அதிகாரம்
01
1 எல்கியாசின்
மகன் நெகேமியா கூறியதாவது: அர்தக்சேர்செஸ் அரசரது ஆட்சியின் இருபதாம்
ஆண்டு கஸ்லேயு மாதத்தில் நான்
சூசா என்னும் கோட்டையில் இருந்தேன்.
2 அப்பொழுது
என் சகோதரரில் ஒருவனான அனானியும், யூதாவைச்
சேர்ந்த சில ஆடவரும் என்னிடம்
வந்தனர்; அடிமைத்தனத்தினின்று திரும்பி வந்திருந்த யூதர்களைப் பற்றியும் யெருசலேமைப் பற்றியும் நான் அவர்களிடம் கேட்டேன்.
3 அதற்கு
அவர்கள், "அடிமைத்தனத்தினின்று தம் நாடு திரும்பி
வந்திருந்தோர் பெருந்துயரமும் சிறுமையும் உற்றிருக்கிறார்கள். யெருசலேமின் மதில்கள் பாழடைந்து போயின; அதன் வாயில்கள்
தீக்கிரையாகி விட்டன" என்று கூறினர்.
4 இதைக்
கேள்வியுற்றதும் நான் உட்கார்ந்து அழ
ஆரம்பித்தேன். பல நாள் துக்கம்
கொண்டாடி, நோன்பு காத்து, விண்ணகக்
கடவுளை நோக்கி மன்றாடினேன்:
5 விண்ணகக்
கடவுளான ஆண்டவரே, பெரியவரே, அஞ்சுதற்குரியவரே, உமக்கு அன்பு செய்து
உம் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவோரோடு உடன்படிக்கை செய்து, அதை மாறா
அன்புடன் நிறைவேற்றுபவரே, உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன்.
6 உம் ஊழியராகிய இஸ்ராயேல் மக்களுக்காக இங்கே அடியேன் இரவும்
பகலும் உம் திருமுன் மன்றாடி
வருகிறேன். நீர் என் மீது
கருணைக் கண்களைத் திருப்பி, என் மன்றாட்டுக்குச் செவிமடுத்தருளும்.
இஸ்ராயேல் மக்கள் உமக்கு எதிராகச்
செய்துள்ள பாவங்களையும் அறிக்கையிடுகிறேன். நானும் என் தந்தை
வீட்டாரும் பாவம் புரிந்து விட்டோம்.
7 நாங்கள்
உலக மாயையினால் மயங்கி ஏமாந்து, உம்
அடியான் மோயீசன் வழியாக நீர்
அருளிய உமது கட்டளையையும் வழிபாட்டு
முறைகளையும் நீதி முறைமைகளையும் பின்பற்றவில்லை.
8 நீர்
உம் அடியான் மோயீசனை நோக்கி,
'நீங்கள் நமது கட்டளையை மீறி
நடந்தால், நாம் உங்களைப் புறவினத்தார்
நடுவே சிதறிடிப்போம்.
9 ஆயினும்
நீங்கள் நம்மிடம் திரும்பி நம் கட்டளைகளைப் பின்பற்றி
நடப்பீர்களாகில், நீங்கள் உலகின் கடைக்
கோடிக்குத் தள்ளுண்டு போகப்பட்டிருந்தாலும் கூட நாம் அங்கிருந்து
உங்களை ஒன்று நாம் திருப்பெயர்
விளங்கும் பொருட்டு, நாம் தேர்ந்து கொண்ட
இடத்திற்கே உங்களைக் கொண்டுவருவோம்' என்று வாக்களித்ததை நினைவு
கூர்ந்தருளும்.
10 உமது
பேராற்றலாலும் கைவன்மையினாலும் நீர் மீட்ட உம்
மக்களும் உழியர்களும் இவர்களே.
11 எனவே,
ஆண்டவரே, உம் ஊழியனான அடியேனின்
மன்றாட்டையும், உமது திருப்பெயருக்கு அஞ்சி
நடக்க விரும்புகிற உம் ஊழியர்களின் மன்றாட்டையும்
கேட்டருளும். அடியேனை இன்று வழிநடத்தி,
இவ்வரசர் முன்னிலையில் எனக்கு இரக்கம் கிடைக்கச்
செய்தருளும்."அப்பொழுது நான் அரசருக்கு மேசை
ஊழியம் செய்து வந்தேன்.
அதிகாரம்
02
1 அரசர்
அர்தக்சேர்செசின் இருபதாம் ஆண்டு, நீசான் மாதத்தில்
அரசருக்கு முன்பாகத் திராட்சை இரசம் வைக்கப்பட்டிருந்தது. நான் அதை
எடுத்து, அவருக்குக் கொடுத்தேன். அப்பொழுது நான் மிகவும் வருத்தமுற்றவன்
போன்று தோன்றினேன்.
2 எனவே
அரசர் என்னைப் பார்த்து, "நீ
ஏன் இவ்வாறு வருத்தமுற்றிருக்கிறாய்? நீ நோயுற்றிருப்பதாகத்
தெரியவில்லையே. இதற்கு ஏதாவது காரணம்
இருக்க வேண்டும். ஏதோ உன் மனத்தை
வாட்டிக் கொண்டிருக்கிறது" என்றார். நானோ மிகவும் அச்சமுற்றேன்.
3 எனவே
அரசரை நோக்கி, "அரசே, நீர் நீடூழி
வாழ்க! என் முன்னோரின் கல்லறைகள்
இருக்கும் நகர் பாழ்பட்டுக் கிடப்பதையும்,
அதன் வாயில்கள் தீக்கிரையாகி இருப்பதையும் கண்டு நான் எவ்வாறு
கவலையின்றி இருக்க முடியும்?" என்று
சொன்னேன்.
4 அதற்கு
அரசர், "உனக்கு என்ன வேண்டும்?"
என்றார். நானோ விண்ணகக் கடவுளை
வேண்டிக் கொண்டவனாய்,
5 அரசரைப்
பார்த்து, "அரசர் மனம் வைத்தால்,
அடியேன் மீது இரக்கம் வைத்தால்,
நான் யூதேயா நாடு சென்று
என் முன்னோரின் கல்லறைகள் இருக்கும் நகரைக் கட்டி எழுப்ப
எனக்கு விடை கொடும்" என்று
மறுமொழி சொன்னேன்.
6 அப்பொழுது
அரசரும் அவர் அருகே அமர்ந்திருந்த
அரசியும் என்னைப் பார்த்து, "இதற்கு
எத்தனை நாள் செல்லும்? நீ
எப்பொழுது திரும்பி வருவாய்?" என்று கேட்டனர். என்னை
அனுப்பி வைக்க அரசருக்கு மனமிருந்ததை
கண்டு, நான் திரும்பி வரக்கூடிய
காலத்தைக் குறிப்பிட்டுச் சொன்னேன்.
7 திரும்பவும்
நான் அரசரைப் பார்த்து, "அரசருக்கு
மனமிருந்தால் நான் யூதேயா நாட்டை
அடையும்வரை நதிக்கு அக்கரையில் வாழ்ந்து
வரும் ஆளுநர்கள் எனக்கு வழி விட
வேண்டும் என்று ஒரு கட்டளைக்
கடிதம் கொடுத்தருளும்.
8 அதேபோன்று
ஆலயத்தின் கோபுரக் கதவுகளுக்கும், நகர
வாயில்களுக்கும், நான் தங்கவிருக்கிற வீட்டுக்கும்
தேவையான மரங்களை எனக்குக் கொடுத்து
உதவும்படி அரசருடைய காடுகளின் காவலரான ஆசாப்புக்கு மற்றொரு
கடிதமும் என் கையில் கொடுத்தருள
வேண்டுகிறேன்" என்றேன். என் கடவுளின் அருட்கரம்
என்னோடு இருந்ததால் அரசர் என் வேண்டுகோளின்படியே
செய்தார்.
9 கடிதங்களைப்
பெற்றுக்கொண்ட நான் நதிக்கு அக்கரையில்
வாழ்ந்து வந்த ஆளுநர்களிடம் வந்து
அவர்களுக்கு அரசரின் கடிதங்களைக் கொடுத்தேன்.
அரசரோ என்னோடு படைத் தலைவர்களிலும்
குதிரை வீரர்களிலும் சிலரை அனுப்பி வைத்திருந்தார்.
10 இதை
ஒரோனியனான சனபல்லாதும், அம்மோனிய அடிமையான தொபியாசும் கேள்வியுற்ற போது, இஸ்ராயேல் மக்களுக்கு
நன்மை செய்ய ஒருவன் வந்து
விட்டானே என்று பெரிதும் துயருற்றனர்.
11 நானோ
யெருசலேமுக்கு வந்து அங்கே மூன்று
நாள் தங்கி இருந்தேன்.
12 பின்னர்
ஒரு நாள் இரவு வேளையில்
ஒரு சிலரோடு நான் எழுந்து
சென்றேன். நான் யெருசலேமில் செய்யுமாறு
கடவுள் என்னை ஏவியிருந்ததை நான்
ஒருவருக்கும் வெளிப்படுத்தவில்லை. நான் ஏறிச்சென்ற மிருகத்தைத்
தவிர வேறு ஒரு மிருகமும்
எனக்குக் கிடையாது.
13 நான்
அன்றிரவு பள்ளத்தாக்கு வாயில் வழியாக வெளியே
சென்று, பறவை நாகம் என்ற
நீரூற்றைக் கடந்து, குப்பைமேட்டு வாயிலுக்கு
வந்து இடிந்து கிடந்த யெருசலேமின்
மதில்களையும், தீக்கு இரையாகியிருந்த அதன்
கதவுகளையும் பார்வையிட்டேன்.
14 அங்கிருந்து
ஊருணி வாயிலுக்கும் அரசரின் குளத்திற்கும் சென்றேன்.
அதற்கு அப்பால் செல்ல வழி
இல்லை.
15 எனவே,
அன்றிரவே நான் ஆற்றோரமாய் சென்று
மதில்களைப் பார்வையிட்ட பின் பள்ளத்தாக்கு வாயில்
வழியாய்த் திரும்பி வந்தேன்.
16 நான்
எங்குச் சென்றேன் என்றும் என்ன செய்தேன்
என்றும் அலுவலர் ஒருவருக்கும் தெரியாது.
ஏனெனில் யூதர்களுக்காவது குருக்களுக்காவது மேன்மக்களுக்காவது அலுவலர்களுக்காவது வேலை செய்து கொண்டிருந்த
மற்றவர்களுக்காவது அதுவரை ஒன்றையும் நான்
வெளிப்படுத்தவில்லை.
17 பின்னர்
நான் அவர்களைப் பார்த்து, "யெருசலேம் நகர் பாழடைந்து கிடப்பதையும்,
அதன் வாயில்கள் தீக்கு இரையாகியிருப்பதையும், அதனால் நாம்
படும் துன்பத்தையும் நீங்கள் அறிவீர்கள். ஆதலால்
வாருங்கள். இனியும் நமக்குச் சிறுமை
வராதபடி யெருசலேமின் மதில்களைக் கட்டி எழுப்புவோம்" என்று
சொன்னேன்.
18 என்
கடவுளின் அருட்கரம் என்னோடு இருக்கிறதையும் அரசர்
எனக்கு உரைத்ததையும் அவர்களுக்குச் சொன்னேன். பின்னர், "நாம் எழுந்து மதில்களைக்
கட்டுவோம்" என்றேன். அதனால் இந்த நற்பணி
செய்ய விருப்பமுடன் மக்கள் முன்வந்தனர்.
19 ஒரோனியனான
சனபல்லாதும், அம்மோனிய அடிமையான தொபியாசும், அரேபியனான கொசேமும் இதைக் கேள்வியுற்று எங்களை
எள்ளி நகையாடினர். "நீங்கள் என்ன காரியம்
செய்கிறீர்கள்? நீங்கள் அரசருக்கு எதிராய்க்
கலகம் செய்யப் போகிறீர்களா?" என்று
கேட்டனர்.
20 நானோ
அவர்களுக்கு மறுமொழியாக, "விண்ணகக் கடவுளே எங்களுக்கு வெற்றி
அளிப்பார். அவருடைய ஊழியர்களாகிய நாங்கள்
கட்டட வேலையை ஆரம்பிக்கப் போகிறோம்.
உங்களுக்கு யெருசலேமில் பங்குமில்லை, உரிமையுமில்லை. உங்கள் பெயர் விளங்க
வேண்டிய நியாயம் ஏதும் இல்லை"
என்று அவர்களிடம் சொன்னேன்.
அதிகாரம்
03
2 அதையடுத்து
எரிக்கோ நகரமக்கள் கட்டினார்கள்; அதையடுத்து அம்ரி மகன் ஜக்கூர்
கட்டினான்.
3 மீன்
வாயிலையோ அஸ்னாவின் புதல்வர்கள் கட்டினார்கள். அவர்கள் நிலைகளை நிறுத்தி,
கதவுகளைப் பொருத்திப் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் அமைத்தனர். அதையடுத்து அக்கூசின் மகன் ஊரியாவின் புதல்வனான
மெரிமோத் கட்டினான்.
4 அதையடுத்து
மேசெஜெபெலுக்குப் பிறந்த பராக்கியாவுடைய மகன்
மொசொல்லாம் கட்டினான். அதையடுத்து பாவானாவின் மகன் சாதோக்கு கட்டினான்.
5 அதையடுத்து
தேக்குவே ஊரார் கட்டினார்கள்; ஆனால்
அவ்வூர்ப் பெரியோர்கள் ஆண்டவரின் வேலையில் பங்கெடுத்துக் கொள்ளவில்லை.
6 பழைய
வாயிலைப் பாசேயாவின் மகன் யோயியாதாவும், பெசோதியாவின்
மகன் மொசொல்லாமும் கட்டினார்கள். இவர்கள் நிலைகளை நிறுத்தி
அவற்றில் கதவுகளைப் பொருத்திப் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் அமைத்தனர்.
7 இவர்களை
அடுத்து மஸ்பா, கபாவோன் என்ற
ஊர்களைச் சேர்ந்த கபாவோனியனான மேல்தியாவும்,
மெரோனாத்தியனான யாதோனும் நதிக்கு அக்கரைப் பகுதியில்
உள்ள ஆளுநர்கள் பெயரால் கட்டினார்கள்.
8 இவர்கள்
அருகே பொற்கொல்லன் அராயியாக்கின் மகனாகிய எஜியேல் கட்டினான்.
அதையடுத்து நறுமணப்பொருள் விற்பவர்களுள் ஒருவனான அனானியா வேலைசெய்தான்.
இவ்வாறு யெருசலேமின் பெரியமதில்வரை மதில் கட்டப்பட்டது.
9 இவர்களருகே
யெருசலேம் மாவட்டத்தின் ஒரு பாதிக்கு ஆளுநனும்
ஊரின் மகனுமான இராப்பாயியா கட்டினான்.
10 இவனருகே
ஆறோமாப்பின் மகனாகிய யெதாயியா தன்
வீட்டுக்கு எதிரே இருந்த பாகத்தைக்
கட்டினான். இவனை அடுத்து ஆசெபோனியாவின்
மகனாகிய ஆத்தூசு வேலை செய்தான்.
11 ஏறேமின்
மகனாகிய மெல்கியாசும், பாவாத் மோவாபின் மகனாகிய
ஆசுபும் ஒரு தெருவில் பாதியையும்
சூளைகளின் கோபுரத்தையும் கட்டினார்கள்.
