இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தேவ காட்சி நீட்டிக்கப்படுதல்

பூமியில் அறிவினுடையவும், விசுவாசத்தினுடையவும் நோக் கத்தை உருவாக்குகிற பகுத்தறிவு சார்ந்தவையும், வெளிப்படுத்தப் பட்டவையுமான சத்தியங்கள், பரலோகத்தில் பாக்கியவான்களின் நேரடிக் காட்சிப் பொருட்களாக இருக்கும்.

பாக்கியவான்கள் முகமுகமாய்த் தரிசிக்கிற தெய்வீக சாராம்சமே உன்னதப் பொருளாகவும், அவர்களுடைய மனதின் புத்திக்கெட்டும் வடிவமாகவும் இருக்கும்; கடவுளுக்கு உள்ளேயும் வெளியேயும், சாராம்சத்தின் சகல செயல்பாடுகளுக்கும் தன்னை விஸ்தரிக்கிற இந்த புத்திக்கெட்டக்கூடிய தெய்வீகத்தன்மை, கடவுளுடையவும், படைப்பினுடையவும் ஜீவியம் முழுவதையும் புத்திக்கெட்டக் கூடியதாக ஆக்கும்.

மேலும் முதலாவதாக, வாக்குக்கெட்டாத பரிசுத்த தமத்திரித் துவமே தேவ காட்சியின் முதன்மையான பொருளாகவும், அதன் உன்னதமான, அத்தியாவசியப் பொருளாகவும் இருக்கும். இந்த மகா பரிசுத்த தமத்திரித்துவம், பரலோகப் பாக்கியவான்களின் மனதைப் பகற்றிக்கொண்டு, தன்னுடைய தெய்வீக ஒளியில் அதை ஊறச் செய்து,, தனது அளவற்றதும், மிகப் பெரியதுமான மகிமையொளி யால் அதை நிரப்பும். இந்த சுபாவத்திற்கு மேலான, முடிவில்லாத வெளிப்படுத்தலில் தேவ சாராம்சம் தனது உள்ளரங்க ஜீவியத்தின் ஸ்திரத்தன்மையிலும், தனது மும்மடங்கான உட்பொருண்மையின் ஆதிகாரண ஜீவதன்மையில், பெரியவையும் அளவற்றவையுமான உள்ளரங்கச் செயல்பாடுகளிலும் தன்னைக் காட்டும். இந் உள்ளரங்கச் செயல்பாடுகள் தமத்திரித்துவத்தின் உள்ளரங்க இயக்கத்தையும், தேவ சுதனுடையவும், தேவ ஆவியானவருடை யவும் நித்தியப் பிறப்பித்தலில் அதன் அளவற்ற உள்ளரங்க வளப் படுத்துதலையும் அறிக்கையிடும். தம்மிலும் தம்மாலும் இருக்கிறவ ராகிய பிதாவானவர் தேவ காட்சியின் முதல் பொருளாகவும், பரலோகப் பேரின்பக் கண்டுணர்தலின் ஊற்றாகவும் இருப்பார். அவர் தமது சொந்த பிறப்பிக்கும் வல்லமையின் வழியாக, உள்ளரங்க மாகத் தம்மையே பரவச் செய்து, தாம் எந்தச் சிந்தனை சார்ந்த செயல்பாட்டால் மற்ற இரு தேவ ஆட்களையும் பிறப்பிக்கிறாரோ அதே செயல்பாட்டைக் கொண்டு மற்ற இருவரையும் கண்டுணரக் கூடியவர்களாக்குவார். பரலோகப் பாக்கியவான்கள் அவரிட மிருந்து தொடங்கி, இந்த சிந்தனை சார்ந்த செயல்பாடுகளின் ஜீவ தன்மையின் வழியாக சுதனுடைய ஜெனித்தலையும், பரிசுத்த ஆவியானவரின் புறப்படுதலையும், இந்தப் பிறப்பித்தல்களில் வெளியரங்க (சிருஷ்டிகளின்) பிறப்பித்தலையும் பற்றிக் கற்றறிந்து கொள்வார்கள். பரலோகவாசிகள் ஜெனிப்பித்தலில் அளவற்றவரின் அளவற்றவருக்குத் தம்மை நித்தியமாகவும், அளவற்ற விதமாகவும் வெளிப்படுத்துவதையும், அளவற்றவரின் வெளியரங்கமான, அளவுக்குட்பட்ட வெளிப்பாட்டின் ஆதிகாரணமும், அடிப்படை யுமானது, அளவுக்குட்பட்டதற்கு வெளிப்படுத்தப்படுவதையும் காண்பார்கள்; ஆவியானவரின் புறப்படுதலில் அவர்கள் அளவற் றதற்கும் அளவுக்கு உட்பட்டதற்கும் இடையிலான ஒவ்வொரு வெளியரங்க நேசப் பரிமாற்றத்தினுடையவும் ஊற்றும், ஆதாரமு மான (இஸ்பிரீத்துசாந்துவான) அளவற்றவருக்கும் (பிதாவாகிய), அளவற்றவருக்கும் இடையிலான சம அளவு நித்தியமான, அளவற்ற தொடர்பைக் கண்டு பிரமிப்பார்கள்.

