விருத்தம்.
தூய தந்தையராம்ஞானச் சுவக்கீனுமன்னம் மாளாம்
தாயாரும்நேர்ந்தநேர்ச்சி தவறாமற்கொண்டுசென்று
கோயிலிலொப்பு விக்கக் குலவுகன்னியர்களோடே
நேயமாய் மரியகன்னி நிலைத்திருந்த தனைச்சொல்வாம்.
அம்மானை.
நீண்டசுவக்கீனும் நேசமுள்ள ஆனாளும்
ஆண்டவன்கோயி லணியுயாமானதினால்
ஏறுமுதற்படியி லிம்மகவைவிட்டுவைத்து
வேறுபடி கடந்து மேற்கொண்டாரம்மானை
அன்னையுமத்தனுமாய் ஆதிக்குநேர்ந்தகடன்
தன்னையளிக்கத் தவக்கோயினுட்புகுந்தார்
மிக்கசிறுவியரும் மேற்படியெல்லாங்கடந்து
ஒக்கவே சென்றா ளொருநொடியிலம்மானை
பாரப்படிகளெல்லாம் பண்பாகவேகடந்து
சீரொக்கக்கன்னிமரி சென்றவதிசயத்தை
அத்தனுமன்னையரு மக்கோயிலுள்ளாரும்
மெத்தவறிந்ததினால் மேலோனைத்தான் புகழ்ந்தார்
சென்மத்தின்பாவமற்றுத் தேனுலகோர் தாபரமாய்
தன்மத்தின்கஞ்சனை யாய்த் தாரணியில்வந்தகன்னி
தன்னால்வருலபனுந் தாங்காவரபெலமும்
அன்னாள் திடனறிந்து ஆதிக்குநேர்ச்சிசெய்தாள்
தாயும்பிதாவுந் தவக்கனியை நேர்ச்சியிட்டுக்
கோயிலில்வாழுங் குருக்களையுந்தான் வினவி
அங்கிருக்குங்கன்னியரோ டானந்தக்கன்னியையும்
சங்கைபெறக்கையளித்துத் தம்மூர்க்குப் போயினராம்
ஒர்மூன்று ஆண்டி லொருவன் றிருப்பதியில்
பேர் மூன்றுங்கற்புடைய பேரின்பக்கன்னிமரி
தங்கியிருந்து தவம்புரிந்தகாரணத்தை
இங்கென்னாற்சொல்ல வெளிதோபுவியோரே
மண்ணோரும் விண்ணோரும் வாக்கொன்றாய்ச்சொன்னாலும்
பெண்ணார்க்காசி பெருமை சொல்லக்கூடாது
சிந்தனையால்வாக்காற் றிகழுங்கிரியையினால்
வந்தணையும்பாவம் வருமோவவளிடத்தே
முன்னோன தம்பிதிரில் மூண்டுவருஞ்சென்மவினை
தன்னையணுகாமற் சாயார் திருவயிற்றில்
சென்மித்தநாளையிலே தேவன் திருத் தாயார்
தன்மக்குணமுந் தவசுமெளிமைகளும்
நாளுக்குநாள திக நன்மையுமோங்கினளாய்த்
தாழ்வில்லா நீதி தழைத்தேநிறைந்திலங்க
தாயாரிருந்த தவக்கோயிலான திலே
ஓயா திருந்தே ஒருபொருளைநெஞ்சிருத்தி
அற்பகுறையில்லா ததிகபத்திதன்னுடனே
தற்பரனைப் போற்றித் தனது இருதயத்தைக்
கையளித்தேகனுக்குக் கற்புளவளாயிருக்க
வையகத்திலே தமது வார்த்தை தனைவழங்கி
மண்ணில்விளங்கும் மனோவாக்குக்கெட்டாத
புண்ணியத்திலேவிளங்கிப் போற்றுந்திருப்பதியில்
உள்ள பணிசெய்து உலகத்திற்கன்னியர்க்கு
தெள்ளுமிவள் நடக்கை தேர்ந்தறியுங்கஞ்சனை போல்
தேவாலயத்திற் சிறந்திருக்குங்கன்னியரும்
தாவாண்மையே சிறந்த சற்குருக்களானோரும்
கண்டேயதிசயிக்கக் கல்விபொறைஞானம்
உண்டாந்தயவெளிமை யோங்கிக்கொழுந்துவிட
நம்பிக்கையன்பு நயந்தவிசுவாசம்
அம்பிற்கிடுங்கடிகை யானது போலேவிளங்க
செல்லுந்தியான செபதபமான துகள்
அல்லும்பகலு மதனிரட்டிதானாக
ஆண்டாறிரண்டளவு மன்னை திருப்பதியிற்
தூண்டாச்சுடர்போற் சுருதிப்படியிருந்தாள்
தூய தந்தையராம்ஞானச் சுவக்கீனுமன்னம் மாளாம்
தாயாரும்நேர்ந்தநேர்ச்சி தவறாமற்கொண்டுசென்று
கோயிலிலொப்பு விக்கக் குலவுகன்னியர்களோடே
நேயமாய் மரியகன்னி நிலைத்திருந்த தனைச்சொல்வாம்.
