இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இரண்டாவது விதியின் அடிப்படையில் மாமரியின் பேறுபலனைப் பற்றிய சிந்தனை

ஒருவன் எவ்வளவு அதிகமான அல்லது குறைவான தேவ இஷ்டப்பிரசாதத்தோடு செயல்படுகிறானோ, அவ்வளவுக்கு அவன் சம்பாதிக்கும் பேறுபலனின் அளவும் அதிகமாகவோ, குறை வாகவோ இருக்கும்.

இனி, இந்த விதியின்படி மாமரியின் பேறுபலனைப் பற்றிச் சிந்திக்கும்போது, அதன் பிரமாண்டத்தைப் புரிந்துகொள்வதற்கு, அவர்களுடைய வரப்பிரசாதத்தின் பிரமாண்டமான அளவை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 

இந்தப் புத்தகத்தில் நம்மால் முடிந்த வரை நன்றாக இதை நாம் விளக்கியிருக்கிறோம், ஏற்கனவே நாம் சொல்லியுள்ளதை நாம் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்கப் போவதில்லை. இங்கே, அவர்களுடைய பேறுபலனைக் கணக்கிடும்படியாக, திருச்சபைத் தந்தையர் மற்றும் வேதபாரகர்களின் கூற்றுப்படி, மாமரியின் வரப் பிரசாதத்தின் அளவு பற்றிய ஒரு சிந்தனையை நாம் தருவோம்.

சில தலைப்புகளில் நாம் அவற்றை இங்கே ஒன்றுகூட்டுவோம்:

முதலாவது, மாமரியின் வரப்பிரசாதங்களையும், மற்ற சிருஷ்டி களின் வரப்பிரசாதங்களையும் ஒப்பிட்டுக் காட்டும் வேதபாரகர் களின் சாட்சியங்களைப் பார்ப்போம்: 

‘எல்லாக் கொடைகளும் மாமரிக்குள் பொழிகின்றன. தேவ தூதர்களின் வரப்பிரசாத நதி மாமரிக்குள் பொழிகிறது; பிதாப் பிதாக்களுடையவும், தீர்க்கதரிசிகளுடையவும் வரப்பிரசாத நதி மாமரிக்குள் பொழிகிறது; இறுதியாக அப்போஸ்தலர்கள், வேதசாட்சிகள், ஸ்துதியர்கள், கன்னியர்கள் மற்றும் வேதபாரகர் களின் சகல நதிகளும் மாமரிக்குள் பொழிகின்றன. ஆயினும் மாமரியின் வழியாக அனைவருக்குள்ளும் இவ்வளவு அதிகமான வரப்பிரசாதம் பொழியப்படும்போது, மாமரிக்குள் எல்லா வரப்பிரசாதமும் பொழியப்படுவதில் என்ன அதிசயம் இருக்கிறது?'' (அர்ச். பொனவெந்தூர், ஷ்ஐ றீஸ்ரீeஉற்யிழி, உ. 3d). 

‘தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் அனைவருக்கும் பகுதி பகுதி யாக வரப்பிரசாதம் தரப்படுகிறது; இந்தக் கன்னிகைக்குள்ளோ வரப் பிரசாதத்தின் பரிபூரணத்துவம் முழுவதும் ஊற்றப்படுகிறது'' (புனித இல்டஃபோன்சஸ், பரிசுத்த தேவமாதாவின் பரலோக ஆரோபணம் பற்றிய பிரசங்கம், 6).

‘மகா பரிசுத்த கன்னிகை தேவ வரப்பிரசாதத்தால் நிரம்பி யிருந்தார்கள்: ஏனெனில், முதலாவதாக, அவர்கள் சகல சிருஷ்டிகளுடையவும் பொதுவானதும், தனிப்பட்டதுமான எல்லா வரப்பிரசாதங்களையும் தன்னில் கொண்டிருந்தார்கள், இரண் டாவதாக, வேறு எந்த சிருஷ்டியும் கொண்டிராத வரப்பிர சாதங்களை அவர்கள் கொண்டிருந்தார்கள். மூன்றாவதாக, அவர்களுடைய வரப்பிரசாதம் எவ்வளவு பெரிதாயிருந்தது என்றால், ஒரு மாசற்ற சிருஷ்டி, இதை விடப் பெரிய வரப் பிரசாதத்தைக் கொண்டிருக்கத் திறனற்றதாக இருக்கிறது. நான்காவ தாக, அவர்கள் தன்னில் படைக்கப்படாத வரப்பிரசாத முழுமை யான சர்வேசுரனையே கொண்டிருக்கிறார்கள்'' (அர்ச். பெரிய ஆல்பர்ட், ம்e ஸிழிற்d. Vஷ்rஆ.).

