபமாலை

ஜெபமாலை பாடுபட்ட சுரூபத்தில்:

பரலோக மந்திரம். அருள் நிறை மந்திரம். விசுவாசப் பிரமாணம் சொல்லவும்

ஜெபமாலை பெரிய மணியில்:

நித்திய பிதாவே!  உம்முடைய திருக்குமார னும் எங்கள் ஆண்டவரும் இரட்சகருமாயிருக்கிற சேசு கிறீஸ்துவின் திருச்சரீரத்தையும் இரத்தத்தை யும் ஆத்துமத்தையும் தெய்வீகத்தையும் எங்கள் பாவங்களுக்கும் உலகத்தார் அனைவரின் பாவங்களுக்கும் பரிகாரமாக ஒப்புக்கொடுக்கிறேன்.

சிறிய மணிகளில்:

சேசுவின் மிகத் துயரமான பாடுகளைக் குறித்து, எங்கள் பேரிலும் உலகத்தார் அனைவர் பேரிலும் இரக்கமாயிரும் (10 தடவைகள் சொல்லவும்).

53 மணிகளின் முடிவில்:

பரிசுத்தரான சர்வேசுரா!  பரிசுத்தரான எல்லாம் வல்லவரே!  பரிசுத்தரான நித்தியரே! எங்கள் பேரிலும் உலகத்தார் அனைவர் பேரிலும் இரக்கமாயிரும். (3 விசை)

சேசுவின் இரக்கப் படத்தின் பக்தி

1931-ஆம் ஆண்டு பிப்ரவரி 22-ம் நாள் சங்  சகோதரி பவுஸ்தீனா தனது அனுபவத்தைத் தானே விளக்குகிறாள். “வெண்ணாடையணிந்தவராக சேசுவைக் கண்டேன்.  ஒரு கரத்தை ஆசீரளிக்கும் பாவனையாக உயர்த்தியிருந்தார்.  மறு கரத்தால் மார்பிலிருந்த ஆடையைத் தொட்டுக் கொண்டிருந்தார். அந்த ஆடையின் உள்ளிருந்து சிவப்பும், வெண்மையுமான ஒளிக்கதிர்கள் வீசின.” அப்போது அவளிடம் நமது ஆண்டவர்: “நீ காணும் காட்சியைப்போல் ஒரு படம் வரை.  அதற்கடியில் “சேசுவே, உம்மை நம்புகிறேன்” என்று எழுது. இந்தப் படம் முதன்முதலில் உங்கள் மடத்துக் கோவிலிலும் பிறகு உலக முழுவதிலும் வணங்கப்பட விரும்புகிறேன்” என்றார்.

சிவப்பு வெண்மை ஒளிக்கதிர்களின் விளக்க மென்னவென்று ஆண்டவரிடம் கேட்ட பவுஸ்தீனாவுக்கு சேசு சொன்னார்: “சிலுவையின் மீது வேதனை மிகுந்த என் இருதயத்தைக் குத்தித் திறந்த போது என் இரக்கத்தின் ஆழத்திலிருந்து பீறிட்ட இரத்தத் தையும் நீரையும் அவை குறிக்கின்றன. நீரின் அடையாளமாக வெண்கதிர்.  இரத்தத்தின் அடையாளமாக செங்கதிர். வெண் கதிர் ஆன்மாவையும் செங்கதிர் ஆன்மாவின் உயிரையும் குறிக்கின்றது.  இந்தக் கதிர்கள் எனது தந்தையின் கோபத்திலிருந்து ஆன்மாவைப் பாதுகாக்கின்றன.  இதன் அடைக்கலத்தில் வாழ்பவன் பேறுபெற்றவன். ஏனெனில் இறைவனின் நீதிக் கரங்கள் அவனை ஒருபோதும் தீண்டாது” என்றார்.  இந்தப் படம் எல்லோராலும் வணங்கப்பட விரும்பிய நமதாண்டவர் ஒரு வாக்குறுதியையும் இதோடு சேர்த்தார். “இந்தப் படத்தை வணங்கும் ஆன்மா மீட்படையாமல் போகாது. மேலும் அந்த ஆன்மாவுக்கும் இவ்வுலகிலும், சிறப்பாக மரண வேளையிலும் தனது சத்துருக்கள்மீது வெற்றியை வாக்களிக்கிறேன்.  எனது சொந்த மகிமையைப் போல அந்த ஆன்மாவை நானே பாதுகாப்பேன்” என்றார்.

சேசு இன்னும் சொன்னார்: “இப்படம் உள்ள குடும்பங்களையும் நகரங்களையும் பாதுகாப்பேன்.” இவ்வாக்குறுதி நிறைவேறியதின் அடையாளமாக நாம் தெரிந்து கொள்ளும் சம்பவங்கள்:

இரண்டாவது உலக மகாயுத்தத்தில் ராணுவத் தாக்குதலிலிருந்து சேசு குறிப்பிட்ட படம் வைத்து வணங்கிய கிராக்கோ, வில்நோ என்ற இரு நகரங்கள் மட்டும்தான் போலந்து தேசத்தின் அழிவிலிருந்து பாதுகாக்கப்பட்டன.

சர்வேசுரனின் இரக்கத்தின் நவநாள் ஜெபங்கள்.

(சங் சகோதரி பவுஸ்தீனாவின் நாள் குறிப்பேட்டிலிருந்து எடுக்கப்பட்டது.)

முதல் நாள்

மனுக்குலம் அனைத்திற்காகவும், குறிப்பாக எல்லாப் பாவிகளுக்காகவும்.

“இன்று மனுக்குலம் முழுவதையும் விசேஷமாய் எல்லாப் பாவிகளையும் என்னிடம் கூட்டி வந்து என் இரக்கக்கடலில் மூழ்க வை.  இவ்வாறு ஆன்மாக்களின் இழப்பினால் கடுந்துயரத்தில் ஆழ்ந்துள்ள எனக்கு ஆறுதலளிப்பாய்” என்றார் சேசு.

இரக்கமுள்ள சேசுவே! எங்களுக்கு இரக்கமும் மன்னிப்பும் அளிப்பவரே!  எமது பாவங்களைப் பாராமல், உமது அளவற்ற நன்மைத்தனத்தில் நாங்கள் கொண்டுள்ள எங்கள் நம்பிக்கையைப் பாரும்.  கருணை மிகுந்த உமது இதய இல்லத்தில் எங்களை ஏற்றுக் கொள்ளும். அதிலிருந்து நாங்கள் பிரிந்து போகவிடாதேயும். பிதாவோடும் இஸ்பிரீத்து சாந்துவோடும், உம்மைப் பிணைக்கும் உமது அன்பைக் குறித்து உம்மை இறைஞ்சுகிறோம்.

நித்திய பிதாவே!  சேசுவின் இரக்கம் நிறைந்த இருதயத்தில் ஒன்றுசேர்க்கப்பட்டுள்ள மனுக் குலத்தின் மீதும், விசே­மாய் பாவிகள் மீதும், உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். அவரது துயரம்நிறைந்த பாடுகளைப் பற்றி எங்களுக்கு உமது இரக்கத்தைக் காட்டும். நாங்கள் எல்லா வல்லமையுமுள்ள உமது இரக்கத்தை என்றென்றும் புகழ்வோமாக.  ஆமென்.

இரண்டாம் நாள்

குருக்கள், துறவிகளின் ஆன்மாக்களுக்காக.

“இன்று, குருக்கள், துறவியரின் ஆன்மாக் களை என்னிடம் அழைத்துவந்து ஆழங்காண முடியாத எனது இரக்கத்தில் மூழ்கவிடு.  எனது கசப்பான பாடுகளை நான் சகித்துக்கொள்ள எனக்குச் சக்தியளித்தவர்கள் இவர்கள்தாம்.      எனது இரக்கத்தின் வாய்க்கால்களாகிய இவர்கள் வழியாக மனுக்குலத்தின்மேல் என் இரக்கம் பாய்கிறது” என்றார் நமதாண்டவர்.

இரக்கம் மிகுந்த சேசுவே!  உம்மிடம் இருந்தே எல்லா நன்மையும் வருகின்றது.  நாங்கள் தகுந்த இரக்கச்செயல்களைப் புரிய எம்மில் உமது அருளைப் பெருக்கியருளும். அதனால் எம்மை நோக்கும்யாவரும் பரலோகத்திலுள்ள இரக்கத் தின் பிதாவைப் புகழ்வார்களாக!

நித்திய சீவியரான பிதாவே! உமது திராட்சைத் தோட்டத்திற்கென நீர் தெரிந்துள்ள உமது குருக்கள் துறவியரின் ஆன்மாக்கள் மீது உமது கருணைக் கண்ணைத் திருப்பியருளும். உமது ஆசீர்வாதத்தின் பலத்தால் அவர்களை நிரப்பும்.  உம் திருக்குமாரனின் இருதய அன்பிற்காக, அந்த அன்பில் ஒன்றுசேர்ந்துள்ள இவர்களுக்கு உமது வல்லமையையும், ஒளியையும் தாரும்.  இவர்கள் மீட்பின் பாதையில் பிறரை வழிநடத்தி உமது எல்லையற்ற இரக்கத்தை முடிவில்லாக் காலத்துக்கும் ஒரே குரலில் போற்றுவார்களாக! ஆமென்.

மூன்றாவது நாள்

விசுவாசிகள், பக்தியுள்ளவர்களின் ஆன்மாக் களுக்காக.

“இன்று பக்திப் பிரமாணிக்கமுள்ள அனைத்து ஆன்மாக்களையும் அழைத்துவந்து என் இரக்கச் சமுத்திரத்தில் மூழ்கவை.  என் சிலுவையின் பாதையில் இவர்கள் எனக்கு ஆறுதலாய் இருந் தார்கள்.  கசப்பான பெருங்கடலின் நடுவில் எனக் குக் கிடைத்த ஒரு துளி ஆறுதல் இவர்கள்தான்” என்றார் சேசு.

இரக்கம் மிகுந்த சேசுவே!  உமது இரக்கக் கருவூலத்திலிருந்து ஒவ்வொருவருக்கும் உமது அருளை ஏராளமாகப் பொழிகின்றீர்.  உமது இரக்கம் நிறைந்த இருதயமாகிய இல்லத்தில் எங்களை ஏற்றுக் கொள்ளும். அதிலிருந்து நாங்கள் பிரிந்துபோக விடாதேயும்.  பரமபிதாவிடம் நீர் கொண்டிருந்த, உமது உள்ளத்தைச் சுட்டெரித்த ஆச்சரியமான அன்பைக் குறித்து நாங்கள் இந்த வரப்பிரசாதத்தை உம்மிடம் மன்றாடுகிறோம்.

நித்திய பிதாவே! உமது திருக்குமாரனின் ஞான சரீரத்தின் அங்கங்களாகிய உமது விசுவாசிகள் மீது உமது இரக்கமுள்ள திருக்கண்களைத் திருப்பி யருளும்.  துன்பம் நிறைந்த அவரது திருப்பாடு களைப் பற்றி இவர்களுக்கு உமது ஆசீரை வழங்கி, உமது இடைவிடாத பராமரிப்பால் இவர்களை அரவணைத்துக்கொள்ளும்.  இதனால் இவர்கள் உம்மை நேசிப்பதில் ஒருபோதும் தவறாமல் பரிசுத்த விசுவாசமாகிய பொக்கி­த்தை ஒரு போதும் இழக்காமல் இருப்பார்களாக.  சம்மன சுக்கள் அர்ச்சியசிஷ்டவர்களோடு உமது எல்லையில்லா இரக்கத்தை நித்தியத்திற்கும் மகிமைப்படுத்துவார்களாக. ஆமென்.

நான்காம் நாள்

நாஸ்தீகர், கடவுளை அறியாத மக்களுக்காக.

“இன்று நாஸ்திகர்களையும், இன்னும் என்னை அறியாதவர்களையும் என்னிடம் கொண்டு வா. எனது கசப்பான பாடுகளின் போது இவர்களை யும் நான் நினைத்துக் கொண்டேன். என்னை அறிய வேண்டுமென்ற இவர்களது எதிர்கால ஆர்வம் என் இருதயத்துக்கு ஆறுதலாய் இருந்தது.  எனது இரக்கமாகிய மாபெரும் கடலில் இவர் களை ஆழ்த்திவிடு” என்றார் சேசு.

இரக்கம் நிறைந்த சேசுவே! நீரே உலகின் ஒளி.  உம்மை இன்னும் அறியாத நாஸ்திகர்களை உமது வரப்பிரசாதம் மிகுந்த உள்ளமாகிய இல்லத்தில் ஏற்றுக்கொள்ளும். உமது அருட்கதிர் அவர் களுக்கு ஒளி ஊட்டுவதாக! இவர்களும் எம்மோடு இணைந்து உமது அளவற்ற இரக்கத்தைப் போற்றி ஏற்றுக்கொள்வார்களாக!  உமது உள்ளமாகிய இல்லத்திலிருந்து இவர்கள் பிரிந்து போகாவண்ணம் பாதுகாப்பீராக!

