அர்ச். ஆரோக்கியநாதர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அர்ச். ஆரோக்கியநாதர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அர்ச். ஆரோக்கியநாதர் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சம்மனசுக்களுக்கு இராக்கினியான அர்ச். மரியாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அர்ச். ஆரோக்கியநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுநாதருக்கும் தேவமாதாவுக்கும் செய்யப் பட்ட பக்தியுள்ள வேண்டுதலால் உற்பவித்த அர்ச். ஆரோக்கியநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

திரவிய சம்பன்னரான தாய் தகப்பனிடத் திலும் உயர்ந்த வம்சத்திலும் பிறந்த அர்ச். ஆரோக்கியநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தாயின் கர்ப்பத்தில்தானே உமது சரீரத்தில் அர்ச். சிலுவை பதியப்பட்டு பிறக்க வரம் பெற்றவ ரான அர்ச். ஆரோக்கியநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சிறுவயதில்தானே புண்ணியத்தின் பேரிலே மிகுந்த பிரியத்தைக் காண்பித்துப் பன்னிரண் டாம் பிராயத்திலே உமது சரீரத்தைத் தவத் தினாலும் உபவாசத்தினாலும் ஒறுத்தவரான அர்ச். ஆரோக்கியநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அரிய தவத்தினாலும் செபத்தினாலும் ஆசாபாசத்தைக் கீழ்ப்படுத்தினவரான அர்ச். ஆரோக்கியநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உமது தாய் தகப்பன் இறந்தவுடனே சகல ஆஸ்திகளையும் விற்று ஏழைகளுக்குக் கொடுத் துத் தகப்பன் காணியாட்சிகளை உம்முடைய நன்மாமன் வசம் ஒப்புவித்து உலகத்தை வெறுத் துத் துறந்தவரான அர்ச். ஆரோக்கியநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஜென்ம தேசத்தையும் சிநேகிதர்களையும் உறவினர்களையும் விட்டு அர்ச். பிரான்சீஸ்குவின் மூன்றாம் சபையில் உட்பட்டவரான அர்ச். ஆரோக்கியநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உரோமாபுரியில் அர்ச்சியசிஷ்ட ஸ்தலங்களைச் சந்திக்கத் தரித்திர வேஷம் கொண்டு இத்தாலி தேசத்திற்குப் போனவரான அர்ச். ஆரோக்கிய நாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அந்தத் தேசத்திலேயும் மிகவும் பரவியிருந்த கொள்ளைநோயில் நின்று சிலுவையின் அடை யாளத்தால் திரளான சனங்களைக் குணமாக்கின  அர்ச். ஆரோக்கியநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இத்தாலி தேசத்தைச் சேர்ந்த அநேக இராச்சியங் களிலே கொள்ளை நோயால் சாவுக்கு ஆயத்தப்பட்டவர்களுக்கு ஆரோக்கியம் தந்த அர்ச். ஆரோக்கியநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சர்வேசுரன் உம்மைக் கொண்டு செய்து வந்த நவமான அதிசயத்தைக் கண்டு ஆச்சரியப்பட்ட ஜனங்களால் மிகவும் துதிக்கப்பட்ட அர்ச். ஆரோக்கியநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பின்னும் உமக்கு வந்த கொள்ளை நோய் முதலிய துன்ப துரிதங்களை எல்லாம் பொறுமை யோடு அனுபவித்து மகிமையான மோட்ச முடியை உறுதிப்படுத்திக் கொண்டவரான அர்ச். ஆரோக்கியநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஆண்டவரால் அருளப்பட்ட அகோரமான காய்ச்சல் உமக்கு வந்தபோது உமது பெருந்தொடை யானது அம்பால் ஊடுருவப்பட்டாப்போல் கடும் இரணப்படப் பேறுபெற்ற அர்ச். ஆரோக்கிய நாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அந்த நோக்காடுகளை மிகுந்த ஆச்சரியமான பொறுமையோடும் சந்தோ­த்தோடும் அனுப வித்தவரான அர்ச். ஆரோக்கியநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஜென்ம தேசத்திற்கு வரும்போது வழியிலே மறுபடியும் வியாதியால் கஷ்டப்பட்டு சர்வேசுர னுடைய ஆதரவால் மனிதருடைய சகாயமின்றிக் காட்டிலே படுத்திருந்தவரான அர்ச். ஆரோக்கிய நாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அந்தக் காட்டிலே வியாதியாயிருக்கும்போது சர்வேசுரன் தயவால் நாயைக் கொண்டு உமது சீவனத்திற்கு