இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஆசீர்வதிக்கப்பட்டவர்களின் சித்தமும், நேசமும், சந்தோஷமும்

அறிவுதான் தனிமனித வாழ்வின் முதல் அம்சமாக இருக்கிறது, ஆனால் அது ஒரே ஒரு அம்சம் அல்ல. சத்தியம் புத்திக்குத் தன்னைக் காட்டியவுடன், ஆத்துமத்தில், அறியப்பட்ட சத்தியம் முழுவதையும் அணைத்துக் கொள்ளவும், அதைச் சொந்தமாக்கிக்கொண்டு அனுபவித்து மகிழவும் தூண்டுகிற ஒரு மிகுந்த மேன்மையுள்ள நாட்டம் எழுகிறது. தேவ ஆவியானவரின் சாராம்சத்திலிருந்து வருகிற தன்னுடைய எழுச்சியில் முதலில் தன்னை அவசியமான தாகவும், பொதுவானதாகவும், குழப்பமானதாகவும் காட்டிக் கொள் கிற இந்த நாட்டம் அல்லது அடிப்படையான பிரியம், அறிவு விரிவாக்கப்பட்டு அதிகரிக்கப்படும் அளவுக்கு ஏற்றபடி, பல்வேறான வஸ்துக்களில் குவிக்கப்படுவதன் மூலம் படிப்படியாக வளர்ச்சி பெற்று, உண்மைத்தன்மையை அடைகிறது. அதிலிருந்து விசேஷ மான பல்வேறு நாட்டங்கள் பெறப்படுகின்றன, இவை எவற்றை நோக்கி முன்னே செல்கின்றனவோ, அந்த நன்மைகளின் வகைகளின் எண்ணிக்கைக்கு ஒத்தபடி பல வகைகளாகப் பிரிக்கப் படுகின்றன.

இவற்றில் முதலாவது, சுபாவத்திற்கு மேலான நாட்டமாகும். அது விசுவாசத்தைக் கொண்டு பூமியின் மீது தொடங்குகிறது, பரலோகத்தில் தேவ காட்சியால் பூரணப்படுத்தப்படுகிறது. பரலோகவாசி தன் அறிவுசார்ந்த உத்தமதனத்தின் பூரணத்துவத்தை அடைந்த கணத்திலேயே அவனுடைய இருதயத்தின் இயக்கங்கள் உயர்த்தப்படுகின்றன, அவனுடைய நாட்டங்கள் மாற்றியமைக்கப் படுகின்றன, அவனுடைய ஆசைகளும் நம்பிக்கைகளும் நிறை வேற்றப்பட்டு, அமைதிப்படுத்தப்படுகின்றன. எந்த விதமான நிழலோ, தப்பறையோ இன்றி, தன்னுடைய சாராம்சத்தின் சாட்சி யத்தில் அறிந்துகொள்ளப்படுகிற சத்தியம் ஆத்துமத்தின் உன்னதமான, இறுதி நன்மையாகவும், அதன் நாட்டங்களின் முடிவாகவும், அதன் விருப்பங்களின் மையமாகவும் இருக்கிறது. அது தன்னுடைய சக்திகளின் முழு உத்வேகத்தோடும், தன்னுடைய ஆசாபாசங்களின் முழு உயிர்த் துடிப்போடும் இந்த நன்மைத் தனத்தை நோக்கி முன்னேறிச் செல்கிறது; அதை அரவணைத்துக் கொண்டு, தன்னுடைய இருதயத்தோடு அதை அழுத்தி வைத்துக் கொண்டு, அதன் உத்தம தனத்தில், அதன் உத்தமதனத்தின் பாதாளத்திலும், அதன் மிகப் பெரும் மகிமையிலும் மூழ்கி, தன்னையே இழந்து போகிறது.

இந்த தேவகாட்சியைப் பெற்றுக்கொண்டதன் விளைவாக, இந்த அளவற்ற நன்மைத்தனத்தால் பற்றிக்கொள்ளப்பட்டதும், ஊடுருவப்பட்டதும், நிரப்பப்பட்டதுமான கிறீஸ்தவனின் சுபாவத் திற்கு மேலான சித்தம் தன் எல்லா ஏக்கங்களாலும் நிரப்பப்பட்ட தாகவும், தன் அமைதியற்ற நிலைகள் அனைத்திலும் திருப்திப் படுத்தப்பட்டதாகவும், தனது பல்வேறு, அளவற்ற ஆசைகளில் அமைதிப்படுத்தப்பட்டதாகவும், தனது வல்லமையின் சிகரத்திற்கே உயர்த்தப்படுகிறது. 