நித்திய பிதாவே, இரக்கமிகுந்த சேசுவின் இருதயத்தில் வைக்கப்பட்டுள்ள நாஸ்திகர்மீதும் உம்மை இன்னும் அறியாதவர்கள்மீதும் உமது கருணைக் கண்ணைத் திருப்பியருளும். இவர் களை சுவிசே­த்தின் ஒளிக்கு இழுத்தருளும். உம்மை நேசிப்பது எத்துணை இன்பம் என்பதை இவர்கள் அறியார்கள். இவர்களும் உமது இரக்கத் தாராளத்தை ஊழிக்காலமும் வாழ்த்த வரமருள் வீராக!

ஐந்தாம் நாள்

வேதவிரோதிகள், பிரிவினைக்காரரின் ஆன்மாக்களுக்காக.

“இன்று பிரிந்துபோன சகோதரர்களின் ஆன்மாக் களைக் கொணர்ந்து என் இரக்கப் பெருங்கடலில் அமிழ்த்து.  எனது கசப்பான பாடுகளின்போது எனது உடலையும் உள்ளத்தையும் (அதாவது என் திருச்சபையை) இவர்கள் கிழித்தார்கள்.  திருச் சபையின் ஒற்றுமைக்கு இவர்கள் வந்து சேர்ந்தால் தான் என் காயங்கள் குணமாகும்.  இதன் வழியாக இவர்கள் எனது பாடுகளின் அகோரத்தைத் தணிப்பார்கள்” என்றார் சேசு.

இரக்கமிகுந்த சேசுவே!  நன்மையின் உருவே! உம்மிடம் ஒளியைத் தேடும் எவருக்கும் நீர் மறுத்ததில்லை.  பிரிந்துபோன எம் சகோதரர் களை இரக்கம் மிகுந்த உம் இருதய இல்லத்தில் ஏற்றுக் கொள்ளும். உமது ஒளியால் இவர்களைத் திருச்சபையின் ஒன்றிப்புக்கு இழுத்தருளும். உமது இரக்கத்தின் தாராளத்தை இவர்களும் புகழ வருவார்களாக!

நித்திய பிதாவே! பிரிந்துபோன எமது சகோதரர்களின் ஆன்மாக்கள் மீதும், விசே­மாய் தங்கள் தப்பறையில் பிடிவாதமாக ஊன்றிநின்று உமது வரப்பிரசாதத்தை விரயம்செய்து உமது ஆசீரை உதறிவிட்டவர்களின்மீதும், உமது கருணைக் கண்ணைத் திருப்பியருளும்.  இவர் களது குறைகளைப் பாராமல், உமது சொந்த குமாரனின் அன்பையும், இவர்களுக்காக அவர் அனுபவித்த கசப்பான பாடுகளையும் பார்த் தருளும்.  ஏனெனில் இவர்களும் சேசுவின் கருணை மிகுந்த இருதய இல்லத்தில் வைக்கப் பட்டுள்ளார்கள்.  ஊழிக்காலம் உமது பெரும் இரக்கத்தை இவர்களும் புகழ்ந்தேத்துவார்களாக! ஆமென்.

ஆறாவது நாள்

குழந்தைகள், தாழ்ச்சியும் சாந்தமுமுள்ள ஆன்மாக்களுக்காக

“இன்று சாந்தமும் தாழ்மையுமுள்ள ஆன்மாக் களையும் சிறு குழந்தைகளின் ஆன்மாக்களையும் என்னிடம் அழைத்து வா.  என் இரக்கத்தில் மூழ்க வை.  இவ்வான்மாக்கள் என் இருதயத்தை மிகவும் ஒத்திருக்கிறார்கள்.  எனது கசப்பான வேதனை யில் எனக்கு சக்தியளித்தார்கள். எனது பீடங்களின் அடியில் விழித்துக் காத்திருக்கும் உலக வானதூதர் களாக இவர்களைக் காண்கிறேன்.  இவர்கள் மேல் எனது அருளைப் பொழிகிறேன்.  தாழ்மையான ஆன்மாக்கள் மட்டுமே என் வரப்பிரசாதத்தைப் பெறமுடியும். இவர்கள் மட்டுமே என் நம்பிக் கைக்கு உரியவர்கள்” என்றார் சேசு.

இரக்கம் நிறை சேசுவே!  நான் சாந்தமும் இருதயத் தாழ்ச்சியும் உள்ளவன், என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள் என்று நீர்தாமே சொல்லி இருக்கிறீர். சாந்தமும் தாழ்மையுமுள்ள ஆன்மாக் களையும், சிறு குழந்தைகளின் ஆன்மாக்களையும் இரக்கம் மிகுந்த உமது இருதய வீட்டில் ஏற்றுக் கொள்ளும்.

இவ்வான்மாக்கள் பரலோக பரவசத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.  இவர்கள் பரம பிதாவின் செல்லக் குழந்தைகள்.  சர்வேசுரனின் அரியா சனத்தின் முன் இவர்கள் மணம் வீசும் மலர்க் கொத்து ஆவார்கள். இவர்களது நறுமணத்தில் சர்வேசுரன் இன்பம் கொள்கிறார்.  இவர்களுக்கு இரக்கம் நிறைந்த சேசுவின் இதயத்தில் நிலையான இடமுண்டு.  இவர்கள் அன்பு இரக்கம் பற்றிய பாடல்களை இடையறாது பாடுகிறார்கள்.

நித்திய பிதாவே! சாந்தம் உள்ள ஆன்மாக்கள், தாழ்மையுள்ள ஆன்மாக்கள், குழந்தைகள் இவர்கள்மேல் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும்.  இவர்கள் சேசுவின் இரக்கம் மிகுந்த இருதய வீட்டில் ஒன்றுசேர்ந்துள்ளார்கள். இவர்கள் உமது திருக்குமாரனின் சாயலை மிகவும் ஒத்திருக்கிறார்கள்.  இவ்வான்மாக்களின் நறுமணம் மண்ணுலகிலிருந்து எழுந்து உமது அரியணையை அடைகின்றது. எல்லா நன்மைக்கும் இரக்கத்திற்கும் தந்தையே!  இந்த ஆன்மாக்கள் மட்டில் உமக்குள்ள அன்பையும் மகிழ்ச்சியையும் குறித்து நான் வேண்டுகிறேன்.  உலக முழுவதையும் ஆசீர்வதியும். எல்லா ஆன்மாக் களும் ஒன்றுசேர்ந்து, உமது இரக்கத்தை முடிவில் லாக் காலம் புகழ்ந்தேத்துவார்களாக! ஆமென்.

ஏழாம் நாள்

சர்வேசுரனின் இரக்கத்தை சிறப்பாக மகிமைப்படுத்தி, வணங்கும் ஆன்மாக்களுக்காக.

“இன்று எனது இரக்கத்தைச் சிறப்பாக மகிமைப் படுத்தி வணங்கும் ஆன்மாக்களை அழைத்து வந்து என் இரக்கத்தில் மூழ்கச் செய்.  இவ்வான்மாக்கள் எனது பாடுகளை எண்ணி, வருந்தி என் ஆன்மா வோடு ஆழ்ந்து ஒன்றிக்கிறார்கள்.  எனது இரக்கமுள்ள இருதயத்தின் உயிருள்ள சாயல்கள் இவர்கள்.  இவ்வான்மாக்கள் மறுவாழ்வில் விசே­ ஒளி யோடு பிரகாசிப்பார்கள். இவர்களில் ஒருவரும் நரக நெருப்பில் விழ மாட்டார்கள். இவர்களின் மரண வேளையில் அவர்களை நான் பாதுகாப் பேன்” என்றார் சேசு.

அன்பையே இருதயமாகக் கொண்ட இரக்க மிகுந்த சேசுவே! உமது இரக்கத்தின் உயர்வைச் சிறப்பாகப் போற்றி வணங்கும் ஆன்மாக்களை உம் இரக்கமிகுந்த இருதய இல்லத்தில் ஏற்றுக் கொள்ளும்.  சர்வேசுரனின் வல்லமையைக் கொண்டு இவர்கள் வலிமை பெறுகிறார்கள்.  இவர்கள் துன்பங்கள் இடைஞ்சல்களுக்கு நடுவே கடவுளின் இரக்கத்தில் முன்னேறிச் செல்பவர்கள்.  இவ்வான்மாக்கள் மனுக்குலம் முழுவதையும் தங்கள் தோள்களில் சேசுவோடு இணைந்து சுமந்து செல்கின்றார்கள். இவர்கள் கடுமையாகத் தீர்வை யிடப்படமாட்டார்கள்.  இவ்வுலகை விட்டுப் பிரியும்போது உமது இரக்கம் இவர்களை அணைத்துச் செல்லும்.

நித்திய பிதாவே! உமது மிகச் சிறந்த இயல்பாகிய ஆழங்காணமுடியாத இரக்கத்தைப் போற்றி வணங்கும் ஆன்மாக்கள் மீது, உமது கருணைக் கண்ணைத் திருப்பியருளும்.  சேசுவின் கருணை நிறைந்த இருதயத்தில் இவர்கள் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் சுவிசேஷத் தின்படி வாழ்பவர்கள். இவர்களின் கரங்கள் இரக்கத்தின் செயல்களால் நிரம்பியவை. மகிழ்ச்சி பொங்கிவழியும் இவர்கள் இருதயம், உன்னத ராகிய உமக்கு இரக்கத்தின் கீதத்தை இசைக்கும்.  சர்வேசுரா!  உம்மை வேண்டுகிறேன்.  இவர்கள் உம்மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு அளவாக இவர்களுக்கு உமது இரக்கத்தைக் காண்பியும்.  ஆழங்காண முடியாத உமது இரக்கத்தை வணங்கும் ஆன்மாக்களை, வாழ்விலும் முக்கியமாக கடைசி வேளையிலும், “என் சொந்த மகிமை எனக் கருதிப் பாதுகாப்பேன்” என்று சேசுவே கூறிய அந்த வாக்குறுதி நிறைவேறுமாக! ஆமென்.

எட்டாம் நாள்

உத்தரிக்கிற ஆன்மாக்களுக்காக.

“இன்று உத்தரிக்கும் ஸ்தலமாகிய சிறைக் கூடத்தில் உள்ள ஆன்மாக்களைக் கூட்டி வந்து என் இரக்கத்தின் ஆழத்தில் அமிழ்த்து.  என் இரக்கம் இவர்களைச் சுட்டெரிக்கும் தீப்பிழம்புகளைக் குளிரச் செய்யட்டும்.  இவ்வான்மாக்கள் அனை வரும் என்னால் அதிகம் நேசிக்கப்படுகிறார்கள்.  என் நீதிக்கு பரிகாரம் செய்கிறார்கள்.  இவர் களுக்கு விடுதலை அளிப்பது உன் கையில் இருக் கிறது.  எனது திருச்சபையின் பொக்கி­த்தினின்று எல்லாப் பலன்களையும் எடுத்து இவர்களுக்காக ஒப்புக்கொடு. இவர்கள் அனுபவிக்கும் வேதனை களை நீ அறிவாயானால், இடைவிடாது அர்ப் பணித்து எனது நீதிக்கு இவர்கள் செலுத்த வேண்டிய கடனைத் தீர்ப்பாய்” என்றார் சேசு.

இரக்கம் நிறைந்த சேசுவே! நீர் இரக்கத்தையே விரும்புவதாக நீரே மொழிந்தீர். எனவே இரக்க மிகுந்த உமது இருதய இல்லத்தினுள்ளே உத்தரிக் கிற ஆன்மாக்களை அழைத்து வருகிறேன். அவர்கள் உமது அன்பர்கள்.  ஆயினும் உமது நீதிக்கு உத்தரிக்க வேண்டியவர்கள்.  உமது இருதயத் திலிருந்து பீறிட்டுவரும் இரத்தமும் நீருமாகிய அருவிகள் இவர்களைச் சுத்திகரித்து அனற்பிழம்பு களை அணைக்கட்டும்.  இவ்விடத்திலும் உமது இரக்கத்தின் வல்லமை கொண்டாடப்படட்டும்.

நித்திய பிதாவே!  உத்தரிக்கிற ஸ்தலத்தில் வேதனைப்படும் ஆன்மாக்கள் மீது உமது கருணைக் கண்ணைத் திருப்பியருளும். அவர்கள் இரக்கம் நிறைந்த சேசுவின் இருதயத்தில் ஒன்று சேர்க்கப் பட்டுள்ளார்கள்.  உமது திருக்குமாரன் சேசுவின் வேதனை நிறைந்துள்ள பாடுகளைக் குறித்தும், அவரது திரு இருதயத்தின் துயரத்தைக் குறித்தும் உம்மை மன்றாடுகிறோம். உமது நீதியின் தீர்ப்பில் நிற்கும் இவ்வான்மாக்களுக்கு உமது இரக்கத்தைக் காட்டியருளும்.  உமது நேச குமாரன் சேசுவின் திருக்காயங்கள் வழியாக இவர்களை நோக்கும். உமது நன்மைத்தனத்திற்கும், இரக்கத்திற்கும் எல்லையேயில்லை என்று நாங்கள் உறுதியாக விசுவசிக்கிறோம்.  ஆமென்.

ஒன்பதாம் நாள்

வெதுவெதுப்புள்ள ஆன்மாக்களுக்காக.