இரண்டாவதாக, மாமரியின் மகத்துவம் தொடர்பாக, அவர்களுடைய வரப்பிரசாதத்தைப் பற்றிப் பேசுபவர்களின் சாட்சியங்கள்:

‘கொடைகளில் உள்ள வேறுபாடு, கொடுப்பவரில் பிறக்கிறது, ஏனெனில் அறிவிற்கேற்ப கொடையைக் கொடுக்கிறார், நோக்கத் திற்கேற்ப அறிவு தரப்படுகிறது. ஓர் அதிகப் பெரிதான நோக்கத் திற்காக, அதிகப் பெரிதான கொடை தரப்படுகிறது. ஆனால் மாமரிக்குக் கடவுளின் தாயாயிருக்கும்படியாகவும், மற்றவர் களுக்குக் கடவுளின் ஊழியர்களாயிருக்கும்படியாகவும் வரப்பிர சாதம் கொடுக்கப்படுகிறது. ஆகவே, கடவுளுக்குத் தாயாயிருக்கும் மேன்மையோடு கடவுளின் ஊழியனாயிருக்கும் மேன்மை ஒப்பிடவும் தகுதியற்றது என்பது போலவே, கடவுளின் தாயாருக்குத் தரப்படும் கொடைக்கு முன், கடவுளின் ஊழியனுக்குத் தரப்படும் கொடை ஒப்பிடவும் தகுதியற்றது. இனி, அனைத்தும் எதில் தரப்படுகிறதோ, அந்தக் கொடை சிநேகமாகிய கொடையாகும். ஆகவே, திவ்விய கன்னிகை மற்றெல்லா சிருஷ்டிகளையும் விட சிநேகத்தில் மேலானவர்களாக இருந்தார்கள்'' (அர்ச். பெரிய ஆல்பர்ட்). 

‘தேவ இலட்சணங்கள் ஒவ்வொரு படைக்கப்பட்ட அறிவிற்கும் விளங்க முடியாதவையாக இருப்பது போல, தேவ திருச்சுதனின் உற்பவத்தில் திவ்ய கன்னிகை பெற்றுக்கொண்ட வரப்பிரசாதங் களின் இலட்சணங்கள் தெய்வீக அறிவால், கிறீஸ்துநாதராலும், மாமரியாலும் மட்டுமே விளங்கிக்கொள்ளக்கூடியவையாக இருக்கின்றன. கடவுள் ஒரு கடவுளை ஜெனிப்பிப்பதற்கு, அவருக்கு எந்த வித ஆயத்தமும், திட்டமும் தேவையாயிருக்கவில்லை, ஏனெனில் அறிவின் வழியாக, தமக்கு எல்லா விதத்திலும் சரிசமானமாயிருக்கும் ஒரு வார்த்தையானவரை ஜெனிப்பிப்பது அவருடைய தேவ சுபாவத்திற்கு ஒத்ததாக இருக்கிறது. அதை விட மேலாக, தம்முடைய பிறப்பிக்கும் வளமையின் உந்துதலில் ஒரு கடவுளை ஜெனிப்பிக்காதிருப்பது அவருக்கு சாத்தியமில்லாததாக இருக்கிறது; ஆனால் ஒரு பெண் கருத்தரித்து, ஒரு கடவுளைப் பெற்றெடுப்பது என்பது புதுமைகளில் எல்லாம் பெரிய புதுமையாகும்; ஏனெனில் எந்த சிருஷ்டியும் ஒருபோதும் பெற்றிராத இலட்சணங்கள் மற்றும் வரப்பிரசாதங்களின் ஓர் அளவற்ற தன்மையால், ஏறக்குறைய தெய்வீக சமநிலைக்கு அந்தப் பெண் உயர்த்தப்படுவது அவசிய மானதாக இருந்தது! இதன் காரணமாக, மாமரியின் தெய்வீக உற்பவத்தின்போது, இந்த உத்தம பரிசுத்த கன்னிகையின்மீது இறங்கிய பரிசுத்த ஆவியானவரின் சீராட்டலின் பாதாளத்தின் ஆழத்தை அளக்கக் கூடிய மனித அல்லது சம்மனசுகளின் அறிவு ஏதுமில்லை என்று நான் நம்புகிறேன்'' (அர்ச். பெர்னார்தீன், பிரசங்கம் 59).

