இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இவை அனைத்தையும் மாமரிக்குப் பொருத்திப் பார்த்தல்.

ஓர் ஆத்துமத்தின் மகிமையின் அளவு அதன் பேறுபலனாகும். இனி, மாமரி படைக்கப்பட்ட புத்தியுள்ள ஜீவியர்கள் அனை வரையும் விட பேறுபலனில் வெகுவாக அப்பாற்பட்டிருந்தார்கள். ஆகவே அவர்களுடைய மகிமை சகல சம்மனசுக்களுடையவும், அர்ச்சியசிஷ்டவர்களுடையவும் மகிமையை விட வெகுவாக உயர்ந்து நிற்கிறது. இதன் காரணமாக, அவர்கள் தன்னுடைய திவ்விய சுதனாகிய சேசுக்கிறீஸ்துநாதருடைய வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் இத்தகைய மகிமையின் பிரமாண்டத்தின் ஒரு கண நேரக் காட்சியையாவது நம் வாசகர்களுக்குத் தரும்படியாக, நம் அத்தியாயத்தை நாம் எதைக் கொண்டு தொடங்கியிருக்கிறோமோ அந்தச் சுருக்கமான அறிவுவாதத்தை விளக்கிக் கூற நாம் முயற்சி செய்வோம்.

சம்மனசுக்களாகிய அரூபிகளின் எண்ணிக்கை மனித மனதுக்கு எட்டாத அளவுக்கு மிகவும் அதிகமானது என்பது வேதசாஸ்திர சத்தியமாகும். இது இந்த வார்த்தைகளில் அர்ச். டெனிஸ் என்பவ ரால் வலியுறுத்தப்படுகிறது: ‘‘சுந்த் பெயாத்தி எக்யஸர்ச்சித்துஸ் சூப்பர்னாரும் மெந்த்ஸியும், இன்ஃபிர்மாரும் நோஸ்த்ராரும் மெந்த்ஸியும் நூமெரும் சூப்பர் எக்ஸ்சேதெந்தெஸ்.'' அர்ச். தாமஸ் அக்குயினாஸால் நன்கு வாசித்துத் தியானிக்கப்பட்டுள்ள இந்த வார்த்தைகள், வான்கோள்களின் பிரமாண்டமும், எண்ணிக்கையும் பூமியின் அளவை விட எவ்வளவு பாரதூரமான அளவுக்கு மேற்பட்ட தாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு, சம்மனசுக்களின் எண்ணிக் கையும் சடப்பொருள் சார்ந்த பொருண்மைகள் அனைத் தினுடையவும் எண்ணிக்கையை விடப் பாரதூரமான அளவுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது என்று அவர் வலியுறுத்தும்படி செய்துள்ளன.

இதற்கு இந்தப் பரிசுத்த வேதபாரகர் தரும் காரணம் என்னவெனில், கடவுள் குறைந்த உத்தமதனமுள்ள சிருஷ்டிகளை விட மிக அதிகமான எண்ணிக்கையில் அதிக உத்தமதனமுள்ள சிருஷ்டிகளைப் படைத்திருக்கிறார் என்பதாகும். ஏனெனில் அதிக உத்தமமான சிருஷ்டிகள் அவருடைய சாராம்சத்தின் அழகை அதிகமாக வெளிப்படுத்த முடியும். அதுவே சகல சிருஷ்டி களுடையவும் மாதிரியாக இருக்கிறது; அந்த தெய்வீக சாராம்சம் அளவற்றதாக இருப்பதால், மிகப் பிரமாண்டமான எண்ணிக்கை யைக் கொண்டவையும், ஒருபோதும் குறைந்து போகாதவையுமான அரூபிகளாக சிருஷ்டிகளால்தான் அந்தச் சாராம்சம் வெளிப் படுத்தப்பட முடியும்.

இதன் காரணமாக, வானமண்டலங்களிலுள்ள சகல நட்சத்திரங் களுடையவும், பெருங்கடல்களின் மணற்துகள்கள் அனைத்தினுடை யவும், மரங்களின் இலைகள் அனைத்தினுடையவும், நீர்த் திவலைகள் அனைத்தினுடையவும், காற்றில் மிதக்கும் சகல அணுக் களுடையவும் எண்ணிக்கையை விட சம்மனசுக்களின் எண்ணிக்கை மிக மிக அதிக அபரிமிதமானது என்ற முடிவுக்கே நாம் வர வேண்டியிருக்கிறது.