12 அடுத்து
யெருசலேம் மாவட்டத்தின் மற்றப் பாதிக்கு ஆளுநனும்
அலோயேசின் மகனுமான செல்லோமும் அவனுடைய
புதல்வியரும் கட்டினார்கள்.
13 ஆனூனும்
சனொயின் ஊராரும் பள்ளதாக்கு வாயிலைக்
கட்டினார்கள். இவர்கள் நிலைகளை நிறுத்தி
அவற்றில் கதவுகளைப் பொருத்திப் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் அமைத்தனர். குப்பைமேட்டு வாயில் வரை ஆயிரம்
முழம் மதிலைக் கட்டினர்.
14 பெத்தாக்கறாம்
மாவட்டத்தின் ஆளுநனும் ரெக்காபின் மகனுமான மெல்கியா குப்பை
மேட்டு வாயிலைக் கட்டினான். அவன் நிலைகளை நிறுத்தி
அவற்றில் கதவுகளைப் பொருத்திப் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் அமைத்தான்.
15 மஸ்பா
மாவட்டத்தின் ஆளுநனும் கொலோசாக்கின் மகனுமான செல்லும் ஊருணி
வாயிலைக் கட்டினான். அவன் நிலைகளை நிறுத்தி
அவற்றில் கதவுகளைப் பொருத்திப் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் அமைத்தான். மேலும், அவன் அரச
தோட்டத்திலுள்ள சிலோயே குளத்துச் சுவர்களைத்
தாவீதின் கோட்டைப் படிகள் வரை கட்டினான்.
16 இவனுக்குப்பின்
பெத்சூர் மாவட்டத்தின் ஒரு பாதிக்கு ஆளுநராய்
இருந்த அஸ்போக்கின் மகனாகிய நெகேமியா தாவீதின்
கல்லறைக்கு எதிரே இருந்த இடம்
மட்டும், வெட்டப்பட்ட குளம் வரையிலும், வீரர்கள்
வீடு வரைக்கும் மதிலைக் கட்டினார்.
17 அதை
அடுத்து லேவியர்கள் கட்டினார்கள்; பென்னியின் மகனாகிய இரேகும் கட்டினான்.
18 அடுத்து
அவர்களுடைய சகோதரர் வேலை செய்தனர்.
கேயிலா மாவட்டத்தின் ஒரு பாதிக்கு ஆளுநனாய்
இருந்த எனதாத்தின் மகன் பாவாயி கட்டினான்.
19 இவனுக்குப்
பிறகு மஸ்பாவின் ஆளுநனான யோசுவாவின் மகன்
ஆசேர் முனையிலே ஆயுதக் கிடங்குக்கு எதிரேயிருந்த
மற்றொரு பாகத்தைக் கட்டினான்.
20 இவனுக்குப்
பின் சக்காயீயின் மகன் பாருக் அந்த
முனையிலிருந்து பெரிய குரு எலியாசீபின்
வீட்டு வாயில் வரை கட்டினான்.
21 ஆக்குசின்
மகன் ஊரியாவின் புதல்வன் மெரிமோத் எலியாசீபின் வீட்டு வாயிற்படி துவக்கி
அவ் வீட்டின் கடைக் கோடி வரை
கட்டினான்.
22 இவனுக்குப்
பின் யோர்தான் சமவெளியில் வாழ்ந்துவந்த குருக்கள் வேலை செய்தார்கள்.
23 இதற்குப்பின்
பென்யமீனும் ஆசுபும் தங்கள் வீட்டுக்கு
நேர் எதிரேயிருந்த பாகத்தைக் கட்டினார்கள். பின்னர் அனானியாசிற்குப் பிறந்த
மவாசியாவின் மகன் அசாரியாஸ் தன்
வீட்டுக்கு நேர் எதிரேயிருந்த பாகத்தைக்
கட்டினான்.
24 இவனுக்குப்பின்
அசாரியாஸ் வீட்டிலிருந்து மதிலின் முனை வரை
எனதாத்தின் மகன் பென்னுயி கட்டினான்.
25 அரச
மாளிகையின் மேற்பகுதியினின்று நீண்டு, சிறை முற்றத்தில்
நின்று கொண்டிருந்த கோபுரத்தின் வளைவிற்கு எதிரே இருந்த பாகத்தை
ஓசியின் மகன் பாலேல் கட்டினான்.
அவனுக்குப்பின் பாரோசன் மகன் பாதாயியா
வேலை செய்தான்.
26 ஒப்பேலில்
குடியிருந்த ஆலய ஊழியரோ கிழக்கேயுள்ள
தண்ணீர் வாயிலுக்கும் வெளியே நீண்டு கொண்டிருக்கும்
கோபுரத்துக்கும் நேர் எதிரே கட்டினார்கள்.
27 அவர்களுக்குப்பின்
தேக்குவா ஊரார் பெரிய கோபுரத்திற்கு
எதிரே இருந்த பகுதியை ஒப்பேல்
மதில் வரை கட்டினார்கள்.
28 பின்பு
குதிரை வாயில் முதற்கொண்டு குருக்களே
தத்தம் வீட்டுக்கு எதிரேயுள்ள பகுதிகளைக் கட்டிக் கொண்டார்கள்.
29 அவர்களுக்குப்
பின் எம்மேரின் மகன் சாதோக் தன்
வீட்டுக்கு நேரே உள்ள பகுதியைக்
கட்டினான். அவனுக்குப்பின் கீழ் வாயிற் காவலனும்
செக்கேனியாவின் மகனுமான செமாயியா கட்டினான்.
30 அவனுக்குப்பின்
செலேமியாவின் மகன் அனானியாவும் செலேபுக்கு
ஆறாவது மகனான ஆனூனும் இன்னொரு
பங்கைக் கட்டினார்கள். பின்பு பராக்கியாசின் மகன்
மொசொல்லாம் தன் வீட்டுக்கு எதிரேயுள்ள
பாகத்தைக் கட்டினான். இவனுக்குப் பின் பொற்கொல்லனின் மகனான
மெல்கியாஸ் ஆலய ஊழியர் வீடு
வரையிலும், நீதி வாயிலுக்கு நேராக
சில்லறை வியாபாரிகளுடைய வாயில் வரையிலும், முனைச்சாலை
வரையிலும் மதிலைக் கட்டிவிட்டான்.
31 முனைச்சாலைக்கும்
மந்தை வாயிலுக்கும் இடையிலுள்ள மதிலையோ பொற் கொல்லர்களும்
வியாபாரிகளும் கட்டி எழுப்பினார்கள்.
அதிகாரம்
04
1 நாங்கள்
மதில்களைக் கட்டுகிற செய்தியைச் சனபல்லாத் கேள்வியுற்று வெகுண்டெழுந்தான். கோபம் மேலிட்டவனாய் யூதர்களை
ஏளனம் செய்தான்.
2 தன் சகோதரர் முன்னிலையிலும் சமாரிய
மக்கள் முன்னிலையிலும், "இந்த அற்ப யூதர்கள்
செய்வதைப் பார்த்தீர்களா? மக்கள் அவர்களைச் சும்மா
விடுவார்களா? பலியிடலாம் என்று அவர்கள் மனப்பால்
குடிக்கிறார்கள்! ஒரு நாளில் வேலையை
முடித்துவிட அவர்களால் முடியுமா? எரிந்து போன சாம்பல்
குவியலிலிருந்து கற்களை உண்டாக்க அவர்களால்
இயலுமா?" என்று இழிவாய்ப் பேசினான்.
3 அருகில்
நின்றுகொண்டிருந்த அம்மோனியனான தொபியாசு வாய் திறந்து, "அவர்கள்
விருப்பம் போல் கட்டட்டும்! அவர்கள்
கட்டும் இக்கல் மதில் மேல்
ஒரு நரி ஏறிச் சென்றால்
கூட இடிந்து விடும்" என்றான்.
4 எம் கடவுளே, நாங்கள் ஏளம்
செய்யப்படுவதைப் பாரும்! இந்தச் சிறுமை
அவர்கள் மேல் வரச்செய்யும். அவர்களை
அந்நியர் கையில் அடிமைகளாக்கிச் சிறுமைப்படுத்தியருளும்.
5 அவர்களது
அக்கிரமத்தைத் மறைக்காதேயும். அவர்களது பாவத்தை மறக்காதேயும். ஏனெனில்
அவர்கள் உம் நகரைக் கட்டுகிறவர்களை
ஏளனம் செய்தார்கள்" என்று நான் வேண்டிக்
கொண்டேன்.
6 இதற்கிடையில்
மதில் பாதி உயரத்திற்கு எழும்பிற்று;
ஏனெனில், மக்கள் மிக்க ஆர்வமுடன்
வேலையில் ஈடுபட்டிருந்தனர்.
7 சனபல்லாத்,
தொபியாசு, அரேபியர், அம்மோனியர், ஆஜோத்தியர் ஆகியோர் பாழடைந்து கிடந்த
மதில் திரும்பவும் கட்டப்படுவதையும், வெடிப்புகள் அடைபட்டு வருவதையும் கேள்விப்பட்டு மிகவும் கோபம் கொண்டனர்.
8 எல்லாரும்
ஒன்று சேர்ந்து யெருசலேமின் மேல் போர் தொடுக்கவும்
என் திட்டங்களைக் குலைக்கவும் சதி செய்தார்கள்.
9 நாங்களோ
எங்கள் கடவுளை வேண்டி அவர்களிடமிருந்து
எங்களைக் காத்துக்கொள்ளும் பொருட்டு இரவும் பகலும் காவலரை
வைத்தோம்.
10 அப்பொழுது
யூதா நாட்டார் வந்து, "சுமப்போர் பலம் அற்றுப்போயினர். மண்ணோ
அதிகமாயிருக்கிறது. மதில்களைக் கட்டி முடிக்க எங்களால்
இயலாது" என்றனர்.
11 எம்
எதிரிகளோ, "நாம் யூதர்கள்மேல் போர்
தொடுத்து, அவர்களை அழித்து அவர்கள்
வேலைக்கு ஒரு முடிவு கட்டும்வரை
அவர்கள் இதை அறியாமலும் கேள்விப்படாமலும்
இருக்கவேண்டும்" என்று தங்களுக்குள் பேசி
முடிவு செய்திருந்தனர்.
12 ஆயினும்,
அவர்கள் அருகே வாழ்ந்து வரும்
யூதர் எங்களிடம் வந்து அதைப் பற்றிப்
பத்து முறை எங்களை எச்சரித்தனர்.
"எல்லா இடங்களிலுமிருந்தும் அவர்கள் நமக்கு எதிராகப்
படையெடுத்து வருகிறார்கள்" என்று சொல்லினர்.
13 எனவே,
மதிலுக்குப் பின் சுற்றிலும் கத்தி,
ஈட்டி, வில், வேல் முதலிய
ஆயுதம் தாங்கிய படைவீரர்களை அணியணியாய்
நிறுத்தி வைத்தேன்.
14 பெரியோர்,
மக்கள் தலைவர்கள், மற்றும் எல்லா மக்களும்
அச்சமுற்றிருக்கக் கண்ட நான் எழுந்து
அவர்களைப் பார்த்து, "அவர்களுக்கு நீங்கள் அஞ்ச வேண்டாம்.
மாறாக, பெரியவரும் அஞ்சுதற்குரியவருமான ஆண்டவரை மனத்தில் கொண்டு,
உங்கள் சகோதருக்காகவும், புதல்வர் புதல்வியருக்காகவும், மனைவியருக்காகவும் வீடுகளுக்காகவும் போராடுங்கள்" என்று சொன்னேன்.
15 தங்கள்
சதி எங்களுக்குத் தெரிந்து விட்டது என்று எம்
எதிரிகள் அறிய வந்தனர். இவ்வாறு
கடவுள் அவர்களுடைய திட்டங்களைச் சிதறடித்தார். அப்பொழுது நாங்கள் எல்லோரும் தத்தம்
வேலையைச் செய்ய மதிலுக்குத் திரும்பினோம்.
16 எனவே
அன்று முதல், யூதா குலத்தைச்
சேர்ந்த இளைஞர்களில் பாதிப்பேர் வேலை செய்தனர்; பாதிப்போர்
ஈட்டி, கேடயம், வில், மார்புக்
கவசம் முதலியவற்றை அணிந்து கொண்டு போருக்குத்
தயாராயினர். மக்கள் தலைவர்கள் அவர்கள்
அனைவர்க்கும் பின்னால் நின்றார்கள்.
17 மதில்களில்
கொத்துவேலை செய்வோரும், சுமை சுமப்போரும், சுமை
ஏற்றுவோரும் ஒரு கையால் வேலை
செய்து வந்தனர்; மறு கையிலோ வாளைப்
பிடித்திருந்தனர்.
18 வேலை
செய்வோர் அனைவரும் இடையில் வாள் வைத்திருந்தனர்.
அவர்கள் என் அருகிலேயே வேலை
செய்து கொண்டும் எக்காளம் ஊதிக்கொண்டும் இருந்தனர்.
19 பிறகு
நான் பெரியோர், மக்கள் தலைவர்கள், பொதுமக்கள்
அனைவரையும் நோக்கி, "வேலை பெரிது; முக்கியமானது.
நாமோ மதில் நெடுகத் தனித்
தனியே சிதறி நின்று வேலை
செய்து கொண்டிருக்கிறோம்.
20 ஆதலால்
நீங்கள் எவ்விடத்தில் இருந்தாலும் எக்காளம் முழங்கக் கேட்டவுடனே எங்களிடம் ஓடி வாருங்கள். நம்
கடவுள் நமக்காகப் போர் புரிவார்" என்றேன்.
21 இவ்வாறு
நாங்கள் வேலை செய்வோம். எங்களுள்
பாதிப்பேர் காலை முதல் மாலை
வரை ஈட்டி ஏந்தி நிற்பார்கள்.
22 அப்பொழுது
நான் மீண்டும் மக்களைப்பார்த்து, "இரவில் நமக்குக் காவலுக்கும்,
பகலில் வேலைக்கும் உதவியாய் இருக்கும் பொருட்டு, அனைவரும் தத்தம் வேலைக்காரரோடு யெருசலேமுக்குள்
இரவைக் கழிக்க வேண்டும்" என்றேன்.
23 நானும்
என் சகோதரரும் எம் ஊழியரும் என்னைப்
பின்தொடரும் காவலரும் நாங்கள் அனைவருமே எங்கள்
உடுப்புகளைக் களையவேயில்லை; மாறாக, ஆயுதம் தாங்கியோராய்
நின்று கொண்டிருந்தோம்.
அதிகாரம்
05
2 அவர்களுள்
சிலர், "எங்கள் புதல்வர் புதல்வியரைச்
சேர்த்து நாங்கள் அதிகம் பேர்.
எனவே, நாங்கள் உண்டு உயிர்
வாழும் பொருட்டு எங்களுக்குத் தானியம் கிடைக்கச் செய்யுங்கள்"
என்றனர்.
3 இன்னும்
சிலர், "எங்கள் நிலங்களையும் திராட்சைத்
தோட்டங்களையும் வீடுகளையும் நாங்கள் ஒற்றி வைத்து
இப்பஞ்சத்தில் பிழைக்கத் தானியம் வாங்கினோம்" என்றனர்.
4 வேறு
சிலரோ, "நாங்கள் அரசருக்குச் செலுத்த
வேண்டிய கப்பத்திற்காக, எங்கள் வயல்களையும் திராட்சைத்
தோட்டங்களையும் ஒற்றி வைத்துப் பணம்
வாங்கினோம்.
