இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

கடவுளின் உத்தமதனங்களோடுள்ள தொடர்பில் தெய்வீகத் தாய்மையின் உன்னத மகத்துவம்

தொடக்கத்திலேயே ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தி விட நாம் விரும்புகிறோம். நாம் சொல்ல வருவதன் பொருள் தவறாகப் புரிந்து கொள்ளும் ஆபத்தைத் தவிர்ப்பதற்காகவே இதைச் சொல்கிறோம்: கடவுளின் வேறு எந்த ஒரு கைவேலையையும், அல்லது எந்த ஒரு மகத்துவத்தையும் விட மேலாக, கடவுளின் இலட்சணங்களையும், உத்தமதனங்களையும் வெளிப்படுத்துவதாகிய இந்த மகத்துவத்தைப் பற்றி நாம் பேசும்போதெல்லாம், கடவுள் தமக்கு வெளியே செய்த எல்லாக் காரியங்களிலும் முதன்மையானதும், மிகச் சிறந்ததுமாகிய மனிதாவதாரப் பரம இரகசியத்தோடு ஒப்பிட்டு இப்படி நாம் பேசவில்லை என்பதை வாசகர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

தெய்வீகத் தாய்மையின் இந்த மிக உயர்வான மகத்துவம், இதை விட மேலான மகத்துவமுள்ள மற்றொரு மகத்துவத்தைத் தமது முழுமையான சர்வ வல்லமையைக் கொண்டும் கூட கடவுளால் செயல்படுத்த முடியாது என்னும் அளவுக்கு மிக மேலான மகிமைப் பிரதாபமும், பிரமாண்டமும் உள்ள கடவுளின் கைவேலையாக இருக்கிறது. கடவுளின் சர்வ வல்லமைக்கு வரம்புகளோ, எல்லைகளோ கிடையாது என்பதால் அது அப்படி அழைக்கப்படு கிறது. கற்பனை செய்யக் கூட சாத்தியமில்லாத காரியத்தைத் தவிர, அல்லது எந்தக் காரியத்தின் மூலப் பொருட்கள் ஒன்றையொன்று எதிர்த்து, ஒன்றையொன்று விலக்குமோ அந்தக் காரியத்தைத் தவிர வேறு எதுவும் சர்வ வல்லமையை ஒரு வரம்புக்குள் அடக்க இயலாததாக இருக்கிறது. இது ஒன்றுதான் கடவுளின் சர்வ வல்லமையைக் கட்டுப்படுத்துகிற ஒரே வரம்பாக இருக்கிறது. அர்ச். தாமஸ் அக்குயினாஸ் இத்தகைய ஒரு வரம்புக்குப் பின்வருமாறு ஓர் அழகிய காரணத்தைத் தருகிறார்: எந்தப் பொருளின் மூலப் பொருட்கள் அல்லது உள் அம்சங்கள் ஒன்றையொன்று எதிர்த்து, ஒன்றை யொன்று விலக்குமோ, அந்தக் காரியம் ஒன்றுமில்லாமையில் முடிவடையும். ஏனெனில், ஏனெனில் ஒன்றோடொன்று மோது வதும், ஒன்றை யொன்று நேரடியாக எதிர்த்து நிற்பதுமான மூலப் பொருட்கள் ஒன்றோடொன்று இசைந்திருக்க முடியாது, எனவே அவற்றால் எதுவும் உருவாக சாத்தியமில்லை. இனி, கடவுளின் சர்வ வல்லமை அளவற்ற வல்லமையாகவும், ஆற்றலாகவும் இருக்கிறது. ஆகவே அது சாத்தியமற்ற ஒன்றைச் செயல்படுத்து மானால், அது ஒரு முடிவுக்கு வந்து, ஒன்றுமில்லாமையாக ஆகிவிடும். ஆனால் இப்படிச் சொல்வதே அபத்தமானதாக இருக்கிறது.