அம்மானை.
நீண்டசுவக்கீனும் நேசமுள்ள ஆனாளும்
ஆண்டவன்கோயி லணியுயாமானதினால்
ஏறுமுதற்படியி லிம்மகவைவிட்டுவைத்து
வேறுபடி கடந்து மேற்கொண்டாரம்மானை
அன்னையுமத்தனுமாய் ஆதிக்குநேர்ந்தகடன்
தன்னையளிக்கத் தவக்கோயினுட்புகுந்தார்
மிக்கசிறுவியரும் மேற்படியெல்லாங்கடந்து
ஒக்கவே சென்றா ளொருநொடியிலம்மானை
பாரப்படிகளெல்லாம் பண்பாகவேகடந்து
சீரொக்கக்கன்னிமரி சென்றவதிசயத்தை
அத்தனுமன்னையரு மக்கோயிலுள்ளாரும்
மெத்தவறிந்ததினால் மேலோனைத்தான் புகழ்ந்தார்
சென்மத்தின்பாவமற்றுத் தேனுலகோர் தாபரமாய்
தன்மத்தின்கஞ்சனை யாய்த் தாரணியில்வந்தகன்னி
தன்னால்வருலபனுந் தாங்காவரபெலமும்
அன்னாள் திடனறிந்து ஆதிக்குநேர்ச்சிசெய்தாள்
தாயும்பிதாவுந் தவக்கனியை நேர்ச்சியிட்டுக்
கோயிலில்வாழுங் குருக்களையுந்தான் வினவி
அங்கிருக்குங்கன்னியரோ டானந்தக்கன்னியையும்
சங்கைபெறக்கையளித்துத் தம்மூர்க்குப் போயினராம்
ஒர்மூன்று ஆண்டி லொருவன் றிருப்பதியில்
பேர் மூன்றுங்கற்புடைய பேரின்பக்கன்னிமரி
தங்கியிருந்து தவம்புரிந்தகாரணத்தை
இங்கென்னாற்சொல்ல வெளிதோபுவியோரே
மண்ணோரும் விண்ணோரும் வாக்கொன்றாய்ச்சொன்னாலும்
பெண்ணார்க்காசி பெருமை சொல்லக்கூடாது
சிந்தனையால்வாக்காற் றிகழுங்கிரியையினால்
வந்தணையும்பாவம் வருமோவவளிடத்தே
முன்னோன தம்பிதிரில் மூண்டுவருஞ்சென்மவினை
தன்னையணுகாமற் சாயார் திருவயிற்றில்
சென்மித்தநாளையிலே தேவன் திருத் தாயார்
தன்மக்குணமுந் தவசுமெளிமைகளும்
நாளுக்குநாள திக நன்மையுமோங்கினளாய்த்
தாழ்வில்லா நீதி தழைத்தேநிறைந்திலங்க
தாயாரிருந்த தவக்கோயிலான திலே
ஓயா திருந்தே ஒருபொருளைநெஞ்சிருத்தி
அற்பகுறையில்லா ததிகபத்திதன்னுடனே
தற்பரனைப் போற்றித் தனது இருதயத்தைக்
கையளித்தேகனுக்குக் கற்புளவளாயிருக்க
வையகத்திலே தமது வார்த்தை தனைவழங்கி
மண்ணில்விளங்கும் மனோவாக்குக்கெட்டாத
புண்ணியத்திலேவிளங்கிப் போற்றுந்திருப்பதியில்
உள்ள பணிசெய்து உலகத்திற்கன்னியர்க்கு
தெள்ளுமிவள் நடக்கை தேர்ந்தறியுங்கஞ்சனை போல்
தேவாலயத்திற் சிறந்திருக்குங்கன்னியரும்
தாவாண்மையே சிறந்த சற்குருக்களானோரும்
கண்டேயதிசயிக்கக் கல்விபொறைஞானம்
உண்டாந்தயவெளிமை யோங்கிக்கொழுந்துவிட
நம்பிக்கையன்பு நயந்தவிசுவாசம்
அம்பிற்கிடுங்கடிகை யானது போலேவிளங்க
செல்லுந்தியான செபதபமான துகள்
அல்லும்பகலு மதனிரட்டிதானாக
ஆண்டாறிரண்டளவு மன்னை திருப்பதியிற்
தூண்டாச்சுடர்போற் சுருதிப்படியிருந்தாள்