5 நாங்கள்
வேறு, எம் சகோதரர் வேறா?
எம் மக்களும் அவர்களுடைய மக்களும் ஒன்று தானோ! ஆயினும்
நாங்கள் இதோ எங்கள் புதல்வர்களையும்
புதல்வியரையும் அடிமைகளாய் விற்க வேண்டிய நிலை
ஏற்பட்டு விட்டதே! எங்கள் புதல்வியருள் சிலர்
ஏற்கெனவே அடிமைகள் ஆகிவிட்டனர். அவர்களை மீட்கவோ எங்களுக்கு
வசதி இல்லை. எங்கள் நிலங்களும்
திராட்சைத் தோட்டங்களும் அந்நியரின் கைகளில் இருக்கின்றன" என்று
முறுமுறுத்தனர்.
6 இவ்வாறு
அவர்கள் எழுப்பின கூக்குரலைக் கேட்ட நான் கோபம்
கொண்டேன்.
7 பிறகு
நான் என்னுள் சிந்தித்து, பெரியோரையும்
மக்கள் தலைவர்களையும் கண்டித்தேன். "நீங்கள் உங்கள் சகோதரர்களிடமிருந்து
அநியாய வட்டி வாங்குவது ஏன்?"
என்று கேட்டேன். அவர்களுக்கு எதிராக மக்களை ஒன்று
திரட்டினேன்.
8 அவர்களைப்
பார்த்து, "நீங்கள் அறிந்திருக்கிறது போல்,
நாங்கள் புறவினத்தாருக்கு விற்கப்பட்டிருந்த யூதர்களான நம் சகோதரரை நாம்
நமது சக்திக்கு ஏற்றவாறு மீட்டு வந்துள்ளோம். ஆனால்
நீங்களோ நமக்கே அடிமைகளாகும் பொருட்டு
உங்கள் சகோதரரை விற்கவும் துணிந்து
விட்டீர்களே, இது முறையா?" என்று
கேட்டேன். அவர்கள் இதைக்கேட்டு மறுமொழி
கூறாது மௌனமாய் இருந்தனர்.
9 மீண்டும்
நான் அவர்களை நோக்கி, "நீங்கள்
செய்வது சரியன்று. நம் எதிரிகளான புறவினத்தார்
நம்மை ஏளனம் செய்யாதவாறு நீங்கள்
நம் கடவுளுக்கு அஞ்சி நடப்பதே முறை.
10 நானும்
என் சகோதரரும் என் ஊழியரும் பலருக்குப்
பணத்தையும் தானியத்தையும் கடனாகக் கொடுத்து வருகிறோம்.
நாம் அக் கடனைக் கேளாது
விட்டு விடுவோம்.
11 இன்றே
நீங்கள் அவர்கள் நிலங்களையும் திராட்சைத்
தோட்டங்களையும் ஒலிவத் தோப்புகளையும் வீடுகளையும்
அவரவருக்குத் திருப்பிக் கொடுத்து விடுங்கள். மேலும் நீங்கள் அவர்களுக்குக்
கடனாகக் கொடுத்திருக்கும் பணம், தானியம், திராட்சை
இரசம், எண்ணெய் முதலியவற்றிற்கு அவர்களிடமிருந்து
வட்டி வாங்க வேண்டாம்" என்று
சொன்னேன்.
12 அதற்கு
அவர்கள், "நாங்கள் அதைத் திரும்பக்
கொடுத்து விடுவோம். அவர்களிடம் வட்டி ஒன்றும் கேட்கமாட்டோம்.
நீர் சொன்னவாறே செய்வோம்" என்றனர். அப்பொழுது நான் குருக்களை அழைத்து,
நான் சொன்னவாறு நடக்க வேண்டும் என்று
அவர்களை ஆணையிடச் செய்தேன்.
13 மேலும்
நான் என் ஆடைகளை உதறி
விட்டு, "இவ்வார்த்தைகளை நிறைவேற்றாதவன் எவனோ அவனைக் கடவுள்
இவ்வாறே தம் வீட்டினின்றும் தம்
திருப்பணியினின்றும் உதறிவிடக்கடவார். இவ்வாறு அவன் உதறி
விடப்பட்டு வெறுமையாய்ப் போகக்கடவான்" என்று கூறினேன். இதற்கு
எல்லாரும், "ஆமென்" என்று சொல்லிக் கடவுளைப்
புகழ்ந்தனர்; பின்னர் தாம் சொன்னவாறே
செய்து வந்தனர்.
14 யூதா
நாட்டில் ஆளுநராய் இருக்குமாறு அரசர் எனக்குக் கட்டளையிட்ட
நாள் முதல், அதாவது அர்தக்சேர்செஸ்
அரசரின் இருபதாம் ஆண்டுமுதல் முப்பத்திரண்டாம் ஆண்டுவரை, இப்பன்னிரண்டு ஆண்டுக் காலமாய் மக்கள்
ஆளுநர்களுக்குச் செலுத்த வேண்டிய ஆண்டுப்
படியை நானும் என் சகோதரரும்
வாங்கிச் சாப்பிட்டதில்லை.
15 எனக்கு
முன் இருந்த ஆளுநர்களோ அதிகம்
வரி விதித்து மக்களை வதைத்திருந்தனர். அதாவது,
அவர்கள் நாற்பது சீக்கல் வெள்ளியோடு,
உணவு, திராட்சை இரசம் முதலியவற்றையும் நாளும்
வாங்கி வந்தனர். அவர்களுடைய வேலைக்காரரும் அதிகாரம் செலுத்தி அவர்களை நெருக்கி வந்தனர்.
நானோ கடவுளுக்கு அஞ்சி அவ்வாறு செய்யவில்லை.
16 மேலும்
மதில் வேலையை நானும் சேர்ந்தே
செய்தேன்; ஒரு நிலத்தையாவது நான்
வாங்கியதில்லை. என் ஊழியர் அனைவரும்
அவ்வேலைக்கென்றே கூடி வந்தார்கள்.
17 அதுவுமன்றி
யூதர்களும் மக்கள் தலைவர்களுமான நூற்றைம்பது
பேரோடு, அண்டை நாட்டினின்று வந்திருந்த
புறவினத்தார் அனைவருமே என் பந்தியில் உணவு
அருந்தினார்கள்.
18 நாள்
ஒன்றுக்கு கோழிகளைத் தவிர ஒரு காளையும்
முதல் தரமான ஆறு ஆடுகளும்
செலவாயின. பத்து நாளுக்கு ஒரு
முறை பலவிதமான திராட்சை இரசமும் எராளமாக அவர்களுக்குப்
பரிமாறப்பட்டது. எனினும் மக்கள் மிகவும்
ஏழ்மையுற்றிருந்ததினால், ஆளுநர்க்குரிய ஆண்டுப் படியை நான்
பெற்றுக் கொள்ளவில்லை.
19 என்
கடவுளே, நான் இம் மக்களுக்குச்
செய்துள்ள எல்லாவற்றிற்கும் ஏற்ப நீர் என்
மேல் இரக்கமாயிரும்.
அதிகாரம்
06
1 நான்
மதில்களைக் கட்டி முடித்து விட்டேன்
என்றும் (ஆயினும் வாயில்களில் கதவுகளை
இன்னும் அமைக்காதிருந்தேன்), அவற்றில் வெடிப்பு ஒன்றுமில்லை என்றும் சனபல்லாத், தொபியாசு,
கொஸ்சேம், அரேபியர் மற்றும் எங்கள் எதிரிகளான
அனைவரும் அறிய வந்தனர்.
2 அப்பொழுது
சனபல்லாதும் கோஸ்சேமும் என்னிடம் ஆள் அனுப்பி, "நீர்
வாரும்; ஒனோ என்ற சமவெளியிலுள்ள
ஊர்களுள் ஒன்றில் நாம் சந்தித்துப்
பேசலாம்" என்று சொல்லச் சொன்னார்கள்.
ஆனால் அவர்கள் எனக்குத் தீங்கு
இழைக்கவே கருதியிருந்தனர்.
3 அப்பொழுது
நான் அவர்களிடம் தூதர்களை அனுப்பி, "எனக்கு அதிகம் வேலை
இருக்கிறது. எனவே நான் வர
இயலாது. வந்தேனானால் வேலை முடங்கிப் போகும்"
என்று சொல்லச் சொன்னேன்.
4 அவர்கள்
இவ்வாறே நான்கு முறை எனக்கு
ஆள் அனுப்பினர். நானும் அதே பதிலையே
அவர்களுக்குச் சொல்லி அனுப்பினேன்.
5 அப்போது
சனபல்லாத் முன்புபோலவே இன்னொரு முறையும் தன்
ஆளை அனுப்பி வைத்தான். அவன்
கையில் ஒரு கடிதத்தையும் கொடுத்திருந்தான்.
அதில் எழுதப்பட்டிருந்ததாவது:
6 நீரும்
யூதர்களும் கலகம் செய்ய ஆலோசித்திருக்கிறீர்கள்;
அதற்காகவே நீர் மதிலைக் கட்டுகிறீர்;
இவ்வாறு, நீர் அவர்களுக்கு அரசராக
விரும்புகிறீர்;
7 அதன்
பொருட்டே நீர் இறைவாக்கினர்களை ஏற்படுத்தி,
'யூதேயாவில் ஓர் அரசர் இருக்கிறார்'
என்று அவர்கள் யெருசலேமில் உம்மைப்பற்றிப்
பேச நியமித்துள்ளீர் என்றெல்லாம் புறவினத்தார் பேசிக் கொள்கின்றனர்; கோசேமும்
இதையே சொல்கிறார். இது அரசரின் செவிகளுக்கு
எப்படியாவது எட்டிவிடும். எனவே நீர் வாரும்.
நாம் இருவரும் இதுபற்றி ஆலோசிக்கலாம்."
8 அதற்கு
நான், "நீர் சொல்வதில் கொஞ்சம்
கூட உண்மை இல்லை; எல்லாம்
வெறும் கற்பனையே" என்று சொல்லி அனுப்பினேன்.
9 இவ்வாறு
அவர்கள் எல்லாரும் எங்களை அச்சுறுத்தினர். இதனால்
நாங்கள் மனத்தளர்வுற்று வேலையை நிறுத்திவிடுவோம் என்பதே
அவர்கள் எண்ணம். ஆனால் நான்
வேலை செய்வதில் மேலும் உறுதியாய் இருந்தேன்.
10 நான்
மெத்தாபெயேலுக்குப் பிறந்த தலாயியாவின் மகன்
செமேயியாவின் வீட்டுக்குப் போனேன். ஏனெனில் என்னிடம்
வராதபடி அவனுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. என்னைக் கண்டதும்
அவன், "நாம் இருவருமாகக் கடவுளின்
வீடான ஆலயத்துக்குள் நுழைந்து ஆலயத்தின் கதவுகளைப் பூட்டிக் கொண்டு உள்ளே இருப்போம்,
வாரும். ஏனெனில் அவர்கள் உம்மைக்
கொல்லத் தேடுகிறார்கள்; இன்றிரவே உம்மைக் கொன்றுவிட எண்ணியிருக்கிறார்கள்"
என்றான்.
11 அதற்கு
நான், "என்னைப்போன்ற மனிதன் ஓடி ஒளிவது
முறையா? உயிர் பிழைப்பதற்காக ஆலயத்திற்குள்
நுழைந்து மறைந்து கொள்வது என்
போன்றோர்க்கு அழகா? நான் உள்ளே
போகமாட்டேன்" என்றேன்.
12 அப்பொழுது
கடவுள் அவனை அனுப்பவில்லை என்றும்,
தொபியாசும் சனபல்லாதுமே அவனுக்குக் கையூட்டுக் கொடுத்து அவன் இவ்வாறு எனக்கு
எதிராகத் தீர்க்கதரிசனம் உரைக்கச் செய்தனர் என்றும் நான் அறிந்துகொண்டேன்.
13 ஏனெனில்
அவன் என்னை அச்சுறுத்திப் பாவத்தில்
விழச் செய்யவும், அதன்மூலம் அவன் என்னைச் சிறுமைப்படுத்தவுமே
அவர்கள் அவனுக்குக் கையூட்டுக் கொடுத்திருந்தனர்.
14 ஆண்டவரே,
தொபியாசு, சனபல்லாத் ஆகியோர் செய்துள்ள இச்
சதி வேலைகளை நினைத்தருளும். மேலும்,
தீர்க்கதரிசினி நொவாதியாவையும், என்னை அச்சுறுத்த முயன்ற
மற்றத் தீர்க்கதரிசிகளையும் நினைவு கூர்ந்தருளும்.
15 மதில்
ஐம்பத்திரண்டு நாட்களுக்குள் கட்டப்பட்டு எலுல் மாதம் இருபத்தைந்தாம்
நாள் முடிந்தது.
16 எங்கள்
எதிரிகள் அதைப் பற்றிக் கேள்விப்பட்ட
போது, எங்கள் அண்டை நாட்டார்
அதைப் பார்த்த போது, அவர்கள்
அனைவருமே அஞ்சி மிகவும் வியப்புற்றனர்;
எம் கடவுளின் ஆற்றலினாலேயே இவ்வேலை முடிவுற்றது என்று
அறிக்கையிட்டனர்.
17 அக்காலத்தில்
யூதாவின் தலைவர்கள் தொபியாசோடு அதிகக் கடிதத் தொடர்பு
வைத்திருந்தனர்.
18 காரணம்:
இத் தொபியாசு அரேயாவின் மகன் செக்கேனியாசின் மருமகனாய்
இருந்ததினாலும், அவனுடைய மகன் யோகனான்
பராக்கியாசின் மகன் மொசொல்லாமின் மகளை
மணந்திருந்ததனாலும் யூதாவில் பலர் அவனது சார்பில்
இருப்பதாய் ஆணையிட்டிருந்தனர்.
19 எனவே
அவர்கள் எனக்கு முன்பாக அவனை
மெச்சிப் பேசுவார்கள். மேலும் நான் சொன்னதை
அவனிடம் சொல்வார்கள். தொபியாசோ என்னை அச்சுறுத்தும் படி
கடிதங்களை அனுப்பி கொண்டே இருந்தான்.
அதிகாரம்
07
1 நான்
மதில்களைக் கட்டிக் கதவுகளை அமைத்த
பின் வாயிற்காவலரையும் பாடகரையும் லேவியரையும் கணக்கிட்டேன்.
2 என் சகோதரன் அனானியிடமும் அரண்மனைத்
தலைவன் அனானியாவிடமும் யெருசலேமின் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தேன்.
ஏனெனில் இந்த அனானியா மற்றவர்களைவிட
நேர்மையுள்ளவன்; தெய்வ பயம் கொண்டவன்.
3 நான்
அவர்களைப் பார்த்து, "வெயில் வரும் வரை
யெருசலேமின் கதவுகளைத் திறக்க வேண்டாம். சூரியன்
இன்னும் உச்சியில் இருக்கும் போதே கதவுகளை மூடித்
தாழிட வேண்டும். யெருசலேம் மக்களுள் காவலரை ஏற்படுத்தி அவர்கள்
ஒவ்வொருவரும் முறைப்படி தத்தம் வீடுகளுக்கு எதிராகக்
காவல் புரியுமாறு செய்ய வேண்டும்" என்று
சொன்னேன்.
