அர்ச். மரிய மதலேனம்மாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அர்ச். மரிய மதலேனம்மாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அர்ச். மரிய மதலேனம்மாள் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச். மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அர்ச்சியசிஷ்ட மரிய மதலேனம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மனந்திரும்பின பின்பு மனிதருடைய நிந்தைகளுக்கு அஞ்சாமல் உம்முடைய தவறுகளை அறிந்தவர்களுக்கு முன்பாக உம்முடைய பாவங்களுக்கு மனஸ்தாபப்பட்டு உமது கண்ணீர்களால் சேசுநாதருடைய பாதங்களைக் கழுவி உமது தலைமுடியால் அவைகளைத் துடைத்து அவைகளை பக்தி வணக்கத்தோடே முத்தமிட  வந்தவளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பரிசேயர் உம்மை நிந்தித்தபோது, ஆண்டவரால் பரிந்து பேசி ஆறுதலளிக்கப்பட்டவளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மிகுந்த தேவசிநேகமுள்ளவளானதினால் மிகுந்த பாவங்கள் பொறுக்கப்பட்டவளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுநாதர் விசேஷ தயையோடே நேசித்த குடும்பத்தவளாயிருந்தவளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுநாதருடைய திருப்பாதத்தில் அவருடைய திருவாக்கியங்களைக் கேட்கிறதிலே அத்தியந்த ஞானானந்தம் அடைந்தவளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஆத்தும இரட்சணியமாகிய ஒரே காரியம் அவசரமென்று திவ்விய போதகர் திருவுளம் பற்றின உந்நத வாக்கியத்தை நன்றாகக் கண்டு பிடித்து அநுசரித்தவளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அலுவல்களிலே உத்தம பங்காகிய செபத்தியான யோகத்தைத் தெரிந்து கொண்டவளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தவ சீவியத்தின் உத்தம மாதிரிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

செபத் தியான யோகத்தின் உச்சிதமான மாதிரிகையானவளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

திவ்விய இரட்சகர் சுவிசேஷத்தைப் பிரசங் கிக்கச் சுற்றி வருகையில் அநேக புண்ணிய ஸ்திரீகளோடு அவரைப் பின்சென்றவளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உமது வீட்டில் அவருக்கு இல்லிடமும் போசனமும் கொடுத்தவளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஆண்டவரே, தேவரீர் சிநேகிக்கிறவன் வியாதியா யிருக்கிறான் என்கிற இயல்பான மன்றாட்டினால் லாசரென்பவரைச் சொஸ்தப்படுத்தத் திவ்விய கர்த்தரை மன்றாடினவளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உமது சகோதரனாகிய லாசர் மரித்த நாலாம் நாள் நீர் இன்னமும் மிகவும் துக்கிக்கிறபோது, குரு வந்திருக்கிறார், உன்னை அழைக்கிறார் என்று மார்த்தாள் உமக்குச் சொன்னதைக் கேட்டவுடனே நம்பிக்கை நிறைந்தவளாய் எழுந்து போனவளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உமது அழுகையால் சேசுநாதருக்கு இரக்க மும் பரிவும் நடுக்கமும் கண்ணீரும் வருவித் தவளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுநாதர் லாசரைக் கல்லறையினின்று உயிர்ப்பிக்கும் புதுமையை உமது மன்றாட்டினால் பெற்றவளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுநாதர் மரிக்கிறதற்கு ஆறு நாளைக்கு முந்தி அவருடைய திருத்தலை மேலும் பாதங்களின் மேலும் பரிமளத் தைலம் வார்த்து அவருடைய பாதங்களை உமது தலைமுடியால் துடைத்தவளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கபால மலைப் பாதையில் சேசுநாதர் சுவாமி யைப் பின்சென்றவளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தேவமாதாவோடும், சேசுநாதருடைய நேச சீஷனோடும் அவர் அறையுண்ட சிலுவை அடி யிலே துக்கித்து நின்றவளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பக்தியுள்ள சில சீஷர்கள் சேசுநாதரை அடக்கம் செய்கிறபோது அங்கே கூட இருந்தவளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அவர் மரித்தபின் மூன்று நாளையும் அழுகை யில் செலவழித்தவளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அவர் அடக்கம் செய்யப்பட்டபோது அவருக்குப் பூசப்பட்ட பரிமள வர்க்கங்கள் போதாதென்று எண்ணி, அவருடைய திருமேனிக்கு மறுபடி சுகந்த வர்க்க தைலங்களைப் போடத்தக்கதாக அவர் உயிர்த்த நாள் உதயத்தில் கல்லறைக்கு ஓடி வந்தவளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உம்முடைய கண்ணீர்களாலும், பக்தி தேவ சிநேகத்தினாலும், கல்லறையில் நின்று உயிர்த்த கர்த்தரை முதலாவதாகக் காணும் பாக்கியம் பெற்றவளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