அப்பம் கொண்டுவர வரம்பெற்ற அர்ச். ஆரோக்கியநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உமது ஜென்மப் பட்டணத்தில் நுழைந்தவுடன் வேவுகாரனைப் போல் பிடித்துச் சிறையில் அடைக்கப்பட்டவரான அர்ச். ஆரோக்கிய நாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அந்தப் பட்டணத்துக்கு உம்முடைய மாமன் அதிபதியாயிருந்தாலும் உம்மை இன்னாரென்று காண்பிக்க மனதில்லாதவரான அர்ச். ஆரோக்கிய நாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உம்முடைய சுய பிரஜைகளால் சேசுநாதரைப் பற்றிச் சகல நிர்ப்பந்தங்களையும் அனுபவித்து மரணமடைய ஆசை கொண்டவரான அர்ச். ஆரோக்கியநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உமது சாவு நெருங்கினதென்றறிந்து மிகுந்த பக்தியோடே தேவதிரவிய அனுமானங்களைப் பெற்றுச் சாவுக்கு ஆயத்தம் செய்தவரான அர்ச். ஆரோக்கியநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நீர் ஐந்து வருட காலமாய்ச் சிறையில் அடை பட்ட பிறகு கொள்ளை நோயால் இறக்க அஞ்சாத தைரியத்துடனே ஏக சர்வேசுரனை தியானித்த பிறகு அந்த வியாதியால் மரணமடைந் தவரான அர்ச். ஆரோக்கியநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கொள்ளை நோயில் உம்மை மன்றாடினவர் கள் தீமையின்றிக் காப்பாற்றப்படுவார்கள் என்று ஏக சர்வேசுரன் தமது சம்மனசைக் கொண்டு அறிவிக்க வரம் பெற்றவரான அர்ச். ஆரோக்கிய நாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கொள்ளைநோய் கொண்டவர்கள் உம்மை மன்றாடினால் ஆரோக்கியம் அடைவார்கள் என்று உமது சரீரத்தின் பக்கத்தில் ஒரு சிறு பலகையில் எழுதப்பட வரம் பெற்றவரான அர்ச். ஆரோக்கியநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உம்மை வேவுகாரனுமாய்க் குற்றவாளியுமாய் எண்ணின உமது மாமன் உம்மை இன்னாரென்று அறிந்த மாத்திரத்தில் அவனால் மிகுந்த கஸ்தி வியாகுலத்துடனே  சந்திக்கப்பட்டவரான அர்ச். ஆரோக்கியநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உமது திருச்சரீரம் வெகு ஆடம்பரத்துடனேயும், வணக்கத்துடனேயும் அடுத்த கோவிலிலே அவனால் நல்லடக்கம் செய்யப்பட்ட அர்ச். ஆரோக்கியநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கொன்ஸ்தான்ஸ் என்கிற பட்டணத்தில் சாதாரண திருச்சங்கமாகக் கூடின மேற்றிராணி மார்கள் உமது அர்ச்சிஷ்டதனத்தை வெகு ஆடம்பரத்துடனே கொண்டாடினபோது அங்கே யிருந்த கொள்ளை நோய்களையயல்லாம் போக்கடித்தவரான அர்ச். ஆரோக்கியநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வெனீஸ் என்கிற பட்டணத்திலே விசேஷமாய் சரீரம் வெகு வணக்கம் பெற்றிருக்கவும், அதை சந்திக்கிறவர்களுக்கு அநேக நன்மைகளைச் செய்யவும் வரம் பெற்றவரான அர்ச். ஆரோக்கிய நாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எங்கள் பேரில் ஆண்டவர் கொண்டிருக்கும் தேவகோபாக்கினைகளான பஞ்சம், படை, கொள்ளை, வியாதி, பெருவாரி இவை முதலான வைகளில் நின்று எங்களை இரட்சிக்க எங்களுக் காக மன்றாடுகிறவரான அர்ச். ஆரோக்கியநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வ வல்லபமுள்ள சர்வேசுரா சுவாமி!  கொள்ளைநோய், பஞ்சம், படை, பெருவாரிக் காய்ச்சல் இவை முதலான ஆபத்தில் துன்பப் படுகிற யாவரும் அர்ச். ஆரோக்கியநாதரை மன்றாடி வேண்டிக்கொண்டால் அவர்களுடைய பிணி தீர்ந்து குணப்படுவார்கள் என்று அவருடைய சரீரத்தின் பக்கத்தில் பதிந்ததுமன்றி, உம்முடைய சம்மனசானவரைக் கொண்டும் வார்த்தைப்பாடு கொடுத்தீரே.  அவருடைய திருநாளைக் கொண் டாடுகிறவர்களும் அவருடைய வேண்டுதலின் உதவியைக் கேட்கிறவர்களுமாகிய நாங்கள் அவருடைய உத்தம மன்றாட்டினாலே எங்க ளுடைய ஆத்தும சரீரத்தின் ஆபத்தான கொள்ளை நோயில் நின்று எங்களை மீட்டு இரட்சிக்கும் படிக்குத் தேவரீரை மன்றாடுகிறோம்.  இந்த மன்றாட்டுக்களையயல்லாம் சேசுகிறீஸ்துநாத ருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் சுவாமி. 

