இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

நித்தியப் பேரின்பத்தைப் பற்றிய பொதுவான சிந்தனையும், அதன் தனிச்சிறந்த உன்னதத் தன்மையும்

அத்தியாயம் 3

மோட்சத்தில் மாமரியின் மகிமை

மாமரியின் ஈடிணையற்றதும், வாக்குக்கெட்டாததுமான பேறுபலன்களைப் பற்றிப் பேசி முடித்திருக்கிற நாம், இப்போது பரலோகத்தில் அவர்களுடைய மகிமையைப் பற்றிப் பேசத் தொடங்குவோம். நம் வழக்கப்படி, வாசகர் மாமரியின் மகிமையின் தன்மையையும், அதன் இலட்சணங்களையும் நிஜமாகவே புரிந்து கொள்ளும்படியாக, நித்திய மகிமையைப் பற்றிய ஒரு முழுமை யானதும், துல்லியமானதுமான ஒரு சிந்தனையைத் தருவதன் மூலம் இதை நாம் செய்யப் போகிறோம்.

பிரிவு 1

நித்தியப் பேரின்பத்தைப் பற்றிய பொதுவான சிந்தனையும், அதன் தனிச்சிறந்த உன்னதத் தன்மையும்

பரலோகப் பேரின்பத்தைப் பற்றிய மிகச் சிறந்த வரையறை, பெக்கோஷியஸ் என்பவர் தம்முடைய ‘‘தத்துவவாத ஆறுதல்களைப் பற்றி'' (ம்e ளீலிஐவிலியிழிமிஷ்லிஐவி Pஜுஷ்யிலிவிலிஸ்ரீஜுஷ்உ) என்ற புத்தகத்தில் தரப் பட்டுள்ளது. அதில் அவர் பரலோகப் பேரின்பம் என்பது சாத்திய மான எல்லா நன்மைகளையும் தன்னில் ஒன்றுசேர்க்கும் அளவுக்கு மிக உத்தமமான ஒரு நிலை (ஸ்தாத்துஸ் ஓம்னியும் போனோரும் ஆக்ரெகாத்ஸியோன் பெர்ஃபெக்துஸ்) என்று அவர் அதை வரை யறுத்திருக்கிறார்.

மோட்சப் பேரின்பம் (தேவகாட்சி) என்பதைப் பலதரப்பட்ட அம்சங்களின் கீழ் நாம் சிந்தித்துப் பார்க்கலாம். நாம் இரண்டு அம்சங்களைக் குறித்துக் காட்டுவோம்: முதலாவது, அது அதன் நோக்கத்தோடு தொடர்புள்ள விதத்தில் சிந்திக்கப்படலாம், அதாவது, சகல மனித நாட்டங்களையும் திருப்தி செய்வதற்கு வல்லமையையும் புண்ணியத்தையும் கொண்டிருக்கிற அந்த உன்னதமான, அளவற்ற நன்மைத் தனத்தில் அது சிந்திக்கப்படலாம்; அது நேரடி மோட்ச பேரின்பம் எனப்படுகிறது. அதன்பின் அதன் உட்பொருள் தொடர்பாக அது சிந்திக்கப்படலாம்; அதாவது, மனிதன் இந்த உன்னத நன்மைத்தனத்தையே சொந்தமாக்கிக் கொள்ளுதல் என்னும் கருத்தில் இதைச் சிந்திக்கலாம், அப்போது இது முறைப்படியான பேரின்பம் எனப்படுகிறது.

மோட்சப் பேரின்பத்தின் இந்த இரண்டு வகைகளையும் பற்றி வேதசாஸ்திரிகளால் ஏற்படுத்தப்பட்டுள்ள மற்ற தனித்தன்மைகளை ஒதுக்கி விட்டு, நாம் இந்த இரண்டினுடையவும் வரையறைக்குக் கடந்து செல்வோம். ஏனெனில் இவை கண்டிப்பான விதத்தில் பரலோகப் பேரின்பம் என்று கருதப்படுகின்றன.