என்றாலும் தெய்வீகத் தாய்மை கடவுளின் சர்வ வல்லமைக்கு ஓர் வரம்பை இடுகிறது என்று அதே அர்ச். தாமஸ் தெளிவாகவும், துல்லியமாகவும் உறுதிப்படுத்துகிறார். திவ்ய கன்னிகை தேவ தாயாக இருப்பதால், கடவுளாகிய அளவற்ற நன்மைத்தனத்தில் இருந்து ஓர் அளவற்ற மகத்துவத்தைச் சொந்தமாகக் கொண்டிருக் கிறார்கள்; இந்த வகையில், தெய்வீகத் தாய்மையை விடப் பெரிதான எதுவும் படைக்கப்பட முடியாது, ஏனெனில் கடவுளை விடப் பெரிதான எதையும் யாரும் நினைத்துப் பார்க்கவும் முடியாது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த உன்னத மகத்துவத்தைப் புரிந்து கொள்வதற்கு, மாமரியின் செயல்பாட்டிற் குரிய பலனை நாம் பார்க்க வேண்டும். இந்தச் செயல்பாடு எதில் முழுமையடைகிறது, எது அதன் விளைவாக இருக்கிறது? ஒரு தேவ ஆளில்! ஒரு மனிதனிலோ, ஒரு சம்மனசானவரிலோ, அல்லது தன்னில் மனிதர்கள், கோடிக்கணக்கான சம்மனசுக்கள் அனைவரின் உத்தம தனங்களையும் கொண்டிருப்பதாக நாம் கற்பனை செய்யக் கூடிய ஒரு ஆளிலோ அல்ல, மாறாக அவர் பிதாவின் ஒரே பேறான திருச்சுதனில், அவரது அளவற்ற பொருண்மையின் பதிவும், அவரது அளவற்ற மகிமையின் பிரகாசமும், ஓர் உண்மையான கடவுளு மாகிய தேவ சுதனில் அது நிறைவடைகிறது. ஆகவே இத்தகைய ஓர் ஆளுமையில் முடிவடைகிற செயல்பாட்டின் மகத்துவம் அவசிய மான விதத்தில் கடவுளின் சர்வ வல்லமைக்கு எல்லையாக இருக்க வேண்டும், ஏனெனில் கடவுளுக்கு மேலான ஓர் ஆளை உருவாக்க முயல்வது அவருக்கு எப்படி ஒரு முரண்பாடாக காரியமாக இருக்குமோ, அப்படியே தெய்வீகத் தாய்மையை விட மேலான மகத்துவத்தை உருவாக்க முயல்வதும் அவருக்கு ஒரு முரண் பாடாகவே இருக்கும். இதனாலேயே திருச்சபைத் தந்தையரில் சிலர், மூன்று தேவ ஆட்களுக்கும் பிறகு, அனைவரிலும் அதிக மேலானதும், அதிக பக்திக்குரியதுமாகிய ஆளுமை, சிருஷ்டிக்கப் பட்ட சகல ஆளுமைகளுக்கும் மேலாக உயர்ந்து நிற்பதும், மற்ற அனைவருக்கும் அதிக உயரத்தில் வைக்கப்பட்டுள்ளதுமான ஆளுமை மாமரியின் ஆளுமையே. ஏனெனில் மகா உந்நதரின் சர்வ வல்லமைக்கு ஒரு முடிவாக, வரம்பாக இருக்கிற ஒரு மகத்துவத்தை அவர்கள் சொந்தமாகக் கொண்டிருக்கிறார்கள். அது, கடவுளின் அளவற்ற ஆற்றலால் படைக்கப்பட்ட பின், தாம் அதுவரை உணர்ந்த திருப்தியையும், இன்பத்தையும் விட அதிக இனிமையானதும், அதிகக் கனிவுள்ளதுமான திருப்தியோடும், இன்பத்தோடும் கடவுளை ஓய்வெடுக்கச் செய்கிற மகத்துவமாக இருக்கிறது; ஏனெனில் அவர் இப்போது இருக்கும் உலகத்தை விட அதிகப் பெரியவையும், அதிக நல்லவையும், அதிக பிராண்டமானவையும் அழகானவையுமான ஆயிரம், பத்தாயிரம், ஏன் கோடிக்கணக்கான உலகங்களைக் கூட கடவுளால் படைக்க முடியும். ஆனால் தமது திருச்சுதனின் தெய்வீக மாதாவை விட சிறந்தவளும், மேலானவளும், அதிக பக்திக்குரியவளும், அதிக தெய்வீக வசீகரமுள்ளவளும், உத்தமப் பேரழகுள்ளவளும், அதிக கம்பீரமானவளும், அச்சத்தையும், ஆச்சரியத்தையும் பிரமிப்பையும் வருவிப்பவளுமான ஒரு பெண்ணை சிருஷ்டிக்க அவரால் இயலாது.

பரிசுத்த வேதாகமங்கள் இதைத் தெளிவாகக் குறித்துக் காட்டு கின்றன. சங்கீத ஆசிரியர் கடவுளின் சிருஷ்டிப்பைப் பற்றி விளக்க விரும்புகிறார். என்றாலும் அந்த தெய்வீக வேலையின் பக்திக்குரிய அதியற்புதத் தன்மையை முழுமையாகப் பாராட்டிப் பேச அவரால் இயலவில்லை. என்றாலும், சத்தியத்தால் தூண்டப்பட்டு அவர் அதிசய உணர்வோடு, ‘‘உமது விரல்ளின் வேலையாகிய வானகங் களை நான் உற்றுநோக்குவேன்'' என்கிறார், நமக்கு மேலாக உருண் டோடுகிற மகிமையும், அழகுமுள்ள வான்படைகள் மகா உன்னதரின் விரல்களின் விளையாட்டுப் பொருட்களாக இருக் கின்றன என்பதைப் போல! ஆனால் அதே சங்கீத ஆசிரியரின் நேரடி வாரிசும், அவருடைய தீர்க்கதரிசன உணர்வையும், கவித்துவமான பேரறிவையும் அளவற்ற விதமாகப் பெற்றுள்ளவர்களுமான மாமரி, கடவுள் தன்னில் செய்துள்ள அதிசயத்திற்குரிய செயலை எடுத் துரைக்கும் விதமாக, அவர் தமது அளவற்ற திருக்கரத்தின் வல்லமையைக் காண்பித்தருளினார் என்று சொல்கிறார்கள். 