துயரத்தில் நீர் அவரை அறியாமல் தோட்டக் காரனென்று எண்ணுகிறபோது, அவருடைய குரல் சத்தத்தாலும் தயை நோக்கத்தாலும் மரியே என்று அவர் சொன்ன வார்த்தையினாலும் அவரை அறிந்தவளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஆகையால் அத்தியந்த சந்தோஷப்பட்டு, ஆண்டவரே, நல்ல குருவே என்று சொல்லி உமக்கு அடைக்கலமான அவருடைய திருப் பாதத்தை முத்தமிட வந்தவளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அப்போது நாம் இன்னும் நமது பிதாவி னிடத்தில் எழுந்து போகவில்லை, ஆதலால் நீ என்னைத் தொடவேண்டாம் என்று ஆண்டவ ராலே சொல்லப்பட்டவளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அவர் தம்முடைய சகோதரரென்று சொல் லிய அவருடைய சீஷர்களுக்கு அவர் உயிர்த்த சந்தோஷச் செய்தியை அறிவிப்பதற்கு அவரால் அனுப்பப்பட்டவளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

திவ்விய கர்த்தர் பரலோகத்துக்கு எழுந் தருளிப் போனதைக் கண்ணாலே கண்டவளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

யூதர், மார்த்தாளும் லாசருமென்கின்ற உம்முடைய சகோதரர்களோடே உம்மை உயிர்ச் சேதப்படுத்த உம்மைப் பாழுங் கப்பலில் ஏற்றி விட்டபோது, மார்சே என்னும் காலியா தேசத்து பட்டணத்திற்கு சர்வேசுரனால் அற்புதமாய் செலுத்தப்பட்டவளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அத்தேசத்திலுள்ள ஓர் உயர்ந்த மலையில் செபத் தியானத்திலும் தவத்திலும், பக்தியின் கண்ணீரிலும் மரணமட்டும் உமது காலத்தை செலவழித்தவளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அவ்விடத்தில் சம்மனசுக்களுடைய இன்ப மான சங்கீதங்களிலே பங்காளியாக சேர்த்துக் கொள்ளப்பட்டவளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நீர் இவ்வுலகத்தில் தரிசித்து விசுவசித்து நம்பி குறையற்ற நேசத்தால் சிநேகித்த திவ்விய இரட் சகராகிய சேசுநாதரை மறுபடி பரலோகத்தில் தரிசிக்கும்படி சரீரத்தை விட்டுப் பிரியவும், பரலோகத்தில் சேரவும் அத்தியந்த ஆவலோடே அபேட்சித்தவளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

யூதர் பைத்தியமென்று தூஷித்த திருச்சிலுவையின் இரட்சணிய போதகத்தை ஏக ஞானமாக மதித்து அநுசரித்தவளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நீர் இவ்வுலகத்திலே அத்தனை பக்தியோடே நேசித்த கர்த்தரின் பாதத்திலே சேர்ந்திருக்கிறதினால் பரலோகத்தில் அளவில்லாத பேரின்ப பாக்கியத்தை அனுபவிக்கிறவளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