ஆமென்.

கொள்ளைநோய் அல்லது விஷபேதி காலத்தில் செபிக்கும் ஜெபம்

மகிமைப்பிரதாபம் பொருந்திய அர்ச். ஆரோக்கியநாதரே! கொள்ளை நோய், விஷபேதி முதலிய கொடிய ஆக்கினைகள் எங்கள்மேல் வராதபடிக்கு, இரக்கமிகுந்த தேவசிம்மாசனத்துக்கு முன்பாக உமது செல்வாக்குள்ள மன்றாட்டுகளால் மனுப்பேசக் கிருபை புரிந்தருளும்.

எங்களுக்கு நேரிடும் சரீரத்துக்கடுத்த சகல தொத்து நோய்களையும், விசே­மாய் எங்கள் ஆத்துமத்துக்கு வரக்கூடிய எவ்வித மோசமான வியாதிகளையும் விலக்கி, எங்களை ஆதரித்து நடத்த வேணுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

ஆமென்.

அர்ச். ஆரோக்கியநாதர் ஐந்து மன்றாட்டு

முந்த முந்த உத்தம மனஸ்தாப மந்திரம் சொல்லுகிறது.

1. மிகவும் மேன்மையும் கனமும் பொருந்திய வம்சத்தில் பிறந்து மகா பரிசுத்ததனத்தை அநுசரித்துக் கொண்டு வந்த அர்ச். ஆரோக்கிய நாதரே வாழ்க. பர. அருள். திரி.

2. மிகவும் அலங்காரமுள்ள அர்ச். திருச் சிலுவையின் ஆசீர்வாதத்தால் கொள்ளை நோய் கொண்ட அநேக ஜனங்களை இரட்சித்தது போல எங்களை ஆசீர்வதித்து, நோய்களிலிருந்து  எங்களை உமது கரத்தால் மறைத்துக்கொண்டு வருகிற அர்ச். ஆரோக்கியநாதரே வாழ்க. பர. அருள். திரி.

3. பொய்யான பிரபஞ்ச வாழ்வைச் சொற்ப மாக எண்ணி அதை வெறுத்துத் தள்ளி மெய் யயன்னும் பானத்தை உட்கொண்டு உலகத்தை விட்டுத் தபோதனராயிருந்த அர்ச். ஆரோக்கிய நாதரே வாழ்க. பர. அருள். திரி.

4. நோய் கொண்டவர்களை அண்டித் தொட்ட வுடனே அவர்கள் நல்ல ஆரோக்கியத்தை அடைய வரம்பெற்றவரான அர்ச். ஆரோக்கியநாதரே வாழ்க. பர. அருள். திரி.

5. தேவ கிருபையோடு சம்மனசினால் அறிவிக்கப்பட்டு சகலவித கொள்ளைநோய்களையயல்லாம் அகற்றி விட வரம் பெற்றவரான அர்ச். ஆரோக்கியநாதரே வாழ்க. பர. அருள். திரி.