ஓ கடவுளின் சர்வ வல்லபத்தின் அதியற்புதப் படைப்பே! எந்த எல்லைகளும் இல்லாததும், எதையும் செய்ய வல்லதுமான சர்வ வல்லமை, ஒரே ஒரு அதியற்புதமான, மாபெரும் சிருஷ்டியை, மகா உந்நதரின் வல்லமையின் எல்லையாக இருக்கக் கூடிய சிருஷ்டியைப் படைப்பதில் செலவழித்துத் தீர்க்கப்பட்டு விட்டது! கடவுள் பழைய ஏற்பாட்டில் தமது சர்வ வல்லமையைப் பேசும் போது, கடலிடம், இந்த எல்லையைத் தாண்டி வராதே என்றது போல, இப்போது தமது சர்வ வல்லமையிடம், ‘‘என் ஏக பேறானவரும், நேசத்திற்குரிய திருச்சுதனுமானவருக்காக ஒரு தாயை உருவாக்கும் உன்னத முயற்சியில் நீ உன் அளவற்ற ஆற்றலைக் குவித்து வைப்பாயாக, அவள் அந்த முயற்சியின் முத்திரையையும், அட்சரத்தையும் தன் நெற்றியில் தாங்கியிருக்கும் அளவுக்கு அதியற்புதமான, அதிக பக்திக்குரிய, உன் ஆற்றலையெல்லாம் முற்றிலுமாக வற்றிப் போகச் செய்கிற ஒரு வெளிப்பாடாக இருப்பாள், இதன் காரணமாக, அவள் உன் அளவற்ற வல்லமையின் எல்லை என்று அழைக்கப்படுவாள்'' என்று சொல்வதாகத் தோன்றுகிறது. கடவுளின் சர்வ வல்லபத்தின் இந்த அற்புதமான எல்லையில் வெளிப்படுத்தப்பட்ட கடவுளின் அளவற்ற ஞானத்தின் அளவும் கொஞ்சநஞ்சமல்ல. படைக்கவும், படைக்காதிருக்கவும் சுதந்திரமுள்ளவராக இருந்த கடவுள், தமது அளவற்ற இரக்கத்தில், தாம் சுதந்திரமான முறையில் உருவாக்கத் தேர்ந்து கொண்ட சிருஷ்டிப்பு எவ்வளவு அதிகமாக முடியுமோ அவ்வளவு அளவற்ற மகிமைக்கு உயர்த்தப்பட வேண்டும், எந்த அளவுக்கெனில், அது அவரது தெய்வீக சாராம்சமாகிய தனது அளவற்ற மாதிரிகையையும், மூலாதாரத்தையும் முடிந்த வரை மிகச் சிறப்பான முறையில் சித்தரிக்க வேண்டும், வெளிப்படுத்த வேண்டும்.

இதை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அவர் செய்து, தமது தேவ சுதன் சிருஷ்டிப்பை தமக்குள் கொண்டிருக்கும் ஐக்கியத்தில் அந்த சிருஷ்டிப்போடு இணைக்கப்படச் செய்தருளினார். இவ்வாறு சிருஷ்டிப்பின் உறுப்புகள் அனைத்தையும் அவர் கடவுளாக இருக்கும்படியாகவும், சேசுகிறீஸ்துவின் ஆளுமையில் அவை அளவற்றவையாக இருக்கும்படியும் உயர்த்தினார். 

சிருஷ்டிக்கப்பட்ட சுபாவங்கள் கிறீஸ்துவோடு கொண்ட தனிப்பட்ட ஐக்கியத்தின் காரணமாக, அவரில் கடவுளாக இருக்கும்படி உயர்த்தப்பட்டன; சிருஷ்டிக்கப்பட்ட செயல்பாடும் கூட அளவற்ற மதிப்பையும், மகத்துவத்தையும் கொண்டிருக்கும்படி உயர்த்தப்பட்டது. ஏனெனில் கிறீஸ்துநாதரின் மனித சுபாவத் திலிருந்து வரும் அவருடைய செயல்கள் தங்கள் சுபாவத்தில் அளவுக்குட்பட்டவை என்றாலும், அதே தனிப்பட்ட ஐக்கியத்தின் விளைவாகவும், அவை அப்படிப்பட்ட ஓர் ஆளின் செயல்களாகவும், அந்த ஆள் கடவுளாக இருந்ததாலும், அவை தாங்கள் எங்கிருந்து வந்தனவோ அந்த மனித சுபாவத்திலிருந்து தங்கள் மதிப்பை எடுத்துக்கொள்ளாமல், தாங்கள் யாருக்குச் சொந்தமானவையோ அந்த ஆளின் மகத்துவத்திலிருந்து எடுத்துக் கொண்டன. அதனால் அவை அளவற்ற மதிப்புள்ளவையாக இருந்தன. என்றாலும் சிருஷ்டிப்பானது, முடிந்த வரைக்கும் அளவற்றதாக இருக்கிற ஒரு மகத்துவத்திற்கு இன்னும் உயர்த்தப்பட்டிருக்கவில்லை. அது உயர்த்தப்படக் கூடிய மற்றொரு மகத்துவம் இருந்தது. சிருஷ்டிப்பு கடவுளின் அகச் செயல்பாட்டின் மட்டத்திற்கு உயர்த்தப்பட்டு, அவருடைய உள்ளரங்க ஜீவியத்திற்கு ஒப்பானவை யாகவும், அதைக் கண்டுபாவிப்பதாக இருக்க வேண்டும் என்பதுதான் அந்த மகத்துவ மாகும். 