“இன்று வெதுவெதுப்புள்ள ஆன்மாக்களை என்னிடம் அழைத்து வந்து, எனது இரக்கத்தின் ஆழத்தில் மூழ்க விடு.  இவ்வான்மாக்கள் எனது உள்ளத்தை மிகவும் நோகச் செய்கிறார்கள்.  இந்த வெதுவெதுப்புள்ள ஆன்மாக்களாலேயே நான் ஜெத்சமனிப் பூங்காவில் பயங்கர வேதனைகள் அனுபவித்தேன். அவ்விடத்தில், பிதாவே, உமக்கு சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னை விட்டு அகலட்டும் என்று நான் கூறியதற்குக் காரணம் இவர்கள்தாம்.  இவர்களுக்கு என் இரக்கத்தை நோக்கி ஓடி வருவது ஒன்றுதான் மீட்பின் கடைசி நம்பிக்கை” என்றார் நமதாண்டவர்.

மிகவும் இரக்கமுள்ள சேசுவே! நீர் கருணையே வடிவானவர்.  கருணை மிகுந்த உமது இருதய வீட்டில் இந்த வெதுவெதுப்புள்ள ஆன்மாக்களை அழைத்து வருகிறேன்.  உம்மை இத்தனை துயரத் தில் ஆழ்த்திய நடைப்பிணம் போன்ற, பக்தியற்ற இவ்வான்மாக்களின் உள்ளங்களை, உமது தூய அன்பின் அக்கினி, மறுபடியும் கொழுந்து விட்டு எரியச் செய்வதாக.  கருணை மிகுந்த சேசுவே, உமது இரக்கத்தின் வல்லமையைப் பயன்படுத்தி, உமது அன்பின் அனலுக்குள் இவர்களை இழுத்து, புனித அன்பாகிய கொடையை இவர்களுக்கு அருள்வீராக.  உமது வல்லமைக்கு அப்பாற் பட்டது எதுவுமேயில்லை..

நித்திய பிதாவே!  கனிவு மிக்க சேசுவின் இருதயத்தில் கூட்டிச் சேர்க்கப்பட்டுள்ள இந்த வெதுவெதுப்புள்ள ஆன்மாக்கள்மீது உமது கருணைக் கண்ணைத் திருப்பியருளும்.  இரக்கத்தின் தந்தாய்! உமது திருக்குமாரனின் கசப்பான பாடுகளைப்பற்றியும், சிலுவையில் மூன்று மணி நேரமாக அவர் அனுபவித்த கடின மரண வேதனையைப் பற்றியும் உம்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.  இவர்களும் உமது எல்லையற்ற இரக்கத்தை மகிமைப்படுத்துவார்களாக. 

ஆமென்.

இரக்கத்தின் திருநாளுக்கு நவநாள்.

மேற்கூறிய சேசுவின் இரக்கத்தின் திருநாளுக்கு நவநாள் பெரிய வெள்ளிக்கிழமையன்று தொடங்குகிறது. இந்த இரக்கத்தின் நவநாளை எப்படி அனுசரிப்பதென்று சேசுவே சகோதரி பவுஸ்தீனாவுக்குக் கற்பித்தார்.

“ஒன்பது நாட்களிலும் எனது இரக்கத்தின் ஊற்றுக்கு ஆன்மாக்களை அழைத்துவர வேண்டும். அவர்கள் அந்த ஊற்றிலிருந்து பலமும், உற்சாகமும் பெறுவார்கள். சோதனைகளிலும், சிறப்பாக மரண வேளையிலும் தேவையான அருளை அடை வார்கள். ஒவ்வொரு வகையான ஆன்மாக்களை அழைத்து வந்து, எனது இரக்கக் கடலில் மூழ்க விடு. ஒவ்வொரு நாளும் இவ்வான்மாக்களுக்குத் தேவையான அருளை எனது கசப்பான பாடுகளின் வழியாகப் பிதாவிடம் கெஞ்சிக் கேள்” என்றார். இந்த நவநாளை இதர நாட்களிலும் அனுசரிக்கலாம்.

சகோதரி பவுஸ்தீனா, எவ்வகையான ஆன்மாக்களை முதலில் அழைத்துச் செல்ல வேண்டுமென்று தெரியாமல் தவித்தபோது சேசுதாமே அதை அவளுக்குக் கற்பித்தார்.

முதல் நாள் : பாவிகள், உலக மக்கள்.
இரண்டாம் நாள் : குருக்கள், துறவியர்கள்.
மூன்றாம் நாள் : விசுவாசிகள்,  பக்தியுடையவர்கள்.
நான்காம் நாள் : நாஸ்தீகர், கடவுளை அறியாதவர்கள்.
ஐந்தாம் நாள் : வேத விரோதிகள், பிரிவினைக்காரர்கள்.
ஆறாம் நாள் : தாழ்ச்சியும், சாந்தமும் உள்ள வர்கள், குழந்தைகள்
ஏழாம் நாள் : இறைவனின் இரக்கத்தை சிறப்பாக மதித்து ஆராதிப்பவர்கள்.
எட்டாம் நாள் : உத்தரிக்கும் ஆன்மாக்கள்
ஒன்பதாம் நாள் : வெதுவெதுப்புள்ளவர்கள் ஞான  அசமந்தம் உடையோர்.

இந்தக் கடைசி கூட்டத்தினரைப் பற்றி நமதாண்டவர் சொன்னது: “ஜெத்சமெனித் தோட்டத்தில் இவர்களது காட்சிதான் எனக்குச் சொல்ல முடியாத வேதனை தந்தது. இவர்களை நினைத்துத் தான், “பிதாவே!  கூடுமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு அகலட்டும்” என்று சொன்னேன். இவர்களது மீட்பின் கடைசி நம்பிக்கை, எனது இரக்கத்தில் அடைக்கலம் தேடுவதுதான்.” 

சேசுவின் இரக்கத்தின் திருநாள்

சங் சகோதரி பவுஸ்தீனாவிடம் சேசு கூறிய தாவது:

“மகளே! என்னுடைய இரக்கத்தின் திருநாள் எல்லா ஆன்மாக்களுக்கும், விசே­மாக பாவிகளுக்கும் ஓர் அடைக்கலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டுமென விரும்புகிறேன்.  இத்திருநாள் உயிர்த்த திருநாளுக்குப் பின்வரும் ஞாயிறாகும். அது பெரிய விழாவாகக் கொண்டாடப்பட வேண்டும்.  அந்நாளில் பாவசங்கீர்த்தனம் செய்து திவ்விய நற்கருணை உட்கொள்கிறவர்கள் தங்களுடைய எல்லாப் பாவங்களுக்கும் அவற்றிற்குரிய தண்டனைகளுக்கும் முழுமையான மன்னிப்பை பெறுவார்கள். இது என் இரக்கத்தின் ஆழத்திலிருந்து வெளிப்படுகிறது” என்றார்.

(இதன் பொருள் என்னவென்றால், சேசுவின்  இப்பெரிய இரக்கத்தின் வாக்குறுதி நமக்கொரு இரண்டாம் ஞானஸ்நானம் போல் தரப்படுகிறது.  உத்தரிக்கிறஸ்தலத்தில் நாம் அனுபவிக்க வேண்டிய அநித்திய ஆக்கினை முழுவதையும் இதனால் நாம் தவிர்க்க முடியும்.)

பிற்பகல் மூன்று மணி ஜெபம்.

சேசுவே நீர் மரித்தீர்.  உம் மரணத்திலிருந்து சீவியத்தின் சுனை ஆன்மாக்களுக்காகப் பொங்கிப் பாய்ந்தது.  உலகம் முழுவதற்கும் இரக்கத்தின் கடல் திறக்கப்பட்டது.  ஓ சீவிய ஊற்றே! ஆழம் காண முடியாத கடவுளின் இரக்கமே, உலகம் முழுவதையும் உன்னுள் பொதிந்து உன்னையே எம்மீது பொழிந்து வெறுமையாகி விடுவாயாக. சேசுவின் இருதயத்திலிருந்து இரக்கத்தின் ஊற்றாகப் பொங்கிப் பாய்ந்த இரத்தமே, தண்ணீரே! உம்மீது என் நம்பிக்கையை வைக்கிறேன்.

பிற்பகல் மூன்று மணி பக்தி

சேசுநாதர் சகோதரி பவுஸ்தீனாவிடம் இவ்வாறு கூறினார்:

“பிற்பகல் மூன்றுமணி வேளையில் என் இரக்கத்தினிடம் பாவிகளுக்காக விசே­மாய் மன்றாடு. சொற்ப நேரமாகிலும் என்னுடைய பாடுகளிலும் விசே­மாக என் மரண அவஸ்தையிலே நான் கைவிடப்பட்டதிலும் உன்னை மூழ்க வை. உலகம் முழுவதற்கும் இது பெரிய இரக்கத்தின் நேரம்.  இந்நேரத்தில் என் பாடுகளைக் குறித்து ஒரு ஆன்மா கேட்கிற எதையும் நான் மறுக்கமாட்டேன். கடிகாரம் மூன்று மணி அடிப்பதை நீ கேட்கும்போது என் இரக்கத்தினுள் உன்னை மூழ்க வை. என் இரக்கத்தை அப்போது ஆராதி. மகிமைப்படுத்து. அதன் சர்வ வல்லபத்தை உலகம் முழுவதற்கும் விசே­மாய் பாவிகளுக்காகவும் மன்றாடு. ஏனென்றால் அந்நேரத்தில் ஒவ்வொரு ஆன்மாவிற்காகவும் என் இரக்கம் திறக்கப்பட்டது. அப்போது நீ உனக்காகவும் பிறருக்காகவும் கேட்பதையயல்லாம் பெற்றுக் கொள்வாய்.  உலகம் முழுமைக்கும் அது வரப் பிரசாதத்தின் நேரம்.  நீதியை இரக்கம் வென்ற நேரம் அது.” 

சேசுநாதருடைய இரக்கப் பக்தி

(1930 முதல் 1938 வரையிலும் போலந்து நாட்டில் சகோதரி பவுஸ்தீனா மேரிக்கு சேசுநாதர் பல தடவை காட்சியளித்து தமது அளவில்லா இரக்கத்தை வெளிப்படுத்தினார்.  உலகத்தை அச்சுறுத்தும் ஆபத்துகளிலிருந்து காப்பாற்றும் கேடயமாக தம் இரக்கத்தின் பக்தி இருக்கிறதென அறிவித்தார்.  உலகம் அவருடைய இரக்கத்தைப் பற்றிப் பிடித்துக்கொண்டால் தாம் அதைக் காப்பாற்றுவதாக வாக்களித்துள்ளார்.)

சேசு தம் இரக்கத்தை உணர்த்த சகோதரி பவுஸ்தீனா வழியாக உரைத்த சில வார்த்தைகள்

“என் இருதயம் இரக்கமயமானது.  இந்த இரக்கக்கடலிலிருந்து வரப்பிரசாதவெள்ளம் உலகமெங்கும் பாய்கிறது. என்னிடம் வந்த எந்த ஆத்துமமும் ஆறுதல் அடையாமல் போன தில்லை.  என் இரக்கத்தில் எல்லாத் துன்பங்களும் மறைந்துவிடுகின்றன.  இரட்சிக்கும் அருளும் அர்ச்சிக்கும் அருளும் இவ்வூற்றிலிருந்தே சுரக் கின்றன.” 

“என் இரக்கத்தில் நம்பிக்கை வைப்பதற்கு மிகப்பெரும் உரிமை, மிகப் பெரும் பாவிக்கு உள்ளது... மற்றெல்லாரையும் விட ஒரு ஆத்துமம் அதிக பாவியாயிருந்தாலும், அது என் இரக்கத் தையும் தயாளத்தையும் தேடுமானால் அதை என்னால் தண்டிக்க இயலாது. அளக்கக்கூடாததும் கண்டுபிடிக்க முடியாததுமான என் இரக்கத் தினால் நான் இந்த ஆத்துமத்தை நியாயப்படுத்தத் தேடுகிறேன்.” 

“என்மேல் நம்பிக்கை இல்லாதிருப்பது என் இதயத்தை கிழியச் செய்கிறது. என்னால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் நம்பிக்கையின்மை மற்ற அனைத்தையும்விட அதிகமாக என்னை வேதனைப்படுத்துகின்றது.  என் சிருஷ்டிகள் என்னை நம்ப வேண்டுமென்று ஆசிக்கிறேன்.” 

1936 மார்ச் 25 மங்கள வார்த்தை திருநாள் அன்று மாதா பவுஸ்தீனாவுக்குக் காணப்பட்டு, “நான் ஒரு மீட்பரை உலகிற்குக் கொடுத்தேன்.  அவருடைய இரக்கத்தை நீ உலகிற்கு பறைசாற்றி அவருடைய இரண்டாம் வருகைக்கு உலகைத் தயார் செய். இன்னும் நேரம் இருக்கும்போதே ஆன்மாக்களிடம் இப்பெரும் இரக்கத்தைப் பற்றிப் பேசு” என்று கூறினார்கள்.

ஏழு தவச் சங்கீதம்

(தாவீது என்கிற இராஜா பாடின சங்கீத ஆகமமான நூற்றைம்பது சங்கீதங்களில் ஏழு சங்கீதங்களைத் திருச்சபை தெரிந்தெடுத்துத் தவ செபமாக நியமித்ததினால் பாவத்தினிமித்தம் துக்க மனஸ்தாப முயற்சியாக அவைகளை உரைத்து வேண்டிக் கொள்வது பூர்வீகந் துவக்கி நடக்கின்ற நல்ல முறையாம்.)