ஒரே வார்த்தையில் கூறுவதானால், முதல் உள்ளரங்கப் புறப் படுதலில், அறிவு சார்ந்த ஜீவியமானது, தனது அளவற்ற வளப் படுத்தலில், பிரிவோ மாற்றமோ இல்லாமல், தனக்கென்று, புத்தி யுள்ள ஒரு வார்த்தையை, தன்னை ஜெனிப்பிக்கிற மூலாதாரத்தின் மகிமைப் பிரதாபமும், வெளிப்பாடும், பிரதிபிம்பமுமான ஓர் உயிருள்ள சிந்தனையை ஜெனிப்பிப்பதையும், இரண்டும் ஒன்றில் ஒன்று இருப்பதையும் ஒன்றையொன்று காண்பதையும் பாக்கியவான்கள் காண்பார்கள்.

இரண்டாவது புறப்பாட்டில், இந்த இரண்டு ஆட்களின் அளவற்றதாகிய தொடர்பை பாக்கியவான்கள் கண்டுதியானிப் பார்கள், இந்த இருவரும் தங்கள் அனைத்தையும் கடந்த மகிமை, சிநேகம் ஆகியவற்றின் பிரமாண்டத்தில், ஒருவரையொருவர் அணைத்து, மூன்றாவதான ஒருவரை உருவாக்குகிறார்கள், இவர் அவர்களுடைய பரஸ்பர சிநேகத்தின் தனிமைப்படுத்துதலாகவும், அவர்களுடைய பொது வாழ்வின் சுவாசமாகவும், பிதாவையும் சுதனையும் இணைக்கிற நேச வெள்ளத்தின் தீர்மானமான, உயிருள்ள வெளிப்பாடாகவும் இருக்கிறார். இந்த நேசத்தின் பெருவெள்ளம் வெறும் செயல்திறனின் தரத்தில் இருந்துகொள்ள இயலாமல், நேசத்தின் ஓர் அளவற்றதும், உன்னதமானதுமான செயலில் பிரத்தியேகப்படுத்தப்பட்டு, ஓர் உயிருள்ள ஆளுமையில் ஒரு நித்திய உள்ளிருத்தலால் ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளது. இவர் பிதாவினுடை யவும் சுதனுடையவும் பொருண்மை சார்ந்த நேசமாகவும், ஒரு பேச்சு முறைக்கு அவர்களுடைய உடைமையாகவும், அவர்களுடைய அளவற்ற பேரின்பமாகவும் இருக்கிறார். 

தேவ காட்சியின் முதன்மையானதும், சாராம்சமுள்ளதுமான பொருண்மை இதுவே; ஆனால் இது மட்டுமல்ல. தேவ சாராம்சம் உள்ளரங்கமாக மட்டுமின்றி வெளியரங்கமாகவும் பலனுள்ளதாக இருக்கிறது, அதன் வாழ்வு சிருஷ்டிக்கப்படாத ஆட்களின் நித்தியப் புறப்படுதலில் பிரத்தியேகப்படுத்தப்பட்டு முறைப்படுத்தப் பட்டிருப்பது மட்டுமின்றி, அது தன்னையே விட்டு வெளியே போய், ஒரு பேச்சு முறைக்கு, அளவுக்குட்பட்டவையாகிய எண்ணற்ற பொருண்மைகளில் தன்னை வெளிப்படுத்துகிறது. அவை தங்கள் இணக்கமுள்ள ஐக்கியத்தில் தெய்வீகத்தின் பெரியதும், அளவற்றது மான ஐக்கியத்தை மவுனமாகப் பின்பற்றுகின்றன.