நித்தியத்திற்கும் மனிதர்களுடையவும், சம்மனசுக்களுடையவும் தேவ காட்சியாகவும், பேரின்பமாகவும் இருக்கப் போகிற தெய்வீகத்தின் அகச் செயல்பாட்டின் உன்னத மகத்துவம் என்ன வெனில், தெய்வீகத்தின் அகச் செயல்பாடு ஒரு தேவ ஆளைப் பிறப்பிக்கிறது, உண்டாக்குகிறது என்பதுதான். இந்த மனித கற்பனைக்கெட்டாத கொடை சிருஷ்டிப்பின்மீது பொழியப்பட முடியுமா? சிருஷ்டிக்கப்பட்ட ஓர் ஆளுமை, அவரது செயல் பாட்டின் காரணமாக, ஒரு தெய்வீக ஆளுமையைப் பெற்றுக் கொள்ள உதவி செய்யப்பட முடியுமா? முடியுமென்றால் எந்த விதத்தில்? இந்த மனிதச் செயல்பாடு ஒரு தெய்வீக ஆளுமையைக் கொண்டிருக்க எப்படி உதவுவது என்பது தேவ ஞானமானது தீர்த்து வைக்க முன்வந்த ஒரு பிரச்சினையாக இருந்தது. அதன்பின், தனது அனைத்திலும் பெரிய செயலைச் செய்து முடித்து அது இளைப் பாறியது.

ஒரு மனித ஆள் பொருண்மை சார்ந்த விதத்தில் ஒரு தெய்வீக ஆளுமையை உருவாக்க முடியும் என்ற அடிப்படையில் இது செய்யப்பட முடியாது. ஏனெனில் அப்போது விளைவு காரணத்தை விட அளவற்ற முறையில் பெரியதாகவும், மேற்பட்டதாகவும் இருக்கும் என்பதால் இது ஒரு முரண்பாடாக இருக்கும்; அல்லது, வேறு வார்த்தைகளில் கூறுவதானால், காரணமானது தன்னில் கொண்டுள்ளதை விட அதன் விளைவானது, அளவற்ற முறையில் அதிகப் பெரிதான செயல்பாட்டின் தீவிரத்தைக் கொண்டிருப்பது அவசியமாகி விடும். தெய்வீகத் தாய்மையை சிருஷ்டித்ததன் மூலம் தேவ ஞானம் இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைத்தது.

இங்கே மறைமுகமாகக் காட்டப்படுவது என்ன? முழு அறிவோடும், விருப்பத்தோடும் ஒரு மனித ஆள் கடவுளாக இருப்பவரைக் கருவுறுகிறார்கள் என்பது இங்கே குறித்துக் காட்டப் படுகிறது. அளவற்றதாக இருக்கிற ஓர் ஐக்கியத்தால் இது நிகழ்கிறது. கடவுளின் சர்வ வல்லமை இந்த ஐக்கியத்தை நிகழ்த்துகிறது. சாதாரணமாக, ஒரு தாய் கருவுறுவதாகச் சொல்லப்படும் நேரத்தில், இயற்கையான முறையில் அவள் தன் பங்கிற்குத் தர வேண்டி யிருக்கிற காரியத்தை அந்த மனிதப் பெண் தருகிற அதே கணத்தில் இந்த ஐக்கியம் நிகழ்கிறது. இதன் காரணமாக அவர்களது கர்ப்பத்தின் கனி ஒரு மனித சரீரமாக இல்லாமல், ஒரு மனித ஆளாக இல்லாமல், ஒரு தேவ-மனிதனாக, ஒரு தெய்வீக ஆளாக இருக்கிறது. இவ்வாறு அந்தப் பெண்ணின் மனிதச் செயல்பாடு, ஏற்கெனவே விளக்கப்பட்டுள்ள அர்த்தத்தின்படி, ஒரு தெய்வீக ஆளுமை உருவாக்கப்படுதலில் முடிகிறது. இவ்வாறு அந்தப் பெண்ணின் இந்த மனிதச் செயல்பாடு, சாத்தியமான வரை, தெய்வீகத்தின் அகச் செயல்பாட்டின் மகத்துவத்தைப் பெற்றுக்கொள்கிறது.