1-வது. 6-ம் சங்கீதம்

(வியாதியஸ்தன் வைத்தியனை மன்றாடுகிறது போல, பாவத்தினால் மெலிந்து கலங்கின ஆத்துமமானது சர்வேசுரனைப் பிரார்த்தித்து அவருடைய சந்நிதியிலே அழுது பிரலாபிக்கிறதைக் குறித்தும், ஆண்டவர் அந்தப் பிரலாபத்தைக் கேட்பதைக் குறித்தும் பாடியிருக்கின்றது.)

சுவாமி!  தேவரீர் கோபமாயிருக்கும்போது என்னைத் தண்டியாதேயும் சுவாமி.  உமது கோபாக்கினி வேளையில் என்னை கடிந்து கொள்ளாதேயும்.

நானோ வெகு பலவீனன். என்மேல் இரக்க மாயிரும்.

என் எலும்புகள் நெக்கு விட்டிருப்பதால் எனக்கு ஆரோக்கியம் கொடுத்தருளும்.

என் ஆத்துமமோ வெகுவாய் கலங்கியிருக் கிறது.  ஆனால் சுவாமி! நீர் எந்த மட்டும் எனக்கு உதவி செய்யாமல் இருப்பீர்?

சுவாமி, தேவரீர் எனது முகமாய் திரும்பி என் ஆத்துமத்தை ஈடேற்றி உமது கிருபையைக் குறித்து என்னை இரட்சித்தருளும்.

ஏனென்றால் மரணத் தன்மையில் உம்மை யாரும் நினைப்பாரில்லை.  நரகத்தில் உம்மை ஸ்துதிக்கிறவனார்?

பிரலாபப்பட்டு மிகவும் மெலிந்தேன்.  இராத்திரி தோறும் என் கண்ணீரால் என் கட்டிலைக் கழுவி, என் கண்ணீரால் என் படுக் கையை நனைத்துக் கொண்டு வருகிறேன்.

கோபாக்கினையால் என் கண்கலங்கிச் சிவந்தது.  என் சகல சத்துருக்கள் நடுவில் வெகு நாளாய் அகப்பட்டுத் தளர்ந்தேன்.

ஆண்டவர் என் அழுகைக் குரலைக் கேட் டருளினார்; ஆகையால் அக்கிரமங்களைச் செய்கிற நீங்களெல்லாரும் என்னை விட்டு அகன்று போங்கள்.

ஆண்டவர் என் வேண்டுதலைக் கேட்டு எனது விண்ணப்பத்தைக் கையேற்றுக் கொண்டார்.  என் சத்துருக்களெல்லோரும் வெட்கி மிகவும் கலங்கக் கடவார்கள்.  அதிசீக்கிரத்தில் வெட்கமும் ஈனமும் மூடி பின்னிட்டு போகக் கடவார்கள்.

பிதாவுக்கும் சுதனுக்கும் இஸ்பிரீத்துசாந்து வுக்கும் ஸ்தோத்திரம் உண்டாகக்கடவது.

தமது விலைமதியாத திரு இரத்தத்தால் நம்மை மீட்டு இரட்சித்த சேசுநாதருக்கு அநவரத காலமும் ஸ்தோத்திரமும் ஸ்துதியும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.


2-வது: 31-ம் சங்கீதம்.

(நல்ல மனதோடு பாவத்தை விட்டுச் சர்வேசுரனைச் சேருவதின் பேரிலும் ஆண்டவர் நமது இக்கட்டில் அடைக்கலமுமாய், நல்லோர்க்கு இன்பமுமாய், புல்லோர்க்கு துன்ப ஆக்கினை இடுபவருமாய் இருக்கிறார் என்றதின் பேரிலும் பாடியிருக்கின்றது.)

எவரெவர் பாவம் பொறுக்கப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்.  எவரெவர் பாவம் மறைக்கப்பட்டதோ, அவர்களும் பாக்கிய வான்கள்.

ஆண்டவர் எவனுடைய பாவத்தை அவன் மேல் சாட்டாமலிருக்கிறாரோ, அவன் பாக்கிய வான்.  எவனுடைய மனதில் கபடமில்லையோ, அவனும் பாக்கியவான்.

நான் என் பாவத்தை வெளிப்படுத்தாமல் மவுனமாகி, நாளெல்லாங் கூக்குரலிட்டதினால் என் எலும்புகள் தளர்ந்து போயிற்று.

ஏனென்றால் உமது கைப்பாரம் அல்லும் பகலும் என்மேற் சுமந்ததினால் முள்ளு தைத்திறங்கினாற் போலக் கடின துயரப்பட்டு ஆறாட்டமாய்ப் புரண்டு கிடந்தேன்.

என் பாவத்தை உமக்கு அறிக்கையிட்டேன்.  என் அநீதத்தை உமக்கு மறைத்தேனில்லை.

நான் எனக்கு விரோதமாக என் அக்கிரமத்தை ஆண்டவரிடத்தில் சங்கீர்த்தனம் செய்வே னென்று சொல்லவே, நீர் என் பாவக் கேட்டைப் பரிகரித்தருளினீர்.

இதைப் பற்றித் தர்மாத்துமாக்களெல்லாரும் தக்க சமயம் பார்த்து உம்மை மன்றாடுவார்கள்.  இத்தன்மையாய் வெள்ள நீர் எப்படி புரண்டு வந்தாலும் அவர்கள் மட்டும் ஏறாது.

என்னைச் சூழ்ந்திருக்கிற துன்பங்களில் எனக் கடைக்கலமும் நீரே;  என் சந்தோ­மாகிய கர்த்தாவே, என்னை வளைத்துக்கொண்டிருக் கிறவர்களிடத்தில் நின்றென்னைக் காத்         தருளும்.

நடக்க வேண்டிய வழியை உனக்குக் கற்பித்து, உனக்கு உணர்வைத் தந்து, உன்மேல் நமது பார்வையை நிறுத்துவோம்.

ஞானமில்லாத குதிரை, கோவேறு கழுதை களைப்போல் இராதேயுங்கள்.  உங்களருகிற் சேராத அந்த மிருகங்களின் வாயை வாரினாலுங் கடிவாளங்களாலும் இறுக்கிக் கட்டுங்கள்.

பொல்லாதவர்களுக்கு அநேகம் ஆக்கினை கள் உண்டு.  ஆனால் ஆண்டவர் பேரில் பக்தி நம்பிக்கையாய் இருக்கிறவர்களை தேவ கிருபை சூழ்ந்திருக்கும்.

நீதிமான்களே, ஆண்டவரிடத்தில் அக மகிழ்ந்து சந்தோஷப்படுங்கள். செவ்விய இருதயத்தோரே, நீங்கள் எல்லாரும் அவரிடத்தில் உங்கள் மேன்மையைப் பாராட்டுங்கள்.

பிதாவுக்கும் சுதனுக்கும் இஸ்பிரீத்துசாந்துவுக்கும் ஸ்தோத்திரம் உண்டாகக்கடவது.

தமது விலைமதியாத திரு இரத்தத்தால் நம்மை மீட்டு இரட்சித்த சேசுநாதருக்கு அநவரத காலமும் ஸ்தோத்திரமும் ஸ்துதியும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.


3-வது.  37-ம் சங்கீதம்.

(பாவத்தால் ஆத்துமத்தில் பட்ட புண்களைத் தெளிவிக்கிறதின்மேலும், நல்லோர் துன்பப்படுகையில் சிநேகிதராலும் கைவிடப்படுகிறதின் மேலும், தபசுக்குட்பட்ட ஆத்துமமானது சர்வேசுரனுடைய நீதிக்கு உத்தரிப்பதற்காக வழிபாடாக இலெளகீகத் துன்பங்களைக் கையேற்றுக் கொண்டு அநுபவிக்க எப்பொழுதும் ஆயத்தமாய் இருக்கிறதின் மேலும் பாடியிருக்கின்றது.)

சுவாமி, தேவரீர் கோபமாயிருக்கும்போது என்னைத் தண்டியாதேயும்.  உமது கோபாக்கினி வேளையில் என்னைக் கடிந்து கொள்ளாதேயும்.

ஏனெனில் நீர் விட்ட அம்புகள் என்னை ஊடுருவிப் பாய்ந்தன, உமது கையின் பாரம் என்மேல் சுமந்தது.

உமது கோபத்தின் முகத்தே எனது மாம்சத்தில் சுகமற்றுப் போயிற்று, என் பாவங்களின் முகத்தே என் எலும்புகள் உருவற்றுக் கலகலத்துப் போயின.

ஏனென்றால் என் அக்கிரமங்கள் என் தலைக்கு மிஞ்சி என்னை மூழ்கடித்தும் வெகு பாரச் சுமையாக என்னை இருத்தியும் போட்டது; என் மதியீனத்தினால் என்னுடைய காயங்கள் புழுத்து, நாறிப் போயிற்று.

நான் மிகவுந் தரித்திரனாய் உடல் கூனிப் போய் நாள்முழுதும் துக்கத்தால் முகம் வாடித் திரிகிறேன். ஏனெனில் என் இடுப்பானது அக்கினிப் பிரவேசமாய் பற்றியயரிகிறது.  என் சரீரத்தில் நல்ல சதை எங்குமில்லை.

நான் வெகு வேதனைக்கும் ஈனத்துக்கும் உள்ளானேன்.  என் இருதயத்தின் அங்கலாய்ப் பினால் புலம்புகிறேன்.  என் ஆண்டவரே, என் ஆசைகளெல்லாம் உமக்குத் தெரிந்திருக்கிறது.  என் பிரலாபம் உமக்கு மறைந்திருக்கவில்லை.

என் இருதயம் கலங்கி என் சத்துவம் என்னைக் கைவிடுகிறது. என் கண்ணொளி மங்கிப் போகி றது.  என்னைச் சேர்ந்தார் சிநேகிதரும் என்மேல் எதிர்த்து நெருக்கி விரோதமாக நின்றார்கள்.

என்னருகில் இருந்தவர்கள் அகலப் போனார்கள். என் உயிர் பறிக்க எண்ணினவர்கள் எனக்கு வெகு கொடுமை செய்தார்கள்.

எனக்கு பொல்லாங்கு தேடினவர்கள் என் னோடு வீண்வார்த்தை பேசி, நாள் முழுதும் என்னை மோசம் போக்கும் விதத்தை யோசித் தார்கள்.

நானோவென்றால், காதுகேளாத செவிடனைப் போலவும், வாய் திறவாத ஊமையைப் போலவும் இருந்தேன். நான் கேட்கச் செவியில்லாதவனும், மறுத்துச் சொல்ல நாவில்லாதவனும் ஆனேன்.

சுவாமி, உம்மை நம்பியிருக்கிறேன்.  என் சர்வேசுரா சுவாமி, என் மன்றாட்டைக் கேட் டருளும்.

என் கால் தடுமாறும்போது என் மேல் இடும்பு பேசின என் சத்துருக்கள் இன்னும் என்னைக் கண்டு மனமகிழாதபடி உம்மைக் கேட்டுக் கொண்டேன்.  ஆகிலும் நான் தண்டனைப்பட ஆயத்தமாயிருக்கிறேன். என் சஞ்சலம் எந்நேரமும் என் முன்பாக நிற்கிறது.

ஏனெனில் என் அக்கிரமங்களைச் சொல்லிக் காட்டுவேன். என் பாவங்களை நினைத்து சிந்தைப் படுவேன்.  ஆனால் என் சத்துருக்கள் உயிரோ டிருந்து என்னிலும் பலமானார்கள்.

நியாயமில்லாதென்னைப் பகைக்கிறவர்கள் பலுகிப்போனார்கள்.  நான் நன்மையைப் பின் சென்றதால் நன்மைக்குப் பதில் தின்மை செய்கிற வர்கள் என்னைத் தூற்றுகிறார்கள்.

என் சர்வேசுரா சுவாமி, என்னைக் கைவிடா தேயும்; என்னை விட்டு அகலாதேயும்.  எனக்கு இரட்சணியமாயிருக்கிற சர்வேசுரா சுவாமி, தீவிரத்தில் வந்து எனக்கு உதவி செய்தருளும்.

பிதாவுக்கும் சுதனுக்கும் இஸ்பிரீத்துசாந்து வுக்கும் ஸ்தோத்திரம் உண்டாகக்கடவது.

தமது விலைமதியாத திரு இரத்தத்தால் நம்மை மீட்டு இரட்சித்த சேசுநாதருக்கு அநவரத காலமும் ஸ்தோத்திரமும் ஸ்துதியும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.


4-வது. 50-ம் சங்கீதம்.

(தாவீது இராஜா தமது கண்முன்பாக எப்பொழுதும் இருக்கிற தமது பாவங்களைக் குறித்துச் சர்வேசுரனை நோக்கிப் பிரலாபித்துப் பாவத்தில் நின்று அதிகமதிகமாய்த் தம்மைப் பரிசுத்தமாக்கித் தமக்கு வரப்பிரசாதங்களையும் புதிதான இருதயத்தையும் கொடுத்தருள வேணுமென்று சர்வேசுரனை மன்றாடினதும், தாழ்ச்சியும் மனஸ்தாபமுமுள்ள இருதயமே சர்வேசுரனுக்குப் பிரிய பலி என்கிறதுமாகப் பாடியிருக்கிறது.)