சம்மனசுக்களின் இந்த பிரமாண்டமான எண்ணிக்கை கடலின் மணற்துகள்களைப் போலவோ, நீர்த் துளிகளைப் போலவோ, காற்றின் அணுக்களைப் போலவோ, விரவிக் கிடக்கிற ஒரு குழப்ப மான கூட்டத்தைப் போல் இல்லை, மாறாக, ஓர் உத்தமமான ஒழுங்கு அவர்கள் மேல் அரசாளுகிறது. எண் வரிசையில் இரண்டு என்னும் எண் ஒன்றையும், 3, 2-ஐயும் விடப் பெரியதாயிருப்பது போல, மேற்கூறிய ஒழுங்கின்படி, ஒவ்வொரு சம்மனசானவரும் அடுத்தடுத்து, தமக்கு முந்தினவரை விட சுபாவமான கொடைகளில் மேம்பட்டிருக்கிறார்.

சம்மனசுக்களின் மீது பொழியப்பட்டிருக்கிற வரப்பிரசாதக் கொடைகளும் சுபாவக் கொடைகளை விட அளவில் இவ்வாறே மிகவும் அதிகமாக உள்ளன. எந்த அளவுக்கென்றால், அதிகமான சுபாவக் கொடைகளைப் பெற்றிருக்கிற எந்த ஒரு தேவதூதரும் மற்றொருவரை விட அதிகமான வரப்பிரசாதங்களாலும் வளப்படுத்தப்பட்டிருக்கிறார்; இதன் காரணமாக, அதிகமான வரப் பிரசாதக் கொடைகளால் வளப்படுத்தப்பட்டிருப்பவர், தமது வரப் பிரசாதத்தின் அளவுக்கு ஏற்றபடி, அதிகமான மகிமையைக் கொண்டும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்.

நாம் விளக்கிச் சொல்ல விரும்புகிற இந்த வாதத்தின் பொருட்டு, வெளிப்படையாகவே இப்படித் தொடங்கிய காரியத்திலிருந்து விலகிச் சென்றது பற்றி வாசகர்கள் நம்மை மன்னிப்பார்களாக. ஆகவே, நாம் கூறியுள்ளதுபோல, தேவதூதர்கள் எண்ணிறந்தவர் களாக இருக்கிறார்கள் என்றால், அவர்களில் ஒருவர் சுபாவத்தில் மற்றவரை விட அதிக உத்தமமானவராக இருக்கிறார் என்றால், ஒருவர் சுபாவத்தில் மற்றவரை விட அதிக உத்தமமானவராக இருப்பதால், வரப்பிரசாதத்திலும் அதிக உத்தமமானவராக இருந்து, இதன் விளைவாக பரலோகததில் அதிக மகிமையை அனுபவிக் கிறார் என்றால், சகல சம்மனசுக்களிலும் மிகச் சிறியவரில் எவ்வளவு குறைவான மகிமை இருக்கும் என்று நீங்கள் வைத்துக்கொண் டாலும், அப்போது, அவர்கள் அனைவரிலும் மிகப் பெரியவர் கொண்டிருக்கிற மகிமையின் மிகப் பிரமாண்டமான அளவை நீங்கள் அனுமானிக்க வேண்டும்; இவ்வாறு, மிகப் பொதுவான கருத்துப்படி, நவ விலாசங்களில் எல்லாம் உயர்ந்த விலாசமாகிய பக்திச்சுவாலகர் சபையினர் அனைவரின் தலைவரான அர்ச். மிக்கேல், அவருக்குக் கீழ் எத்தனை சம்மனசுக்கள் இருக் கிறார்களோ, அவ்வளவு மடங்கு, அதாவது, மிகப் பெரிய எண்ணி லடங்காத மடங்கு மகிமையைக் குறைந்தபட்சம் கொண்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு நாம் வர வேண்டியிருக்கிறது. ஞானஸ்நானம் பெற்றவுடனே இறந்த ஒரு குழந்தை மோட்சத்தில் கொண்டிருக்கும் ஒரு மடங்கு மகிமையை மட்டும் சம்மனசுக்களில் எல்லாம் மிகச் சிறியவர் கொண்டிருக்காமல், சம்மனசுக்களுக்குத் தகுதியான விதத்தில் அதை விட ஆயிரமாயிரம் மடங்கு மகிமை யைக் கொண்டிருக்கிறார் என்றால், அனைவருக்கும் மேலானவரும், பரலோக சேனைகள் அனைத்தினுடையவும் தலைவரும், தளகர்த்தரு மானவருமாகிய தேவதூதரின் செல்வங்கள் எவ்வளவு அதிகமாக இருக்கும்! அத்தகைய மகிமையை யாரால்தான் அளவிட முடியும்? இத்தகைய ஒரு பேரின்பத்தின் ஆழத்தை யார்தான் கண்டுபிடிக்க முடியும்?

