அர்ச். அருளானந்தர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அர்ச். அருளானந்தர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வேதசாட்சியான அர்ச். அருளானந்தர் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

வேதசாட்சிகளுக்கு இராக்கினியான அர்ச். மரியாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வேதசாட்சியான அர்ச். அருளானந்தரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். 

எஸ்போன் நகரில் உயர்ந்த தந்தை தாயிடத்தில் பிறந்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இராஜாவின் அரண்மனையில் வளர்க்கப்பட்டுத் தூய்மையான நடக்கையாலும் குறையாத பொறுமையாலும் அரண்மனையில் சம்மனசு என்றும் வேதசாட்சி என்றும் பெயர் பெற்றவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அர்ச். சவேரியாருடைய மன்றாட்டினால் ஆரோக்கியம் அடைந்து இளமையில்தானே சந்நியாசிகளுடைய உடையை, அதன் பாவனை யாகத் தரித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பதினான்கு வயதில் இவ்வுலக செல்வ பாக்கியத் தையும், சுற்றத்தார் சிநேகிதரையும் விட்டுச் சேசுசபையில் பிரவேசித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மனத்தாழ்ச்சியினாலும், சரீர ஒறுத்தலினா லும் சிரேஷ்டருக்குக் கீழ்ப்படிதலினாலும் சாங்கோபாங்கம் அடைந்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுக்கிறீஸ்துநாதருடைய திவ்விய வேதத் தைப் பரவச்செய்ய வேணுமென்கிற தாற்பரி யத்தால் எங்கள் நாட்டுக்கு எழுந்தருளி வந்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கோவைப்பட்டணத்தில் உச்சித கிருத்தியங் களை நடப்பித்ததால் இரண்டாம் சவேரியா ரென்னப்பட்டவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மதுரை, தஞ்சாவூர், செஞ்சி, வேலூர், கோல் கொண்டாபுரம் என்னும் இவ்வைந்து இராச்சியங்களில் சத்திய வேதத்தைப் பிரசங்கித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தமிழ்நாட்டின் மாட்சிமை நிறைந்த அப்போஸ்தலரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இந்நாடுகளில் அஞ்ஞான இருளை நீக்கி செஞ்சுடரான வேதப்பிரகாசம் உதிக்கச் செய்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

திரளான அஞ்ஞானிகளை மனந்திருப்பி ஞான தீட்சை தந்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அநேக அற்புதங்களால் சேசுக்கிறீஸ்துநாத ருடைய திவ்விய விசுவாசத்தை விளங்கப் பண்ணி னவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கிறீஸ்தவர்களை விசாரிக்கவும், அஞ்ஞானி களை மனந்திருப்பவும் சொல்லிலடங்காத வருத்தப் பிரயாசத்தோடு இத்தேசங்களில் எங்கும் நெடுநாள் விசாரணைக்குருவாய் அலைந்து திரிந்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஆறாத பக்தியும் அவியாத விசுவாசமும் சலியாத்தயையும், மெலியாத தவமும், மற்று முள்ள சுகிர்த புண்ணியங்களையும் சுமுத்திரை யாய் அனுசரித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எவ்வித துன்ப துரிதங்களையும் விக்கின இக்கட்டுகளையும் அஞ்சாத தைரியத்தோடும் குறையாத பொறுமையோடும் சகித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கள்ள ஞானிகளைத் தர்க்கத்தில் தோற்கடித்து சத்திய வேதத்தின் மகிமை இலட்சணங்களைத் தெரிவித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உம்மைக் கொல்லத் தேடுகிறவர்களுக்குத் தேவ செய்கையால் அநேகம் விசை தப்பினவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வேதசாட்சிகளுடைய கிரீடத்தை அடைய வேணும் என்கிற ஆசையால் பற்றியயரிந்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சண்டாளர் கையில் பிடிபட்டு, மங்கலம், காளையார்கோவில், பாகணி முதலிய இடங் களில் சகல நிந்தை வாதைகளையும் அடிமிதியை யும் மகா பொறுமையோடு அனுபவித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சத்திய வேதத்துக்காக உம்முடன் வாதிக்கப் பட்ட உபதேசியின் தெறித்து விழுந்த கண்ணை அற்புதமாய்ச் சொஸ்தப்படுத்தினவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுநாதரைப் பற்றி கொடிய சாவுக்குத் தீர்வையிடப்பட்டவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இராஜ சமூகத்தில் சத்திய வேதத்தின் இலட் சணங்களையும் கற்பனைகளையும் மகா திடனோடு வெளிப்படுத்தினவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இராஜாவுக்குப் பிரியப்பட்டு அற்புதமாய் விடுதலையாக்கப்பட்டவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