சர்வேசுரா சுவாமி, உமது தயையின் விசாலத்திற்குச் சரியானபடி என்மேல் இரக்கமாயிரும்.  உமது இரக்கப் பெருக்கத்துக்கு ஒத்தபடி என் அக்கிரமங்களை நிர்மூலமாக்கும்.

இன்னும் அதிகமாய் என் குற்றங்களில் நின்று என்னைக் கழுவி, என் பாவங்களில் நின்று என்னை விடுவித்துப் பரிசுத்தப்படுத்தும்.

நானோ எனது அக்கிரமங்களை அறிந்திருக் கிறேன்.  என் பாவம் எந்நேரமும் என் கண்முன்னே நிற்கிறது.

உமக்கு மாத்திரமே குற்றஞ்செய்தேன்; உம் முடைய சந்நிதிக்கு முன்னே தீங்கு புரிந்தேன்; நீர் உமது வாக்குத்தத்தத்தில் பிரமாணிக்கராய் இருக் கிறீரென்றும், உமது தீர்வையிலே நீதிபரராயிருக் கிறீரென்றும் விளங்கும்படி என் குற்றங்களைப் பொறுத்தருளும்.

நானோவென்றால், அக்கிரமத்தில் சென்மித்தேன்; என் தாயார் பாவத்தில் என்னைக் கர்ப்பந் தரித்தாள்.  

நீர் சத்தியத்தை நேசித்து உமது பரம ஞானத்தின் மறைவுள்ள இரகசியங்களை எனக்கு விளங்கச் செய்தருளினீர்.  

நீர் ஈசோப்பென்கிற புல்லினால் என்மேல் தெளித்தருளுவீர்; நானும் சுத்தமாவேன். நீர் என்னைக் கழுவுவீர்; வெண் பனிக்கட்டியிலுந் தூய்மையாவேன்.

என் செவிகளுக்கு இன்பத்தையும் சந்தோஷத் தையுந் தந்தருளுவீர். தளர்ந்துபோன என் எலும்புகள் திடன்கொண்டு எழுந்து அக்களிக்கும்.

என் பாவங்களைப் பாராமல் உமது முகத்தைத் திருப்பி என் அக்கிரமங்களையயல்லாம் போக்கியருளும்.

சர்வேசுரா, என்னிடத்தில் சுத்தமான இருத யத்தை உண்டாக்கி என் உள்ளத்தில் நீதி முறை யுள்ள புத்தியைப் புதுப்பித்தருளும்.

உமது சந்நிதியில் நின்று என்னைத் தள்ளாதே யும். உம்முடைய இஸ்பிரீத்துசாந்துவை என்னிடத் தில் நின்று மறுபடி வாங்கிக் கொள்ளாதேயும்.

உமது இரட்சணியத்தின் ஆனந்தத்தை மறுபடி எனக்குத் தந்தருளும்; உமது மேலான ஞானத்தால் என்னை உறுதிப்படுத்தும். அநீத ருக்கு உமது மார்க்கத்தைப் போதிப்பேன்.  துஷ்டர் உம்மிடத்தில் திரும்புவார்கள்.

சர்வேசுரா, என் இரட்சகரான சர்வேசுரா, இரத்தப் பழிகளில் நின்று என்னை மீட்டு விடுதலை யாக்கியருளும்; அப்போது என் நாவானது உமது நீதியை புகழ்ந்தேத்தும்.

ஆண்டவரே! என் இதழ்களைத் திறந்தருளும்.  என் வாய் உம்முடைய தோத்திரங்களை எடுத்துக் கூறும்.

ஆண்டவரே! உமக்குப் பலி வேண்டியிருந்தால் மெய்யாகவே பலி கொடுப்பேன்; ஆனால் சர்வாங்க தகன பலிகள் உமக்குப் பிரியமாயிருக்கிறதில்லை.

துக்கப்படுகிற உள்ளமே ஆண்டவருக்குப் பிரியமான பலி.  மனஸ்தாபத்தினாலே நொறுங் கித் தாழ்ச்சியுள்ள இருதயத்தைப் புறக்கணிக்க மாட்டீரே சுவாமி.

ஆண்டவரே!  உமது நன்மைத்தன்மையில் சீயோன் என்ற பர்வதத்தின் மேல் கிருபையா யிரும்; ஜெருசலேமென்கிற பட்டணத்தின் மதில்கள் எடுக்கப்பட தயை செய்தருளும்.

அப்பொழுது நீதியின் பலியும், சர்வாங்க தகனப் பலியும் காணிக்கைகளும் உமக்கு ஏற்கை யாகும். அப்பொழுதே உமது பீடத்தின் மேல் நவ சுகாரியப் பலிகளைக் கொடுப்பார்கள்.

பிதாவுக்கும் சுதனுக்கும் இஸ்பிரீத்துசாந்து வுக்கும் ஸ்தோத்திரம் உண்டாகக்கடவது.

தமது விலைமதியாத திரு இரத்தத்தால் நம்மை மீட்டு இரட்சித்த சேசுநாதருக்கு அநவரத காலமும் ஸ்தோத்திரமும் ஸ்துதியும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.


5-வது.  101-ம் சங்கீதம்.

(இந்த சங்கீதம் தீர்க்கதரிசியாகிய தாவீது இராஜாவைப்போல் அவரவர் தங்கள் தங்கள் பாவத்தின்மேல் மனஸ்தாபப்பட்டு பாவத்தின் ஆக்கினையாகிய துன்பங்களில் சர்வேசுரனை மன்றாடுகிறதற்கு மகா உதவியுமாய்   திருச்சபைக்கு மகா உச்சிதமான செபமுமாய் பாடியிருக்கின்றது.)

ஆண்டவரே! என் மன்றாட்டைக் கேட்டருளும்.  என் அபயசத்தம் உமது சந்நிதி மட்டும் வரக்கடவது.

எனக்கு உமது திருமுகத்தைத் திருப்பிக்கொள்ளாதேயும்; நான் துன்பப்படும் எந்தெந்த நாளிலும் என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்துக் கொடுத்தருளும்.

நான் எந்தெந்த நாளில் உம்மை மன்றாடி னாலும் என் மன்றாட்டைத் தீவிரமாய்க் கேட் டருளும். ஏனெனில் என்னுடைய நாட்கள் புகை போல் மறைந்து போயிற்று.

என் எலும்புகள் அடுப்பின் விறகைப் போல துவண்டு போயிற்று.  என் ஆகாரத்தைப் புசிக்க மறந்துவிட்டதினால் என் இருதயங் காய்ந்து வெயி லில் அடிபட்ட புல்லைப் போல் உலர்ந்தேன்.

என் பிரலாபப் பெருமூச்சின் பேரொலியால் எனது தோலோடு என் அஸ்திகள் ஒட்டிப் போயிற்று.

வனாந்தரத்தில் தனித்திருக்கும் பெலிக்கான் போலவும் தனி வனத்தில் தங்கின ஆந்தை போலவுமானேன். கண்ணுறக்கமற்றேன்.  தனிப் பட்டுக் கூரைமேல் அமர்ந்த குருவிபோல் ஆனேன்.

என் சத்துருக்கள் என்னை நாள் முழுவதும் தூ­ணம் சொல்கிறார்கள்.  என்னைப் புகழ்ந் தவர்கள் எனக்கு எதிராய்ச் சபதம் கூறுகிறார்கள்.

அதேனென்றால், சாப்பாடாகச் சாம்பலை அருந்தி தண்ணீரோடு என் கண்ணீரைப் பானம் பண்ணினேன்.  உமது சினத்தையும் கோபாக் கினையையும் பற்றி இவ்விதம் செய்தேன்.

ஏனென்றால், நீர் என்னை உயர்த்திப் பின்பு கீழே விழ அடித்து நொறுக்கினீர்.  என்னுடைய நாட்கள் நிழலைப் போல் சாய்ந்து போயிற்று;  நானோ புல்லைப்போல் உலர்ந்தேன்.

ஆனால் ஆண்டவரே!  நீர் சதாகாலங்களும் இருக்கின்றவர்; உமது திருநாமத்தின் ஸ்மரண மோவெனில் அநவரத காலமும் நிலைத்து நிற்கும்.

சீயோன் என்ற மாநகருக்குக் கிருபை புரியும் காலம் வந்து நேரிட்டமையால் தேவரீர் எழுந் தருளி அதன்மேல் இரக்கம் செய்தருளும்.

அதேனென்றால் உம்முடைய அடியார் அந்த நகரத்தின் தகர்ந்த கற்களின்மேல் பிரியமாகி, அதன் மண்ணின்மேலும் இரக்கமானார்கள்.

ஆண்டவரே!  சகல சனங்களும் உமது திரு நாமத்துக்கும், சமஸ்த மண்டலேஸ்வரரும் உமது அர்ச்சிய மகிமைக்கும் அஞ்சுவார்கள்.

அதேதெனில், சீயோன் என்ற நகரத்தை ஆண்டவர் கட்டுவித்த தமது மகிமைப் பிரதாபத் திற் காணப்படுவார்.  அவர் தாழ்ச்சி உள்ளவர் களுடைய வேண்டுதலுக்குத் திரும்பிச் செவி தந்ததல்லாமல் அவர்களுடைய மன்றாட்டைப் புறக்கணித்ததில்லை.

இனிவரும் சந்ததிக்கு இவைகள் எழுதப் பட்டிருக்கும்;  இனிமேல் உண்டாகும் ஜனம் ஆண்டவரை ஸ்துதிக்கும்.

ஏனென்றால், ஆண்டவர் தமது அர்ச்சிய சிஷ்டதனத்தின் உன்னதத்திலிருந்து திருக்கண் ணோக்கினார். விலங்கில் கிடக்கிறவர்களுடைய பிரலாபத்தைக் கேட்கவும் கொலையுண்டு போனவர்களுடைய பிள்ளைகளைக் கட்டவிழ்த்து விடுவிக்கவுமே.

இப்படி விடுதலையான ஜனங்களும் இராஜாக்களும் ஆண்டவருக்குத் திருப்பணி புரியக்கூடும்பொழுது சீயோன் பட்டணத்தில் ஆண்டவருடைய திருநாமத்தைக் கொண்டாடி ஜெருசலேம் நகரில் அவருடைய திருப்புகழைப் பாடத்தக்கதாகவும் பரலோகத்தில் நின்று பூலோகத்தைப் பார்த்தருளினார்.

அடியான் தன் சத்துவத்தின் மத்தியில் அவருக்குச் சொன்னதாவது: என் ஆயுசினுடைய சொற்பத்தை எனக்குக் காட்டியருளும்.  என் ஆயுள் நடுவில் என்னை அழைத்துக் கொள்ளா தேயும். உம்முடைய வரு­ங்கள் தலைமுறை தலைமுறையாக நிற்கின்றது.

சுவாமி! தேவரீர் தாமே ஆதியிலே பூமண்டலத்துக்கு அஸ்திவாரமிட்டீர்.  வான மண்டலங்கள் உமது கைத்தொழிலாமே.

இவைகள் சிதைந்துபோம்; நீரோ நிரந்தரம் இருக்கிறவராமே.

உடுத்திய உடைபோல இவையயல்லாம் பழசாய்ப்போம்;  ஆடைமாற்றுகிறது போலத் தேவரீர் அவைகளை மாற்றுவீர்; அவைகளும் மாறுபட்டுப் போம்.

நீரோவெனில் எக்காலமும் ஒரே சீராயிருக் கிறவர். உம்முடைய வரு­ங்கள் ஒழிவதில்லை.

உம்முடைய அடியார்களின் பிள்ளைகள் உம்மோடு வாசஞ்செய்வார்கள். அவர்களுடைய சந்ததியும் என்றென்றும் நன்னெறியில் நடத்தப் படுவதாமே.

பிதாவுக்கும் சுதனுக்கும் இஸ்பிரீத்துசாந்து வுக்கும் ஸ்தோத்திரம் உண்டாகக்கடவது.

தமது விலைமதியாத திரு இரத்தத்தால் நம்மை மீட்டு இரட்சித்த சேசுநாதருக்கு அநவரத காலமும் ஸ்தோத்திரமும் ஸ்துதியும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.


6-வது. 129-ம் சங்கீதம்.

(பாவப் பொறுத்தல் அடைய சர்வேசுரனை மன்றாட உருக்கத்தின் மாதிரிகையாகப் பாடி யிருக்கின்றது.)

சுவாமி பாதாளத்தில் நின்று உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; சுவாமி!  என் சத்தத்தைக் கேட்டருளும்.  எனது விண்ணப்பத்தின் பேரொலியை உமது செவிதந்து கேட்டருளும்.  ஆண்டவரே! நீர் எங்கள் பாவங்களைப் பாராட்டுவீராகில் உமக்கு முன்பாக நிருவாகம் செய்கிறவனார்?

ஆனால் தேவரீரிடத்தில் தயாளமான மன்னிப் பிருக்கிறபடியாலும், உமது வேத முறைமையைப் பற்றியும் சுவாமி உம்மை நம்பிக் காத்திருக்கிறேன்.

என் ஆத்துமம் ஆண்டவருடைய திருவசனத்தின்மேல் ஊன்றிக் காத்திருக்கின்றது.  என் ஆத்துமம் ஆண்டவரிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறது.