மேலும் சகல அர்ச்சியசிஷ்டவர்களின் மகிமையையும் நாம் கணக்கிட்டுப் பார்ப்போம். அர்ச். அருளப்பர் கூறுவது போல், அவர்களும் எண்ணற்றவர்களாகவே இருக்கிறார்கள், அவர்களது மகிமையும் மிகப் பிரமாண்டமானதாகவே இருக்க வேண்டும்! பழைய ஏற்பாட்டின் நீதிமான்கள் அனைவருடையவும், பிதாப் பிதாக்கள், தீர்க்கதரிசிகள் அனைவருடையவும் மகிçயையும், சகல அப்போஸ்தலர்களின் மகிமையையும், எண்ணற்ற வேதசாட்சிகளின் மகிமையையும் எண்ணற்ற கன்னியர்கள், ஸ்துதியர்கள், தவசிகள், மற்றும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மடங்கு தேவ இஷ்டப் பிரசாதத்தோடு இறந்தவர்களின், அல்லது இறக்க இருப்பவர்களின் ஆத்துமங்களின் மகிமையையும் பற்றி சிந்தித்துப் பாருங்கள்! 

இப்போது அனைவரிலும் உயர்ந்தவரான பக்திச்சுவாலகரின் மகிமையையும், சகல அர்ச்சியசிஷ்டவர்கள், எல்லாக் காலங் களையும் எல்லா இடங்களையும் சேர்ந்த நீதிமான்கள் ஆகியோரின் மகிமையையும் ஒன்றாகக் கூட்டுங்கள்: எப்பேர்ப்பட்ட மதிமயக்குகிற பிரமாண்டமான மகிமை! யார் அதை ஆழங்காண முடியும், அதை விடக் குறைவாக, யார் அதை வார்த்தைகளில் எடுத்துரைக்க இயலும்? இப்போது இந்த மகிமையை மாமரியின் மகிமையோடு ஒப்பிட்டுப் பார்ப்போம்: விளைவு என்ன? மாமரி தன் தாயின் உதரத்தில் அமல உற்பவியாகக் கருத்தரிக்கப்பட்ட அடுத்த கணமே இறந்திருந்தார்கள் என்றாலும் கூட, நாம் எண்பித்துள்ளது போல, பரலோகத்தில் அவர்களுடைய மகிமை சகல சம்மனசுக்கள் மற்றும் அர்ச்சியசிஷ்டவர்களின் ஒட்டுமொத்த மகிமைக்கும் மேலானதாக இருந்திருக்கும்; மாமரியின் தேவ இஷ்டப்பிரசாதம், அவர்களுடைய உற்பவத்தின் முதல் கணத்திலேயே, சகல சம்மனசுக் களுடையவும், புனிதர்களுடையவும் இஷ்டப்பிரசாதத்தை விட மேலாகதாக இருந்தது.