இந்த வெளியரங்கப் பிறப்பிக்கும் வளமை தன் ஆள்தன்மையின் பொருண்மை சார்ந்த உள்ளரங்க அளவற்ற தன்மைக்குச் சமமானதாக ஆக முடியாது என்றால், ஒரு குறிப்பிட்ட விதத்தில் அதை அடைவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இதற்கான காரணம், அதன் மாதிரியின் இயல்பிலும், தெய்வீகச் செயல்பாட்டிலும் அடங்கியுள்ளது. அது சர்வ வல்லபமுள்ளதாகவும், சிருஷ்டிப்பில், மாதிரியின் அளவற்ற தன்மையை வெளிப்படுத்த விரும்புவதாகவும், தன் மன நாட்டத்தில் குழப்பமடைய விரும்பாததாகவும் இருந்து, தன் புறப் படைப்பு, ஒரே சுபாவத்தால் அல்லாமல், ஒரே ஆள் தன்மையால் தனது அக ஆளுமைகளுக்குச் சமமாயிருக்கும் ஓர் உள்ளரங்க மகத்துவத்திற்கு உயர்த்தப்படுவதை விரும்புகிறது. வெளியரங்க பிறப்பிக்கும் வளமையின் மேன்மையான நோக்கமும், சிருஷ்டிப்பின் மிகப் பெரும் பிரச்சினையும் இத்தகையதே.

இந்த இரண்டாவது பரம இரகசியத்தின் தீர்வையும் பாக்கியவான்கள் ஒரு தெளிவற்ற அறிவாலன்றி, ஒரு தெளிவானதும் நேரடியானதுமான அகத் தூண்டுதலால் காண்பார்கள்: தமத்திரித்துவத்தினுள் அடங்கியிருக்கும் பிதாவின் சிந்தனை, கடவுளின் உள்ளரங்க ஜீவியம், தன்னுடைய அளவற்ற, நித்திய வடிவத்தை இழக்காமலே, படைப்பிற்குள் வந்துள்ளது, அது தற்காலிகமானதாகவும், அழியக் கூடியதாகவும் ஆகியுள்ளது, அவர் மனித சுபாவத்தில் தம்முடைய மனிதாவதாரத்தால் அளவுக்குட்பட்டதை அளவுக்கு உட்படாத வல்லமைக்கு உயர்த்தியிருக்கிறார்; உலகத்தின் பொதுவான ஒரு புதுப்பித்தலைக் கொண்டு மற்ற எல்லா சிருஷ்டிகளையும் தம்முடைய அளவற்ற மகத்துவத்தில் சுபாவத்திற்கு மேலான முறையில் பங்கெடுக்கும் நிலைக்கு உயர்த்தியிருக்கிறார்.