உதய சாமக்காவல் நேரந்துவக்கி இரவு பரியந்தம் இஸ்ராயேல் ஜனம் ஆண்டவரை நம்பிக் காத்திருக்கக்கடவது.  ஏனென்றால், சுவாமி தயையுள்ளவர்; அவரிடத்தில் இரட்சணியம் ஏராளமாய் இருக்கின்றது.

அவரே இஸ்ராயேல் ஜனத்தை அதன் சகல பாவங்களில் நின்று இரட்சித்தருளுவார்.

பிதாவுக்கும் சுதனுக்கும் இஸ்பிரீத்துசாந்து வுக்கும் ஸ்தோத்திரம் உண்டாகக்கடவது.

தமது விலைமதியாத திரு இரத்தத்தால் நம்மை மீட்டு இரட்சித்த சேசுநாதருக்கு அநவரத காலமும் ஸ்தோத்திரமும் ஸ்துதியும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.


7-வது. 142-ம் சங்கீதம்.

(தீர்க்கதரிசியாகிய தாவீது இராஜா, தாம் படுகிற உபத்திரவங்களில் தேவ கிருபையை இரந்து கேட்டு சர்வேசுரன் தமது நீதியின் உக்கிரத்துக்கு ஒத்த வண்ணம் நடப்பியாமல் தயையோடு நடப்பித்தருள வேணுமென்று சர்வேசுரனை மன்றாடிப் பாடியிருக்கின்றார்.)

சுவாமி! என் வேண்டுதலைக் கேட்டருளும். உமது சத்தியத்தின்படி என் விண்ணப்பத்திற்குக் காது கொடுத்தருளும்.

உமது நீதியின்படி என் மன்றாட்டை ஏற்றுக் கொள்ளும்.  குற்றம் பாராட்டி உம்முடைய அடியானைத் தீர்வையிடப் பிரவேசியாதேயும்.

ஏனெனில் சீவனுள்ளவரில் எவனும் உமக்கு முன்பாக பரிசுத்தனாகத் தோன்ற மாட்டான்.

என் சத்துராதி என் ஆத்துமத்தை உபத்திரவப் படுத்தி என்னுயிரை வதைத்துப் பூமியில் சிறுமைப்படுத்தினான்.

முற்காலத்தில் மாண்டு போனவர்களைப் போல என் சத்துரு என்னை இருட்டில் குடிகொண் டிருக்கச் செய்தான்.  என்னைக் குறித்து என் புத்தி அமைந்து துக்கத்தில் அமிழ்ந்தி, என் இருதயம் கலங்கிப் போயிற்று.

நான் பூர்வகாலங்களை நினைத்து உமது செய லெல்லாம் யோசித்து எண்ணினேன்; உம்முடைய திருக்கரங்களின் செய்கைகளின் மேல் தியானம் செய்தேன். உம்மை நோக்கி என் கைகளை விரித்தேன்.

நீரில்லா நிலம் போல் என் ஆத்துமம் வறண்டு உம்மை நோக்கித் தாவுகிறது.  ஆண்டவரே!  என் ஆவி சோர்ந்து போகின்றது.  என் வேண்டுதலைத் தீவிரமாய்க் கேட்டருளும்.

உமது திருமுகத்தைத் திருப்பிக் கொள்ளா தேயும்; திருப்பிக் கொள்வீராகில் குழியிலிறங்கிப் போகிறவர்களுக்குச் சமானமாவேன்.

நான் உம்மை நம்பியிருக்கின்றமையால் அதிகாலமே நான் உமது தயை மொழியைக் கேட்கச் செய்தருளும்.

என் ஆத்துமம் உம்மை நோக்கி எழுந்தபடி யால், நான் நடக்க வேண்டிய வழியை எனக்குப் படிப்பித்தருளும்.

நான் உம்மைத் தஞ்சமென்று ஓடி வந்த தினால், சத்துருக்களிடத்தில் நின்று என்னைத் தற்காத்தருளும்.  தேவரீர் என் தேவனாகையால், நான் உமது சித்தத்தின்படியே செல்லக் கற்பித் தருளும்.

உம்முடைய நல்ல இஸ்பிரீத்துவானவர் என்னை நன்மார்க்கத்திலே நடப்பிப்பாராக;  சுவாமி, உமது திருநாமத்தின் கீர்த்தியைக் குறித்து உமது நீதிக்கு ஒத்தபடி என்னைச் சீவிக்கச் செய்வீராக.

உபத்திரவத்திலே நின்று என் ஆத்துமத்தை விடுதலையாக்கி உமது தயவினால் என் சத்துருக் களைச் சங்கரித்துப் போடுவீராக.  நான் உம் முடைய அடியானாதலால் என் ஆத்துமத்தை உபாதிக்கிறவர்கள் எல்லோரையும் நிர்மூலஞ் செய்தருளும்.

சுவாமி!  எங்கள் பாவங்களையும் எங்களை ஈன்றவர்களுடைய பாவங்களையும் நினையா  தேயும்.  எங்கள் பாவங்களுக்காகப் பழிவாங்கத் திருவுளமாகாதேயும்.

பிதாவுக்கும் சுதனுக்கும் இஸ்பிரீத்துசாந்து வுக்கும் ஸ்தோத்திரம் உண்டாகக்கடவது.

தமது விலைமதியாத திரு இரத்தத்தால் நம்மை மீட்டு இரட்சித்த சேசுநாதருக்கு அநவரத காலமும் ஸ்தோத்திரமும் ஸ்துதியும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.

ஆமென்.

இறை இரக்கத்தை வேண்டிச் செபம்.

மகா தயை நிறைந்த இறைவனே! அளவற்ற அருளாளனே! துன்பக் கடலின் அதல பாதாளத்தில் வீழ்ந்துகிடக்கும் மனுக்குலம் முழுவதும் இன்று உமது இரக்கத்தை வேண்டிக் கூவி அழைக்கின்றது. ஓ! இறைவனே! இவ்வுலகின் கண்ணீர்க் கணவாயிலிருந்து எழும் எம் மன்றாட்டைத் தள்ளிவிடாதேயும்.

ஓ! ஆண்டவரே! எம் அறிவுக்கும் அப்பாற்ப்பட்ட அருளாளனே! எமது துன்பங்களை முற்றுமுழுதாக அறிந்தவரே! எம்முடைய பலத்தினால் நாம் உம்மிடம் வரமுடியாதவர்கள் என்பதனை அறிந்தவரே உமது விருப்பத்தை நாம் நம்பிக்கையுடன் எமது வாழ்நாள் முழவதும் எமது மரண வேளையிலும் கடைப்பிடித்து வருவதற்கு முன்கூட்டியே எமக்கு அருளி உமது இரக்கத்தை எம்மீது பெருகவிடும் என்று உம்மை இரந்து மன்றாடுகின்றோம்.

நீர் மட்டுமே அறிந்திருக்கும் உமது வருகையை உமது குழந்தைகளாகிய நாங்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்த்து இருப்பதற்கு எமது மீட்பின் எதிரிகளின் கணைகளிலிருந்து உமது இரக்கத்தின் அளவிடற்கரிய வல்லமை எம்மைக் காப்பாறுவதாக. எம்மிடம் ஈனத்தனங்கள் இருந்த போதிலும் இயேசு எமக்கு வாக்களித்திருந்த எல்லாவற்றையும் அடைவதற்கு நாம் எதிர்பார்த்து இருக்கின்றோம். ஏனெனில் இயேசுவே! எமது நம்பிக்கை திறந்திருக்கும் ஒரு கதவின் வழியாகச் செல்வதுபோல நாம் அவருடைய இரக்கமுள்ள இருதயத்தின் வழியாக பரலோகம் செல்வோம்

முதல்வர்: நித்தியபிதாவே! எமது பாவங்களுக்காகவும் உலகின் பாவங்களுக்காகவும் பரிகாரம் செய்யும்படியாக...

அனைவரும்: உமது நேசக் குமாரனாகிய எமது ஆண்டவர் இயேசுக் கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் ஆன்மாவையும் தெய்வீகத்தையும் உமக்கு ஒப்புக் கொடுக்கின்றோம்.

ஆமென்.

இரக்கத்திற்கான ஜெபம்.

ஆண்டவரே இரக்கமாயிரும். கிறிஸ்துவே இரக்கமாயிரும். பரிசுத்த ஆவியே இரக்கமாயிரும். ஏசுவே தாவீதின் மகனே எங்கள் மேல் இரக்கமாயிரும். பாவிகள் எங்கள் மீது இரக்கமாயிரும். இவ்வுலகிலும் எங்கள் நாட்டிலும் குடியிருப்போர் மீது இரக்கமாயிரும். எங்கள் குடும்பத்தில் உள்ள பெற்றோர்கள் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவர் மீதும் இரக்கமாயிரும். இவ்வுலகில் வாழும் கணவர் மனைவியர், குழந்தைகள், நோயாளிகள் இன்னும் பலவித துன்பங்களில் துன்பப்படுகின்ற மனநோயாளிகள் அனைவர் மீதும் இரக்கமாயிரும். இந்த நாளை எங்களுக்கு நல்ல நாளாக அமைய செய்தருளும். இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு மக்களுக்கும் இந்நாள் மிகவும் சிறப்பான  நாளாக அமையும் என்று நம்பும்  எங்களையும் ஆசிர்வதியும். எங்கள் அனைவரையும் உம் கண்ணுக்குள் கருவிழியில் வைத்து பாதுகாத்தருளும்.

ஆமென்.

இரக்கத்திற்கான செபம்.

"எவனிடம் பிரசன்னமாய் இருப்போமோ, அவன் மட்டில் இரங்குவோம். எவன் மீது இரக்கமாய் இருக்கத் திருவுளம் கொள்வாயோ, அவன் மேல் இரக்கம் வைப்போம் (யாத் 33:19) என்ற ஆண்டவரே இரக்கமாயிரும். இயேசுவே இரக்கமாயிரும், பரிசுத்த ஆவியே இரக்கமாயிரும். பாவியாகிய என் மீது இரக்கமாயிரும். அல்லேலூயா, அல்லேலூயா.

நான் குடியிருக்கும் வீட்டின் மீது இரக்கமாயிரும். என் குடும்பத்தின் மீது இரக்கமாயிரும். என் பெற்றோர் மீது இரக்கமாயிரும். என் சகோதர, சகோதரிகள் மீது இரக்கமாயிரும். என் பிள்ளைகள் மீது இரக்கமாயிரும். என் கணவன், மனைவி மீது இரக்கமாயிரும். அல்லேலூயா.

என் உறவினர்கள், நண்பர்கள் மீது இரக்கமாயிரும். என் அருகில் வசிக்கும் குடும்பங்களின் மீது இரக்கமாயிரும். ஆண்டவரே இரக்கமாயிரும். இயேசுவே இரக்கமாயிரும். பரிசுத்த ஆவியே இரக்கமாயிரும். பாவியாகிய என் மீது இரக்கமாயிரும். அல்லேலூயா.

ஆண்டவரே, உம் இரக்கத்திற்கு கெடு வைக்காமல் என் மனம் போல எனக்கு நாளைக் குறிக்காமல், ஆண்டவரே நீர் பொறுமை உள்ளவராய் இருப்பதனால் நான் மனம் வருந்தி கண்ணீர் சிந்தி உம் இரக்கத்திற்காக உம்மை மன்றாடுகிறேன். ஆண்டவரே, என் முன்னோரின் பாவங்களின் மீது இரக்கமாயிரும். என் முன்னோரால் ஏற்பட்ட கட்டுக்களின் மீது இரக்கமாயிரும். என் முன்னோரின் வழியாக வந்த சாபங்களின் மீது இரக்கமாயிரும். தீச்செயல்களின் மீது இரக்கமாயிரும். ஆண்டவரே இரக்கமாயிரும். இயேசுவே இரக்கமாயிரும். பரிசுத்த ஆவியே இரக்கமாயிரும். பாவியாகிய என்மீது இரக்கமாயிரும். அல்லேலூயா அல்லேலூயா.

"விரும்புகிறவனாலுமன்று; உழைக்கிறவனாலுமன்று. இரக்கம் வைக்கும் கடவுளாலேயே எதுவும் ஆகும் (உரோ 9:14) என்ற இயேசுவே இரக்கமாயிரும். என் தேவைகளின் மீது இரக்கமாயிரும். என் விருப்பங்களின் மீது இரக்கமாயிரும். நான் செய்யும் வேலையின் மீது இரக்கமாயிரும். என்னோடு வேலை செய்வோர் மீது இரக்கமாயிரும். வேலை செய்யும் நிறுவனங்கள் மீது இரக்கமாயிரும். அதன் உடைமைகள் மீது இரக்கமாயிரும். வியாபாரங்கள் மீது இரக்கமாயிரும். வருமானங்கள் மீது இரக்கமாயிரும். ஆண்டவரே இரக்கமாயிரும். இயேசுவே இரக்கமாயிரும். பரிசுத்த ஆவியே இரக்கமாயிரும். தாவீதரசரின் குலத்திலுதித்த இறைமகனே இரக்கமாயிரும். பாவி என் மீது இரக்கமாயிரும். அல்லேலூயா, அல்லேலூயா.