நேரடிப் பேரின்பத்தைப் பொறுத்த வரை, அது தமது சாராம்சத் திலும், தமது அளவற்ற தேவ இலட்சணங்களிலும், தமது உள்ளரங்க ஜீவியத்தின் பரம இரகசியங்களிலும், தமக்கு வெளியே, சுபாவ மானவையும், சுபாவத்திற்கு மேலானவையும், பரலோகம் சார்ந்தவை யுமான தம் செயல்களிலும் இருக்கிற சர்வேசுரனேதான் என்று நாம் சொல்கிறோம்.

இந்த நேரடிப் பேரின்பத்தைப் பற்றி நாம் நீண்ட நேரம் சிந்திக்க வேண்டியதில்லை, ஏனெனில் முறைப்படியான பரலோக தேவ காட்சி பற்றிய நம்முடைய விவாதத்தால் அதைப் பற்றிய சிந்தனை தெளிவாக்கப்படும்.

முறைப்படியான பேரின்பம் உன்னதமான நன்மைத்தனத்தை மனிதன் சொந்தமாக்கிக் கொள்வதில் அடங்கியுள்ளது என்று நாம் சொல்லியிருக்கிறோம். இனி, இந்த சொந்தமாக்கிக்கொள்ளும் செயல் மிகச் சரியாக எதில் அடங்கியுள்ளது என்பதைத் தீர்மானிப் பதில் வேதசாஸ்திரிகள் வேறுபடுகிறார்கள். சிலர், அர்ச். தாமஸ் அக்குயினாஸைப் போல, புத்தி கடவுளைப் பகுத்துணரப் பயன் படுத்தும் உள்ளரங்க ஏவுதலின் செயலில் அது அடங்கியுள்ளது என்கிறார்கள். மற்றவர்களோ, அவரை நேசிக்கும் செயலில் அது அடங்கியுள்ளது என்கிறார்கள். இறுதியாக, இன்னும் சிலர், கடவுளை அனுபவித்து மகிழ்தலில் அது அடங்கியுள்ளது என்கிறார்கள். இந்த மூன்று கருத்துக்களும் முறைப்படியான பரலோகப் பேரின்பத்தின் சாராம்சத்தின் ஒரு பகுதியை வெளிப்படுத்துகின்றன என்று நாம் நினைக்கிறோம், ஏனெனில் உண்மையான, நிஜமான பரலோகப் பேரின்பத்தில் இந்த மூன்று காரியங்களில் ஒன்று கூட குறைவுபட முடியாது. இந்தப் பேரின்ப மானது அறிவு சார்ந்ததும், தார்மீகமானதுமான முறையில் தனது உன்னத நோக்கமான சர்வேசுரனோடு மனிதன் கொள்ளும் ஐக்கியம் மற்றும் அதன் விளைவாக ஆனந்த சந்தோஷத்தின் பலனாக இருக்கிறது.

ஆயினும் அர்ச். தாமஸ் அக்குயினாஸின் கருத்துதான் அனைத் திலும் அதிக முக்கியமானதாக இருக்கிறது, ஏனெனில் அறிவு முழு ஜீவியத்தினுடையவும், தனிப்பட்ட மகிழ்ச்சியினுடையவும் வேராக இருப்பதால், தேவ காட்சி என்பது நேசத்தினுடையவும், சந்தோஷ உணர்வினுடையவும் ஊற்றாயிருக்கிற பரலோக ஜீவியத்தின் தொடக்கமாக இருக்க வேண்டும்; அதுவே நோக்கத்தை நிறைவேறச் செய்கிறது, அந்த நோக்கமாக இருப்பவரோடு ஆத்துமத்தை ஐக்கியப்படுத்துகிறது, அவரை ஆத்துமத்திற்குச் சொந்தமாக்குகிறது. இந்த அம்சத்தின்படி, அர்ச். தாமஸ் அக்குயினாஸின் கருத்து முறையான பேரின்பத்தின் சாராம்சத்தை எடுத்துரைப்பதாகக் கருதப்படலாம்.