ஆகவே,கிறீஸ்துநாதரின் நேரடிக் காட்சியும், அவருடைய உயர்த்துவதும் இரட்சிப்பதுமான செயல்பாட்டின் காட்சியும், சிருஷ்டிக்கப்பட்ட வாழ்வின் மேன்மையுள்ள ஜீவ தன்மையோடு கூடிய இணக்கம், ஐக்கியம் மற்றும் தொடர்பு ஆகிய தனது உறவுகளில் தெய்வீக வாழ்வின் மாபெரும் ஜீவ தன்மையைப் புரிந்து கொள்ளப் பரலோக பாக்கியம் பெற்ற ஆன்மாக்களுக்கு உதவும். தெய்வீகமும், மனுஷீகமுமான தமது இரட்டை சுபாவத்தில் கிறீஸ்துநாதருடைய அளவற்ற ஆள்தன்மையின் ஐக்கியமானது, இந்த பிரமாண்டமானதும், அற்புதமானதுமாகிய ஐக்கியம் மற்றும் இணக்கத்தின் மையமாக இருக்கும், அதுவே படைப்பின் மேன்மை மிக்க இரகசியங்களைத் திறக்கும் திறவுகோலாக இருக்கும், அளவற்ற தேவ மகத்துவம், எந்த முறையில் தனது குணங்கள் மற்றும் சுபாவத்தில் எந்த இழப்பும், குழப்பமும் நேராமலே, படைப்புக்கு ஊழியம் செய்யும் நிலைக்கும் கூட தன்னையே தாழ்த்திக் கொண்டு, படைப்பைத் தன் சொந்த உயரத்திற்கு உயர்த்தியது என்று அது விளக்கும். அளவற்றது தன்னையே படைப்புக்குச் சமமாக்குவதன் மூலம், படைப்பினுள் கலந்து, தானே எப்படி படைப்பின் உடைமையானது என்றும், அது தெய்வீக குணங்கள் மனித குணங்களாகவும், மனித ஆசாபாசங்கள் தெய்வீகமானவையாகவும் ஆகும் அளவுக்கு மனுஷீகத்தோடு ஐக்கியம் மற்றும் அந்நியோந் நியத்தின் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டது என்றும் அவர்கள் காண்பார்கள். மரபுகளின் ஒன்றிப்பு என்று வேத சாஸ்திரிகளால் அழைக்கப்படும் இந்த ஒன்றிப்பின் வழியாக, கடவுள் மனிதனானார், மனிதன் கடவுளானான் என்றும், கடவுள் மனுமகனாகவும், மனிதன் கடவுளின் மகனாகவும் ஆனார்கள் என்றும், கடவுள் மனிதனின் உண்மையான சகோதரராகவும், மனிதன் கடவுளின் உண்மையான சகோதரனாகவும் ஆனார்கள் என்றும், சர்வ வல்லபம் பலவீனமானது என்றும் பலவீனம் சர்வ வல்லபமானது என்றும் இதுபோன்ற பல காரியங்களை அவர்கள் அறிந்துகொள்வார்கள். ஒரு பேச்சு வகைக்கு குணங்கள் அல்லது பெயர்களின் உறவுகளின் இந்த மாற்றம் அல்லது பரிமாற்றம் பரலோகவாசிகளால் தெளிவாகக் காணப்படும், அதன் வழியாக, படைப்பின் மாபெரும் பரம இரகசியம் வெளியாக்கப் படும். 

ஆனால் கிறீஸ்துநாதரில் உலகம் புதுப்பிக்கப்படுவதையும் அவர்கள் காண்பார்கள்; ஏனெனில், தமத்திரித்துவத்தின் அக ஒளி கிறீஸ்துநாதரின் காட்சியையும் உள்ளடக்கியதாக இருப்பது போலவே, கிறீஸ்துநாதரின் காட்சி, பிரபஞ்சம் மேன்மையாக்கப்பட்டதும், இரட்சிக்கப்பட்டதும், அது முத்திப்பேறு பெற்றதுமான காட்சி யையும் உள்ளடக்கியிருக்கிறது. கிறீஸ்துநாதர் தாமே தமத்திரித் துவத்தின் அக ஒளியினின்று பிரிக்கப்பட இயலாதது போலவே, அவருடைய வாழ்வு அதன் ஸ்திரமான ஜீவ தன்மையில் நுழைவதால், அவருடைய வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கிற இந்த சுபாவத்திற்கு மேற்பட்ட, ஆண்மையுள்ள செயல்பாடுகள், அவருடைய காட்சி யிலிருந்து பிரிக்கப்பட முடியாது.