இத்துடன் தன் வாழ்நாள் முழுவதும் அவர்கள் சம்பாதித்த, எல்லாவற்றையும் மூழ்கடித்து விடுகிற வரப்பிரசாதத்தின் அளவையும் அவர்கள் அதைச் சம்பாதித்த அளவின்படி, சேருங்கள்! இந்தப் புத்தகத்தில் நாம் எண்பித்துள்ளது போல், அவர்களுடைய வாழ்வின் இரண்டாவது கணத்தில் அவர்களுடைய வரப்பிரசாதம் இரட்டிப்பானது, மூன்றாவதில் அது நான்கு மடங்கானது, நான்காவது கணத்தில் எட்டு மடங்காகவும், ஐந்தாவது கணத்தில் பதினாறு மடங்காகவும், இப்படி அவர்கள் வாழ்ந்த எழுபத்திரண்டு வருடங்களின் எல்லாக் கணங்களிலும், உறக்கத்திலும் கூட பேறுபலனைச் சம்பாதிப்பதில் எந்தத் தடையுமின்றி, அவர்களது வரப்பிரசாதம் பெருகிக்கொண்டே போனது. அப்படியிருக்க, இத்தகைய பேறுபலனுக்கு சம்பாவனையாக மாமரியின் மிகப் பிரமாண்டமான, கற்பனைக்கெட்டாத மகிமையின் ஆழத்தை எந்த மனிதனும் அளக்க முயன்று தோற்றுப் போவானாக! அவர்கள் ஒரு தனி மோட்சமாக, ஒரு தனி வகையான மோட்சமாக, இன்பங்களின் தோட்டமாக, ஈடிணையற்றவர்களாக இருக்கிறார்கள்!

ஆனால் இதெல்லாம் அவர்களுடைய சாதாரண பேறுபலனாக இருந்தது; அவர்கள் வரப்பிரசாத அதிகரிப்பைச் சம்பாதித்த அசாதாரண சந்தர்ப்பங்களை நாம் எண்பித்திருக்கிறோம், நம் பலத்துக்கு உட்பட்ட அளவில் அதைத் தீர்மானித்திருக்கிறோம்; இந்த வரப்பிரசாத அதிகரிப்பின் தீவிரம் அதை அவர்களுக்குத் தந்தருளியவருக்கு மட்டுமே தெரிந்ததாக இருக்கிறது. இந்த சந்தர்ப்பங்கள் மங்கள வார்த்தை நாள், அவர்கள் தன்னுடைய சம்மதத்தைத் தந்த கணம், நித்திய வார்த்தையானவர் அவர்களது மாசற்ற திருவுதரத்தில் கருத்தரிக்கப்பட்ட கணம், அவர்களுடைய கன்னிமையாகிய அடைபட்ட மடத்திலிருந்து அவர் பிறந்த கணம், அவர்கள் அவருக்குப் பணிவிடை செய்த எல்லா நேரங்கள், விருத்த சேதன நேரம், தேவபாலன் கோவிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுக்கப்பட்ட கணம், இறுதியாக, இந்த எல்லாப் பரம இரகசியங் களையும் பாரதூரமான விதத்தில் விஞ்சி நிற்கிற திருப்பாடுகளின் மூன்று நாட்கள் மற்றும் மரண அவஸ்தையின் மூன்று மணி நேரம்!

இத்தகையதொரு வரப்பிரசாதத்தை ஆழங்காண எந்த மனித அல்லது சம்மனசுக்குரிய புத்தியாலும் இயலாது. இதன் காரணமாக, எந்த ஒரு மனித அல்லது சம்மனசுக்குரிய புத்தியாலும் அவர்களது மகிமையை ஆழங்காண இயலாது.

ஒரே வார்த்தையில் கூறுவதானால், மாமரியின் மகிமை சேசுக் கிறீஸ்துநாதருடைய மனுஷீகத்தின் மகிமைக்கு அடுத்ததாக இருக்கிறது; சேசுக்கிறீஸ்துநாதரின் அதியற்புதமான ஆன்மாவோடு அன்றி, வேறு எந்த ஒப்புமையையும் அது தாங்கிக்கொள்ள இயலாது.