மூன்றாவதாக, மனுக்குலத்தின் இரட்சணியத்தில் ஒத்துழைத்தவர்கள் என்ற முறையில் அவர்கள் பெற்றுக்கொண்ட வரப்பிரசாதம் தொடர்பான சாட்சியங்கள்:

‘மூன்று காரணங்களுக்காக மாமரி பிரியதத்தத்தினால் (தேவ இஷ்டப்பிரசாதத்தினால்) பூரணமானவர்கள் என்று சொல்லப் படுகிறார்கள்: முதலாவது, அவர்களுடைய ஆத்துமத்தின் காரணமாக, அதில் அவர்கள் வரப்பிரசாதத்தின் பூரணத்துவத்தைக் கொண்டிருந்தார்கள். இரண்டாவது, மாம்சம் அல்லது சரீரம் தொடர்பாகவும் அவர்கள் வரப்பிரசாதத்தில் பூரணமானவர்களாக இருந்தார்கள். அந்த மாசற்ற சரீரததினுள் அது பொங்கி வழிந்தது. ஏனெனில் தங்கள் ஆத்துமங்களை இரட்சிக்கும் அளவுக்கு, அதிக வரப்பிரசாதத்தைக் கொண்டிருப்பது அர்ச்சியசிஷ்டவர்களுக்கு ஒரு பெரிய காரியமாக இருக்கிறது. ஆனால் திவ்விய கன்னிகையின் ஆத்துமம் எந்த அளவுக்கு வரப்பிரசாதத்தினால் பரிபூரணமாக நிறைந்திருந்தது என்றால், அதிலிருந்து தேவ திருச்சுதனைக் கருத் தரிக்க இருந்த அவர்களுடைய மாம்சத்தினுள் அந்த வரப்பிரசாதம் பொங்கி வழிந்தது. மூன்றாவதாக, சகல மனிதர்களுக்கும் வரப்பிர சாதத்தைத் தருவதற்காக. ஏனெனில் எந்த ஒரு புனிதரும் அநேக ருடைய இரட்சணியத்திற்குப் போதுமான அளவு வரப்பிரசாதத் தைக் கொண்டிருப்பது அவருக்குப் பெரும் சலுகையாக இருக்கிறது; ஆனால் அகில உலகத்தினுடையவும் இரட்சணியத்திற்குப் போதுமான அளவு வரப்பிரசாதத்தை ஒருவர் கொண்டிருந்தால், அதுவே வரப்பிரசாதத்தின் உச்ச அளவாக இருந்திருக்கும். இது கிறீஸ்துநாதரிலும், மாமரியிலும் நிறைவேறியது'' (றீமி. வீஜுலிது., நுஸ்ரீ. ஸஷ்ஷ்ஷ்.).

‘பரலோகத்திற்கு மகிமையும், சம்மனசுக்களுக்கு சந்தோஷமும் கொடுத்தவர்களுக்கும், உலகத்தில் சமாதானத்தை மீண்டும் ஸ்தாபித் தவர்களும், புறஜாதியாருக்கு விசுவாசத்தால் கற்பித்தவர்களும், துர்க்குணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தவர்களுமாகிய மாமரியின் வரப்பிரசாதம் உண்மையாகவே பெரியதாகவும், பொங்கி வழிவ தாகவும், பரிபூரணமானதாகவும் இருந்தது. எப்படி! கபிரியேல் சம்மனசானவரின் வாழ்த்தின்படி, பரலோகத்தின் ஏணியாகவும், பரலோகத்தின் வாசலாகவும், கடவுளுக்கும் மனிதருக்குமிடையே முற்றிலும் உண்மையான மத்தியஸ்தியாகவும் அவர்கள் ஆகி யிருக்கும்போது, பிரியதத்தத்தினால் பூரணமானவர்களாக அவர்கள் இருக்கவில்லையா? (அர்ச். லாரென்ஸ் யுஸ்தீனியன், மாமரியின் பரலோக ஆரோபணத்தைப் பற்றிய பிரசங்கம்).

ஆகவே, அர்ச்சிக்கிற வரப்பிரசாதமானது, பேறுபலனின் மூல காரணமாக இருக்கிறது என்றால், ஒரு சாதாரண சிருஷ்டி பெற சாத்தியமுள்ள அளவுக்கு மாமரியின் வரப்பிரசாதம் பெரிதா யிருந்தது என்றால், அவர்களுடைய பேறுபலன் பிரமாண்டமான தாகவும், ஆழங்காண முடியாததாகவும் இருந்திருக்க வேண்டும் என்பது வெளிப்படை.