4 நகர்
பரந்ததும் பெரியதுமாயிருந்தது. ஆனால் அதனுள் வாழ்ந்து
வந்த மக்கள் வெகு சிலரே.
வீடுகள் இன்னும் அதில் கட்டப்படவில்லை.
5 இந்நிலையில்
கடவுளின் ஏவுதலின்படி, பெரியோர், ஆளுநர்கள், பொதுமக்கள் எல்லாரையும் ஒன்றுகூட்டி அவர்களைக் கணக்கெடுத்தேன். அப்பொழுது அடிமைத்தனத்தினின்று திரும்பி வந்திருந்த முதற் கூட்டத்தினரின் குடும்ப
வரிசைப் பதிவேடு ஒன்று அகப்பட்டது.
அதில் எழுதியிருந்ததாவது:
6 இது பபிலோனிய அரசர் நபுகோதனசாரால் சிறைப்படுத்தப்பட்டு,
பின் யூதேயா நாட்டிலிருந்த தத்தம்
நகருக்குத் திரும்பி வந்த இம்மாநில மக்கள்
தொகைக் கணக்காவது:
7 ஜெரோபாபேல்,
யோசுவா, நெகேமியா, ஆசாரியாசு, இரவாமியாசு, நகாமணி, மர்தோக்கே, பெல்சாம்,
மெஸ்பராத், பெகோவாயி, நகோம், பாவானா ஆகியோரோடு
திரும்பிவந்த இஸ்ராயேல் மக்களில் ஆடவரின் கணக்காவது:
8 பாரேசின்
மக்கள் இரண்டாயிரத்து நூற்றெழுபத்திரண்டு;
9 சவாத்தியாவின்
மக்கள் முந்நூற்றெழுபத்திரண்டு;
10 அரேயாவின்
மக்கள் அறுநூற்றைம்பத்திரண்டு;
11 பாகாத்
மோவாபின் புதல்வர்களான யோசுவா, யோவாபு ஆகியோரின்
மக்கள் இரண்டாயிரத்து எண்ணுற்றுப் பதினெட்டு;
12 ஏலாமின்
மக்கள் ஆயிரத்திருநூற்றைம்பத்து நான்கு;
13 ஜெத்துவாவின்
மக்கள் எண்ணுற்று நாற்பத்தைந்து;
14 ஜாக்காயீயின்
மக்கள் எழுநூற்றறுபது;
15 பண்ணுயியின்
மக்கள் அறுநூற்று நாற்பத்தெட்டு;
16 பேபாயியின்
மக்கள் அறுநூற்றிருபத்தெட்டு;
17 அசுகாத்தின்
மக்கள் இரண்டாயிரத்து முந்நூற்றிருபத்திரண்டு;
18 அதோனிக்காமின்
மக்கள் அறுநூற்றறுபத்தேழு;
19 பேகுவாயின்
மக்கள் இரண்டாயிரத்தறுபத்தேழு;
20 ஆதீனின்
மக்கள் அறுநூற்றைம்பத்தைந்து;
21 எசேக்கியாவின்
மகன் ஆத்தேரின் மக்கள் தொண்ணுற்றெட்டு;
22 ஆசேமின்
மக்கள் முந்நூற்றிருபத்தெட்டு;
23 பேசாயியின்
மக்கள் முந்நூற்றிருபத்து நான்கு;
24 ஆரேப்பின்
மக்கள் நூற்றுப் பன்னிரண்டு;
25 கபவோனின்
மக்கள் தொண்ணுற்றைந்து;
26 பெத்லகேம்,
நேத்துபா என்ற ஊர்களின் மக்கள்
நூற்றெண்பத்தெட்டு;
27 அநத்தோத்தின்
ஆடவர் நூற்றிருபத்தேட்டு;
28 பேத்
தஸ்மோத்தின் ஆடவர் நாற்பத்திரண்டு;
29 காரியாத்தியாரிம்,
சேபிரா, பெரெத் என்ற ஊர்களின்
மக்கள் எழுநூற்று நாற்பத்து மூன்று;
30 ராமா,
கேபா என்ற ஊர்களின் மக்கள்
அறுநூற்றிருபத்தொன்று;
31 மக்மாசின்
ஆடவர் நூற்றிருபத்திரண்டு;
32 பேத்தேல்,
ஹாயீன் என்ற ஊர்களின் மனிதர்
நூற்றிருபத்து மூன்று;
33 மற்றொரு
நெபோவின் மனிதர் ஐம்பத்திரண்டு;
34 மற்றொரு
ஏலாமின் மனிதர் ஆயிரத்திருநூற்று ஐம்பத்து
நான்கு;
35 ஹாரேமின்
மக்கள் முந்நூற்றிருபது;
36 யெரிக்கோவின்
மக்கள் முந்நூற்று நாற்பத்தைந்து;
37 லோத்,
ஹதீத் ஒனோ என்பவர்களின் மக்கள்
எழுநூற்றிருபத்தொன்று;
38 சேனவாவின்
மக்கள் மூவாயிரத்துத் தொளாயிரத்து முப்பது.
39 குருக்களிலே:
யோசுவா குடும்பத்தைச் சேர்ந்த இதாயியாவின் மக்கள்
தொள்ளாயிரத்தெழுபத்து மூன்று;
40 எம்மேரின்
மக்கள் ஆயிரத்தைம்பத்திரண்டு;
41 பாசூரின்
மக்கள் ஆயிரத்திருநூற்று நாற்பத்தேழு;
42 ஆரேமின்
மக்கள் ஆயிரத்துப் பதினேழு.
43 லேவியர்களிலே:
ஒதுயியாவின் புதல்வரான யோசுவா,கெத்மிஹேல் என்போரின்
மக்கள் எழுபத்து நான்கு;
44 பாடகரில்
ஆசாப்பின் மக்கள் நூற்று நாற்பத்தெட்டு.
45 வாயிற்காவலரில்:
செல்லோம், ஆத்தேர், தெல்மோன், ஆக்கூப், அதிதா, சோபாயி ஆகியோரின்
மக்கள் நூற்று முப்பத்தெட்டு.
46 ஆலய
ஊழியர்களில்: சோஹா மக்கள், ஹசுப்பா
மக்கள், தெபாவோத் மக்கள்,
47 சேறோஸ்
மக்கள், சீயவா மக்கள், பதோன்
மக்கள்,
48 லெபனா
மக்கள், ஹாகபா மக்கள்,
49 செல்மாயீ
மக்கள், ஹானான் மக்கள், கேதேல்
மக்கள்,
50 காஹேர்
மக்கள், இராவாயியாவின் மக்கள், ராசீனின் மக்கள்,
நேகொதாவின் மக்கள்,
51 கேசேம்
மக்கள், ஆசா மக்கள்,
52 பாசேயியாவின்
மக்கள், பேசாயியின் மக்கள்,
53 முனிம்
மக்கள், நோப்புசீம் மக்கள், பக்பூக் மக்கள்,
ஹகுவா மக்கள், ஹற்கூர் மக்கள்,
54 பேஸ்லோத்
மக்கள், மாருதா மக்கள், ஆர்சா
மக்கள்,
55 பெற்கோஸ்
மக்கள், சீசறா மக்கள்,
56 தேமா
மக்கள், நாசியா மக்கள், ஆதிபா
மக்கள்,
57 சாலமோனுடைய
ஊழியர்களின் மக்கள், சோதயீயின் மக்கள்,
சோபெரேத் மக்கள்,
58 பாரிதா
மக்கள், யாஹலா மக்கள், தற்கோன்
மக்கள்,
59 யெதேல்
மக்கள், சபாதியா மக்கள், ஆதில்
மக்கள், ஆமோனின் மகன் சபாயீமுக்குப்
பிறந்த போக்கெரெத்தின் மக்கள் ஆகிய இவர்களே.
60 ஆலய
ஊழியர்களும், சாலமோனின் ஊழியர்களுடைய மக்களும் முந்நூற்றுத் தொண்ணுற்றிரண்டு பேர்.
61 அன்றியும்
தெல்மலா, தெல்கர்சா, கெரூப், அத்தோன், எம்மேர்
என்ற இடங்களிலிருந்து வந்தவர்களும், தாங்கள் இஸ்ராயேலின் வழி
வந்தவர் என்று நிரூபிக்க முடியாமல்
இருந்தவர்களும் வருமாறு:
62 தலாயியா,
தோபியா, நேக்கொதா ஆகியோரின் மக்கள் அறுநூற்று நாற்பத்திரண்டுபேர்.
63 குருக்களிலே
ஹபியா மக்கள், அக்கோஸ் மக்கள்,
பெர்செலாயி மக்கள்- இவன் கலாதியனான
பெர்செலாயின் புதல்வியரில் ஒருத்தியை மணந்து கொண்டதனால் அவர்களின்
பெயரால் பெர்செலாயி என அழைக்கப்பட்டான்- ஆகிய
அனைவரும்
64 தங்கள்
தலைமுறை அட்டவணையைத் தேடியும் அடையாததால் குருத்துவப் பணியினின்று நீக்கப்பட்டனர்.
65 அறிஞரும்
உத்தமருமான ஒரு குரு தோன்றுவம்
வரை நீங்கள் உள் தூயகப்
பொருட்களில் எதையும் உண்ணக் கூடாது"
என்று ஆளுநர் அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தார்.
66 மக்கள்
அனைவரின் மொத்தத் தொகை நாற்பத்திரண்டாயிரத்து
முந்நூற்று அறுபது.
67 அவர்களைத்
தவிர, அவர்களின் வேலைக்காரரும் வேலைக்காரிகளும் ஏழாயிரத்து முந்நூற்று முப்பத்தேழு பேர். மற்றும் இருநூற்று
நாற்பத்தைந்து பாடகரும் பாடகிகளும் இருந்தனர்.
68 அவர்களுடைய
குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு; கோவேறு கழுதைகள் இரு
நூற்று நாற்பத்தைந்து;
69 அவர்களுடைய
ஒட்டகங்கள் நானூற்று முப்பத்தைந்து; கழுதைகள் ஆயிரத்து எழுநூற்றிருபது.
70 குலத்
தலைவர்களிலே பலர் ஆலய வேலைக்காகக்
கொடுத்த காணிக்கைகளின் கணக்காவது: ஆளுநர் கருவூலத்திற்கு ஆயிரம்
திராக்மா என்ற பொற்காசுகளையும் ஐம்பது
பாத்திரங்களையும் ஐந்நூற்று முப்பது குருவுடைகளையும் தந்தார்.
71 குலத்
தலைவர்களில் வேறு சிலர் ஆலய
வேலை நிதிக்கென்று இருபதாயிரம் திராக்மா என்ற பொற் காசுகளையும்,
இரண்டாயிரத்திருநூறு மினா என்ற வெள்ளிக்
காசுகளையும் தந்தனர்.
72 ஏனைய
மக்களோ இருபதினாயிரம் திராக்மா என்ற பொற்காசுகளையும், இரண்டாயிரம்
மினா என்ற வெள்ளிக் காசுகளையும்,
அறுபத்தேழு குருவுடைகளையும் கொடுத்தனர்.
73 குருக்களும்
லேவியர்களும் வாயிற்காவலரும் பாடகரும் பொதுமக்களுள் சிலரும் ஆலய ஊழியர்களும்
இஸ்ராயேலர் அனைவரும் தத்தம் நகர்களில் வாழ்ந்து
வந்தனர்.
அதிகாரம்
08
1 ஏழாவது
மாதத்தில் இஸ்ராயேல் மக்கள் அனைவரும் தண்ணீர்
வாயிலுக்கு முன் இருந்த வளாகத்தில்
ஒன்று கூடினர். ஆண்டவர் இஸ்ராயேலுக்குக் கொடுத்திருந்த
மோயீசனின் திருச்சட்டநூலைக் கொண்டுவருமாறு திருச்சட்ட வல்லுநர் எஸ்ராவை வேண்டினார்.
2 அவ்வாறு
ஏழாம் மாதம் முதல் நாள்
குரு எஸ்ரா திருச்சட்ட நூலைப்
புரிந்து கொள்ளும் திறமை படைத்த ஆண்,
பெண் அடங்கிய சபை முன்னிலையில்
கொண்டு வந்தார்.
3 தண்ணீர்
வாயிலுக்கு முன் இருந்த வளாகத்தில்
காலை முதல் நண்பகல் வரை
அவர்கள் முன் அதை அவர்
வாசித்தார். எல்லா மக்களும் திருச்சட்ட
நூலுக்குக் கவனமாய்ச் செவிமடுத்தனர்.
4 திருச்சட்ட
வல்லுநர் எஸ்ராவோ பேசுவதற்கென்று மரத்தால்
செய்யப்பட்ட ஒரு மேடையின் மேல்
நின்று கொண்டிருந்தார். அவருக்கு வலப்பக்கத்தில் மத்தத்தியாஸ், செமேயியா, அனியா, ஊரியா, எல்சியா,
மாசியா ஆகியோரும், இடப்பக்கத்தில் பதாயியா, மிசாயேல், மெல்கியா, காசூம், கஸ்பதனா, சக்கரியா,
மொசொல்லாம் ஆகியோரும் நின்று கொண்டிருந்தனர்.
5 அப்பொழுது
எஸ்ரா எல்லா மக்களையும் பார்க்கும்
அளவுக்கு உயரமான இடத்தில் நின்று
கொண்டு அவர்கள் முன்னிலையில் நூலைத்
திறந்தார். உடனே மக்கள் எல்லாரும்
எழுந்து நின்றனர்.
6 அப்பொழுது
எஸ்ரா ஆண்டவராகிய மகத்தான கடவுளைத் துதித்து
வாழ்த்தவே, மக்கள் எல்லாரும் தங்கள்
கைகளை உயர்த்தி, "ஆமென், ஆமென்" என்று
சொல்லிப் பணிந்து, முகங்குப்புற விழுந்து கடவுளைத் தொழுதார்கள்.
7 மேலும்
வேலியரான யோசுவா, பானி, செரேபியா,
யாமீன், ஆக்கூப், சேப்தாயி, ஓதியா, மாசியா, கெலித்தா,
அசாரியாஸ், யோசுபாத், கானான், பலாயியா ஆகியோர்
திருச்சட்டநூலை மக்களுக்கு விளக்கிக் கூறினார்கள். அப்பொழுது மக்கள் தங்கள் இடத்திலேயே
நின்று கொண்டிருந்தனர்.
8 அவர்கள்
மக்களுக்குப் புரியும்படி தெளிவாகவும் பொருளோடும் கடவுளின் திருச்சட்ட நூலை வாசித்தார்கள். ஆதலால்
மக்களும் வாசிக்கப்பட்டதன் பொருளைப் புரிந்து கொண்டனர்.
9 ஆளுநர்
நெகேமியாவும், குருவும் மறைநூல் அறிஞருமான எஸ்ராவும்,
லேவியர்களும் மக்கள் அனைவர்க்கும் திருச்சட்டத்தின்
பொருளை விளக்கிக் கூறினர். "கடவுளான ஆண்டவரின் புனித
நாள் இதுவே! எனவே நீங்கள்
அழுது புலம்ப வேண்டாம்" என்றனர்.
ஏனெனில் எல்லா மக்களும் திருச்சட்ட
நூலை வாசிக்கக் கேட்டுக் கண்ணீர்விட்டு அழுது கொண்டேயிருந்தனர்.