ஆகவே, மாமரியில், மனிதச் செயல்பாடு சாத்தியமான அனைத்திலும் உயர்ந்த மகத்துவத்தை, கடவுளின் அகச் செயல் பாட்டின் மகத்துவத்தை அடைகிறது. இந்த அகச் செயல்பாடு ஒரு தெய்வீக ஆளுமையில் நிறைவுறுகிறது, இதில் பின்வரும் வேறுபாடு இருக்கிறது: கடவுளின் அந்தரங்கச் செயல்பாடு அந்த ஆளுமைக்கு ஒரு செயல்பூர்வமான தொடக்கததைத் தருகிறது; ஆனால் மனிதச் செயல்பாடு தெய்வீக ஆளுமையில் தனது நிறைவை அடைகிறது. இது ஒரு நிஜமான, செயல்பூர்வமான உண்டாக்குதலால் அன்றி, ஐக்கியத்தால் நிகழ்கிறது. ஆகவே மாமரி தன்னில் கடவுளின் தாயாரின் பக்திக்குரிய மகத்துவத்தை வெளிப்படுத்துகிறார்கள். இது, தேவ ஞானத்தால் எழுப்பப்பட்ட அனைத்திலும் பெரிதான பிரச்சினைக்குத் தீர்வாக இருக்கிறது. இது சிருஷ்டிக்கப்பட்ட செயல்பாட்டை சாத்தியமான உன்னத மகத்துவத்திற்கு உயர்த்த கடவுளின் படைப்புச் செயல் கொண்டுள்ள ஏக்கத்தைத் தணிக் கிறது; தெய்வீகத்தின் வாழ்வின் அக உருவாக்கத்தை முடிந்த வரை கண்டுபாவிக்கும் சிருஷ்டிக்கப்பட்ட செயல்பாட்டின் உன்னத மகத்துவமாக இது இருக்கிறது.

இந்த தெய்வீகத் தாய்மை கடவுளின் நன்மைத்தனத்திற்கு அனைத்திலும் உயர்ந்ததும், மிகுந்த பக்திக்குரியதுமான வெளிப் பாட்டைத் தருவதில் அது அந்த நன்மைத்தனத்திற்கும் ஒரு வரம்பை, எல்லையை, ஏற்படுத்துகிறது. தன்னையே பரப்புவதும், தன்னையே வெளியில் பொழிவதும் நன்மைத்தனத்தின் சாராம்சமாக இருக்கிறது. அது எந்த அளவுக்குத் தன்னையே தருகிறதோ, அந்த அளவுக்கு அதிக நன்றாகவும், அதிக பலமான முறையில் தன்னையே வெளிப்படுத்து கிறது. அப்போதுதான் அது தனது சாராம்சத்தின்படி செயல்படு கிறது. ஆகவே, தன்னையே அளவற்ற முறையில் தருவது அளவற்ற நன்மைத்தனத்தின் சாராம்சத்தில் இருக்கிறது. மனிதாவதாரத்தைச் செயல்படுத்துவதன் மூலம் தெய்வீக நன்மைத்தனம் அனைத்திலும் உயர்ந்ததும், முடிந்த வரை மிகச் சிறப்பான விதத்திலும் தன்னையே பொழிந்து விட்டது என்பதால், வேறு எந்த வகையான வெளிப் பாடும் நின்று போகும் என்றும், மேற்கொண்டு அதன் சீராட்டல் களின் எந்த வெளிப்பாட்டிற்கும் இனி சாத்தியமில்லை என்றும் நாம் முடிவுக்கு வர வேண்டும்.

ஆனால் அத்தகைய நன்மைத்தனம் மற்றொரு வகையில் தன்னையே தனக்கு வெளியில் பொழிவது சாத்தியமாக இருக்கிறது. அது, இப்படித் தன்னையே தரும் வல்லமையை ஒரு சிருஷ்டிக்குத் தருவதாகும். புறப் பொழிதல் என்பதன் மிக உயர்ந்த பொருளில் இது முழுமையாகவும், கண்டிப்பான விதத்திலும் உண்மையான புறப் பொழிதலாக இருக்கிறது. இதை நாம் விளக்குவோம்:

கடவுள் செய்யும் அனைத்தும் அவருடைய நன்மைத்தனத் திலிருந்து புறப்பட்டு வருகிறது. சிருஷ்டித்தலும், அர்ச்சித்தலும், மகிமைப்படுத்தலும், மனிதாவதாரமுமாகிய அனைத்தும் கடவுளின் நன்மைத்தனத்தையே தங்கள் இருத்தலுக்கான காரணமாகக் கொண் டிருக்கின்றன. ஏனெனில் கடவுள் ஏன் படைத்தார், அல்லது அவர் ஏன் தமது வரப்பிரசாதத்தை அல்லது பேரின்பத்தைப் பொழிந்தார், அல்லது ஏன் தமது தெய்வீக சுதனை மனித சுபாவத்தோடு இணைத்தார் என்று ஒருவன் கேட்பான் என்றால், அதற்கான இறுதி யான காரணமாக இருப்பதும், இருக்க வேண்டியதும் கடவுளின் நன்மைத்தனமாகும். ஏனெனில் அது நன்மைத்தனமாக இருக்கிறது. அது அவ்வாறு இருப்பதால் இயல்பாகவும், தனது சாராம்சத்திலும் தன்னையே வெளியே பொழியும் தன்மையுள்ளதாக இருக்கிறது. ஆனால் இவை நன்மைத்தனத்தின் அனைத்திலும் சிறந்த, அனைத் திலும் உயர்ந்த செயல்கள் அல்ல. நிச்சயமாக இவற்றை விட உயர்ந்த ஒரு காரியம் இருக்கிறது. அளவற்றவராகிய பிதாவின் அந்தரங் கத்தில் அவருடைய திருச்சுதன் ஜெனிப்பிக்கப்படுதல் மற்றும் இஸ்பிரீத்துசாந்து அவர்களிடமிருந்து அவர்களது சுவாசமாகப் புறப் படுதல் ஆகியவற்றின் காரணமாக இந்த நன்மைத்தனம் இருக்கிறது என்பதே.