எனக்குண்டான அனைத்துச் சொத்துக்களின் மீது இரக்கமாயிரும். அதில் கிடைக்கும் விளைச்சல்களின் மீது இரக்கமாயிரும். அதில் செய்யும் விவசாயங்களின் மீது இரக்கமாயிரும். எனக்கு நீர் தந்துள்ள அனைத்து உயிரினங்கள், விலங்குகள், பறவைகள் மீது இரக்கமாயிரும். என் வீட்டிலுள்ள அனைத்து உடைமைகள் மீதும் இரக்கமாயிரும். ஆண்டவரே இரக்கமாயிரும். இயேசுவே இரக்கமாயிரும். பரிசுத்த ஆவியே இரக்கமாயிரும். பாவியாகிய என் மீது இரக்கமாயிரும். அல்லேலூயா, அல்லேலூயா.

எங்கள் பங்குத் தந்தையின் மீது இரக்கமாயிரும். எங்கள் பங்கில் உள்ள கன்னியர்கள், பங்கு மக்கள் அனைவர் மீதும் இரக்கமாயிரும். அனைத்து குருக்கள், துறவிகள் மீதும் இரக்கமாயிரும். அல்லேலூயா.
எங்கள் ஆயர்கள், கர்தினால்கள், திருத்தந்தை மீதும் இரக்கமாயிரும். அனைத்து பொது நிலை ஊழியர்கள், அனைத்து தியான மடங்கள், எல்லா தியான குருக்களின் மீதும் இரக்கமாயிரும். ஆண்டவரே இரக்கமாயிரும். இயேசுவே இரக்கமாயிரும். பரிசுத்த ஆவியே இரக்கமாயிரும். பாவியாகிய என் மீதும் இரக்கமாயிரும். அல்லேலூயா, அல்லேலூயா.

எல்லா குரு மடங்கள், உதவி நிறுவனங்கள், பள்ளிக் கூடங்களின் மீதும், அதன் ஆசிரிய, ஆசிரியைகள் மீதும் இரக்கமாயிரும். எல்லா கல்லூரிகள், பொது சேவை மையங்கள், மருத்துவமனைகள், எல்லா அரசு அலுவலகங்கள் மீதும் இரக்கமாயிரும். இந்திய நாட்டின் மீது இரக்கமாயிரும். எங்களில் பெருகி வரும் தீமைகள், வன்முறையாளர்கள், சிற்றின்பப் பிரியர்கள், தீவிரவாதிகள், பிளவு, பிரிவினை உருவாக்குவோர், போதைப் பொருட்களுக்கு அடிமையானோர், திருடர்கள், கலகக்காரர்கள், கொலை, கொள்ளைக்காரர்கள் மீதும் இரக்கமாயிரும். ஆண்டவரே இரக்கமாயிரும். இயேசுவே இரக்கமாயிரும். பரிசுத்த ஆவியே இரக்கமாயிரும். பாவியாகிய என் மீதும் இரக்கமாயிரும். அல்லேலூயா, அல்லேலூயா .

நெறி கெட்டோர், புறணி பேசுவோர் மீது இரக்கமாயிரும். திருமணமாகாதவர் மீது இரக்கமாயிரும். பரிசுத்த குடும்பங்கள், குழந்தை இல்லாதோர் மீது இரக்கமாயிரும். கைம்பெண்கள், கைவிடப்பட்டோர் மீது இரக்கமாயிரும். வேலையில்லாதோர், அனாதைகள், ஊனமுற்றோர், பார்வையற்றோர் மீது இரக்கமாயிரும். வாலிப ஆண்கள், பெண்கள் மீது இரக்கமாயிரும். ஆண்டவரே இரக்கமாயிரும். இயேசுவே இரக்கமாயிரும். பரிசுத்த ஆவியே இரக்கமாயிரும். பாவியாகிய என் மீதும் இரக்கமாயிரும். அல்லேலூயா, அல்லேலூயா.

மந்திரவாதிகள், பேய் பிடித்தோர், அவிசுவாசிகள் மீது இரக்கமாயிரும். நாட்டின் தலைவர்கள், ஆளுநர்கள், காவல் துறையினர், அதன் அதிகாரிகள் மீது இரக்கமாயிரும். நாட்டின் அடிப்படை தேவைகள் மீது இரக்கமாயிரும். தற்கொலை எண்ணமுடையோர், உடல், உள்ள ஊனமுற்றோர், நோயாளிகள் மீது இரக்கமாயிரும். நீதிமான்கள், நீதி வழங்குவோர் மீது இரக்கமாயிரும். வேற்று நாட்டில் வேலை செய்யும் இந்நாட்டினர் மீது இரக்கமாயிரும். ஆண்டவரே இரக்கமாயிரும். இயேசுவே இரக்கமாயிரும். பரிசுத்த ஆவியே இரக்கமாயிரும். பாவியாகிய என் மீதும் இரக்கமாயிரும். அல்லேலூயா, அல்லேலூயா.

கருக்கலைப்பு செய்த பெற்றோர், கருக்கலைப்பு செய்த குடும்பத்தினர், கருக்கலைப்பு செய்ய தூண்டியவர்கள், கருக்கலைப்பு செய்ய உதவியவர்கள், கருக்கலைப்பு செய்த மருத்துவர்கள் மீது இரக்கமாயிரும். கருக்கலைக்கும் நேரத்தில் பதைபதைத்து, துடித்து அடங்கிய குழந்தைகள் மீது இரக்கமாயிரும். அல்லேலூயா.

கடவுளே உம் நீதிமுறைகளை முன்னிட்டன்று; உமது இரக்கத்தை முன்னிட்டே புதுப்பித்து எங்களை மீட்டவரே (தீத்து 3:45, விபத்தில் சிக்குண்டோர், விபத்து குறித்தும், இரவு நேரங்களிலும் அச்சம் கொள்வோர், பயணம் செய்வோர் மீது இரக்கமாயிரும். உலகில் அணு ஆயுதங்கள் தயாரிப்போர் மீது இரக்கமாயிரும். ஐரோப்பிய, அமெரிக்க, கம்யூனிச நாடுகள், உலக நாடுகள் அனைத்தின் மீதும் இரக்கமாயிரும். வறுமையிலும், அடிமைத்தளைகளிலும் வாழும் மக்கள் மீதும் இரக்கமாயிரும். மரம், செடி, கொடிகள், தானியங்கள், பயிர்கள் மீதும் இரக்கமாயிரும். ஆண்டவரே இரக்கமாயிரும். இயேசுவே இரக்கமாயிரும். பரிசுத்த ஆவியே இரக்கமாயிரும். பாவியாகிய என் மீதும் இரக்கமாயிரும். அல்லேலூயா, அல்லேலூயா.

ஆமென். 

உன் தாய் வயிற்றில் உன்னை உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன் (எரேமி 15).

எதிர்க்க முடியாத குழந்தைகளை கொலை செய்த பெற்றோர்களையும் அழிக்க திருவுளம் கொண்டீர் (ஞானாகமம் 126).

பிள்ளைகள் ஆண்டவர் அருளும் செல்வம். மக்கள் பேறு அவர் அளிக்கும் நன்கொடை (சங் 126:3).

உன்னை பாதுகாப்பதற்கு தூதரை அனுப்புவோம். அவரை வணங்கவும், அவருடைய வாக்குறுதிக்கு செவி கொடுக்கவும், அவருக்கு பயந்து நடக்கவும் கடவாய் (யாத்திராகமம் 23: 20, 23)

முடிவில்: 
பரிசுத்த பரலோக நாதரே, துன்புறும் எங்களை ஆசீர்வதியும். 

இயேசுவை நோக்கி இரக்கத்திற்கான ஜெபம்.

ஆண்lவராகிய இயேசுவே, எங்கள் மேல் இரக்கம் வையும். எங்கள் மேல் இரக்கமாயிரும். எங்களைத் தீர்ப்பிடாதேயும். எங்கள் மூதாதையர், எங்கள் சகோதர, சகோதரிகள் வழி வந்த எல்லாக் குற்றங் குறைகளையும், பாவங்களையும், மன்னித்தருளும். எங்களுக்கு வரப்போகும் தண்டனையை விலக்கி விடும். எங்களை உமது சொந்தப் பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டு உமது ஆவியால் எங்களை வழி நடத்தியருளும்.

ஆமென்.

சர்வேசுரனின் இரக்கத்தின் நவநாள் ஜெபங்கள் - ஒன்பதாம் நாள்.

சங் சகோதரி பவுஸ்தீனாவின் நாள் குறிப்பேட்டிலிருந்து எடுக்கப்பட்டது.

வெதுவெதுப்புள்ள ஆன்மாக்களுக்காக.

"இன்று வெது வெதுப்புள்ள ஆன்மாக்களை என்னிடம் அழைத்து வந்து, எனது இரக்கத்தின் ஆழத்தில் மூழ்க விடு. இவ்வான்மாக்கள் எனது உள்ளத்தை மிகவும் நோகச் செய்கிறார்கள். இந்த வெதுவெதுப்புள்ள ஆன்மாக்களாலேயே நான் ஜெத்சமனிப் பூங்காவில் பயங்கர வேதனைகள் அனுபவித்தேன். அவ்விடத்தில், பிதாவே, உமக்கு சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னை விட்டு அகலட்டும் என்று நான் கூறியதற்குக் காரணம் இவர்கள்தாம். இவர்களுக்கு என் இரக்கத்தை நோக்கி ஓடி வருவது ஒன்றுதான் மீட்பின் கடைசி நம்பிக்கை" என்றார் நமதாண்டவர்.

மிகவும் இரக்கமுள்ள சேசுவே! நீர் கருணையே வடிவானவர். கருணை மிகுந்த உமது இருதய வீட்டில் இந்த வெது வெதுப்புள்ள ஆன்மாக்களை அழைத்து வருகிறேன். உம்மை இத்தனை துயரத் தில் ஆழ்த்திய நடைப்பிணம் போன்ற, பக்தியற்ற இவ்வான்மாக்களின் உள்ளங்களை, உமது தூய அன்பின் அக்கினி, மறுபடியும் கொழுந்து விட்டு எரியச் செய்வதாக. கருணை மிகுந்த சேசுவே, உமது இரக்கத்தின் வல்லமையைப் பயன்படுத்தி, உமது அன்பின் அனலுக்குள் இவர்களை இழுத்து, புனித அன்பாகிய கொடையை இவர்களுக்கு அருள்வீராக. உமது வல்லமைக்கு அப்பாற் பட்டது எதுவுமேயில்லை.

நித்திய பிதாவே! கனிவு மிக்க சேசுவின் இருதயத்தில் கூட்டிச் சேர்க்கப்பட்டுள்ள இந்த வெதுவெதுப்புள்ள ஆன்மாக்கள் மீது உமது கருணைக் கண்ணைத் திருப்பியருளும். இரக்கத் தின் தந்தாய்! உமது திருக்குமாரனின் கசப்பான பாடுகளைப்பற்றியும், சிலுவையில் மூன்று மணி நேரமாக அவர் அனுபவித்த கடின மரண வேதனையைப் பற்றியும் உம்மைக் கெஞ்சிக் கேட்கிறேன். இவர்களும் உமது எல்லையற்ற இரக் கத்தை மகிமைப்படுத்துவார்களாக.

ஆமென்.

சர்வேசுரனின் இரக்கத்தின் நவநாள் ஜெபங்கள் - எட்டாம் நாள்.

சங் சகோதரி பவுஸ்தீனாவின் நாள் குறிப்பேட்டிலிருந்து எடுக்கப்பட்டது.

உத்தரிக்கிற ஆன்மாக்களுக்காக.

"இன்று உத்தரிக்கும் ஸ்தலமாகிய சிறைக் கூடத்தில் உள்ள ஆன்மாக்களைக் கூட்டி வந்து என் இரக்கத்தின் ஆழத்தில் அமிழ்த்து. என் இரக்கம் இவர்களைச் சுட்டெரிக்கும் தீப்பிழம்புகளைக் குளிரச் செய்யட்டும். இவ்வான்மாக்கள் அனைவரும் என்னால் அதிகம் நேசிக்கப்படுகிறார்கள். என் நீதிக்கு பரிகாரம் செய்கிறார்கள். இவர்களுக்கு விடுதலை அளிப்பது உன் கையில் இருக்கிறது. எனது திருச்சபையின் பொக்கிஷத்தினின்று எல்லாப் பலன்களையும் எடுத்து இவர்களுக்காக ஒப்புக்கொடு. இவர்கள் அனுபவிக்கும் வேதனைகளை நீ அறிவாயானால், இடைவிடாது அர்ப் பணித்து எனது நீதிக்கு இவர்கள் செலுத்த வேண்டிய கடனைத் தீர்ப்பாய்'' என்றார் சேசு.

இரக்கம் நிறைந்த சேசுவே! நீர் இரக்கத்தையே விரும்புவதாக நீரே மொழிந்தீர். எனவே இரக்க மிகுந்த உமது இருதய இல்லத்தினுள்ளே உத்தரிக் கிற ஆன்மாக்களை அழைத்து வருகிறேன். அவர்கள் உமது அன்பர்கள். ஆயினும் உமது நீதிக்கு உத்தரிக்க வேண்டியவர்கள். உமது இருதயத்திலிருந்து பீறிட்டு வரும் இரத்தமும் நீருமாகிய அருவிகள் இவர்களைச் சுத்திகரித்து அனற்பிழம்பு களை அணைக்கட்டும். இவ்விடத்திலும் உமது இரக்கத்தின் வல்லமை கொண்டாடப்படட்டும்.