10 மீண்டும்
எஸ்ரா அவர்களைப் பார்த்து, "நீங்கள் போய்க் கொழுத்தவற்றை
உண்டு இனிய திராட்சை இரசத்தைக்
குடித்து, உண்ண இல்லாதவர்களுக்கு உணவு
அனுப்பி வையுங்கள். ஏனெனில், ஆண்டவரின் புனித நாள் இதுவே!
எனவே வருந்த வேண்டாம். ஆண்டவரில்
மகிழ்வதிலேயே உங்களுடைய ஆற்றல் அடங்கியிருக்கிறது" என்றார்.
11 லேவியர்களோ
எல்லா மக்களையும் பார்த்து, "அமைதியாயிருங்கள்; ஏனெனில் இது புனித
நாள். எனவே கவலைப்படாதீர்கள்" என்று சொல்லி
அவர்கள் அமைதியாய் இருக்கச் செய்தனர்.
12 எஸ்ரா
கூறியதைப் புரிந்துகொண்ட எல்லா மக்களும் உண்டு
குடிக்கவும், உணவு அனுப்பி வைத்து
மகிழ்ச்சி கொண்டாடவும் புறப்பட்டுப் போனார்கள்.
13 மறுநாள்
எல்லாக் குலத் தலைவர்களும் குருக்களும்,
லேவியரும் திருச்சட்ட வல்லுநரான எஸ்ராவிடம் கூடி வந்தனர்; திருச்சட்ட
நூலைத் தங்களுக்கு விளக்கியருளுமாறு வேண்டினர்.
14 அப்பொழுது,
"ஏழாம் மாதத் திருவிழாவின் போது
இஸ்ராயேல் மக்கள் கூடாரங்களில் தங்கியிருக்க
வேண்டும்" என்று ஆண்டவர் மோயீசன்
வழியாய் அருளியிருந்த திருச்சட்ட நூலில் எழுதியிருக்க அவர்கள்
கண்டனர்.
15 அதைக்
கேட்டவுடனே மக்கள், "திருச்சட்ட நூலில் எழுதப்பட்டுள்ளவாறே கூடாரங்கள்
அமைப்பதற்காக, நீங்கள் மலைகளுக்குப் போய்
அங்கிருந்து ஒலிவ மரம், காட்டு
ஒலிவ மரம், மிருதுச் செடி,
ஈந்து, மற்றும் தழைத்துள்ள மரங்களின்
கிளைகளையும் கொண்டு வாருங்கள்" என்று
தங்களுடைய நகரங்கள் எல்லாவற்றிலும் யெருசலேமிலும் பறைச்சாற்றினர்.
16 எனவே
மக்கள் வெளியே சென்று தழைகளைக்
கொண்டு வந்து தத்தம் வீட்டு
மெத்தையின் மேலும் தத்தம் முற்றங்களிலும்
ஆலய வளாகத்திலும் தண்ணீர் வாயில் வளாகத்திலும்,
எப்பிராயிம் வாயில் வளாகத்திலும் தங்களுக்குக்
கூடாரங்களை அமைக்கத் தொடங்கினர்.
17 அவ்வாறே
அடிமைத்தனத்தினின்று திரும்பி வந்திருந்தோர் அனைவரும் கூடாரங்களை அமைத்து அங்குத் தங்கியிருந்தனர்.
நூனின் மகன் யோசுவாவின் காலம்
தொட்டு அன்று வரை இஸ்ராயேல்
மக்கள் இவ்விதம் செய்ததில்லை. எனவே மக்கள் அன்று
பெரு மகிழ்ச்சி கொண்டாடினர்.
18 எஸ்ராவோ
முதல் நாள் தொடங்கிக் கடைசி
நாள் வரை ஒவ்வொரு நாளும்
திருச்சட்ட நூலை வாசித்து வந்தார்.
மக்கள் ஏழு நாளளவும் திருவிழாக்
கொண்டாடினர். எட்டாம் நாளோ கட்டளைப்படி
மாபெரும் சபையாய் ஒன்று கூடினர்.
அதிகாரம்
09
1 அதே மாதம் இருபத்து நான்காம்
நாளன்று கோணி ஆடை உடுத்தி,
தங்கள் தலையின் மேல் புழுதியைத்
தூவிக் கொண்டு, நோன்பு காக்குமாறு
இஸ்ராயேல் மக்கள் அனைவரும் ஒன்று
கூடி வந்தனர்.
2 இஸ்ராயேல்
மக்கள் புறவினத்தாரோடு தாங்கள் கொண்டிருந்த உறவை
முறித்தனர். எழுந்து நின்று தங்கள்
பாவங்களையும் தங்கள் முன்னோர்களின் பாவங்களையும்
அறிக்கையிட்டனர்.
3 அவர்கள்
நாள்தோறும் பகலில் நான்கில் ஒரு
பகுதியை எழுந்து நின்று தங்கள்
கடவுளாகிய ஆண்டவரின் திருச்சட்ட நூலை வாசிப்பதிலே செலவிட்டனர்.
மற்றொரு கால் பகுதி நேரமளவும்
தங்கள் பாவங்களை அறிக்கையிட்டுத் தங்கள் கடவுளான ஆண்டவரைப்
பணிந்து தொழுதனர்.
4 மீண்டும்
யோசுவா, பானி, கெத்மிகேல், சபானியா,
பொன்னி, சரேபியாஸ், பானி, கானானீ ஆகியோர்
லேவியர்களின் படிகளின் மேல் நின்று கொண்டு,
தங்கள் கடவுளாகிய ஆண்டவரை நோக்கி அபயமிட்டனர்.
5 பின்,
லேவியர்களான யோசுவா, கெத்மிகேல், பொன்னி,
கசப்னியா, சரேபியா, ஒதாயியா, சேப்னியா, பாத்தாகியா ஆகியோர் மக்களைப் பார்த்து,
"எழுந்திருங்கள்; நம் கடவுளாகிய ஆண்டவரை
என்றென்றும் துதியுங்கள். எங்கள் கடவுளான ஆண்டவரே,
மாபெரும் உம் திருப்பெயர் மேன்
மேலும் புகழப்படக்கடவது.
6 ஆண்டவரே,
நீர் ஒருவரே விண்ணையும் வானாதி
வானங்களையும், வானக அணிகளையும் படைத்தவர்!
மண்ணையும் அதிலுள்ள எல்லாவற்றையும், கடல்களையும் அவற்றிலுள்ள யாவற்றையும் உண்டாக்கியவர்; அவற்றிற்கெல்லாம் உயிர் அளிப்பவர். வானக
அணிகள் உம்மைப் பணிகின்றன.
7 கடவுளாகிய
ஆண்டவரே, ஆபிராமைத் தேர்ந்தெடுத்து ஊர் என்னும் கல்தேய
நகரினின்று அவரை வெளியே கொணர்ந்து,
அவருக்கு ஆபிரகாம் என்ற பெயரை இட்டவர்
நீரே!
8 அவருடைய
விசுவாசத்தைக் கண்டு, கானானியர், ஏத்தையர்,
அம்மோறையர், பெரேசியர், எபுசேயர், கெர்சேசெயர் ஆகியோரின் நாட்டை அவருக்கும் அவர்
வழித்தோன்றல்களுக்கும் கொடுப்பதாக அவரோடு உடன்படிக்கை செய்தவரும்
நீரே! நீர் நீதியுள்ளவர்! எனவே,
உமது உடன்படிக்கையை நிறைவேற்றினீர்.
9 எகிப்தில்
எங்கள் முன்னோர்கள் அனுபவித்த துன்பத்தை நீர் கண்டீர். செங்கடலின்
ஓரத்தில் அவர்கள் இட்ட பெரும்
கூக்குரலைக் கேட்டருளினீர்.
10 பாரவோனிடமும்,
அவனுடைய எல்லா ஊழியர்களிடமும் அவனுடைய
நாட்டின் எல்லா மக்களிடமும் உம்
அருங்குறிகளை விளங்கச் செய்தீர்; ஏனெனில், இவர்கள் உம் மக்களைச்
செருக்குடன் நடத்தினார்கள் என்று நீர் அறிந்திருந்தீர்.
அதனால், இன்று வரை உமது
புகழ் அங்கு விளங்கச் செய்தீர்.
11 அவர்களுக்கு
முன்பாகக் கடல் நீரை நீர்
பிரித்ததனால், அவர்கள் கால் நனையாமல்
கடல் நடுவே நடந்து போனார்கள்.
அவர்களைத் தொடர்ந்தவர்களையோ கல்லைப் போல் ஆழ்கடலிலே
ஆழ்த்தினீர்.
12 நீர்
பகலில் மேகத்தூணினாலும், இரவில் நெருப்புத் தூணினாலும்
அவர்களை வழிநடத்தினீர்.
13 சீனாய்
மலையில் நீர் எழுந்தருளி விண்ணிலிருந்து
அவர்களோடு பேசி, நேர்மையான நீதி
முறைகளையும் உண்மைச் சட்டத்தையும் சடங்கு
முறைகளையும் உத்தம கட்டளைகளையும் அவர்களுக்குத்
தந்தருளினீர்.
14 புனிதமான
உமது ஓய்வு நாளைப் பற்றி
அவர்களுக்குக் கற்பித்தீர். கட்டளைகளையும் சடங்கு முறைகளையும் திருச்சட்டத்தையும்
உம் அடியான் மோயீசன் வழியாய்
அவர்களுக்குக் கொடுத்தீர்.
15 அவர்கள்
பசியாயிருக்கையில் விண்ணிலிருந்து அப்பத்தைத் தந்தீர். அவர்கள் தாகமாய் இருந்த
போது பாறையினின்று நீர் சுரக்கச் செய்தீர்.
நீர் அவர்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்திருந்த நாட்டை அடைந்து. அதை
அவர்கள் உடைமையாக்குமாறு பணித்தீர்.
16 ஆனால்
அவர்களும் எங்கள் முன்னோரும் செருக்குடன்
நடந்து, வணங்காக் கழுத்தினராய் உமது கட்டளைக்குச் செவிகொடுக்கவில்லை.
17 அவர்கள்
உமக்குச் செவிகொடுக்கவுமில்லை; நீர் அவர்களுக்காகச் செய்திருந்த
அருங்குறிகளை நினைத்துப்பார்க்கவுமில்லை. மாறாக, வணங்காக் கழுத்தினராய்
அடிமைத்தன நாடான எகிப்திற்குத் திரும்பிச்
செல்லவும் தயாராய் இருந்தனர். தயவு,
சாந்தம் இரக்கம், நீடிய பொறுமை, பரிவிரக்கம்
கொண்ட கடவுளான நீரோ அவர்களைத்
தள்ளிவிடவில்லை.
18 அவர்கள்
தங்களுக்கென்று வார்க்கப்பட்ட ஒரு கன்றுக்குட்டியைச் செய்து,
'உன்னை எகிப்திலிருந்து மீட்டு வந்த உன்
கடவுளைப் பார்' என்று சொல்லி
மிகப் பெரிய தேவதூஷணங்களைச் சொன்னார்கள்.
19 ஆயினும்
நீர் அவர்கள்மேல் அளவற்ற இரக்கம் காட்டி
அவர்களைப் பாலைவனத்தில் கைவிட்டதுமில்லை; அவர்களைப் பகலில் வழி நடத்தி
வந்த மேகத் தூணும், அவர்கள்
செல்ல வேண்டிய பாதையை இரவில்
காட்டிவந்த நெருப்புத் தூணும் அவர்களை விட்டு
நீங்கினதுமில்லை.
20 அவர்களுக்கு
அறிவை உணர்த்த உம்முடைய நல்ல
ஆவியைக் கொடுத்தீர். உமது மன்னாவை அவர்களுக்குக்
கொடுக்க நீர் மறுக்கவில்லை. அவர்களது
தாகத்துக்குத் தண்ணீரைக் கொடுத்தீர்.
21 நாற்பது
ஆண்டுகளாய்ப் பாலைவனத்தில் அவர்களுக்கு உணவளித்து வந்தீர். அவர்களுக்கு ஒரு குறையும் இல்லாதபடி
செய்தீர். அவர்கள் ஆடைகள் கிழிந்து
போகவுமில்லை; அவர்கள் கால்கள் கொப்புளிக்கவுமில்லை.
22 நாடுகளையும்
அரசுகளையும் அவர்கள் கையில் ஒப்படைத்தீர்;
அவற்றை எல்லாம் அவர்களுக்குப் பங்கிட்டுக்
கொடுத்தீர். இவ்வாறு அவர்கள் செகோன்
நாட்டையும், எசபோனின் அரசனது நாட்டையும், பாசானின்
அரசன் ஓகின் அரசையும் உரிமையாக்கிக்
கொண்டனர்.
23 விண்மீன்களைப்
போல் அவர்ளுடைய மக்களைப் பெருகச் செய்தீர். அவர்கள்
உட்புகுந்து உரிமையாக்கிக் கொள்வார்கள் என்று நீர் அவர்களுடைய
முன்னோருக்குச் சொல்லியிருந்த நாட்டிற்கு அவர்களை அழைத்து வந்தீர்.
24 அவர்களுக்குப்
பிறந்த மக்கள் சென்று அந்நாட்டைத்
தங்கள் உடைமையாக்கிக் கொண்டனர். அவர்கள் முன்னிலையில் அந்நாட்டு
மக்களான கானானியரைத் தாழ்த்தினீர்: இவர்களையும் இவர்களின் அரசர்களையும் நாட்டு மக்களையும் அவர்களது
கையிலே ஒப்படைத்துத் தம் விருப்பப்படி அவர்களை
நடத்த விட்டு விட்டீர்.
25 எனவே
அவர்கள் அரண் சூழ்ந்த நகர்களையும்
செழிப்பான நிலங்களையும் கைப்பற்றிக் கொண்டனர். எல்லா வித உடைமைகள்
நிறைந்த வீடுகளையும் மற்றவர்கள் வெட்டின கேணிகளையும் திராட்சைத்
தோட்டங்களையும் ஒலிவத் தோப்புகளையும் கனி
தரும் அதிகமான மரங்களையும் சொந்தமாக்கிக்
கொண்டனர்; உண்டு நிறைவுகொண்டனர். உமது
மாட்சிமிகு தயையினால் நிறைந்த சுக செல்வங்களை
அனுபவித்து வாழ்ந்தனர்.
26 ஆயினும்
கீழ்ப்படியாத அவர்கள் உமக்கு எதிராய்க்
கிளர்ச்சி செய்தார்கள். உமது திருச்சட்டத்தைப் புறக்கணித்தார்கள்;
உம் பக்கம் மனம் திரும்பும்படி
தங்களுக்கு அக்கறையோடு புத்திசொல்லி வந்த உம் இறைவாக்கினர்களைக்
கொன்று போட்டார்கள். இவ்வாறு பெரிய தேவதூஷணமான
தீச் செயல்களைச் செய்தார்கள்.
27 அப்பொழுது
நீர் அவர்களுடைய எதிரிகளின் கையில் அவர்களை ஒப்படைத்தீர்.
எதிரிகள் அவர்களைத் துன்புறுத்தினர். அவர்கள் நெருக்கப்பட்ட காலத்தில்
உம்மிடம் ஓலமிட்டபோதோ, நீர் விண்ணிலிருந்து அவர்களது
குரலைக் கேட்டு, உமது அளவற்ற
இரக்கத்தினால் அவர்களைத் தங்கள் எதிரிகளின் கையினின்று
காக்க மீட்பர்களை அவர்களுக்கு அனுப்பினீர்.