தேவ சுதன் ஜெனித்தலும், இஸ்பிரீத்துசாந்து சுவாசமாக வெளிப் படுதலும், ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட புறச் செயல்களைப் போல, கடவுளின் நன்மைத்தனத்தின் சுதந்திரமான செயல்கள் அல்ல, மாறாக, அவை அவசியமான செயல்களாக இருக்கின்றன. ஆனால் இந்த சுதந்திரமான செயல்கள் சாத்தியமானவையே. ஏனெனில் தெய்வீக நன்மைத்தனம் அவசியமான விதத்தில் தெய்வீக அந்தரங்கத்தில் தன்னையே பொழிகிறது, அது அவசியமான விதத்தில் தனது சொந்த நாட்டத்தைப் பின்பற்றுகிறது. ஆகவே, நன்மைத்தனத்தின் அனைத்திலும் மேலான செயல்பாடு, முற்றிலும் முழுமையான பொருளின்படி, தேவ சுதனிலும், இஸ்பிரீத்துசாந்து விலும் தன்னையே பொழிந்து, அவர்களை உருவாக்குவதாக இருக்கிறது.

இனி, நாம் ஏற்கெனவே பார்த்துள்ளபடி, மாமரியின் கருத்தரித் தலாகிய மனிதச் செயல்பாடு, தெய்வீகச் செயல்பாட்டின் நித்தியமான, நிரந்தரமான செயல்பாடு கொண்டுள்ள அதே மகத்துவத்திற்கு தெய்வீக நன்மைத்தனத்தால் உயர்த்தப்பட்டுள்ளது. மாமரி இதன் காரணமாக, தனது பக்திக்குரிய மகத்துவத்தின் வலிமையில், தெய்வீக நன்மைத்தனத்தின் இந்த அனைத்திலும் உயர்ந்த செயலோடு இணைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே மாமரியில் தெய்வீக நன்மைத்தனமானது தனது பூரண முழுமை யானதும், அனைத்திலும் சிறந்ததுமான வெளிப்பாட்டைக் கொண்டுள்ளது. எனவே மாமரி தனது மாபெரும் மகத்துவத்தால் தன்னில் சர்வ வல்லமை, ஞானம் மற்றும் நன்மைத்தனம் ஆகியவற்றை முற்றிலும் முழுமையாக வெளிப்படுத்துகிறார்கள். எனவே அவர்கள் கடவுளின் கைவேலையின் அதியற்புதப் படைப் பாக இருக்கிறார்கள்.

இந்தப் பிரிவை முடிக்குமுன், இந்த மகத்துவத்தைக் கடவுளின் மற்ற வேலைகளோடு ஒப்பிட்டுப் பார்க்க நாம் விரும்புகிறோம். முதலாவதாக சிருஷ்டிப்பு. அது உண்மையாகவே அழகானது, மேலான. கடவுள் தமது சர்வ வல்லபத்தில், 