ஆகவே, விசுவாசப் பொருளாக இருக்கிற வேதத்தின் மற்ற எல்லா மறைவான காரியங்களோடு கூட, அழைத்தலும், புதுப்பித் தலும், முன்குறித்தலுமான மாபெரும் பரம இரகசியங்கள், சங்கீத ஆசிரியர் கூறுகிறபடி, காட்சிக்குரிய பொருளாகும்: ‘‘சீக்குத் ஆவ்திவிமுஸ் சிக் வீதிமுஸ் இன் சிவித்தாத்தே தோமினி வீர்த்தூத்தும்.'' அந்த ஆசீர்வதிக்கப்பட்ட நகரத்தில், தமத்திரித் துவத்தின் தெய்வீக வாழ்வு எந்த முறையில் கிறீஸ்துநாதருக்குத் தரப் படுகிறது என்றும், கிறீஸ்துநாதரால் அது எப்படி எல்லா சிருஷ்டி களுக்கு மேலாகவும் பரப்பப்படுகிறது என்றும் ஒருவன் காண்பான். கிறீஸ்துநாதர் பிரபஞ்ச வாழ்வின் மாபெரும் மையமாகவும், உலகத்தின் சூரியனாகவும், உண்மையான ஒளியாகவும், படைக்கப் பட்ட வஸ்துக்களின் சிரசாகவும், இருத்தல்களின் அரசராகவும், சகல உண்மை மற்றும் நன்மைத்தனத்தின் ஊற்றாகவும், ‘‘தேயுஸ் எராத் இன் கிறீஸ்தோ முந்தாம் ரெக்கொன்ச்சிலியான்ஸ் சீபி'' என்று அப்போஸ்தலர் கூறுவது போல, கடவுளில் உலகம் மீண்டும் ஸ்தாபிக்கப்படுதல் மற்றும் அரோடு அதன் பொது இணக்கத்தின் ஆதிகாரணராகவும் காணப்படுவார்.

இறுதியாக சுபாவமானதும்,சுபாவத்திற்கு மேலானதுமான உலகமே பாக்கியவான்கள் காணும் கடைசிப் பொருளாக இருக்கும், அது சிருஷ்டிகரும், மறுசீரமைத்தவருமான கிறீஸ்துநாதரின் காட்சி யிலிருந்து பிரிக்கப்பட முடியாததாக இருக்கிறது.

மிக அநேக வகைகளில் கிறீஸ்துநாதரோடும், பரிசுத்த தமத் திரித்துவத்தோடும் இணைக்கப்பட்டிருப்பதாகிய தெய்வீக நன்மைத்தனத்தின் இந்த மாபெரும் வேலை தேவ காட்சியை நிறைவு செய்வதாக இருக்கம், அது தனது மிகப் பெரும் பலதரப்பட்ட நிலையிலும், இணக்கத்திலும், தனது ஜீவ தன்மையிலும், தனது உன்னத காரணரும், தெய்வீக மாதிரியுமான கிறீஸ்துநாதருடனான தனது உத்தமமான உறவிலும் கண்டுணரப்படும். மிக அநேக வகைகளில் சுபாவத்திற்கும் வரப்பிரசாதத்திற்கும் இடையிலும், அறிவுக்கும் விசுவாசத்திற்கும் இடையிலும், சுபாவமான சத்தியங் களுக்கும் சுபாவத்திற்கு மேலான சத்தியங்களுக்கும் இடையிலும் உள்ள உறவுகளாக இருக்கிற தெய்வீக நன்மைத்தனத்தின் இந்த மாபெரும் வேலை இனி எந்த விதத்திலும் காண்பதற்கு மங்கலாகவோ, மறைபொருளாகவோ இருக்காது. இப்போது சுபாவத்தையும், அதன் வகைகளையும், அதன் சட்டங்களையும் அதன் செயல்பாடுகளையும் பற்றி குறைவுள்ள விதத்திலும், குழப்ப மான விதத்திலும் மட்டுமே நாம் அறிந்திருக்கும் அனைத்தும், வரப்பிரசாதத்தைப் பற்றியதும், அறிவை ஒளிர்விப்பதும், இருதயத்தின் மீது செயலாற்றுவதுமான அதன் ஒப்பற்ற செயல்முறை பற்றியதுமான அனைத்தும், எந்த அளவுக்கு மிக அதிக ஒளியோடும், சாட்சியத் தோடும் நமக்கு வெளியாக்கப்படும், எந்த அளவுக்கு அது, ஒரு பேச்சு வகைக்கு, மிகுந்த தீவிரத்தோடும், புரிந்துகொள்ளப்படும் தன்மையின் பிரகாசத்தோடும் அதிகரிக்கும் என்றால், தெளி வானதும், உணரக்கூடியதும், மாசற்றதுமான ஒரே பார்வையில், இந்த எல்லாக் காரியங்களையும், அவற்றின் சுபாவம், குணங்கள் மற்றும் பல்வேறு உறவுகளோடு தொடர்புள்ள எண்ணற்றவையாகிய வேறு காரியங்களையும் நாம் காண்போம்; வானங்களின் மேன்மை மற்றும் உன்னதத் தன்மை, சிருஷ்டிகளின் எண்ணற்ற வகைகள், அவற்றின் குணாதிசயங்கள், அவற்றின் அளவற்ற பலதரப்பட்ட சார்புகள், அவற்றின் உறவுகளின் இணக்கம், அவற்றின் செயல்பாடு களின் ஐக்கியம் ஆகியவை, பாக்கியவான்கள் காணும் தேவ காட்சியின் ஒரு மிகச் சிறிய அம்சமாக மட்டுமே இருக்கும். சம்மனசுக்களின் நவவிலாசங்களோடு அவர்களது படிவரிசைகள், மனிதர்கள் எண்ணிலடங்காத பெருங்கூட்டம், மற்ற உலகம் சார்ந்த புத்தியுள்ள ஜீவிகள் ஆகியோர் தங்கள் பரஸ்பர உறவுகளிலும், தங்கள் வேத வாழ்வு மற்றும் கிறீஸ்துநாதரிடமிருந்து தங்கள் தொடக்கம் மற்றும் சுபாவத்திற்கு மேலான பிறப்பு ஆகியவற்றின் ஐக்கியத்திலும் காணப்படுவார்கள். கிறீஸ்துநாதர் அவருடைய மகிமையுள்ள திருத் தாயாரோடு அரூபிகளின் இந்த பிரமாண்டமான, பொதுச் சமூகத்தின் தலைமை ஸ்தானத்தில் அமர்வார்கள், புத்தியுள்ள சிருஷ்டிகளின் எண்ணற்ற வகைகளை ஒளிர்விப்பதும், தூண்டி யெழுப்புவதும், இணக்கமாக்குவதுமான மையமாக அவர்கள் கண்டு தியானிக்கப்படுவார்கள். சிருஷ்டிகளின் எண்ணற்ற வகைகளை ஒளிர்விப்பதும், தூண்டி யெழுப்புவதும், இணக்கமாக்குவதுமான மையமாக அவர்கள் கண்டு தியானிக்கப்படுவார்கள்.