ஆகவே, ஒரே ஒரு மடங்கு மகிமை கூட பாக்கியவான்களின் ஆத்துமம் கடவுளின் சாராம்சத்தையும், இலட்சணங்களையும், கடவுளின் ஜீவியத்தின் அளவற்ற பரம இரகசியத்தையும், தமத்திரித்துவமாகிய மகா மேன்மையுள்ள பரம இரகசியத்தையும் காணச் செய்யும் அளவுக்கும், அழகு, வசீகரம் மற்றும் உத்தம தனத்தின் அளவற்ற பிரதேசங்களைக் காணச் செய்யும் அளவுக்கும், அளவற்ற சாத்தியக்கூறுகளின் முடிவில்லாத இராச்சியங்களையும், கடவுளின் எல்லா வேலைகளினுடையவும் காரணத்தையும் இயல் பையும், மனிதாவதாரம் மற்றும் இரட்சணியத்தின் தன்மையையும், வரப்பிரசாதம் மற்றும் மகிமையின் தன்மையையும் காணச் செய்யும் அளவுக்கும் மிகப் பெரியதும், மிகப் பிரகாசமானதும், மிகப் பரிசுத்த மானதும், மிகவும் கண்கூசச் செய்வதுமான ஒரு பேரொளியால் நிரம்பி வழியச் செய்யுமானால், இத்தகைய மகிமையின் ஒரே ஒரு அளவீடு, பங்கெடுத்தலின் மூலம் ஆத்துமத்தை மற்றொரு கடவுளாகவும், தமத்திரித்துவத்தின் உயிருள்ள பிம்பமாகவும் ஆக்கும் அளவுக்கு அதைக் கடவுளாகவே மறுரூபமடையச் செய்யும் என்றால், இத்தகைய மகிமையின் ஒரே ஒரு அளவீடும் கூட ஆத்துமத்தை அளவற்ற ஜீவியத்தால் நிரப்பி, அதை விரிவடையச் செய்து, அதை வளர்ச்சி பெறச் செய்து, அதை அக்களிக்கச் செய்து, கடவுளின் பேரின்பத்தின், அவருடைய சொந்த இன்பங்களின் பானத்தை அது பருகச் செய்கிறது என்றால், மாமரியின் காட்சி எப்பேர்ப்பட் காட்சியாக இருக்க வேண்டும்! அவர்களுடைய மகிமையின் ஒளி எத்தகைய மாசற்றதனத்தை, எப்பேர்ப்பட்ட தீவிரத்தன்மையைக் கொண்டதாக இருந்திருக்க வேண்டும்! அது எத்தகைய அறிவின் பிரதேசங்களை அவர்களுடைய கண்களுக்கு முன்பாக வெளிப்படுத்தியிருக்க வேண்டும்! எத்தகைய பேரழகு களின் ஆVங்கள் அவர்களுடைய மனதில் மின்னலாக வெட்டியிருக்க வேண்டும்! எப்பேர்ப்பட்ட உத்தமதனத்தின் பாதாளங்கள் அவர்களுடைய பார்வைக்கு முன்பாகத் திறந்திருக்க வேண்டும்! கடவுளோடு அவர்களுடைய ஐக்கியம் எவ்வளவு நெருக்கமானதாக, எவ்வளவு அந்நியோந்நியமானதாக இருந்திருக்க வேண்டும்! கடவுளின் ஏகத்துவம் மற்றும் திரித்துவத்தின் எப்பேர்ப்பட்ட ஒரு காட்சி அவர்களுடைய ஆத்துமத்தின்மீது வரையப்பட்டிருக்க வேண்டும்!

சூரியனின் பேரொளியால் அபரிமிதமான நிறைக்கப்பட்டு, ஒரு சிறிய சூரியனாக ஆகும் ஒரு கண்ணாடித் துண்டு, மாமரி கண்டு தியானித்துக் கொண்டிருந்த அந்த அளவற்ற மாதிரிகையின் எப்பேர்ப்பட்ட அற்புதமான ஒத்த தன்மையை அவர்களுடைய ஆத்துமத்தில் உண்டாக்கியிருக்க வேண்டும் என்பதற்கான ஒரு பரிதாபமான பிம்பமாக, ஒரு மிக இலேசான குறிப்பாக இருக்கிறது. 