நித்திய பிதாவே! உத்தரிக்கிற ஸ்தலத்தில் வேதனைப்படும் ஆன்மாக்கள் மீது உமது கருணைக் கண்ணைத் திருப்பியருளும். அவர்கள் இரக்கம் நிறைந்த சேசுவின் இருதயத்தில் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளார்கள். உமது திருக்குமாரன் சேசுவின் வேதனை நிறைந்துள்ள பாடுகளைக் குறித்தும், அவரது திரு இருதயத்தின் துயரத்தைக் குறித்தும் உம்மை மன்றாடுகிறோம். உமது நீதியின் தீர்ப்பில் நிற்கும் இவ்வான்மாக்களுக்கு உமது இரக்கத்தைக் காட்டியருளும். உமது நேச குமாரன் சேசுவின் திருக்காயங்கள் வழியாக இவர்களை நோக்கும். உமது நன்மைத்தனத்திற்கும், இரக்கத்திற்கும் எல்லையேயில்லை என்று நாங்கள் உறுதியாக விசுவசிக்கிறோம்.

ஆமென்.

சர்வேசுரனின் இரக்கத்தின் நவநாள் ஜெபங்கள் - ஏழாம் நாள்.

சங் சகோதரி பவுஸ்தீனாவின் நாள் குறிப்பேட்டிலிருந்து எடுக்கப்பட்டது.

சர்வேசுரனின் இரக்கத்தை சிறப்பாக மகிமைப்படுத்தி, வணங்கும் ஆன்மாக்களுக்காக.

"இன்று எனது இரக்கத்தைச் சிறப்பாக மகிமைப்படுத்தி வணங்கும் ஆன்மாக்களை அழைத்து வந்து என் இரக்கத்தில் மூழ்கச் செய். இவ்வான்மாக்கள் எனது பாடுகளை எண்ணி, வருந்தி என் ஆன்மாவோடு ஆழ்ந்து ஒன்றிக்கிறார்கள். எனது இரக்கமுள்ள இருதயத்தின் உயிருள்ள சாயல்கள் இவர்கள். இவ்வான்மாக்கள் மறுவாழ்வில் விசேஷ ஒளியோடு பிரகாசிப்பார்கள். இவர்களில் ஒருவரும் நரக நெருப்பில் விழ மாட்டார்கள். இவர்களின் மரண வேளையில் அவர்களை நான் பாதுகாப்பேன்'' என்றார் சேசு.

அன்பையே இருதயமாகக் கொண்ட இரக்க மிகுந்த சேசுவே! உமது இரக்கத்தின் உயர்வைச் சிறப்பாகப் போற்றி வணங்கும் ஆன்மாக்களை உம் இரக்கமிகுந்த இருதய இல்லத்தில் ஏற்றுக் கொள்ளும். சர்வேசுரனின் வல்லமையைக் கொண்டு இவர்கள் வலிமை பெறுகிறார்கள். இவர்கள் துன்பங்கள் இடைஞ்சல்களுக்கு நடுவே கடவுளின் இரக்கத்தில் முன்னேறிச் செல்பவர்கள். இவ்வான்மாக்கள் மனுக்குலம் முழுவதையும் தங்கள் தோள்களில் சேசுவோடு இணைந்து சுமந்து செல்கின்றார்கள். இவர்கள் கடுமையாகத் தீர்வை யிடப்படமாட்டார்கள். இவ்வுலகை விட்டுப் பிரியும்போது உமது இரக்கம் இவர்களை அணைத்துச் செல்லும்.

நித்திய பிதாவே! உமது மிகச் சிறந்த இயல்பாகிய ஆழங்காணமுடியாத இரக்கத்தைப் போற்றி வணங்கும் ஆன்மாக்கள் மீது, உமது கருணைக் கண்ணைத் திருப்பியருளும். சேசுவின் கருணை நிறைந்த இருதயத்தில் இவர்கள் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் சுவிசேஷத்தின்படி வாழ்பவர்கள். இவர்களின் கரங்கள் இரக்கத்தின் செயல்களால் நிரம்பியவை. மகிழ்ச்சி பொங்கி வழியும் இவர்கள் இருதயம், உன்னதராகிய உமக்கு இரக்கத்தின் கீதத்தை இசைக்கும். சர்வேசுரா! உம்மை வேண்டுகிறேன். இவர்கள் உம்மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு அளவாக இவர்களுக்கு உமது இரக்கத்தைக் காண்பியும். ஆழங்காண முடியாத உமது இரக்கத்தை வணங்கும் ஆன்மாக்களை, வாழ்விலும் முக்கியமாக கடைசி வேளையிலும், "என் சொந்த மகிமை எனக் கருதிப் பாதுகாப்பேன்'' என்று சேசுவே கூறிய அந்த வாக்குறுதி நிறைவேறுமாக!

ஆமென்.

சர்வேசுரனின் இரக்கத்தின் நவநாள் ஜெபங்கள் - ஆறாவது நாள்.

சங் சகோதரி பவுஸ்தீனாவின் நாள் குறிப்பேட்டிலிருந்து எடுக்கப்பட்டது.

குழந்தைகள், தாழ்ச்சியும் சாந்தமுமுள்ள ஆன்மாக்களுக்காக.

"இன்று சாந்தமும் தாழ்மையுமுள்ள ஆன்மாக்களையும் சிறு குழந்தைகளின் ஆன்மாக்களையும் என்னிடம் அழைத்து வா. என் இரக்கத்தில் மூழ்க வை. இவ்வான்மாக்கள் என் இருதயத்தை மிகவும் ஒத்திருக்கிறார்கள். எனது கசப்பான வேதனையில் எனக்கு சக்தியளித்தார்கள். எனது பீடங்களின் அடியில் விழித்துக் காத்திருக்கும் உலக வானதூதர்களாக இவர்களைக் காண்கிறேன். இவர்கள் மேல் எனது அருளைப் பொழிகிறேன். தாழ்மையான ஆன்மாக்கள் மட்டுமே என் வரப்பிரசாதத்தைப் பெறமுடியும். இவர்கள் மட்டுமே என் நம்பிக்கைக்கு உரியவர்கள்'' என்றார் சேசு.

இரக்கம் நிறை சேசுவே! நான் சாந்தமும் இருதயத் தாழ்ச்சியும் உள்ளவன், என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள் என்று நீர்தாமே சொல்லி இருக்கிறீர். சாந்தமும் தாழ்மையுமுள்ள ஆன்மாக்களையும், சிறு குழந்தைகளின் ஆன்மாக்களையும் இரக்கம் மிகுந்த உமது இருதய வீட்டில் ஏற்றுக் கொள்ளும். இவ்வான்மாக்கள் பரலோக பரவசத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். இவர்கள் பரம பிதாவின் செல்லக் குழந்தைகள். சர்வேசுரனின் அரியாசனத்தின் முன் இவர்கள் மணம் வீசும் மலர்க் கொத்து ஆவார்கள். இவர்களது நறுமணத்தில் சர்வேசுரன் இன்பம் கொள்கிறார். இவர்களுக்கு இரக்கம் நிறைந்த சேசுவின் இதயத்தில் நிலையான இடமுண்டு. இவர்கள் அன்பு இரக்கம் பற்றிய பாடல்களை இடையறாது பாடுகிறார்கள்.

நித்திய பிதாவே! சாந்தம் உள்ள ஆன்மாக்கள், தாழ்மையுள்ள ஆன்மாக்கள், குழந்தைகள் இவர்கள் மேல் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். இவர்கள் சேசுவின் இரக்கம் மிகுந்த இருதய வீட்டில் ஒன்று சேர்ந்துள்ளார்கள். இவர்கள் உமது திருக்குமாரனின் சாயலை மிகவும் ஒத்திருக்கிறார்கள். இவ்வான்மாக்களின் நறுமணம் மண்ணுலகிலிருந்து எழுந்து உமது அரியணையை அடைகின்றது. எல்லா நன்மைக்கும் இரக்கத்திற்கும் தந்தையே! இந்த ஆன்மாக்கள் மட்டில் உமக்குள்ள அன்பையும் மகிழ்ச்சியையும் குறித்து நான் வேண்டுகிறேன். உலக முழுவதையும் ஆசீர்வதியும். எல்லா ஆன்மாக் களும் ஒன்றுசேர்ந்து, உமது இரக்கத்தை முடிவில் லாக் காலம் புகழ்ந்தேத்துவார்களாக!

ஆமென்.

சர்வேசுரனின் இரக்கத்தின் நவநாள் ஜெபங்கள் - ஐந்தாம் நாள்.

சங் சகோதரி பவுஸ்தீனாவின் நாள் குறிப்பேட்டிலிருந்து எடுக்கப்பட்டது.

வேதவிரோதிகள், பிரிவினைக்காரரின் ஆன்மாக்களுக்காக.

"இன்று பிரிந்துபோன சகோதரர்களின் ஆன்மாக்களைக் கொணர்ந்து என் இரக்கப் பெருங்கடலில் அமிழ்த்து. எனது கசப்பான பாடுகளின் போது எனது உடலையும் உள்ளத்தையும் (அதாவது என் திருச்சபையை) இவர்கள் கிழித்தார்கள். திருச்சபையின் ஒற்றுமைக்கு இவர்கள் வந்து சேர்ந்தால்தான் என் காயங்கள் குணமாகும். இதன் வழியாக இவர்கள் எனது பாடுகளின் அகோரத்தைத் தணிப்பார்கள்'' என்றார் சேசு.

இரக்கமிகுந்த சேசுவே! நன்மையின் உருவே ! உம்மிடம் ஒளியைத் தேடும் எவருக்கும் நீர் மறுத்ததில்லை. பிரிந்து போன எம் சகோதரர்களை இரக்கமிகுந்த உம் இருதய இல்லத்தில் ஏற்றுக் கொள்ளும். உமது ஒளியால் இவர்களைத் திருச்சபையின் ஒன்றிப்புக்கு இழுத்தருளும். உமது இரக்கத்தின் தாராளத்தை இவர்களும் புகழ வருவார்களாக!

நித்திய பிதாவே! பிரிந்து போன எமது சகோதரர்களின் ஆன்மாக்கள் மீதும், விசேஷமாய் தங்கள் தப்பறையில் பிடிவாதமாக ஊன்றி நின்று உமது வரப்பிரசாதத்தை விரயம் செய்து உமது ஆசீரை உதறிவிட்டவர்களின் மீதும், உமது கருணைக் கண்ணைத் திருப்பியருளும். இவர் களது குறைகளைப் பாராமல், உமது சொந்த குமாரனின் அன்பையும், இவர்களுக்காக அவர் அனுபவித்த கசப்பான பாடுகளையும் பார்த் தருளும். ஏனெனில் இவர்களும் சேசுவின் கருணை மிகுந்த இருதய இல்லத்தில் வைக்கப் பட்டுள்ளார்கள். ஊழிக்காலம் உமது பெரும் இரக்கத்தை இவர்களும் புகழ்ந்தேத்துவார்களாக!

ஆமென்.

சர்வேசுரனின் இரக்கத்தின் நவநாள் ஜெபங்கள் - நான்காம் நாள்.

சங் சகோதரி பவுஸ்தீனாவின் நாள் குறிப்பேட்டிலிருந்து எடுக்கப்பட்டது.

நாஸ்திகர், கடவுளை அறியாத மக்களுக்காக.

"இன்று நாஸ்திகர்களையும், இன்னும் என்னை அறியாதவர்களையும் என்னிடம் கொண்டு வா. எனது கசப்பான பாடுகளின்போது இவர்களையும் நான் நினைத்துக் கொண்டேன். என்னை அறிய வேண்டுமென்ற இவர்களது எதிர்கால ஆர்வம் என் இருதயத்துக்கு ஆறுதலாய் இருந்தது. எனது இரக்கமாகிய மாபெரும் கடலில் இவர் களை ஆழ்த்திவிடு" என்றார் சேசு.

இரக்கம் நிறைந்த சேசுவே! நீரே உலகின் ஒளி. உம்மை இன்னும் அறியாத நாஸ்திகர்களை உமது வரப்பிரசாதம் மிகுந்த உள்ளமாகிய இல்லத்தில் ஏற்றுக்கொள்ளும். உமது அருட்கதிர் அவர்களுக்கு ஒளி ஊட்டுவதாக! இவர்களும் எம்மோடு இணைந்து உமது அளவற்ற இரக்கத்தைப் போற்றி ஏற்றுக் கொள்வார்களாக! உமது உள்ளமாகிய இல்லத்திலிருந்து இவர்கள் பிரிந்து போகா வண்ணம் பாதுகாப்பீராக!

நித்திய பிதாவே, இரக்கமிகுந்த சேசுவின் இருதயத்தில் வைக்கப்பட்டுள்ள நாஸ்திகர்மீதும் உம்மை இன்னும் அறியாதவர்கள் மீதும் உமது கருணைக் கண்ணைத் திருப்பியருளும். இவர்களை சுவிசேஷத்தின் ஒளிக்கு இழுத்தருளும். உம்மை நேசிப்பது எத்துணை இன்பம் என்பதை இவர்கள் அறியார்கள். இவர்களும் உமது இரக்கத் தாராளத்தை ஊழிக்காலமும் வாழ்த்த வரமருள்வீராக!

ஆமென்.