28 தாங்கள்
அமைதியுற்ற பின்னரோ உம் திருமுன்
பாவம் செய்யத் தலைப்பட்டனர்; நீர்அவர்களுடைய
எதிரிகளின் கைகளில் அவர்களை ஒப்படைத்தீர்;
எதிரிகளும் அவர்களைத் தமக்குக் கீழ்ப்படுத்தினர். எனவே அவர்கள் மறுபடியும்
உம்மிடம் வந்து கூக்குரலிட்டார்கள்; நீரோ
விண்ணிலிருந்து அவர்களுடைய மன்றாட்டைக் கேட்டருளுனீர்; அவர்களுக்கு இரக்கம் காட்டிப் பலமுறையும்
அவர்களுக்கு விடுதலை அளித்தீர்.
29 முன்
போல உமது திருச்சட்டத்தை அனுசரிக்கும்படி
அவர்களை எச்சரித்தீர். அவர்களோ செருக்குற்றவர்களாய் உமது
கட்டளைக்குச் செவிகொடாமல், வாழ்வளிக்கக் கூடிய உம் திருச்சட்டங்களை
மீறிப் பாவம் செய்தனர்; உம்
கட்டளைகளுக்குப் படிய மறுத்தனர்; வணங்காக்
கழுத்தினராய் உமக்கு அடிபணிவதை வெறுத்தனர்.
30 நீரோ
பல்லாண்டுகள் அவர்கள் மட்டில் பொறுமையாய்
இருந்தீர். இறைவாக்கினர் மூலம் உமது ஆவியால்
அவர்களுக்கு அறிவுரை நல்கி வந்தீர்.
அவர்களோ அதற்கும் செவிமடுக்கவில்லை. ஆதலால் நீர்புறவினத்தார் கையிலே
அவர்களை ஒப்படைத்தீர்.
31 ஆயினும்
உமது பேரிரக்கத்தின் பொருட்டு நீர் அவர்களை அழித்து
விடவுமில்லை; கைவிட்டு விடவுமில்லை. ஏனெனில் நீரோ இரக்கமும்
தயையும் உள்ள கடவுள்!
32 ஆகையால்
பெரியவரும் வல்லவரும் அஞ்சுதற்குரியவரும், என்றும் இரக்கம் காட்டி,
உடன்படிக்கைக்குப் பிரமாணிக்கமாய் இருக்கிறவருமான எங்கள் கடவுளே, அசீரிய
அரசர் காலம் தொட்டு இன்று
வரை எங்களுக்கும் எங்கள் அரசர்களுக்கும் மக்கள்
தலைவர்களுக்கும் எம் குருக்களுக்கும் இறைவாக்கினர்க்கும்
எம் முன்னோர்க்கும் உம் மக்கள் எல்லாருக்குமே
நேரிட்டுள்ள துன்பங்கள் அனைத்தையும் அற்பமாய் எண்ணாதேயும்.
33 எமக்கு
நேரிட்ட அனைத்திலுமே நீர் நீதியுடன் நடந்து
கொண்டீர். ஏனெனில் நீர் பிரமாணிக்கமாய்
இருந்தீர்; நாங்களோ கெட்டவர்களாய் நடந்தோம்.
34 எங்கள்
அரசர்களும் தலைவர்களும் குருக்களும் முன்னோரும் திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்கவில்லை; நீர் அவர்களுக்குக் கொடுத்திருந்த
உம் கட்டளைகளையும் எச்சரிக்கைகளையும் அவர்கள் பொருட்படுத்த வில்லை.
35 அவர்கள்
தங்கள் நாட்டையும், நீர் அவர்களுக்குக் காட்டியிருந்த
பேரிரக்கத்தையும், நீர் அவர்களுக்கு அளித்திருந்த
பரந்த செழிப்பான நாட்டையும் அவர்கள் அனுபவித்து வந்த
போதிலும் அவர்கள் உமக்குப் பணிபுரியவுமில்லை;
தங்கள் தீச்செயல்களை விட்டு விலகவுமில்லை.
36 ஆதலால்
இன்று நாங்கள் அடிமைகளாய் இருக்கின்றோம்.
அதன் நற்கனிகளையும் நற்பலன்களையும் அனுபவிக்கும்படி நீர் எம் முன்னோர்க்குக்
கொடுத்த இந்நாட்டிலேயே நாங்கள் அடிமைகளாகி விட்டோம்.
37 இதன்
நல்ல விளைச்சலோ எங்கள் பாவங்களின் காரணமாக
எங்களைக் கீழ்ப்படுத்தும்படி நீர் ஏற்படுத்தி உள்ள
அரசர்களுக்கே பயன்படுகிறது. அவர்களோ தங்கள் விருப்பம்
போல் எம் உடல்களையும் எம்
கால்நடைகளையும் ஆட்டிப்படைக்கிறார்கள். அதனால் நாங்கள் பெருந்
துன்பக் கடலிலில் அமிழ்ந்தி உழல்கின்றோம்" என்று மன்றாடினார்கள்.
38 இதன்
பொருட்டே நாங்கள் நிலையான உடன்படிக்கை
செய்து அதை எழுதி வைக்கிறோம்.
எங்கள் தலைவர்களும் லேவியர், குருக்களும் அதில் கையொப்பம் வைக்கிறார்கள்.
அதிகாரம்
10
1 கையொப்பமிட்டவர்கள்
வருமாறு: ககாலியாவின் மகனும் ஆளுநருமான நெகேமியா,
செதேசியாஸ்,
2 சராயியாஸ்,
அசாரியாஸ், எரேமியாஸ்,
3 பெசூர்,
அமாரியாஸ், மெல்கியாஸ்,
4 கத்துஸ்,
செபேனியா, மெல்லூக்,
5 காரேம்,
மெரிமோத்,
6 ஒப்தியாஸ்,
தானியேல்,
7 கிநெதோன்,
பாரூக், மொசொல்லாம்,
8 ஆபியா,
மீயாமின், மாசியா, பெல்காயி, செமேயியா
ஆகிய குருக்கள்.
9 லேவியர்களில்
ஆசானியாவின் மகன் யோசுவா, கேனதாத்
மக்களில் பென்னுயீ, கெத்மியேல்;
10 இவர்களின்
சகோதரர்கள் செபேனியா, ஒதாயியா, கெலிதா,
11 பாலாயியா,
கானான், மிக்கா,
12 ரெகோப்,
கசெபியா, சக்கூர், செரேபியா,
13 சபானியா,
ஒதாயியா, பானீ, பானீனு ஆகியோர்.
14 மக்கள்
தலைவர்களில் பாரோஸ், பாகாத்மோவாப், ஏலாம்,
சேத்தூ, பானீ,
15 பொன்னீ,
ஆஸ்காத்,
16 பெயாயீ,
அதோனியா,
17 பெகோவாயீ,
ஆதீன், ஆதேர், எசெக்கியா,
18 ஆசூர்,
ஒதாயியா, காசூம், பெசாயி,
19 காரேப்,
அநத்தோத்,
20 நேபாயி,
மெக்பியாஸ்,
21 மொசொல்லாம்,
கேசீர், மெசீஜ;பெல்,
22 சாதோக்,
யெத்துவா, பெல்தியா, கானான்,
23 அனானியா,
ஒசெயே, கனானியா, காசூப்,
24 அலோகேஸ்,
பாலெயா,
25 சோபேக்,
ரேகும்,
26 கசெப்னா,
மாசியா, எக்காயியா, கானான்,
27 ஆனான்,
மெல்லூக், காரான், பவானா ஆகியோர்.
28 மற்ற
மக்களும் குருக்களும் லேவியரும் வாயிற்காவலரும் பாடகரும் ஆலய ஊழியரும், புறவினத்தாரின்
உறவை விட்டுக் கடவுளின் திருச்சட்டத்தைப் பின்பற்றி வந்த அனைவரும், அவர்களுடைய
மனைவியரும், புதல்வர், புதல்வியரும், மற்றும் புத்தி விபரம்
அறிந்தவர்கள் அனைவரும்,
29 மேன்
மக்களான தங்கள் சகோதரரோடு சேர்ந்து
ஆணையிட்டார்கள்; கடவுளின் அடியான் மோயீசன் வழியாகக்
கொடுக்கப்பட்ட கடவுளின் திருச்சட்டத்தின் படி நடப்பதாகவும், தம்
ஆண்டவராகிய கடவுளின் எல்லாக் கட்டளைகளையும் சட்டங்களையும்
நீதி முறைமைகளையும் அனுசரிப்பதாகவும் உறுதி கூறினார்கள்.
30 குறிப்பாக,
"இனி நாங்கள் புறவினத்தாருக்குப் பெண்
கொடுக்கவும் மாட்டோம்; அவர்களிடமிருந்து பெண் கொள்ளவும் மாட்டோம்.
31 இந்நாட்டு
மக்களுள் யாராவது ஓய்வு நாளில்
உணவுப் பொருட்களையோ வேறு எவ்விதச் சரக்குகளையோ
வியாபாரம் செய்தால், ஓய்வு நாளிலும் புனித
நாளிலும் அவர்கள் கையிலிருந்து ஒன்றும்
வாங்கமாட்டோம். ஏழாம் ஆண்டில் நிலத்தைத்
தரிசாய் விட்டு விட்டு எவ்விதக்
கடன்களையும் திரும்பக் கேட்கமாட்டோம்.
32 மேலும்
நாங்கள் எங்கள் கடவுளின் ஆலய
வேலைக்காக, ஆண்டுக்கு சீக்கலில் மூன்றில் ஒரு பகுதியைக் கொடுப்போம்.
33 இவ்வாறு
நம் கடவுளின் ஆலயத் திருப்பணிக்குத் தேவையான
அனைத்தையும், அதாவது காணிக்கை அப்பங்கள்,
நித்திய பலிகள், ஓய்வு நாட்கள்,
அமாவாசை நாட்கள், குறிக்கப்பட்ட திருநாட்களில் செலுத்த வேண்டிய நித்திய
தகனப் பலிகள், அர்ப்பணிக்கப்பட்ட பொருட்கள்,
இஸ்ராயேலுக்காகச் செய்ய வேண்டிய பாவ
நிவாரணப் பலிகள் ஆகியவற்றிற்கு வழிசெய்வோம்.
34 மோயீசனின்
திருச்சட்டத்தில் எழுதப்பட்டபடியே, எம் கடவுளாக ஆண்டவரின்
பீடத்தின் மேல் எரிப்பதற்காக ஆண்டு
தோறும் குறிப்பிட்ட காலத்தில் எம் முன்னோரின் வம்சங்களின்
படியே யார் யார் எம்
கடவுளின் ஆலயத்துக்குக் காணிக்கை விறகைக் கொண்டு வருவது
என்பதை நிர்ணயிக்கக் குருக்களுக்கும் லேவியருக்கும் மக்களுக்கும் சீட்டுப் போடுவோம்.
35 மேலும்
நாங்கள் ஆண்டு தோறும் எங்கள்
நிலத்தின் முதற் பலன்களையும், எல்லா
வித மரங்களின் முதற் கனிகளையும் ஆண்டவரின்
ஆலயத்திற்குக் கொண்டு வருவோம்.
36 எங்கள்
புதல்வரின் தலைப்பிள்ளைகளையும், எம் கடவுளின் ஆலயத்தில்
திருப்பணி புரிந்துவரும் குருக்களின் தேவைகளுக்கென எங்கள் ஆடு மாடுகளின்
முதல் ஈற்றுகளையும், திருச்சட்டத்தில் எழுதியுள்ளவாறு எங்கள் கடவுளின் ஆலயத்திற்கு
ஒப்புக்கொடுப்போம்.
37 அதுவுமன்றி,
எங்களது உணவு, மரத்தின் முதற்கனி,
திராட்சை இரசம், எண்ணெய் முதலியவற்றையும்
குருக்களுக்கென கோவிலில் ஒப்புக்கொடுப்போம். எங்கள் விளைச்சலின் பத்திலொரு
பாகத்தை லேவியர்களுக்குக் கொடுப்போம். அதை லேவியர்களே எல்லா
நகர்களுக்கும் சென்று வசூலிப்பார்கள்.
38 ஆரோன்
வழித்தோன்றலான ஒரு குரு, லேவியர்கள்
அதை வசூலிக்கும் பொழுது அவர்களோடு செல்வார்.
தாங்கள் வசூலித்ததில் பத்தில் ஒரு பாகத்தை
லேவியர்கள் எங்கள் கடவுளின் ஆலயத்தில்
காணிக்கையாக ஒப்புக்கொடுத்து, அதை ஆலயக் கருவூலத்தில்
சேர்த்து வைப்பார்கள்.
39 ஏனெனில்
மேற்சொன்ன கருவூல அறையிலேயே இஸ்ராயேல்
மக்களும் லேவியரும் தானியம், திராட்சை இரசம், எண்ணெய் ஆகியவற்றின்
முதற் பலன்களைச் சேர்த்து வைத்து வந்தார்கள்; அங்கேயே
ஆலயத் திருப்பணிக்குரிய பாத்திரங்களும், குருக்களும் பாடகர்களும் வாயிற்காவலரும் திருப்பணியாளரும் இருந்து வந்தனர். இவ்வாறு
நாங்கள் எங்கள் கடவுளின் ஆலயத்தைப்
புறக்கணிக்கமாட்டோம்"
என்று சத்தியம் செய்தார்கள்.
அதிகாரம்
11
1 மக்கள்
தலைவர்கள் யெருசலேமில் குடியிருந்தனர். ஏனைய மக்களில் பத்தில்
ஒரு பகுதியினர் யெருசலேமிலும், ஏனையோர் மற்ற நகரங்களிலும்
வாழ வேண்டியிருந்தது. இதற்காகச் சீட்டுப்போட்டனர்.
2 யெருசலேமில்
வாழ மனமுவந்து முன்வந்தவர்களை மக்கள் வாழ்த்திப் போற்றினர்.
3 பின்
கூறப்படும் மக்கள் தலைவர்கள் யெருசலேமில்
வாழ்ந்து வந்தார்கள். யூதாவின் நகரங்களில் இஸ்ராயேலரும் குருக்களும் லேவியரும் ஆலய ஊழியரும் சாலமோனுடைய
ஊழியர்களின் புதல்வர்களும் தத்தம் சொந்த நகரிலும்
மனையிலும் வாழ்ந்து வந்தார்கள்.
4 யூதா
புதல்வரில் சிலரும் பென்யமீன் புதல்வரில்
சிலரும் யெருசலேமில் வாழ்ந்து வந்தனர். யூதாவின் புதல்வர்களில் அசியாவின் மகன் அத்தாயாஸ்- அசியாம்
சக்காரியாவின் மகன்; இவன் அமாரியாவின்
மகன்; இவன் ஜப்பாத்தியாவின் மகன்;
இவன் பாரேசின் புதல்வர் வழியில் வந்த மலலேயலின்
மகன்.
5 பாரூக்கின்
மகன் மாசியா- பாரூக் கொலோஜாவின்
மகன்; இவன் கசியாவின் மகன்;
இவன் அதாயாவின் மகன்; இவன் யோயாரீபின்
மகன்; இவன் சக்கரியாசின் மகன்;
6 இவன்
சிலோனித்தானின் மகன். யெருசலேமில் குடியிருந்த
பாரேசின் புதல்வர் எல்லாரும் நானூற்று அறுபத்தெட்டுப் பேர். இவர்கள் மாபெரும்
வீரர்கள்.