தன் இவ்வுலக வளர்ச்சியின் காலத்தில் பெருமூச்சு விட்டபடி தான் எப்போதும் தேடிக்கொண்டிருந்த இந்தக் கடைசி நன்மை, இப்போது தன்னுடைய சொந்த அளவற்ற சாராம்சத்தில் இருப்பதை அது காண்கிறது, தன்னுடைய அந்நியோந்நிய வாழ்வில் அதைக் காண்கிறது, அதைச் சொந்தமாகக் கொண்டிருக்கிறது, அதை விட மேலாக, அதனால் இது முழுமையாகவும், நேரடியாகவும், மிக அபரிமிதமாகவும் சுதந்தரிக்கப்பட்டிருக்கிறது. தனக்கென அது ஆசிக்கக் கூடிய பெரியதும், பக்திக்குரியதும், மகத்துவமுள்ளதும், அற்புதமானதுமாகிய அனைத்தையும் இப்போது தமத்திரித் துவத்தில் ஆழங்காண முடியாத, உத்தமமான, அளவற்ற முறையில் அது சுதந்தரித்திருக்கிறது. அவர் அவற்றை ஆசீர்வதிக்கப்பட்ட ஆத்துமத்திற்கு நேரடியாக அவற்றைத் தந்து, அவற்றின் மிகப் பெரும் மகிழ்ச்சிகளுக்கு அதை உயர்த்துகிறார், தங்கள் இன்பங்களின் தாரை களுக்கு அதைச் சுமந்து செல்கிறார். சிந்தனைகள், நாட்டங்கள், நேசம் ஆகியவற்றின் ஒரு வாக்குக்கெட்டாத ஐக்கியம் அவற் றினிடையே உண்டாக்கப்படும்; இனிமையானதும், அந்நியோந்நியமானதுமான ஒரு நட்பு அவற்றினிடையே முத்திரை யிடப்படும், ஆத்துமத்தின் அனைத்து சத்துவங்களிலும் பொங்கிப் பெருகும் பக்திக்குரிய மகிழ்ச்சி, அந்த பரிபூரண திருப்தி அதன் விளைவாக இருக்கிறது.

இருதயத்தின் வாழ்வும் உத்தமதனமும் நேசத்தில், அதுவும் மேன்மை மிக்கதும், ஒழுக்கம் சார்ந்ததும், கண்ணியமானதுமான நேசத்தில் அடங்கியுள்ளது என்பதை ஒருவன் சிந்திக்கும்போது, இது அதிக எளிதாகப் புரிந்துகொள்ளப்படும். இந்தத் தெய்வீக நேசத்தின் சாராம்சம், நேசிக்கப்படுபவருக்கு நல்லதையே விரும்புவதிலும், அதன் உத்தமமான இலட்சணங்களில் இன்பமும் திருப்தியும் காண்பதிலும், நேசிக்கப்படுபவர் அவற்றை உயர்வாகவும், மேலான விதத்திலும், முடிந்த வரை உன்னதமான முறையிலும் சொந்தமாகக் கொண்டிருப்பது பற்றி அக்களிப்பதிலும் அடங்கியிருக்கிறது. இதைப் பற்றிக் கண்டிப்பான முறையில் பேசும்போது, நண்பன் தன்னையல்லாமல் தன் நண்பனைப் பற்றியே சிந்திக்கிறான்; நண்பனின் தற்போதைய நன்மையில் அக்களிக் கிறான், நண்பனால் அனுபவிக்கப்படும் மகிழ்ச்சியைத் தன்னுடைய தாகவே மதிக்கிறான். நேசத்தின் இந்தத் தீவிரமான குணம் இருத்தலின் சாராம்சத்தில் இருந்தும், ஒழுங்கில் இருந்தும், நல்லொழுக்க விதியின் சாராம்சத்தில் இருந்தும் வருகிறது. எல்லாவற்றிற்கும் முன்பாகவும், எல்லாவற்றிற்கும் மேலாகவும், நன்மையின் உள்ளரங்க மகத்துவத்தின் காரணமாக, அந்த நன்மை யிலும், அந்த நன்மையாலும், அந்த நன்மையையே நாம் கருத்தில் கொண்டிருப்பது அதற்குத் தேவையாயிருக்கிறது. இதிலிருந்து சித்தத்தினுடையவும் நேசத்தினுடையவும் உத்தமதனமும், நல்லிணக்கமும், முழுமையும், நன்மையை அரவணைத்துக் கொள் வதிலும், அதன் தனிப்பட்ட குணாதிசயத்திற்கு ஏற்றபடி தன் சுயத்தை மாற்றியமைத்துக் கொள்வதிலும், அது தன் நேரடி மகத் துவத்தில் இருந்தபடியே இருக்க விரும்புவதிலும் அடங்கி யிருக்கிறது என்பது தெளிவாகிறது. ஆகவே, பரலோகவாசியின் சித்தத்தின் நிறைவும், அதன் முழுமையான, நிறைவான திருப்தியும் தேவ ஆட்களின் உன்னத நன்மைத்தனத்தை ஒப்புக்கொள்வதிலும், அதை நேசிப்பதிலும், அவர்கள் அதை மாறாத விதத்திலும், நித்தியமாகவும், அளவற்ற விதமாகவும், அபரிமிதமாகவும் சொந்த மாகக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றி மிகுந்த திருப்தி யடைவதிலும் அடங்கியிருக்கிறது.