இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மாமரியின் கதியின் உன்னத மகத்துவம்

மாமரியின் கதியின் உன்னத மகத்துவம்

முந்தின புத்தகத்தில் பிரபஞ்ச தேவ திட்டத்தில் மாமரி வகித்த இடத்தைப் பற்றி, அல்லது நித்தியத்தில் கடவுளுடைய திட்டத்தில் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த கதி பற்றி நாம் சிந்தித்தோம். இந்த இரண்டாம் புத்தகத்தில், அப்படிப்பட்ட கதியின் உள்ளரங்க மகத்துவத்தைப் பற்றியும், உள்ளரங்க பக்திக் குரிய தன்மை மற்றும் அதியற்புத மேன்மை பற்றியும் நாம் தியானிக்கப் போகிறோம்.

 இருவகை மகத்துவத்தில் இது அடங்கியுள்ளது: ஒன்று தேவ தாயாராக இருக்கும் மகிமை, இரண்டாவது, மனிதாவதாரம் மற்றும் இரட்சணியப் பரம இரகசியங்களைச் செயல்படுத்துவதற்கு சம்மதம் தருவதில் மாமரி மனுக்குலத்தின் பிரதிநிதியாக இருக்கும் மகிமை. இதன் காரணமாக, இந்த இரண்டு மகத்துவங்களையும் நாம் தனித்தனியாகப் பிரித்து, அடுத்து வரும் அத்தியாயங்களில் அவற்றைப் பற்றித் தனித்தனியாக தியானிக்கப் போகிறோம்.


அத்தியாயம் 1

தெய்வீகத் தாய்மையின் உன்னத மகத்துவம்

தெய்வீகத் தாய்மையின் பரிபூரண மகத்துவத்தை அதன் பூரண முழுமையிலும் அளவிலும் நன்றாக விளக்கும்படியாக, நாம் இந்த அத்தியாயத்தை இரண்டு பிரிவுகளாகப் பிரித்துக் கொள்வோம்; முதலாவது பிரிவு, இந்த மகத்துவம் கடவுளின் உத்தமதனங்களோடு கொண்டுள்ள தொடர்பில் இந்த மகத்துவத்தைப் பற்றி ஆராயும். இரண்டாவது அதை அதிலேயே தியானிக்கும்.