7 பென்யமீன்
புதல்வருள்: (முதலில்) செல்லும்- இவன் மொசொல்லாமுக்கும், இவன்
யோவேத்துக்கும், இவன் பதாயியாவுக்கும், இவன்
கொலாயியாவுக்கும், இவன் மாசியாவுக்கும், இவன்
ஈத்தேயலுக்கும், இவன் இசாயியாவுக்கும் பிறந்தவர்கள்.
8 செல்லோமுக்குப்
பிறகு கெப்பாய், செல்லாயி என்போர்; இவர்கள் மொத்தம் தொளாயிரத்தெட்டுப்
பேர்.
9 சிக்கிரியின்
மகன் யோவேல் இவர்களுக்குத் தலைவனாய்
இருந்து வந்தான்; அவனுக்கு அடுத்த நிலையில் செனுவாயின்
மகன் யூதா விளங்கினான்.
10 குருக்களில்:
யோயாரீபின் மகன் இதாயாவும் யாக்கீனும்,
11 இல்கியாசின்
மகன் சாராயியாவுமாம்- இல்கியாஸ் மொசொல்லாமுக்கும், மொசொல்லாம் சாதோக்குக்கும், சாதோக் மேராயோத்துக்கும், மேராயோத்
கடவுளின் ஆலய மேற்பார்வையாளனான அக்கித்தோபுக்கும்
பிறந்த புதல்வர்கள்.
12 ஆலயத்திலே
திருப்பணி செய்து வந்த அவர்களின்
சகோதரர் எண்ணுற்று இருபத்திரண்டு பேர். இன்னும் எரோகாமின்
மகன் ஆதாயா- எரோகாம் பெலேலியாவுக்கும்,
பெலேலியா அம்சிக்கும், அம்சி சக்கரியாசுக்கும், சக்கரியாஸ்
பெசூருக்கும், பெசூர் மேல்கியாசுக்கும் பிறந்த
புதல்வர்கள்.
13 குலத்
தலைவர்களான மெல்கியாசின் சகோதரர் இருநூற்று நாற்பத்திரண்டு
பேர். மேலும் ஆஸ்ராயேலின் மகன்
அமசாயீ- ஆஸ்ராயேல் அகாசியிக்கும், அகாசியி மொசொல்லா மோத்துக்கும்,
மொசொல்லாமோத் எம்மேருக்கும் பிறந்த புதல்வர்.
14 அவர்களின்
சகோதரரான வலிமை வாய்ந்த மனிதர்
நூற்றிருபத்தெட்டுப் பேர். அகெதோலிமின் மகன்
சப்தியேல் இவர்களுக்குத் தலைவனாய் இருந்தான்.
15 லேவியர்களிலே:
கசூபின் மகன் செமேயா- கசூபு
அசாரிக்காமுக்கும், அசாரிக்காம் கசாபியாவுக்கும், கசாபியா பொனீயிக்கும் பிறந்த
புதல்வர்கள்.
16 மேலும்
ஆலய வெளிவேலைகளைக் கவனித்து வந்த லேவியர்களுக்கு தலைவர்களாய்
இருந்த சபெதாயும், யொசபேதும்,
17 ஆண்டவருக்கு
நன்றிப்பண் இசைப்போருக்குத் தலைவனும், அசாபின் மகனான செபெதேயீயின்
புதல்வன் மிக்காவுடைய மகனான மத்தானியாவும், இவனுடைய
சகோதரர்களில் இவனுக்கு அடுத்த இடம் வகித்து
வந்த பெக்பேசியாவும், இதித்தூனின் மகனான கலாதின் புதல்வன்
சமுவாபுக்குப் பிறந்த ஆப்தாவும் ஆக,
18 புனித
நகரிலுள்ள லேவியர் மொத்தம் இருநூற்றெண்பத்து
நான்கு பேர்.
19 வாயிற்
காவலரிலே: கதவுகளைக் காக்கிறவர்களாகிய அக்கூபும் தேல்மோனும் அவர்களின் சகோதரர்களுமாக நூற்றெழுபத்திரண்டு பேர்.
20 ஏனைய
இஸ்ராயேலின் குருக்களும் லேவியர்களும் யூதாவின் எல்லா நகர்களிலும் தத்தம்
காணியாட்சியில் குடியிருந்தனர்.
21 ஆலய
ஊழியர்களோ ஓப்பேலில் குடியிருந்தனர். ஆலய ஊழியர்களுக்குத் தலைவர்களாகச்
சியகாவும் காஸ்பாவும் விளங்கினர்.
22 யெருசலேமில்
வாழ்ந்து வந்த லேவியருக்குப் பானியின்
மகன் அசசீ தலைவனாக இருந்தான்-
பானி கசாபியாவின் மகன்; இவன் மத்தானியாவின்
மகன்; இவன் ஆலயப் பாடகர்களான
ஆசாபின் புதல்வர்கள் வழியில் வந்த மிக்காவின்
மகன்.
23 பாடகரைப்
பற்றிய அரச கட்டளை ஒன்று
இருந்தது. அதன்படி பாடகர்களாகிய இவர்களுக்கு
அன்றாடப் படி கொடுக்கும்படி திட்டமான
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
24 அன்றியும்
யூதாவின் மகனான ஜாராவின் புதல்வர்கள்
வழியில் வந்த மெசெசபலின் மகன்
பாத்தாகியா மக்களுடைய எல்லாக் காரியங்களின் பொறுப்பும்
ஏற்று அரசருக்கு உதவி செய்து வந்தான்.
25 நாடெங்கணும்
வாழ்ந்து வந்த யூதாவின் மக்களில்
பலர் காரியத்தார்பெயிலும் அதை அடுத்த சிற்றூர்களிலும்,
திபோனிலும் இதைச் சேர்ந்த ஊர்களிலும்,
கப்சயேலிலும் இதன் ஊர்களிலும்,
26 யோசுவாவிலும்
மொலதாவிலும் பேத்பலேத்திலும்,
27 காசர்சுவாவிலும்
பெர்சபேயிலும் இதைச் சார்ந்த ஊர்களிலும்,
28 சீசலேகிலும்
மொக்கோனாவிலும் இதைச் சார்ந்த ஊர்களிலும்,
29 ரெம்மோனிலும்
சராவிலும் எரிமூத்திலும்,
30 ஜனோவாயிலும்
ஒதொல்லாமிலும் இவற்றைச் சேர்ந்த ஊர்களிலும், லாக்கீசிலும்
இதன் வயல்களிலும், அசேக்காவிலும் இதைச் சேர்ந்த ஊர்களிலும்
பெர்சபே முதல் என்னோம் பள்ளத்தாக்கு
வரை குடியிருந்தனர்.
31 பென்யமீன்
புதல்வர்களோ கெபா தொடங்கி மெக்மாஸ்,
காயு, பேத்தேல், இதைச் சேர்ந்த ஊர்களான
32 அநத்தோத்,
நோப், அனானியா,
33 அசோர்,
ராமா, கெத்தயீம்,
34 காகீத்,
செபோயீம்,
35 நேபெல்லாத்,
லோத், ஓனோ என்ற ஊர்களிலும்
தொழிலாளர் பள்ளத்தாக்கிலும் குடியிருந்தனர்.
36 லேவியருள்
சில பிரிவினர் யூதாவிலும் பென்யமீனிலும் குடியேறினர்.
அதிகாரம்
12
1 சலாத்தியேலின்
மகன் ஜொரோபாபேலுடனும் யோசுவாவுடனும் வந்த குருக்களும் லேவியர்களும்
வருமாறு: சராயியா, எரெமியாஸ்,
2 எஸ்ரா,
அமாரியா, மெல்லூக், காத்தூஸ்,
3 செபேனியாஸ்,
ரெகூம், மெரிமோத்,
4 அத்தோ,
கிநெதோன்,
5 ஆபியா,
மீயாமின்,
6 மாதியா,
பேல்கா, செமேயியா, யோயியாரீப், இதாயியா, செல்லும், ஆமோக், கெல்கியாஸ், இதாயியா
ஆகியோரே.
7 இவர்கள்
யோசுவாவின் நாட்களில் குருக்களுக்கும் தங்கள் சகோதரர்களுக்கும் தலைவராய்
விளங்கி வந்தனர்.
8 லேவியர்களில்
யோசுவா, பென்னுயீ, கேத்மியேல், சரேபியா, யூதா, மத்தானியாஸ் ஆகியோரே.
மத்தானியாசும் அவன் சகோதரர்களும் நன்றிப்
பாடல்கள் பாடுவோர்க்குத் தலைவர்களாய் இருந்தனர்.
9 பெக்பேகியாவும்,
உன்னி என்ற அவர் சகோதரரும்
திருப்பணி வேளையில் அவர்களுக்கு எதிரே நின்றனர்.
10 யோசுவா
யோவாக்கீமைப் பெற்றான்; யோவாக்கீம் எலியாசிப்பைப் பெற்றான்;
11 எலியாசிப்
யோயியாதாவைப் பெற்றான்; யோயியாதா யோனத்தானைப் பெற்றான்; யோனத்தானோ யெதோவாவைப் பெற்றான்;
12 யோவாக்கீமின்
நாட்களிலே குலத் தலைவர்களாய் இருந்த
குருக்கள் வருமாறு: சராயியா வம்சத்தில் மராயியா,
எரெமியா வம்சத்தில் கானானியா;
13 எஸ்ரா
வம்சத்தில் மொசொல்லாம், அமாரியா வம்சத்தில் யோகனான்;
14 மில்லிக்கோ
வம்சத்தில் யோனத்தான், செபேனியா வம்சத்தில் யோசேப்;
15 காரிம்
வம்சத்தில் எத்னா, மராயியோத் வம்சத்தில்
கெல்சீ;
16 அதாயியா
வம்சத்தில் சக்கரியா, கிநெதோன் வம்சத்தில் மொசொல்லாம்;
17 ஆபியா
வம்சத்தில் செக்ரீ, மீயாமின், மொவாதியா
என்போர் வம்சங்களில் பேல்தி;
18 பெல்கா
வம்சத்தில் செம்முவா,
19 செமாயியா
வம்சத்தில் யோனத்தான்; யோயியாரீப் வம்சத்தில் மத்தானாயீ, யொதாயா வம்சத்தில் அஜசீ;
20 செல்லாயி
வம்சத்தில் கேலாயீ, அமோக்கு வம்சத்தில்
ஏபேர்;
21 தெல்கியா
வம்சத்தில் கசபியா, இதாயியா வம்சத்தில்
நத்தானியேல் ஆகிய இவர்களாம்.
22 எலியாசிப்,
யோயியாதா, யோகனான், யெதோவா ஆகியோரின் காலத்தில்
லேவியர்களும், பாரசீகனான தாரியுசின் ஆட்சிக் காலத்தில் குருக்களும்
குலத் தலைவர்களாகப் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.
23 லேவி
புதல்வரான குலத் தலைவர் எலியாசிபின்
மகன் யோனத்தானின் நாட்கள் வரை நாளாகமத்தில்
எழுதப்பட்டிருந்தனர்.
24 லேவியர்களுக்குத்
தலைவர்களான கசபியா, செரேபியா, கேத்மியேலின்
மகன் யோசுவா ஆகியோரும் இவர்களின்
சகோதரரும் கடவுளின் ஊழியர் தாவீது கட்டளையிட்டவாறு
புகழ்ந்து நன்றிப்பண் இசைத்தனர்; தங்கள் பிரிவின் முறைப்படி
தங்கள் பணியைச் செய்து வந்தனர்.
25 மத்தானியா,
பெக்பேகியா, ஒபதியா, மொசொல்லாம், தெல்மோன்,
அக்கூப் ஆகியோர் வாயில்களையும், அவற்றின்
அருகே இருந்த கருவூலங்களையும் காவல்
செய்து வந்தனர்.
26 இவர்கள்
யோசேதேக்கிற்குப் பிறந்த யோசுவாவின் மகனான
யோவாக்கீமின் காலத்திலும், திருச்சட்ட வல்லுநரும் குருவுமான எஸ்ராவின் காலத்திலும், ஆளுநர் நெகேமியாவின் காலத்திலும்
அலுவலராய் இருந்தனர்.
27 யெருசலேமின்
மதிலை அர்ப்பணிக்கும் நாள் வந்த போது
எல்லா இடங்களிலும் இருந்து லேவியர் யெருசலேமுக்கு
வரவழைக்கப்பட்டனர்; ஏனெனில் மதில் அர்ப்பணிப்போ
மகிழ்ச்சியோடும் நன்றிப்பாடல்களுடனும், கைத்தாளம், வீணை, கிண்ணாரம் ஒலிக்க
கொண்டாடப்பட வேண்டியிருந்தது.
28 அதன்படி
லேவியரான பாடகர் யெருசலேமின் சுற்றுப்புறங்களிலிருந்தும்,
நெத்தோபாத்தியரின் ஊர்களிலிருந்தும்,
29 பேத்கில்காலிலிருந்தும்,
கேபா, அஸ்மவேத் மாநிலங்களிலிருந்தும் அழைத்து வரப்பட்டனர். ஏனெனில்
அவர்கள் யெருசலேமின் சுற்றுப்புறங்களிலேயே வாழ்ந்து வந்தனர்.
30 அப்பொழுது
குருக்களும் லேவியர்களும் தங்களைத் தூய்மை செய்து கொண்டு
மக்களையும் வாயில்களையும் மதில்களையும் தூய்மைப்படுத்தினர்.
31 அப்பொழுது
நான் யூதாவின் தலைவர்களை மதிலின்மேல் ஏறச் சொல்லி, துதிபாட
இரண்டு பெரிய பாடகர் குழுக்களை
நிறுத்தினேன். அவர்களில் ஒரு குழுவினர் வலப்பக்கம்
இருந்த குப்பை மேட்டு வாயிலை
நோக்கிப் போனார்கள்.
32 அவர்களுக்குப்
பிறகே ஓசாயியாசும் யூதாத் தலைவர்களில் பாதிப்பேரும்
சென்றனர்.
33 அசாரியாஸ்,
எஸ்ரா, மொசொல்லாம், யூதாஸ், பென்யமீன், செமேயியா,
எரெமியாஸ் ஆகியோர் அவர்களுக்கும் பின்னால்
சென்றனர்.
34 எக்காளம்
ஊதும் குரு யோனத்தானின் மகன்
சக்கரியாஸ் அவர்களுக்கும் பின்னால் சென்றார். யோனத்தான் செமேயாவுக்கும், செமேயா மத்தானியாவுக்கும், மத்தானியா
மிக்காயாவுக்கும், மிக்காயா செக்கூருக்கும், செக்கூர் ஆசாப்புக்கும் பிறந்த புதல்வர்களாம்.
35 சக்கரியாசோடு
அவர் சகோதரரான செமேயியா, அசாரெயேல், மலலாய், கலலாய், மாகாய்,
நத்தானேயேல், யூதாஸ், கனானி என்பவர்கள்
கடவுளின் மனிதர் தாவீதின் இசைக்கருவிகளுடன்
நடந்து சென்றனர். மறைநூல் அறிஞரான எஸ்ரா
ஊருணி வாயிலில் அவர்களுக்கு முன்பாக நடந்து சென்றார்.
36 அவர்கள்
ஊருணி வாயில் வழியே சென்று
தங்களுக்கு எதிரேயிருந்த மதிலின் மேல் ஏறி
அங்கிருந்து தாவீதின் வீட்டுப் படிகளின் மேலே போய்க் கிழக்கேயிருந்த
தண்ணீர் வாயில் வரை சென்றனர்.