விசாரணைக் குருக்களைக் கூட்டிக் கொண்டு வர, ஐரோப்பாக் கண்டத்துக்கு அனுப்பப்பட்டு, இராஜா, பிரதானிகள் முதலிய சகலராலும் வெகுவாய்ச் சங்கிக்கப்பட்டவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இராஜ குமாரனுக்கு உபாத்தியராகத் தெரிந்து கொள்ளப்பட்டாலும், திரும்ப இந்த நாட்டுக்கு வரப் பிரியப்பட்டவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உம்முடைய திரும்புதலுக்கு எவராலும் செய் யப்பட்ட விக்கினங்களை அகற்றி மகா மகிழ்ச்சி யுடன் பயணப்பட்டு எங்கள் நாட்டுக்கு வந்து சேர்ந்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சில மாதங்களுக்குள்ளே மறவ நாட்டில் திரளான அஞ்ஞானிகளை மனந்திருப்பினவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பெயர்பெற்ற தடியத் தேவனையும், அநேக பிரபுக்களையும் உத்தியோகஸ்தர்களையும் சத்திய திருச்சபையில் சேர்த்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மறவ நாட்டின் பெயர் பெற்ற அப்போஸ் தலரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுக்கிறீஸ்துநாதர் பாவனையாக உம்மைப் பிடிக்க வந்தவர்களுக்கு உம்மைக் கையளித் தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வெகு நிஷ்டூரமாய்க் கட்டுண்டு தூர பயணத்துக்கு மானபங்கமாய் இழுக்கப்பட்டு இருண்ட சிறையில் அடைபட்டு மிகவும் வாதிக்கப்பட்டவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மாந்திரியக்காரருடைய வித்தை சகுனங் களைத் திவ்விய விசுவாசத்தால் ஜெயித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இராஜா சமூகத்தில் எல்லாராலும் அதிசயிக்க அஞ்சா நெஞ்சத்தோடும், உயர்ந்த மகத்துவத் தோடும் நின்று சத்திய வேதப் பிரதாபத்தைத் தெளிவித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அஞ்ஞான தெய்வங்களையும் அபத்தக் கொள்கைகளையும் எதிர்த்து, சத்திய வேதத்தை எங்கும் பிரபலியப்படுத்தினதற்காக கொலைக்குத் தீர்மானிக்கப்பட்டவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எந்த நிர்ப்பாக்கியத்துக்கும் நிந்தை வாதைக் கும் அஞ்சாத வேதசாட்சியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஓரியூரில் புதன்கிழமை மத்தியான வேளை யில் கணக்கில்லாத ஜனங்களுக்கு முன் வேத சாட்சியாகக் கொல்லப்பட்டவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுக்கிறீஸ்துவின் வேதத்தை மெய்ப்பிக்க இரத்தத்தைச் சிந்தின வேதசாட்சியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சத்திய வேதத்துக்காக மனம்பொருந்தி மகிழ்ந்த மனதோடும் ஆனந்த ஆவலோடும் உயிரைத் தர சம்மதித்த வேதசாட்சியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கொடியவர்களுக்கு உமது அஞ்சாத தலையை நீட்டித் தந்த பிரதாப வேதசாட்சியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மோட்ச இராச்சியத்தில் அத்தியந்த ஜோதி மகிமையுள்ள வேதசாட்சிகளுடைய முடிசூட்டப் பட்டவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பூலோகமெங்கும் பிரதாபமுள்ள நாமதேயத் தைப் பெற்றவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மரித்தவுடனே உமது மன்றாட்டினாலே எண்ணிறந்த புதுமைகளைச் செய்வித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மகா சிறப்புக் கொண்டாட்டத்துடன் எங்கும் வணங்கப்படும் வேதசாட்சியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உம்மை மன்றாடுகிறவர்களுக்குச் சுகிர்த நன்மை சகாயங்களைப் பெறுவிக்கிறவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிணி, நோய்களையும், கஸ்தி நிர்ப்பந்தங் களையும் நிவிர்த்தியாக்குகிற நல்ல வைத்தியரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மறவநாட்டு விலையேறப்பெற்ற மாணிக்கமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எங்களுக்கு இரண்டாம் சவேரியாராகத் துலங்குகிறவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எங்கள் தகப்பனும், பாதுகாவலுமாகிய வேதசாட்சியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