‘ஒளி உண்டாகக் கடவது'' என்கிறார். அதேகணத்தில் அனைத் தையும் ஒளிர்விக்கும் ஒளி சிருஷ்டிப்பு முழுவதற்கு மேலாகவும் பரவி, அதை வசீகரத்தாலும், அழகாலும் நிரப்புகிறது. அதன்பின் கடவுள் மீண்டும்: ‘‘வானமண்டலம் உண்டாகுக'' என்கிறார். உடனே பூமிக்கும், வான் கோள்களுக்குமிடையே உள்ள விண்வெளி உருவாக்கப்படுகிறது. மிகக் கவர்ச்சியானதும், வசீகரமுள்ளதுமான, பரலோக நீல நிறக் கவிகை காட்சிக்குத் தோன்றுகிறது. கடவுள் பேசுகிறார், வான் கோள்களைப் படைக்கிறார். அவை தங்கள் எண்ணிக்கையில் நம் மனங்களை முற்றிலுமாக மதிமயக்குபவையாக இருக்கின்றன, பிரமாண்ட அழகும், கம்பீரமும் உள்ளவையாகவும், தங்கள் செயலாலும் நம்மை மலைக்கச் செய்பவையாகவும் இருக்கின்றன. ஒவ்வொன்றும் தன்னில் ஒரு சூரியனாக இருக்கிற நட்சத்திரங் களின் எண்ணிக்கையைக் கணக்கிட வல்லவன் யார்? அவை ஒவ்வொன்றும் மற்றதினின்று கோடிக்கணக்கான மைல்கள் தூரத்தில் இருக்கின்றன; பூமியாலும், நிலவாலும், மற்ற கிரகங்களாலும் பின்தொடரப்படுகிற நம் சூரியனைப் போல, தங்களுக்கென கோள்களையும், துணைக் கோள்களையும் கொண்டுள்ளன, அல்லது, ஒரு பேச்சு வகைக்கு, தோழர்களையும், அரச சபையின ரையும் கொண்டுள்ளன. இந்தச் சூரியன்களில் ஒவ்வொன்றும் தனக்கெனத் தனியாக ஓர் உலகத்தை உருவாக்குகிறது. இவ்வாறு எண்ணிலடங்காத நட்சத்திரங்களின் மிகப் பிரமாண்டமான எணணிக்கை கோடிக்கணக்கான, பத்தாயிரங்கோடிக் கணக்கான உலகங்களை உருவாக்குகிறது. இவை ஒவ்வொன்றும் மற்றதை விட அதிக அழகும், வசீகரமும் உள்ளவையாக இருக்கின்றன. பால் வழி அண்டம் எனப்படும் நம்முடைய வெண்ணிற இடைவாரைப் பற்றி நாம் என்ன சொல்வோம்? மணப் பெண் தனது திருமண ஆபரணங்களை அணிந்து கொள்வது போல,, வான மண்டலம் இந்தப் பால் வழியை அணிந்து கொண்டிருக்கிறது. அது முழுவதும் நட்சத்திரங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அவை நம்மிடமிருந்து எவ்வளவு தொலைவாகவும், எத்தகைய மதிமயக்கும் எண்ணிக்கை யிலும் இருக்கின்றன என்றால், அவை வெண்ணிறமான ஒரு நிழல்போன்ற கோட்டை மட்டுமே நமக்குக் காட்டுகின்றன. இந்த மிகப் பிரமாண்டமான மகத்துவம், சிருஷ்டிக்கப்பட்ட அதியற்புதத் தின் விஸ்தாரம், மகிமையின் இந்த பக்திக்குரிய கீதம், கடவுளின் சர்வ வல்லமையின் ஆகக்கடவது என்ற வார்த்தையின் விளைவாக இருந்தது.

கடவுள் பேசுகிறார், உடனே கடல் நிலத்திலிருந்து பிரிக்கப்படுகிறது, நிலம் கண்ணுக்கு மிக வசீகரமான இன்பம் தருகிற பசும் நிறப் போர்வை ஒன்றைப் போர்த்திக் கொள்கிறது. அது தன் மீது மிக அழகானவையும், தங்கள் பல வகையான நிறங்களாலும், தங்கள் நறுமணத்தாலும் மனதை எவ்வளவோ அதிகமாக வசீகரிப்பவை யுமான மலர்களையும், அளவிலும், வடித்திலும், நிறத்திலும், தங்கள் கனிகளிலும் பலதரப்பட்டவையாக இருக்கிற மரங்களையும் அணிகலன்களாக அணிந்திருக்கிறது. மற்றொன்று, எண்ணற்ற உயிரினங்களால் நிரப்பப்பட்டுள்ளது. 

இறுதியாக, ஒன்றுமில்லாமையிலிருந்து இருத்தலுக்கு அழைக்கப் படும் ஒன்றிடம் கடவுள் பேசாமல் இப்போது தமக்குத் தாமே பேசு கிறார்: ‘‘நமது சாயலாகவும், பாவனையாகவும் மனிதனைப் படைப்போமோக'' என்கிறார். மூன்று தேவ ஆட்களின் நேரடி சந்திப்பை அவசியமானதாக்கிய இந்தக் கடைசி வேலை எவ்வளவு அதியற்புதமான கைவேலையாக இருந்திருக்க வேண்டும்!

‘நமது சாயலாகவும், பாவனையாகவும் மனிதனைப் படைப்போ மாக!'' இதோ! மனிதன் சர்வ வல்லமை, ஞானம் மற்றும் நன்மைத் தனத்தின் அதியற்புதப் படைப்பாக இருக்கிறான். இங்கே கடவுள், தனது ஓட்டப்பந்தயத்தை ஓடி முடித்த ஓர் அரக்கனைப் போல் ஓய்வு கொள்கிறார்!

இனி, சிருஷ்டிப்பில் கடவுள் உச்சரித்த இந்த ஆகக்கடவது என்ற வார்த்தையை, அவரது தூண்டுதலால் ஒரு சிருஷ்டி உச்சரித்த ‘‘இதோ, ஆண்டவருடைய அடிமையானவள்; உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகக்கடவது'' என்ற மற்றொரு வார்த்தையோடு ஒப்பிட்டுப் பார்ப்போம்.