சேசுக்கிறீஸ்துநாதருடைய திருவாக்குத்தத்தங் களுக்கு நாங்கள் பாத்திரவான்களாயிருக்கத் தக்கதாக, அர்ச். ஆரோக்கியநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வேசுரா சுவாமி! எந்தெந்த கொள்ளை நோய்களால் வருத்தப்பட்டு சாவுக்கு ஆயத்தப் படாதபடிக்கு தேவரீருடைய சம்மனசானவரைக் கொண்டு அர்ச். ஆரோக்கியநாதருக்கு அறிவித்து அவருக்கு வேண்டிய வார்த்தைப்பாடு கொடுத் தீரே.  ஆகையால் அவருடைய திருநாமத்தை ஸ்துதித்துக் கொண்டாடுகிற நாங்கள் அவருடைய பேறுபெற்ற பலன்களினாலே எங்கள் ஆத்து மத்திற்கும் சரீரத்திற்கும் பொல்லாப்பா      யிருக்கிற இந்த நோய்களிலே நின்று எங்களை இரட்சிக்கத் தேவரீரை மன்றாடுகிறோம்.  இந்த மன்றாட்டுகளையயல்லாம் எங்கள் ஆண்டவ ராகிய சேசுக்கிறீஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் சுவாமி. 

ஆமென்.

அர்ச். ஆரோக்கியநாதரைப் பார்த்து வேண்டிக்கொள்ளும் ஜெபம்

(திருநாள் : ஆகஸ்டு 16)

அர்ச். ஆரோக்கியநாதரே! வியாதியஸ்தரைச் சொஸ்தப் படுத்தத்தக்கதாக கொள்ளை நோய் பரவியிருந்த ஊர்களுக் குத் தேவரீர் தேவசிநேக உற்சாகத்தால் வருந்திப் பிரயா ணம் செய்தீர்.  உமக்கே அந்த வியாதி நேரிட்டவிடத்தில் உமது நம்பிக்கைத் தோழனா யிருந்த துஷ்ட மிருகத்தால் தேற்றரவு அடைந்தீர்.  இத்துன்ப காலத்தில் தேவரீர் எங்கள் பேரில் இரங்கி எங்களுக்காக மன்றாடி உதவி புரிந்தருளும்.  இப்போது எங்கள் மேல் வந்திருக்கும் இந்தப் பயங்கரமான தேவ கோபாக்கினையை முழுதும் அகற்ற, இரக்கமுள்ள திவ்விய இரட்சகரிடத்தில் எங்களுக்காக மனுப் பேசியருளும். நிர்ப்பாக்கியமான கொள்ளை நோய் பரவின இருண்ட ஸ்தலங்களில் தேவரீர் ஐந்து வரு­ காலம் ஜீவித்த சுகிர்தத்தாலல்லவோ கொள்ளை நோய்களைச் சொஸ்தப்படுத்த அற்புத வரம் அடைந்தீர். “அர்ச். ஆரோக்கியநாதருடைய சலுகையை இரந்து மன்றாடுகிற நோயாளிகள் யாவரும் அந்தக் கொடிய வியாதியினின்று சொஸ்தமடைவார்கள்” என்ற வாசக வாக்குறுதி யடங்கிய சீட்டை ஒரு சம்மனசானவர் கொண்டு வந்து மரித்த உமது திருச்சரீரத்தின் மேல் வைத்ததை தேவரீர் தயவாய் நினைவுகூர்ந்தருளும்.

ஓ! இரக்கம் மிகுந்த அர்ச்சியசிஷ்டவரே, முழு மன நம்பிக்கையோடே நாங்கள் சரணமாக ஓடி வந்தோம். எங்களைக் கைவிடாதேயும் காவலரே! 

ஆமென்.

சேசுக்கிறீஸ்துநாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாகத்தக்கதாக, அர்ச். ஆரோக்கியநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வேசுரா சுவாமி! அர்ச். ஆரோக்கியநாத ருடைய உதவியை இரந்து மன்றாடுகிற யாவரும் கொள்ளை நோய் முதலிய கொடிய வியாதி களால் எள்ளளவேனும் பயப்பட வேண்டியதில்லையென்று ஒரு சம்மனசினால் அந்த அர்ச்சியசிஷ்டவருக்குத்தானே தெரியப்படுத்தத் திருவுளமானீரே. அந்த அர்ச்சியசிஷ்டவருடைய சுகிர்த மன்றாட்டினாலே ஆத்தும சரீர  சகல ஆபத்துகளினின்று நாங்கள் இரட்சிக்கப்படும் பொருட்டுக் கிருபை புரிந்தருளும். இந்த மன்றாட்டுக்களையயல்லாம் எங்கள் ஆண்டவரான சேசுக்கிறீஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும்.

ஆமென்.