37 மற்றப்
பாடகர் குழுவினர் இடது பக்கமாய் நடந்து
போனார்கள். நானும் மக்களில் பாதிப்
பேரும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்று, மதிலின் மேல்
ஏறி அங்கிருந்து சூளைகளின் கோபுரத்தின் மேலே போய் அதிக
அகலமான மதில் வரை ஏறி,
38 எப்பிராயீம்
வாயிலையும் பழைய வாயிலையும் மீன்
வாயிலையும் கனானெயேல் கோபுரத்தையும், ஏமாத் கோபுரத்தையும் கடந்து
மந்தை வாயில் வரை நடந்து,
காவலர் வாயிலிலே நின்று கொண்டோம்.
39 துதிபாடும்
பாடகரின் இரு குழுவினரும், அவர்களோடு
நானும், என்னுடன் இருந்த ஊர்த் தலைவர்களில்
பாதிப்பேரும் கடவுளின் ஆலயத்தில் நின்றுகொண்டோம்.
40 எக்காளங்களைக்
கையிலேந்திக் கொண்டு எலியாக்கீம், மாசியா,
மீயாமின், மிக்கெயா, எலியோவெனாயி, சக்கரியா, கனானியா என்ற குருக்களும்,
41 மாசியா,
செமேயியா, எலியெசார், அசசீ, யோகனான், மெல்கியா,
ஏலாம், ஏசேர் ஆகியோரும் நின்றனர்.
பாடகரும், அவர்களின் தலைவன் எஸ்ராயாவும் உரக்கப்
பாடினர்.
42 அவர்கள்
அன்று மிகுதியான பலிகளைச் செலுத்தினர். கடவுள் தங்களுக்குச் செய்திருந்தவற்றையெல்லாம்
நினைத்துப் பெரு மகிழ்ச்சி கொண்டாடினர்.
அவர்களோடு, அவர்களின் மனைவியரும் பிள்ளைகளும் மகிழ்ச்சி கொண்டாடினர். யெருசலேமில் ஏற்பட்ட இம்மகிழ்ச்சிக் குரல்
வெகு தூரம் வரை கேட்டது.
43 அன்று
கருவூல அறைகளையும் பானப் பலிகளையும் முதற்பலன்களையும்
பத்திலொரு பாகங்களையும் கண்காணிக்கச் சிலரை நியமித்தனர். நகர்புறங்களினின்று
குருக்களுக்கும் லேவியர்களுக்கும் திருச்சட்டப்படி கொடுக்க வேண்டிய வருமானத்தை
வசூலிப்பதே இவர்களது அலுவலாகும். ஏனெனில் திருப்பணி புரிந்து
வந்த குருக்களையும் லேவியர்களையும் குறித்து யூதா மக்கள் அளவற்ற
மகிழ்ச்சி அடைந்தனர்.
44 இவர்களும்
பாடகரும் வாயில் காவலரும் தாவீதின்
கட்டளைப்படியும்; தாவீதின் மகன் சாலமோனின் கட்டளைப்படியும்
தம் கடவுளுக்குத் திருப்பணி புரிந்தனர்; சுத்திகரச் சடங்குகளையும் நிறைவேற்றி வந்தனர்.
45 ஏனெனில்
தொடக்கத்திலிருந்தே, அதாவது தாவீது, ஆசாப்
காலம் முதல் கடவுளுக்குப் புகழ்பாடவும்
நன்றிப்பண் எழுப்பவும் பாடகர்கள் நியமிக்கப் பெற்றிருந்தனர்.
46 மேலும்
ஜெரோபாபேலின் காலத்திலும் நெகேமியாவின் காலத்திலும் இஸ்ராயேலர் யாவரும் பாடகருக்கும் வாயிற்
காவலருக்கும் கொடுக்க வேண்டிய குறித்த
பங்குகளை நாள்தோறும் கொடுத்து வந்தனர்; அவ்வாறே லேவியருக்கும் கொடுக்க
வேண்டிய பங்குகளைக் கொடுத்து வைத்தனர். அதுபோல் லேவியர்கள் ஆரோனின்
புதல்வர்களுக்குக் கொடுக்கவேண்டிய பங்குகளைக் கொடுத்து வைத்தனர்.
அதிகாரம்
13
2 ஏனெனில்
அந்த இனத்தார் இஸ்ராயேல் மக்களுக்கு அப்பமும் நீரும் கொடுக்க மறுத்ததோடு,
அவர்களைச் சபிக்கும்படி பாலாம் என்பவனுக்குக் கையூட்டுக்
கொடுத்தனர். எங்கள் கடவுளோ அச்சாபத்தை
ஆசி மொழியாக மாற்றிவிட்டார்" என்பதாம்.
3 மக்கள்
அதைக் கேட்டவுடன் தம் நடுவே இருந்த
புறவினத்தார் அனைவரையும் வெளியேற்றினார்கள்.
4 ஆண்டவரின்
ஆலயக் கருவூலங்களின் கண்காணிப்பாளராக குரு எலியாசிப் நியமிக்கப்பட்டார்.
இவர் தொபியாசுக்கு நெருங்கின உறவினர்.
5 எனவே
அவர் தொபியாசுக்குப் பெரியதோர் அறையைக் கொடுத்திருந்தார். அங்குதான்
இதற்கு முன் காணிக்கைகளும் சாம்பிராணியும்
தட்டுமுட்டுகளும், தானியம், திராட்சை இரசம், எண்ணெய் முதலியவற்றின்
பத்திலொரு பாகமும், லேவியர், பாடகர், வாயிற்காவலர் முதலியவர்களின்
பங்குகளும் குருக்களைச் சேர வேண்டிய முதற்
பலன்களும் சேர்த்து வைக்கப்பட்டிருந்தன.
6 இதெல்லாம்
நடந்தபோது நான் யெருசலேமில் இல்லை;
ஏனெனில் பபிலோனிய அரசரான அர்தக்சேர்செசின் முப்பத்திரண்டாம்
ஆண்டில் நான் அரசரிடம் சென்றிருந்தேன்.
சில நாட்களுக்குப் பிறகு அவரிடம் விடைபெற்றுக்
கொண்டு,
7 யெருசலேமுக்குத்
திரும்பி வந்தேன். அப்போது கடவுள் ஆலயத்தின்
அறையைத் தொபியாசுக்குத் தங்குமிடமாகக் கொடுத்திருந்ததையும் அதன்மூலம் எலியாசிப் இழைத்திருந்த தீங்கையும் அறிய வந்தேன்.
8 இது பெரும் தீச்செயலாக எனக்குத்
தோன்றிற்று. ஆதலால் அறையிலிருந்து தொபியாசின்
தட்டுமுட்டுகளை வெளியே எறிந்து விட்டேன்.
9 மேலும்
அறைகளைச் சுத்தம் செய்யக் கட்டளையிட்டேன்;
அதுவும் நடந்தேறியது. பின்னர் ஆலயத் தட்டுமுட்டுகளையும்
காணிக்கைகளையும் சாம்பிராணியையும் அங்குத் திரும்பக் கொண்டுவந்து
வைத்தேன்.
10 மேலும்
லேவியர்களுக்குச் செல்லவேண்டிய வருமானம் அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை என்றும், லேவியரும் பாடகரும் திருப்பணி புரிந்து வந்த அனைவரும் தத்தம்
நாட்டுக்கு ஓடிப்போயிருந்தனர் என்றும் அறி வந்தேன்.
11 அப்போது
நான் அலுவலர்களைக் கடிந்துகொண்டேன். "ஆண்டவரின் ஆலயம் கைவிடப்பட்டுக் கிடப்பதன்
காரணம் என்ன?" என்று கேட்டேன். பின்னர்
அவர்களை வரவழைத்து அவர்கள் தத்தம் அலுவல்களைச்
செய்யுமாறு பணித்தேன்.
12 அதன்
பின் யூதா மக்கள் எல்லாரும்
திரும்பவும் கோதுமை, திராட்சை இரசம்,
எண்ணெய் முதலியவற்றின் பத்ததிலொரு பாகத்தைக் கருவூல அறைகளுக்குக் கொண்டுவரத்
தொடங்கினர்.
13 குரு
செலேமியாவையும் மறைநூல் அறிஞன் சாதோக்கையும்,
லேவியனான பதாயாசையும், இவர்களுக்குத் துணையாக மாத்தானியாவின் மகன்
சக்கூரின் புதல்வன் கானானையும் கருவூல அறைகளுக்குக் கண்காணிப்பாளராய்
நியமித்தேன்; ஏனெனில் அவர்கள் நேர்மையானவர்கள்.
தங்கள் சகோதரருக்குச் சேரவேண்டிய பங்குகளை அவர்களுக்குப் பகிர்ந்தளிப்பதே அவர்களது அலுவல்.
14 என்
கடவுளே, இதன் பொருட்டு என்னை
நினைவுகூர்ந்தருளும். என் கடவுளின் ஆலயத்திற்காகவும்
அதன் திருப்பணிக்காவும் அடியேன் செய்துள்ள நற்செயல்களை
மறவாதேயும்.
15 அக்காலத்தில்
யூதா மக்கள் ஓய்வுநாளில் திராட்சை
ஆலைகளில் வேலை செய்வதையும், வேறு
சிலர் அரிக்கட்டுகளைச் சுமந்து போகிறதையும், இன்னும்
சிலர் திராட்சை இரசம், திராட்சைப்பழம், அத்திப்பழம்
முதலியவற்றைக் கழுதைகளின் மேல் ஏற்றிக் கொண்டு
யெருசலேமுக்குக் கொண்டு செல்வதையும் கண்டேன்.
எனவே ஓய்வுநாளில் வியாபாரம் செய்யக்கூடாது என்று அவர்களுக்கு எச்சரிக்கை
விடுத்தேன்.
16 யெருசலேமில்
வாழ்ந்து வந்த தீர் நகர
வணிகர் சிலர் மீன் முதலிய
பொருட்களைக் கொண்டு வந்து அவற்றை
யூதா மக்களுக்கு ஓய்வுநாளில் விற்று வந்தார்கள்.
17 அதைக்
கண்டு நான் யூதாத் தலைவர்களைக்
கடிந்து கொண்டேன். "நீங்கள் ஓய்வுநாளை அனுசரியாது
இவ்வாறு பாவம் செய்யலாமா?
18 நம்
முன்னோர்கள் இப்படிப்பட்ட தீச்செயல்களைச் செய்ததால் அன்றோ நம் கடவுள்
நம் மேலும் இந்நகர் மேலும்
இத்தீமை எல்லாம் வரச் செய்தார்?
நீங்களும் ஓய்வுநாளை மீறுவதால் இஸ்ராயேல் மேல் அவர் கொண்டுள்ள
கோபத்தை அதிகப்படுத்துகிறீர்களே" என்று சொன்னேன்.
19 மேலும்
ஓய்வுநாளில் யெருசலேம் வாயில்கள் திறந்திருக்கக் கண்டு, "மாலை நேரத்தில் கதவுகளை
அடைத்துவிட வேண்டும்; ஓய்வுநாள் முடியும் வரை அவற்றைத் திறக்கக்
கூடாது" என்று அவர்களுக்குக் கட்டளையிட்டேன்.
அத்தோடு ஓய்வுநாளில் எவரும் உள்ளே சுமைகளைக்
கொண்டு வராதபடி, என் வேலைக்காரரில் சிலரை
வாயிலருகில் நிறுத்தி வைத்தேன்.
20 எனவே
பற்பல சரக்குகளையும் விற்கிற வியாபாரிகள் யெருசலேமுக்கு
வெளியே ஓரிருமுறை தங்கியிருந்தனர்.
21 நான்
அவர்களைக் கண்டித்து, "நீங்கள் மதில் அருகே
ஏன் காத்திருக்கிறீர்கள்? மறுபடியும் இப்படிச் செய்வீர்களானால் உங்களை நான் தண்டிப்பேன்"
என்று அவர்களுக்குச் சொன்னேன். ஆகையால் அந்நாள் தொடங்கி
அவர்கள் ஓய்வுநாளில் வராமலிருந்தனர்.
22 பின்னர்,
"ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் அனுசரிக்கும்படி உங்களைத் தூய்மைப் படுத்திய பின் வாயிலைக் காக்க
வரவேண்டும்" என்று நான் லேவியர்களுக்குச்
சொன்னேன். இதன் பொருட்டும், என்
கடவுளே, நீர் என்னை நினைத்தருளும்.
நீர் பேரிரக்கம் கொண்டவராகையால் என் மீது இரக்கமாயிரும்.
23 ஆயினும்
அக்காலத்தில்கூட ஆஜோத், அம்மோன், மோவாப்
முதலிய புறவினப் பெண்களை மணந்திருந்த யூதர்களைக்
கண்டேன்.
24 அவர்கள்
பிள்ளைகளால் யூதாமொழி பேச இயலவில்லை. மாறாக
யூதாமொழியையும் ஆஜோத் மொழியையும் அவர்கள்
கலந்தே பேசி வந்தனர்.
25 நான்
அவர்களைக் கண்டித்துச் சபித்தேன். அவர்களில் சிலரை அடித்து அவர்களது
தலைமயிரைச் சிரைத்து விட்டேன். இனி புறவினத்தாரிடமிருந்து பெண்களைக் கொள்ளவோ
அவர்களுக்குப் பெண் கொடுக்கவோ மாட்டோம்
என்று கடவுள் மேல் அவர்கள்
ஆணையிடச் செய்தேன்.
26 அவர்களை
நோக்கி, "இஸ்ராயேலின் அரசரான சாலமோன் கெட்டது
இதனாலன்றோ? உண்மையாகவே எல்லா மக்களிலும் அவருக்கு
இணையான அரசர் யாரும் இருந்திலர்.
கடவுள் அவருக்கு அன்புசெய்து அவரை இஸ்ராயேலர் அனைவருக்கும்
அரசராக ஏற்படுத்தியிருந்தார். அப்படியிருந்தும் புறவினப் பெண்கள் அவரைப் பாவத்திற்கு
உட்படுத்தினர்.
27 அவரைப்
போல் நாமும் கடவுளின் கட்டளையை
மீறி இப்பெரும் தீங்கிற்கு அஞ்சாது புறவினப் பெண்களை
மணக்கலாமா?" என்றேன்.
28 பெரிய
குரு எலியாசிபின் மகன் யொயியாதாவுடைய புதல்வர்களில்
ஒருவன் கோரோனித்தனான சனபல்லாதின் மருமகனாய் இருந்தான். எனவே அவனை என்னிடமிருந்து
துரத்தி விட்டேன்.
29 என்
கடவுளாக ஆண்டவரே, குருத்துவத்தை மாசு படுத்துகிறவர்களையும், குருக்கள், லேவியர்களின்
ஒழுங்கு முறைகளை அழிக்கத் தேடுகிறவர்களையும்
நீர் தண்டிக்க மறவாதேயும்.
30 இவ்வாறு
அவர்கள் நடுவினின்று நான் எல்லாப் புறவினத்தாரையும்
நீக்கி, குருக்களையும் லேவியர்களையும் அவரவரது ஊழியத்தில் நிலைநிறுத்தினேன்.
31 விறகுகளையும்
முதற்பலன்களையும் குறிக்கப்பட்ட காலத்தில் கொடுக்கும்படி ஒழுங்கு செய்தேன். என்
கடவுளே எனக்கு நன்மை செய்ய
நினைத்தருளும். ஆமென்.