ஆனால் இந்தத் தேவ காட்சியின் தன்மை எப்படிப்பட்டது? அது எப்படி வளர்ச்சி பெறுகிறது? அது பற்றிக்கொள்கிற நோக்கங்கள் எவை? நம்மால் முடிந்த வரை இந்த பக்திக்குரிய கேள்விகளுக்குப் பதில் சொல்ல நாம் முயற்சி செய்வோம்.

மனிதனின் சுபாவத்திற்கு மேலான அறிவு, அதன் எந்த ஒரு தொடர்ச்சியான முன்னேற்றத்தாலும் தேவ காட்சியாக மாற்றப்பட முடியாது, மாறாக, அது தன் நோக்கத்தைப் பற்றிக்கொள்வதற்கு, தனிப்பட்ட உத்தமதனத்தின் ஒரு புதிய அளவுக்கு அது உயர்த்தப் படுவது அவசியமாயிருக்கிறது. விசுவாசத்தின் சாராம்சம் ஓர் அடையாளத் தன்மையுள்ள அறிவில், ஒரு பேச்சு வகைக்கு, கடவுளால் வெளிப்படுத்தப்பட்டு, திருச்சபையால் விளக்கப்பட்டு, வரையறுக்கப்படும் உபமானங்களின் வழியாக, புத்திக்கு மேலான ஒழுங்கை உணர்ந்து புரிந்துகொள்வதில், அடங்கியுள்ளது. இத்தகைய ஓர் அறிவு, எவ்வளவுதான் பக்திக்குரியதாக இருந்தாலும், எவ்வளவுதான் உத்தமமானதாக இருந்தாலும், மனித சுபாவத்தின் ஏக்கத்தைத் தணிகக்க அதனால் முடியாது.

மனித புத்தியின் ஏக்கத்தைத் தணிப்பதற்கு, விசுவாசத்தின் திரைச் சீலைகள் இரண்டாகக் கிழிக்கப்படுவதும், அளவற்ற உன்னத புத்தியாக கடவுளை நேரடியாகக் கண்டுணரும்படி, மனித மனது மகிமையின் ஒளியின் இறக்கைகளின் மீது மேல்நோக்கி உயர்த்தப் படுவதும், அது அவருடைய நிதர்சனத்திலும் நேரடியான ஸ்திரத் தன்மையிலும் அவரைக் கண்டுணர்வதும், அவருடைய அந்நியோந்நிய சுபாவத்தில் அது அவரைப் பற்றிக்கொண்டு, அவருடைய பரம இரகசிய ஜீவியத்திலும் அவருடைய மிகப் பெரியவையும், அளவற்றவையுமான உறவுகளிலும் அவரைக் கண்டு தியானிப்பதும் அவசியமாயிருக்கிறது. 

விசுவாசத்திலிருந்து நேரடியாகக் கண்டுணர்வதற்குக் கடந்து செல்வதற்கான இந்தப் பாதை விசுவாசமாகிய புண்ணியத்தின் ஒரு சாதாரண முன்னேற்றமோ அல்லது வளர்ச்சியோ அல்ல, அது அந்த சுபாவத்திற்கு மேலான சத்துவத்தின் ஒரு பரிணாம வளர்ச்சியுமல்ல, மாறாக, அது ஒரு வகையில், ஒரு பாய்ச்சலாகவும், ஓர் உயர்த்துதலாகவும் இருக்கிறது. இதன் பலனாக தெய்வீக சாராம்சம் தன்னோடு ஓர் அந்நியோந்நியமானதும் உயிரோட்டமுள்ளதுமான தொடர்புக்கு ஆத்துமத்தை உயர்த்தி, தன்னுடைய அளவற்ற பேரொளியில் அதை ஊறிப் போகும்படி செய்து, விசுவாசத்தைத் தேவ காட்சியாக மாற்றும்படியாக, ஒரு புதிய அறிவு சார்ந்த வலிமையை அதனுள் ஊற்றுகிறது:

‘வீதேமுஸ் நுங்க் பெர் ஸ்பெக்குலும் இன் எனிக்மாத்தே, தூனே ஆவ்த்தெம் ஃபாச்சியே அத் ஃபாச்சியெம் - இப்பொழுது நாம் கண்ணாடியில் மங்கலாய்க் காண்கிறோம். அப்பொழுது முகமுக மாய்க் காண்போம்'' (1கொரி.13:12). ‘‘நோந்தும் ஆப்பாரூயித், ஸிமிலெஸ் ஏயி ஏரிமுஸ்: கோனியாம் வீதேபிமுஸ் ஏயும் சீக்குத் எஸ்த் - அவர் தோன்றும்போது அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிவோம். ஏனெனில் அவர் இருக்கிறமாதிரியே அவரைத் தரிசிப்போம்'' (1அரு.1:3:2).

இந்தச் சிந்தனைகளிலிருந்து, பரலோக தேவ காட்சியே சகல மனித அறிவினுடையவும் நோக்கமாகவும், அதன் இறுதி உத்தம தனமாகவும் இருப்பதோடு, சுபாவத்திற்கு மேற்பட்ட விசுவாசமே அறிவின் நிறைவாக இருப்பதால், அது சுபாவத்திற்கு மேற்பட்ட விசுவாசத்தின் நிறைவாகவும் இருக்கிறது என்பது தெளிவாகிறது. அவையெல்லாம் ஒன்றுசேர்ந்தே இருக்கின்றன, தேவகாட்சியின்றி அறிவின் இருத்தலுக்கும், விசுவாசத்தின் இருத்தலுக்கும் எந்தக் காரணமும் கிடையாது. இந்தக் காட்சி பகுத்தறிவு சார்ந்த அல்லது சுபாவத்திற்கு மேலான அறிவைப் போல, சிறைப்படுத்தப் பட்டதாகவும், மறைமுகமானதாகவும், இரகசியமானதாகவும் இருப் பதில்லை, மாறாக, அது தெளிந்ததாகவும், தனித்துவமுள்ளதாகவும், உத்தமமானதாகவும், அளவற்ற விசுவாசத்தை அரவணைப் பதாகவும், அதைச் சொந்தமாகக் கொண்டிருப்பதாகவும், ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனுடையவும் பேறுபலன்களால் தீர்மானிக்கப் படும் அளவு ஒளியோடும், சுயாதீன சித்தத்தின் சாட்சியோடும் இருக்கிறது. இவ்வளவு அதிக ஒளியின் முழுமையோடும், விழிப்புணர்வின் உறுதிப்பாட்டோடும் காணப்படும் சத்தியமானது, நம் வாழ்வாகவும் நம் உணவாகவும் இருக்கும்; அது நம் தனித்தன்மையை உறிஞ்சிக் கொள்ளாமலும், அதை நின்றுபோகச் செய்யாமலும் நம்மை ஊடுருவி, மாற்றியமைத்து, தெய்வீக மானவர்களாக ஆக்கும்.

ஆனால் இந்த தேவகாட்சியானது, அதிகரித்தலின் எல்லா சாத்தியத்தையும் விலக்கி விடும் அளவுக்கு முற்றிலும் உத்தமமான தாக இருக்காது; ஏனெனில் சிருஷ்டிக்கப்பட்ட ஒவ்வொரு விசையும் தன் சொந்த சுபாவத்தையும், தெளிவாக வரையறுக்கப்படாத ஒரு திறனையும் கொண்டதாக இருக்கிறது.

இது தவிர, அளவற்றது ஒருபோதும் படைக்கப்பட்ட புத்தியால் வற்றிப் போய்விட முடியாது. நம்முடைய புத்தி அவரில் எவ்வளவு அதிகமாகக் கண்டுணர்கிறதோ, அவ்வளவுக்கு, இன்னும் பகுத்துணர வேண்டியது அதிகமாக இருக்கும். ஆகவே, இவ்வகையில் தேவ காட்சியும் கூட அதிகரிப்பை அனுமதிக்கிறது.