கடவுள் தமது படைப்புச் செயலில் தாம் ஆகக்கடவது என்று உச்சரித்தபோது செய்ததை விட, மாமரி அதே வார்த்தையை உச்சரித்தபோது அதிக வல்லமையையும், அதிக ஞானத்தையும், அளவுகடந்த நேசத்தையும் அளவற்ற விதமாக வெளிப்படுத்துவதில் இன்பம் கொண்டார் என்பது தெளிவு. ஏனெனில் மாமரியின் ஆகக்கடவது உலகத்தன்மையான ஒளியைப் பிறப்பிக்கவில்லை என்பது உண்மைதான்; ஆனால் அவர்கள் இந்த உலகிற்கு வருகிற எந்த மனிதனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளியைப் பெற்றெடுத்தார்கள்; அவர்களது ஆகக்கடவது சடத்தன்மையான வான மண்டலத்தைப் பிறப்பிக்கவில்லை. மாறாக, அது, பரலோகமும் பூலோகமும் ஒன்றையொன்று சந்தித்து முத்தமிட்டுக் கொள்ளும் இடமாகிய தெய்வீக வானமண்டலமானவரைப் பெற்றெடுத்தது. அது சூரியனை சிருஷ்டிக்கவில்லை, ஆனால் நீதியின் தெய்வீக சூரியனைப் பிறப்பித்தது. அது நட்சத்திரங்களை உருவாக்கவில்லை, ஆனால் யாக்கோபின் நட்சத்திரமானவரைக் கருத்தாங்கியது; அது பூமியையோ, மலர்களையோ, மரங்களையோ, மிருகங்களையோ, மனிதனையோ உருவாக்கவில்லை. ஆனால் பாலும் தேனும் பொழியும் பூமியை, ஜெரிக்கோவின் மலரை, ஜீவிய மரத்தை, யூதாவின் சிங்கத்தை, மெய்யான மனிதனை, மனிதரின் மாதிரியானவரை, தேவ-மனிதனை உருவாக்கியது. ஒரே வார்த்தையில் சொல்வதானால், கடவுளால் உச்சரிக்கப்பட்ட ஆகக்கடவது, சிருஷ்டியை உருவாக்குகிறது; மாமரியில் அவர் உச்சரித்த ஆகக் கடவது சிருஷ்டிகரைக் கருத்தாங்குகிறது. கடவுள் உச்சரிக்கும் ஃபியாத் முடிவுள்ளதைப் பிறப்பிக்கிறது; அவர் மாமரியில் உச்சரிக்கும் ஃபியாத் அளவற்றவரை, சர்வ வல்லபரை, அனைத்தையும் காண்கிறவரை, சர்வ நன்மைத்தனமானவரை, சகல உத்தமதனங்களின் கருவூலத்தைக் கருத்தரிக்கிறது.

அனைத்துப் பொருண்மைகளையும் இருத்தலுக்கு அழைத்த அந்த சிருஷ்டிப்பின் ஃபியாத்திற்கு மிக மேலாக, கடவுள் உச்சரித்த மற்றொரு ஃபியாத் உண்டு, அது சுபாவத்திற்கு மேலான ஒழுங்கைச் சேர்ந்தது, அனைத்திலும், சுபாவத்திலும், உத்தமதனத்திலும், அழகிலும் மற்ற ஃபியாத்தை விட மேற்பட்டதாக இருக்கிறது. அது வரப்பிரசாதத்தைப் பிறப்பிக்கும் ஃபியாத் ஆகும். இந்த வரப்பிரசாதம் சுபாவத்திற்கு மேலான உலகத்தின் அங்கங்களாக இருக்கிற சம்மனசுக்கள் மற்றும் புனிதர்களின் பத்தாயிரக்கணக்கான படையணிகளிடையே பரப்பப்பட்டுள்ளது; வரப்பிரசாத உலகத்தில் தமது மிகத் தாராளமுள்ள கரத்தைக் கொண்டு தாம் பரப்பியுள்ள தமது செல்வங்கள் மற்றும் உத்தமதனங்கின் வற்றாத பொக்கிஷத்தை வெளிப்படுத்துவதில் கடவுள் பிரியங்கொண்டார் என்றாலும், இந்த வரப்பிரசாத சிருஷ்டிப்பை, சுபாவமான உலகத்தை இருத்தலுக்கு அழைக்கும் இந்த ஃபியாத், மாமரியின் ஃபியாத்தை விட பாரதூரமான அளவுக்குத் தாழ்ந்ததாக இருக்கிறது. மரியாயின் ஃபியாத் வரப்பிரசாதத்தின் கர்த்தரும், வரபபிரசாதத்தின் ஆதாரமும், வரப்பிரசாதத்தின் ஊற்றும், பூரணமுமானவரையே இருத்தலுக்குள் அழைக்கிறது. ஒர் ஆற்றிலிருந்து புறப்படும் எண்ணற்ற வாய்க்கால்களைப் போல, சகல சம்மனசுக்களுடையவும், அர்ச்சியசிஷ்டவர்களுடையவும் வரப்பிரசாதம் பாய்ந்து வருகிறது. இந்த சுபாவத்திற்கு மேலாக சிருஷ்டிப்பைப் பற்றியும் நாம் தாவீதோடு சேர்ந்து: ‘‘உமது விரல்களின் வேலையாகிய உமது வானங்களை நான் உற்றுநோக்குவேன்'' என்று சொல்லலாம்; மாமரியில் கடவுள் உச்சரித்த ஃபியாத்தின் விளைவைப் பற்றி நாம், ‘‘அவர் தமது திருக்கரத்தின் வல்லமையைக் காண்பித்தருளினார்'' என்று சொல்லலாம். ‘‘ஃபேச்சித் பொத்தென்ஷியாம் இன் ப்ராக்குலோ சூவோ.''