அடியோர்கள் தவத்தினால் எங்கள் பாவங்களுக்குப் பரிகாரம் செய்து மெய்யான தேவ சிநேகத்தை அடையத்தக்கதாக, அர்ச். மரியமதலேனம்மாளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வ வல்லபராகிய சர்வேசுரா!  தேவரீர்  அர்ச். மரிய மதலேனம்மாளுடைய இருதயத்திலே தேவ சிநேக அக்கினியின் சுவாலையை மிகவும் பற்றியெரியச் செய்ததினால் அவள் உமது திருக் குமாரனாகிய சேசுக்கிறீஸ்துநாதருடைய திரு மரணத்திற்கு முன்னும் பின்னும் அவர் மட்டில் மெய்யான பரிசுத்த தேவசிநேகத்தின் கடமை களை நிறைவேற்ற மாறாத பக்தி ஜாக்கிரதையா யிருக்கும்படியாகச் செய்தருளினீரே.  அவள் தனது பாவங்கள் எல்லாத்துக்கும் நிவாரணமடைந்து உயிர்த்தெழுந்தருளின உம் திருக்குமாரனை அவருடைய திருமாதாவுக்குப் பின் முதலானவ ளாய்த் தரிசிக்க பாக்கியம் பெற்றதுபோல உம்முடைய கிருபையிடத்தில் அடியோர்களு டைய பாவங்களுக்குப் பொறுத்தலை அடைந்து தேவரீரையும் தேவரீருடைய குமாரனாகிய சேசு நாதரையும் பரலோகத்தில் தரிசிக்கும் பாக்கி யத்தை எங்களுக்கு பெறுவிக்கும்படியாகத் தயை அனுக்கிரகம் செய்தருளும் சுவாமி.  உமது திருக் குமாரனும், எங்கள் ஆண்டவருமாகிய சேசுநாத ருடைய திருமுகத்தைப் பார்த்து இந்த மன்றாட்டுக்களை எங்களுக்குத் தந்தருளும்.

ஆமென்.

அர்ச். மரிய மதலேனம்மாளை நோக்கி ஜெபம்

(திருநாள் : ஜு லை 22)

அர்ச். மரியமதலே னம்மாளே!  சேசுக்கிறீஸ்து நாதருக்குப் பிரியப்பட்டவளே, உத்தம மனஸ்தாபத்தினுடையவும் தியானத்தினுடையவும் ஆசையுள்ள சிநேகத்தினுடையவும் பாத்திரமே, உமது கண்ணீரால் சேசுநாதரின் பாதத்தைக் கழுவி அதிகமாய் சிநேகித்ததினால் அவர் உம்மை மிகவும் நேசித்து மகிமையாலும் சங்கையாலும் உமக்கு முடி தரித்ததினால் நான் உம்மை வாழ்த்துகிறேன். ஓ! சேசுக்கிறீஸ்துநாதருடைய நேசகியே! உமது மன்றாட்டினால் இறந்துபோன உம் சகோதரனான லாசர் என்பவர் உயிரோடு எழுப்பப்பட வரமடைந்தீரே. நான் எப்போதும் பரிசுத்தமான ஜீவியத்தின் அலங்காரத்தில் உயரும்படி எனக்காக மன்றாடும்.  என் ஆத்தும விரதமாகிய பச்சாத்தாபத்தின் கண்ணீரை உம்மைப் போல அவருடைய பாதத்தில் சிந்தவும் உம்மைப் போல பாவப் பொறுத்தலின் வாக்கியத்தைப் பெறவும் செய்தருள வேண்டுமென்று நீர் சேசுக் கிறீஸ்துநாதரிடத்தில் ஏராளமாய் பெற்றுக் கொண்ட வரப்பிரசாதத்தைக் கொண்டு உம்மை மன்றாடுகிறேன்.  உமது வனவாசத்தாலும் நீர் அவரோடு செய்த ஆச்சரியமான சம்பா­னை யாலும் நான் தனி வாச ஆசையையும், பரிசுத்த தியானத்தின் இஸ்பிரீத்தையும் அடையச் செய் தருளும்.  மதுரமுள்ள மரியமதலேனம்மாளே!  உத்தம மனஸ்தாபப்படுகிறவர்களுடைய நம்பிக் கையே, உம்மைத் தெரிந்து கொண்டவர்களு டைய ஆனந்தமே, மோட்சத்தின் அலங்காரமே, சேசுக்கிறீஸ்துநாதருடைய நேசகியே, உமது புண்ணியங்களைக் கண்டுபாவிக்க எனக்கு வேண்டிய தைரியத்தை உமது வேண்டுதலினால் எனக்குப் பெற்றருளும். 

ஆமென்.