முற்றிலும் ஒப்பற்றதாகிய ஒரு முறையில் மாமரிக்குத் தரப்பட்ட அளவற்ற வாழ்வின் அழுத்தத்தின் கீழ், எப்போதும், எல்லாக் காலங் களிலும், நித்தியத்திலிருந்தே சகல சிருஷ்டிகளிடமிருந்தும் தனியாகப் பிரித்து வைத்த ஒருநேசத்தின் எல்லாக் கடுமையோடும், விசையோடும், சர்வ வல்லப ஆற்றலோடும் அவர்கள் மீது வந்து மோதிய அளவற்ற பேரின்பத்தின் நீரோடைகளின் கீழ், மாமரியின் ஆத்துமம் எப்படி விரிவடைந்திருக்க வேண்டும்! நித்தியத்திலிருந்தே தான் தேர்ந்துகொண்ட மணவாளியாகிய அவர்களை நித்திய பிதாவானவர் எவ்வளவு அதிகமாக மகிழ்ச்சியடையச் செய்திருக்க வேண்டும்! தாம் தம்முடைய உள்ளரங்கத்தில் நித்தியமாகப் பெற்றெடுக்கிற அதே திருச்சுதனானவரைக் கருத்தரித்து அவரைப் பெற்றெடுப்பதில் அவர் மாமரியோடு எவ்வளவு அதிகமாக ஒத்துழைத்திருக்க வேண்டும்! தம்முடைய திவ்ய தாயாராகத் தேர்ந்துகொண்டவர்களை நித்திய சுதனும், தம்முடைய நேசத்திற் குரிய கூடாரமாகத் தாம் தேர்ந்து கொண்டவர்களைப் பரிசுத்த ஆவியானவரும் எவ்வளவு அதிகமாக மகிழ்வித்திருக்க வேண்டும்! மாமரியின் மகிமையின் சலுகை இதில்தான் அடங்கியுள்ளது. மற்ற புனிதர்கள் தமத்திரித்துவத்தில் அடங்கியுள்ள கடவுளின் வாழ்வைக் கண்டுதியானிக்கிறார்கள்; மனிதாவதாரம், மனித இரட்சணியம், வரப்பிரசாதம், திருச்சபை மற்றும் உலகமாகிய கடவுளின் கைவேலைகளை அவர்கள் கண்டுதியானிக்கிறார்கள். மாமரியும் அவற்றையே கண்டுதியானிக்கிறார்கள் என்றாலும் வேறுபட்ட ஒரு முறையில் அவற்றைக் கண்டுதியானிக்கிறார்கள். கடவுளின் அற்புதமான, மிக ஆழ்ந்த நன்மைத்தனத்தால் உயர்த்தப்பட்டு, தன் வாழ்வை உருவாக்குகிற அதே உறவுகளால் எழுப்பப்பட்டு, அவற்றோடு ஒன்றிணைக்கப்பட்ட ஒருவராக அவர்கள் அவற்றைக் கண்டுதியானிக்கிறார்கள்; அவர்கள் அவருடைய வேலைகளையும், அவற்றுடன், அவற்றை நிறைவேற்றுவதில் தன்னுடைய பங்கைச் செய்த தன்னுடைய சம்மதத்தையும் கண்டுதியானிக்கிறார்கள். அவர்கள் தேவ-மனிதராகிய சேசுக்கிறீஸ்துநாதருக்கு அடுத்து, தன்னையே கடவுளுக்கும் மனிதருக்குமிடையிலான மத்திய ஸ்தானமாகவும், மிக அபரிமிதமான, நிரம்பி வழிகிற அளவில் கடவுளல்லாத அனைத்தையும் விட மேம்பட்டிருக்கிற மகிமையைக் கொடையாகப் பெற்றுள்ளவர்களாகவும் கண்டு தியானிக்கிறார்கள்.

ஆனால் ஒருவனைத் தடுமாற வைக்கக் கூடிய காரியங்களைப் பற்றித் தொடர்ந்து பேசுவது வீணானதாகவே இருக்கும். மாமரியின் மகிமையின் அற்புதமானதும், முற்றிலும் ஒப்பற்றதுமான அபரிமிதமான அளவை ஆழங்காணும் வேலையை, ஆழமாகப் பகுத்துணரக்கூடிய நம் வாசகர்களின் அறிவிடமே நாம் விட்டு விடுவோம்.

மாமரியின் ஒப்பற்ற மகிமையிலிருந்து வருகிற விளைவுகளில் ஒன்றை, அதாவது மாமரி பரலோக பூலோக இராக்கினியாக இருக்கிறார்கள் என்ற சததியத்தைச் சுட்டிக் காட்டுவதன் மூலம் இந்த அத்தியாயத்தை நாம் முடிப்போம்.