சேசுக்கிறீஸ்துநாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாகத் தக்கதாக, அர்ச். அருளானந்தரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வேசுரா சுவாமி! எங்கள் நாட்டில் சத்திய வேதம் பரவுவதற்காக வேதசாட்சியான அர்ச். அருளானந்தருக்கு வெல்லப்படாத மனத்துணிவைத் தந்தருளினீரே.  அவருடைய சிறந்த வெற்றியைக் கொண்டாடுகிற நாங்கள் எல்லோரும் அவருடைய விசுவாசத்தின் சுகிர்த மாதிரிகைகளை அனுசரிக்கும்படி அவருடைய வேண்டுதலையும் பேறுபலன்களையும் பார்த்து அனுக்கிரகம் செய்தருளும். இந்த மன்றாட்டுகளையெல்லாம் எங்கள் ஆண்டவரான சேசுக்கிறீஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். 

ஆமென்.

அர்ச். அருளானந்தர் நவநாள் ஜெபம்

(திருநாள் : பிப்ரவரி 4)

சேசுகிறீஸ்துநாதருடையவும் இந்திய நாட்டினுடையவும் மகிமை நிறைந்த அப்போஸ்தலரே, வாக்கிலும், கிரிகையிலும் மகா வல்லப முள்ளவரே, எங்கள் மீதும், எங்கள் குடும்பங்கள் மீதும், எங்கள் உறவினர் மீதும், மற்றும் எல்லா மனிதர் மீதும் கிருபையாய் நோக்கியருளும். சர்வேசுரனுடைய ஏவுத லுக்குச் சதா செவிசாய்த்த உமது ஆச்சரியத்துக்குரிய பிரமாணிக்கத்தையும், கடின பிரயாணங்களை மேற்கொள்ளவும், அநேகம் வேதனைகளையும் துன்பங்களையும், உபத்திரவங்களையும் சகிக்கவும் உம்மைத் தூண்டின தளராத ஊக்கத்தையும் முன்னிட்டு, உமது இருதயத்தில் பற்றியெரிந்த சிநேக அக்கினி எங்கள் இருதயங்களிலும் பற்றி எரியவும், அதனால் பிறர் ஆத்தும இரட்சணியத்துக்காகவும், விசே­மாய் அந்தகாரத்திலும் மரண நிழலிலும் இருக்கும் ஆத்துமங்களின் இரட்சணியத்துக்காகவும், எங்களையே நாங்களும் தத்தம் செய்யத் தயாராயிருக்கவும் எங்களுக்குக் கிருபை செய்தருளும்.

கடைசியாய், மகிமை நிறைந்த எங்கள் பாதுகாவலரே, உம்மால் இரட்சணியமடைந்த ஆயிரக்கணக்கான ஆத்துமங்களையும், உமது பரிசுத்த வீரச் செயல்களுக்காகச் சர்வேசுரன் உமக்களித்த மகிமையையும் பார்த்து, (இங்கே தங்களுக்கு வேண்டிய மன்றாட்டைக் கேட்கிறது)... சர்வேசுரனுடைய தோத்திரத்துக்கும் எங்கள் ஆத்தும நன்மைக்கும் உகந்ததாயிருந்தால் எங்களுக்குப் பெற்றுத் தந்தருளும். 

ஆமென்.

1 பர. 1 அருள். 1 திரி.

சேசுக்கிறீஸ்துநாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாயிருக்கத் தக்கதாக, அர்ச். அருளானந்தரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வேசுரா சுவாமி! எங்கள் நாட்டில் சத்திய வேதம் பரவுவதற்காக வேதசாட்சியான அர்ச். அருளானந்தருக்கு வெல்லப்படாத மனத்துணிவைத் தந்தருளினீரே.  அவருடைய சிறந்த வெற்றியைக் கொண்டாடுகிற நாங்கள் எல்லோரும் அவருடைய விசுவாசத்தின் சுகிர்த மாதிரிகைகளை அனுசரிக்கும்படி அவருடைய வேண்டுதலையும் பேறுபலன்களையும் பார்த்து அனுக்கிரகம் செய்தருளும். இந்த மன்றாட்டுகளையயல்லாம் எங்கள் ஆண்டவரான சேசுக்கிறீஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். 

ஆமென்.