தேவ காட்சியின் இந்தக் குறைபாடுள்ள சித்தரிப்பிலிருந்து, ஐக்கியத்தினுடையவும், இணக்கத்தினுடையவும் ஜீவ தன்மையில் இருந்து ஒன்றுகூட்டப்பட்ட மிக அநேக, மாபெரும் வஸ்துக்களின் அக வெளிச்சத்திலிருந்து பரலோகப் பாக்கியவான்களின் புத்தி யானது முகந்து கொள்கிற திருப்தி மற்றும் உற்சாகமூட்டும் இன்பம், சந்தோஷம் ஆகியவற்றைப் பற்றி நம் வாசகர்கள் ஓரளவு புரிந்து கொள்ளலாம். ‘‘சர்வேசுரன் தம்மை நேசிக்கிறவர்களுக்காக ஆயத்தம் செய்திருக்கிற காரியங்களைக் கண் கண்டதுமில்லை, காது கேட்டதுமில்லை, மனித இருதயத்திற்கு அது எட்டினதுமில்லை'' என்று அர்ச். சின்னப்பர் காரணத்தோடுதான் வியந்து கூறுகிறார். உண்மையில் தன் நாட்டங்களின் நிறைவை அடைந்து விட்டதும், அதை அரவணைத்துக் கொள்வதும், சுதந்தரித்துக் கொள்வதும், உணர்வதும், அளவற்ற மகத்துவமுள்ள தமத்திரித்துவரோடும், சிருஷ்டிக்கப்படாத சத்தியமாகிய கிறீஸ்துநாதரோடும் முகமுக மாய்ப் பேசுவதும், தான் கண்டுதியானிக்கிற மனதின் சகோதரி யாகவும், உறவாகவும் தோழியாகவும் ஆகியிருப்பதும், இறுதியாக, சம்மனசுக்களாகிய அரூபிகளின் பொதுச் சமூகத்தையும், நித்தியப் பேரின்பத்தின் இராச்சியத்தினுள் தன்னை முந்திச் சென்ற மாபெரும் ஆத்துமங்களையும் கண்டு, அவர்களோடு நட்புடன் உரையாடு வதுமான ஒரு மனதின் இன்பங்களை எந்த நாவுதான் எடுத்துரைக்க இயலும்?