முதலாவது தனது சங்கையில் அவர்கள் இராக்கினியாக இருக் கிறார்கள். கடவுளின் திருமாதாவாகவும், கடவுளின் வெளியரங்கச் செயல்களின் மத்தியஸ்தியாகவும், மனுக்குலத்தின் இணை இரட்சகியாகவும், சுபாவக் கொடைகளில் மனித சிருஷ்டிகள் அனைவரிலும் அதிக உத்தமமானவர்களும், வரப்பிரசாதச் சலுகைகளில் சகல சிருஷ்டிகளிலும் பூரண உத்தமமானவர்களும், மகிமையில் சகல சிருஷ்டிகளிலும் அதிக மகிழ்ச்சியானவர்களுமாக இருப்பதால், அவர்கள் சகல சிருஷ்டிக்கப்பட்ட புத்தியுள்ள ஜீவியர்களுக்கும் மேலாக பாரதூரமான அளவுள்ள ஒரு சங்கை மரியாதைக்குத் தகுதி யுள்ளவர்களாக இருக்கிறார்கள், ஏனெனில் அவர்கள் அவர்கள் எல்லோருக்கும் மேலாக உயர்ந்து நிற்கிறார்கள், ஆகவே, சங்கை வணக்கத்தில் அவர்கள் அரசியாக இருக்கிறார்கள்.

முதலில், தன்னுடைய அதியற்புதமான அர்ச்சியசிஷ்டதனத்தின் காரணமாக, அவர்கள் வல்லமையில் இராக்கினியாக இருக் கிறார்கள். அது சிருஷ்டியைக் கடவுளின் நேசத்திற்கும் பிரியத் திற்கும் உரியதாக ஆக்குகிறது என்பதால், அது கடவுளிடம் ஒரு சிருஷ்டியை வல்லமையுள்ளதாக ஆக்குகிற அர்ச்சியசிஷ்டதனமாக இருக்கிறது. அர்ச்சியசிஷ்டவர்களின் வல்லமையின் காரணம் இதில் அடங்கியிருக்கிறது. அவர்கள் கடவுளின் நண்பர்களாகவும், அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகவும், அவருடைய திரு இருதயத் திற்குப் பிரியமானவர்களாகவும், ஆகையால் அவரிடத்தில் வல்லமையுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். அர்ச்சியசிஷ்டவர்கள் அனைவரிலும் மாமரியின் அளவுக்குக் கடவுளின் பிரியத்துக்குரிய வர்கள் வேறு யார்? அர்ச்சியசிஷ்டதனத்தின் கோபுரத்தைப் போல இவ்வளவு அதிகமான நேசத்திற்குரியவர்கள் வேறு யார் இருக் கிறார்கள்? கடவுளின் நன்மைத்தனத்தின் இந்த அற்புதத்தை விட அவரோடு அதிக அந்நியோந்நியமானவர்கள் யார்?

வல்லமையைத் தருவது தாழ்ச்சியே. விசித்திரம்தான் என்றாலும், படைப்பின் தாழ்மையும், அது தன்னையே கீழ்ப்படுத்திக் கொள் வதும்தான் கடவுளிடம் அதற்கு வல்லமையைத் தருகிறது. ‘‘கும் இன்ஃபிர்மோர் தூனே பொத்தென்ஸ் சும். தேயுஸ் சூப்பர்பிஸ் ரெசிஸ்தித், ஹூமிலிபுஸ் ஆவ்த்தெம் தாத் க்ராத்ஸியாம்.'' அர்ச்சிய சிஷ்டவர்கள் மற்றும் சம்மனசுக்களின் சபைகளில் மாமரியை விட அதிகத் தாழ்ச்சியுள்ளவர்கள் யார்? கடவுள் தன்னை எந்த அளவுக்கு மகத்துவத்திலும், மகிமையிலும் உயர்த்தியிருக்கிறாரோ, அந்த அளவுக்குத் தன்னுடைய ஒன்றுமில்லாமையின் பாதாளத்திற்குள் அமிழ்த்தப்பட்டவர்களாகவே நிலைத்திருக்க மாமரியை விட அதிகக் கவலையுள்ளவர்கள் யார்? ஆகையால், மாமரியை விட அவரிடம் அதிக வல்லமையுள்ளவர்கள் வேறு யார்?

பரலோகத்திலும் பூலோகத்திலும் யாருக்கு சகல அதிகாரமும் வழங்கப்பட்டிருக்கிறதோ, அவருடைய தாயாராக அவர்கள் இருக்கிறார்கள்; முன்பு சாலமோனின் தாய் தன் மகனின் வலது பக்கத்தில் அமர்ந்திருந்து, அவரிடமிருந்து எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ளக் கூடியவளாக இருந்தது போலவும், தமது தாய்க்குத் தாம் எதையும் மறுக்க முடியாது என்று அவர் உணர்ந்தது போலவும், சேசுநாதரின் அதியற்புதத் திருமாதா அவருடைய வலது பக்கத்தில் வீற்றிருந்து, அவருடைய சர்வ வல்லபத்தையும் அவரது அளவற்ற பேறுபலன்களையும் மனுக்குலத்தின் சார்பாக, தானே எடுத்துப் பயன்படுத்த வல்லவர்களாக இருக்கிறார்கள்.

தம்முடைய சீடன் என்பதற்காக ஒரு சீடனுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவனும் கூட அதற்குரிய சம்பாவனையை இழந்து போக மாட்டான் என்று அவதரித்த ஞானமானவரால் சொல்லப் பட்டுள்ளது. அப்படியிருக்க, பிதாவின் நித்திய வார்த்தையானவரை மனித சுபாவத்தால் உடுத்தியதற்காகவும், ஒன்பது மாதங்கள் தன்னுடைய மாசற்ற திருவுதரத்தில் அவரைச் சுமந்திருந்ததற் காகவும், தனது கன்னிமையுள்ள மாசற்றதனத்தின் நறுமணமுள்ள லீலிகளுக்கு மத்தியில் அவரை வளர்த்ததற்காகவும், தான் சொந்தப் பொருண்மையைக் கொண்டு அவரைப் போஷித்ததற்காகவும், தனக்கு மட்டுமே உரியதாகிய ஒரு தனிப்பட்ட பக்தியோடு முப்பது வருடங்களாக அவருக்குப் பணிவிடை செய்துவந்ததற்காகவும் மாமரி பெற்றுக்கொண்ட சம்பாவனை எப்பேர்ப்பட்டதாக இருக்கும்! அவரைத் தாங்கிய தன்னுடைய திருவுதரத்தையும், அவர் பாலுண்ட கொங்கைகளையும் மாமரி அவருக்குச் சுட்டிக் காட்டு வார்கள் என்றால், தம்முடைய வல்லமையை அவர்களோடு பகிர்ந்து கொள்ள அவர் எப்படி மறுக்க முடியும்?

மாமரி படைப்பு, இரட்சணியம், வரப்பிரசாதம், மகிமை ஆகியவற்றின் கருவி சார்ந்த காரணமாக இருக்கிறார்கள். அவர்கள் தன்னுடைய சம்மதத்தைத் தந்திருக்காவிட்டால், இந்தக் காரியங்கள் ஒருபோதும் நிகழ்ந்தேயிருக்காது. ஆகவே, சகல சம்மனசுக்களும் தங்கள் சிருஷ்டிப்புக்கும், தங்கள் பக்திக்குரிய அந்தஸ்திற்கும் மாமரிக்குக் கடன்பட்டிருக்கிறார்கள். சகல மனிதர்களும் தங்கள் படைப்பிற்காகவும், தங்கள் மீட்பிற்காகவும், தங்களை அர்ச்சிக்கும் வரப்பிரசாதத்திற்காகவும், தங்களை நிலையாயிருக்கச் செய்கிற வரப்பிரசாதத்திற்காகவும், தங்களை மகிமைப்படுத்துகிற வரப்பிர சாதத்திற்காகவும் மாமரிக்குக் கடன்பட்டிருக்கிறார்கள்.

அப்படியிருக்க, அவர்கள் உன்னதமான வல்லமைக்கு உரிமை யுள்ள, கடவுளின் சகல வெளிச் செயல்களிலும் கருவி சார்ந்த காரணமாக இல்லையா?

ஆகவே, அவர்கள் சம்மனசுக்களின் இராக்கினியாகவும், பிதாப் பிதாக்களின் இராக்கினியாகவும், தீர்க்கதரிசிகளின் இராக்கினி யாகவும், அப்போஸ்தலர்களின் இராக்கினியாகவும், வேதசாட்சி களின் இராக்கினியாகவும், கன்னியர்களின் இராக்கினியாகவும், ஸ்துதியர்களின் இராக்கினியாகவும். மகிமையுள்ள பரலோக பூலோக இராக்கினியாகவும் இருப்பதில் அதிசயமேதும் இல்லை.